Skip to content
Post Views: 258
இது கூட வாங்கிக்காம என்ன சம்பாத்யம் பண்ணி என்ன பிரயோஜனம் என நினைத்து கொண்டே, நல்ல உடைகளை பீரோவிலும், கிழிந்தவைகளை ஒரு பையில் போட்டு அந்த ரேக்கிலேயே வைத்துவிட்டாள்.
இதிலேயே பொழுது கழிந்திட இரவு உணவு வேண்டாமென மறுத்துவிட்டு அறைக்குள் தஞ்சமாகி விட்டாள்.
எல்லோருமே தூங்கி இருப்பார்கள் என இரவு வெகு தாமதமாய் தான் வந்தான் கிரிதரன்.
கமலியை தவிர்த்து அத்தனைபேரும் தூங்கி விட்டனர். “தூங்கியிருப்பாள்” என நினைத்து அறைக்குள் வந்தவனின் நடை ஒரு நொடி நின்று பின் நடையிட்டது.
Advertisement
உள்ளே வந்தவன் உடைகள் இருந்த ரேக்கை பார்க்க “உங்க ட்ரெஸ்ஸை பீரோவில் மாத்திட்டேன்” என கமலி கூற, பீரோ பக்கம் நகர்ந்தான். பீரோவில் அழகாய் அடுக்கப்பட்ட உடைகளில் இருந்து டிராக் சூட்டை எடுத்து கொண்டிருந்தவனின் முதுகின் பின் வந்து நின்றவள் “ஏன் இவ்வளவு லேட், காலையில் இருந்து சாப்பிட கூட வரலை” தயங்கி வந்த குரலில், உடை எடுத்து கொண்டிருந்தவனின் கைகளும் வேலை நிறுத்தம் செய்தது.
கண்கள் இறுக மூடி மூச்சை ஆழ இழுத்து “அது பிரண்ட்ஸோட இருந்தேன் நேரம் போனது தெரியல.. லேட் ஆகிடுச்சு” திரும்பாமலேயே உடை எடுத்து கொண்டு அடுத்த கேள்வி வரும் முன் பாத்ரூமினுள் மறைந்தான்.
திருமணமான பிறகு கேட்ட இத்தனை நீளமான முதல் வாக்கியம். போகும் அவனை பார்த்தவளுக்கு அயர்ச்சி எட்டி பார்த்தது.
Advertisement
எடுத்தேன் கவிழ்த்தேன் என பேசிவிட்டு போகும் அவனின் முதுகையை பார்த்தவளுக்கு மூளையே வேலை செய்யாத நிலை தான்.
Advertisement
“இவருக்கு கல்யாணம் ஆனது நியாபகம் இருக்கா!” என இவன் மீதும் “இவங்க பிரண்ட்ஸ்க்காவது அறிவு வேணாமா?” அவனது நண்பர்கள் மீதும் கமலிக்கு ஒரு சேர எழுந்தது கோபம்.
மெதுவாய் அடுப்படி நோக்கி நகர்ந்தாள். ஒற்றை படுக்கையறை, அதை கடந்து ஹால், அதை கடந்து கிட்சன், வெளியே கேட்டுடன் கூடிய போர்டிக்கோ என எல்லாமே விஸ்தாரமாக தான் கட்டியிருந்தான் கிரிதரன்.
ஹாலில் வரிசையாய் படுத்திருந்தவர்களை மிதிக்காமல் அடுப்படி செல்வதற்குள் அப்பாடா என்றாகிப்போனது.
Advertisement
கையில் ஹாட் பேக்கும், ஒரு கையில் மட்டன் குழம்பும் என இரு கைகளில் ஏந்தி கொண்டு மீண்டும் ஹாலை கடந்து வந்தாள்.
அறைக்குள் வந்து டேபிளில் வைத்து விட்டு திரும்ப, இந்த மூன்று நாட்களை போல் இன்றும் அனந்த சயனம் தான்.
சிறு இதழ் வளைவுடன் மீண்டும் சென்றாள் சமையலறைக்கு, இம்முறை தட்டும் ஜக்கில் தண்ணீரும் எடுத்து வந்தாள். அதே டேபிளில் வைத்துவிட்டு நிமிர்ந்தவளின் பார்வை மீண்டும் அவனிடம் தான்.
இம்முறை போன் அவன் தலைமாட்டில் கிடக்க, கையை தலைக்கு வைத்து கண்மூடிக்கிடந்தான்.
‘எதற்கு பயந்து இந்த இன்ஸ்டண்ட் உறக்கம்?’ மூளை கேட்டாலும், ‘இனி நீ அமைதியா இருந்தா சரிபட்டுவராது’ என அவனை தோள் தொட்டு எழுப்ப சொன்னது மனம்.
மென்மையான விரல் கொண்டு தோள் தட்டி “சாப்பிட்டு தூங்கலாம் கிரி எழுந்திருங்க” அழுத்தமான விரல் வருடலும், அக்கறை கலந்த உரிமையான குரலும் பொய்யாய் கூட அவனை கண் மூட அனுமதிக்கவில்லை.
மெதுவாய் கண் திறந்தான். “சப்பாத்தி தான், சூடா இருக்கு.. சாப்பிட்டு படுங்க” என்றதில் தயக்கத்துடனே எழுந்தமர்ந்தான்.
‘சாப்பிட்டீங்களா?’ என கேள்வி எழுப்பாமல் ‘சாப்பிட்டு படுங்க’ என்ற வார்த்தைகள், ஏதோ செய்ய தான் செய்தது அவனை.
அமர்ந்தவனின் முன் தட்டை எடுத்து வந்து பரிமாற, “நீ சாப்பிட்டியா” என இவன் கேட்க, பரிமாறிய கைகள் அப்படியே நின்றிட, விழிகள் மட்டும் நிமிர்ந்து அவனை பார்க்க, புரிந்து கொண்டான் இவன்.
“உனக்கும் ஒரு தட்டு எடுத்துட்டு வா” அழுத்தமாய் இவன் கூற, சிறு புன்னகை முகத்தில் பெரிதாய் படர, வேகமாய் போய் எடுத்து வந்தவளும் அவனுடனே சேர்ந்து அமர்ந்து உண்ண துவங்கினாள். எதிரெதிரே அமர்ந்திருந்தவர்களுக்கு வார்த்தைகள் மட்டுமே அங்கே பஞ்சம் இருக்க, அமைதியாய் ஒவ்வொரு சப்பாத்திகளாய் காலி செய்து கொண்டிருந்தனர்.
ஹாட்பேக்கில் கிடந்த கடைசி சப்பாத்தியில் இருவருமே கைவைக்க, நிமிர்ந்து ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்து, இருவருமே ஹாட் போக்கில் இருந்த கையை எடுத்துவிட்டு’ ‘நீ சாப்பிடு’ என இவனும், ‘நீங்க சாப்பிடுங்க’ என இவளும் மறுத்து கொண்டே இருந்தார்கள்.
கடைசியில் கிரியே அதை இரண்டாய் பிய்த்து அவள் தட்டில் பாதியை போட்டு, மீதியை அவன் தட்டில் வைத்து ‘இரண்டு பேரும் சமமா சாப்பிடலாம்’ என்றுவிட,
இவளது முகத்தில் இன்னும் பெரிதாய் வந்து ஒட்டி கொண்டது புன்னகை. முந்தைய சப்பாத்திகளில் கிடைக்காத நிறைவு அந்த அரை சப்பாத்தியில் கிடைத்தது. காரணம் அவன் கை பட்டதாலோ? அந்த புன்னகை சிறிதும் குறையாமல், அரை சப்பாத்தியை மனம் நிறைய உண்டாள்.
அதன்பின் சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து வைத்துவிட்டு வந்தாள்.
கட்டிலில் படுத்தபடி மொபைல் பார்த்து கொண்டிருந்தான் கிரி. இவளும் அருகில் வந்து படுத்துகொள்ள, இவனிடம் எந்த வித எதிர்வினையும் இல்லாமலே போக, “எதுவும் பிரச்சனையா?” அமைதியான அந்த இடத்தில் அழுத்தமாய் விழுந்தது இவள் குரல்.
மொபைல் ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்த விரல்கள் அப்படியே நிற்க, “என்ன பிரச்சனை.. அப்படியெதுவும் இல்லையே?” சொல்லிவிட்டு மீண்டும் ஸ்க்ரோல் செய்தது இவன் விரல்கள்.
“எங்கவீட்டு சைட் யாரும் எதுவும் உங்களை சொன்னாங்களா?” என திக்காமல் திணறாமல் இவள் கேட்டு விட
“அப்படினு யார் சொன்னா?”
“அப்புறம் ஏன் என்கிட்ட.. பேசமாட்றீங்க”
“பேசிட்டு தான் இருக்கேன்..”
“ப்ச் அதில்லை.. அது அது..” என தயங்கி “கல்யாணத்துக்கு முன்னாடி போனில் பேசின ஸ்வீட் நத்திங்க்ஸ்ல ஒரு பர்சண்ட் கூட இப்போ இல்லையே?” என
“அப்போ அங்கே பர்சனல் ஸ்பேஸ் நிறைய கிடச்சது, இங்க நம்மை சுத்தி யாராவது இருந்திட்டே இருக்காங்க” சமாளித்தான்.
“இந்த ரூமில் பத்து பதினைந்து பேர் இருக்காங்களா என்ன?” நல்ல வேளை சத்தமாய் கேட்கவில்லை இவள்.
“என்ன சொன்ன?” என இவன் மீண்டும் இவளை பார்த்தான்.
“இல்லை ஒன்னுமில்லை..” சொல்லிவிட்டு அவனுக்கு முதுகு காண்பித்து படுத்து கொண்டவள் அயர்வுடன் இமை மூடிக்கொண்டாள்.
“ஏதோ நடந்திருக்கிறது, அதை தன்னிடம் சொல்லாமல் மறைக்கிறார்..” என உறுதிபடுத்திகொண்டு,
‘என்னன்னு நாமளே கண்டுபிடிப்போம், விட்டு பிடிப்போம்’ என சூளுரைத்துக்கொண்ட பின்பே தூங்கினாள்.
மறுநாள் காலையில் சொந்தங்கள் எல்லோரும் கிளம்ப இருநரதனர். அதன் பொருட்டு மாமியாருடன் உதவிக்காய் நின்று கொண்டாள். அவர்களுக்கு உணவு தயாரித்து, பரிமாறி, அதன் பின் தாம்பூல பை கொடுத்து என அரிபரியாய் தான் சென்றுகொண்டிருந்தது அவர்கள் எல்லோரும் கிளம்பும் வரை.
கிளம்பிய பின்பு ‘அப்பாடி’ என சோபாவில் அமர்ந்தாள்.
சிறிது நேரம் தான் அந்த ஓய்வெல்லாம், அவர்கள் கிளம்பிய அந்த நொடியிலிருந்து கிரியின் மனைவியாய், அவ்வீட்டின் மருமகளாய் பதவி பிரமானம் செய்து வைத்தனர் வசந்தாவும் ராஜியும்.
‘எல்லாரும் கிளம்பிட்டாங்க, கிரியை கொஞ்சம் எழுப்பி விடும்மா’
‘கிரி காபி குடிக்க மாட்டான், இஞ்சி தட்டி போட்டு டீ குடும்மா’
‘அவன் டிரஸ துவச்சிடுறியா’
‘அவனை சாப்பிட கூப்பிடும்மா’ என கிரியின் மனைவியாக்க
இவளும் புது மனைவியாய் என் கடமை இனிதே ஆரம்பிக்கட்டும் என இஞ்சி டீயில் ஆரம்பித்து கிரிதரனுக்கு வேண்டிய எதையாவது செய்து கொண்டு இவன் பின்னேயே சுற்றிக்கொண்டே இருந்தாள்.
மேலும் அவனுக்கு வேண்டியதையெல்லாம் செய்வதில், ஓர் அலாதி திருப்தி தான் இவளிடம்.
இந்த வீட்டில் உனக்கு பிடித்த வேலையெதுவென யாரேனும் கேட்டால் ‘கிரிக்கு செய்யும் அனைத்துமே’ என தூக்கத்தில் கூட சொல்வாள். கிரி பைத்தியமாகவே மாறி விட்டாள் அந்த ஒரு நாளிலேயே.
ஆனால் கிரிக்கு தான் இவள் செய்வதையெல்லாம் ஏற்றுகொள்ளவும் முடியாமல் , செய்யாதே என தடுக்கவும் முடியாமல் தத்தளித்து போனான். அது அவனுள் உறுத்தி கொண்டே இருக்க எப்போதும் போல காலை உணவுக்கு பின் நண்பர்களிடம் தஞ்சம் அடைந்தான்.
ஆனால் அங்கும் சில மணி நேரங்களே தாக்குபிடிக்க முடிந்தது. இரண்டு நாட்களாய் துணையிருந்த நண்பர்கள் கூட இன்று அவனை ஒரு மார்க்கமாய் பார்த்து “வீடு முழுக்க சொந்தமா இருக்காங்க, ஸ்பேஷே இல்லைன்னு வந்த, சரின்னு இத்தனை நாள் உன் கூடவே சுத்திட்டு இருந்தோம், இப்போ தான் எல்லாம் கிளம்பிட்டாங்களே” என வாசுவும்
“மச்சா கல்யாணமானது மறந்துட்டா.. தங்கச்சி தேடும்.. வீட்டுக்கு போ..” என சிவாவும் மாலை இறங்கும் முன் விரட்டி அடித்துவிட.. எங்கும் செல்ல பிடிக்காமல் வீட்டிற்கே வந்துவிட்டான்.
“வந்துடீங்களா..” கட்டிலை விட்டு துள்ளி எழுந்தவள் “டீ எதுவும் கொண்டுவரவா?” மீண்டும் அவனை சுற்ற வந்தவளை வேகமாய் தடுத்து வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.
தொடரும்.
error: Content is protected !!