Skip to content
Post Views: 222
அத்தியாயம் 4
Advertisement
இத்தனை நாட்களும் தேமே என கிடந்த மூளை, இத்தனை வருடங்களில் ஆங்காங்கே நடந்த சிற்சில சம்பவங்கள் அனைத்தையும் வரிசையாய் அடுக்கி கொடுக்க துவங்கியது.
“ம்மா.. ரொம்ப வெய்ட்டா இருக்கேனா.. காலேஜ்ல எல்லாரும் பப்ளிமாஸ்னு சொல்றாங்க” சிணுங்கி கொண்டவளிடம்..
“யார் சொன்னா நீ குண்டுனு, நீ பரிபூரணமா ஆரோக்யமா இருக்க.. அவங்க எல்லாம் நோஞ்சானா இருந்தா நம்ப என்ன செய்ய முடியும்?” நெட்டி தள்ளிய தாய் மல்லிகா இன்று ஏதோ கொலை குற்றவாளியாய் தோன்றினார்.
Advertisement
“ஏண்டி சுண்டுனா இரத்தம் வர்ற கலர்ரா நீ.. சிவப்பு கலர் புடவையை தூக்கிட்டு நிக்கிற. நீ இருக்குற கலருக்கு கொஞ்சம் லைட் கலர்ல புடவை பாருடி. சிவப்பு கலர்ல அரக்கியாட்டம் வந்துட போற” அண்ணன் திருமணத்திற்கு பட்டெடுக்க வந்த இடத்தில், அத்தை மகள்கள் அடித்த நக்கல் அவள் அப்பாவரை சென்றுவிட்டது.
Advertisement
“நீ கருப்புலாம் இல்லாடா.. மாநிறம். மாநிறம் தான்டா நம்ப ஊர் கலரு.. வெள்ளையா இருக்க நம்ப என்ன ஜப்பான், சைனாலயா பொறந்திருக்கோம். உனக்கு இப்ப சிகப்பு புடவை தான் வேணுமா? எடுத்துக்க! நான் தானே காசு கொடுக்க போறேன். மத்தவங்களை ஏன் சட்ட பண்ற? யாரையும் எவரையும் ஏன் மூளைக்குள்ள ஏத்துற.. போ கிறுக்கு கழுத.. யாராவது ஏதாவது சொன்னாங்கன்னு கண்ணீர் வடிச்சிகிட்டு” அன்று பாசமாய் தலை வருடிய தந்தை செல்வம் இன்று வில்லனாய் தெரிந்தார்.
பக்கத்துல வந்து சிரிக்காத கமலி.. பயமா இருக்கு, பல்லா, இல்லை பாலடைஞ்ச சுவரா.. இஷ்டத்துக்கு இடிஞ்சு கிடக்கு” நக்கலடித்து சிரித்த தன் அண்ணன் கர்ணன் கூட முறையை தாண்டி முன் வந்து நின்றான்.
அவள் கல்லூரி நண்பி சொன்னது போல பப்ளிமாஸாக, அவள் அத்தை மகள் சொன்னதை போல கருப்பாக தான் இப்போது கண்ணாடியில் தெரிந்தாள்.
Advertisement
அமர்ந்த வாக்கிலேயே திரும்பி கண்ணாடியை பார்த்தாள், முழு உருவம் மறைத்து முகம் மட்டுமே தெரிந்தது. ஆம் மாநிறம் மிக கருப்பாக தான் தெரிந்தது.
முகம் இன்னும் சுருங்கி இருண்டு போனது. உருவம், நிறம் என இரண்டும் அறைந்து கூறியது பத்தாது என பற்களையும் ஆராயந்துவிடும் எண்ணம். வலித்த மனம் இன்னும் வலிக்க வைக்க ஆவல் கொண்டது.
“ஈ” என இதழ்களை வேகமாய் இழுக்க முடியாது, மெதுவாய் இழுத்து வைக்க, அந்த சிறு இடைவெளியில் கூட சமமற்ற இடைவெளியுடன் சீரற்ற பற்கள் தெளிவாய் தெரிந்தது. பட்டென விரல்களை கொண்டு வாயை அடைத்தாள்.
இந்த ஒரு வாரமாய் கலங்காத கண்கள் இப்போது கலங்கியது.
“பல்லு எத்தலை கமலி, உனக்கு இரண்டு பக்கமும் சிங்க பல் இருக்குறதுனால சீரில்லாமல் அப்படி தெரியுது. இனி அவ சொன்னா இவ சொன்னானு நீயும் டென்சன் ஆகி என்னையும் டென்சன் பண்ணாத சொல்லிட்டேன்” தாய் மல்லி இறுதியாய் எச்சரித்து, “டேய் இனி அவ கிட்ட வம்பிழுத்த வெளக்கமாறு பிஞ்சிரும் உனக்கு” நிஜமாகவே விளக்குமாறை கர்ணனின் மீது விட்டெறிந்து விரட்டினார் மல்லி.
அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாய் ஓடி மறைய ஸ்தம்பித்தாள் கமலி.
இத்தனை நாள் எங்கே சென்றதோ இந்த நினைவுகள், இப்போது நீ் நான் என போட்டி போட்டு கொண்டு வரிசையில் வந்து நின்றன.
சிவப்பு கலர் புடவை பிரச்சனைக்கு பின் நேர்த்தியான கண்களை உறுத்தாத உடைகளை தேர்ந்தெடுத்து அணிவாள். ஆபரணங்கள் மேற்கொண்டு அப்படி தான்.
கமலி சுடிதார் கலர் செம்ம.. இந்த காட்டன் சேரி அள்ளுது போ… கண்ண உறுத்தாத வகையில் எப்படி தான் இப்படி குட்டி குட்டி ஜிமிக்கியா தேடி எடுக்குறியோ? அவ்வளவும் அழகுடி..
டூர் போனப்ப நானும் உங்கூட தானே வந்தேன், எங்க வாங்குன இந்த ஹேண்ட் பாக்கை? யூனிக் பீஸா எப்படி தான் உன் கைக்கு வருதோ?அதுவும் இவ்வளவு ரேட் கம்மியா? என் கண்ணுலலாம் சிக்கமாட்டுதே! எரிச்சல் பட்டுகொள்ளும் தோழிகளை கண்டு ஒய்யார பார்வை பார்த்து விட்டு செல்பவளுக்கு அன்று தெரியாத விசயம் இன்று தெள்ள தெளிவாய் தெரிந்தது.
ஆம் இத்தனை சொல்லும் தோழிகள், சுடியோ, சேரியோ, அதன் அழகான நிறங்களோ! ஹேண்ட் பாக்கோ, ஜிமிக்கியோ! அத்தனையும் அழகாக இருக்கிறது என சொன்னார்களே தவிர உனக்கு நன்றாக இருக்கிறது, உனக்கு அழகாக இருக்கிறது, உனக்கு பொருந்தி போகிறது என ஒருவர் கூட சொல்லவில்லை என்பது இப்போது நெற்றிப்பொட்டில் அறைந்து சொன்னது.
பிரச்சனை எங்கே இருக்கிறது, எதில் துவங்கியது, எப்படி கண்டறிவது என குழப்பங்களுக்கு நடுவில் இருந்த போது கூட வராத கண்ணீர் இப்போது துடைப்பாறற்று பெருகிகொண்டிருந்தது.
இத்தனை நாள் யோசிக்காத மூளை இன்று ஏனோ விகாரமாய் யோசித்தது. தன்னை தானே நோகடிப்பதிலும், இல்லாத வலியை வரவழைப்பதிலும் மற்றவர்களை விட இவளது மூளை சிறப்பாக செயல்பட்டது.
இத்தனை வருடமாய் சொல்லி கொள்ளும் அளவிற்கு தோழிகள் கிடையாது! தர்ஷினியை தவிர்த்து. தர்ஷினி கூட ஆறு மாத பழக்கம் தான்.
கிரியாவது பேர் சொல்லி அழைக்கிறான், கர்ணன் வாயில் கமலி என வந்ததே இல்லை, குண்டு கத்திரிக்காய், மாடு என தான் அழைப்பான்.
“மத்தவங்களுக்கு இருக்குற மாதிரி ஏன்மா எனக்கு பாசகார அண்ணன் இல்லை. எப்போ பார்த்தாலும் திட்றான், இல்லை அடிக்கிறான். நல்லா பெத்திருக்க” கமலி கூட குறைபட்டு கொண்ட காலங்கள் கண் முன் நிழலாடியது.
நினைக்கையிலேயே இன்னும் பெருகியது கண்ணீர். கடந்த இருபத்தி இரண்டு வருடங்களில் மிக கடினமாய் கடந்த நேரங்கள் என்றால் இது தான், இந்த நிமிங்கள் தான்.
அப்படி ஒரு அழுத்தம், மூச்சு விடவும் சிரமப்படும் அழுத்தம் அழுதழுதே தரையில் சாய்ந்துவிட்டாள்.
நேரம் தெரியாமல் உறங்கிப்போனாள்.
“கமலி” என்ற அடுத்தடுத்த ராஜியின் குரலில் கண் விழித்தாள்.
மீண்டும் அவள் குரல் தான் இம்முறை எரிச்சல் வரவில்லை.. இவளாவது தன்னை நினைக்கிறாளே என தோன்றியது.
எழுந்து நின்றவளுக்கு தலை சுற்றியது. கட்டிலை பிடித்து நிதானித்து “வரேன் அண்ணி” என குரல் கொடுத்தாள்.
பாத்ரூம் சென்றவள், முகம் கழுவினாள் பத்தாது என குளித்து விட்டு வந்தாள், வேறு உடை மாற்றி கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
“என்னம்மா.. தூங்கிட்டியா.. மதியம் முழுக்க ஆளை காணல” என வசந்தா விசாரிக்க..
“ஆமா த்தை தூங்கிட்டேன்”
“முகமே வீங்குற அளவுக்கா தூங்குவ, உடம்பு சரியில்லையா?” என வசந்தா கேட்க,
“அதெல்லாம் ஒன்னுமில்லை த்தை” என்றவள் “காபி வேணும் போட்டுக்கவா” என கேட்க
“இதெல்லாம் கேட்கனுமா போம்மா..” எனவும், கிட்சன் சென்றவள் காபி போட்டு “அத்தை உங்களுக்கு காபி” என குரல் கொடுக்க..
“ம் கொடும்மா” என வசந்தா கூற, “அப்படியே எனக்கும் காபி கொண்டுவா கமலி” என ராஜியின் குரலும் வர, அவர்களுக்கு கொடுத்து விட்டு தங்கள் அறைக்குள் வந்தாள்.
காபியை சுவைத்தபடியே நினைவுகளும் பின்னோக்கி செல்ல, இரண்டு மணி நேரங்களுக்கு முன் எங்கே நின்றாளோ அதே இடத்திற்கு அவளை இழுத்து சென்று விட்டது அவள் மனம். “இப்போ வரை யாருக்குமே என்னை பிடிக்கலை” என இறுதியாய் அதே பாயிண்டில் வந்து நின்றது.
“இப்படியிருக்கையில் போனில் மூன்று மாத பழக்கம், நேரில் வெறும் பத்து நாள் பழக்கம்.. பிறகு கிரிக்கு மட்டும் எப்படி பிடிக்கும் தன்னை!” அவனுக்கு சாதகமாய் கேள்வி ஒன்றை முன் வைத்தது மனம்!.
ஆனால் அதை ஏற்று கொள்ளமுடியாமல் திமிறிய மூளை “பிறகு ஏன் உன்னை கல்யாணம் பண்ண ஒத்துகிட்டானாம், போன் பேசினப்ப இனிக்க இனிக்க பேசினான் தானே! அப்போவே பிடிக்கலைன்னு சொல்லிருக்கலாம்ல, ஏன் போனில் பேசினானாம், ஆசையை வளர்த்தானாம்! மூளை அடுத்தடுத்த கேள்விகளை முன் வைக்க. “ஆமாம்ல” வரட்டும் கேட்காமல் விட கூடாது என்ற முடிவுக்கு வந்தாள்.
அன்று மாலை ஆறு மணி போல் தான் வந்தான் வீட்டிற்கு. வந்தவன் சோபாவில் அமர்ந்து இருந்த குழந்தையை பார்த்துவிட, ‘இருக்கும் கலவரத்தில் உன்னை மறந்துட்டேன்டி செல்லம்’ என அவளை தூக்கியபடி அப்படியே அமர்ந்தான்.
அதை பார்த்தபடி ராஜி அடுப்படியில் குழந்தைக்கு பால் காய்ச்சி கொண்டிருக்க
குழந்தையின் வயிற்றில் முகம் புதைத்து கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்து கொண்டிருந்தவனிடம் “டீ போடவாடா குடிக்கியா..” என வசந்தா அங்கே வர
சட்டென முகம் மாறியவன் “ப்ச் வேண்டாம்” என மறுக்க
“ஏண்டா இப்படி இருக்க.. பார்க்கவே கஷ்டமா இருக்கு” புலம்ப தயாரான வசந்தாவை வேண்டுமட்டும் முறைத்தவன்,
குழந்தையை கையில் வைத்தபடி “இப்ப இங்க இருக்கவா.. இல்லை வெளியே போகவா” என குரல் உயர்த்தினான்.
இவன் சத்தம் கேட்டு கமலி அறையை விட்டு வெளியே வர, அலட்டானார் வசந்தா.
வந்தவளுக்கு சிறு அதிர்ச்சி தான், தன் கணவன் கையில் குழந்தையுடன் அமர்ந்திருப்பதை பார்த்து.
ஆனால் அது நீட்டிக்கும் முன்பே “நல்ல வேளை கூப்பிடலாம்னு இருந்தேன், நீயே வந்துட்ட.. நைட்டுக்கு சப்பாத்தியும், முட்டகிரேவியும் பண்ணனும்.. முட்ட இல்ல, கடை உனக்கு தெரியும் தானே” என வசந்தா நைச்சியமாய் பேச
‘தன்னை வைத்து கொண்டு பேச தயக்கம் போல அதுதான் தன்னை வெளியே அனுப்புகிறார்கள்’ என நொடியில் கண்டு கொண்டு, கடைக்கு சென்றுவிட்டாள்.
“இப்போ எதுக்கு அவளை கடைக்கு அனுப்புன.. நான் குத்துகல்லு மாதிரி தானே இருக்கேன்” என தேள்கொடுக்காய் கொட்டியவன். “இங்க இருந்தா உன், உன் மக இரண்டுபேரோட மண்டவாளமும் தண்டவாளம் ஏறிடும்னு பயமா?” அவன் இவர்கள் இருவரையும் கூறு போட்டது.
“இதோ பாரு.. கிரி.. நீ தாலி கட்ட முன்னாடியே நான் ஒத்துகிட்டேன், என் மேல தான் தப்புனு.. தாலியும் கட்டிட்ட இன்னும் என்ன ஈகோ. அவ்வளவு ஈகோ பார்க்குறவன் தாலியே கட்டிருக்க கூடாது” ராஜியும் எகிறினாள்.
“ம்மா.. அவளை சும்மா இருக்க சொல்லு, இல்லை அடிச்சு மூஞ்ச உடைச்சுடுவேன்” வெறியானான் கிரிதரன்.
“எங்க அடி பார்ப்போம்.. அக்காடா உனக்கு அதை கூட பார்க்காம அடிப்பியா நீ”
“ஒரு வயசு தான் உனக்கும் எனக்கும் வித்யாசம். அதனால் தான் உக்காந்து பேசிட்டு இருக்கேன். இனிமேல் அதை கூட பார்க்க மாட்டேன்” முறுக்கி கொண்டு நின்றான்.
“இந்த காலத்துல எங்கே வீட்டுக்கு அடங்குற மருமக இருக்கா.. சல்லடை போட்டு தேடி, வீட்டுக்கு அடக்கமா பொண்ணு பார்த்து கொடுத்தேன்ல எனக்கு வேணும்டா… இதெல்லாம் கேட்டுட்டு நீயும் அமைதியா இருக்கியேம்மா” வசந்தாவையும் உள் இழுத்தாள்.
“ஓ அப்படி குடும்பத்துக்காக ஓடா தேய்றவ.. கல்யாணத்துக்கு முன்னாடியே, கமலியோட ஒரிஜினல் போட்டோவை எனக்கு அனுப்பிருக்கனும். ஜெமினி ஏஐல போட்டு மாத்தி இருக்க கூடாது, அதை எனக்கு அம்மா மூலமா அனுப்பி இருக்கவும் கூடாது” ருத்ரமூர்த்தி ஆனான்.
“ஏன் பொண்ணு அழகா இருந்தா தான் கல்யாணம் பண்ணிப்பியோ. நீ அழகா இருக்கன்னு திமிரு” நிலவரம் தெரியாமல் இவள் பேசி வைக்க, “ஏய்” என கை ஓங்கிவிட்டான் கிரி.
எங்கே பிரச்சனை பெரிதாகுமோ என பயந்து போன வசந்தா
“ஏண்டி கூட கூட பேசி வைக்க.. போடி, புள்ள அழுகுது” என இருவரையும் பிரித்து திசை திருப்பி விட்டார்.
அதே நேரம் கமலியும் முட்டை வாங்கி கொண்டு வந்துவிட்டாள்.
அரக்க பறக்க முழித்த குழந்தையை சோபாவிலேயே அமர வைத்துவிட்டு, இவனும் எழுந்து உள்ளே சென்றுவிட்டான்.
எப்போதும் கூட மாட வேலை செய்யும் ராஜி அன்று கலன்று கொள்ள, வசந்தவுடன் கமலி தான் நின்றாள்.
அன்றைய இரவு சாப்பாடும் இவன் சாப்பிடவில்லை, மறுத்து விட்டான்.
கமலிக்கு தான் ஏதோ போல ஆனது. ஓடுவதே அரை சாண் வயிற்றுக்கு தான், அதையும் அடிக்கடி மறக்கும் அவனை என்ன தான் செய்வது, பெருமூச்செறிந்தாள்.
எல்லோரும் சாப்பிட்ட பின் வழக்கம் போல ஹாட்பேக் குருமா என தங்கள் அறைக்கே எடுத்து சென்றாள்.
விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தான். இத்தனை நாட்களாய் அவன் பார்வையில் ஒரு வித திமிரும் தெனாவட்டும் தான் இருக்கும். இன்று அதீத வேதனையை கண்டாள். ஏனோ நெஞ்சம் சுருக்கென்றது.
ஆனால் மூளையோ ‘என்னை அழ வச்சல்ல.. வேணும்’ என ஆட்டம் போட, அதை அடக்கி “சாப்பிட்டு படுங்க” என சத்தமாகவே அழைத்தாள்.
“வேணாம்னு சொன்னதா நியாபகம்” கடுமை பறந்தது அவன் குரலில்.
“இரண்டு மூனு நாளாவே சரியா சாப்பிடாம சுத்திட்டு இருக்கீங்க.. பார்க்குறவங்க, உன் புருஷனுக்கு சாப்பாடு போடுறியா, நீயே திங்கிறியான்னு கேட்குறாங்க” இல்லாத ஒன்றை பற்ற வைத்தாள்.
அது சரியாய் வேலை செய்ய, எழுந்தமர்ந்தவன் கொண்டு வந்த ஆறையும் உண்டான் மிச்சமீதி இல்லாமல்.
“இவ்வளவு பசிய வச்சிகிட்டு, ஏன் இந்த வரட்டு கோபம், என்னால தான் இந்த கோபம்னா, இனி நீங்க தாராளமா சாப்பிடலாம். எனக்கு பயந்து ஓட வேணாம்” என இவள் நக்கலடிக்க
“அடிங்.. உனக்கு பயந்து நான் ஓடுறனா” என இவன் எகிற
“பின்ன யாருக்கு பயந்து வீட்டுலயே தங்குறது இல்ல” நய்யாண்டி தாண்டவமாடியது.
“உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேனு வெளியவே சுத்திட்டு இருந்தேன்ல என்னை சொல்லனும்”
“ஆஹா.. நீங்க பெரிய, JK, V மன்மதன், கனவு கண்ணன். நீங்க வீட்டுக்குள்ள இருந்தா நாங்க டிஸ்டர்ப் ஆகிடுவோம் பாருங்க. பிடிக்கலைன்னு சொன்னவங்க பின்னாடி போற பழக்கம் எனக்கில்ல” என பூடகமாய் கூற
“நீ ஏத்துக்கலைன்னாலும் அதான் நிஜம், கனவு கண்ணன் , மன்மதன் தான். அந்தளவுக்கு அறிவு இருக்குறவ.. சாப்பிடுங்கனு தட்டை தூக்கிட்டு வந்திருக்க கூடாது. என்னை பெத்தவளும், கூட பிறந்தவளும் தண்ணிதெளிச்சு விட்ட மாதிரி நீயும் இருந்திருக்கனும், வந்துட்டா” இவன் கத்தவிட்டு அப்படியே படுத்து விட்டான்.
error: Content is protected !!