Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

81. Zeeraf - ஊனாகி உயிராகினாய் பெண்ணே

ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 38

அத்தியாயம் – 38

 

மிருதுளா இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை, ரன்வீரின் கையில் இருந்து வழியும் ரத்தத்தைப் பார்த்ததும் அவளது கோபம் எல்லாம் மறைந்து, ஒரு நிமிடம் பதற்றம் அவளைத் தொற்றிக்கொண்டது…

​”ரன்வீர்! என்ன காரியம் பண்ணி வச்சிருக்கீங்க?” என்று அவள் பதற்றத்துடன் அவன் அருகில் வர முயல, அவளைத் தன் ஒற்றைக் கையால் தடுத்து நிறுத்திய ரன்வீர், அவளை மிரட்டலோடு ஒரு பார்வை பார்த்துவிட்டு கதவை நோக்கி நடக்கத் தொடங்கினான்.



Advertisement

​ஆனால் மிருதுளா விடுவதாய் இல்லை, வேகமாக ஓடிச் சென்று அவனது முன்னிலையில் வந்து நின்றவள், “பிளட் நிறைய வருது.” என்று சொல்லும்போதே அவளது கண்கள் கலங்கிப் போயின, அவன் ரத்தத்தைக் கண்டு அவளது உள்ளம் பதறியது…

​அவனுக்கோ அவளை எந்த ரகத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை, சில நிமிடங்களுக்கு முன்பு வரை மனதைக் காயப்படுத்தும் விதமாய் ஆவேசமாகப் பேசிவிட்டு, இப்போது தனக்காகவே கண்ணீர் விடுகின்றாளே என்பதை எண்ணியவனுக்கு ஒரு  பெருமூச்சு ஒன்று வர.. “வழிய விடு” என்றான் அழுத்தமான குரலில்…

அவளோ… ​”முடியாது, முதல்ல ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டுப் போங்க,” என்று உறுதியாகச் சொல்ல, ரன்வீரின் பொறுமை எல்லை கடந்தது, வாயில் வந்த மோசமான வார்த்தைகளை எல்லாம் பற்களைக் கடித்து அடக்கியவன், அவளைத் தாண்டி நகர முயல,.. ​”போனீங்கனா… அப்புறம் நான் வீட்ல உள்ள எல்லார் கிட்டயும் சொல்லுவேன்” என்று மீண்டும் அவனது வழியை மறைத்து நின்று மிரட்டினாள்.

Advertisement

​”போய் சொல்லுடி!” என்று ஆத்திரத்தில் கத்தியவன், அவளது தோளைப் பற்றித் தள்ளிவிட்டு அவளைத் தாண்டி நடக்கத் தொடங்கிட, அந்த கணம்.. ​”என் சொல்லை மீறி போறீங்கள்ல… நீங்க திரும்பி வரும் போது நான் இங்க பொணமா தான் கிடப்பேன்!” அவள் வீசிய அந்த வார்த்தைகள் அவனை அப்படியே உறைய வைத்து சுருக்கென்று வலிக்க வைத்தது, அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் அங்கேயே நின்றவன், ஆவேசமாகவும் அதே சமயம் ஒருவித வலியோடும் அவளை நோக்கித் திரும்பியவன்… “உனக்கு நிஜமாவே பைத்தியம் தான் பிடிச்சிருக்கு மிருதுளா!” என்று கரகரப்பான குரலில் கத்தினான்.

Advertisement

​”ஆமா, எனக்குப் பைத்தியம் தான்! இப்போ அதுக்கென்ன?” என்று சற்றும் சளைக்காமல் பதில் சொன்னவள், விறுவிறுவென சென்று ஷெல்பில் இருந்த முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்தாள்.

​அவனோ விழிகள் சுருங்க அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான், அவள் மீது அவ்வளவு ஆத்திரம் வந்தது அவனுக்கு, இருப்பினும் தன் கோபத்தை எல்லாம் பற்களைக் கடித்துக் கட்டுப்படுத்தியபடி சிலையாக நின்றான்.

​மிருதுளாவோ அவன் அருகில் வந்து, அவனது கையைப் பற்றி இழுத்து வந்து “உட்காருங்க முதல்ல!” என்று சோபாவில் அமர வைத்தவள், இன்னமும் ரத்தம் வழிந்து கொண்டிருந்த இடத்தில் துடைத்து விட்டு, மருந்திடத் தொடங்கினாள், கண்ணாடித் துண்டுகள் குத்தி கிழித்திருந்த அந்த காயத்தைப் பார்த்ததும் அவளது கைகள் லேசாக நடுங்கிட, ​”வலிக்குதா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள், ரன்வீர் பதில் எதுவும் சொல்லவில்லை, ஆனால் அவனது பார்வை அவள் முகத்திலேயே நிலைத்திருந்தது.

Advertisement

​’இந்தக் காயம் கொடுக்கிற வலியை விட, நீ பேசின வார்த்தை கொடுத்த வலி தான் அதிகம் மிருதுளா’ என்று மட்டும் அவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்…

​அவளோ மிகவும் கவனமாக மருந்தைத் தடவி, பேண்டேஜ் சுற்றத் தொடங்கினாள். அறையில் நிலவிய அந்த அமைதியில், அவளது வேகமான மூச்சுக்காற்று அவனுக்குத் தெளிவாகக் கேட்டது, கோபத்தில் கத்தியவளா இவ்வளவு பதற்றமாக மருந்திடுகிறாள் என்று அவனுக்கு வியப்பாக இருந்தது…

​மருந்திட்டு முடித்து மெல்ல நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தவள்.. “இனிமே இப்படி செய்யாதீங்க… கையைப் பாருங்க என்ன நிலைமையில இருக்குன்னு,” என்று அவள் சொல்லும் போது, அவளது குரலில் இருந்த அந்த அக்கறை ரன்வீரின் கோபத்தை மெல்லக் கரைக்கத் தொடங்கியது…

​இருப்பினும் அவன் முகத்தை மாற்றிக் கொண்டு, “எல்லாம் முடிஞ்சதுல்ல? இப்போ நான் போகலாமா?” என்று கேட்டிட,
​”எங்க?” என்றாள் அவள்…

“ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருக்கேன், ஐ நீட் ஆல்கஹால்” என்று அவன் கரகரப்பான குரலில் சொல்ல,
​அவனை ஒரு கணம் முறைத்தவள், “ஏற்கனவே கையில பெரிய காயம்… இதுல இது வேறயா? பேசாம படுத்துத் தூங்குங்க,” என்று அதிகாரமாகச் சொன்னாள்…

​”தூங்குறதா? அதெல்லாம் முடியாத காரியம்” என்று விரக்தியாக சொன்னவன்,.. “கண்ணை மூடினாலே கொலைகாரன்’ங்கிற உன்னோட அந்த வார்த்தை தான் காதுல ரீங்காரமிடும், அது என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது, இதுக்கு அப்புறமும் என்னை தடுக்க நினைக்காத,” என்று அவன் நகர முயல, அவளோ குறுக்கே வந்து நின்று,.. ​”அதை குடிச்சா எல்லாம் சரியாகிடுமா? உடம்பை இன்னும் கெடுத்துப்பீங்க, தூக்கம் வரலனா பரவாயில்லை, இங்கேயே உட்காருங்க. ஆனா குடிக்கப் போகக் கூடாது,” என்று அவள் பிடிவாதமாக நின்றாள்…

​அவளை ஒரு நீண்ட பார்வை பார்த்த ரன்வீர், “ஏன் மிருதுளா? என் மேல உனக்கு அத்தனை வெறுப்பு இருக்கும்போது, நான் குடிச்சு அழிஞ்சி செத்தா உனக்கு என்ன?” என்று ஆழமாகக் கேட்டான், அவன் கேட்ட கேள்வி அவளை வலிக்க வைத்தாலும்,
​தன்னையே அழுத்தமாகப் பார்த்தவனிடம், “எல்லாம் காயத்ரி அத்தைக்காகவும், மத்தவங்களுக்காகவும் தான்.” என்று சொல்லி சமாளித்தாள்.

​”அப்படின்னா உனக்கு என்னை பத்தி கவலை இல்லை அப்படித்தானே?” என்று கேட்டுக்கொண்டே அவன் பின்னால் நகரத் தொடங்கிட, அவன் என்ன செய்யப் போகிறான் என்று திகைத்துப் போய் பார்த்தவள், “ஏன்… ஏன் பின்னாடி போறீங்க?” என்றாள் பதற்றத்துடன்.

​”நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு,” என்றவன், பால்கனி கதவு வழியாகப் பின்னால் நகர்ந்தபடியே வெளியே நுழைய, அதிர்ச்சியும் பயமும் தொற்றிக்கொள்ள வேகமாக அவனருகில் செல்ல முயன்றபடியே… ​”முதல்ல நில்லுங்க! அப்புறம் பேசலாம்,” என்று அவள் கத்த, “நின்னு பேசியதெல்லாம் போதும், கேட்டதுக்கு பதிலை சொல்லுடி!” என்றவன், பால்கனி தடுப்புச் சுவரின் விளிம்பு வரை வந்துவிட்டான்…

​அந்தப் பால்கனியின் தடுப்புச் சுவர் அவனது உயரத்திற்கு மிகக் குறுகியதாய் இருந்தது,  அவன் பின்னால் சாய்ந்தால் கீழே விழ நேரிடும் என்ற பயங்கரமான சூழல் உருவானது.

​”ரன்வீர்! ப்ளீஸ்… அங்கிருந்து முன்னாடி வாங்க! கை வேற காயம் பட்டுருக்கு, தள்ளாடி கீழே விழுந்தா என்ன ஆகுறது?” என்று அவள் கையை நீட்டி அவனை அழைக்க, அவன் எதையும் கேட்பதாக இல்லை.

​அவனது கண்களில் தெரிந்த அந்த விரக்தி அவளை நிலைகுலைய வைத்தது. “உனக்கு என் மேல துளியாவது அக்கறை இருந்தா,  மத்தவங்களுக்காகனு சொல்லாம, உனக்காகனு சொல்லு… நான் குடிச்சு அழிஞ்சா உனக்கு வலிக்குமா இல்லையா?” என்று அவன் அந்த விளிம்பில் நின்றபடி கேட்க, மிருதுளாவிற்கு இதயம் ஒரு நிமிடம் நின்றே போனது. அவன் நின்றிருந்த விளிம்பும், அவனது தடுமாற்றமும் அவளை மரண பயத்தின் உச்சத்திற்க்கே கொண்டு சென்றது. அவன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டவில்லை, ஆனால் அவனது விரக்தி அவனை எதற்கும் துணிய வைக்கும் என்பது அவளுக்குப் புரிந்தது.

​அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல அவளது நாக்கு எழவில்லை, அடுத்த நொடி அவன் கீழே குதிப்பது போல பாவனை செய்ய, மிருதுளா அலறியபடி ஓடிச் சென்று அவனது இடுப்பைச் சுற்றித் தன் கரங்களால் இறுக அணைத்துக் கொண்டாள், அவளது முகம் அவனது முதுகில் புதைந்து கிடக்க, உடல் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது, அவளது கண்ணீர் அவனது சட்டையை நனைத்தது.

​தன்னைச் சுற்றிய அந்த மென்மையான அணைப்பில் ரன்வீர் அப்படியே உறைந்து போனான். அவனது ஆவேசம் அந்த நொடியே காணாமல் போனது, அவளது உடல் பயத்தில் நடுங்குவதை அவனால் உணர முடிந்தது.

​”இப்போ சொல்லு… யாருக்காக?” என்று அவன் குரல் இப்போது தணிந்து, மென்மையாக ஒலிக்க,
​மிருதுளா அவனை விடாமல் இன்னும் பலமாக அணைத்துக் கொண்டு, “எனக்காகத்தான்… எனக்காகத்தான்! நீங்க செத்து அழிஞ்சு போறதை பார்க்கிற அளவுக்கு எனக்கு தெம்பில்ல, என்னால உங்களை இழக்க முடியாது வீர்,” என்று விம்மினாள்.

அவள் சொன்ன அந்த வார்த்தைகள் ரன்வீரின் இதயத்தில் மருந்தாக இறங்கியது, அவளைச் சற்று விலக்கி, அவள் கன்னங்களைத் தாங்கி அவள் முகம் பார்த்தவன், “திரும்பவும் சொல்லு…” என்று வினவினான்.

​அவளும் கலங்கிய விழிகளோடு, “என்னால உங்களை இழக்க முடியாது… என் உயிரே நீங்க தான்!” என்று சொல்லிய கணம், ரன்வீர் தாள முடியாத சந்தோஷத்தில் அவளது இதழ்களை ஆழமாகத் தன் இதழ்களால் கவ்விக்கொள்ள அவளும் சம்மதமாகத் தன் விழிகளை மெல்ல மூடிக் கொண்டாள்…

​கணவன் மனைவியான பிறகு அவர்களுக்குள் நிகழ்ந்த அந்த முதல் ஆழமான இதழ் முத்தம் வெகுநேரம் நீடித்தது, அவனுக்கோ அவளை விட்டு விலகும் எண்ணம் சிறிது கூட இல்லை. பல நாட்களின் போராட்டங்களுக்குப் பின் கிடைத்த அவளின் இந்த அருகாமையும், இதழ் தீண்டலும் அவனைப் பித்தனாக்கி இருந்தது, அவள் இதழ்களை விட்டுப் பிரியாமலே, அவளைத் தனது கரங்களில் ஏந்தி அறைக்குள் தூக்கி வந்து மெத்தையில் கிடத்தினான், அப்போதும் அவனது இதழ்கள் அவளது இதழ்களை விட்டு விலகவில்லை.

​அவளுக்கும் அந்த கணம் மற்ற அனைத்தும் மறந்து போயிருந்தது. தன்னைச் சுற்றி இருந்த சந்தேகம், கோபம் என அனைத்தும் கரைந்து போக, ரன்வீரின் தீண்டலும் காதலும் மட்டுமே அவளுள் நிறைந்திருந்தது, அவனது ஒவ்வொரு அசைவிலும், அன்பின் பிடியிலும் அவள் மெழுகு போல உருகிப் போனாள்…

​அவளது கூந்தலில் அவன் விரல்கள் கோர்க்க, அவனது காயம்பட்ட கையின் வலியைக் கூட அவன் உணரவில்லை, அந்த அறையின் மங்கலான வெளிச்சத்தில், இருவரின் இதயத்துடிப்பும் ஒரு சேர ஒலித்தது,
இதுவரை வார்த்தைகளால் மோதிக்கொண்டவர்களின் உணர்வுகள், இப்போது மௌனமான தீண்டல்களால் பேசத் தொடங்கின.

​சந்தேகங்களும் தர்க்கங்களும் விடைபெற்ற அந்த நொடியில், காதலின் வெப்பம் மட்டுமே எஞ்சியிருந்தது, ரன்வீரின் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்த தீவிரம், அவனது இத்தனை நாட்களின் தவிப்பை அவளுக்கு உணர்த்தியது, அவளது மென்மையான வருடல்களில் அவனது ஆக்ரோஷம் அடங்கி, ஒருவித அமைதியான ஆராதனையாக மாறியது.

​ஆடைகளும் திரைகளும் விலகிய அந்த நள்ளிரவில், இரு உடல்களும் ஒன்றையொன்று ஆழமாகத் தழுவிக்கொண்டன, காலங்காலமாகப் பிரிந்து கிடந்த இரு ஆன்மாக்கள் ஒரே புள்ளியில் இணைவது போல, அவர்கள் உடலளவில் ஒன்றிணைந்தனர், அவனது அணைப்பின் கதகதப்பில் மிருதுளா தன்னை முழுமையாக ஒப்படைக்க, வலிகளும் வடுக்களும் மறைந்து அந்த அறையே காதலின் சொர்க்கமாக மாறியது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!