விழி கொல்லும் விஷமா நீ.. EPi 09
விழி கொல்லும் விஷமா நீ..
EPISODE 09
Advertisement

உள்ளுக்குள் மனம் உலைக்களமாக கொதித்தாலும் எதையும் வெளியில் காட்ட முடியாத நிலையில் அமர்ந்திருந்தார் மஹாதேவன்.
Advertisement
Advertisement
நிஹாரிகா அவர் கையில் ஃபைலை கொடுத்ததோடு சரி அதன் பிறகு நிமிர்ந்தும் பார்க்காமல் இருவருக்குமிடையிலான கலந்துரையாடலில் முக்கியமான விடயங்களை மட்டும் குறித்துக்கொண்டாள்.
மீட்டிங்கும் முடிந்தது.
Advertisement
முக்கியமான ஒரு அழைப்பு வரவும் அதையேற்றவாறு யாதவ் அறையிலிருந்து வெளியேறியிருக்க, ‘பாவி! இந்த ஆளுக்கிட்ட கோர்த்து விடுறதுக்காவே இல்லாத கால காதுல வச்சுக்கிட்டு போறான்’ என உள்ளுக்குள் புலம்பியபடி நின்றிருந்தவள் மெல்ல அங்கிருந்து வெளியேற எத்தனித்தாள்.
ஆனால் அவள் எதிர்பார்த்தது போல, “ஏய் நில்லுடீ…” என்று அழைத்த மஹாதேவன், “ஓடுகாலி! என் மானத்த வாங்கிட்டு சொல்லா கொல்லாம வீட்ட விட்டு ஓடியிருக்க. எவன்டீ உனக்கு அவ்வளவு தைரியத்த கொடுத்தது? உன் அம்மாவும் இப்படிதான், கொஞ்சம் ஆசை காட்டினதும் எல்லாத்தையும் உதறிட்டு வந்துட்டா. கடைசில அவளோட நிலைமைய பார்த்தல்ல. இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல, அந்த பையன் இன்னும் உனக்காகதான் இருக்கான், ஒழுங்கா அவன கல்யாணம் பண்ணிக்கோ! எனக்காச்சும் பிஸ்னஸ்க்கு பிரயோஜனமா இருக்கும்” என்று நாக்கில் விஷத்தை தடவியது போல் பேசினார்.
நிஹாரிகாவுக்கு அழுகை தொண்டையை அடைத்தது. விழிகளில் வலியோடு அவரைப் பார்த்தவள், ஏதோ சொல்ல வர அவளைக் குறுக்கிட்டது யாதவ்வின் செருமல்.
“ஹ்ர்ம் ஹ்ர்ம்… இஸ் எவ்ரிதிங் ஓகே மிஸ்டர் மஹாதேவன்?” என்று யாதவ் கேட்டுக்கொண்டே அவர்களின் அருகே வர, “ம்ம்.. ஐ அம் ஓகே யாதவ், என்ட் ஐ ஹேவ் டூ கோ. அப்பறமா பார்க்கலாம்” என்றுவிட்டு நிஹாரிகாவை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினார் அவர்.
யாதவ்வோ தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லையென்பது போல நகரப் போக, தன்னை மீறி அவன் கரத்தைப் பற்றினாள் பெண்ணவள்.
“இதை நீ வேணும்னு தானே பண்ண அர்ஜூ? எல்லாம் தெரிஞ்சும் ஏன்…” அவளுடைய குரலில் வலி அப்பட்டமாக பிரதிபலிக்க, அவனுடைய பார்வையோ தன் மீதிருந்த அவள் கரத்தின் மீது அழுத்தமாக பதிந்தது.
அவனுடைய பார்வை அவளை சுட்டெரிக்க, அதையுணர்ந்தவள் பட்டென்று தன் கரத்தை விலக்கிக்கொண்டாள்.
“ஜஸ்ட் கெட் அவுட் ஃப்ரொம் மை சைட்” அவன் பற்களைக் கடிக்க, “இல்ல அர்ஜூ நான்…” என்று பேச வந்தவளின் முழங்கையைப் பற்றி தன்னருகே இழுத்தவன் அவள் தாடையைப் பற்றி நூலிடைவெளிக்கு அவளை நெருங்கினான்.
“என்னடீ தெரியும் எனக்கு, மொதல்ல யாரு நீ? வூ ஆர் யூ டூ மீ யூ ப்ளடி…” அவனுடைய வார்த்தைகள் ஆக்ரோஷமாக வந்தன.
அவனின் கோபத்தின் உஷ்ணம் சூடான மூச்சுக்காற்றாக அவள் முகத்தில் பட்டுத்தெறிக்க, அடி வயிற்றில் உருண்ட பயபந்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டாள் நிஹாரிகா.
“நான் யாருன்னு கேக்குறியா அர்ஜூ?” என்று கலங்கிய குரலில் கேட்டவளுக்கு இதயத்தை ஈட்டியால் குத்திக் கிழிப்பது போல் உள்ளுக்குள் அத்தனை வலி.
ஆனால், அவளைப் பார்க்கப் பார்க்க ஆத்திரம் பெருக்கெடுத்தது அவனுக்கு.
அவனுடைய சிவந்த விழிகளும் புடைத்திருந்த நெற்றி நரம்புகளும் அவனின் கோபத்தின் உச்சத்தைக் காட்ட, அவள் தாடையைப் பற்றியிருந்த கரத்தில் அவன் கொடுத்த அழுத்தத்தால் அவளுக்கு உயிர்வலி எடுத்தது.
அதைப் பொறுத்துக்கொண்டவள் விழிகளில் காதலைத் தேக்கி ஏக்கமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
கோபத்தோடு அவளை பார்த்துக்கொண்டிருந்த யாதவ்வுக்கு ஏனோ ஒருகட்டத்திற்கு மேல் அவளுடைய பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை.
அவனுடைய விழிகள் தடுமாற, நிஹாரிகாவின் இதழ்கள் அவனின் மனதை அறிந்து புன்னகைத்தன.
அவன் காதலின் ஆழத்தைப் பற்றி அவள் அறியாததா!
அவள் பார்வையில் தடுமாறுவது யாதவ்விற்கும் புதிது அல்லவே..
அவன் உடனே பார்வையைத் திருப்பிக்கொள்ள, அவள் தாடையைப் பற்றியிருந்த கரமோ சற்று தளர்ந்தது.
அதையுணர்ந்தவள் அவனைவிட்டு வேகமாக விலகி நின்றுக்கொண்டாள். அவன் இறுகப் பற்றியிருந்த இடம் கன்றி சிவந்துப் போயிருந்தது.
“நீ இன்னும் என்னை ஃபீல் பண்ற ரைட்? நீ எதையும் மறக்கல” அவள் மெல்லிய குரலில் சிறு புன்னகையோடு சொல்ல, ஆனால் அடுத்து அவன் சொன்ன வார்த்தைகள் அவளிதயத்தை சுக்கு நூறாக உடைத்தது.
“ஆமா எதையும் மறக்கல. ஏன் தெரியுமா.. துரோகத்த என்னைக்கும் மறக்க முடியாது. உள்ளுக்குள்ள இன்னும் என்னை குத்தி கிழிச்சிட்டு இருக்கு. மொதலும் கடைசியுமா கொஞ்சம் கூட தகுதியே இல்லாத ஒருத்திக்கிட்ட முட்டாளா இருந்துட்டேன். இதுக்கப்பறம் வாய்ப்பே இல்ல”
அனல் தெறிக்க அவன் பேசிய வார்த்தைகளில் அவளுக்கு சர்வமும் அடங்கிப் போக, ஸ்தம்பித்துப் போய்விட்டாள் நிஹாரிகா.
அதற்குமேல் யாதவ் அங்கு நிற்கவில்லை. அவளை உதறித் தள்ளிவிட்டு அவன் வெளியேறியிருக்க, தொண்டை வரை வந்த அழுகையை அடக்க முயன்றாள் பெண்ணவள்.
ஆனால், நெஞ்சே பிளப்பது போல உணர்ந்த வலி அவளை வெடித்தழ செய்ய, அப்படியே தரையில் அமர்ந்து ஒரு மூச்சு அழுதுத் தீர்த்தாள்.
அதேநேரம் மாடலிங் கம்பனியில்,
“வாவ் பர்ஃபெக்ட் ஷாட்!” என்று வருண் சொல்ல, தனக்கே உரித்தான பாணியில் ஃபோட்டோக்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான் சித்தார்த் மஹரந்தன்.
ஓரமாக நின்று இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஆதிராவுக்குமே அவனைப் பார்க்க வியப்பாகத்தான் இருந்தது.
அவனுடைய விழிகளில் தடுமாற்றம் இல்லை. உடலில் தளர்வு இல்லை. எந்த பெண்ணாக இருந்தாலும் அந்தப் பெண்ணின் கடைக்கண் பார்வையாவது அவன்மேல் விழாமல் இருக்காது.
இதில் ஆதிரா மட்டும் விதிவிலக்கா என்ன!
வாயைப் பிளந்துக்கொண்டு அவனையே அவள் பார்த்துக்கொண்டிருக்க, “ஆதி, நோட் பண்ணியா? இப்படிதான் நீயும்…” என்று சொல்லிக்கொண்டே அவள்புறம் திரும்பிய வருணின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டன.
அவள் பார்வை செல்லும் திசையை அவன் கவனிக்காமலில்லை.
அதிருப்தியில் முகத்தை சுருக்கியவன், “ஆதி…” என்று சற்று சத்தமாகவே அழைக்க, உடனே திரும்பிப் பார்த்தவள், “சொ.. சொல்லுங்க வருண்” என்று கேட்டாள் மலங்க மலங்க விழித்தபடி.
“உனக்கான ஷூட்டிங்க ஸ்டார்ட் பண்ணலாம், காஸ்டியூம் டிஸைனர்ஸ் உனக்கான ட்ரெஸ ரெடி பண்ணியிருக்காங்க. போய் ரெடியாகிட்டு வா..”
அவன் சொல்லவும் ஒரு ஆடையை அவளிடம் நீட்டினாள் ஒருத்தி.
அதை வாங்கி சுற்றி முற்றி பார்த்தவளோ, “என்ன நீங்க பாதிதான் கொடுத்திருக்கீங்க, மீதி எங்க?” என்று கேட்க, “ட்ரெஸ்ஸே அவ்வளவுதான்” என்றாள் பக்கத்திலிருந்தவள்.
ஆதிராவுக்கு திக்கென்று இருந்தது.
‘அய்யோ கடவுளே இந்த ட்ரெஸ்ஸ போட்டு என் வீட்டுல மட்டும் பார்த்தாங்கன்னா வெரட்டி வெரட்டி வெட்டுவாய்ங்களே…’ உள்ளுக்குள் நினைத்துக்கொண்டவள் யோசனையோடு உடை மாற்றும் அறையை நோக்கிச் சென்றாள்.
ஆடையை அணிந்துவிட்டு முன்னே இருந்த கண்ணாடியில் தன்னை ஒருதரம் பார்த்தாள் ஆதிரா.
முட்டி வரையேயான ஆடை அது. வாழ்க்கையிலேயே முதல் தடவை அணிந்திருக்கிறாள்.
மாடலிங் துறையில் இவையெல்லாம் சகஜம் என்று ஏற்கனவே மனதை தேற்றியிருப்பாள் போல!
‘இது தெரிஞ்சுதானே வந்த, இப்போ குத்துதே குடையுதேன்னா என்ன அர்த்தம்?’
தனக்குள் நினைத்துக்கொண்டவள், உடை மாற்றும் அறையிலிருந்து வெளியேற அவளுக்கான மேக்கப் மற்றும் ஹெயார் ஸ்டைல் செய்யப்பட்டது.
அலங்காரங்கள் முடிந்து தன்னை கண்ணாடியில் பார்த்தவளுக்கு ‘நான்தானா!’ என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
அந்த மாடர்ன் ஆடையும் ஒப்பனையும் அவளுக்கு நன்றாகவே பொருந்தியிருக்க, விழிகளில் தோன்றிய சிறு நம்பிக்கையோடு ஷூட் நடக்கும் இடத்திற்கு சென்றாள் ஆதிரா.
கேமராக்களும் தயாராக இருக்க, அப்போதுதான் வருணோடு பேசிக்கொண்டிருந்த சித்தார்த்தின் பார்வை எதேர்ச்சையாக அவள் மீது பதிந்தது.
ஒரு ஆண்மகனாக அவன் ரசிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியமே!
அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வைப் பார்த்தவன், உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியில் “நொட் பேட்” என்று அலட்சியமாக சொல்லிவிட்டு அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்துக்கொள்ள, அவனின் பார்வையை ஏற்கனவே கண்டுகொண்டவள் சிறு சங்கடத்தில் நெளிய ஆரம்பித்தாள்.
“வாவ் ஆதி, யூ லுக் சோ ப்ரிட்டி” வருண் சொல்லிக்கொண்டே அவள் முகத்தில் விழுந்திருந்த கூந்தலை மெல்ல ஒதுக்கிவிட, மேலும் சங்கடப்பட்டு ஒதுங்கியவள், “நா.. நானே பண்ணிக்குறேன் வருண், இப்போ ஓகேவா? ஷூட் ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று கேட்டாள் வேகமாக.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஃபோட்டோ ஷூட்டை முடித்துவிட்டு உடையை மாற்றினால் போதுமென்று இருந்தது அவளுக்கு.
வருணும் கேமராமேனிடம் விழிகளால் சைகை செய்ய, வருண் சொன்னது போல பல பாணியில் நின்றுக் காட்டினாள் ஆதிரா.
சித்தார்த்தின் பயிற்சி வீண் போகவில்லை என்பது போல முகபாவனையும் உடல் வளைவும் அத்தனை பேரையும் கவர, அலைப்பேசியை நோண்டியவாறு ஓரக்கண்ணால் அடிக்கடி ஆதிராவைதான் பார்த்தான் சித்தார்த்.
ஏனோ அந்த ஆடவனாலும் அவன் பார்வையை கட்டுப்படுத்த முடியவில்லை.
“நான் இதை எதிர்பார்க்கவே இல்ல ஆதி, நெஜமாவே ரொம்ப நல்லாவே வந்திருக்கு. என்ட், ஒரு மேக்கப் ப்ராண்டோட ஆட் ஷூட்டிங் இருக்கு. அதுக்கு நான் உன்ன மாடலா சூஸ் பண்றேன். ரெடியா இரு!”
வருண் சொல்லிவிட்டு சென்றுவிட, சுற்றியிருந்தவர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருந்தது.
“இந்த கம்பனில ஜூனியர் மாடல்ஸ்ல அவ்வளவு சீக்கிரம் ஆட் ஷூட்டிங்கு சூஸ் பண்ணவே மாட்டாங்க. ஆனா இப்போ…”
“வருண் சார் எந்த மாடல்ஸுக்கும் கொடுக்காத ஆஃபர்தான் இவளுக்கு கொடுக்குறாரு. குடுத்து வச்சவ”
“நெஜமாவே இவளுக்கும் சாருக்கும் ஏதாச்சும் கனெக்ஷன் இருக்கணும். அவளுக்காக ரொம்ப பண்றாரே”
ஆளாளுக்கு காதில் விழவே பேச, அதைக் கேட்டவளுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.
இந்த பேச்சுக்கள் சித்தார்த்தின் காதில் விழாமல் இல்லை. அவனுக்கும் அதே குழப்பம்தானே!
ஆனால் இதிலெதுவும் தலையிடாது அவன் பாட்டிற்கு அமர்ந்திருக்க, உடனே உடை மாற்றவென சென்றவளை இடித்து உடை மாற்றும் அறைக்குள் நுழைந்த இன்னொரு மாடல் அவளுடைய ஆடையை வீசாத குறையாக அறை வாசலில் போட்டுவிட்டு கதவை சாற்றினாள்.
ஆதிரா இத்தகைய அவமானங்களை சந்தித்ததே இல்லை. அவமானத்தால் முகம் கறுத்துப் போய்விட்டது.
சரியாக அவள் விழிகளில் ஆண்களுக்கான உடை மாற்றும் அறை தென்பட, பாதி கதவு திறந்திருந்த ஆண்களுக்கான அறையை எட்டிப் பார்த்தாள் ஆதிரா.
உள்ளே யாருமில்லை. அந்த பக்கமும் அவ்வளவாக ஆட்களின் நடமாட்டம் இருப்பதாகவும் தெரியவில்லை.
உடனே அந்த அறைக்குள் நுழைந்தவள், கதவைத் தாழிட முயற்சி செய்ய! அதுவோ பூட்டிய பாடில்லை.
‘ச்சே! இது வேற.. இவ்வளவு பெரிய கம்பனின்னுதான் பேரு. ட்ரெஸ்ஸிங் ரூம்க்கு லாக் இல்ல. சரி யாராவது வரதுக்குள்ள சீக்கிரம் மாத்திட்டு போகலாம்’ என்று வாய்விட்டு சொன்னவாறு வேகவேகமாக ஆடையை கழற்றினாள் அவள்.
அப்போதுதான் மேலாடையை கழற்றியிருப்பாள், பட்டென்று கதவு திறக்கப்பட்டது..
இதை பெண்ணவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. பேச்சு மூச்சின்றி அப்படியே சிலையாகி அவள் நிற்க, அவளெதிரே நின்றிருந்தான் சித்தார்த்.
கதவைத் திறந்து தன்னெதிரே நின்றிருந்தவளின் கோலத்தைப் பார்த்த மறுநொடி அதிர்ந்து விழி விரித்தவன் சற்றும் தாமதிக்காது கதவை படாரென சாற்றினான்.
ஆதிராவுக்கு நடந்ததை கிரகிக்கவே சில நிமிடங்கள் எடுத்தன. அவளுடைய இதயத்துடிப்பு படுவேகமாக அடித்துக்கொண்டது
“அய்யோ போச்சு! என் மானமே போச்சு.. அவன் பார்த்துட்டான். இப்போ.. இப்போ நான் எப்படி அவன் மூஞ்சுல முழிப்பேன்? இல்ல முடியாது.. முடியவே முடியாது”
விழிகளிலிருந்து விழிநீரும் வந்துவிட்டது. அவளால் நடந்ததை ஜீரணிக்க முடியவில்லை.
தலையைத் தாங்கிய வண்ணம் அவள் அப்படியே தரையில் அமர்ந்திருக்க, அந்த அறைக் கதவு வேகமாகத் தட்டப்பட்டது.
உடனே விழிகளைத் துடைத்து, “யா.. யாரு?” முயன்று சாதாரணக் குரலில் அவள் கேட்க, “மிஸ் ஆதிரா, இதுக்குள்ள நீங்க என்ன பண்றீங்க? லேடீஸ் ட்ரெஸ் சேன்ஞ் ரூம் அந்த பக்கமா இருக்கு. என்ட் வருண் சார் உங்க கூட பர்சனலா பேசணும்னு சொன்னாரு” என்றாள் வருணின் செக்கரெட்ரி ஜெனி.
“ஆங்.. வர்றேன்” என்று அழுகையை அடக்கிய குரலில் சொன்னவள் வேகவேகமாக பழைய உடைக்கு மாறி கண்களைத் துடைத்துவிட்டு வெளியேறினாள்.
தப்பித்தவறி நிமிர்ந்து யாரையும் பார்க்கவில்லை அவள்.
தோளிலிருந்த பையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு அவள் அங்கிருந்து வெளியேறப் போக, சட்டென எதிர்பார்க்காமல் தன்னெதிரே நின்றிருந்தவனின் மார்பில் மோதி நின்றாள் ஆதிரா.
“சா.. சாரி!” அவள் வேகமாக நிமிர்ந்துப் பார்க்க, பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை இட்டவாறு அவளை ஆழ்ந்த பார்வைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தான் சித்தார்த்.
யாரைப் பார்க்க கூடாது என்று நினைத்தாளோ அவனையே பார்த்துவிட்டாள்.
அவளுடைய இதயத்துடிப்பு மீண்டும் வேகமாக அடித்துக்கொள்ள, அவளை நெருங்கியவன் அவள் காதருகே மெல்ல குனிந்தான்.
“ரொம்பலாம் ரியேக்ட் பண்ணாத! இதெல்லா எனக்கு வெறும் பத்தோட பதினொன்னுதான். பார்த்தது நியாபகத்துல கூட இல்ல”
என்ற அவனின் வார்த்தைகளில் மேலும் அவள் அதிர்ந்துப் போய் பார்க்க, இதழை ஏளனமாக வளைத்தவன் அவளைத் தாண்டி சென்றான்.
அவன் சென்றது மே ஆதிரா விட்டால் போதுமென்று ஓடிவிட, இதை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த வருணின் விழிகள் அனலைக் கக்கின.
**********
கதைய பத்தி உங்க கருத்துக்கள சொல்லுங்க… 😍😍
-Sheha zaki
