விழி கொல்லும் விஷமா நீ.. EPI 10
விழி கொல்லும் விஷமா நீ..
EPISODE 10
Advertisement

“அப்போ உனக்கு முன்னாடியே தெரியுமா ஆரவ், அதை பத்தி ஏன் என்கிட்ட சொல்லல?”
Advertisement
Advertisement
என்று மஹாதேவன் காட்டமாகக் கேட்க, அவனோ அலட்சியமாக தோளைக் குலுக்கினான்.
“இப்போ நான் சொன்னா மட்டும் மகளேன்னு பாசமா தேடி போயிருவீங்களா என்ன! வெறும் பிஸ்னஸ்காக தானே எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க ட்ரை பண்றீங்க மிஸ்டர் மஹாதேவன்?” என்று அவன் கேட்ட கேள்வியில், அவருக்கு அவமானத்தில் நிலத்திற்குள் புதைந்து விடலாம் போல இருந்தது.
Advertisement
“அது.. அப்படி இல்ல ஆரவ், சாவித்ரிக்கு பிடிக்காது. நான் என்ன பண்றது? மத்தபடி எனக்கு பாசம் இருக்குதான்” என்று திக்கித்திணறி அவர் சொல்ல, “உங்க வீட்டுலயிருந்து அவ ஓடி போன மூனே நாள்ல அவ எங்க இருக்கான்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன். தட் இஸ் மை லவ், தட் இஸ் ஹவ் ஐ லவ் ஹெர்” என்றான் ஆரல் விழிகளில் காதலோடு.
மஹாதேவனோ அமைதியாக இருந்தார் சில கணங்கள் எதுவும் பேசவில்லை.
மகளின் மீது பாசம் இருந்தால்தானே அவர் அவளைத் தேடித் திரிய!
“எனக்கு புரியுது, பட் என்னை கடைசியா ஒருமுறை நம்பு! எப்படியாச்சும் நிஹாரிகாவ நான் உனக்குதான் கல்யாணம் பண்ணி தருவேன், ட்ரஸ்ட் மீ! என்ட் அந்த ப்ராஜெக்ட் சைன் வச்சேன்னா…” அவர் மகளை வைத்து பேரம் பேசிவிட்டு அசடுவழிய, ஆரவ்விற்கு அவரைப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது.
“அதையெல்லா இனி நானே பார்த்துக்குறேன். எனக்கு ஒரே ஒரு விஷயம்தான் இடிக்குது. அந்த யாதவ்… அவனாலதான் நீஹா என்னை விட்டு போனா. இப்போ அவன்கிட்டயே வேலை பார்க்குறா. ஐ கான்ட் டோலரேட் திஸ். அவன் எப்படியும் இவள ஏத்துக்க மாட்டான் ஐ அம் டேம்ன் ஷுவர்! ஆனா இவ… அவ யாதவ்வ சந்திக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கவே கூடாது”
ஆரவ் உச்சகட்ட கோபத்தோடு பற்களைக் கடித்த வண்ணம் சொல்லி முடிக்க, மாஹாதேவனுக்கு இந்த விடயம் புதிதாகத்தன் இருந்தது.
“வாட்! யாதவ்வா… அவளுக்குக் இவனுக்கும் என்ன சம்பந்தம்? இதை பத்தி ஏன் என்கிட்ட சொல்லல?” என்று அவர் குறையாத அதிர்ச்சியோடுக் கேட்க, ‘இவன்லாம் ஒரு அப்பனா!’ என்று உள்ளுக்குள் நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனால்.
ஆனால் வேறு வழி.. நடந்தது மொத்தத்தையும் சொல்லி முடித்தான் ஆரவ்.
“இவ்வளவு நடந்திருக்கா?” என்று அதிர்ந்த குரலில் கேட்டவர், “இப்போ தெரியுதா நீங்க அப்பாவா இருக்குற லட்சணம்?” என்றவனின் கோபமான வார்த்தைகளில் அவனை முறைத்துப் பார்த்தார்.
ஆனால் என்ன செய்துவிட முடியும்!
மொத்தமாக நஷ்டத்தில் விழப்போன மஹாதேவனின் வியாபார வாழ்க்கையை மீட்டெடுத்தவனே அவன்தானே!
அடுத்த வார்த்தை பேசாது அவர் அமைதியாகி விட, தீவிர சிந்தனையில் உழன்றான் ஆரவ்.
அதேநேரம்,
“ப்பாஹ்… இப்படி ரோட்ல நின்னு பானிபூரி சாப்பிடுற சுகம் இருக்கே..” என்று விழிகளை மூடி ரசித்து சாப்பிட்டுக்கொண்டே சொன்னவளை சுற்றியிருந்தவர்களே ஒரு மாதிரியாகத்தான் பார்த்து வைத்தனர்.
ஆனால் நிஹாரிகாவுக்கு தோழியின் செய்கையில் சிரிப்பு மட்டுமே!
“ரொம்ப நாளா வேலை வேலைன்னு மெஷின் மாதிரி ஓடிக்கிட்டே இருக்கோம்ல ஆதி” என்றுவிட்டு ஒரு முழு பானிபூரியை வாயிற்குள் தள்ளினாள் நிஹாரிகா.
அப்போதுதான் ஏதோ ஒன்று ஞாபகம் வந்தவளாய், “ஆமா… ஐபீஎல் மேட்ச் நடந்துக்கிட்டு இருக்கே, உன் ஆளு சாரி சாரி உன் பாஸ் என்ன பண்றாரு?” என்று ஆதிரா கேட்டதும், அவனுடனான கடைசி சந்திப்பின் போது நடந்ததுதான் மற்றவளுக்கு நினைவுக்கு வந்தது.
உடனே அவள் முகம் வாடிப்போக, “மேட்ச் நடக்குறதால அவ்வளவா ஹோட்டலுக்கு வரதில்ல. சென்னைக்கு வர்றப்போ மட்டும் ஹோட்டலுக்கு வந்துட்டு போவாரு அவ்வளவுதான். மத்தபடி சொல்றதுக்கு எதுவுமில்ல” என்றாள் சோர்ந்த குரலில்.
ஆதிராவுக்கு அவள் விழிகளில் தெரியும் வலிக்கான காரணம் புரியாமலில்லை.
பிரிந்த இருவரின் எதிர்பாரா சந்திப்பு இருவருக்குமே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று உணராதவளா அவள்!
“சரி அதை விடு! எங்கப்ப அய்யனார் சாமி இங்க என்னை பார்க்க வர்றதா சொல்லிட்டு இருக்காரு. நான் இப்போ என்ன வேலை பார்க்குறேன்னு தெரிஞ்சா கோயில்ல ஆடுக்கு பதிலா என்னை பழி கொடுத்துருவாய்ங்க நீஹா”
என்று ஆதிரா சொன்ன விதத்தில் நிஹாரிகா வாய்விட்டு சிரிக்க, இருவரையும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தன இரு விழிகள்.
அடுத்தநாள்,
ஹோட்டலில் யாதவ்வின் ஆஃபீஸ் ரூமில் தன் இருக்கையில் அமர்ந்து வேலையில் மூழ்கிப் போயிருந்தாள் நிஹாரிகா
“ஐபீஎல் முடிஞ்சதும் இவனுக்கு இத்தனை ஆட் ஷூட் என்ட் ஃபோட்டோ ஷூட் இருக்கா, அடக்கடவுளே! செக்ரட்ரின்னு பேருல இவன் பின்னாடியே லோலோன்னு அலையணும் போலயே…”
அவள் உள்ளுக்குள் புலம்பிக்கொண்டே வேலைப் பார்க்க, எதேர்ச்சையாக அவளின் பார்வை அறை சுவாற்றில் தொங்கிக்கொண்டிருந்த அவனின் ஆளுயர புகைப்பட ஃப்ரேமின் மீது பதிந்தது.
தன்னவனை ரசித்துப் பார்த்தவளின் இதழ்கள் மெல்ல புன்னகைக்க, அதனருகே நெருங்கிச் சென்றாள் அவள்.
அவளுடைய விரல்கள் அவனின் படத்தை மெல்ல வருடின. ஏனோ அவளவனே அவளை நெருங்கி நிற்பது போல பிரம்மை அவளுக்குள்.
“அர்ஜூ…” என காற்றுக்கே வலிக்காதது போல அழைத்தவள் விழிகளை மூடி அந்த புகைப்படத்தின் மீது தலையை சாய்த்துக்கொண்டாள்.
அவனையே அணைத்திருப்பது போல தோன்றிய உணர்வே இந்த ஜென்மத்திற்கு போதுமென தோன்றியது அவளுக்கு.
“அர்ஜூ…” மெல்ல அவளிதழ்கள் முணுமுணுக்க, அவளுடைய நினைவுகள் அவனுடனான அடுத்த சந்திப்பை நினைவுக் கூர்ந்தன.
சில நாட்கள் கழித்து
“சொல்லாம கொல்லாம ஊருக்கு போயிட்டியா, என்ன சொல்ற ஆதி? ஏற்கனவே இந்த ஆரவ்வால டென்ஷன்னா நீ அதுக்கும் மேல டிப்ரெஷனா இருக்க”
என்று நிஹாரிகா கடுப்பில் கத்திக்கொண்டே போக, ஆதிராவுக்கு அவளின் நிலை நன்றாகவே புரிந்தது.
“ஹேய் கொஞ்சநாள்தான்டீ, ஊர்ல திருவிழான்னு என் அப்பா பெரிய மீசை என்னை கையோட கூட்டிட்டு வந்திருக்காரு. உனக்குதான் தெரியுமே நீஹா. ப்ளீஸ்டீ கொஞ்சம் அட்ஜஸ்ட் கரோ! ஏதாச்சும் பண்ணி ஆரவ்கிட்ட மாட்டிக்காத, புரிஞ்சதா? சரி நான் அப்பறமா பேசுறேன், அதிகமா ஃபோன் பேசினா எவன் கூடவாச்சும் பேசுறதா அதுங்களா யூகிச்சு என்னை யாருக்காச்சும் கட்டி கொடுத்துருவாய்ங்க”
அவள் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்திருக்க, நிஹாரிகாவுக்கு எரிச்சலாக இருந்தது.
ஆரவ்வால் உண்டாகும் மனஅழுத்தத்திற்கு ஆறுதலே அவள்தானே!
வேண்டா வெறுப்பாக கல்லூரிக்கு சென்றவள் ஏனோதானோ என்று படித்துவிட்டு வெளியேறி கல்லூரிக்கு பக்கத்திலிருந்த பூங்காவில் சென்றமர்ந்துக் கொண்டாள்.
அவ்வப்போது தனிமையை விரும்புபவள்தான்.
மனதை அமைதிப்படுத்தி சுற்றி நடப்பதை பார்த்த வண்ணம் அவள் அமர்ந்துக்கொண்டிருக்க, சட்டென அவள் மனவிம்பத்திற்குள் தோன்றினான் யாதவ்.
அன்று அவன் பார்த்த பார்வையும் அவளைப் பார்க்கும் போது பளிச்சிடும் அவனின் புன்னகையும் அவள் மனக்கண்ணுள் மீண்டும் மீண்டும் தோன்றி இம்சித்தது.
தலையை உலுக்கி சிந்தனையை கலைக்க முயன்றாள் நிஹாரிகா.
‘என்னடீ அவன பத்தி யோசிக்கிற, உன் யோசனை போற திசையே சரியில்ல. இது மட்டும் ஆரவ்க்கு தெரிஞ்சது அடுத்து ஹவுஸ் அர்ரெஸ்ட்தான்’ என்று தனக்குள் அலெர்டாக நினைத்துக்கொண்டவள், சிந்தனையை வேறுபுறம் திசைத் திருப்ப முயற்சிக்க, திடீரென அவள் காலடியில் வந்து விழுந்தது ஒரு பந்து.
புருவ முடிச்சுகளோடு அதைப் பார்த்தவள் எடுக்கப் போக, அதற்குள் அவளருகே ஓடி வந்தவனோ, “சாரி சாரி..” என்று வேகமாக சொல்லிக்கொண்டே பந்தை எடுத்துக்கொண்டான்.
அந்த பழக்கப்பட்ட குரலில் அவள் சட்டென நிமிரவும் அந்த ஆடவன் அவளை நிமிர்ந்துப் பார்க்கவும் நேரம் சரியாக இருந்தது.
ஆம், சாட்சாத் அவனேதான். இத்தனை நேரம் அவளுடைய புலம்பலிற்கு காரணமானவன்.
யாதவ் அர்ஜூனா.
“அட நீஹா… வாட் அ சர்ப்ரைஸ்! நெஜமாவே உன்ன இங்க எதிர்பார்க்கல, பட் உன்ன பத்திதான் ரெண்டுநாளா யோசிச்சிட்டு இருக்கேன்” என்று வேகமாக பேசிக்கொண்டே போனவன் பந்தை தூரத்திலிருந்த தன் நண்பர்களை நோக்கி எறிந்துவிட்டு, “ஆமா.. நீ ஏன் எனக்கு கால் பண்ணல? ஐ அம் வெயிட்டிங் ஃபார் யூ சோ லாங்” என்றான் உரிமையோடு.
அவனின் படபட பேச்சைக் கேட்டவளுக்கு அடுத்து பேசக் கூட நா எழவில்லை. அவனுடனான எதிர்பாரா சந்திப்புக்களை நினைத்து திகைத்துப் போயிருந்தாள் நிஹாரிகா.
அவள் முன் சொடக்கிட்டு அவளை நடப்புக்கு கொண்டு வந்தவனுக்கு அவளுடைய முகபாவனையில் சிரிப்புதான் வந்தது.
“ஹேய் என்னாச்சு? நீயும் என்னை எதிர்பார்க்கல அப்படிதானே! பட் நான் உன்ன எக்ஸ்பெக்ட் பண்ணேன்” அவன் சொன்னவாறு அவள் பக்கத்தில் அமர, “என்ன, நீ.. நீ என்னை எதிர்பார்த்தியா? எதுக்கு?” என்று திக்கித்திணறிக் கேட்டாள் அவள்.
‘இவன் எதற்கு தன்னை எதிர்பார்க்க வேண்டும்?’ என்ற கேள்வி அவளுக்குள் உருவாகினாலும் ஏதோ ஒரு மூலையில் ஏனென்று தெரியாமல் ஜிவ்வென்று இருந்தது அவளுக்கு.
“அது எதுக்குன்னா…” என்று நாடியில் கை வைத்து யோசிப்பது போல பாவனை செய்துக்கொண்டே நீட்டி முழக்கிய யாதவ், அவள் எதிர்பார்க்காது அவள் முழங்கையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தான்.
நிஹாரிகா அவனின் திடீர் செய்கையில், ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டாள்.
“லுக், எனக்கு லவ்வ சொல்லாம பின்னாடி அலையுறது, உனக்கே தெரியாம சைட் அடிக்குறது இதெல்லா செட் ஆகாது. எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. உன்கிட்ட நம்பர கொடுத்ததுக்கு அப்பறம் உன் காலுக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அப்போதான் ஐ ரியலைஸ்ட் தட்… தட்ஸ் இட், நீ என்ன சொல்ற?”
தனக்குள் தோன்றிய உணர்வை வெளிப்படையாக சொல்லிவிட்டான். இப்போது அவளுடைய பதிலை எதிர்பார்த்து அவள் விழிகளையே பார்த்திருந்தான் யாதவ்.
ஆனால் நிஹாரிகாவுக்கு மயக்கம் வராத குறைதான்.
அவனுடைய விழிகளை இமை வெட்டாமல் அவள் பார்த்துக்கொண்டிருக்க, அந்த மீன் விழியாளின் பார்வை வீச்சை எதிர்கொள்ள முடியவில்லை ஆண்மகனால்.
யாதவ் சட்டென்று பார்வையை திருப்பிக்கொண்டு புன்னகைக்க, ஒரு ஆணின் வெட்கத்தை முதல் தடவை பார்த்தாள் நிஹாரிகா.
அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அதுவும் அவனின் வெட்கம் அவளிடத்தில் என்றதும் இனம்புரியாத உணர்வு அவளுக்குள்.
“டேய் யாதவ், இப்போ நீ வர போறியா இல்லயாடா?” என்று தூரத்திலிருந்து அவனின் நண்பன் கத்திக் கேட்க, “இதோ வர்றேன்டா” என்றவன், “சீக்கிரம் சொல்லு, ஐ அம் வெயிட்டிங் ஃபார் யூவர் கால்” என்றுவிட்டு அவளையே திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணம் நண்பனை நோக்கி ஓடினான்.
பெண்ணவளுக்கு நடப்பை கிரகிக்கவே சில நிமிடங்கள் எடுத்தன.
போகும் அவனையே தன்னை மறந்து பார்த்துக்கொண்டிருந்தவளின் அலைப்பேசி அலற, குனிந்து திரையைப் பார்த்தாள்.
“ஆரவ் காலிங்…” என்று திரையில் மின்ன, சில கணங்கள் அதை வெறித்துப் பார்த்தவளோ மீண்டும் யாதவ்வின் புறம் பார்வையைத் திருப்பினாள்.
யாதவ்வைப் பார்க்கும் போது அவளுக்குள் தோன்றும் அந்த பெயர் தெரியாத உணர்வை இன்றுவரை அவள் ஆரவ்விடம் உணர்ந்ததே இல்லை.
நிஹாரிகாவின் கரங்கள் ஆரவ்வின் அழைப்பை தானாக அணைக்க, போகும் யாதவ்வை பார்த்துக்கொண்டிருந்தவளின் இதழ்கள் புன்னகையில் விரிந்துக்கொண்டன.
அந்த தருணத்தை நினைத்துப் பார்த்து அவனின் ஆளுயர புகைப்படத்திற்கு காதலோடு முத்தமிட்டாள் அவள்.
ஆனால், மறுகணம் அவளின் சிந்தனையை கலைப்பது போல திடீரென மேசை மீதிருந்த தொலைப்பேசி அலறியது.
‘நேரங்கெட்ட நேரத்துலதான் எவனாச்சும் கூப்பிடுவான்!’ என்று புலம்பிக்கொண்டே அழைப்பை ஏற்றாள் நிஹாரிகா.
“ஹெலோ…” அவளின் குரல் சலிப்பாக ஒலிக்க, “என் ஃபோட்டோவோட ரொமென்ஸ் பண்ணது போதும், இம்மீடியட்டா நான் சொல்ற இடத்துக்கு வா” என்ற கணீர் குரலில் திக்கென்று இருந்தது அவளுக்கு.
“சார்… நீங்க.. நீங்க எப்படி என்னை..?” வேகமாக எழுந்து அவள் சுற்றிமுற்றித் தேட, “எல்லா கேமராவோட ஆக்செஸும் என்கிட்ட இருக்கு. ஐ அம் வாட்சிங் யூ மிஸ் நிஹாரிகா” என்றான் யாதவ் அழுத்தமாக.
“ஹிஹிஹி…” என்று அவள் அசடுவழிந்தவாறு ஏதோ சொல்ல வர, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அழைப்பை பட்டென்று துண்டித்திருந்தான் யாதவ்.
உடனே அவனின் எண்ணிலிருந்து லொக்கேஷன் வந்ததும் அவள் இருக்கும் இடத்திலிருந்து இரண்டரை மணி தூரம் தொலைவிலிருந்த அந்த இடத்தைப் பார்த்தவளின் விழிகள் சுருங்கின.
ஆனால் வேறு வழி!
கேப் ஒன்றைப் பிடித்து அந்த இடத்திற்கு சென்றாள் நிஹாரிகா.
கிட்டத்தட்ட இரண்டரை மணி நேர பயணத்திற்குப் பிறகு அந்த வளாகத்தின் வாசலில் நின்றது கேப்.
“யம்மா உள்ள எல்லாரும் பெரிய இடம், இதுக்குமேல விட மாட்டாங்க, நீங்களாதான் போகணும்”
கேப் ஓட்டுனர் சொன்னதும் பணக்காரர்கள் மட்டும் வசிக்கும் அந்த இடத்தை பதற்றத்தோடு பார்த்தபடி இறங்கியவள் அவள் பாட்டிற்கு உள்ளே நுழைய, அவளை தடுத்து நிறுத்தினார் செக்யூரிட்டி.
“யாரும்மா நீ, உன் பாட்டுக்கு உள்ள போற? உன் இஷ்டத்துக்கு எல்லா இப்படி போக முடியாது. உள்ள இருக்குறவங்க எல்லாரும் பெரிய ஆளுங்க. உனக்கும் இந்த இடத்துக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கு”
அவர் குரலை உயர்த்திக் கத்த, வேகமாக தான் வந்ததற்கான காரணத்தை சொன்னாள் அவள்.
“மரியாதையா பேசுங்க அண்ணா, யாதவ் சார்தான் என்னை வர சொன்னாரு. நீங்க வேணா அவர்கிட்டயே கேட்டுக்கோங்க” அவள் உறுதியாக பேசிவிட்டு மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நிற்க, உடனே யாதவ்வின் வீட்டு எண்ணிற்கு அழைத்துப் பேசினார் அந்த செக்யூரிட்டி.
பேசி முடித்து அவர் அழைப்பை துண்டித்ததும், “இப்போ தெரிஞ்சிருச்சா, என்னை உள்ள விடுங்க” என்றுவிட்டு செல்லப் போனாள் அவள்.
ஆனால் அடுத்து அவர் சொன்ன வார்த்தைகளில் அவள் விதிர்த்துப் போய் நிற்க, தன் பால்கனியிலிருந்து நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த யாதவ்வின் விழிகள் இரையை வேட்டையாட காத்திருக்கும் சிங்கம் போல மின்னின.
*********
மறக்காம உங்க கருத்த சொல்லுங்க.. 😍😍
