Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

57.கார்த்திகா கார்த்திகேயன்-தேவனுக்கேற்ற தேவியோ

அத்தியாயம் 7.1_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்

அத்தியாயம் 7

 

போர் வாளையும் மிஞ்சிவிடும்

என்னைத் தாக்கும்



Advertisement

உந்தன் விழி வாள்!!!

 

அமருக்கும் ரதிக்குமான தனிமை அவளுக்கு பயத்தைக் கொடுத்தது. ஆனால் அவனுக்கோ அந்த நேரம் பொக்கிஷ தருணமாக இருக்க அவள் பயம் எதுவும் புரிய வில்லை.

Advertisement

 

Advertisement

இத்தனை நாள் அவளுடன் எப்படி நேரம் செலவழிக்க வேண்டும் என்று இருந்த ஆசை எல்லாம் இன்று நிறைவேற்றிக் கொண்டிருந்தான்.

 

அவனது அன்னை தந்தை பற்றி அண்ணன் பற்றி எல்லாம் சொல்ல சொல்ல அவளும் சாதாரணமாக பேசினாலும் அவ்வபோது அவன் காதல் வசனம் பேசும் போதெல்லாம் “நேரம் ஆச்சு பா, கிளம்பலாமா?”, என்று மீண்டும் மீண்டும் கேட்டாள்.

Advertisement

 

“இரு உனக்கு ஒரு கிப்ட் வச்சிருக்கேன்”, என்றவன் ஒரு செயினை எடுத்து அவளிடம் காட்டினான். பார்த்தாலே அது தங்க செயின் என்று தெரிந்தது. அவள் அவனைக் கண்டு திகைக்க அவள் கழுத்தில் அதை அணிவித்தவன் அதில் இருந்த டாலரை அவளுடன் சேர்ந்து பார்த்தான்.

 

அதில் இதயத்தின் நடுவில் அமரின் பெயர் பொரிக்கப் பட்டிருந்தது. “என்ன இதெல்லாம்?”, என்று கேட்டாள்.

 

“ரொம்ப நாள் பாக்கெட் மணி சேத்து வச்சு வாங்கினேன் டி. வீட்ல கேட்டா ஏன் எதுக்கு அவ்வளவு பணம்னு அம்மா கேக்கும். முதல்ல நம்ம ரெண்டு பேர் பேரையும் சேத்து போடணும்னு தான் நினைச்சேன். அப்புறம் நான் மட்டும் உன் இதயத்துல இருந்தா போதும்ன்னு தோணுச்சு. இந்த செயின் உன் இதயத்தை உரசிட்டே இருக்கணும்”, என்று சொல்ல அவள் முகம் மலர்ந்து போனது.

 

ஆனாலும் அதை மறைத்து “தங்கம் எல்லாம் வேண்டாம் பா. அம்மா கண்டு பிடிச்சிருவாங்க”, என்றாள்.

 

“தெரியும் டீ, இன்னைக்கு மட்டும் போட்டுக்கோ. நாளைக்கு காலைல கொண்டு வந்து கொடுத்துரு. ஒரு நாளாவது உன் வாசத்தை அது வாங்கட்டும்”, என்று சொல்ல அவன் காதலில் சிக்கித் தவித்தவளுக்கு அவள் மேலே அவளுக்கு நம்பிக்கை இல்லாமல் போனது.

 

அதனால் மீண்டும் “போகலாமா?”, என்று கேட்க அதற்கு மேல் அவளை கவலைப் படுத்த மனதில்லாமல் எழுந்து கொண்டான். அவளும் நிம்மதியாக எழுந்தவள் “டிரஸ் காஞ்சிருக்கும். நான் போய் மாத்திட்டு வரேன்”, என்றாள்.

 

அவள் கரம் பற்றியவன் “நமக்குன்னு அதிசயமா தனிமை கிடைச்சிருக்கு டி. பிளீஸ் இதை விட்டா எப்ப சான்ஸ் கிடைக்கும்னு கூட தெரியலை. ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடுத்துக்கவா? உனக்கு பிடிக்கலைனா எதுவும் வேண்டாம்”, என்று கெஞ்ச அவளோ “இப்ப வேண்டாம். எதுனாலும் கல்யாணத்துக்கு அப்புறம் தான்”, என்றாள்.

 

அவளது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தவனுக்கு தன்னுடைய உணர்வுகளை அடக்க பெரும் பாடாக தான் இருந்தது. அதே நேரம் அவளை வற்புறுத்தவும் அவனுக்கு மனதில்லை.

 

“சரி போய்ட்டு கிளம்பி வா”, என்று சொன்னவன் முகம் வாடி போக “சரி எனக்கு சம்மதம்”, என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு. என்ன தான் சம்மதம் சொல்லி விட்டாலும் அவளுக்கும் உள்ளுக்குள் அலையடித்தது. தடுமாறும் அவளுடைய மனதை எப்படி அடக்க என்று அவளுக்கு தெரிய வில்லை.

 

அடுத்த நொடி சந்தோஷமாக அவளை அமர் நெருங்க அவளோ கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

 

அவளை நெருங்கி நின்றவன் “கண்ணை திற கண்ணம்மா”, என்றான் கிசுகிசுப்பாக. அவள் அப்போதும் திறக்க வில்லை என்றதும் அவன் உதடுகள் காற்றை அவள் முகத்தில் ஊதியது. அவனது மூச்சு காற்றுப் பட்டு மெல்ல இமைகளைத் திறந்தாள் ரதி.

 

சிப்பி போல திறந்த அந்த கண்ணிமைகளுக்கு முத்தமிட்டவன் அடுத்த நொடி அவளது இதழ்களைக் கவ்விக் கொண்டான். மெதுவாக ஆரம்பித்த முத்தம் தான். முதல் முறை போல லேசாக விலகி விடுவான் என்று தான் நினைத்தாள். அவனும் அப்படி தான் நினைத்தான். ஆனால் அவனையே அறியாமல் ஆழமாக அழுத்தமாக சென்று கொண்டிருந்தது அந்த முத்தம்.

 

அவள் கைகள் அவன் சிகைக்குள் சென்று இருக்க அவன் இரு கைகளும் அவள் முதுகை வளைத்துப் பிடித்திருந்தது. முதுகில் இருந்த கைகள் அங்கே இங்கே அலைய திணறித் தான் போனாள்.

 

சிறிது நேரம் கழித்து அவள் இதழை விட்டு விலகியவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து அமைதியாக இருக்க இருவரும் மூச்சு விடும் சத்தம் மட்டுமே அங்கே கேட்டது.

 

இருவரின் மூச்சும் இயல்பான பிறகு அவள் விலக நினைக்க அவனோ மீண்டும் அவள் இதழ்களை கவ்விக் கொண்டான். அவன் கரங்கள் முதல் முறையாக அவள் மீது எல்லை மீற அவளுக்கோ அவன் கொடுக்கும் உணர்வுகளே ஒரு மாதிரி இருக்கிறது என்றால் அவள் மனசாட்சி வேறு இது தவறு என்று எச்சரித்துக் கொண்டிருந்தது.

 

ஆனால் பருவ பெண்ணுக்கே உரிய ஆசைகள் வேறு அவளை அலைக்கழிக்க, வேண்டாம் வேண்டும் என்ற உணர்வுகளுக்கு இடையில் சிக்கித் தவித்தாள்.

 

“அமர் வேண்டாம், இது தப்பு”, என்று அவள் உதடுகள் முனங்க அடுத்த நொடி அந்த உதடுகள் இரண்டும் அவன் இதழ்களுக்குள் காணாமல் போனது.

 

வெற்றிடையில் பதிந்த கரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீறிக் கொண்டிருக்க வேறு ஒரு உலகத்தில் இருந்த அமர் அவளையும் மயக்கி கொண்டிருந்தான். அவன் செய்கையில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் வயிற்றுக்குள் படபடப்பது போன்ற

உணர்வை அடைந்தாள் ரதி.

 

என்ன செய்ய என்று தெரியாமல் அவள் தவிக்க அவனோ அவள் கழுத்தில் முகம் புதைத்து அவள் வாசனையை ஆழமாக நுகர அவள் கரங்களும் அவனைக் கட்டிக் கொண்டது.

 

அவள் பிடிவாதமாக தள்ளி விட்டிருந்தால் அவனும் விலகி இருப்பானோ என்னவோ? அவளது அனுமதி அவனை மேலும் தான் தூண்டியது.

 

என்னமும் செய்து கொள் என்பது போல அவள் அவன் கரங்களுக்குள் துவண்டு விழ அடுத்த நொடி அவளை மெத்தையில் சரித்தவன் அவள் மேலே விழுந்தான்.

 

அதற்கு பின் நடந்ததற்கு அவர்கள் மட்டுமே அங்கு சாட்சி. பருவ வயதும் அந்த வயதின் ஆசையும் கிடைத்த தனிமையும் அவர்களை தவறு செய்ய தூண்டியது.

 

அது புனிதமான பந்தம் என்று அவர்கள் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் முறையில்லாத எந்த உறவுமே தவறு அடிப்படையில் தானே வரும்?

 

எல்லாம் முடிந்ததும் அவள் தன்னுடைய தவறை நினைத்து கண்ணீர் விட அமருக்கோ நடந்ததை விட அவள் கண்ணீர் தான் அதிகம் பாதித்தது. “சாரி மா”, என்றவனுக்கு எப்படி செய்த தவறை நியாயப் படுத்த என்று தெரிய வில்லை. இருவருக்குமே தெரிந்தது தவறு தான் என்று. அதை யாராலும் நியாயப் படுத்த முடியாதே.

 

“அழாத டி கஷ்டமா இருக்கு. நீ என்னோட பொண்டாட்டி கண்ணம்மா. அந்த உரிமைல தான் இப்படி எல்லாம். ஆனாலும் தப்பு தான். என் மேல நம்பிக்கை இல்லைன்னா சொல்லு. இப்பவே உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். இனி எங்க வீட்லே இருந்துரு. நான் உன்னைப் படிக்க வைக்கிறேன். அம்மா அப்பா கிட்ட பேசுறேன் ரதி மா. உன்னோட கண்ணீர் என்னை ரொம்ப கில்ட்டியா பீல் பண்ண வைக்குது டி”, என்றான்.

அவன் வருந்துவது பிடிக்காமல் “உங்க மேல நம்பிக்கை இல்லாம இல்லை. ஆனா தப்பு செஞ்சிட்டோம் தானே? லைப் முழுக்க இது உறுத்தும்”, என்றாள்.

 

“சாரி டி, உன்னை எப்பவும் சந்தோஷமா வச்சிருக்கணும்னு நினைச்ச நானே இப்ப உன்னை கஷ்டப் படுத்திட்டேன்”, என்றவன் கண்கள் கலங்க அதையும் அவளால் பார்க்க முடியவில்லை.

 

“சரி விடுங்க, இனி இப்படி ஏதும் நடக்க கூடாது”, என்றவள் அவனை சமாதானப் படுத்த அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

 

அவள் நம்பிக்கையை எப்போதும் உடைக்க கூடாது என்று எண்ணிக் கொண்டு அவளை இறுக அணைத்துக் கொண்டான். இருவருக்குமே அந்த நிமிடம் நடந்து முடிந்த நிகழ்வை எண்ணி வேதனை மட்டுமே இருந்தது. பூரித்து சந்தோஷப் படும் நிகழ்வாக இருந்தாலும் அந்த உணர்வு அப்போது இல்லை அவர்களுக்கு.

 

நேரம் நான்கு மணி ஆனதும் அவளைப் பார்த்தவன் கலைந்திருந்த அவள் உடையை சரி செய்து “போய் சுடி மாத்திட்டு வா, கிளம்பலாம்”, என்றான்.

 

தட்டு தடுமாறி அவள் எழுந்து சொல்ல “ஒரு சிறு பெண்ணை சிதைத்து விட்டோம்”, என்ற வலி அவனுக்குள் எழுந்தது. தன்னுடைய தலையிலே அடித்துக் கொண்டவனுக்கு என்ன முயன்றும் அந்த வலியை போக வைக்க முடிய வில்லை.

 

உடை மாற்றி வந்தவளைப் பார்த்தவனுக்கு வேதனையாக தான் இருந்தது. காலையில் புது மலர் போல வந்தவள் இப்போது கசங்கிய மலராக இருக்க அதுவும் தன்னுடைய செய்கையால் என்னும் போது அவனையே அவனால் மன்னிக்க முடியவில்லை.

 

இருவரும் கிளம்பி வெளியே வர வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அவன் முதுகில் தலை சாய்த்தவள் அமைதியாக வந்தாள். வரும் போது பேசிக் கொண்டே வந்தார்கள். ஆனால் இப்போது எதுவும் பேச முடியவில்லை.

 

“என்னை நம்புவாளா? அவளை யூஸ் பண்ணிக்கிட்டேன்னு நினைப்பாளா? என்னை வெறுத்துடுவாளா? என் மேல அவளுக்கு இருக்குற காதல் குறைஞ்சிருமோ?”, என்ற கேள்விகள் அவனுக்கு வந்ததென்றால் அவளுக்கோ பயம் மட்டுமே இருந்தது.

 

தன்னை கை விட்டு விடுவானோ? கழட்டி விட்டு விடுவானோ? என் மேலே இருக்குற காதல் குறைந்து விடுமோ என்ற கேள்விகள் அவளுக்கும் தோன்றினாலும் அதை வெளிப்படையாக கேட்டு அவனை காயப் படுத்தி அவர்களின் காதலையும் அவமானப் படுத்த அவள் தயாராக இல்லை.

 

“ரதி”, என்றான்.

 

“ம்ம்”

 

“சாரி டி”

 

“விடுங்க, நடக்கணும்னு இருந்திருக்கு”

 

“நாலு அடி கூட அடிச்சிரு டி. நீ மன்னிக்கிறது எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு”

 

“இதுல உங்க மேல மட்டும் தப்பு இல்லையே? பாதி பழி என்னோடது”, என்று சொல்ல “நீ தேவதை ரதி மா. எனக்கு கிடைச்ச பரிசு டி. உன்னை எப்படி பத்திரமா வச்சிக்கப் போறேன்னு பயமா இருக்கு”, என்று சொல்ல அவள் மேலும் அவன் மீது நெருக்கமாக சாய்ந்து கொண்டாள்.

 

அப்போது தான் அமைச்சர்கள் நான்கு பேரை தன் பக்கம் இழுப்பதற்காக அவர்களுக்கு சரக்கு, பணம், பெண் எல்லாம் ஏற்பாடு செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார் தருமர். அவருடன் வந்தது அவரின் டிரைவர், சாணக்கியன் மற்றும் அடியாள் ஒருவன்.

 

அவர்களுக்கு முன்னே தான் அமரின் வண்டி சென்று கொண்டிருந்தது. அதை முதலில் பார்த்தது டிரைவர் தான். “ஐயா நம்ம தம்பிங்க”, என்று சொல்ல “என்ன வரதா சொல்ற?”, என்று கேட்டார் தருமர்.

 

“நம்ம சின்ன தம்பி தாங்க முன்னாடி போகுது”, என்று சொல்ல அவர் ஆச்சரியமாக பார்த்தார். சாணக்கியனும் தான். ஆனால் அவன் பின்னே பெண் இருப்பதைக் கண்டு தருமர் முகம் கோபத்தில் சிவந்தது என்றால் சாணக்கியனோ ஒரு பதற்றத்துடன் பார்த்தான்.

 

“காலேஜ் போறேன்னு சொல்லிட்டு எவ கூட டா இவன் சுத்திக்கிட்டு இருக்கான்?”, என்று கேட்ட தருமரின் குரலில் அப்படி ஒரு ஆக்ரோஷம்.

 

“தப்பா எதுவும் இருக்காது பா. ஏதாவது உதவி செய்ய தான் செஞ்சிருப்பான். நம்ம அமர் பத்தி தெரியாதா?”, என்று சாணக்கியன் சொல்ல “இந்த வண்டி அந்த ரெசார்ட்ல தான் ரொம்ப நேரம் நின்னுச்சு ஐயா. ஆனா நம்ம தம்பி வண்டின்னு எனக்கு தெரியாது”, என்றான் அடியாள்.

 

“என்னமோ உன் தொம்பி உதவிக்கு பண்ணுறான்னு சொன்ன? ஒரு பொண்ணு கூட அங்க என்ன வேலை அவனுக்கு?”, என்று கேட்டார் தருமர்.

 

“அவசரப் படாதப்பா. அவன் கிட்ட கேக்கலாம்”, என்று சாணக்கியன் சமாதானப் படுத்த “ஐயா இன்னொரு விஷயம்”, என்றான் அடியாள்.

 

“என்ன டா?”, என்று சொல்ல எப்படி பதில் சொல்ல என்று தெரியாமல் தடுமாறினான் அடியாள். ஏனென்றால் இரண்டு பெண்களையும் கொல்லச் சொன்னது சாணக்கியனுக்கு தெரியாதே.

 

தருமர் அவனைக் கேள்வியாக பார்க்க அவனோ சாணக்கியனை அர்த்தமாக பார்க்க தருமருக்கு தெளிவாக புரிந்தது சாணக்கியனுக்கு தெரியக் கூடாத விஷயம் என்று.

 

தான் பார்த்துக் கொள்வதாக கண்ணைக் காட்டியவர் அடுத்த நொடி தன்னுடைய போனை எடுத்து ரெசார்ட் மேனேஜரை அழைத்து விட்டார்.

 

அவன் தானே அங்கே எல்லாம் அரெஞ்ச் செய்து கொடுப்பது. அதனால் “சொல்லுங்க சார்”, என்றான் பவ்வியமாக.

 

“இன்னைக்கு அமர்ன்னு யாராவது செக்கின் பண்ணினாங்களான்னு பாத்து சொல்லு இளங்கோ”

 

“இதோ பாக்குறேன் சார்”, என்றவன் அவர்கள் ஈர துணியுடன் வந்ததையும் அறைக்குள்ளே உணவு உண்டதையும் இரண்டரை மணி நேரங்களுக்கு பிறகு வெளியே சென்றதையும் சொல்ல தருமருக்கு தலை வேதனையாக போனது.

 

மூத்த மகனை காப்பாற்றி விட்டோம் என்ற நிம்மதியில் இருக்க இப்போது அடுத்தது என்றதும் அவருக்கு கடுப்பாக இருந்தது. முன்பு என்றால் பிடிக்காதவர்களை கொலை செய்து விட்டு நிம்மதியாக இருந்து விடுவார். ஆனால் அரசியல் ஆசை இப்போது அவருக்கு பயத்தைக் கொடுத்திருந்தது. கொலை கேஸ் என பெயர் கெட்டு விட்டால் என்ன செய்வது என்று எண்ணி தான் அடக்கி வாசித்தார்.

 

அவர் என்ன செய்ய என்று யோசித்துக் கொண்டிருக்க “அப்பா”, என்றான் சாணக்கியன்.

 

“என்ன?”

 

“அவனுக்கு பிடிச்சா அந்த பொண்ணையே அவனுக்கு முடிச்சிறலாம் பா. அவன் சந்தோஷமா இருக்கணும்”, என்று நெகிழ்ந்து போய் உரைக்க சட்டென்று உஷாரானவர் “இப்ப என்ன டா உன் தம்பி சந்தோஷத்தை நான் கெடுக்க போறேன்? அவனுக்கு பிடிச்சா எனக்கும் சம்மதம் தான். அவன் சந்தோஷத்துக்கு நான் என்னைக்கு குறுக்க நின்னுருக்கேன்? நீயே கூட யாரையாவது விரும்பிருந்தா நான் கண்டிப்பா சேத்து வச்சிருப்பேன்”, என்று சொல்ல திகைப்பாய் அவரைப் பார்த்தவன் வேறு எதுவும் சொல்லாமல் திரும்பிக் கொண்டான்.

 

அவன் திவ்யாவின் நினைவில் துவண்டு விட தருமரோ நிச்சயம் பெரிதாக செய்து விட வேண்டும் என்ற முடிவில் இருந்தார்.

 

அமரும் சரியான நேரத்துக்கு கல்லூரிக்குச் சென்று அவளை திவ்யாவுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு குற்ற உணர்வுடன் தான் தன்னுடைய வீட்டுக்குச் சென்றான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!