காதலும் கடத்தப்படும் – 25

காதலும் கடத்தப்படும் – 25
Advertisement
“அஞ்சலி…” என்றான் அர்ஜுன், கவலையாக.
“ஒண்ணுமில்ல அஜூ…”
“இல்லை… இவ்வளவு நேரம் சிரிச்சிக்கிட்டு இருந்த, இப்போ முகமே மாறிடுச்சு… என்கிட்ட சொல்றதுக்கு என்ன?”
Advertisement
அவளுக்கும் அவனிடம் மனதில் தோன்றுவதை எல்லாம், பகிரவேண்டும் போல் இருந்தது.
Advertisement
“அஜூ, இவ்வளவு சந்தோஷமான நேரத்துல சித்தப்பா கூட இல்லையேனு மனசுக்கு கஷ்டமா இருக்கு. என் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்காங்க தெரியுமா?!! இந்த வீட்ல நாங்க இருந்தபோது, சித்தப்பாவும் எங்க கூடத்தான் இருப்பாங்க. அப்பாகிட்ட ரொம்ப பேச மாட்டாங்க. ‘அண்ணி அண்ணி’னு அம்மாகிட்ட தான் உரிமையா இருப்பாங்க. ராத்திரி எவ்வளவு லேட்டா வந்தாலும் அம்மா சமைச்சு கொடுப்பாங்க. அப்பாக்கிட்ட தான் சித்தப்பா அசிஸ்டன்ட் மாதிரி இருந்தாங்க. கிடைக்கிற காசை அம்மாகிட்ட கொடுத்துடுவாங்க, இல்ல எனக்கு பொம்மை ட்ரெஸ்ஸுன்னு ஏதாவது வாங்கிட்டு வந்து கொடுப்பாங்க. அப்புறம் சித்தப்பா காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. அப்பாவுக்கு பிடிக்கல. அதனால தனியா போயிட்டாங்க. நாங்களும் இப்ப இருக்கற வீட்டுக்கு மாறி போனோம். அப்புறம் சித்தப்பாவுக்கு வேற கட்சில கவுன்சிலர் போஸ்ட் ஏதோ கொடுக்கறதா சொல்லி அந்த கட்சில போய் சேர்ந்துட்டாங்கன்னு அப்பாவுக்கு ரொம்ப கோவம். ரொம்ப பெரிய சண்டை நடந்தது. அப்புறம் சித்தப்பா வரவே இல்லை. இப்போ நான் அடிக்கடி போற கோவிலுக்கு தான் அம்மா என்னை கூட்டிட்டு போவாங்க. எங்களை பார்க்கறதுக்கு சித்தப்பாவும் கோவிலுக்கு வருவாங்க. இன்னைக்கு வரைக்கும் சித்தப்பா மாறவே இல்லை. எனக்கு ஒண்ணுன்னா தாங்க மாட்டாங்க. எப்பவுமே ‘நான் இருக்கேன்’னு சொல்லுவாங்க. அந்த வார்த்தையை கேட்கும்போது ஒரு தைரியம் வரும். என் அப்பா அந்த மாதிரி சொன்னதில்லையேன்னு நான் ஏங்கினது உண்டு. ஆனா இன்னைக்கு அப்பாவும் ‘நான் உனக்கு இருக்கேன்’னு சொன்னபோது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா அஜூ? இந்த தொழிலை அமைச்சு கொடுத்து, அப்பா முன்னாடி நின்னு இத தொடங்கி வச்சத நினைக்கும்போது கனவா நினைவான்னு எனக்கே சந்தேகம் வருது. அஜூ…”
அவள் கன்னத்தில் மேல் உருண்டோடிய கண்ணீரை துடைத்துக்கொண்டவளாய் மேலும் தொடர்ந்தாள். அவள் கலங்குவதைக் கண்டு அர்ஜுனின் நெஞ்சம் ஏறத்தாழ நின்றுவிட்டிருந்தது.
“அன்னைக்கு நீ சொன்னல அஜூ, அப்பாகிட்ட பேசுன்னு. உனக்காக பேசினேன், மனசுவிட்டெல்லாம் இல்லை, சும்மா பொதுவா ஒரு நாலு வார்த்தை… ‘அப்பா’னு கூப்பிட்டேன்… மனசு லேசான மாதிரி இருக்கு அஜூ… சின்ன வயசு கண்டிப்பெல்லாம் இப்ப அப்பாகிட்ட இல்லை… எப்பவும் என் ரூம்ல தனியா சாப்பிடுவேன்… ஆனா இன்னைக்கு அப்பா பக்கத்துல உட்கார்ந்து சாப்பிட்டது ரொம்ப பிடிச்சிருந்தது அஜூ… என் ஃப்ரண்ட்ஸெல்லாம் அவங்கவங்க அப்பாவை பத்தி சொல்லும்போது, ஃப்ரெண்ட் மாதிரி பேசி பழகும்போது, நீ உன் அப்பாவை பத்தி சொல்லும்போது கூட பொறாமையா இருந்தது. ஆனா இன்னைக்கு ரொம்ப கர்வமா இருக்கு அஜூ… உன்னால தான்… உன் வீட்ல இருந்த போது நீ பேசியதெல்லாம் அடிக்கடி நினைச்சு பார்த்துப்பேன்…அந்த வார்த்தைகள் தான் என்னை சுத்தியிருக்கற கல் சுவரை உடைக்க உதவி செஞ்சது… ரொம்ப தேங்க்ஸ் அஜூ…”
Advertisement
அர்ஜுனின் விழியும் கலங்கியிருந்தது. கண்களை துடைத்துக்கொண்டவன்,
“எல்லாமே மாறும் அஞ்சலி… நீ ஆசைப்பட்டது எல்லாம் நடக்கும்… இனிமேல் உன்னைத்தேடி எல்லா நல்லதும் வந்து சேரும்… இத்தனை வருஷமா நீ எவ்வளவு மனவேதனையில் இருந்தியோ, அதை விட நூறு மடங்கு சந்தோஷத்துல மிதக்க போற…” என்றான், ஆணித்தனமாக.
கலங்கியிருந்த கண்களை துடைத்துக்கொண்டான், மதன்.
“மதனா…”
“ஒண்ணுமில்ல அஞ்சலி… உன் சித்தப்பாவை பத்தி சொன்னதும் எனக்கு என்னோட சித்தப்பா நினைப்பு வந்து, வருத்தமா இருக்கு…”
“நமக்கு ஏதுடா சித்தப்பா?” என்றான் அர்ஜுன் கேள்வியாய்.
“இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக் சொல்லி அழறதுக்கு கூட ஒரு சித்தப்பா இல்லையேனு வருத்தமா இருக்கு…”
அழுகையை மறந்து அஞ்சலி சிரிக்க, அர்ஜுனின் மனம் சற்று ஆசுவாசம் கொண்டது.
அங்கிருந்த ஒரு இனிப்பு பெட்டியை திறந்து வைத்துக்கொண்டு தனது இருக்கையில் வந்து அமர்ந்தான், மதன்.
“என்னடா பண்ற?” என்றான் அர்ஜுன்.
“மீந்து போயிடுச்சு அஜூ. சாப்பாட வீணாக்க கூடாது…”
“அதுக்குன்னு ஒரு கிலோ ஸ்வீட்ட மொத்தமா சாப்பிட்டா உடம்பு என்ன ஆகும்?” என்றாள் அஞ்சலி.
“தித்திப்பா இருக்கேன்னு ஈ, எறும்பு மொய்க்கும்…”
“டேய்… உடம்பு கெட்டுடும்…” என்று அர்ஜுன் கூற,
“சரக்கா சாப்பிடறேன், ஸ்வீட் தான…” என்று அவன் கூறிமுடிக்க, கதவு தட்டும் சத்தம் கேட்டது.
அஞ்சலி எழ, “நீ உட்காரு அஞ்சலி, நான் பார்க்கறேன்” என்று அர்ஜுன் எழுந்து சென்றான்.
“சார், வாங்க வாங்க…” என்று அழைத்தான் அர்ஜுன்.
“நீங்க?”
“சார், அன்னைக்கு கோவில்ல பார்த்தீங்களே அஞ்சலி கூட, மறந்துட்டீங்களா?”
“ஓ! ஆமாம்மா… மறந்துட்டேன்… நல்லா இருக்கீங்களா?”
“இருக்கேன் சார்…” என்றவன், அவரை அழைத்துக்கொண்டு அஞ்சலி, மதன் இருக்கும் அறைக்கு சென்றான்.
“அஞ்சலி, யாரு வந்திருக்கானு பாரு…” என்றவன் அவளுடைய முகபாவத்தைப் பார்க்க ஆவலானான்.
“சித்தப்பா… வாங்க சித்தப்பா” என்றபடி அவர் எதிரே சென்று நின்றாள் அஞ்சலி.
“அஞ்சலி, எப்படி இருக்க?”
“நல்லாயிருக்கேன் சித்தப்பா… நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு…”
“நீ ஒரு விஷயம் செய்யும்போது இந்த சித்தப்பா இல்லாமலா? நல்லா இருக்குமா ஆஃபிஸ்”
“வாங்க சித்தப்பா சுத்தி பார்க்கலாம்” என்ற அஞ்சலி அவரை அழைத்துக்கொண்டு, ஸ்டூடியோவை சுற்றிக்காட்டினாள். அப்படியே தந்தை தனது பெயரில் இந்த தொழிலையும் வீட்டையும் பதிவு செய்து கொடுத்ததையும், தொழிலை நிர்வகிக்கும்படி கூறியதையும் பகிர்ந்து கொண்டவள், அவரிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் மகிழ்வோடு பகிர்ந்துகொண்டாள்.
மீண்டும் அலுவலக அறைக்குள் வந்து அமர்ந்தனர், அஞ்சலியும், அவளுடைய சித்தப்பாவும். அர்ஜுன் நின்றுகொண்டிருக்க, அருகே கையில் இனிப்பு பெட்டியோடு மதன் நின்றிருந்தான். ‘வேது உயரம், தம்பி குள்ளம்; வேதுக்கு மண்டை பூரா முடி, தம்பிக்கு மைக்ரோஸ்கோப் வச்சு தேடினாலும் ஒத்த முடி இல்லை; வேதுக்கு கட்டை மீசை, தம்பிக்கு விருமாண்டி கணக்கா இருக்கு…’ என்று அவன் சிந்தித்துக்கொண்டிருக்க,
“என்னபா வச்ச கண்ணு வாங்காம பார்க்கற? உன் பேர் என்ன?” என்றார், மதனிடம்.
“நான் லட்சுமணன், இவன் ராமன்” என்றான் மதன்.
“ஐயோ மதன், சித்தப்பாகிட்ட என்ன விளையாட்டு?!” என்ற அஞ்சலி, “சித்தப்பா இது மதன், அது அர்ஜுன்… ரெண்டு பேரும் அண்ணன் தம்பிங்க… விளையாட்டா பேரை மாத்தி சொல்றது மதனோட பழக்கம்” என்றாள் அஞ்சலி.
“உஷாரு?” என்றவர், உட்காருங்க, “ஸ்வீட் எனக்கா? ரொம்ப நேரமா கைல பிடிச்சுக்கிட்டு இருக்க?”
‘இல்லை எனக்கு’ என்று எண்ணியபடியே அவர் முன் பெட்டியை நீட்டினான். அதிலிருந்த ஒரேயொரு மோத்திச்சூர் லட்டுவை தனக்காக சேமித்து வைத்திருந்தான்.
‘கடவுளே இந்த மீசை வச்ச வின் டீசல் லட்டுவை மட்டும் எடுத்துடக்கூடாது’ என்று மனதில் அவன் வேண்டிக்கொண்டிருக்க, அவர் அதையே எடுத்துக்கொண்டார்.
சற்று கடுப்பானவன்,
“சார் உங்க பேரு என்ன?” என்றான் சற்றே மிரட்டலாக.
“என் பேரு மருதநாயகம்”
“வேதநாயகம் மருதநாயகம் – நல்ல காம்பினேஷன்”
“ம்க்கும், என்ன காம்பினேஷனோ” என்று சலித்துக்கொண்ட மருதநாயகம்,
“இப்பவாவது உன் அப்பனுக்கு பொண்ணோட அருமை புரியுதே… அதுவரைக்கும் சந்தோஷம்” என்றார் அஞ்சலியிடம்.
“சார்” என்றான் மதன்.
“சொல்லுப்பா லட்சுமணா…”
“என் நிஜ பேரு மதன் சார்”
“அப்புறம் எதுக்கு லட்சுமணன்’னு சொன்ன?”
“அது செல்ல பேரு…”
“செல்ல பேரு??!!”
பற்கள் தெரிய சிரித்தவன், “உங்க செல்ல பேரு என்ன சார்?” என்றான்.
“காங்ஸ்டர்…”
“என்னது காங்ஸ்டரா? நீங்க கவுன்சிலர்ன்னு கேள்விப்பட்டேன்…”
“ஊருக்கு கவுன்சிலர்… ஆனா நிஜத்துல காங்ஸ்டர்… என்னோட ரவுடி தனத்தை பார்த்துதான், கட்சியில, கவுன்சிலர் போஸ்ட் கொடுத்தாங்க. அடுத்த எலெக்ஷன்ல எம்.எல்.ஏ. சீட்டு கொடுக்கறேன்னு சொல்லியிருக்காங்க. அது மட்டும் நடக்கல, என் பசங்க வெறியாயிடுவானுங்க. கையை வெட்ட சொன்னா கழுத்த வெட்டிட்டு வந்துடுவானுங்க. ஒவ்வொருத்தனும் சூறாவளி மாதிரி!”
மதன் இனிப்பு பெட்டியை அவர் முன் வைத்துவிட்டு, கைகளைக் கட்டிக்கொண்டு அமைதியாகிப் போனான்.
“சரி நான் கிளம்பறேன் அஞ்சலி… வீட்டுக்கு வந்துட்டு போ… சித்தி உன்னை பார்க்கணும்னு சொன்னா…”
“கண்டிப்பா வரேன் சித்தப்பா… நீங்க வந்ததே எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்றாள்.
“அப்புறமா வரலாம்னு தான் யோசிச்சேன்… இருந்தாலும் மனசு கேட்கல… நம்ம பயல விட்டு உன் அப்பன் கிளம்பியதும் தகவல் சொல்லக் சொன்னேன். அவன் ஃபோன் பண்ணான் உடனே கிளம்பி வந்துட்டேன்…”
“இதுக்கெல்லாம் கூடவா ஸ்பை வைப்பாங்க?” என்றான் மதன்.
“ஆமா தம்பி, அரசியல்ங்கறது அணுகுண்டு நிறைஞ்ச இடம், தூங்கும்போது கூட கண்ண முழிச்சுக்கிட்டே தூங்கணும்…”
மருதநாயகம் கண்களை திறந்துகொண்டு தூங்குவது போல் கற்பனை செய்து பார்த்த மதனுக்கு சிரிப்பு வந்தது. தன்னை சமன் செய்துகொண்டவன்,
“சரிங்க சார்…” என்றான் பவ்யமாக. செல்லுகையில் மேசை மீதிருந்த இனிப்பு பெட்டியை அவர் எடுத்துக்கொண்டு செல்ல, எரிச்சலானான் மதன். அஞ்சலி அவரை வழியனுப்ப வெளியே செல்ல,
“அஜூ, இந்த ஆளு காங்ஸ்டரா?” என்று கடிந்துகொண்டான், மதன்.
“அதுல உனக்கு என்ன பிரச்சனை?”
“எதுக்கு இப்ப ஸ்வீட் டப்பாவை எடுத்துட்டு போனாரு?”
“டேய்…”
“அதுக்கில்ல அஜூ, இவரு ஸ்வீட் கடை வாசல்ல போய் நின்னா, இனாமா ஒன்னில்லை ரெண்டில்லை, பத்து கிலோ ஸ்வீட் கூட கொடுப்பாங்க. இதே நான் போய் நின்னா, டேஸ்ட் பாக்க கூட கொடுக்கமாட்டானுங்க…”
“ஸ்வீட் தான வேணும், நான் உனக்கு வாங்கித் தரேன்” என்றபடியே உள்ளே நுழைந்தாள், அஞ்சலி.
“இருக்கட்டும் அஞ்சலி, நான் ஏற்கனவே ரெண்டு டப்பாவை எடுத்து ஒளிச்சு வச்சிருக்கேன்”
அவள் சிரிக்க, தலையில் அடித்துக்கொண்டான், அர்ஜுன்.
“அஜூ, நான் வீட்டுக்கு போயிட்டு, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு, கோவிலுக்கு போகணும்…”
“போலாம் அஞ்சலி”
“உனக்கும் ரொம்ப அலுப்பா இருக்கும் அஜூ, நீ இங்க ரெஸ்ட் எடுத்துக்கோ, நான் நடந்து போயிக்கறேன். பக்கத்துல தான வீடு…”
“வாய்ப்பே இல்லை… கிளம்பு” என்றவன் வண்டியை கிளப்பி தயாராகி நிற்க, மதன் கதவுகளை பூட்டி சாவியினை அஞ்சலியிடம் கொடுக்க, மூவரும் வீட்டிற்கு கிளம்பினர்.
“அஜூ, எனக்கும் கார் ஓட்டணும்னு ஆசையா இருக்கு… நீ சொல்லித்தறியா?”
மதன் அஜுவைக் கண்டு, ‘நல்ல சான்ஸ்’ என்க, அவனைக் கண்டு முறைத்த அர்ஜுன்,
“உனக்கு எதுக்கு இப்ப கார் ஓட்டணும்? நான் இருக்கேன்ல… எங்க போகணும்னு சொல்லு நான் கூட்டிட்டுப்போறேன். அதைவிட எனக்கு வேற என்ன வேலை இருக்கு?”
“அதுக்கில்ல, எல்லா நேரமும் உன்னை எதிர்பார்க்க முடியாதுல்ல?”
“பல வருஷமா வண்டி ஓட்டற என்னாலயே இந்த ட்ராஃபிக்ல ஓட்ட முடியல… உன்கிட்ட காரை கொடுத்துட்டு நாங்க உயிரை கைல பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கவா?”
“டேய், பொண்ணுங்க ஏரோபிளேன் ஒட்டுது, அஞ்சலிக்கு என்ன?” என்று இடைமறித்தான், மதன்.
“ஒட்டட்டும், ஆனா அஞ்சலி எதுக்கு சிரமப்படணும்னு யோசிக்கறேன்…”
“இப்போ நடு ராத்திரி ஒரு மணிக்கு எனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிடணும்னு தோணுச்சுனா நீ எப்படி கூட்டிட்டு போவ? உன் வீட்லேர்ந்து இங்க வர ரெண்டு மணி நேரம் ஆகும்’ல?”
“பரவால்ல, நான் கிளம்பி வந்து கூட்டிட்டு போறேன்…”
அவன் கூறி முடிக்க வீடு வந்து சேர்ந்திருந்தனர்.
அஞ்சலி தனது அறைக்குள் சென்றுவிட, அவளை அன்று வளைத்து வளைத்து எடுத்த புகைப்படங்களைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தான், அர்ஜுன். தான் பதுக்கியிருந்த ஸ்வீட்டுகளை எடுத்து வந்திருந்த மதன், தாத்தாவோடு கதைபேசியபடி, மர நிழலில் அமர்ந்து அவற்றுள் சிலதை அவரோடு பகிர்ந்துவிட்டு, மீதியை முழுங்கினான்.
