Skip to content
Post Views: 207
இவர் கூட, ராஜிக்கு சீரெதுவும் செய்யவில்லை என்று தான் நினைத்து கொண்டிருக்கிறாரா?
அப்போது தான் அவனுக்கு ஒன்று உரைத்தது, காசோ,பொருளோ ஊர் கூட்டி சபையில் செய்வதற்கான அர்த்தத்தை.
தலையை உலுக்கி கொண்டவன் “இல்லை மாமா.. அப்படிலாம் பார்த்துக்க முடியாதுன்றது என் எண்ணம்.. உடனே பிரச்சனையை முடிச்சிடுவோம்” இதில் தலையிட வேண்டாமே என்பது போல “விட்ருங்க மாமா” என்றான் மறைமுகமாக.
கர்ணன், செல்வம் இருவருக்கும் தலையசைப்பதை தவிர்த்து வேறு வழியில்லை.
Advertisement
“இப்போதைக்கு கமலி உங்க வீட்டிலேயே இருக்கட்டும். நான் வந்து கூப்பிட்டுகிறேன். அதுவரை அங்கே அம்மா கூட அனுப்ப வேணாம்!” என சொல்ல
அதுவே இவர்களுக்கும் சரியென பட ஒப்புக்கொண்டனர்.
*********
Advertisement
“உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்ற பாடல் வரிகள் கமிலியின் போனில் ஒலிக்க,
Advertisement
கிரிக்கென தனித்துவமாய் வைத்த பாடல் அது, ஓடிச்சென்று பார்க்க, வீடியோ காலில் அழைத்திருந்தான்.
தீடிரென இதயம் துடித்தது பலமாய். எட்டி கண்ணாடியில் முகம் பார்த்து, அய்யோ எண்ணை வடியுது என முகத்தை டவல் கொண்டு தேய்த்து துடைத்தாள்.
நல்ல வேளை சுடிதாரில் இருக்கோம் என மீண்டும் கண்ணாடி பார்க்க, ஏனோ அன்றைய கிரியின் செயல் தான் நியாபகம் வந்தது.
Advertisement
கண்ணாடி முன் இழுத்து வந்து இவளை நிறுத்தியதும், பிடிக்கிற மாதிரி உன்கிட்ட எதுவுமே இல்லை என கூறியதும் மின்னல் வேகத்தில் வந்து சென்றது அவள் மூளைக்குள். கண்ணாடியை பார்கையில் ஏனோ ஒரு வித எரிச்சலை உணர்ந்தாள்.
சட்டென தலையை உலுக்கி கொண்டு முகத்தை சாதாரணம் போல வைத்து கொண்டு இவளும் வீடியோ அழைப்பில் இணைந்தாள்.
சேரில் அமர்ந்தபடி, சாதாரண டீசர்ட்டுடன் இருந்தான் கிரி. நெஞ்சு பகுதி வரை மட்டுமே தெரிந்தது. டேபிளில் போனை ஸ்டான்ட் ஒன்றில் போட்டு விட்டு அதன் எதிரில் சேர் ஒன்றில் அமர்ந்திருந்தான்.
முகத்தை சட்டென மாற்றியவனாய் “என்ன உன் வீட்டில் எதுவும் திட்றாங்களா?” சுற்றி வளைக்காமல் எடுத்த எடுப்பிலேயே கேட்டான்.
“அதான் ஏற்கனவே சொன்னேனே, அம்மா ஒன்னும் சொல்லலைன்னு” கிரி முகத்தை குறு குறுவான பார்த்தபடியே இவள் கூற
“அம்மா ஓகே உன் அண்ணன், அப்பா?” இவன் உத்தேசித்து கேள்வி எழுப்பினான்.
“ம்…” என்றவள் “அண்ணன் தான் நிறைய திட்றான்” கர்ணனை குறை கூறினாள்.
“கர்ணாவால திட்ட தானே முடியும், நானா இருந்தா இரண்டு வச்சிருப்பேன்” என்றான் இவன்
ஹா.. என விழித்தவள் “உங்க வீட்டுக்கு தானே கொடுத்தேன், வப்பீங்களாமே.. நாங்க வாங்கிட்டு சும்மாவா இருப்போம்” என்றாள் வீம்பாக.
“வாங்கிட்டு தான் நின்னிருப்ப.. திருப்பி கொடுக்குற அளவுக்கு தைரியம் இல்லை” நக்கலடித்தவன் “ராஜியை பத்தி தெரியாம கண்டத பண்ணிட்டு இருக்க. அவ கேட்டானு எல்லா நகையையும் தூக்கி கொடுத்திருக்க! வீடு நமக்கு இல்லை. ராஜிக்கும் அவ குடும்பத்துக்கும் தான், அது கூட தெரியாம பண்ணிருக்கன்னா.. உன்னலாம் என்ன செய்தா தகும்?” பல்லை கடித்தான் கிரி.
“அது எனக்கே இரண்டு நாளைக்கு முன்னாடி தான் தெரியும்” குரல் குறைந்து வந்தது.
“தெரிஞ்சா கேள்வி கேட்க மாட்டியா, எதிர்த்து பேசமாட்டியா?”
அந்த பக்கம் அமைதி, கூடவே குறுகுறுவென்ற அவள் பார்வை வேறு.
“பார்த்ததும் போதும் போடி, வந்து வாய்ச்சிருக்க பாரு வாயில்லா பூச்சியா” என பார்வையை நிமிர்த்தாமலேயே இவன் சொல்ல, சட்டென தலையை தாழ்த்தி கொண்டாள் கமலி.
“நிமிர்ந்து பாரு கமலி.. என்ன கேட்டாலும் இப்படி அமைதியா இருக்காத” என்றவன், அவள் தலை நிமிர்ந்ததும்
“கேள்வி பட்டேன்! வீடு கட்டும் போது நீ தான் கூட இருந்திருக்க, பத்தாததுக்கு ராஜி, செந்தில்னு எல்லாருக்கும் வடிச்சு கொட்டி, இழுத்து போட்டு வேலை பார்த்திருக்க போல”
“உங்க அக்கா பேமிலியை பார்க்க கூடாதுன்னு சொல்றீங்களா?”
“பார்க்கலாம், எப்போவாவது தான். எப்போவுமே இல்லை.. நியாபகம் வச்சிக்க!”
“ஓ..அட்வைஸா.. ஓகே சார்…” என நய்யாண்டி செய்தாள் இவள்.
“என்ன நக்கலா..? எதுக்காக நீ இதெல்லாம் செய்த? அந்த வீட்டு வாசல்லையே உனக்கொரு சிலை வவப்பாங்கன்னா” கோபம் லேசாய் துளிர்த்தது அவன் குரலில்.
மீண்டும் அமைதியாகிப் போனாள். “குறுகுறுன்னு பாக்குறது, அமைதியா இருக்கிறதெல்லாம் என்கிட்ட வேணாம்” லேசாய் உயரவும் செய்தது இவன் குரல்.
இன்னுமே இவள் அமைதியாக இருக்க, “பதில் சொல்லு, பல்லை பேத்துருவேன்” என்றவன் “இப்போ முடியாதுன்னு நினைக்காத, ஊருக்கு வந்த பிறகு பேப்பேன் என்றான் படு உறுதியாக
“உங்களுக்காக தான்” சொல்லியே விட்டாள்
“எனக்காகவா?” புருவம் இடுங்கியது இவனுக்கு.
“ஏற்கனவே நீங்க என்னை நிமிர்ந்து கூட பார்க்க மாட்றீங்க. உங்க பேமிலியை பார்த்துகிட்டாலாவது!” “பேமிலிக்காகவாவது என்னை ஏத்துப்பீங்கல்ல” நினைத்ததை சொல்லிவிட்டாள் ஒரு வழியாக.
ஆனால் கேட்ட அவனுக்கோ தலையில் முழுதாய் ஏறிக்கொண்டது மொத்த பாரமும்.
டேபிளில் கை வைத்தபடி பேசிக்கொண்டிருந்தவன் கைகளால் முகத்தை மூடியபடி அப்படியே அமர்ந்துவிட்டான்.
போன் வழியே, முகத்தை மறைத்த அவன் உருவம் மட்டுமே தெரிந்தது.
முகத்தை மறைத்தபடி இவனும், அவனையே பார்த்தபடி இவளும் என கடந்தது நிறைய நிமிடங்கள்.
கவலையை கை கொண்டு மறைக்கிறான் என்பது வரையில் புரிந்தது.
“கிரி..” இவள் மெதுவாய் அழைக்க, கைகளை விலக்கி அவளை பார்த்தான்.
“நீ ஏன் இப்படி இருக்க கமலி..” என சலிப்பாய் சொல்லியவன் “ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ.. நான் யாருக்காகவும், ஏன் என் குடும்பத்துக்காக கூட உன்னை ஏத்துக்குற நிலையில் இல்லை” உறுதியாய் இவன் கூற
கமலியின் இதயம் ஒரிரு நொடி துடிப்பை நிறுத்தி பின் துடித்தது. படபடவென அடித்து கொண்டது.. “கிரி, அப்போ.. டைவர்ஸ் எதுவும் கேட்பீங்களா? ஆனா எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கே” என்ன பேசுகிறோம் என தெரியாமல் படபடப்பில் பேசினாள் இவள்.
அதில் அவள் முகம் காட்டிய உணர்வுகள் அப்பப்பா சொல்லில் வடிக்க முடியாததாய் இருந்தது, ‘பிடிச்சிருக்கே’ என்ற வார்த்தைகளில். இவனுக்கோ கண்ணில் வந்து போனது ஒரு மின்னல்.
“கமலி” என இவன் சத்தமாய் அதட்டி “பக்கத்தில இருந்திருந்த செவுள் பிஞ்சிருக்கும். என்கிட்ட டைவர்ஸ் பத்தி பேசுறது இதுவே கடைசி முறையாய் இருக்கட்டும். இப்போ உன்னை எனக்கு பிடிக்கலை தான்.. ஆனால் எப்போவுமே பிடிக்காம போய்டாது” வார்த்தைகளை கடித்து துப்பினான் கடுங்கோபத்துடன்.
இவன் பேச பேச முகமே மாறிப்போனது கமலிக்கு.
ஆனாலும் விடவில்லை இவன் “நல்லா புரிஞ்சிக்க, என் அம்மாவுக்காகவோ, அக்காவுக்காவோ உன்னை என்னால் ஏத்துக்க முடியாது” என நிறுத்தியவன் “எனக்காக, உனக்காக மட்டும் தான் நான் ஏத்துப்பேன். அது தான் கடைசி வரைக்கும் நம்பளை பிடிச்சு வைக்கும். அது உடனே நடக்காது.. கொஞ்ச நாளாகும் டைம் கொடு” கோபத்துடனே பேசி புரியவைத்தான் கிரி.
அவனை பார்த்த வண்ணமே இவள் இருக்க “அப்படிலாம் விட்டுட மாட்டேன். பிடிக்கல பிடிக்கலன்னு சொல்லிட்டுனாலும் உன்கூட வாழ்ந்திடுவேன். விட்டுட்டுலாம் போக மாட்டேன்” இவன் சொல்லவும், லேசாய்புன்னகை அரும்பியது இவள் முகத்தில்.
மனநிறைவாய் பார்த்தான் அவள் புன்னகை முகத்தை. பின் “படுத்துற நீ” என திட்ட “இன்னைக்கு லீவும் அதுவுமா காலையில் இருந்து போனும் கையுமா தான் சுத்திட்டு இருக்கேன். சாப்டகூட இல்லை இன்னும்” என கூற
“சாரி.. சாரி.. நீங்க சாப்பிடுங்க.. நான் வைக்கிறேன்” இவள் அவசர பட..
“ஏன் நான் சாப்பிடற வரை லைனில் இருக்க மாட்டியா?” இவன் கேட்க
“நானும் சாப்பிடலை.. போய் எடுத்துட்டு வரவா.. சேர்ந்து சாப்பிடுவோமா” என இவள் ஆசை பொங்க கூற
ஒரு நொடி அவள் முகத்தையே ஆழப்பார்த்தவன், “எடுத்துட்டு வா” என அவளை அனுப்பி விட்டு ஏற்கனவே ராம் கிரிக்காக செய்து வைத்த உணவை எடுத்து வந்தான்.
கிரியை போல போனை ஹோல்டரில் போட்டுவிட்டு, இவளும் அவனும் எதிரெதிரில் அமர்ந்திருப்பதை போல உண்ண துவங்கினர்.
“என்ன சாப்பாடு கமலி” என கேட்டான்.
“வெண் பொங்கல்..சட்னி, சாம்பார்” இவள் அடுக்க
‘நெய் வடிய வடிய தின்னு தான் இவள் இப்படி இருக்கா போல’ நமட்டு சிரிப்புடன் உண்டான் கிரி.
“நீங்க என்ன சாப்பிடுறீங்க.. நீங்களா சமைச்சீங்க” போன் வழியே ஆராய்ந்தபடியே இவள் கேட்க
“தக்காளி சாதம், அண்ணன் செஞ்சான்!” என தட்டை தூக்கி காட்டியவன் “நாழு பேர் இருக்கோம், ஆளுக்கு ஒவ்வொரு நாள் சமைச்சிப்போம். நான்வெஜ் பண்ணினா சேர்ந்து சமைப்போம்” என இவன் கூற
“அண்ணன்னா யாரு?” இவள் கேட்க
“ராம்.. மோகன் சித்தப்பா பையன். நான் ஊருக்கு கிளம்பும் போது இரண்டு பேரு வந்தாங்கல்ல.. நீ கூட டீ போட்டு கொடுத்தியே!” என இவன் நியாபக படுத்த.. “ம்.. நியாபகம் இருக்கு, சீதா அண்ணி வீட்டுகாரங்கல்ல” என இவளும் எடுத்து கொடுக்க, இருவரது குடும்பத்தை பற்றி பேசி கொண்டே நகர்ந்தது இவர்களது நேரங்கள்.
அறையின் ஒரு மூலையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவனை சிறு சிரிப்புடன் பார்த்திருந்தான் ராம். அங்கே கமலியின் அறை தாண்டி ஒலித்த பேச்சு சத்தத்தில் அவளது அறையை எட்டி பார்த்து விட்டு மகிழ்வாய் சென்றார் மல்லிகா.
error: Content is protected !!