Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

03. சிவயாழினி - மௌனமாய் ஒரு மோகனம்

மெளனம் 15

சின்னபொண்ணு வசீகரனின் கேள்விக்கு பதில் சொல்லாமல், “இதெல்லாம் உங்க பிளானா?” என்றாள் சந்தேகமாக.
“ச்சேச்சே, நான் எதுவுமே பண்ணல சின்னு, உங்க அப்பாவோட ஆசிர்வாதத்தால எல்லாம் தானா நடக்குதுனு நினைக்கிறேன்” என்று கள்ளத்தனமாக சிரித்தான்.


Advertisement

அவள் சந்தேகமாக பார்க்கவும், “பச்சபுள்ளய சந்தேகப்படாத சின்னு” என்றான்.

Advertisement

வரவேற்பிற்கு வந்திருந்தவர்கள் இருவருக்கும் வாழ்த்து சொல்ல மேடையேறவும் இருவராலும் அதற்குபின் பேசி்க் கொள்ளவே முடியவில்லை.

Advertisement

“சின்ன பொண்ணுக்கு மாலை வந்தது, 
கொழைஞ்சு கொழைஞ்சு கும்மியடி, 

Advertisement

வேண்டா பொண்ணுக்கு வாழ்வு வந்தது 
வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி” என்று அவள் உடன் பயின்ற மாணவர்கள் கூட்டம் எல்லாம் அவர்களை சுற்றி கும்மி பாட்டு பாடுவது போல கீழேயும் மேலேயும் கைத்தட்டி ஆராவாரம் செய்தனர்.
அதே நேரம் சோர்வுடன் உள்ளே நுழைந்த சரவணன் லதா, மண்டபத்தின் மேடையை மறைத்தபடி இருந்த கூட்டமும், கலகலப்பும் கைதட்டலும் பார்த்து குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
கூட்டத்துக்கு நடுவே வசீகரன் சின்னபொண்ணு இருவரும் ஜோடியாக நிற்பதை பார்த்து சரவணன் இன்பமாக அதிர்ந்தான். லதாவுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அவள் அலமேலுவை தேடி சென்றாள். சரவணன் அங்கே நின்றிருந்த ரஞ்சனியிடம் கண்களால் எப்படி என்று கேட்க, அவள் நடந்த விஷயத்தை சுருக்கமாக அவனிடம் கூறினாள்.
“அப்பா நல்ல முடிவு தான் எடுத்திருக்காரு” என்று சொல்லிவிட்டு அவன் மற்ற வேலைகளை கவனிக்க சென்று விட்டான்.
வந்திருந்த கூட்டம் குறைந்ததும், “சின்னு சாப்பிட போகலாமா? மணி பன்னென்டாக போகுது, பசிக்குது” என்றான் அருகில் இருந்தவளிடம்
“நான் பிரெண்ட்ஸ் கூட சாப்பிட்டேனே” என்று அவள் விழி விரிக்கவும், “ஏன்டி உன்கூட சேர்ந்து சாப்பிடலாம்னு நான் சாப்பிடாம இருந்தா நீ மட்டும் என்னை விட்டுட்டே முக்கிட்டு வந்துட்டியா?” செல்ல கோபத்துடன் முறைத்தான்.
“நீங்க சாப்பிடாம எனக்காக வெயிட் பண்ணனது எனக்கெப்படி தெரியும்?” என்று தொடங்கியவள் சற்றே நிறுத்தி, “இப்படியெல்லாம் நடக்க போகுதுனு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?”
தொண்டையை செருமியவன், “ஆமா சின்னு, ப்யூச்சரை பிரடிக்ட் பண்ற சக்தி எனக்கிருக்கு. அதனால தான் உனக்கு கிப்ட் கூட வாங்கி வச்சேன்” என்றவன் தன் பாக்கெட்டிலிருந்து புதிய கைப்பேசியை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“இதுல சிம்கார்ட் போட்டு என் நம்பரை சேவ் பண்ணி வச்சிருக்கேன்” என்று அவள் கரத்தை பற்றி அதில் கைப்பேசியை வைத்தான். மணமகள் அறையை காட்டி, “நீ அந்த ரூம்ல கதவ சாத்திட்டு இரு. உனக்கு துணைக்கு ரஞ்சனிய அனுப்பி வைக்கிறேன். காலைல உன் கழுத்துல தாலி கட்ற வரைக்கும் நாம தனி ரூம்ல தான் இருந்தாகணும் சின்னு. அதுக்கு இன்னும் ஆறு மணி நேரம் இருக்கு. அதுவரைக்கும் ஜாக்கிரதையா இரு. இனிமே யார்வந்து உன்கிட்ட பேசினாலும் அவங்க எதிர்லயே எனக்கு போன் பண்ணி ஸ்பீக்கர்ல போட்டுடு, அப்புறம் அவங்க கிட்ட பேசு, புரியுதா?”
அலமேலுவையும் லதாவையும் சொல்கிறான் என்று புரிந்தது. ஆனாலும் அவர்களை எதிர்த்து இந்த திருமணத்தை நடத்த ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறான்? எப்போதிலிருந்து அவள் மேல் தீவிரமான காதல் மலர்ந்திருக்கும்? என்று யோசனையோடு அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
அவன் இருபுருவங்களையும் ஏற்றி இறக்கி ஒற்றை கண்ணை சிமிட்ட, அவள் நாணத்துடன் தலையை கவிழ்த்துக் கொண்டாள். “சின்னு புடவையில செமயா இருக்கே, அப்பவே சொல்லணும்னு நினைச்சேன், என் டிரஸ் எப்படியிருக்குனு சொல்ல மாட்டியா?”
அவளிடம் பதில் இல்லை, ஆனால் காதுமடல் சிவந்திருப்பதை கண்டவன் 

 

மெளனமாவே இருந்து என்னை கொல்றாளே என்று மனதிற்குள் நினைத்து பெருமூச்சு விட்டவன் அவளை அழுத்தமாக பார்த்து, “சின்னு இப்பவே உன் ரூமுக்கு போய் கதவ சாத்திக்க, இல்லனா நான் உன்னை என் ரூமுக்கு தூக்கிட்டு போயிருவேன், அதுக்கப்புறம் நடக்கறதுக்கு நான் பொறுப்பில்ல” என்றான் 
அவன் பேச்சில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். இவன் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று நினைத்து அவசரமாக அறைக்கு சென்று கதவை சாத்திக் கொண்டாள்.
அவன் சென்ற விதத்தை கண்டு புன்முறுவல் செய்தவன் ஹாலில் இருந்த ரஞ்சனியை அழைத்தான்.
“ரஞ்சு, உன் சின்ன அண்ணி கூடவே இரு. காலைல அவளுக்கு அலங்காரம் பண்ணி மணமேடைக்கு கூட்டிட்டு வர்றது உன்னோட பொறுப்பு”
“சரிடா அண்ணா, ஆனா நவ்யாவுக்கு எடுத்த புடவை இருக்கு, ஆனா ப்ளவுஸ் எல்லாம் அவங்களுக்கு செட் ஆகுமா?”
“அத எடுத்து உன் லதா அண்ணிக்கிட்டயே கொடுத்துடு. என் ரூம்ல ஒரு கவர் இருக்கு. அதுல புடவையும் நகையும் இருக்கு. அதை சின்னுகிட்ட கொடு”
“டேய் அண்ணா, எனக்கென்னமோ இதெல்லாம் ப்ரீ பிளான் மாதிரி தெரியுதே?”
தலையை கோதியவன் “ப்ரீ பிளானா? அப்படின்னா என்ன?” ரஞ்சனி புருவம் சுருக்கி அவனை பார்க்கவும், “நீ டாக்டர்டி, சிஐடி வேலை பாக்காம போய் என் சின்னுவ பத்திரமா பாத்துக்க, நான் போய் லைட்டா சாப்பிட்டு வந்துடறேன்” என்று படிகளில் இறங்கி சென்றான்.
வசீகரன் மேடையில் நின்றபடி சின்னபொண்ணுவிடம் பேசிக்கொண்டிருந்தது, அவளுக்கு கைப்பேசியை பரிசளித்தது பின்பு ரஞ்சனியை அழைத்து பேசியது என அனைத்தையும் லதாவும் அலமேலுவும் ஹாலின் கடைசியில் இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தனர்.
“நான் வர்றவரைக்கும் நீங்க சமாளிச்சிருக்கணும் அத்தை, நான் மட்டும் அந்த இடத்துல இருந்திருந்தா எப்படியாவது பேசி என்னோட சொந்தக்கார பொண்ணுங்கள்ல ஒருத்திய மேடையில ஏத்தியிருப்பேன்” என்றாள்.
“நிலம தெரியாம பேசாத லதா. முத்துமாணிக்கம் அண்ணன்கிட்ட வசிக்கு சின்னபொண்ணை கட்டிக்கறதா சொல்லி வாக்கு கொடுத்தேன்னு நான் தான் சொன்னேனே. என் புருஷன எல்லாத்தையும் பசங்க முன்னாடி போட்டு உடைச்சிட்டாரு, கட்டினதுல இருந்து கைய நீட்டாத மனுசன் ரெண்டு முறை அடிச்சிட்டாரு. இதுக்கு மேலயும் இவங்க கல்யாணத்தை தடுக்க முடியாதுனு தான் ஒத்துக்கிட்டேன்”
“போற இடத்துல பத்திரிக்கை கொடுத்துட்டு வர்றத விட்டுட்டு வாக்கு கொடுத்துட்டு வந்தது உங்க தப்பு. இந்த விஷயத்தை என்கிட்ட முதல்லயே மறைக்காம சொல்லியிருந்தா நான் வேற பிளான் பண்ணியிருப்பேன்”
“பண்ண வரைக்கும் போதும்மா. கொஞ்ச நேரத்துல மூணு ஆம்பளைங்களும் என்னை படாத பாடு படுத்தி எடுத்துட்டாங்க. இதுக்குமேல இந்த விஷயத்துல நான் தலையிடறதா இல்ல. நீயும் தலையிடாத. அதுதான் உனக்கும் நல்லது. எனக்கு டயர்டா இருக்கு போய் படுக்கறேன்” என்று எழுந்து சென்றுவிட்டார்.
தனியாக அமர்ந்திருந்த லதாவிடம் வந்த வசீகரன், “என்ன அண்ணி வயிறு எரியுதா?” என்றான்
“வசி, வாட் யூ மீன்?” என்றாள் கோபமாக
“சாரி அண்ணி, வயிறு பசிக்குதானு கேக்கறதுக்கு எரியுதானு கேட்டுட்டேன், டங் ஸ்லிப் ஆயிருச்சு. வாங்களேன் சாப்ட போகலாம். உங்க முகத்தை பாத்தாலே சாப்பிடலனு நல்லா தெரியுது. பாவம் என் கல்யாணத்தை நடத்தறதுக்கு ரொம்பவே பாடுபட்டீங்க. உங்களால தான் என் கல்யாணமே நடக்க போகுது. வாங்க என் கையாலயே உங்களுக்கு சாப்பாடு பறிமாறேன்”
“எனக்கு பசிக்கல, வேணாம்”
அந்த பக்கம் வேலையாட்களை ஏவிக் கொண்டிருந்த சரவணனை பார்த்து குரல் கொடுத்தான். “சரவணா அண்ணி சாப்பிட கூப்பிட்டா வரமாட்டேங்கிறாங்கடா”
“லதா போய் சாப்பிட்டு தூங்கு, காலைல கல்யாண பொண்ணுக்கு நீதானே முன்னாடி நின்னு நலங்கு வைக்கணும்” என்று சரவணன் அதட்டவும் வேறு வழியின்றி வசீகரனுடன் சென்றாள்.
சின்னபொண்ணு அறைக்குள் சென்றதும் வசீகரன் கொடுத்த கைப்பேசியை ஆன்செய்து பார்த்தாள். அதில் அவன் எண்ணை who am I என்று சேமித்து வைத்திருந்தான். அதை கண்டு முறுவலித்தவள் போனின் கேலரியை திறந்து பார்த்தாள். அதிலிருந்த புகைப்படங்களை கண்டு வியப்பில் கண்கள் விரிந்து கொண்டது.
கல்லூரியில் வசீகரன் அன்று செல்வியின் கைப்பேசியில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அதில் இருந்தது. சிலதை அவன் புகைப்படத்தோடு இணைத்து நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழுக்கான வீடியோவை தயாரித்திருந்தான். அதை பார்த்து வாயில் கைவைத்துக் கொண்டாள்.
அடுத்தடுத்த புகைப்படங்களை நகர்த்திய போது அவள் பன்னிரண்டாம் வகுப்பின் ஆரம்பத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் இருந்தது. அவர்கள் வீட்டு லஷ்மி பசு, கன்னுக்குட்டி போட்டதை கேள்விப்பட்டு பள்ளிச்சீருடையிலே ஓடி வந்து அதனை தூக்கி வைத்துக் கொண்டு தன் தந்தையை புகைப்படம் எடுக்க சொல்லியிருந்தாள்.  அந்த புகைப்படத்தை பார்த்ததும் அதிர்ச்சியில் எழுந்தே விட்டாள்
கடைசியாக இருந்தது வசியும் முத்துமாணிக்கமும் எடுத்துக் கொண்ட செல்பி. அவள் தந்தை வசியை முறுவலுடன் பார்த்துக் கொண்டிருக்க, வசி கேமராவை பார்த்து ஒற்றை கண்ணை அடித்தவாறு கேமராவை பார்த்து க்ளிக் செய்திருந்தான். அதை பார்க்கும்  போது வசி அவளை பார்த்து கண்ணடிப்பது போல பிரமை தோன்றியது.  தந்தையை கண்டு கண்களில் கண்ணீர் சுரந்தது. அதே நேரம் ஆரம்பத்திலிருந்து வசியின் அத்தனை செயல்களுக்கும் காரணம் புரிய ஆரம்பித்திருந்தது.
இமைக்காமல் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள். “அண்ணி” என்று ரஞ்சனி கதவை தட்டவும் கைப்பேசியை அவசரமாக அணைத்துவிட்டு கதவை திறந்தாள்.
“இந்த டிரஸ் காலைல போட்டுக்கறதுக்கு. அளவு சரியா இருக்கா பாருங்க” என்றபடி உள்ளே நுழைந்தாள். அவள் பின்னாலேயே வந்த சரவணன் உள்ளே எட்டி பார்த்து, “வேண்டா, உன் பிரெண்ட் செல்வி உன்கிட்ட பேசணுமாம், லைன்ல இருக்கா பேசு” என்றவன் தங்கையிடம் திரும்பி, “ரஞ்சி, நீ போய் டெக்ரேஷன் பண்ற இடத்துல நில்லு. இல்லனா சொன்னது ஒண்ணு, செய்யறது வேறயா இருக்கும்” என்று அவளை அனுப்பிவிட்டு வசீகரன் அறையை நோக்கி சென்றான்.
சின்னபொண்ணு கைப்பேசியை காதில் வைத்து, “ஹலாே” என்றதும் அந்தப்பக்கம் செல்வி கூவினாள்.
“வேண்டா கன்கிராட்ஸ்டி, நம்ம காலேஜ் பசங்க வைச்ச ஸ்டேட்டஸ் பாத்து தான் எனக்கு விஷயமே தெரிஞ்சது. உடனே உன்கிட்ட பேசணும் போல இருந்துச்சு, அதான் ஆபத்துக்கு பாவமில்லனு சரவணன் சார் நம்பருக்கே போன் பண்ணிட்டேன். உன் வசீகரன் மாமா நீ படிச்சு முடிக்கறவரைக்கும் அவர் பண்ண ஹெல்ப்பை பத்தி உன்கிட்ட சொல்லக்கூடாது, டிகிரிய முடிக்கட்டும் அதுக்கப்புறம் நானே பேசிக்கறேன், அதுவரைக்கும் கல்யாணத்தை பத்தியெல்லாம் யோசிக்க முடியாதுனு என்கிட்ட டயலாக் விட்டுட்டு செகண்ட் இயர் முடிச்சதும் சத்தமே இல்லாம காலேஜ் லீவுல கல்யாணத்தை ஏற்பாடு பண்ணி இருக்காரு. ஏன் உன் படிப்பு முடியறவரைக்கும் அவரால காத்திருக்க முடியாதாமா? அவர் உன்னை காலேஜ்லயும் சேர்த்துட்டு எப்ப பாரு அங்கனயே சுத்திட்டு இருக்கும்போதே இது மூணுவருஷம் வரைக்கும் காத்திருக்கற கேஸ் இல்லனு நினைச்சேன். அவர விடு, நீயிருக்கற பாரு அமுக்குனிடி.
எதுவுமே தெரியாத மாதிரி மூஞ்ச வச்சிட்டு நீ உன் மாமாவ லவ் பண்ண விஷயத்தை என்கிட்ட கூட சொல்லல. இதுல எந்த மாமா படிக்கறதுக்கு ஹெல்ப் பண்ணாருனு கேட்டு என்கிட்டயே நடிக்கறே” என்று செல்வி படபடவென்று பேசினாள். 
‘அன்று வசீகரனை பார்த்துவிட்டு தான் உன் மாமாவே வர்றாருனு சொல்லியிருக்கா போல’ என்று மனதிற்குள் நினைத்த சின்னபொண்ணுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. 
(தொடரும்)

One thought on “மெளனம் 15

  • Sadam Rajees

    தட் கல்யாணம் எங்கடா மொமண்ட்😅😅….தலை க்கு தில்ல பார்த்தியா வேற யாரு லதா தான் கல்யாணத்தை நிறுத்தி இருப்பாங்களாமில்ல…சரவணா கொஞ்சம் மனைவியை கவணிப்பா😂…

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!