Skip to content
Post Views: 532
“அப்புறம் வேண்டா, உன்கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்டி. உன் அக்கா காவேரியோட ஊர்பக்கம் போனேன். அவங்க எல்லாம் நீ எவன் கூடவோ ஓடிட்டதா நினைச்சு பேசிட்டு கிடந்தாங்க. மனுஷங்க எப்படி இருக்காங்க பாரேன் ஒரு பொண்ணு வீட்டை விட்டு போயிட்டா அவ எவன் கூடவாவது ஓடித்தான் போய் இருப்பானு இவங்களே ஒரு முடிவுக்கு வந்துடறாங்க. அவ ஏன் போனா, என்னாச்சுனு பாக்க கூட மாட்டாங்க போலருக்கு
இதுல நான் ஊருக்கு கிளம்பி வந்த அன்னைக்கு அந்த ரமேஷ் வேற உன்னையும் வசீகரன் சாரையும் சேர்த்து வச்சு பாத்திருக்காங்க போலருக்கு. அவன் கூப்பிட்டானாம், நீ மதிக்காம யார் கூடயோ வண்டியில போயிட்டேன்னு சொல்லியிருக்கான். அவங்க பேசின பேச்சை கேட்டதும் உன்னை பத்தி சொல்லலாம்னு போனவ எதுவும் பேசாம வந்துட்டேன். நீயிருக்கற இடம் பெரிய இடம்னு தெரிஞ்சா இங்கேயும் வந்து தொல்லை பண்ணுவாங்க. நீயும் அக்கா சொக்கானு யோசிக்காம இனிமேலாச்சும் உன் வாழ்க்கை வாழு. அது சரி கல்யாணம் ஆயிட்டதும் காலேஜ்க்கு வருவியா?”
Advertisement
“தெரியலடி” என்றாள்
“உன் மாமா கண்டிப்பா காலேஜ்க்கு உன்னை அனுப்புவாரு. ஆனா அனுப்பிட்டு உன் பின்னாடியே வந்துடுவாரு” என்றாள் கிண்டலாக
Advertisement
Advertisement
அவள் சொன்னவிதத்தில் சின்னபொண்ணுவிற்கு சிரிப்பு வந்தது. அதை அடக்கியவள், “செல்வி நீயாச்சும் நாளைக்கு காலைல இங்கே வரமுடியுமா? எனக்கு ஒரு மாதிரி இருக்கு, நீ வந்தா நல்லா இருக்கும்”
“சாரிடி, இப்போ நடுராத்திரி, காலைல கிளம்பி நான் கல்யாணத்துக்கு வர்றது எல்லாம் ரொம்ப கஷ்டம். அடுத்தவாரம் காலேஜ்ல பாக்கலாம். அப்போ பர்ஸ்ட் நைட் அனுபவம் எப்படி இருந்துச்சுனு மட்டும் எனக்கு சொல்லணும் சரியா?”
Advertisement
“ச்சீ போடி” என்று அழைப்பை அவரசமாக துண்டித்தாள். அவளை மேற்கொண்டு யோசிக்க விடாமல் சரவணனின் கைப்பேசி மீண்டும் அலறவும், அதை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
அங்கே நின்றிருந்த ரஞ்சனியிடம், “சரவணன் சார் எங்கே? அவர் போன் அடிக்குது”
“அண்ணன் வசி ரூமுக்கு தான் போயிருக்கு, நீங்களே போய் கொடுத்துடறீங்களா அண்ணி” என்றாள் அவள்
சின்னபொண்ணு வசீகரன் அறைக்கு சென்ற போது சரவணனும் வசீகரனும் பேசிக் கொண்டது தற்செயலாக காதில் விழுந்தது.
“டேய் வசி, நான் நவ்யா வீட்டுக்கு போய்ட்டு வர்ற கேப்ல இங்கே என்னடா நடந்துச்சு? நான் மண்டபத்துல எல்லாரையும் எப்படி சமாளிக்கறது? உன்னை எப்படி சமாதானம் செய்யறதுனு மண்டைய பிச்சிக்கிட்டு வந்தேன்டா. வந்து பார்த்தா வேண்டாவோட ஜோடியா சிரிச்சுட்டு இருக்கே. உங்க ரெண்டு பேரையும் பாத்ததும் அப்பாடானு நிம்மதியா இருந்துச்சு. நவ்யா மேல இருந்த கோவமெல்லாம் போயிருச்சு. ரஞ்சு கிட்ட கேட்டா அவ என்னென்னவோ சொல்றா, நீ வேற கண்ணாடியில குத்தி கையை கிழிச்சிக்கிட்டியாமே?”
“ஆமாடா. உடனே ரஞ்சனி பர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டா. நீயேன்டா நவ்யா வீட்டுக்கு போனே? அந்த அமைச்சர் உன்னை பேசினத கேட்டதும் எனக்கு கோபம் வந்துருச்சு, அந்த கோபத்துல தான் கண்ணாடியில குத்திட்டேன். என்னால நீ அசிங்கப்பட்டு நிக்கறத பாத்ததும் மனசே சரியில்ல”
“அவங்க பேசனதுக்கு நீயென்னடா பண்ணுவ? விடு”
“இல்லடா, இதுல என் பங்கும் இருக்கு. நான் போட்ட பிளான்ல நவ்யாவும் அவ குடும்பமும் அவங்களுக்கே தெரியாம எனக்கு ஹெல்ப் பண்ணியிருக்காங்க”
“என்னடா சொல்றே?”
“சென்ட்ரல் மினிஸ்டரோட மகன் ராகவ் என்னோட பிரெண்டுடா, நானும் அவனும் யுஎஸ்ல ஒண்ணா படிச்சோம்”
“அடப்பாவி” என்று சரவணன் வாயில் கையை வைத்துக் கொண்டான்
“நவ்யா என்னை பாக்கும் போதெல்லாம் நான் ஹாட்டா இருக்கேன்னு சொல்லுவாளே தவிர என் கேரக்டர பத்தி அவ சொன்னதேயில்ல. அப்பவே என்னோட பிட்னஸ் தான் அவளுக்கு பிடிச்சிருக்குனு நான் புரிஞ்சுக்கிட்டேன், நம்ம அம்மா அவள கல்யாணம் பண்ணிக்க சொல்லி பிரஷர் கொடுத்தப்போ, என் பிரெண்ட் ராகவ் கிட்ட புலம்பிட்டு இருந்தேன். அதுக்கு அவன் ‘ஏன்டா? டிரான்ஸ்போர்ட் மினிஸ்டர் பொண்ணு நவ்யாவையா கல்யாணம் பண்ணிக்க கசக்குது? அவள ஒரு பொலிடிகல் பங்கஷன்ல பார்த்திருக்கேன், செம ஹாட்டா இருப்பாளேனு சொன்னான்’. சரிதான் ரெண்டு ஹாட்டையும் கோர்த்து விட்டு நம்ம கழண்டுக்கலாம்னு முடிவு பண்ணேன். அவனை டெல்லியிலிருந்து சென்னைக்கு வரவச்சேன்.
நவ்யா என்னை மீட் பண்ண கூப்பிடறப்போ எல்லாம் நானும் ராகவ்வும் பேட்மிட்டன் விளையாடற இடத்துக்கு அவள வரவச்சேன். அவ என்னையும் ராகவ்வையும் கம்பேர் பண்ணி பாக்கறதுக்கான சூழ்நிலையை உருவாக்கனேன். அப்கோர்ஸ் ராகவ்வும் என்ன மாதிரி பிட்டா இருப்பான், ஆனா என்னைவிட பணக்காரன், சென்ட்ரல் மினிஸ்டரோட பையன். மத்ததெல்லாம் தானா நான் நினைச்ச போலவே நடந்துச்சு. அவங்க மண்டபத்துக்கு கிளம்பறப்போ பொண்ணு கேக்க சொல்லி நான் தான் ராகவ்வை அவன் அப்பாவோட அனுப்பி வச்சேன்.
என்னோட காதல சேர்த்து வைக்கறதுக்காகவும், அவனுக்கு பிடிச்ச பொண்ணை கட்டிக்கறதுக்காகவும் ராகவ் மட்டும் தெரிஞ்சே எனக்கு ஹெல்ப் பண்ணான். மத்தவங்க எல்லாம் எனக்கு ஹெல்ப் பண்றேனு தெரியாமலே பண்ணாங்க” என்று தோளை குலுக்கினான்
“அடப்பாவி, இவ்ளோ வேலை பண்ணிட்டு தான் கூலா இருந்தியா? என்கிட்ட சொல்லியிருந்தா நானும் ரிலாக்ஸா இருந்திருப்பேன் இல்ல?”
“நீயும் ரிலாக்ஸா இருந்திருந்தா இந்த சீன் இவ்வளவு சீரியசா ஆகியிருக்காதுடா. ஆனா நீ எனக்காக சண்டை போடறதுக்கு மினிஸ்டர் வீட்டுக்கு போவேனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலடா. தெரிஞ்சிருந்தா உன்கிட்ட சொல்லி போகவிடாம தடுத்திருப்பேன், ரியலி சாரிடா”
“பரவால்லடா, அந்த ஹிட் மூமெண்ட்ல தானே அப்பா பொங்கி எழுந்து அம்மா வேண்டாவை கூப்பிட்டு, உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு கேக்க வச்சிருக்கு?”
“அதென்னவோ கரெக்ட் தான்டா” என்று இருவரும் பேசிக் கொண்டதை சின்னபொண்ணு முழுவதுமாக கேட்டிருந்தாள்.
சத்தமில்லாமல் அவள் திரும்பி செல்ல முயலும் போது இருவரும் வெளியே வந்திருந்தனர்.
“வேண்டா தூங்கலயா இன்னும் நீ?” என்று சரவணன் கேட்க
“போன் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன் சார்”
“இன்னும் என்ன சார்? மாமானு கூப்பிடு” என்றான் சரவணன்.
“சரிங்க மாமா” என்றவள் தன்னிச்சையாக வசீகரனை பார்க்க, அவன் கைகளை கட்டிக் கொண்டு அவளை அழுத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘எல்லாரையும் சரளமா மாமானு கூப்பிடுவா, என்னை மட்டும் கூப்பிடமாட்டா’ என்று மனதிற்குள் பொருமினான்.
அவளுக்கு அவனிடம் நிறைய பேச வேண்டும் போல இருந்தது. ஆனால் அவளிடம் வார்த்தைகள் தான் இல்லை. கூடவே வெட்கம் கூச்சம் சின்னதாக பயம் வேறு. தவிப்புடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் உள்ளங்கையை பார்த்தாள். அங்கே மருந்து வைத்து பஞ்சினால் கட்டு போடப்பட்டிருந்தது. அவன் அருகில் மேடையில் நின்றவரைக்கும் அவன் கையை அவள் கவனிக்கவே இல்லை.
அருகே சென்று அவன் கரத்தை கைகளில் ஏந்தி பார்க்கவேண்டும் போல இருந்தது. அந்த அரங்கம் முழுவதும் ஆங்காங்கே ஆட்கள் பூக்களால் அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். சரவணன் சென்றதும் “கை எப்படியிருக்கு?” என்றாள் மெல்லிய குரலில்
“ரொம்ப வலிக்குது சின்னு” என்றான்
“அச்சோ, மருந்து போட்டுமா வலிக்குது?”
“ம், இதுக்கு வேற மருந்து வேணும்”
“என்ன மருந்து போடணும்?”
“இங்கே நீ கிஸ் பண்ணா, வலி போயிரும்” என்று கண் சிமிட்டியபடி அவன் கரத்தை நீட்ட அவளோ இல்லையென்று தலையாட்டியபடி விலகி நின்றாள்.
“சின்னு உன்னை கட்டிக்கவா?”
“அச்சோ, எல்லாரும் இருக்காங்க” பதறினாள்
“சின்ன பொண்ணு அதுவும் படிக்கற பொண்ணுக்கு புத்தி போவுது பாரு, உன்னை கட்டி பிடிச்சுக்கவானு கேக்கல. கல்யாணம் கட்டிக்கவானு கேட்டேன்” சீண்டினான்
நடராஜன் அலமேலுவும் வருவதை பார்த்தவள் அவனிடம் எந்த பதிலும் சொல்லாமல் வேகமாக அறைக்குள் சென்று விட்டாள்.
அவள் பதில் சொல்லாமல் சென்றதில் கடுப்புடன் அறைக்கு சென்றான். கைப்பேசியில் குறுஞ்செய்தியின் சத்தம் வரவும் சுவாரசியமே இல்லாமல் அதை எடுத்து பார்த்தான்.
“குட் நைட் மாமு” என்று ஹார்ட் சிம்பலை அனுப்பியிருந்தாள் அவனுடைய சின்னு. அவனால் நம்பவே முடியவில்லை. அடுத்த நிமிடம் அவளுக்கு போன் செய்தான். முதல்முறை அடித்து ஓயும்வரை அதை எடுக்கவே தயங்கினாள். விடாமல் அவன் தொடர்ந்து அழைக்கவும் விரல்கள் நடுங்க போனை ஏற்றாள்
“என்ன அனுப்பியிருக்க?” என்றான் அதட்டலாக
“அது தெரியாம” அவன் அதட்டலில் அவள் வார்த்தைகளை விழுங்கினாள்.
“என்ன தெரியாம? எவ்வளவு தைரியமிருந்தா குட் நைட்னு அனுப்பியிருப்பே”
இதற்கென்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவள் விழிக்க,
“விடிஞ்சிருச்சு சின்னு, குட்மார்னிங்னு அனுப்பனும். போய் குளிச்சுட்டு ரெடியாகு”
“ம்”
“ஹெல்ப் எதாச்சும் வேணும்னா சொல்லு வரேன்”
“இல்ல வேணாம்” என்றாள் அவசரமாக
“எனக்கு கையில அடிப்பட்டிருக்கு, நீ வந்து நான் குளிக்கறதுக்கு ஹெல்ப் பண்ணு”
“ம்ஹூம்”
“சின்னு”
அந்த பக்கம் மெளனம்
“பேசுடி”
“ம்”
“நான் உனக்கு யாரு?… சொல்லு சின்னு”
“மாமு” என்றாள் வெட்கத்துடன் குரலை தழைத்து. அவள் அழைப்பில் உருகி பாகாய் கரைந்தவன்.
“அம்முகுட்டியே, அடியே! உன்ன எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித, சொல்லி காட்டு கொலஞ்சேன்டி
உன்ன பெத்த தாய காட்டடி
கும்பிடிட்டு போக நான் ரெடி
செல்லக் குட்டி நீயும் பேச சீனி மூட்ட கூடுதடி என்ற பாடலை அவன் மெல்லிய குரலில் பாட, சின்னபொண்ணுவின் முகம் செவ்வானமாக சிவந்து போனது.
“சின்னு உனக்கு என்னை பிடிக்குமா?”
“ம்”
“உன்னை கட்டிக்கவா?”
“ம்”
“அப்போ கதவ திற, வந்து உன்னை கட்டிக்கறேன்”
“ஐயோ, நான் கல்யாணம் கட்டிக்கறதுக்கு தான் ம்னு சொன்னேன்” என்றாள் பதட்டத்துடன்
“அப்போ நான் உன்னை கட்டி பிடிக்க கூடாதா”
அவளிடம் பதில் இல்லை, அதற்குள் “அண்ணி வெளிய வாங்க, எண்ணெய் நலங்கு வைக்கணுமாம், அதுக்கப்புறம் குளிச்சிட்டு ரெடியாக சொன்னாங்க” என்ற ரஞ்சனியின் குரல் கேட்கவும், மனமே இல்லாமல் அழைப்பை துண்டித்தான்.
சின்னபொண்ணு சாதாரண புடவையை கட்டிக் கொண்டு வர, வசீகரன் வெள்ளை பனியன் மற்றும் வேட்டியில் வந்து அமர்ந்தான். தன் வெற்று தோளால் அவளை உரசினான். தன் கால் பெருவிரலால் அவள் விரலை சீண்டினான். அவள் நெளியவும், “சின்னு நேரா உட்காரு” என்று அதட்டினான்.
அவள் விலகி அமர்ந்ததும் அவள் உள்ளங்காலில் பெருவிரலால் சீண்டிக் கொண்டே இருந்தான். அவள் திரும்பி வசீகரனை பார்க்க, அவன் இருபுருவங்களை ஏற்றி இறக்கினான். சுற்றிலும் உறவினர்கள் நலங்கு வைக்க தயாராக இருப்பதால் தலையை குனிந்து கொண்டாள். அவன் சீண்டுவதை நிறுத்தாமல் தொடரவும், வேறு வழியின்றி யாருமறியாமல் அவன் உள்ளங்காலில் கிள்ளினாள்.
“சின்னு எதுக்கு கிள்றே?” என்று அவன் வெளிப்படையாகவே கேட்க, ஐயோ என்று ஆகிவிட்டது அவளுக்கு.
அலமேலு லதாவை தவிர அனைவருமே கொல்லென்று சிரித்து விட்டனர்.
வசீகரன் குளித்து சந்தன நிற பட்டு வேட்டி சட்டையை அணிந்து வெளியே வந்தான். அதே சமயம் சின்னபொண்ணு மணப்பெண் கோலத்தில் வந்து நின்றாள். சந்தன நிறந்தில் தங்க நிற ஜரிகை வேலைபாடுகள் நிறைந்த சேலையில் அவன் வாங்கி கொடுத்த தங்க நகைகளை அணிந்து தலை நிறைய பூவைத்து வந்து நின்றவளை இமைக்க மறந்து பார்த்திருந்தான்.
செல்லக்குட்டி உன்னை காண சிலையாகி நிக்கிறேன் வாடி அள்ளிக்கிட்டு போகப்போறேன் அழகா நீ உன்னயும் தாடி
அவனுடைய சின்னுவை கண்டு சிலையாகி போயிருந்தான், அவள் கழுத்தில் உடனே தாலிக்கட்டி அவளை அள்ளிக் கொண்டு போக பரபரத்த கைகளை அடக்கியபடி மணமேடையில் அமர்ந்தான். லதா சின்னபொண்ணுவை அழைத்து வந்து மணமேடையில் அமர வைத்தாள்.
அலமேலுவின் உறவினர்கள் காலையில் முகூர்த்த நேரத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் சின்னபொண்ணுவிற்கும் உறவினர்கள் என்பதால் மணமேடையில் அமர்ந்திருந்தவளை கண்டதும், “அலமு, இந்த பொண்ணு முத்துமாணிக்கத்தோட சின்ன பொண்ணு தானே” என்று கேட்க, அவர் ஆமாம் என்று தலையசைத்தார்.
“பொண்ணு மாறிடுச்சுனு கேள்விப்பட்டோம், ஆனா நம்ம முத்துமாணிக்கத்தோட பொண்ணுனு தெரியாம போச்சு. நல்ல காரியம் பண்ணியிருக்க அலமு. அவர் முன்ன நின்னு உன் கல்யாணத்தை நடத்தி வச்ச நன்றியை மறக்காம அவர் பொண்ணை உன் மகனுக்கு கட்டி வைக்கற பாரு, அங்கே நிக்கற நீ” என்று ஆளாளுக்கு அலமேலுவை புகழ்ந்து பேச, சிரிக்க முடியாமல் சிரித்து வைத்தார்.
“சின்னு, உன் பக்கம் சொந்தக்காரங்க இல்லனு வருத்தப்படாத. வந்திருக்கறவங்க எல்லாம் உன்னோட சொந்தக்காரங்க தான். உன் ரெண்டு அக்காங்களுக்கும் நேத்து நைட்டே தகவல் சொல்லிட்டேன். அவங்களும் வந்துடுவாங்க, அதோ வந்துட்டாங்க” என்றான் வசி
சின்னபொண்ணு நேராக வாசலை பார்த்த போது அவளின் அக்காக்கள் காவேரியும் ஜமுனாவும் குடும்பத்தோடு வந்து கொண்டிருந்தார்கள். திருமண மண்டபத்தின் பிரம்மாண்டத்தையும் அங்கே வந்திருந்தவர்களின் செல்வாக்கையும் வாயை பிளந்து பார்த்தபடி அவர்கள் வந்தனர்.
அவர்கள் அவளுக்கு நல்லது நினைக்கவில்லை என்றாலும் தன் சார்பில் அவளின் உடன்பிறப்புகள் திருமணத்திற்கு வந்ததில் சின்ன பொண்ணுவுக்கு மிகுந்த திருப்தியாக இருந்தது.
நன்றியுடன் வசீகரனை பார்த்தாள். அவனோ அவளை பார்த்து ஒற்றை கண்ணை அடிக்க, சட்டென தலையை கவிழ்ந்து கொண்டாள். பின்னால் நின்றிருப்பவர்கள் அறியா வண்ணம் அவளின் இடையில் லேசாக கிள்ளினான். அவன் உள்ளங்காலால் அவளின் உள்ளங்காலை அழுத்தினான். முன்னால் ஹோமத்தில் கனன்று கொண்டிருந்த நெருப்பை விட, அவன் அவளில் மூட்டிக் கொண்டிருந்த வெப்பம் அவளை தகித்து கொண்டிருந்தது.
‘கொஞ்சம் சும்மா இருங்களேன்’ என்று கண்களால் அவனை கெஞ்ச, புன்னகையுடன் அவன் கைகளில் மங்கல நாணை ஏந்தி அவள் கழுத்தில் கட்டி சின்னபொண்ணுவை தன்னவளாக்கி கொண்டான்.
(தொடரும்)
error: Content is protected !!
ஹேய் கல்யாணம் முடிச்சிடுச்சு💃💃🥳….வசீகரன் மெய்யாலுமே வசீகரிக்கத்தான் செய்யுறான்😍😍….சின்னு “மாமூ” வா ம்ம்ம் ம்ம்ம்ம்🥰….செம எபி சூப்பர் சிஸ்💖💖