Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

38. அர்ச்சனா நித்தியானந்தம் - காதலும் கடத்தப்படும்Contest Stories 2026

காதலும் கடத்தப்படும் – 31

 

காதலும் கடத்தப்படும் – 31

 



Advertisement

விளக்குகள் அணைக்கப்பட்டன. அரங்கம் அமைதியானது. மேடையில் மட்டும் மெல்ல ஒளி எழும்பியது. விழா தொகுப்பாளர் கையில் ஒலிவாங்கியோடு வந்து நின்றாள்.

 

“அனைவருக்கும் வணக்கம்! வெல்கம் டூ ரெட்ரோ மெட்ரோ. இசையை விரும்பாதவங்க யாருமே இருக்க முடியாது. அதுவும் நம்ம தமிழ் திரைப்பாடல்கள் – குறிப்பா கருப்பு வெள்ளை பாடல்கள். ஓல்ட் இஸ் கோல்ட் தான். ஆனா, எத்தனை முறை நாம பழைய பாடல்களை கேட்டு ரசிக்கிறோம்?!! இன்றைய காலத்துக்கு ஏத்த மாதிரி, உலகம் மாறியது போல, ரசனையும் மாறிப்போயிடுச்சு. அதுக்காக நாம பழைய பாடல்களை மறந்துடலாமா! சென்னையில் மட்டுமில்ல உலகத்தில் முதன் முறையாக, ஒரு புது முயற்சியாக, பழைய பாடல்களை புதிய காலத்திற்கு ஏற்ப இசை வடிவை சற்று மாற்றி, மெருகேற்றி உங்களை மகிழ்விக்க வந்துள்ளனர் அர்ஜுன் மற்றும் குழுவினர்!” 

Advertisement

அர்ஜுனின் பெயரைக் கேட்டதும் அரங்கமே கைதட்டியது. அஞ்சலி நெகிழ்ந்துபோனாள்.

Advertisement

தொகுப்பாளர் அர்ஜுன் மற்றும் மற்றவர்களை அறிமுகம் செய்து வைக்க, மீண்டும் கரகோஷம் எழும்பியது. அர்ஜுன் தனது நெஞ்சின் மீது கை வைத்து ஒரு நொடி மேலே அண்ணாந்து பார்த்து, தனது தாய் தந்தையை நினைவு கூர்ந்தான். அடுத்து அவனது பார்வை அஞ்சலி மீது விழுந்தது. அவன் சிரிக்க, அவள் ‘ஆல் தி பெஸ்ட்’ என்றபடி கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள். அவன் மெலிதாக தலையசைத்துக்கொண்டான்.

 

குழுவினர் தத்தம் இடத்திற்கு சென்று அமர, சூட் கோட்டில் நின்றிருந்த அர்ஜுன், ஒலிவாங்கியின் முன்னே சென்று நின்றான். மீண்டும் ஒருமுறை கரகோஷம் எழுந்தது. 

Advertisement

 

“வணக்கம்! எல்லாரும் நல்லா இருக்கீங்களா?” என்றான் அர்ஜுன். அனைவரும் கரகோஷத்தோடு ஆரவாரம் செய்தனர்.

“நானும் நல்லா இருக்கேன்… உங்களால!! இந்த மேடை, இந்த தருணம், இது எல்லாத்துக்கும் அடித்தளம் உங்களோட அன்பு தான். அதுக்கு நாங்க என்னைக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கோம். முதல் பாட்டு – எனக்கு மனசுக்கு நெருக்கமான பாட்டு. நான் சோர்ந்து இருக்கும்போது கேட்கும் பாட்டு. என் அப்பா அடிக்கடி எனக்கு பாடின பாட்டு… கேட்போமா?” 

அனைவரும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

 

“ரூரு ரூரு ரூ… ரூ… ரூ (கோரஸ் பாட)

டூடு டூடுடுடு டூ டூ டூ…

 

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் 

உலகத்தில் போராடலாம் 

 

கிடார் இசைத்தது…

 

உயர்ந்தாலும் 

டூ டூ…

 

தாழ்ந்தாலும் 

ரூ ரூ…

தலை வணங்காமல் நீ வாழலாம்…”

 

பின்னணி இசை கருவிகள் மாயாஜாலம் செய்ய, முதல் பாடலில் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தான், அர்ஜுன்.

 

அடுத்த பாடல் தொடங்கியது. அர்ஜுன் மீது மட்டும் ஒளி படர்ந்தது. மேல் கோட்டினை அவன் கழற்றியிருந்தான். சட்டையின் இருக்கைகளும் முக்கால் பங்கிற்கு மடித்து விடப்பட்டிருந்தன. சட்டையில் இரு பொத்தான்கள் திறந்துவிடப்பட்டிருந்தன. அமைதி சூழ்ந்திருந்தது. பின்னணி இசையும் நின்றிருந்தது.

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே

ஆலயமணியின் இன்னிசை நீயே…”

ஒரு சிறிய இடைவெளி அமைதியாகிப்போனான் அர்ஜுன். அவனது பார்வை அஞ்சலியின் மீதே இருந்தது. கிட்டார் மெல்ல மீட்டத் தொடங்கியது.

“ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே

ம்ம்ம்… ம்ஹ்ம்… (கோரஸ் பாடினர்)

 

ஆலயமணியின் இன்னிசை நீயே

ம்ம்ம்… ம்ஹ்ம்…

 

தாய்மை எனக்கே தந்தவள் நீயே

லா… லலா…

 

தங்க கோபுரம் போல வந்தாயே

லா… லலா…

 

புதிய உலகம்

ம்ஹும்… 

 

புதிய பாசம்

ம்ஹும்…

 

புதிய தீபம்

ம்ஹும்…

 

கொண்டு வந்தாயே

வந்தாயே… வந்தாயே…“

 

மீண்டும் கிட்டார் ஒலித்தது. 

 

“பொண்ணை விரும்பும் பூமியிலே” என்று பல்லவியை பாடினான். தொடர்ந்து பாட்டின் அடுத்த சரணத்தையும் பாடினான்.

 

மெலடி முடிந்ததும், சில நொடிகள் அமைதியாய் மெய்மறந்து அமர்ந்திருந்த அரங்கம், மெல்ல கைத்தட்டத் தொடங்கியது. 

 

ட்ரம்ஸ் இசைக்க, மற்ற கருவிகள் ஒவ்வொன்றாக இசைக்கத் தொடங்க, தலையில் தொப்பி அணிந்தபடி பாடத் தொடங்கினான், அர்ஜுன் 

பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்

காணாத கண்களை காண வந்தாள்

பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்

பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…”

இம்முறை அழகாய் நடனமிட்டபடி பாடினான். 

அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா …” என்றவன் பாடிமுடிக்க,

“ஆஹாஹாஹா…” என்று குழுவில் இருந்த பெண் ஒருவள் அர்ஜுன் அருகே வந்து நின்று பாடினாள். அவள் அவனை சுற்றிச் சுற்றி வர, அவனோ அவளது கைகளை பற்றிக்கொண்டு ஆட, அஞ்சலிக்கு எரிச்சலாக இருந்தது.

‘கடவுளே, ரிகர்சல விட இப்போ ரொம்ப ஓவரா பண்றா… இவனுக்கும் வாயெல்லாம் என்ன சிரிப்போ’ என்று கடுகடுப்பாக அமர்ந்திருந்தாள். 

பாடல் முடிந்த பிறகே, அவள் முகத்தில் மீண்டும் புன்னகை வந்தது.

பின்னணி இசை காதை பிளக்க, மக்கள் உற்சாகத்தில் கை தட்ட, பலரும் உடன் பாட முயல, மேடை மீது வர்ண ஒளி விளக்குகள் கண்களை பறிக்க, அனைவரும் மெய்மறந்து ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் நிகழ்ச்சியினை ரசித்தனர்.

“காற்றினில் பிறந்தவளோ புதிதாய்

கற்பனை வடித்தவளோ” என்று பாடியபடி அர்ஜுன் உடன் பாடிய பெண்ணை ஆட அழைப்பது போல் கைகள் நீட்ட, அவனது கைகளை பிடித்து இரண்டு சுற்று சுற்றி அவனை கட்டியணைத்து நின்றாள், வேறு ஒரு பெண். சுதாரித்துக்கொண்டு அடுத்த வரியை பாடியை அர்ஜுன், அது பெண்ணல்ல பெண் வேடத்தில் நிற்பது மதன் என்று உணர்ந்தான். அர்ஜுனுக்கு மட்டுமல்ல காண்போர் அனைவருமே இடைவிடாது கூச்சலிட்டபடி சிரித்து மகிழ்ந்தனர்.

“கண்களில் நீலம் விளைத்தவளோ

அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ”

என்று அர்ஜுன் பாட, அவன் முகத்தின் அருகே முகத்தினை வைத்து, தோளினை பற்றி மதன் கண்கள் சிமிட்ட, இமையில் ஒட்டப்பட்டிருந்த போலி இமைமுடி கழண்டு விழுந்தது. 

“பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்

பேரழகெல்லாம் படைத்தவளோ…”

என்ற வரிகளுக்கு, குழுவில் பாடிய பெண்ணை சுட்டிக்காட்டி முகத்தை சுழித்துக்கொண்டு அர்ஜுனின் கன்னத்தில் முத்தமிட்டான், மதன். அர்ஜுன் பாவமாக அஞ்சலியைக் காண, அவளோ விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

“அவள் செந்தமிழ் தேன் மொழியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்

பருகிட தலை குனிவாள்”

பாடல் முடியும் வரை அர்ஜுனை சுற்றிச் சுற்றி ஆடிய மதன், குழுவில் இருக்கும் பாடகி அர்ஜுனின் அருகே வராமல் பார்த்துக்கொண்டாள்.

“அஞ்சலி, இந்த மதன் அப்படியே என் கரீனா மாதிரி ட்ரெஸ் பண்ணியிருக்கான் பாரேன்” என்றபடி கஜேந்திரன், கரீனா சோப்ரா முகப்புத்தகத்தைக் காட்டி, அதிலிருக்கும் அவளது புகைப்படத்தைக் காட்டினான். அதில் கத்தரிப்பூ நிறத்தில் புடவை கட்டி, முடியை வலப்பக்கமாக கோதிவிட்டு, நெற்றிச்சுட்டி வைத்திருந்தது போலவே, அச்சு அசலாக மதனும் அலங்காரம் செய்திருந்தான். அதனைக் கண்டவுடன், அஞ்சலிக்கு மேலும் சிரிப்பு பொங்கியது. அவள் சிரித்துக்கொண்டிருப்பதை, மேடையின் மறைவில் நின்றிருந்த அர்ஜுன் ரசித்திருந்தான்.

“அஜூ…”

“டேய் மதனா, என்னடா வேற பாட்டுக்கு தான பொண்ணு வேஷம் போடறதா சொன்ன?”

“அதுசரி, நீ உன் பாட்டுக்கு அந்த புள்ளையோட டான்ஸ் ஆடற. அதை பார்த்துட்டு அஞ்சலிக்கு மூஞ்சில எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பிச்சுடுச்சு. அதான் நான் களத்துல இறங்கிட்டேன்…”

“ரொம்ப உற்சாகமா இருக்கேன் மதனா. நினைச்சதவிட சூப்பரா ப்ரோக்ராம் போகுது…” என்று அவர்கள் பேசிமுடிக்க, அடுத்த பாடலைப் பற்றி தொகுப்பாளர் கூறி முடிக்க, அனைவரும் மேடைக்கு சென்றனர்.

“அவளுக்கென்ன அழகிய முகம்…” என்று அர்ஜுன் பாட, உடன் மதன் பெண் வேடத்தில் ஆட, அர்ஜுனும் நாகேஷை போல ஆட, அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஆடலின் நடுவே, மேடை அலங்காரத்திலிருந்து ஒரு ரோஜாவை எடுத்து சற்று தள்ளி ஆடிக்கொண்டிருந்த மதனை நோக்கி அர்ஜுன் வீச, மதன் துள்ளி ஓட, அர்ஜுனும் உடன் ஆட, இதற்கு மத்தியில், அம்மலர் அஞ்சலியின் மடியில் சென்று விழுந்தது. அதனை கையிலெடுத்தவளது கண்கள், ஈரமானது. யாரும் அறியா வண்ணம் அதனை மாரோடு சேர்த்துக் கொண்டாள். தனது கைகளுக்குள் அவள் அடைகாக்க, சுற்றியிருக்கும் உலகம் சூனியமானது. மேடையில் அர்ஜுனின் முகம் மட்டுமே அவளுக்கு தெரிந்தது. வேறு எந்த காட்சியும் பிடிபடவில்லை. ஓடிச்சென்று அவன் எதிரே நிற்கவேண்டும் என்று தோன்றியது. கைகளைக் கோர்த்து இதய வடிவு செய்து, அதன் வழியே அவனைப் பார்த்திட ஏங்கியது. இளமாறன் இந்துமதியின் மனதினைப் படித்து காதலை பரிமாறிக்கொண்டது போல, அர்ஜுனும் தன்னை வாரியணைத்துக் கொள்ள ஆசை கொண்டாள்.

அரங்கம் கைதட்ட நினைவிற்கு திரும்பியவள், அந்த மெல்லிய மலரை தனது கைப்பையில் பத்திரப்படுத்தினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!