Skip to content
Post Views: 235
அத்தியாயம் 15
தன் பால்கனி கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை பார்த்துக் கொண்டே, சேலையினுள் மறைத்து போட்டிருந்த மாங்கல்யத்தை வெளியே எடுத்து, யாருக்கும் தெரியாமல் நடு விரலில் தொட்டுக்கொண்டு வந்திருந்த குங்குமத்தை அதில் வைத்தாள் துர்க்கா.
Advertisement
நித்தியாவின் முயற்சி வீண் போகவில்லை.
ஒற்றை முயற்சியுடன் ஓய்ந்துவிடும் ஆள் நித்தியா கிடையாதே, மகனை இடுப்பில் இடுக்கி கொண்டு துர்க்காவின் அறையினுள் அதிரடியாக நுழைந்தாள்.
Advertisement
Advertisement
அவள் வருகையில் திடுக்கிடு திரும்பியவள், தாலியை எடுத்து சேலையினுள் மறைக்க “பாத்தாச்சு.. பாத்தாச்சு…” என்றாள் நித்தியா,
துர்க்கா என்னவென்று முழிக்க “உங்க கழுத்துல தாலி இருக்கிறதுதான் ஊருக்கே தெரியுமே.. பிறகு எதுக்கு அத மறைச்சு போட்டுட்டு…” என்று கேட்க
Advertisement
“இல்ல அண்ணி.. அம்மா தான்…” என்று சொல்ல
“ம்க்கும்! இவ திருந்த மாட்டா…” என்று வாய்க்குள் முனகியவள், விகர்ணனை அவளிடம் தூக்கி கொடுத்து
“இந்தாங்க.. இவன பாத்துக்கோங்க…” என்று கொடுக்க
“அண்ணி நான் எப்படி.. அத்தை இருக்காங்க…” என்று துர்க்கா சொல்ல
“நான் எப்படின்னா.. நீங்க தான் பாத்துக்கணும்.. உங்கள மாதிரி சும்மாவே பொறந்த வீட்டு அறையில அடஞ்சி கிடக்க எனக்கு கொடுப்பினை இல்லையே.. என் புருஷனுக்கு கால சாப்பாடு செஞ்சு பரிமாறணும்.. அதுக்கு முன்ன குளிக்க சோப்பு எடுத்து கொடுக்கணும்.. துடைக்க டவல் எடுத்து கொடுக்கணும்.. போட்டுக்க உடுப்பு எடுத்து கொடுக்கணும்..
…என் புருஷனுக்கு நான் இல்லன்னா ஒரு வேலையும் ஓடாது.. அதோட முடியுமா, மதிய சாப்பாடு செஞ்சு மில்லுக்கு கொடுத்து விடணும்.. என் கையால சமைச்சாத்தான் என் புருஷனுக்கு சோறு இறங்கும்.. அதுக்கப்புறம் சாயந்திரம் என் கையால டீ குடிக்கவே ஓடி வந்துருவாங்க.. ராத்திரி சாப்பாடு வரைக்கும் நித்தி அது எங்க நித்தி இது எங்கன்னு நான் தான் வேணும் என் புருஷனுக்கு.. இத்தன வேலையில பெத்த புள்ளைய வேற பாத்துக்கணும்னா எப்படி.. தாலி கழுத்துல ஏறுனாலும் புருஷனையோ புகுந்த வீட்டையோ பார்த்துக்க வேணாம் என்ற வரம் நான் வாங்கி வரலையே…” என்று மூச்சை பிடித்து பேச,
“நானா அண்ணி ஆசைப்பட்டேன்.. இந்த தாலி என் கழுத்துல இருக்க நீங்க தானே காரணம்…” என்று துர்க்கா கேட்க
‘ம்க்கும்! அப்படியே ஆசைப்பட்டு நீ கல்யாணம் பண்ணிட்டாலும்…’ என்று மனதில் நொடித்துக் கொண்டவள்
“ஓஹோ என்னால தான் தாலி ஏறுச்சு.. அதே மாதிரி நானே கைய புடிச்சு கூட்டிக்கொண்டு புருஷன் வீட்டுல விடணுமோ…!” என்று கேட்க
துர்க்கா பார்த்த பார்வை விடுங்களேன் என்றுதான் சொன்னது. அவளை உற்றுப் பார்த்த நித்தியாவிற்கோ ‘சுவிட்ச் எங்கேயோ இருக்க.. பல்பை குச்சி வச்சு தட்டுறோமோ…’ என்றுதான் தோன்றியது.
ஆனால் முருகானந்தம் பிரேமாவதி ரத்தத்தில் ஊறிப் போய் இருக்கும் கௌரவம் என்னும் வெறியை மாற்ற முடியும் என்று தோன்றவில்லை.
“அண்ணி நான் எதுவும் சொல்லல.. என் அண்ணன் பிள்ளைய பாத்துக்க எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல.. ஆனா அத்தை இப்போ இங்க இருக்காங்க அவங்களுக்கு தெரிஞ்சா என்ன பேசியே கொன்னுடுவாங்க…” என்று துர்க்கா சொல்ல
“சரி விடு.. நானே பாத்துக்குறேன்…” என்ற நித்தியா வந்த வேலை ஓரளவு முடிந்தது என்ற எண்ணத்தில் மகனை தூக்கிக் கொண்டு செல்ல,
நித்தியா சொன்ன என் புருஷனுக்கு நான் செய்ய வேண்டிய வேலைகள் என்றது இவள் மனக்கணில் வந்து போனது. பரணிக்கு யார் செய்வார்கள் அவன் தாய் கூட இல்லையே உள்ளம் அவனுக்காக உருகியது.
******
இரண்டு நாட்கள் நித்தியாவின் என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் டார்ச்சரிலேயே துர்க்காவிற்கு செல்ல,
இரண்டாவது நாள் இரவு நன்கு தூங்கிக் கொண்டிருந்த துர்க்காவின் அறைக்கதவு தட்டப்பட, தூங்கிக் கொண்டிருந்த துர்க்காவிற்கு பயம் பிடித்துக் கொண்டது.
இரவு ஒரு மணிக்கு அவள் அறை கதவை தட்ட வேண்டிய அவசியம் யாருக்கு வந்தது என்ற யோசனையுடன், எழுந்து கதவின் அருகே வந்தவள் “யாரு?…” என்றாள் சற்று படபடப்பான குரலில்
அந்தப் பக்கம் பதில் இல்லை என்றதும் துர்க்காவிற்கு வியர்க்கவே ஆரம்பித்துவிட்டது. மீண்டும் கதவு தட்டப்பட “யா…ரு?.. யாருன்னு கேட்கிறேன் இல்ல…” என்று சற்று சத்தமாக கேட்க
அந்த பக்கம் சகுந்தலாவின் குரல் “துர்க்கா வெளிய வா!…” என்று வர, ‘அத்தையா…’ என்று ஆசுவாச பெருமூச்சு விட்டவள், கதவை திறக்க அங்கு கொடூர புன்னகையுடன் நின்றிருந்தான் அகிலன்.
அவன் கையில் ஃபோன், அதில் தான் என்றோ சகுந்தலா துர்க்காவை அழைத்ததை ரெக்கார்ட் செய்து வைத்து, இன்று பயன்படுத்திக் கொண்டுள்ளான்.
அகிலனை பார்த்தவுடன் உள்ளம் திடுக்கிட, உடல் தூக்கி வாரி போட, அவன் எதற்கு வந்திருப்பான் என்பது தெரியுமே, உடனே கதவை அடைக்க போக,
கதவை அடைக்க விடாமல் இடையில் காலை வைத்து தடுத்தவன், அவள் கையைப் பிடித்து “ஏய் துர்க்கா ரொம்ப பண்ணாத.. வழிய விடு…!” என்றவன் அவளுடன் போராட, துர்க்காவும் அவனை உள்ளே விடக்கூடாது என்று தன் முழு பலத்தை பயன்படுத்தி தடுத்தாள்.
“சொன்னா கேளு.. இங்க இருந்து போயிடு.. சத்தம் போட்டேன் நீ அவ்வளவுதான்…” என்று துர்க்கா சொல்ல
கேலியாக சிரித்தவன் “சத்தம் போடுவியா.. போடு நீ போடுற சத்தத்துக்கு இப்போதைக்கு யாரும் வர மாட்டாங்க.. என்ன பாக்குற எதிர் அறையில உன் அண்ணன் இல்ல.. மில்லுக்கு புது மிஷின் வந்திறங்கி இருக்கு.. உன் அண்ணங்க ரெண்டு பேரும் மில்லுல தான் இருக்காங்க.. அவங்கள தவிர வேற யாரு வந்தாலும் நீ தான் என்ன வர சொன்னேன்னு சொல்லுவேன்.. 14 வயசுல ஆம்பள சுகத்துக்கு ஆசைப்பட்டு ஓடிப்போன நீ சொல்றத நம்புவார்களா, இல்ல சரியான வயசுல ஊரறிய கல்யாணம் பண்ணி பொண்டாட்டிய ராணி மாதிரி வெச்சி இருக்குற நான் சொல்றத நம்புவாங்களா…” என்று கேட்க
துர்க்காவின் கண்ணை விட்டு கண்ணீர் கன்னம் இறங்கியது. அவன் சொல்வதும் நடக்க வாய்ப்பு இருக்கிறது தானே
“ப்ளீஸ்!.. தயவு பண்ணி இங்க இருந்து போயிரு…” என்று கொஞ்ச
“என்னடி பத்தினி மாதிரி ரொம்ப நடிக்கிற.. எப்படியும் உனக்கெல்லாம் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு அமையாது அமையும் போதே அனுபவிச்சுக்க…” என்றவன் கண்ணில் விழுந்தது அவள் கழுத்தில் கிடந்த தாலி
அதை பார்த்து நக்கலாக சிரித்தவன் “உன் நிலைமைய பாத்தியா.. உனக்கு தாலி கட்டினவன் எங்கேயோ இருக்கான் ஆனா உன் கூட குடும்பம் நடத்த போறது நான்…” என்று சொல்ல
“ச்சீ!.. ஒழுங்கு மரியாதையா போயிடு.. என் அண்ணங்களுக்கும் என் புருஷனுக்கும் இது தெரிஞ்சது.. உன்ன கொன்னு புதைச்சிடுவாங்க…” என்று அவள் சற்று கோவமாக பேச
அவள் கையை விட்டவன் அவள் முந்தானையை பிடித்து இழுக்க, அவன் கையோடு போய்விடாமல் துர்க்கா மார்போடு பிடித்து வைத்துக் கொள்ள,
“என்னடி ரொம்ப துள்ற.. உன் கழுத்துல தாலி கட்டுன உடனே உன்ன வேணானு விட்டு போயிட்டான்.. அவன் வந்து என்கிட்ட கேள்வி கேட்க போறானா.. நீ என்னதான் தலைகீழா நின்னாலும் என் அத்தை இருக்கிற வரைக்கும் உன்னால ஒரு குடும்ப வாழ்க்கை வாழ முடியாது.. ரொம்ப சீன் போடாம சத்தமே இல்லாம என்கூட படுக்கிற வழிய பாரு…” என்று அவள் முந்தானையைப் பிடித்து இழுக்க
“என் உயிரே போனாலும் நீ நினைக்கிறது நடக்காது.. என் புருஷன் கண்டிப்பா என்ன தேடி வருவாரு.. அப்ப இருக்கு உனக்கு…” என்று சொன்ன துர்க்காவிற்கு இப்போதே தன்னவன் வந்து தன்னை காக்க மாட்டானா என்று இருந்தது.
மனசீகமாக கடவுளிடம் ‘அம்மா தாயே இந்த கயவன் கிட்ட இருந்து காப்பாத்தும்மா.. ஏற்கனவே என் புருஷனோட வாழ தகுதி இல்லாம நிக்கிறேன்.. இன்னும் இன்னும் என் மேல அசிங்கத்த பூசிடாதம்மா…’ என்று மன்றாட,
கடவுளுக்கு கேட்டு விட்டதோ என்னவோ, பிரபாகரன் இல்லாததால் ஆதூரியை தன்னுடன் நித்தியா படுக்க வைத்து இருக்க, குழந்தை தூக்கத்தில் படுக்கையை ஈரம் செய்துவிட, அவளை எழுப்பி சுத்தம் செய்த நித்தியா அவளுக்கு உடை மாற்றுவதற்காக பிரபாகரன் அறையை நோக்கி வந்தவள் துர்க்காவின் சேலையை பிடித்து இழுக்கும் அகிலனை கண்டு விட்டாள்.
உடலில் நடுக்கம் எடுக்க, அவன் குடலை உருவி போடும் ஆத்திரத்தில் கண்கள் சிவக்க பத்ரகாளியாய் நின்றவள் “இவன!…” என்று பல்லை கடித்துக் கொண்டு,
அவன் மண்டையை பிளக்க ஆயுதம் தேடியவள், உடனே தனது அறைக்கு வந்து சாளரத்தை மறைத்து போட்டு இருந்த ஜன்னல் சீலையை மாட்டி இருந்த கம்பியை கழட்டி எடுத்தவள், “இத வச்சு இன்னைக்கு அவன் மண்டைய போளந்து சுடுகாட்டுல படுக்க வைக்கல…” என்றவள்
“ஐயோ அஞ்சுவ எப்படி மறந்தேன்…” என்று யோசித்தவள்
‘இல்ல இப்போதைக்கு வீரம் முக்கியம் இல்ல.. விவேகம் தான் முக்கியம்…’ என்று நினைத்தவள்
தன் ஃபோனை எடுத்துக் கொண்டு வந்தவள், மறைந்து இருந்து அவனின் நாசகார செயலை வீடியோ எடுத்தாள்.
நித்தியா வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போதே அகிலனின் ஆதிக்கத்தை தாங்க முடியாமல் துர்க்கா அவனை கைகளால் அடிக்க
நித்தியாவோ ‘ஹா.. அப்படித்தான் கொசு விரட்டு.. ஓங்கி எதையாவது எடுத்து அவன் மண்டைய உடைப்போம்னு இல்ல.. கொத்தவரங்கா கைய வச்சிட்டு கொசு விரட்டுறா..இவ அடி அவனுக்கு அப்படியே வலிச்சிட போகுது பாரு…’ என்று மனதில் திட்டியவள்
இதற்கு மேல் தாமதித்தால் நிலைமை கை மீறிப் போய்விடும் என்பதால், மீண்டும் தனது அறைக்குச் சென்று ஆதூரியை தூக்கிக் கொண்டவள், வேகமாக துர்க்காவின் அறைக்கு வரவும்.
அகிலன் அவளை கண்டு கொண்டான். ஒரு நொடி கையும் காலும் ஓடவில்லை உடனே துர்க்காவை விட்டவன் அந்த இடத்தில் இருளான ஒரு பகுதியில் மறைந்து நின்று கொண்டான்.
தூக்கத்தில் இருக்கும் குழந்தை முழித்து இருப்பது போன்று “யோ.. யோ.. சரி.. சரி.. அழாதடா அத்தை கிட்ட போகலாம்…” என்று தட்டி குடுத்தவாறு அறைவாசலில் நின்ற துர்க்காவின் முன்பு வந்து நிற்க
இவ்வளவு நேரம் தன்னை பாடாய்படுத்திய அந்த கயவன் திடீரென்று ஓடிச் சென்று மறைந்து கொள்ள, புரியாமல் திகைத்து நின்றவள் நித்தியாவை பார்த்து நிம்மதி பெரும் மூச்சை இழுத்து விட்டாள்.
“துர்க்கா இங்க என்ன பண்றீங்க?…” என்று நித்தியா கேட்க
வியர்த்து வடிந்த தன் முகத்தை முந்தானையால் துடைத்தவள் “ஒன்னும் இல்ல அண்ணி.. ஏதோ சத்தம் கேட்டுச்சு அதான் என்னன்னு பார்க்க வந்தேன்…” என்று சொல்ல
“ஓ.. அதுவா.. நான் தான்.. ஆதூ தூங்க மாட்டேங்குறா உன் கூட படுக்க வைக்கலாம்னு தூக்கிட்டு வந்தேன்…” என்று இருட்டில் ஒழிந்திருந்த அகிலனை கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே சொல்ல
உடனே குழந்தையை தன் தோளுக்கு மாற்றிக் கொண்டவள் “சரி அண்ணி நான் படுக்க வச்சிக்கிறேன்…” என்று சொல்லி குழந்தையை அணைத்துக் கொண்டாள்.
இவ்வளவு நேரம் தன் நிலை என்ன ஆகுமோ என்று பரிதவித்து இருந்தவளுக்கு, தன் அண்ணன் குழந்தையின் ஸ்பரிசம் அத்தனை இதமாக இருந்தது.
சொல்லப்போனால் நித்தியாவை அணைத்து கண்ணீர் விட வேண்டும் என்று தான் தோன்றியது. இப்போது மட்டும் அவள் வரவில்லை என்றால் இவள் நிலைமை மோசமாகி இருக்கும்.
எனவே “தேங்க்ஸ் அண்ணி!…” என்று சொல்ல
எதற்கு என்று தெரிந்தாலும் நித்தியா “எதுக்கு?…” என்று கேட்க
என்ன சொல்வாள் தனக்கு நடந்த அவலத்தை கூட சொல்லி அழ முடியாத கையறு நிலையில் இருக்கின்றாளே. கண்கள் அகிலன் நின்றிருந்த இடத்தை தான் பார்த்தது.
“சரி, சரி.. கதவ நல்லா சாத்திட்டு படுத்துக்க.. குழந்தை தூக்கத்துல எந்திரிச்சு வெளிய வந்துரும்…” என்று சொல்ல
நித்தியாவின் சொல்லை தட்டாமல் அவள் நிற்கும் போது கதவை அடைத்து, கீழ் மேல் தாழ்பாளை போட்டுக்கொண்டாள்.
தாழ்ப்பாள் போடும் சத்தம் கேட்ட பின்னர் தான் நித்தியா அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
தனது அறைக்கு வந்த நித்தியாவிற்கு தூக்கம் என்பதே வரவில்லை. என்னதான் குழந்தையை கொடுத்துவிட்டு வந்தாலும் அகிலன் திரும்பவும் துர்க்காவை தொந்தரவு செய்வானோ என்று பயமாகத்தான் இருந்தது.
அதனாலேயே விழித்தே கிடந்தாள். அதைவிட விடிந்ததும் முதல் வேலையாக அஞ்சனாவிடம் எல்லாவற்றையும் கூற வேண்டும் என்பதால் அவளுக்கு தூக்கமே வரவில்லை.
துர்க்காவும் குழந்தையை கட்டிலில் படுக்க வைத்தவள், அந்த மழலை முகத்தை பார்த்துக் கொண்டே விழித்து இருந்தாள். கண்கள் குழந்தையில் இருந்தாலும் கவனம் என்னவோ அவள் கணவன் மீது தான் இருந்தது.
முன்பு எப்படியோ இப்போது நடந்த விடயம் மட்டும் பரணிக்கு தெரிய வந்தால் கண்டிப்பாக இவன் கையை வெட்டி காக்கைக்கும் கழுகுக்கும் போட்டு விடுவான் என்பது நன்கு தெரியும்.
அவள் மனசாட்சியோ (இன்னமும் இங்க இருந்து அசிங்கப்பட போறியா.. உனக்கான இடம் இது இல்ல.. உனக்காக இடத்துல சரண் புகுந்தா தான் உனக்கான பாதுகாப்பும் நிம்மதியும் கிடைக்கும்…) என்று சொல்ல
அவளோ ‘அது எனக்கு நல்லா தெரியும்.. ஒரு முறை தான் எந்த உரிமையும் இல்லாதவன நம்பி வீட்ட விட்டு கால் எடுத்து வச்சு வாழ்க்கையோட கோரப்பிடியில சிக்கிட்டேன்.. இந்த முறை உரிமையா என் புருஷன் கைய படிச்சுக்கிட்டு தான் இந்த வீட்ட விட்டு போகணும்.. அதுக்கு அவரா வந்து என்ன கூப்பிடனும்.. அது வரைக்கும் காத்துட்டு தான் இருக்கனும்..
…கட்டாயத்தின் பேர்ல அவர் என்ன ஏத்துக்க வேணாம்.. அவரும் என்ன முழு மனசா ஏத்துக்கிட்டு.. வானு ஒரு வார்த்த கூப்பிடனும்.. என்ன தேடி வந்து என் கைய புடிச்சு கூட்டிட்டு போகணும்.. அது நடக்கும், கண்டிப்பா நடக்கும்.. அதுவரைக்கும் எப்படி இந்த நாய்கிட்ட இருந்து தப்பிக்கிறதுனு தெரியல.. அண்ணா கிட்ட சொல்லலாமா…!” என்று யோசித்தவள்
பிரபாகரனிடம் சொல்லி அவன் ஏதேனும் செய்தால், அஞ்சனா கோபித்துக் கொள்வாள் என்று தோன்ற ‘இல்ல வேணாம்.. அண்ணா ஏதாவது செய்யப் போய் அஞ்சனா பழச மனசுல வச்சிக்கிட்டு தான் அண்ணா அகிலன ஏதாவது பண்ணிடுச்சுன்னு யோசிக்கும்.. எதுக்கு தேவையில்லாத பிரச்சினை.. நாளைக்கு நித்தி அண்ணிகிட்ட சொல்லி பாக்கலாம்…” என்று முடிவெடுத்து கொண்டு விடியலை எதிர்நோக்கி காத்திருந்தாள்.
error: Content is protected !!
அந்த அகிலன் நாய செருப்பால அடிச்சாலும் அடங்கா மாட்டான் போல 😡😡😡😡… அவனுக்கு பிரபாவும், பரணியும் அடி கொடுக்கணும் அப்போ தான் அவனுக்கு அவன் பண்ண தப்பு புரியும்