உயிர் உருகும் காதல் எனதே….7
உயிர் உருகும் காதல் எனதே….7
“என்னால முடியாது…..யாரை கேட்டு இந்த முடிவு எடுத்தீங்க….”என்று வீரா கத்திக் கொண்டிருக்க,
“ஆமா நிச்சியம் எல்லாம் வேண்டாம் கல்யாணம் தான் தேதி பார்த்துட்டு அடுத்த மாசம் இரண்டு தேதி குறிச்சி கொடுத்திருக்கார்….நீங்க நம்ம தெரு பக்கத்துல மண்டபம் இருக்குல்ல அதை விசாரிச்சிட்டு சொல்லுங்களேன்…..”என்று மேலும் ஏதோ பேசிவிட்டு கற்பகம் வைக்க,வீராவோ அவரை முறைத்துக் கொண்டே,
“ம்மா நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன்….நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க….”
Advertisement
“ச்சு….கத்தாதடா….ஏற்கனவே ஏகபட்ட வேலை இருக்கு….நீ வேற குறுகுறுக்க கத்திக்கிட்டு என் உயிரை எடுக்காத….போ போய் எனக்கு ஒரு காபி எடுத்துட்டு வா….”என்று கூறிவிட்டு போனை காதில் வைத்துக் கொண்டே போய்விட,வீராவிற்கு தான் மண்டை காய்ந்தது தன் அன்னை செய்து கொண்டிருக்கும் காரியத்தை நினைத்து,மாலை கடையில் அமர்ந்திருதவனுக்கு கற்பகத்திடம் இருந்து அழைப்பு வர,
“வீரா வேலையா இருக்கியாப்பா…..”
“இல்லமா சொல்லுங்க….”
Advertisement
“உடனே கிளம்பி நீ வீட்டுக்கு வாப்பா….உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்….”
Advertisement
“என்னமா என்ன பேசனும்…..சொல்லுங்க….”
“இல்லப்பா நேர்ல தான் பேசனும் கொஞ்சம் வாயேன்….”என்று கூறி வைத்துவிட,வீராவிற்கு தாயின் நிதானமான பேச்சிலேயே புரிந்தது புது வரன் வந்திருக்கிறது என்று.எரிச்சல் தான் ஆனால் காட்ட முடியவில்லை சரி இதையும் தட்டிக்கழிக்கும் யோசனையுடன் அவன் வீட்டிற்கு வர,அங்கு நடந்தத்தோ அவன் எதிர்பாரதாதது.
வீரபத்திரன் வீட்டிற்குள் வரும் போதே கற்பகத்தின் குரல் அத்தனை சந்தோஷமாக வாசல் வரை ஒலித்தது,
Advertisement
“ஆமா நர்மதா நான் வீராவை வர சொல்லிட்டேன்….இப்ப வந்துடுவான் பேசிட்டு உனக்கு கூப்பிடுறேன்….”என்று கூறிக் கொண்டிருக்க வீரா உள்ளே நுழைந்தான்.
“சரி அவன் வந்துட்டான் பேசிட்டு உன்னை கூப்பிடுறேன்….”என்றுவிட்டு மகனிடம் விரைந்தவர்,
“வாடா….இங்க இருக்குற வீட்டுக்கு வரதுக்கு இவ்வளவு நேரமா….”
“ம்மா நான் என்ன பறந்தா வரமுடியும்….”
“சரி சரி கோபப்படாத….இங்க வா இப்படி உட்கார்…உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்….”என்றவர் வீராவின் கையை பிடித்துக் கொண்டு தனக்கு பிடித்த இடமான சாப்பாட்டு மேஜை நாற்காலியில் அமர வைக்க,
“ம்மா நான் என்ன சின்ன பிள்ளையா….இப்படி இழுத்துட்டு வந்து உட்கார வைக்குறீங்க….முதல்ல என்ன விஷயம்னு சொல்லுங்க….எனக்கு வேலை இருக்கு….”என்று கடுகடுப்புடன் தான் பேசினான்.
“ஏன்டா கடுகடுனுனே இருக்க….இரு நான் காபி எடுத்துட்டு வரவா…”
“நான் கிளம்புறேன்….”என்றுவன் எழுந்து கொள்ள,
“அடேய்….இருடா….”
“முதல்ல சொல்லுங்க….”
“அது உனக்கு கல்யாண ஏற்பாடு பண்ணியிருக்கேன்….எல்லாம் உனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்….நம்ம அடுத்த தெரு துர்கா….உனக்கும் அவளுக்கும் ஜாதக பொருத்தம் கூட இருக்கு….நான் அவங்க வீட்டுலேயும் பேசிட்டேன்….”என்று படபடவென்று முடித்துவிட,வீராவோ பேயறைந்ததை போல் அமர்ந்திருந்தான்.தாய் ஏதோ பெண் பார்த்திருப்பதாக தான் நினைத்திருந்தான் ஆனால் துர்கா என்றவுடன் என்ன பதில் கூறுவது என்று கூட மறந்து போனது அன்று கடையில் தன்னிடம் வம்பு செய்துவிட்டு ஓடிய நியாபகம் கண் முன் வர,
“அந்த பஜாரியா…..”என்று வாய்விட்டே முணக,
“என்னடா பதிலே காணும்….”என்று கற்பகம் வேறு மகனை ஊக்க,அவ்வளவு தான் காட்டு கத்தலாக கத்த தொடங்கிவிட்டான்.யாரை கேட்டு முடிவு செஞ்சீங்க என்று ஆரம்பித்து ஏதேதோ கத்திக் கொண்டே இருக்க,கற்பகமோ,
“நீ கத்திக்கிட்டே கிட…ஆனா இது நான் என் முடிவு…உனக்கு அடுத்த மாசம் கல்யாணம்….”என்று ஒரே போட போட்டுவிட்டு அவர் போக,வீரா தான் அவரின் பின்னே அலைந்து கொண்டிருக்கிறான்.
“ம்மா நான் பேசுறது காதுல விழுதா…..”என்று கத்த,
“விழுதுடா….எதுக்கு கத்துற….சூடா இருக்க இந்தா காபி குடி….”என்று சமையலறையிலிருந்து எடுத்துவர,
“ம்மஹா….”
“இங்க தான் இருக்கேன்….”என்று கற்கபகமும் சளைக்காமல் பதில் கூற,அயர்ந்து அமர்ந்துவிட்டான் வீரபத்திரன்.எப்போதும் இது போல் கோபப்பட்டால் கற்பகம் அமைதியாகிவிடுவார் ஆனால் இன்று வாய்க்கு வாய் பேசிக் கொண்டே இருக்க என்ன செய்வது என்றே புரியவில்லை.
“பய வாயடைச்சு போயிட்டான்….இத்தனை நாள் இது தெரியாம போச்சே….மாப்பிள்ளைக்கு தான் நன்றி சொல்லனும்…”என்று தனக்குள் கூறிக் கொண்டார்.பிரபஞ்சன் தான் கற்கபகத்திடம் பதிலுக்கு பேசுங்க அப்ப தான் அவன் திணறுவான் என்று கூறியிருந்தான்.அதுபோலவே நடந்துவிட அவருக்கு அத்தனை சந்தோஷம்.
“காபி குடிடா….”என்று அவர் கூறிக் கொண்டிருக்க,வீராவின் கைபேசி இசைந்தது.
“இந்தா வந்துடுச்சுல….அதுக்குள்ள என்னவாம் அந்த கார்மேகத்துக்கு…”என்று அவர் கோபத்தில் கூற,
“இது ஒண்ணும் கார்மேகம் இல்ல….நீ பார்த்து வச்சிருக்கியே எனக்கு ஒரு பொண்ணு அவ தான்….துர்கா…”என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூற,
“என்ன துர்காவா….உனக்கு எப்படி அவ நம்பர் தெரியும்….”என்று இரண்டு நிமிடம் யோசித்தவர்,
பின் “சரி தெரிஞ்ச வரைக்கும் நல்லதா போச்சு பேசுடா….”என்றவரின் முகத்தில் இத்தனை நாள் இல்லாத மலர்ச்சி,அவரையே பார்த்துக் கொண்டிருந்தவனை,
“என்னடா என் மூஞ்சியை பார்த்துக்கிட்டு இருக்க….பேசுடா….என்கிட்ட பேசுன மாதிரி பேசிடாத…சரியா….”என்று கெஞ்சுவது போல கூற,அதுக்கு மேல் அவரை சோதிக்க விரும்பாமல்,
“சரி சரி…வரேன்….”என்றுவிட்டு பேசியை எடுத்துக் கொண்டு அவன் மாடிக்கு சென்றுவிட்டான்.
“ப்ச்….வீரச்சாமி போனை எடுக்குறானா பாரு….இவனை போய் அம்மா எனக்கு பேசியிருக்கு பாரு….”என்று நொந்து கொண்டு பேசியில் மீண்டும் அழைப்புவிடுக்க,
“ஹலோ….”என்றவனின் குரல் சற்று காரமாக தான் வந்தது.
“ப்பஹா….காரம் இங்க வரைக்கும் தெறிக்குது….”என்றவளின் நக்கல் குரல் வீராவிற்கு கேட்டவுடன்,
“இவ அடங்கவே மாட்டா….சரியான ரௌடி….”
“நான் ரௌடி தான் ரோமியோ….”
“என்ன ரோமியோவா….”
“ஆமா நான் ரௌடினா நீங்க ரோமியோ தான….அப்புறம் ரோமியோ…வீட்டுல சொல்லியிருப்பாங்களே…..அது பத்தி நான் உங்க கிட்ட பேசனும்….நாளைக்கு சாய்ந்திரம் உங்க கடைக்கு பக்கத்துல இருக்கற காபி ஷாப்புல மீட் பண்ணலாம்…ஓகே…..பை….”என்று அவனை பேசவிடாமல் வைத்துவிட,
“ஏய் இல்ல இரு….இரு…..”என்று இவன் தான் கத்திக் கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் அவள் வைத்துவிட்டது புரிய,
“சரியான திமிரு….ஊரு உலகத்துல பொண்ணே இல்லாத மாதிரி தான் இவளை அம்மா பார்த்திருக்கு….”என்று புலம்பியவனின் மனது அவனையும் அறியாமலே திருமணம் என்ற ஒன்றை ஏற்க துவங்கியிருந்தது.
மாலை நேரம் என்பதால் அந்த காபி ஷாப்பில் கூட்டம் அதிகமாக தான் இருந்தது.துர்கா அதன் உள்ளே நுழைய அவளின் பின்னே வீராவும் வந்தான்.முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது வீராவிற்கு பின்னே துர்கா வரும் போதே அவனை இழுத்துக் கொண்டு தானே வந்தாள்.
“வாங்க வீராச்சாமி….உட்காருங்க….”என்று துர்கா ஒரு இடத்தை காட்டி அவள் அமர,அவளின் எதிரே அமர்ந்த வீரா,
“ஒழுங்கா வீரானே கூப்பிடு….”என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.
“ஓகே…ஓகே சாமாதானம்….”என்று இரு கைகளை தூக்கிக் கொண்டு கூற,கடையில் இருந்த ஒன்று இரண்டு பேர் இவர்களை பார்க்கவும்,
“போதும் சீன் கிரியேட் பண்ணாத….”
“சரி பண்ணல….ஏன் இவ்வளவு கோபம்….நான் உங்களை டீசண்டா தான் கூப்பிட்டேன் நீங்க தான் வரலை….அதான் நானே கூப்பிட்டு வந்துட்டேன்….”என்று கூற,
“ப்ச்…..”என்று வீரா முகத்தை பிடித்தமில்லாமல் திருப்பினான்.அதை பார்த்ததும் துர்கா சற்று நேரம் அமைதியாக அமர்ந்துவிட்டாள்.
“என்ன இப்படி உட்கார்ந்து இருக்க தான் கூப்பிட்டியா….”என்றான் எரிச்சலாக,ஏனோ அவள் தன்னை ஏதோ கைதி போல கடைக்கே வந்து அழைத்து வந்தது பிடிக்கவில்லை.ஏற்கனவே அவளின் மீது அத்தனை அபிமானம் இல்லை இதில் இன்று அவள் நடந்து கொண்ட விதம் சற்று அதிகமாகவே பட்டது.
“ம்ம் பேசனும் தான் வந்தேன்…ஆனா இனி அது தேவையில்லைனு புரியுது…..கிளம்பலாம்…..”என்றுவிட்டு தன் கை பையை எடுக்க,அதிர்ந்துவிட்டான் வீரா.
“என்ன…”
“கிளம்பலாம்னு சொன்னேன்…..”என்றுவிட்டு எழ,
“ஏய்ய்ய்…..”என்றவனின் கர்ஜனை குரல் சற்று அதிகமாகவே கேட்க,மற்றவர்கள் என்ன என்பது போல் பார்க்க,
“ஷ்ஷ்…வீரா எதுக்கு சத்தம் போடுறீங்க….எல்லாரும் நம்மளை தான் பார்க்குறாங்க….”என்று அமைதியாக எச்சரிக்க,
“அப்ப ஒழுங்கா உட்காரு….என்னை பார்த்தா லூசு மாதிரி தெரியுதா…..வேலையா இருந்தவனை பிடிச்சு இழுத்துட்டு வந்துட்டு….நீ பாட்டுக்கு கிளம்புற…..”என்றவனின் முகத்தில் இன்னும் கோபம் அதிகமாக இருக்க,துர்கா மீண்டும் தன் இடத்தில் அமர்ந்துவிட்டாள்.
“கொஞ்ச நேரம் பேச வேண்டாம் ப்ளீஸ்….”என்று சோர்ந்த குரலில் கூற,வீரா சற்று நிதானித்தான்.சற்று நேரம் இருவரும் பேசவில்லை.வீராவின் பார்வை வெளியில் இருக்க,
“ஏதாவது சாப்பிடலாமா….”என்றாள் துர்கா.அவன் மறுத்து ஏதோ கூற வரும் முன்,
“ப்ளீஸ் எனக்கு பசிக்குது….நான் ஸ்கூல் முடிஞ்சு இங்க தான் வரேன்….எனக்கு கம்பெனி கொடுங்க….”என்றுவிட வீராவால் மறுத்து கூற முடியவில்லை.துர்கா இருவருக்கும் காபி ஆடர் செய்ய,
“உனக்கு வேற ஏதாவது வேணும்னா வாங்கிக்க….”என்றான் வீரா,அவனுமே அவள் கூறிய பிறகு தான் கவனித்தான் முகத்தில் சோர்வு அப்பியிருந்தது.
“இல்ல வேண்டாம்….இப்ப நீங்க ஓகே தான….”
“ம்ம்….”
“வீட்ல பேசியிருப்பாங்க….நீங்க என்ன நினைக்கிறீங்க….”என்றுவிட்டு அவன் முகத்தை பார்க்க இப்படி அவள் பட்டென்று கேட்பாள் என்று நினையாதவன் பேந்த பேந்த விழித்தான்.
“என்னாச்சு வீரா நாம இதை பத்தி பேச தான வந்தோம் மறந்து போச்சா….”
“இல்ல….”என்றுவிட்டு முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.நிஜத்திற்கும் என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை.
“உங்களுக்கு என்னை பிடிக்கலை அப்படி தான….”என்று கேட்க,
“இல்ல அப்படி இல்ல….”
“இல்லையா அப்ப பிடிச்சிருக்கா….”
“அய்யோ இல்ல இல்ல……”என்று அதிர்ந்து அவன் மறுக்க,துர்கா தன்னை மறந்து சிரித்துவிட்டாள்.
“ஹா ஹா…..கோச்சிக்காதீங்க….என்னால கன்ட்ரோல் பண்ண முடியலை…..”
“போதும்….”என்று முறைத்துக் கொண்டே கூறயவனுக்குமே உள்ளுக்குள் சிரிப்பு தான் கூறிய விதத்தில்.
“ஓகே….அப்ப என்னை உங்களுக்கு பிடிக்கலை….”
“எனக்கு கல்யாணம் பிடிக்கலை….”
“அப்ப என்னை பிடிச்சிருக்கா…..”
“என்ன திரும்பவுமா….”என்று தலையில் கை வைத்துவிட்டான் வீரா.
“ஈஸி வீரா…என்னோட கேள்வி ரொம்ப சிம்பிள்….உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையா….”
“அது….நா….நான்….”என்றவன் பதில் கூற முடியாமல் திணற,
“ஏன் இவ்வளவு யோசிக்கிறீங்க….என்னை பிடிக்கலைனா சொல்லுங்க…..நான் எங்க வீட்டல சொல்லிடுறேன்….மாப்பிள்ளைக்கு என்னை பிடிக்கலைனு…..”என்றுவிட்டு தனக்கு வந்த காபியை பருக,வீராவிற்கு முழிபிதுங்கியது இப்படி இவள் கூறிவிட்டால் கற்பகம் அவனை சும்மா விடமாட்டாரே.இன்று காலை அவன் எழுந்ததுமே சொல்லிவிட்டாரே இந்த தடவை நீ ஏதாவது செஞ்சா என்னை உயிரோட பார்க்க முடியாது என்று.அது வேறு அவனின் நியாபகத்திற்கு இப்போது வர தலையை உலுக்கிக் கொண்டான்.
“என்னாச்சு வீரா…உங்க அம்மா ஏதாவது உங்களை மிரட்டி அனுப்பினாங்களா….”என்று சரியாக கேட்க,
“நீ டீச்சர் தான….”என்று சந்தேகமாக கேட்டான் வீரா.
“ம்ம் நான் டீச்சர் தான்….சும்மா கெஸ் பண்ணேன்….ஆனா அது கரெட்டா இருக்கு போல….ஸோ…நான் நினைச்சது கரெட் தான் இல்ல…..நான் ஒண்ணு கேட்கவா…..”
“என்ன???”
“நீங்க ஏன் கல்யாணமே வேண்டாம்னு சொல்லுறீங்க….சும்மா உங்க பழைய கல்யாண கதை எல்லாம் சொல்லாதீங்க….என்னை பொறுத்தவரை நம்மளை புரிஞ்சிக்காதவங்க நம்மளை விட்டு போறது தான் நல்லது….இல்ல வாழ்க்கை நரகமா மாறிடும்….இரண்டு பேருக்குமே….இது என்னோட கருத்து….”
“…..”
“என்னாச்சு வீரா அமைதியாகிட்டார்…..”
“இல்ல….என்ன தெரியும் என்னை பத்தி….என்னோட முதல் கல்யாணம் முறிஞ்சது எதனால தெரியுமா….”என்றான் கோபமா குரலில்.
“எல்லாம் தெரியும்….அது ஒரு பிரச்சனையே இல்ல வீரா…”
“போதும் எனக்கு எதுவும் கேட்க வேண்டாம்…என்னால யாரும் நோக வேண்டாம்….”என்றவனின் குரல் இப்போது கரகரத்தது.அவனின் அருகில் தண்ணீரை நகற்றி வைத்த துர்கா,
“வீரா நீங்க படிச்சிருக்கீங்க நீங்களே இப்படி உடைஞ்சு போன மாதிரி பேசலாமா….எதையும் எதிர்த்து போராடினா தான் நாம ஜெயிச்சோமா தோர்த்தோமானே தெரியும் இதுல நீங்க போட்டிக்கே வரலை சொன்னா என்ன அர்த்தம்….”
“இது ஒண்ணும் ரேஸ் இல்ல…..”
“இல்லனும் சொல்ல முடியாது….நான் உங்களுக்குள்ள இருக்குற இந்த இருண்ட பக்கத்துலேந்து வெளி வாங்கனு தான் சொல்லுறேன்….”
“ப்ச் அதை விடு எனக்கு இது….இது…..”
“ம்ம் சொல்லுங்க….”
“எல்லாரும் சேர்ந்து என்னை கட்டி போட்டுட்டு பேச சொன்னா….நான் என்ன செய்ய….”
“சாவி உங்க கிட்ட தான் இருக்கு வீரா….திறந்துக்குங்க….சரி நான் விஷயத்துக்கு வரேன்….எனக்கு இந்த கல்யாணதுல சம்மதம்….உங்களுக்கு என்னை பிடிக்கலை…இல்ல என்னோட முந்திய வாழ்க்கை அது….அதனால பிடிக்கலைனாலும் நீங்க வேண்டாம் சொல்லிடுங்க….”என்றுவிட்டு அமர்ந்துவிட,
“எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியலை…..நிஜமா….”என்று தன் மனதில் உள்ளதை வீரா கூற,
“சரி யோசிங்க…ஆனா சீக்கிரம் சொல்லிடுங்க….ஏனா என் வீட்ல கேட்பாங்க நான் பதில் சொல்லனும்….அப்ப கிளம்பலாமா….”என்றுவிட்டு அவள் கிளம்ப தயாராக,ஏதோ அனைத்தும் வேகமாகவும் தன்னை மீறியும் நடப்பது போல இருந்தது வீராவிற்கு அவன் அப்படியே அமர்ந்திருக்க,
“என்ன????” என்றாள் துர்கா,
