Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

57.கார்த்திகா கார்த்திகேயன்-தேவனுக்கேற்ற தேவியோ

அத்தியாயம் 9.1_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்

அத்தியாயம் 9

 

வளையோசையும் இசையாகும்

வார்த்தைகளும் பாடலாகும்



Advertisement

உண்மைக் காதலில்!!!

 

அன்று மாலையில் வாசலில் வந்து இறங்கிய தங்கத்தைப் பார்த்த மஞ்சுவுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

Advertisement

 

Advertisement

“வாங்க மதினி”, என்று ஆவலாக வரவேற்க தங்கத்துக்கே திகைப்பு தான். ஏனென்றால் மஞ்சுவுக்கு அவளை சுத்தமாக பிடிக்காது.

 

தாமோதரன் “வா அக்கா”, என்று வரவேற்றதோடு முடித்துக் கொண்டார். மஞ்சு தான் அவளை விழுந்து விழுந்து கவனித்தாள். அரவிந்த்க்கு என்ன சொல்ல என்றும் தெரிய வில்லை. என்ன நடக்க போகுதோ என்றும் பயமாக இருந்தது. ஏனென்றால் அவனுக்கு நன்கு தெரியும் அவனது அன்னையைப் பற்றி.

Advertisement

 

மஞ்சு திவ்யாவுக்கு ஏற்கனவே தங்கம் வருவதைச் சொல்லி இருந்ததால் ரதி மற்றும் திவ்யா இருவரும் வந்து அவளை “வாங்க அத்தை”, என்று வரவேற்றார்கள்.

 

இருவர் முகமும் இருண்டு போய் இருக்க தங்கம் அவர்களை ஆராய்ச்சியாக பார்த்தாள். இரவு உணவு முடிந்ததும் அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க “உங்க தம்பி உங்க கிட்ட முக்கியமான விஷயம் பேசணுமாம் மதினி”, என்று ஆரம்பித்த மஞ்சு கணவரை கண்ணைக் காட்ட அவரோ எச்சில் விழுங்கினார்.

 

“நான் உன் அக்கா டா. என் கிட்ட என்ன தயக்கம் சொல்லு?”, என்றாள் தங்கம்.

 

“அது.. அது வந்து.., ரதிக்கு கல்யாணம் பண்ணணும்னு இருக்கோம்”, என்று சொல்ல ரதி அதிர்ந்து பார்க்க அவள் கையை இறுக பற்றிக் கொண்டாள் திவ்யா.

 

“அவ என் வீட்டு மருமக டா. வேற எங்கயும் பேசி வச்சிறாத. அரவிந்த்க்கு சின்ன வயசுல இருந்து அவ தான் உயிரு. அவ தான் பொண்டாட்டினு சுத்திக்கிட்டு இருக்கான். சின்னவளை மூத்தவனுக்கு கேக்க தான் ஆசை. ஆனா பாண்டியன் படிக்காம போய்ட்டான்ல? இவ வேற நிறைய படிக்கணும்னு சொல்லிக்கிட்டு கிடக்கா. அவனுக்கு எங்க கொடுப்பா உன் பொண்டாட்டி?”, என்று அரவிந்தின் காதலையும் புட்டு புட்டு வைத்தாள்.

 

அரவிந்தோ மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான். இப்போதா தன் மனது வெளிப்பட வேண்டும் என்று இருந்தது அவனுக்கு.

 

“அரவிந்த்க்கு ரதியை பிடிக்குமா?”, என்று கேட்டாள் மஞ்சு.

 

“பிடிக்குமாவா? அவளுக்காக எத்தனை சேலை வாங்கி வச்சிருக்கான் தெரியுமா? சின்ன பிள்ளைல ஊருக்கு வரும் போது அவ டிரஸ் ஒண்ணு வச்சிட்டு போய்ட்டா. அதை கூட எடுத்து வச்சிருக்கான் இப்ப வரைக்கும்”, என்று சொல்ல நேற்று அரவிந்த் திருமணத்துக்கு கேட்டது கூட அவள் மீதான காதலில் தான் என்று ரதி மற்றும் திவ்யாவுக்கு புரிந்தது. இருவருக்கும் திகைப்பு தான். ஆனால் இதற்காக எல்லாம் ரதியால் அவனை திருமணம் செய்ய முடியாதே.

 

“அப்படின்னா ரதியை அரவிந்த்க்கு கல்யாணம் பண்ணி வச்சிருவோமா?”, என்று ஆர்வமாக கேட்டாள் மஞ்சு.

 

“என்ன அவசரம் மஞ்சு? முதல்ல மூத்தவனுக்கு முடிக்கணும். இவன் ஒரு வேலைக்கு போகணும். அதுக்கு அப்புறம் பாக்கலாமே?”

 

“மூத்தவனுக்கு திவ்யாவையும் அரவிந்த்க்கு ரதியையும் முடிச்சு வச்சிறலாம். அதுவும் ஒரே மேடையில”, என்று மஞ்சு சொல்ல அனைவரும் அதிர்ந்து தான் பார்த்தார்கள். திவ்யாவுக்கோ பேரதிர்ச்சி. ரதிக்கும் தான்.

 

ஆனால் முதல்முறையாக தங்கம் புருவம் உயர்ந்தது. தன்னுடைய தம்பியின் முகமும் மஞ்சுவின் பேச்சும் எதுவோ சரி இல்லை என்ற உணர்வை கொடுக்க “என்ன ஆச்சு மஞ்சு?”, என்று நேரடியாக கேட்டாள் தங்கம்.

 

“எங்களை மன்னிச்சிருங்க மதினி. நாங்க பெத்து வச்சிருக்குற தறுதலையால மோசம் போய்ட்டோம். மூத்தவ நம்மளை அசிங்க படுத்திட்டா மதினி. இப்படி எல்லாம் நடக்கும்னு தெரியாது. இப்ப எங்க மானம் மரியாதை எல்லாம் உங்க கைல தான் இருக்கு”, என்று கண்ணீர் விட்டாள் மஞ்சு.

 

“டேய் தம்பி, என்னடா இது… உன் பொண்டாட்டி பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு இருக்கா. என்ன தான் ஆச்சு? ரதி என்ன பண்ணினா? ஏதாவது காதல் விவகாரமா?”, என்று தங்கம் கேட்க தாமோதரனுக்கு மறுக்கவும் முடியாத, ஏற்கவும் முடியாத நிலை. தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

 

கம்பீரமாகவே வளைய வருபவன், இப்படி தன் முன்னால் யாசகம் கேட்பதை போல இடிந்து அமர்ந்து இருப்பதை பார்க்கவே தங்கத்துக்கு திகைப்பு தான்.

 

“காதல் விவகாரம் தான்னு தான் அக்கா நாங்களும் நினைச்சோம். இப்ப தான் தெரியுது ரதி மாசமா இருக்கான்னு. ஏதாவது உதவி செய் அக்கா. வெளிய தெரிஞ்சா நாங்க நாண்டுகிட்டு தான் சாகனும். நீ மனசு வச்சா கண்டிப்பா முடியும்க்கா. பாண்டியன் கிட்டே பேசிட்டு எனக்கு ஒரு நல்ல முடிவா சொல்லு”, என்று சொன்னவர், தான் வந்த வேலை முடிந்தது என அப்பொழுதே அறைக்குள் சென்று விட்டார்.

 

“மதினி நம்ம எல்லாரும் ஒரே குடும்பம் தானே? கொஞ்சம் உதவி செய்யுங்க. நான் உங்களுக்கு பால் எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் மஞ்சு.

 

தங்கம் அதிர்ந்து ரதியை ஒரு மாதிரி அவமதிப்போடு பார்க்க அதைக் கண்ட திவ்யா “நீ வா அக்கா உள்ள போகலாம்”, என்று அழைத்துச் சென்று விட்டாள்.

 

அரவிந்த் தான் அன்னையை பார்த்த படி இருந்தான்,. “என்ன டா இது? கேடு கெட்ட குடும்பமா இருக்கு”, என்று கேட்டாள் தங்கம்.

 

“வாயை மூடு மா. யாருக்காவது கேட்டுற போகுது. ரதி நல்ல பொண்ணு மா. ஏதோ காதல்ன்னு ஏமாந்துட்டா. அவன் வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்டான்”

 

“எவன் பிள்ளையையோ வயித்துல வச்சிருக்குறவ நல்ல பொண்ணா? இவளுக்கு நீ வாழ்க்கை வேற கொடுக்க போறியா? அசிங்கமா இல்லையா டா?”

 

“எனக்கு அவன்னா உயிர் மா. அவளுக்கு நடந்தது ஒரு விபத்து. எனக்கு இது பெருசா தெரியலை”, என்று சொல்ல தங்கம் மனது அந்த வீட்டை பார்வையால் அளந்தது.

 

“சரி போ, நான் யோசிக்கிறேன்”, என்று சொன்ன தங்கம் அன்றைய இரவில் அவளுக்கு கொடுக்க பட்ட அறையில் யோசனையில் இருந்தாள். எவ்வளவு யோசித்தும் முடிவு எடுக்க முடியாமல் பாண்டியனுக்கு அழைத்து விட்டாள்.

 

“சொல்லு மா, என்ன உன் தொம்பி கூப்பிட்டான்னு போன? போனதும் துரத்தி விட்டுட்டானா?”

 

“அதான் இல்லை டா. இங்க நிலைமையே வேற”, என்று சொன்னவள் நடந்த அனைத்தையும் சொல்ல அவனுக்கும் அதிர்ச்சி தான்.

 

“என்ன மா சொல்ற? ஊமை மாதிரி இருந்தவ இப்படி ஒரு வேலை பாத்துருக்காளா? இங்க பாரு தம்பி பாசம்ன்னு சொல்லி எவன் பிள்ளைக்கோ என்னை இனிஷியல் கொடுக்க வச்ச அம்மான்னு கூட பாக்க மாட்டேன்”, என்றான்.

 

“அது இல்லை டா. உனக்கு திவ்யாவை தறேன்னு சொல்றாங்க”

 

“அவ என்ன தப்பு பண்ணி வச்சாளோ?”

 

“அதெல்லாம் இல்லை. மூத்தவ மாதிரி இளையவளும் ஆகிற கூடாதுன்னு அவங்களுக்கு பயம்? அதான் உடனே கல்யாணம் பண்ணணும்னு யோசிக்கிறாங்க”

 

“இப்ப நீ என்ன தான் சொல்ல வர?”

 

“உன் தம்பியும் ரதி தான் வேணும்னு சொல்றான். பேசாம உனக்கு திவ்யாவை முடிச்சிட்டா சொத்து நம்ம வசம் தான். வீடு கோடிக் கணக்குல போகும் டா. நகை வேற ரெண்டுக்கும் சேத்து வச்சிருக்கான்”

 

“கல்யாணம் முடிக்கலாம்னு சொல்லுறியா?”

 

“எத்தனை நாள் தான் ஊதாரியா சுத்திக்கிட்டு இருப்ப? நான் பேசி முடிச்சிறவா?”

 

“கொஞ்சம் கலர் கம்மின்னாலும் அவ நல்லா தான் இருப்பா. சரி பேசி முடிச்சிரு”, என்று சொல்லி போனை வைத்தான்.

 

அடுத்த நாள் தாமோதரன் மஞ்சு இருவரும் தங்கத்தை ஏதோ தெய்வம் வரம் கொடுப்பது போல பார்க்க கெத்தாக அவர்களை பார்த்தவள் “நானும் நல்லா யோசிச்சேன் டா தம்பி என்ன இருந்தாலும் இது நம்ம குடும்பம். பிரச்சனை வெளிய தெரிஞ்சா நமக்கு தானே அசிங்கம்? பாண்டியன் திவ்யாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டான். ஆனா ரதி அரவிந்த் கல்யாணம் நடக்கணும்னா அந்த குழந்தையை மட்டும் அழிக்க சொல்லிரு டா. என்ன இருந்தாலும் நம்ம பிள்ளைங்க சந்தோஷமா இருக்கணும்னா அந்த குழந்தை வரக் கூடாது. நான் உன் அக்கா தான். ஆனா எதார்த்தம்னு ஒண்ணு இருக்குல்ல?”, என்று கேட்டாள்.

 

“நீ சம்மதம்னு சொன்னதே போதும்கா. கண்டிப்பா நாங்க ரதியை சம்மதிக்க வைக்கிறோம்”, என்று சொன்னவர்கள் ரதி மற்றும் திவ்யாவிடம் விஷயத்தை சொல்ல திவ்யாவோ படிப்பு இனி அவ்வளவு தான் என்று அதிர்ந்து போனாள். டிகிரி முடிக்க கூட இன்னும் இரண்டு வருடம் இருக்க என்ன பண்ணவாம்? தனக்கு திருமணமா என்று அவள் மனம் அதிலே நிற்க ரதியோ முடியவே முடியாது என்று சொல்லி மஞ்சுவிடம் பல அடிகள் வாங்கினாள்.

 

“மஞ்சு அவ வயித்து பிள்ளை காரி, அவளை போய் இந்த அடி அடிக்கிற?”, என்று தாமோதரன் தடுக்க அரவிந்தும் “அத்தை உனக்கு என்ன பைத்தியமா?”, என்று கேட்டான்.

 

“நான் உயிரோட இருக்குறது பிரச்சனைனா சொல்லுங்க. ஒண்ணு செத்து போறேன். இல்லைன்னா எங்கயாவது போயிறேன். ஆனா என்னால அர்வியை கல்யாணம் பண்ண முடியாது. அவனுக்கு வேற நல்ல பொண்ணு கிடைக்கும். என் பிள்ளையையும் என்னால கலைக்க முடியாது”, என்று தெளிவாக சொல்லி விட்டாள் ரதி.

 

“அப்படின்னா என்னால இதுல எதுவும் செய்ய முடியாது. வேணும்னா திவ்யா கல்யாணத்தை வச்சிக்கலாம்”, என்றாள் தங்கம். உடனே சம்மதம் என்று சொன்னாள் மஞ்சு.

 

“அம்மா வேண்டாம் மா, அவ படிக்கணும்னு ஆசை பட்டா. தயவு செஞ்சு அவளை விடுங்க. அவ படிக்கட்டும். நான் தான் பாவி. என்னோட பாவம் என்னோட போகட்டும். அவளை கல்யாணம்னு கஷ்ட படுத்தாதீங்க”, என்று அன்னையின் காலில் விழுந்து வணங்கினாள் ரதி.

 

அவளை உதறி தள்ளிய மஞ்சு “உன் விஷயத்துல நீ தெளிவா இருக்க தானே? அவ விஷயத்தை நாங்க பாத்துக்குவோம்? நீ வயித்த தள்ளிட்டு தான் இருக்க போற. அதைப் பாத்து என்ன எல்லாம் அசிங்கப் பட போறோமோ தெரியலை? அதனால அவ கல்யாணம் உறுதி. அவளாவது எங்களுக்கு மரியாதையை தேடி தரட்டும்”, என்று சொல்ல தங்கையை வேதனையாக பார்த்தாள் ரதி. திவ்யாவின் கண்களில் இருந்த உயிர்ப்பு அப்படியே மறித்து போனது போல இருந்தது.

 

ரதிக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது. தன்னால் தன்னுடைய நடத்தையால் தங்கையின் வாழ்க்கை கனவு லட்சியம் அனைத்தும் வீணாக போனதை அவளால் ஜீரணிக்கவே முடிய வில்லை.

 

“அப்பா திவி பாவம் பா”, என்று ரதி எவ்வளவோ பேசிப் பார்த்தும் தாமோதரனும் கையை விரித்து விட்டார்.

 

திவ்யா அமைதியாக இருக்க “இங்க பாரு திவ்யா, ஒருத்தி குடும்ப மானத்தை வாங்கிட்டா. கண்டிப்பா அக்கம் பக்கத்துல சொந்தக்காரங்க எல்லாருக்கும் தெரிஞ்சிரும் இந்த விஷயம். அடுத்து நீயும் எவன் கூடயாவது ஓடிப் போறதா இருந்தா எனக்கு விஷத்தை வாங்கி கொடுத்துட்டு போயிரு. இல்லை எங்களை மதிச்சா பாண்டியனை கல்யாணம் பண்ணிக்கோ”, என்று மஞ்சு சொல்ல அடுத்து திவ்யா எதுவும் பேச வில்லை.

 

அவளது கனவு முழுவதும் அழிந்து போன வலி அவளை அவ்வளவு பாதித்தது என்றால் சாணக்கியன் நினைவும் அவளை வாட்டி வதக்கி விட்டுச் சென்றது.

 

“என்னை மன்னிச்சிரு திவி. நான் செஞ்ச பாவம் உன்னை மொத்தமா காவு வாங்கும்னு நான் நினைக்கவே இல்லை”, என்று ரதி கை கூப்ப அவளை இறுக அணைத்துக் கொண்டாள் திவ்யா. விதி இப்படி இருக்க ரதியை குறை சொல்லி என்ன ஆகப் போகுதாம்? நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டாள்.

 

பாண்டியன் திவ்யா திருமணம் நடந்து முடிந்திருந்தது. திருமணத்துக்கு ரதி செல்லக் கூட இல்லை. மஞ்சு அவளை வரக் கூடாது என்று சொல்லி விட்டாள்.

 

திவ்யா அமைதியாகி போனாள். அவளிடம் இருந்த கலகலப்பு அனைத்துமே அவளை விட்டுச் சென்றிருந்தது. விதி தனக்கு கொடுத்தது இந்த வாழ்க்கை தான் என்று எண்ணி அன்றைய இரவில் பாண்டியனை கணவனாக ஏற்றுக் கொள்ள அவளே அவள் மனதை தயார் படுத்திக் கொண்டாள்.

 

ஆனால் அன்றைய இரவில் அவளை அணுகியவனோ வார்த்தைகளால் மட்டும் அல்லாமல் செயலாலும் அவளை காயப் படுத்தி அவள் கண்ணீரில் குளிர் காய்ந்தான். வலி வலி வலி மட்டுமே.

 

“உன் அக்கா மாதிரி நீயும் எவன் கூடவாது பழகி சீரழிஞ்சிருப்பேன்னு தான் நினைச்சேன். ஆனா அப்படி இல்லை. புதுசா தான் இருக்க”, என்ற அவனுடைய முதல் வார்த்தையிலே திவ்யா என்ற சிறு பெண்ணின் உணர்வுகள் அனைத்தும் மறித்து தான் போனது.

 

தனக்கு கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள அவள் ஒவ்வொரு நாளும் முயல அவளுக்கு கிடைத்ததோ நரக வாழ்க்கை மட்டுமே.

 

ஆசைப் பட்ட படிப்புக்கு முதல் வருடத்திலே முடிவு தெரிந்து போனது. பிறந்த வீட்டுக்கு செல்லும் அனுமதி அவளுக்கு மறுக்கப் பட்டது. வீட்டிலும் ஜூஸ் கடையிலும் வேலைக்காரி போல இருந்தாள்.

 

பாண்டியன் ஒரு பக்கம் வாட்டினான் என்றால் தங்கம் ஒரு பக்கம் பேசியே கொடுமை செய்தாள். அவளுக்கு போட்ட நகை எல்லாம் தங்கம் வசம் சென்றது. அதையும் அம்மாவும் மகனும் அடகு வைத்து வட்டிக்கு விட்டு என்று ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு நாள் இரவும் மூக்கு முட்ட குடித்து விட்டு அவளை நெருங்கும் போது குடலை பிரட்டிக் கொண்டு வரும். சகித்து வாழ பழகிக் கொண்டாள். உடலும் மனமும் இறுகிப் போனது.

 

இவளுக்கு ஒரு பக்கம் என்றால் குழந்தை வளர வளர ரதியை பற்றி அதிகம் தவறாக பேசினார்கள். அந்த பேச்சு தாமோதரன் மற்றும் மஞ்சுவையும் அதிகம் பாதித்தது. அவர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதனால் திருநெல்வேலிக்கு சென்று வாடகை வீட்டுக்கு குடி பெயர்ந்தார்கள்.

 

அக்கம் பக்கத்தில் ரதியின் கணவன் வெளிநாட்டில் இருக்கிறான் என்று சொல்லிப் பார்த்தாலும் சில பேர் அவளைத் தவறாக தான் பார்த்தார்கள். லைப்ரேரியில் அலுவலகத்தில் ஏசியில் அமர்ந்து வேலை பார்த்த தாமோதரன் இப்போது மகளுக்காக பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தார். எல்லா கடுப்பையும் சேர்த்து மஞ்சு ரதியிடம் தான் காட்டுவாள்.

 

என்ன தான் மகள் மாசமாக இருக்கிறாள் என்ற எண்ணம் இருந்தாலும் ரதியை பார்க்கும் போதெல்லாம் மஞ்சுவுக்கு எரிச்சல் மட்டுமே வரும். மகள் என்ற பாசம் எல்லாம் எப்போதோ தூரப் போனது.

 

அதுவும் திவ்யா படும் துயரம், கணவன் பார்க்கும் வேலை, அதிக வாடகை, ஆனாலும் எந்த வசதியும் இல்லாத வீடு என எல்லா கடுப்பும் ரதியின் மீது தான் கோபமாக பாயும்.

 

ஆதரவாக இருக்க வேண்டிய அன்னையும் கரித்துக் கொட்ட தன்னால் தங்கை வாழ்வும் பாழகிப் போன குற்ற உணர்வும் குழந்தையால் உண்டாகும் உடல் சோர்வும், தன்னவனின் தேடலும் என அரை உயிராக தான் இருந்தாள் ரதி.

 

நான்கு ஊர் தள்ளி தான் திவ்யா இருக்கிறாள் என்றாலும் அவளை பார்க்க கூட முடியாமல் போனது. பாண்டியன் அதற்கு விட வில்லை.

 

திருமணம் முடிந்த புதிதில் மஞ்சு மற்றும் தாமோதரன் மகளைப் பார்க்க போன போது கூட தங்கம் அவர்களை அவளுடன் சரியாக பேச விட வில்லை. அதுவும் திவ்யா தந்தையை வாங்க என்றாவது சொன்னாள். தாயை அது கூட சொல்ல வில்லை. அதனால் பெற்றவர்களும் அங்கே செல்ல மாட்டார்கள்.

 

மகள் படும் துயரம் தெரிந்து ஒரு நாள் தாமோதரன் மற்றும் மஞ்சு இருவரும் சேர்ந்து வந்து தங்கம் மற்றும் பாண்டியனிடம் மகளுக்காக பரிந்து பேச “எதுவும் பேசாம போனீங்கன்னா அவ இங்க வாழ்வா, இல்லைன்னா அவளை உங்க கூடவே கூட்டிட்டு போங்க”, என்று பாண்டியன் பேச அமைதியாக திரும்பி விட்டார்கள்.

 

ஒரு மகள் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற பயத்தில் இருக்க இவளும் வாழாவெட்டியாக வருவதற்கு எந்த பெற்றவர்கள் தான் விரும்புவார்கள்? திவ்யாவும் கிடைத்த வாழ்வையும் கஷ்டத்தையும் பழகிக் கொண்டாள்.

 

ஒரு நாள் திவ்யாவின் படிப்புக்காக அரவிந்த் வீட்டில் பேச அவன் முன்னிலையில் பாண்டியன் எதுவும் சொல்ல வில்லை என்றாலும் அவர்களுக்கான தனியறையில் “என்ன டி என் தம்பிக்கு உன் மேல ரொம்ப அக்கறை போல? தனியா எதுவும் கவனிக்கிறியா? எனக்கு தெரியாம?”, என்று தவறாக பாண்டியன் பேச அடுத்த நாளே அரவிந்திடம் “எனக்கு நல்லது செய்யணும்னு நினைச்சா என் கிட்ட பேசாத, என்னை பத்தி யோசிக்காத மாமா”, என்று மட்டும் சொல்லி விட்டு விலகிக் கொண்டாள்.

 

பாண்டியனும் தங்கமும் தான் டார்ச்சல் என்று பார்த்தால் பாண்டியனின் நண்பர்கள் வேறு அவளைப் பாடாய் படுத்த வாழும் வாழ்க்கையே திவ்யாவுக்கு வெறுத்துப் போனது.

 

திருமணம் முடிந்து முதல் மாதம் திவ்யாவுக்கு குழந்தை தங்க வில்லை என்று தங்கம் அவளை திட்ட அதே நேரம் முதல் ஸ்கேன்க்காக சென்ற ரதியின் வயிற்றில் மூன்று குழந்தைகள் வளர்வது தெரிந்தது.

 

சந்தோஷப் படவா அழவா என்று கூட அவளுக்கு தெரிய வில்லை. அவளுக்கு துணைக்கு சென்றது அரவிந்த் தான். அவன் தான் அவளுக்கு பக்க பலமாக இருந்தான்.

 

அவளுக்காக தான் சென்னையில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு திருநெல்வேலியில் வேலை பார்த்துக் கொண்டே அரசு பணிக்கு படித்துக் கொண்டிருந்தான்.

 

அவன் மட்டும் இல்லையென்றால் ரதி என்ன ஆகி இருப்பாளோ? அதனால் அவ்வளவு நன்றி உணர்வு அவளுக்கு அவன் மேல் உண்டு.

 

இங்கே இப்படி என்றால் இத்தனை பேரின் வாழ்வு தவறான திசையில் பயணிக்க காரணமாக இருந்த தருமரோ எலக்ஷனில் சீட் கிடைத்த கொண்டாட்டத்தில் இருந்தார்.

 

மகன் வாழ்க்கை பாழாகி ஒரு பெண்ணின் வாழ்வு என்ன ஆனதோ என்ற கவலை கூட இல்லாமல் அவர் பிரச்சாரம் மக்கள் சந்திப்பு என்று பிஸியாக இருந்தார்.

 

அன்று சகுந்தலா கோர்ட்க்கு சென்று விட சாணக்கியன் ஒரு தொகுதிக்கு பணம் பட்டுவாடா செய்ய சென்று விட ஸ்னேகாவுக்கு வயிறு வலிக்க ஆரம்பித்தது.

 

பிரசவத்துக்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால் தான் அனைவரும் சாதாரணமாக இருந்தார்கள். அவளது அன்னை தந்தை வேறு டெல்லி சென்று விட்டார்கள். தங்கையும் பெங்களூர் ஹாஸ்டலில் படிக்கிறாள் என்பதால் தான் அவள் கணவன் வீட்டில் இருந்தாள்.

 

இன்று பார்த்து வயிறு வலிக்க துவங்க கணவனுக்கு அழைக்க போகும் போது வீட்டுக்கு வந்த தருமர் “அம்மாடி என்ன மா ஆச்சு?”, எ ன்று பதறினார்.

 

“எதுக்குன்னு தெரியலை வயிறு வலிக்குது மாமா”, என்று சொல்ல “வா மா ஆஸ்பத்திரிக்கு போகலாம்”, என்று சொன்னவர் அவளை அழைத்துச் கொண்டு சென்றார். டிரைவர் தான் காரை ஓட்டினார்.

 

தருமர் எலக்ஷனில் ஜெயிக்க கூடாது என்று எண்ணிய எதிரிகள் லாரி வைத்து அவர் காரை மோத டிரைவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.

 

டிரைவருக்கு பின்னால் இருந்த ஸ்னேகாவுக்கும் சரியான அடி. தருமர் அந்த பக்கம் இருந்ததால் லேசாக கையில் மட்டும் அடி. ஏற்கனவே வலியில் இருந்த ஸ்னேகாவுக்கு வலி இன்னும் அதிகரிக்க துடித்துப் போனாள். மருமகள் கதறல் காதில் விழ அவரே டிரைவரை நகட்டி வைத்து விட்டு மருத்துவமனைக்கு காரை ஓட்டிச் சென்றார்.

 

அங்கே சென்றதும் சாணக்கியனுகக்கு மட்டும் தகவல் சொல்லி விட்டு ஸ்னேகாவுக்கு என்ன ஆனதோ என்ற பதைப்பில் இருக்க சாணக்கியன் மற்றும் சகுந்தலா இருவரும் வந்து விட்டார்கள்.

 

ஆனால் அவர்களை வரவேற்றது குழந்தை அம்மா இருவரையும் காப்பாற்ற முடிய வில்லை என்ற துக்க செய்தி தான். அனைவரும் இடி விழுந்தது போல துடித்து தான் போனார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!