Skip to content
Post Views: 79
ரிதம் 12
மகாலட்சுமி மியூசிக் அகாடமி என்ற பெரிய பதாகையைப் பார்த்துக்கொண்டே வாகனத்தில் இருந்து இறங்கினாள் நத்தாஷா.
Advertisement
“அம்மா பெயரிலேயே தொடங்கி இருக்காரு?? அம்மா மேல ரொம்ப பாசம் போல?” என்றபடி வாகனத்தில் இருந்து இறங்கினாள் ப்ரீத்தி.
“சரி நான் ஆஃபீஸ்க்கு கிளம்பட்டுமா? நீங்க ரெண்டு பேரும் முடிச்சிட்டு கால் டாக்ஸில போய்க்குறீங்களா?” என்று கேட்டான் ரமேஷ்.
Advertisement
Advertisement
“ரெண்டு பேர் இருக்கோம் இல்லையா?? நாங்க பாத்துக்கிறோம்” என்றாள் ப்ரீத்தி.
“எந்தப் பிரச்சினைனாலும் உடனே எனக்கு கால் பண்ணுங்க. தெரியாத இடங்களுக்கு போக வேண்டாம். ஒருவேளை ப்ராக்டீஸ் முடிய ஈவினிங்காச்சுனா சொல்லுங்க. நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்” என்று ஆயிரம் பத்திரங்களையும், அறிவுரைகளையும் கூறிக் கொண்டிருந்தான் ரமேஷ்.
Advertisement
அவளும் அந்த இடத்திற்கு புதியவள் அல்லவா?? ஆனால் அதற்காக எல்லா நாட்களிலும் அவர்களுடனே அவனால் சுற்றித் திரிய முடியாது. ஏற்கனவே மதுரை சென்று அழைத்து வந்தது, வீட்டில் எல்லாவற்றையும் செட்டில் செய்தது, கௌதம் வீட்டுக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியது என்று நிறைய நாள் விடுமுறை எடுத்திருந்தான்.
‘இனி நாங்களே பார்த்துக் கொள்கிறோம்’ என்று தோழிகள் இருவரும் கூறினர். அவனும் இருவர் இருப்பதனால், சம்மதம் கூறினான்.
“பஸ்சுக்கு எல்லாம் வெயிட் பண்ண வேண்டாம். ஆட்டோவும் வேண்டாம். கேப் பிடிச்சு வந்துருங்க. காலையில நானே டிராப் பண்ணிடுறேன். வேற எதுவாயிருந்தாலும் எனக்கு உடனே கால் பண்ணுங்க. இல்ல, எப்படி போகணும்? என்ன ஏதுன்னு தெரியலனாலும் என்கிட்ட சொல்லுங்க. நான் எல்லாத்தையும் அரேஞ்ச் பண்றேன்” என்று கூறினான்.
அவர்கள் இருவரும் சம்மதமாகத் தலையாட்டினார்கள்.
“நல்லா பண்ணு நத்தாஷா. கண்டிப்பா உன்னோட டேலண்டுக்கு நீ சீக்கிரமா பிக்கப் பண்ணிடுவ” என்று வாழ்த்தினான் ரமேஷ்.
“என்னால உங்க எல்லாருக்கும் சிரமம்ல?” என்று நத்தாஷா கேட்க,
“அடிச்சேனா பாரு? தேவையில்லாத பேச்செல்லாம் பேசாத. வா உள்ள போகலாம்” என்றவள்,
தன் கணவனின் புறம் திரும்பினாள். ‘டாட்டா பைபை’ சொல்லி அவனை அனுப்பி வைத்தாள் ப்ரீத்தி.
அவர்களின் காதலை, புரிதலைப் பார்க்கும்போது நத்தாஷா இதழ்களில் மெல்லிய புன்னகை. பெற்றோர்களாக ஏற்பாடு செய்த திருமணம் தான் அவர்களுடையது. இருந்தாலும் இந்தச் சொற்ப நாட்களில் அவர்களுக்குள் அத்தனை அன்னியோன்யத்தை பார்க்க முடிந்தது. தன் தோழிக்காக அவள் மிகுந்த சந்தோஷம் அடைந்தாள்.
தன் வாழ்க்கை தான் இப்படிச் சீரழிந்து விட்டது. தன்னோடு இருந்ததனால், தன் துரதிர்ஷ்டம் அவளுக்கு வராமல் பார்த்துக் கொண்ட கடவுளுக்கு ஆயிரம் நன்றிகளைக் கூறினாள் நத்தாஷா.
அவள் கணவன் அவளுக்கு நல்ல கணவனாக மட்டும் இல்லாமல், தனக்கும் ஒரு தமையனாக மாறி இருப்பது அவளுக்கும் பெருத்த நிம்மதியைக் கொடுத்தது.
கணவனை வழியனுப்பி வைத்துவிட்டு, உள்ளே அழைத்துச் சென்றாள் ப்ரீத்தி.
ரிசப்ஷனிஸ்ட் அவர்களைப் பார்த்து என்னவென்று கேட்டாள். அவர்களும் விஷயத்தைக் கூறினர்.
“சார் இன்னும் வரல, இங்கே வெயிட் பண்ணுங்க” என்று கூறினாள்.
அவர்கள் சற்று முன்னதாகவே வந்துவிட்டது தெரிந்தது. லாபியில் அமைந்திருந்த சோபாவில் அமர்ந்து கொண்டார்கள். அந்த இடத்தைப் பார்வையால் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் ஸ்ரீதர் அவர்களுடன் இருந்த இன்னும் சில பாடகர்கள் வருவது தெரிந்தது.
இவளைப் பார்த்ததும் சினேகமாகப் புன்னகைத்து, கையை ஆட்டியபடி அவர்களை நோக்கி நடந்து வந்தவர்கள், சகஜமாக அவளிடம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
“சார் சொன்னாரு நீங்க வருவீங்கன்னு. அப்புறம் நத்தாஷா இவங்க யாருன்னு தெரியுதுல்ல? லாஸ்ட் இயர் சேம்பியன்ஷிப் ஜெஸ்ட்ல மிஸ் பண்ணவங்க. பேரு ஹேமந்த்” என்று ஸ்ரீதர் இன்னொரு பாடகனை அறிமுகப்படுத்தி வைத்தான்.
“ஹாய், நான் உங்களோட பாட்டுக்கள் எல்லாம் பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. நீங்க தான் பிரைஸ் வாங்குவீங்கன்னு நினைச்சேன். ஆனா என்னை மாதிரியே ஏமாத்திட்டாங்க” என்று நத்தாஷா கூற,
“நானும் உங்களோட ப்ரோக்ராம் பார்த்திருக்கேன் மேடம்” என்று கூறினான் ஹேமந்த்.
“இன்னைக்கு எல்லாருக்குமே ரிகர்சல் இருக்கா?” என்று கேட்டாள் நத்தாஷா.
“இல்லல்ல, கெளதம் சாரை இன்னைக்கு தனியார் சேனலிலிருந்து பேட்டி எடுக்க வராங்க. நாங்களும் அவர் கூடவே இருக்கணும்னு அவர் கூப்பிட்டார். அதனால வந்திருக்கோம்” என்றான் ஸ்ரீதர்.
புரியாமல் விழித்தாள் நத்தாஷா. அவர்களுக்கு வேலை இருக்கிறது என்றால், தனக்கு ரிகர்சல் இருக்காதா? பிறகு எதற்கு தன்னை வரவைத்தார்கள்? என்ற சிந்தனை அவளுக்குள்.
“அவரோட மியூசிக்ல வந்த பாடல்கள் சமீப காலமா நிறைய ஹிட்டாயிடுச்சு. சிறந்த இசையமைப்பாளர் விருதும் இந்த வருடம் இவருக்கு தான் கிடைச்சிருக்கு. சிறந்த பாடகில நான் நாமினேட் ஆகி இருக்கேன். அதுதான் இன்னைக்கு பேட்டி எடுக்க வராங்க” என்று சிரித்துக் கொண்டே கூறினாள் லீலா.
“உண்மையிலேயே இது ரொம்ப நல்ல விஷயம். வாழ்த்துக்கள்” என்று கைகளைக் கொடுத்தாள் நத்தாஷா.
உண்மையில் இவர்களை எல்லாம் ஒன்றிணைத்து, பாட வைத்து, பெருமையைத் தேடிக் கொடுத்து பரிசையும் வாங்கி கொடுத்திருக்கிறான். தனி மனிதனாக அவனுடைய செயல் பிரம்மிப்பை ஏற்படுத்தியது நத்தாஷாவிற்கு
சற்று நேரத்தில் அவர்களையெல்லாம் ஒரு மீட்டிங் ஹாலுக்கு வரச் சொன்னவன், அவனும் வந்து சேர்ந்தான்.
எல்லோரையும் பார்த்துவிட்டு அவன் பார்வை நத்தாஷாவிடம் வந்து முடிந்தது. அவளை நோக்கி வந்தான். “இன்னைக்கு இங்க பேட்டி இருக்குனு சொல்லி இருந்தா, நீ எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு தெரியல? அதனால தான் சொல்லல. வீட்ல ரிகர்சல் கொடுக்கலாம்னு சொன்னதுக்கு வேணாம்னு சொல்லிட்ட. சேனல் பேட்டிக்கு வருவியானு தெரியல? ஆனா பரவால்ல, ட்ரெஸ்ஸிங் நல்லாவே இருக்கு” என்று அளவெடுக்கும் பார்வையோடு கூறினான் கௌதம்.
அடம்பிடித்து அந்தப் புடவையை அணிய வைத்த ப்ரீத்தியைத் திரும்பி பார்த்தாள். அவள் பற்கள் தெரியாமல் இளித்து வைக்க, அவளை ஒன்றும் செய்ய முடியாமல் அமைதி காத்தாள் நத்தாஷா.
அதன் பிறகு சாதாரண பேச்சுக்கள் நீண்டு கொண்டே செல்ல, பதினோரு மணி போல பேட்டி எடுப்பதற்காகச் சேனலை சேர்ந்தவர்களும் வந்தார்கள். நத்தாஷா சற்று ஒதுங்கிச் செல்லப் பார்த்தாள். அவள் தான் இதுவரையில் எந்தப் பாடலையும் பாடவில்லையே?? அதனால் இந்த பேட்டிக்குத் தகுதி இல்லாதவளாக நினைத்தாள்.
ஆனால் கௌதம் ஸ்ரீதரிடம் கூறி அவளையும் அழைத்துக் கொண்டு வரச் சொன்னான். அவள் தயக்கத்தோடு வந்து நிற்க, கேமராமேனின் கோணத்திற்கு இணங்க, குட்டை நெட்டை என்று வரிசையாக அவர்களே நிற்க வைத்தனர்.
அவர்களின் இழுப்புக்கு நத்தாஷாவும் இழுக்கப்பட்டு கௌதமின் அருகில் நிற்கவைக்கப்பட்டாள்.
அவள் திகைத்து விழிப்பதற்குள்,
“எல்லாரும் அப்படியே உட்காருங்க. லைட்ஸ் ஆன், எல்லாரும் கேமராவை போக்கஸ் பண்ணுங்க” என்ற குரலில் அவள் அமைதியானாள். இதுவரை எந்தப் பாடலையும் பாடாதவளுக்கு அவன் அருகில் இடமா?? அதுவும் தொலைக்காட்சி சேனலுக்கு. இதை மற்றவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லையே?? எப்பொழுதும் போல அவள் மனம் குழம்ப ஆரம்பித்தது.
“வணக்கம் கௌதம் சார். உங்களைப் பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். எங்களுக்கு பேட்டி கொடுக்க சம்மதித்ததற்கு முதல்ல நாங்க நன்றியை தெரிவிச்சிக்கிறோம். உங்களைப் பேட்டி எடுக்க வரும்போது, உங்க ட்ரூப் மெம்பர்ஸையும் உங்க கூடவே உட்கார வச்சிருக்கீங்க. இதுவரைக்கும் யாரும் இப்படி பண்ணதில்லை. அதேபோல, இதுவரைக்கும் யாரும் ஒரு தனி ட்ரூபை அமைச்சதில்லை. ரஹ்மான் சார் அமைச்சிருந்தாரு. ஆனா அவர் பாடலுக்கேற்ப மற்ற பாடகர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பாரு. பட் நீங்க உங்க ட்ரூப்பை சேர்ந்தவங்களுக்கு மட்டும் தான் உங்களோட மியூசிக்லையும் ஆல்பத்துலயும் வாய்ப்பு கொடுக்குறீங்க. உண்மையிலேயே நீங்க கிரேட் தான்” என்று பேட்டி எடுக்க வந்தவர் அவனுக்குப் புகழாரம் சூட்டினார்.
“இது தானா சேர்ந்த கூட்டம் தான். இங்க இருக்க ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி டேலண்ட் இருக்கு. அந்த டேலண்ட்டை நான் வெளிக்கொண்டு வரேன் அவ்வளவுதான்” என்றான்.
“உங்களுடைய சிம்பிளிசிட்டி தான் உங்களுடைய இந்த இமாலய வளர்ச்சிக்கு காரணமா??” என்று நிருபர் கேள்வி எழுப்பினார்.
“கண்டிப்பா இது மட்டும் காரணம் இல்லை. நான் ஒரு பாடகனா வெற்றி அடைஞ்சிருக்கேனா, அதுல என்னோட உழைப்பு இருக்குன்னு சொல்லலாம். என்னோட வெற்றிக்கு என்னுடைய குணாதிசயங்கள் கூட காரணமா இருக்கலாம். ஆனா ஒரு மியூசிக் டைரக்டரா நான் வெற்றி அடைஞ்சிருக்கேனா, அதுக்கு என்னோட ஹோல் ட்ரூப் மெம்பர்ஸும் காரணம். ஒவ்வொரு மியூசிஷியனும், சிங்கர்ஸும், பாடல் ஆசிரியர்களும்னு ஒரு டீம் ஒர்க் தான் இது. அது கூட என்னுடைய பொட்டன்ஷியலையும் போட்டிருக்கேன். சோ இந்த கிரெடிட்டை நான் என்னோட டீமுக்கும் சேர்த்துப் பகிர்ந்து கொடுக்க நினைக்கிறேன்” என்று இரு கைகளையும் விரித்து அவனுக்குப் பின்னால் இருந்த அனைவரையும் காட்டினான். கிட்டத்தட்ட ஐம்பது பேர்களுக்கு மேலே இருந்தனர்.
முதலில் அவனுக்குப் பின்னால் பாடகர்கள், அதற்குப் பின்னால் பாடல் ஆசிரியர்கள் என்று நின்றிருக்க, அதற்கும் பின்னால் மியூசிக் வாசிப்பவர்களும் சுற்றி நின்றிருந்தனர்.
“யு ஆர் ரியலி கிரேட். உங்களுக்கு கிடைத்த புகழை, உங்க ட்ரூப் மெம்பர்ஸோட பகிர்ந்துக்கிறீங்க. எந்தப் பாடல் யாருக்கு பொருந்தும்னு எப்படி செலக்ட் பண்றீங்க??” என்று கேட்க,
“ஒரு பாடகரால இது மட்டும்தான் பாட முடியும்னு கிடையாது. அப்படி இருந்தும் சிலருக்கு சில ஸ்டைல் இருக்கும். அவங்களை அந்தப் பாடல் தூக்கி விடும். அப்படிப்பட்டவர்களுக்கு அதே விதமான ராகத்தைக் கொடுப்பாங்க. பட் நான் அந்த ட்ரெண்டையும் மாத்த நினைக்கிறேன். எல்லாராலும் எல்லாப் பாடலையும் பாட முடியும். அதுதான் மேடைல எங்க குரூப் பண்றாங்க” என்றான்.
“நல்ல ஆன்சர். அண்ட் அதுல நீங்க வெற்றியும் அடைஞ்சுருக்கீங்க. மென்மையான குரல்ல பாடுபவங்களையும், ஹை பிச்சுல பாட வச்சிருக்கீங்க. பிளே பேக் சிங்கர் ஓகே. எதுக்கு ஃபுல் மியூசிக் குரூப்பையும் உட்கார வச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டார்.
“இவங்க எல்லாம் என்னோட மியூசிக் குரூப்பை சேர்ந்தவங்க. நான் இதை ஆரம்பிச்ச காலத்துல இருந்து என் கூட துணையா இருக்குறவங்க. இந்தப் பெரிய சினிமா உலகத்துல நான் வெற்றி அடைவேனா மாட்டேனானு சந்தேகம் இல்லாம எனக்கு உறுதுணையா இருந்தவங்க. என்னோட ஆரம்பத்துல இருந்தவங்க எல்லாம் என்னோட முடிவு வரைக்கும் என் கூட இருப்பாங்க. அதுல எந்த மாற்றமும் இல்லை” என்றான்.
“ஒருவேளை அவங்களா உங்களை விட்டு போகணும்னு நினைச்சா?? உங்களை விட பெரிய மியூசிக் டைரக்டர் கிட்ட பாடணும்னு நினைச்சா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
“நான் இவங்க யார்கிட்டயும் அக்ரீமெண்ட் போடல. வாங்கவும் மாட்டேன். இங்க இருக்க யாரையும், என்கூட மட்டும் தான் இருக்கணும்னு நான் வற்புறுத்தல. ஒருவேளை பெரிய ஆப்பர்சூனிட்டி கிடைச்சா அவங்க தாராளமா அங்க போய் பாடலாம். இசைக்கு எல்லை இல்லை. இசை கலைஞர்களுக்கும் இதுதான் முடிவு என்று இல்லை. நான் சொல்றது என்னோட கமிட்மெண்ட் மட்டும்தான். இங்க இருக்க எல்லாரையும் சமமா நடத்தணும். என்னால முடிஞ்ச அளவுக்குப் பாகுபாடு இல்லாமல் எல்லாருக்கும் வாய்ப்பு கொடுக்கணும். ஆனா அவங்களோட திறமைக்கு வேற நல்ல வாய்ப்புகள் கிடைச்சா தாராளமா அவங்க அதையும் செய்யலாம்”.
“வெல் செட், அப்படின்னா மத்த பாடகர்களுக்கு நீங்களும் வாய்ப்பு கொடுப்பீங்களா?? உங்களோட ஆல்பம் மியூசிக் எல்லாத்துலயும் உங்க பாடகர்கள் மட்டும் தான் மாறி மாறி பாடுறாங்க. அது ஒரு கட்டத்துல சலிச்சிடாதா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
“பாடல் எப்படி சலிக்காதோ, பாடகர்களும் சலிக்க மாட்டாங்கன்றது என்னோட கருத்து. மத்தவங்களுக்கு எப்படின்னு தெரியல? ஆனா என்னோட கொள்கைகள் இதற்குப் புறம்பானது. மத்த பாடகர்களுக்கு நான் வாய்ப்பு கொடுக்க மாட்டேன்னு நான் சொல்ல வரல. ஆனா எங்க ட்ரூப்ல இருக்க மெம்பர்ஸ்க்கு அதனால வாய்ப்பு இல்லாம போயிடும். அதனால இப்போதைக்கு அந்த எண்ணம் கிடையாது. இதுக்கு மேலயும் புதுசா வர்றவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிற எண்ணம் மட்டும்தான் எனக்கு முதன்மை பெற்றிருக்கு”.
எதிர்மறையான பேச்சுக்களைத் தவிர்த்து மற்றவர்களின் மனதையும் புண்படுத்தாதபடி மிக லாவகமாகப் பதில் கூறிக் கொண்டிருந்தான் கௌதம். அவனை மடக்குவதற்காகவே தேவையில்லாத கேள்விகள் கேட்டாலும் அவன் சாதுரியமாக பதிலுரைத்துக் கொண்டிருப்பது அங்கு இருப்பவர்களுக்குத் தெளிவாகவே புரிந்தது.
“இன்னொரு முக்கியமான கேள்வி?” என்று அந்தப் பேட்டி எடுப்பவர் நிறுத்தினார்.
“கேளுங்க. பதில் சொல்லத் தானே நான் காத்துகிட்டிருக்கேன்?” என்று அவனும் பதிலுரைத்தான்.
“உங்களோட குரூப்ல இருக்குற சிங்கர்ஸ் எல்லாம் ஒரு குறிப்பிட்ட ப்ரோக்ராம்ல பைனல் கண்டஸ்ட்டண்டா வெளியேற்றப்பட்டவங்கன்னு பரவலான பேச்சிருக்கு. அதை பத்தி நீங்க என்ன சொல்ல வரீங்க?? குறிப்பிட்ட அந்த சேனலுக்கும் உங்களுக்கும் ஏதாவது பகை இருக்கா?? ஐ மீன் முன்விரோதம் மாதிரி?” என்று கேட்டார்.
“நான் தனிப்பட்ட எந்த தொலைக்காட்சியையும், அந்த ப்ரோக்ராமையும் எந்த இடத்துலயும் தவறா சுட்டி காட்டினதில்லையே?? இப்ப நீங்களா தான் சுட்டிக்காட்டி கேள்வி கேக்குறீங்க? ஆனா இப்படி ஒரு பேச்சு இருக்குன்னும்போது அதுக்கான பதில் சொல்ல வேண்டியது என்னோட கடமை. எந்தவித தொலைக்காட்சி சேனலுக்கும் எனக்கும் தனிப்பட்ட எந்தப் பிரச்சனையும் கிடையாது. நல்ல குரல் வளம் இருக்கிற பாடகர்களை நான் தேர்வு செஞ்சு, என்னோட அகாடமியுல சேர்த்துக்கிட்டேன். அதுக்கு நீங்க கண்ணு மூக்கு காதுன்னு வச்சு பேசினீங்கனா, நான் ஒன்னும் பண்ண முடியாது” என்று தோள்களை குலுக்கினான்.
“அப்ப அந்தச் சேனல்ல நல்லா பாடுறவங்களை எலிமினேட் பண்ணிட்டாங்கன்னு சொல்ல வரீங்களா?? டி.ஆர்.பிக்காக ஒருத்தரை புரமோட் பண்ணிட்டு, வேற ஒருத்தரை டாப் சிங்கரா தேர்ந்தெடுக்குறாங்களா?” என்ற கேள்விக்கு அவன் புன்னகைத்தான்.
“இதற்கான பதில் என்கிட்ட இல்ல. அதுல ஜட்ஜா இருக்கவங்க, ப்ரோக்ராம் மேனேஜர்ஸ், அதை நடத்துறவங்க, அப்புறம் நீங்க சொன்ன அந்த சோ கால்டு தனியார் சேனல் அவங்ககிட்ட தான் நீங்க இந்த கேள்வியை கேட்கணும். என்னைப் பொறுத்த வரைக்கும் நல்லா பாடுனதா எனக்குத் தோணுனவங்களை நான் என்னோட ட்ரூப்ல சேர்த்துக்கிட்டேன் அவ்வளவுதான்” என்றான்.
“ஆனா இந்தச் சேனலை நடத்துறது உங்களுடைய தகப்பன் தானே?” என்ற கேள்விக்கு, அவன் மீண்டும் தோள்களை குலுக்கி, உதட்டைப் பிதுக்கினான்.
நத்தாஷா அதிர்ச்சியாக அவனைத் திரும்பி பார்க்க, அவனுடைய பாவனைக்கு என்ன அர்த்தம் என்று அவளுக்குப் புரியவில்லை.
அதிர்ச்சி மீளாமல் ப்ரீத்தியைத் திரும்பி பார்த்தாள். அவளும் ஒன்றும் விளங்காமல் மாறி மாறி பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது.
“நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லலையே சார்?” என்று பேட்டி எடுப்பவர் மீண்டும் அதே கேள்வியில் நின்றார்.
“நீங்க கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் சொல்லிட்டேன். சில கேள்விகளைத் தெரிஞ்சுக்கிட்டே கேக்குறீங்க. அதுக்கு நான் எதுக்கு பதில் சொல்லணும்?? அது தான் உங்களுக்கு தெரியுதே?” என்றான்.
error: Content is protected !!