Skip to content
Post Views: 104

அத்தியாயம்-3
நிகழ்காலம்
நெக்சஸ் சிஸ்டம்ஸ் அலுவலகம்:
Advertisement
தண்மதி தன் கை மறைவில் ஒரு கொட்டாவியை வெளிவிட்டாள்.. ஐந்து நிமிடங்களில் இது மூன்றாவது முறை. தன்னைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள அவள் எவ்வளவோ முயற்சி செய்தாள்தான் ஆனால் அந்தப் பயிற்சியாளர் (Trainer) அவளைக் கண்ணைத் திறக்க விட்டால்தானே!
அவள் இப்போது புதிய பணியாளர்களுக்கான அறிமுக மற்றும் பயிற்சி வகுப்பில் (Induction Program) இருந்தாள். அவளோடு இன்னும் சில புதியவர்களும் இருந்தனர். எச்.ஆர் மேனேஜர் டேவிட் (தண்மதியின் மொழியில் பால்டி) விடாமல் உரையை ஆற்று ஆற்றென்று ஆற்றிக்கொண்டிருந்தார்.
மதியம் கேண்டீனில் சாப்பிட்டுவிட்டு வந்ததற்கு அவரது ஏற்றதாழ்வற்ற ஒரே சீரான குரல் எதோ புரியாத மொழியில் பாடும் தாலாட்டுப் போல இருக்க கண்ணை சுழற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு.
Advertisement
ஏற்கனவே மூன்று மணி நேரம் ஓடிவிட்ட நிலையில், எவ்வளவு முயன்றும் முடியாமல் பாறைப்போல கனத்த இமைகள் கடைசியில் அவளைக் கைவிட கண்கள் தானாக மூடின. அப்போது இனிய நாதத்தில் அபஸ்வரம் தட்டியது போல் திடுமென கேட்ட உரத்த குரலில் திடுக்கிட்டு விழித்தாள் தண்மதி.
Advertisement
“ஹாய் டேவிட்…ஹோப் ஐ டிட் நாட் டிஸ்டர்ப் யுவர் செஷன்” என்று அறை வாயிலில் நின்றபடி கேட்டான் ஆதித்யா.
“ஹலோ ஆதித்யா அஃப்கோர்ஸ் நாட்.. பிளீஸ் கம் இன்..” என்று அவனை உற்சாகமாக வரவேற்றார் டேவிட்.
ஆதி அறைக்குள் நுழைந்து நட்பு ரீதியான புன்னகையுடன் டேவிட்டுடன் கைகுலுக்கினான்.
Advertisement
பின்னர் அந்த அறையில் இருந்தவர்களைப் பார்வையால் அலசியவன்,
“ப்ரோக்ராம் எப்படிப் போயிட்டு இருக்கு?” என்று பொதுவாக கேட்டான் தண்மதியை ஓரக்கண்ணால் பார்த்தபடி,
தூக்கத்தில் வாயோரம் வழிந்த எச்சிலை அவசரமாகத் துடைத்துக் கொண்டு, மற்றவர்களோடு சேர்ந்து கோரஸாக, “வெரி குட் சார்!” என்றாள்.
“டேவிட், இவங்களுக்கு ஒரு சின்ன பிரேக் கொடுத்தா என்ன? கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணட்டும்,” என்று சாதாரணமாகக் கேட்டான்.
“ஷுர் ஆதி… நானும் அதையே தான் நினைச்சிட்டு இருந்தேன்,” என்ற டேவிட்,
“கைஸ் (Guys), நீங்க ஒரு அரை மணி நேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வாங்க, புது செஷனை ஆரம்பிக்கலாம்,”என்றார்.
ஜுராசிக் பார்க்கில் டைனோசரிடம் இருந்து தப்பிப்பவர்கள் போல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அனைவரும் அந்த அறையை விட்டு வெளியேறினர்.
தண்மதி கேஃபிடீரியாவில் (Cafeteria) அமர்ந்து தன் லேட்டே (Latte) காபியை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள்.
“ஹாய்…”
அருகில் கேட்ட குரலைக் கேட்டுத் திரும்பியவளுக்கு அங்கே ஆதித்யாவைக் கண்டு புருவங்கள் ஆச்சரியத்தில் உயர்ந்தன.
“ஹாய் சார்…” என்றாள் தடுமாறியபடி.
“சோ… இன்னைக்கு டே எப்படிப் போச்சு?” என்று கேட்டவாறு அவளுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.
“நல்லாப் போச்சி சார்… ரொம்ப இன்ஃபர்மேட்டிவா இருந்தது..” என்று புளுகினாள்.
“டேவிட்டோட பேச்சு ரொம்ப வளவளன்னு போராதான் இருக்கும்னு எனக்குத் தெரியும். அதனால நீ உண்மையச் சொன்னாலும் எனக்குக் கவலை இல்லை… ஆனா அதே சமயம், ஆஃபீஸ் நேரத்துல தூங்குறதை என்னால சகிச்சுக்க முடியாது,” என்று சாதாரணமாக ஆரம்பித்த அவனது குரல் இறுதியில் கண்டிப்புடன் முடிந்தது.
“கடவுளே! இவர் பார்த்துட்டாரா!”
அதிர்ச்சியில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை அவளுக்கு.
ஆம், ஆதித்யா அந்தப் பயிற்சி அறையைக் கடந்து செல்லும்போது அவள் தூங்குவதைப் பார்த்துவிட்டான். அதனால்தான் அவன் இடையிட்டு அவர்களுக்கு ஒரு பிரேக் கொடுக்கச் சொன்னான்.
அவள் லேசாக கன்றிச்சிவந்த முகத்துடன் அவனைப் பாவமாக பார்க்க, “பரவாயில்லை… இது ஃபர்ஸ்ட் டைம்ங்கறதால விடுறேன். ஆனா திரும்ப இப்படி செய்யாதே.” என்று தன் பாஸ் (Boss) தோரணையில் சொல்லிவிட்டு கிளம்பப்போனவனை அவளது அவசரக்குரல் தடுத்தது.
“சார்…”
“சொல்லு…”
“நீங்க ஏன் என்னைத் தெரியாத மாதிரி,வேற யாரோ மாதிரி பேசுறீங்க?”
இறுதியாக அவர்கள் சந்தித்த கணத்திலிருந்து அவள் மனதை அரித்துக்கொண்டிருந்த கேள்வியைக் கேட்டுவிட்டாள்.
அவன் புருவத்தைச் சுருக்கினான், “நாம இப்பதானே ரெண்டாவது தடவை மீட் பண்ணுறோம்?”
இப்போது தண்மதியின் புருவங்கள் சுருங்கின, “என்னை நிஜமாவே உங்களுக்கு ஞாபகம் இல்லையா சார்…?” என்று விக்கித்துப்போய் கேட்டாள்.
“ஏன்… நீ என்னோட பேஸ்புக் ஃப்ரெண்டுன்னு சொல்லப் போறியா? எனக்கு பேஸ்புக்ல 700 ஃப்ரண்ட்ஸ்க்கு மேல இருக்காங்க, அதுல பாதிப் பேரோட பேரு கூட எனக்குத் தெரியாது,..” என்றான் அலட்சியமாக.
“இல்ல சார்… 5 வருஷத்துக்கு முன்னாடி…”
அவள் முடிப்பதற்குள் அவன் தடுத்தான்.
“டிரெயின்ல மீட் பண்னோமா? நீ என்ன சொல்ல வர்ற? இப்படிலாம் சொல்லி என்கிட்ட அட்வான்டேஜ் எடுக்கலாம்னு பார்க்கிறியா?உனக்கே இது சில்லியா தெரியலையா? நீ இப்படி ஒரு சீப்பான பொண்ணுன்னு தெரிஞ்சிருந்தா, காலையில உனக்கு லிஃப்டே கொடுத்திருக்க மாட்டேன்,” என்று வார்த்தைக் கனலைக் கக்கிவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்றான்.
அவன் கடைசியாக சொன்னதைக்கேட்டு அவள் திகைத்தாள்.
“அப்போ சார் தான் எனக்கு லிஃப்ட் கொடுத்தாரா? சோ ஸ்வீட்… தெரிஞ்சோ தெரியாமலோ எப்பவுமே அவர்தான் என்னோட சேவியரா (Savior) இருக்காரு!” என்று புல்லரித்துப்போனாள்.
அவனது கடுமையான வார்த்தைகளால் ஏற்பட்ட வலியை, அந்த ஒரு விஷயம் மறையச் செய்தது. ‘ஆதி சார், ஏன் என்னை தெரியாத மாதிரி நடந்துக்கறார்ன்னு சீக்கிரமே கண்டுபுடிக்கறேன். இப்போதைக்கு அவரைத் திரும்ப பார்த்ததே போதும்..’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டவளின் முகம் மலர்ந்து விகசித்தது.
வேலைக்கு சேர்ந்து இன்று நெக்சஸ் சிஸ்டம்சில் தண்மதிக்கு முதல்நாள், அன்று காலை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு, அவனது பைக் எப்போது வரும் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள்.
ஆனால் நேரமாகிக்கொண்டே போக அலுவலகத்திற்கு தாமதமாகிவிடுமோ என்று மனம் துணுக்குற்றது, இனி வேறு வழியில்லை, கிளம்பிடுவோம் என்று முடிவெடுத்த நேரம் அவனது பைக் சற்று தூரத்தில் வருவது தெரிந்தது.. இதயம் படபடக்க, அன்று போலவே ஃசாலையில் நின்று லிஃப்ட் கேட்பது போலக் கையை நீட்டினாள்.
பைக்கின் வேகத்தைக் குறைத்து அவளுக்கு முன்னால் நிறுத்திவிட்டு ஹெல்மெட்டைக் கழற்றி அவளைக் கேள்வியாகப் பார்த்தான்.
“ஹாய் சார்… பஸ் லேட், ஆட்டோல ஒரே ரஷ்… அதான் லிஃப்ட் கேட்டேன்.” என்று அவள் அசடு வழிய சொல்லிக்கொண்டிருக்கும் போதே
சொல்லி வைத்தார்ப் போல ஷேர் ஆட்டோ ஒன்று அவளருகில் வந்து நின்று ஹாரன் ஒலியெழுப்ப, தண்மதி திகைத்தாள்.
அந்த ஆட்டோவும் காலியாக இருந்துதொலைக்க. கூட்டமாக இருக்கிறது என்று சாக்குக்கூட சொல்லமுடியாமல்போனது, அவள் உதட்டைப்பிதுக்கி பாவமாக அவனைப்பார்க்க அவனோ ஒற்றைப்புருவம் உயர்த்தி அவளை ஒரு நக்கல் பார்வை பார்த்தான்.
தோற்றுப்போன முகத்துடன் தலையை தொங்கப் போட்டுகொண்டு அவள் ஆட்டோவில் ஏறச் செல்ல, “அவங்க வரலை… நீங்க போங்க,” என்று ஆட்டோ டிரைவரிடம் கூறி அனுப்பிவிட்டான்.
அவள் விலுக்கன்று நிமிர்ந்து வியப்புடன் அவனைப் பார்த்தாள். ஆனால் அவன் அதைக் கண்டு கொள்ளாமல் ஹெல்மெட்டை மீண்டும் அணிந்துகொண்டு அவளைப் பின்னால் அமரச் சொன்னான். மதி மகிழ்ச்சியில் உள்ளம் துள்ள அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள்.
அன்றுபோலவே மிதமான வேகத்தில் தான் பைக்கை ஓட்டினான். ஆனால் இன்று அந்தப் பயணம் அவளுக்கு ஜிவ்வென்று காற்றில் பறப்பது போல் இனித்தது. பல வருடத் தவத்தின் பலன் கிட்டியதாக மனம்பூரித்தது.
திடீரென்று ஒரு ஆட்டோ தவறான திசையில் எதிரே வந்துவிட, அவன் சடன் பிரேக் போட. மதி நிலைகுலைந்து அவன் மீது சாய்ந்து பேலன்ஸுக்காக அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.
“சாரி, ஆட்டோ நடுவுல வந்துடுச்சு… நீ ஓகே தானே?” அவனது அக்கறையான குரல் அவளுக்கு வயலின் இசை போலக் கேட்டது.
“ஓகே தான் சார்,” என்று பிரகாசமாகச் சிரித்தாள்.
“எப்படிப்போறான் பாரு..” என்று அவன் ஆட்டோக்காரனை சபிக்க, இவளோ அவனுக்கு மனதார நன்றியுரைத்தாள்.
அலுவலகத்தை அடைந்ததும், “ரொம்ப தேங்க்ஸ் சார்,” என்றாள்.
“இட்ஸ் ஓகே… ஆனா இந்த லிஃப்ட் கேட்கிற பழக்கம் இதோட நிக்கட்டும். நாளைக்கு நான் பைக்கை நிறுத்த மாட்டேன்,” என்று அவன் கண்டிப்புடன் சொன்னபோது,
அவள் முகம் வாடிப்போனது,
“சாரி சார்…” என்று சொல்லிவிட்டு நகரப்போக.
“ஒரு நிமிஷம்…” என்று அவளைத் தடுத்தான்.
“ஆல் தி பெஸ்ட் ஃபார் டுடே…” என்றவனின் கண்களில் ஒரு மின்னல் வெட்டி மறைந்தது.
அவன் வார்த்தைகளுக்குப் பின்னால் இருந்த மிரட்டலை அறியாமல், அவள் வாய்கிழிய சிரித்துவிட்டு “தேங்க் யூ சார்” என்றாள்.
சிறிது நேரம் கழித்துதான் அவன் ‘ஆல் தி பெஸ்ட்’ சொன்னதன் உண்மையான காரணம் அவளுக்குத் தெரியவந்தது.
ஆதித்யாவின் அறையில் தண்மதியும், ஶ்ரீநிதியும் நின்றிருந்தனர். அவன் தான் அழைத்திருந்தான். இருவரும் கோரஸாக
‘குட் மார்னிங்’ என,
“குட் மார்னிங்.. உட்காருங்க..லெட் மீ கம் டு த பாயிண்ட்.. நீங்க ரெண்டு பேரும் என் டீமுக்கு புதுசுங்கறதால, உங்களோட ஸ்கில் லெவல் எப்படி இருக்குன்னு நான் டெஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறேன். இன்னைக்கு ஒரு ‘கேஸ் ஸ்டடி’ கொடுப்பேன்.. அதை நல்லா உள்வாங்கி படிச்சுட்டு, மதியம் ரெண்டு மணிக்குள்ள ஒரு பிரசன்டேஷன் ரெடி பண்ணனும்..
பிரசன்டேஷன் 8-லிருந்து 10 நிமிஷம் வரைக்கும் இருக்கலாம்.. மத்த டீடைல்ஸ் எல்லாம் உங்க டீம் லீடர் நவீன் சொல்லுவார்… அட்மின் செக்ஷன்ல போய் உங்க லேப்டாப்ஸ்ச வாங்கிக்கோங்க…
இன்னொரு விஷயம்… உங்க ரெண்டு பேர்ல யாரு பெஸ்ட்டா பண்றீங்களோ, அவங்களுக்கு என்னோட அடுத்த ப்ராஜெக்ட்ல எனக்கு அசிஸ்ட் பண்ற சான்ஸ் கிடைக்கும்.. இது ரொம்ப ரேர் சான்ஸ், என் டீம்ல இருக்குற எக்ஸ்பீரியன்ஸ் ஆனவங்களுக்கு கூட இது அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது. சோ, அதை மனசுல வச்சுட்டு நல்லா பண்ணுங்க.. அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம்… ஒருவேளை உங்க பிரசன்டேஷன் சுமாரா கூட இல்லாம சொதப்பிட்டீங்கன்னா, இன்னைக்குதான் இந்த ஆபீஸ்ல உங்களுக்கு கடைசிநாள்.. மைண்ட்ல வச்சுக்கோங்க.. ஆல் தி பெஸ்ட்.. வேற எதுவும் கேட்கணுமா?”
“இல்ல சார்…”
“குட், யூ மே கோ நவ்..”
இருவரும் வெளியே வந்து ஒரு நீண்ட பெருமூச்சை வெளிவிட்டனர்…
“அப்பாடா.. சிங்கத்தோட குகையில இருந்து தப்பிச்சு வந்த மாதிரி இருக்கு..” என்றாள் ஶ்ரீநிதி.
“ஆனா ஒன்னு, இது நிஜமாவே ஒரு கோல்டன் ஆப்பர்ச்சூனிட்டி.. இந்த ஆதித்யா ரொம்ப டேலன்ட்டட்-னு கேள்விப்பட்டேன். அதனாலதான் இவ்ளோ யங் ஏஜ்ல அவரு பிஎம் ஆகியிருக்காரு.. அவரோட சேர்ந்து ஒர்க் பண்ணா நிறைய விஷயம் கத்துக்கலாம்.. நம்ம கெரியர் குரோத்துக்கு ரொம்ப நல்லது.. அதனால நான் இதுக்காக சின்சியரா ட்ரை பண்ணப்போறேன்…” அவள் தீர்மானமாக சொல்ல,
மதியின் மனம் வேகமாக யோசித்தது..
ஆதித் சார் கூட வேலை செய்யும் வாய்ப்பா?
“இது போதும் எனக்கு இது போதுமே வேறேன்ன வேண்டும் நீ போதுமே..” என்று உள்ளுக்குள் பாடல் ஒலித்தது அவளுக்கு..
எப்படியாவது இந்த வாய்ப்பை பெற்றுவிடவேண்டும் என்று மனதிற்குள் உறுதி பூண்டாள்.
இருவரும் நவீனை சந்திக்கச் சென்றனர்.
“ஹலோ சார்.. பிஎம் சார் உங்களை பார்க்கச் சொன்னார்..”
“யா..பிளீஸ் கம்.. உட்காருங்க..”
அவர்கள் என்ன செய்யவேண்டும் என்ற எல்லா தகவல்களையும் சொல்லிவிட்டு,
“என்னடா வேலையில சேர்ந்த மொத நாளே இப்படி டார்ச்சர் பண்றாங்களேன்னு தோணுதா..” நவீன் சிரித்துக்கொண்டே கேட்டான்.
“அப்படிலாம் ஒன்னும் இல்ல சார்..” என்று இருவரும் அவசரமாக மறுக்க,
“ஆதி கொஞ்சம் ஸ்டிரிக்ட் தான்.. ஆனா மனசளவுல ரொம்ப நல்ல டைப்.. அவரோட ஒர்க் பண்ணி பழகிட்டா நீங்க வேற டீமுக்கு போகவே யோசிப்பீங்க.. சேலஞ்சஸ் பிடிச்சவங்களுக்கு ஆதித்யாவையும் ரொம்ப பிடிக்கும்..” நவீனின் குரலில் பெருமை இருந்தது.
“அப்புறம் இந்த சார்-லாம் வேணாம்…, நவீன்னே கூப்பிடுங்க போதும்..” என்று சினேகமாக சிரித்தான்..
வெளியே வந்ததும், “எனக்கு இந்த நவீனைப் பிடிச்சிருக்கு.. கியூட்டா இருக்கார்ல,” என்றாள் ஶ்ரீநிதி.
“என்ன ஶ்ரீ… டி.எல்-ஐ (TL) சைட் அடிக்கிறியா?” என்று மதி கிண்டல் செய்ய,
“நானாவது டி.எல்-ஐ சைட் அடிக்கிறேன்.. ஆனா நீ பி.எம்-க்கே (PM) ரூட் விடுறியே…” என்று ஶ்ரீநிதி திருப்பிக் கலாய்த்தாள்,
“என்னடி உளறுர?”
“ஹே நடிக்காத, நீ ஆதித்யாவை லுக் விடுறத நான் பார்க்கலைன்னு நினைக்கிறியா? என் லேசர் கண்ணுக்கு எதுவுமே தப்பாது தெரிஞ்சிக்கோ..”
“அப்படிலாம் ஒன்னும் இல்ல, நீ உன்னோட ப்யூஸ் போன கண்ணுக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடு.. வா போலாம்..” என்று பேச்சை மாற்றினாள் தன் முகச்சிவப்பை மறைக்க முயன்றபடி.
ஆதித்யாவிடம் தன் திறமையை நிரூபிக்க தண்மதி கடுமையாக உழைத்து, குறித்த நேரத்திற்குள் பிரசன்டேஷனைத் தயார் செய்தாள்.
கான்பரன்ஸ் ரூமில் ஆதித்யாவும் நவீனும் அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிராக தண்மதியும், ஶ்ரீநிதியும் அமர்ந்தனர்.
முதலில் ஶ்ரீநிதி தன் பிரசன்டேஷனைத் தொடங்கினாள்.
அவர்களது கேஸ் ஸ்டடி ஒரு வங்கியைப்பற்றியது.
ஒரு பெரிய தேசிய வங்கி, சிறு குறு விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழில்முனைவோருக்குக் கடன் வழங்க தடுமாறுகிறது. இவர்களிடம் வெற்றிகரமான சிறு தொழில்கள் உள்ளன, ஆனால் முறையான ‘கிரெடிட் ஹிஸ்டரி’ (வங்கி ஆவணங்கள் அல்லது முந்தைய கடன்கள்) கிடையாது. வங்கியின் தற்போதைய சாஃப்ட்வேர் இவர்களை அங்கீகரிக்காததால், 70% விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
இதற்கு ‘ஆல்டர்நேட்டிவ் டேட்டா’ (Alternative Data) மற்றும் AI-ஐப் பயன்படுத்தி, இவர்களின் கடன் தகுதியைத் துல்லியமாக மதிப்பிட்டு, இவர்களை வங்கி முறைக்குள் கொண்டு வருவதற்கான ஒரு மென்பொருள் தீர்வை வடிவமைக்க வேண்டும். என்பது தான் அவர்களின் பிரெசண்டேஷனின் நோக்கம்.
ஶ்ரீநிதியின் பிரெசெண்டேஷன் டெக்னிக்கலாக மிகவும் நன்றாக இருந்தது.
“சார், என்னோட ப்ராஜெக்ட்ல செக்யூரிட்டிக்கு தான் நான் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கேன். கவர்மெண்ட் ஐடி டேட்டாபேஸ்களோட ஒரு பெரிய இன்டெக்ரேஷனை உருவாக்கி, ஹை-லெவல் என்க்ரிப்ஷன் மூலமா மோசடிகளை முழுசா தடுக்க முடியும். அதுமட்டும் இல்லாம, கஸ்டமரோட டிஜிட்டல் ஃபுட்ப்ரிண்ட்ஸ் மற்றும் சோஷியல் மீடியா ஆக்டிவிட்டியை அனலைஸ் பண்ணி, அவங்களுக்கான ‘ட்ரஸ்ட் ஸ்கோர்’ என்னன்னு துல்லியமா கணிச்சிடலாம். இதன் மூலம் தகுதியானவங்களுக்கு லோன் கிடைக்கும், பேங்கின் பணத்திற்கும் உத்திரவாதம் இருக்கும்.” என்று முடித்தாள்.
ஶ்ரீநிதி பேசும் போது மதி ஆதித்யாவின் முகபாவனையையே கழுகுபோல் பார்த்திருந்தாள். ஶ்ரீநிதியின் திறமையைக் கண்டு அவன் திருப்தியடைந்தது போலத்தான் தெரிந்தது, அவன் பார்வையில் ஒரு மெச்சுதல் இருந்தது. அதைக்கண்டதும் மதியின் பதற்றம் பலமடங்கு அதிகரித்தது.
“ஒருவேளை நான் ஶ்ரீயை விடக் குறைவா பண்ணிட்டா ஆதி சார் என்ன நினைப்பார்? அவர் முன்னாடி மட்டும் இந்த அவமானம் ஏற்பட்டுவிடக்கூடாது,” என்று தனக்குள் கலங்கி புலம்பிக் கொண்டிருந்தாள்.
ஶ்ரீநிதி முடித்ததும் ஆதித்யா அவளைப் பாராட்டினான். “வெரி வெல்டன் ஶ்ரீநிதி… ஒரு ஃபிரெஷர்(fresher) இவ்வளவு நல்லா பண்றது சாதாரண விஷயம் இல்ல. நீ இந்த வேலைக்குத் தகுதியானவன்னு நிரூபிச்சுட்ட.”
இதைக்கேட்டு மதியின் தலைசுற்றியது. கைகள் நடுங்க ஆரம்பித்தன. மயக்கம் வரும் நிலைக்குச் சென்றாள்.
“ஐயோ… இதுக்கு மேல நான் என்ன பிரசன்ட் பண்றது? இந்த ஶ்ரீ ஏன் இவ்ளோ நல்லாப்பண்ணா..?கடவுளே காப்பாத்து!” என்று மனதிற்குள் மன்றாடினாள்.
“மிஸ் தண்மதி.. இட்ஸ் யுவர் டர்ன்,” ஆதித்யாவின் கம்பீரமான குரல் அவளை தன்னுணர்வுக்குக் கொண்டு வந்தது.
அவள் மெதுவாகத் தன் லேப்டாப்புடன் ப்ரொஜெக்டர் அருகே சென்றாள். அவளுக்கு எல்லாமே மறந்து மூளையே வெற்றிடமானது.
“தண்மதி நீங்க ரெடியா?” என்று ஆதி முறைப்படி கேட்டான்.
பதில் பேசமுடியாமல் அவனை ஒருகணம் வெறித்துப் பார்த்தவள்,
“நோ சார்…” என்றாள் மெல்லிய குரலில்..
தொடரும்…
error: Content is protected !!