விழி கொல்லும் விஷமா நீ Epi 15

விழி கொல்லும் விஷமா நீ..
EPISODE 15
Advertisement
அந்த ஆடம்பரமான பப்பில் தன் வயதை மறந்து அங்கு அரைகுறை ஆடைகளோடு நடனமாடிக்கொண்டிருக்கும் இளம் பெண்களையே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் மஹாதேவன்.
Advertisement
‘மூட்டு வலி மட்டும் இல்லன்னா நானும் போய் ஆடியிருப்பேனே’ அவர் தன்னை மறந்து மைன்ட் வாய்ஸ் என நினைத்து சற்று சத்தமாக சொல்ல, அவருக்கு பக்கத்திலேயே அமர்ந்திருந்த ஆரவ்வோ அவரை மேலிருந்து கீழ் முகத்தை அஷ்டகோணலாக்கிப் பார்த்தான்.
Advertisement
“என்ன, வயசாகிட்டா ஆசை இருக்க கூடாதா?” அவர் எகத்தாளமாய் கேட்க, சலிப்பாக விழிகளை உருட்டியவன் கையிலிருந்த மது க்ளாயை முழுதாக வாயில் சரித்தான்.
Advertisement
அவனுடைய நினைவுகள் முழுக்க நிஹாரிகா மட்டும்தான்.
சுற்றியிருந்த எந்தவொரு பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமல் அவன் யோசனையோடு தரையை வெறித்துக்கொண்டிருக்க, மெல்ல பேச்சை ஆரம்பித்தார் மஹாதேவன்.
“கம் ஆன் மேன், அந்த நிஹாரிகாவே தான் உனக்கு வேணுமா, அவ என்னோட ரெண்டாந்தாரம் நோ நோ.. நான் கல்யாணமே பண்ணாம வச்சுக்கிட்டவளுக்கு பொறந்தவ. அவளுக்கு என் சொத்துல எந்த உரிமையும் இல்ல. ஆனா என் சொத்துல முழு உரிமை இருக்குற என் பொண்ணு கூட நீ ஏன் டேட் பண்ண கூடாது?
அவ ஃபாரின்ல வளர்ந்தவ, எனக்கு அடுத்து என் பிஸ்னஸ் அவளுக்குதான். ஏதோ பார்ட்டீல உன்ன பார்த்து உன் மேல அவளுக்கு இன்ட்ரஸ்ட் இருக்குன்னு சொன்னா, அவ கூட பார்க்குறதுக்கு லைட்டா நிஹாரிகா மாதிரிதான் இருப்பா. ஒரே இரத்தம்ல அதான்…”
அவர் போதையில் குளறியபடி சொல்லி முடித்து அவன் பதிலை ஆர்வமாகப் பார்க்க, “நொட் இன்ட்ரஸ்டட்” என்றான் ஆரவ் அலட்சியமாக.
அதில் பெரியவருக்கோ சப்பென்றாக, “யூ லாஸ், மீ வாட் டு டூ? ரெண்டு பேரும் தூரமா இருக்கும் போதே அவ அவனதான் நினைச்சுட்டு இருந்தா. இப்போ பக்கத்துல வேற, அவன விட்டு உன்கிட்ட வந்துடுவாளா? ஐ ஹேவ் அன் ஐடியா. அவளுக்கு இதை விட டபிள் சேலரியோட ஒரு ஜாப் ஆஃபர் பண்ணா??” என்று தன் அடுத்த யோசனையை சொன்னார் அவர்.
அவர் வார்த்தைகளைக் கேட்டு ஆரவ்வின் இதழ்கள் கேலியாக வளைந்தன.
“அவ உங்க பொண்ணுதான், அதுக்காக உங்க குணம் இருக்கும்னு நினைச்சீங்களா?” அவன் கேட்ட கேள்வியில் அவருக்கு சுள்ளென்று இருக்க, மது போத்தலை மடமடவென உள்ளே இறக்கியவர், “அப்போ பேசாம அவள கடத்தி கல்யாணம் பண்ணிரு, அப்பா நான் அப்ரூவ் பண்றேன்” என்றார் போதையில்.
‘இவன்லாம் ஒரு அப்பனா?’ என்ற ரீதியில் ஒரு பார்வைப் பார்த்தவன், “நான் ஒன்னும் அவளுக்கு வில்லன் கிடையாது, அவள ஃபார்ஸ் பண்ணி கல்யாணம் பண்ற அளவுக்கு நான் ஒன்னும் மட்டமானவனும் கிடையாது. நீஹா என் லவ்வ ரியலைஸ் பண்ணணும்” என்றவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.
“யாதவ்வ விட்டு நீஹா விலகணும்னா அது யாதவ்வால மட்டும்தான் முடியும், அது மட்டும் நடந்துருச்சுன்னா நீஹாக்கு என் லவ்வ புரிய வச்சிருவேன்”
அவன் விழிகளில் காதலோடு சொல்ல, ‘க்கும்!’ என்று நொடிந்துக்கொண்டார் மஹாதேவன்.
“இந்த நாலு வருஷம் ரெண்டு பேரும் பார்த்துக்காம பிரிஞ்சிருக்கும் போதே எதையும் கிழிக்க முடியல, இதுக்கப்பறம் என்னத்த கிழிக்க போறான் அய்யோ அய்யோ…” போதையில் வாய்விட்டு சொல்கிறோம் என்பதைக் கூட உணராமல் அவர் சொல்லிவிட்டு சிரிக்க, மூக்கு விடைக்க அவரை முறைத்துப் பார்த்தான் ஆரவ்.
அதேநேரம், வேலை முடிந்து கணக்கு வழக்கு சம்பந்தமான சில ஃபைல்களை யாதவ்வின் எண்ணிற்கு அனுப்பிவிட்டு ஆஃபீஸ் அறையிலிருந்து வெளியேறினாள் நிஹாரிகா.
அவனை சந்தித்தே கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாகிவிட்டது. இறுதி விளையாட்டுக்காக மும்பைக்கு சென்றவனுக்கு பயிற்சிக்கே நேரம் சரியாக இருந்தது.
தன்னவனைப் பற்றிய யோசனையோடு வராண்டாவில் நடந்துச் சென்றவளின் விழிகளுக்கு எதேர்ச்சையாக தென்பட்டன, வராண்டா சுவற்றில் தொங்கவிடப்பட்டிருந்த கிரிக்கெட் சம்பத்தமான புகைப்படங்களும் கிரிக்கெட் வீரர்களின் துடுப்புகளும் .
இங்கு வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன. தினமும் இவளுடைய விழிகளில் இவை சிக்காமல் இல்லை. ஆனால் இன்று..
ஏதோ புதிதாக பார்ப்பது போலத் தெரிந்தன. கூடவே கிரிக்கெட் மேலிருக்கும் அவனின் காதலை அவனுக்கு அவை உணர்த்த மெல்ல புன்னகைத்தாள் அவள்.
அவளுடைய நினைவுகள் அவனுடைய காதலை முதல் முறை அவள் உணர்ந்த அத்தருணத்தை நினைத்துப் பார்த்தன.
அன்று,
“ஏய் ஆதி, நா.. நான் ரொம்ப கோபத்துல இருக்கேன். நேத்து ஆஃபீஸ் பார்ட்டீன்னு என்னை வர சொன்னான்டீ அந்த சைக்கோ ஆரவ். என்கிட்ட இருக்குறதுலயே ரொம்ப கோஸ்ட்லியான ட்ரெஸ், ரெண்டாயிரம் ரூபா கொடுத்து வாங்கினது. அதை போட்டுட்டு போனா சீப்பா இருக்குன்னு சொல்லி அவமானப்படுத்திட்டான் பாவி! நான்தான் முன்னாடியே சொல்லியிருக்கேன்ல, எனக்கு இதெல்லா பொருத்தமே இல்லன்னு. ஏன்டீ இப்படி பண்றான். எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கலடீ!”
என்று மூச்சு விடாமல் புலம்பிக்கொண்டே நிஹாரிகா வர, அவள் பக்கத்தில் குல்ஃபியை சப்பியவாறு வந்துக்கொண்டிருந்த ஆதிராவுக்கு இது பழக்கப்பட்ட ஒன்றுதான்.
“ஆஹான்! ஓஹோ..” என்று அவள் பதிலெதுவும் சொல்லாமல் ராகமிழுத்துக்கொண்டிருக்க, அவள் தோழிக்கு எரிச்சல்தான் வந்தது.
“நீயும் அவன மாதிரியே என்னை இர்ரிடேட் பண்ற ஆதி, அம்மாகிட்ட சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க, இதுல நீ வேற..” அவள் சோகமாக, உடனே விளையாட்டை விட்ட ஆதிரா, “சரி அப்போ இப்போலே அவனுக்கு கால் பண்ணி ப்ரேக்கப் பண்ணிக்கலாம்னு சொல்லு” என்றாள் தீவிர முகபாவனையோடு.
அந்த தைரியம்தான் நிஹாரிகாவுக்கு சுத்தமாக இல்லையே!
“அது… எனக்.. எனக்கு பயமா இருக்கு.. என்ட், நா.. நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்று அவள் யாதவ்வை பற்றி சொல்ல வர, “அடி ஆத்தீ! என் அப்பா அய்யனார் சாமி மாதிரி தெரியுதே, ஏய் நீஹா தப்பிச்சு ஓடிரு!” என்று கத்திக்கொண்டு வீதியை கடக்கப் போனவள் எதிரே வந்த காரை கவனிக்காது மோதிவிட்டாள்.
அனைத்தும் சில கணங்களில் நடந்தேற, தன் முன்னே இரத்த வெள்ளத்தில் கிடந்த தோழியைப் பார்த்து ஸ்தம்பித்துப் போய்விட்டாள் நிஹாரிகா.
அடுத்த பதினைந்தே நிமிடங்களில் அவளுடைய கல்லூரிக்கு பக்கத்திலிருந்த மருத்துவமனையில் ஆதிராவுக்கான சிகிச்சை வேகமாக நடக்க, சிகிச்சை அறைக்கு வெளியில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவளுக்கோ அடுத்து என்ன செய்வதென்று கூட தெரியவில்லலை.
தோழியின் இரத்தம் அவளுடைய கரங்களில் காய்ந்துப் போயிருக்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்தவளின் கைக்கால்கள் நடுங்கின.
“ஆதி.. ஆதி உனக்கு ஒன்னு இல்லடீ, ஒன்னு இல்ல” தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டாளோ என்னவோ!
சட்டென பக்கத்திலிருந்த பையில் அவளுடைய அலைப்பேசி ஒலிக்கும் சத்தம் கேட்க, வேகமாக எடுத்து திரையைய் பார்த்தவளுக்கு ஆரவ்வின் எண்ணைப் பார்த்ததும் மனதில் இதம் பரவிய உணர்வு.
உடனே அழைப்பையேற்றவள், “ஆர.. ஆரவ், நா.. நான் காலேஜ் பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடல்ல இருக்கேன். ஆதிராவுக்கு ஆக்சிடன்ட் ஆகிருச்சு. எனக்கு பயமா இருக்கு, ப்ளீஸ் சீக்கிரம் வா…” என்றாள் திக்கித்திணறி.
அழுகையில் அவளுக்கு வார்த்தைகள் கூட வர மறுத்தன.
சில கணங்கள் மறுமுனையில் மௌனமாக இருந்தவன், “காலேஜ் முடிஞ்சதும் வீட்டுக்கு போகாம இப்படிதான் திரிஞ்சிட்டு இருப்பியா, இப்போ அதை பத்தி நான் பேச போறதில்ல. அவங்க வீட்டுக்கு சொல்லியாச்சா?” என்று கேட்டான் காட்டமாக.
“ஆமா.. ஆனா அவங்க எல்லாரும் ஊர்ல இருக்காங்க. எப்படியும் இங்க வர்றதுக்கு ரொம்ப நேரமாகும். எனக்கு தனியா இருக்க ரொம்ப பயமா இருக்கு ஆரவ், ப்ளீஸ் நீ இங்க வாயேன்” என்று வார்த்தைகளைக் கோர்த்து அழுதபடி சொன்னவளைப் பார்க்க அவனுக்கு எரிச்சல்தான் வந்தது.
“வாட்!” அடித்தொண்டையிலிருந்து கத்தியவன், “எனக்கு இன்னைக்கு ஒரு முக்கியமான பிஸ்னஸ் மீட்டிங் இருக்கு, என்ட் நான் நாளைக்கு லண்டன் கெளம்புறேன். ஐ ஹேவ் லாட் ஆஃப் திங்க்ஸ் டு டூ… அதை விட்டுட்டு எப்படி வர முடியும்? லுக் நீஹா, அந்த ஹாஸ்பிடல் டீன் எனக்கு ரொம்ப பழக்கம், எல்லாத்தையும் அவர வச்சு நான் பார்த்துக்குறேன். என் ஆளுங்கள கூட அனுப்பி வைக்கிறேன், ஆதிராவோட பேரன்ட்ஸ்ஸ சேஃபா கொண்டு வந்து ஹாஸ்பிடல்ல விடுவாங்க. நீ இப்போ வீட்டுக்கு போ..” என்று முடிவாகச் சொன்னான்.
அவனின் வார்த்தைகளைக் கேட்டவளுக்கு மனதில் எள்ளும் கொல்லும் வெடித்தது.
எந்த பதிலும் சொல்லாமல் அவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு அப்படியே அங்கிருந்த இருக்கையில் தளர்ந்துப் போய் அமர்ந்துக்கொண்டாள்.
முகத்தை மூடி சில நிமிடங்கள் தன்னிலையை நினைத்து அழுதவளுக்கு அப்போதுதான் யாதவ்வின் முகம் மனக்கண் முன் வந்தது.
உடனே அவள் அவனுக்கு அழைக்க, அந்த பெரிய மைதானத்திலிருந்த யாதவ்வோ மூச்சு வாங்கியபடி வியர்த்து விறுவிறுக்க தீவிர கிரிக்கெட் பயிற்சியில் மூழ்கியிருந்தான்.
“டேய் போதும்டா, செத்துர போற. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு ஸ்டார்ட் பண்ணலாம். உனக்கு பால போட்டே என் கையெல்லா வலிக்குது..”என்று அவனின் தோழனொருவன் கெஞ்சாத குறையாக சொல்ல, யாதவ்வோ விடுவதாக இல்லை.
“நோ, நான் இந்த தடவையாச்சும் டீமுக்கு செலக்ட் ஆகணும். இன்னும் ஒரு மாசத்துல செலக்ஷன் இருக்கு. இதெல்லாம் போதாது. இன்னும்.. இன்னும் ப்ராக்டிஸ் பண்ணணும்”
அவன் உறுதியான குரலில் சொல்லிவிட்டு மீண்டும் பயிற்சியை ஆரம்பிக்க, அவனின் தோழனுக்கோ யாதவ்வின் வெறித்தனமான பயிற்சியைப் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
“இவன் ப்ராக்டிஸ் பண்றத பார்த்தா செலக்ஷனுக்கு முன்னாடியே மண்டைய போட்டுருவான் போலயே”
அவனுடைய நண்பன் கேலியாக சொல்லிவிட்டு மீண்டும் பந்தை எறிய, தூரத்திலிருந்து “யாதவ்…” என்று அழைத்தான் இன்னொருவன்.
அவனோ என்னவென்று எட்டிப் பார்க்க, அவனருகே ஓடி வந்தவன், “யாருக்கோ அர்ஜென்ட்டுன்னு நினைக்கிறேன், கால் வந்துட்டே இருக்கு” என்றுவிட்டு அவனின் அலைப்பேசியை நீட்டினான்.
புருவ முடிச்சுகளோடு அலைப்பேசி திரையைப் பார்த்தவனின் விழிகள் அது யாரென்று உணர்ந்ததுமே அதிர்ச்சியில் விரிய, கையிலிருந்த துடுப்பை கீழே விட்டு வேகமாக அழைப்பையேற்று காதில் வைத்தான்.
“ஹெலோ.. ஹெலோ நீஹா, சாரி, நா.. நான் கிரிக்கெட் ப்ராக்டீஸ்ல இருந்தேன். என்னாச்சு, இஸ் தெயார் எனி இம்பார்டன்ட்?”ஏற்கனவே அவள் இத்தனை தடவை எதற்கு அழைத்தாளோ என்ற பதற்றத்தில் இருந்தவனுக்கு மறுமுனையில் அவளுடைய விம்மலுடன் கூடிய அழுகையை கேட்டதும் மேலும் பதற்றம் தொற்றிக்கொண்டது.
“என்.. என்னாச்சு? மொதல்ல நீ எங்க இருக்க, அதை சொல்லு” என்று யாதவ் வேகமாகக் கேட்க, வார்த்தைகளைக் கோர்த்து திக்கித்திணறி, “காலேஜ் பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடல்” என்று சொல்லி முடித்தாள் நிஹாரிகா.
யாதவ் அதற்குமேல் எந்த காரணமும் கேட்கவில்லை, அவள் அழைப்பைத் துண்டித்த அடுத்த பதினைந்தே நிமிடங்களில் அவள் முன்னே மூச்சு வாங்கியபடி நின்றிருந்தான்.
“நீஹா…” அவன் அழைத்ததும் சட்டென நிமிர்ந்தவள் தன்னை மறந்து, “அர்ஜூ…” என்றழைத்த வண்ணம் அவனை நோக்கி ஓடிச் சென்று தாவி அணைத்துக்கொண்டாள்.
ஆடவனோ கொஞ்சமும் இதை எதிர்பார்க்கவில்லை. அவளை அணைப்பதா வேண்டாமா என்ற தயக்கத்தோடு கரத்தை கொண்டு செல்வதும் பின் தயங்குவதுமாக தடுமாறிக்கொண்டீருக்க, அவளுக்கோ இருந்த வேதனையில் பெரிய ஆறுதல் கிடைத்த உணர்வு.
அவனை இறுக அணைத்து மார்பில் மூகத்தை புதைத்துக்கொண்டவள், “அர்ஜு… அர்ஜு…” என்று திரும்பச் திரும்பச் சொல்லிக்கொண்டே அவனை தன்னோடு நெருக்க, யாதவ்க்குதான் இது பெரும் அவஸ்தையாகிப் போனது.
கை முஷ்டியை இறுக்கி விழிகளை அழுந்த மூடித் திறந்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவன், அவளை தன்னிடமிருந்து பிரித்து “நீஹா, ரிலாக்ஸ்.. அதான் நான் வந்துட்டேன்ல. ஐ ஆல்வேய்ஸ் தெயார் ஃபார் யூ” என்று அவள் இரு கன்னங்களைத் தாங்கிச் சொல்ல, அவனையே இமை வெட்டாமல் பார்த்தாள் நிஹாரிகா.
அந்த வார்த்தைகளில் உணரும் ஆறுதலை வெறும் பணத்தினால் கூட வாங்கிவிட முடியாது. அந்த நிதர்சனத்தை ஆரவ் உணராமல் போனதே நிஹாரிகாவின் விடயத்தில் அவனுக்கு துரதிஷ்டவசமாகிப் போனது.
இருவரும் தன்னிலை மறந்து ஒருவரையொருவர் நெருங்கி நின்றுக்கொண்டிருக்க, சிகிச்சை அறையிலிருந்து வெளியே வந்தார் டாக்டர்.
அவரைப் பார்த்ததும் உடனே விலகிக்கொண்ட யாதவ், “டாக்டர்…” என்று அவருக்கு பக்கத்தில் செல்ல, “நத்திங் டூ வொர்ரி, அவங்க பொழச்சிட்டாங்க. பட் தலையிலதான் பலமான அடி. இதுக்கப்பறம் ரொம்ப கவனமா இருக்கணும். என்ட், பேஷன்ட் இப்போ ஆப்சர்வேஷன்ல இருக்காங்க, மயக்கம் தெளிஞ்சதும் போய் பாருங்க” என்றவர் அங்கிருந்து நகர்ந்தார்.
நிஹாரிகாவுக்கு அப்போதுதான் நிம்மதி பெருமூச்சே வெளியானது
சரியாக நேரத்திற்கு ஆதிராவின் தந்தை மார்த்தாண்டம் அழைக்க, அவரிடமும் விடயத்தை சொன்னவள் அவர்களுக்காகவே அறைக்கு வெளியில் காத்திருந்தாள்.
இரண்டு மணிநேரத்தில் ஆதிராவும் கண் விழிக்க, குழந்தைப் போல் அழுத வண்ணம் அவளிடம் பேசியவள் யாதவ்வை அறிமுகப்படுத்த தவறவில்லை.
அந்த நிலையிலுல் யாதவ்வை நோக்கிய நிஹாரிகாவின் பார்வையில் ஏதோ ஒன்றை வித்தியாசமாக உணர்ந்த ஆதிரா அந்த நிலையில் அதைப் பற்றி மேலும் யோசிக்கவில்லை.
கிட்டத்தட்ட இருள் சூழ்ந்ததுமே ஆதிராவின் பெற்றோர் சென்னைக்கு வந்து சேர, அவர்களை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வந்ததுலிருந்து அவர்களுக்கான உணவு வரை அத்தனையும் பார்த்துப் பார்த்து செய்தான் யாதவ்.
“அம்மாடி, உன் உடுப்பெல்லா இரத்த கறையா இருக்கு, அதான் நாங்க வந்துட்டோம்ல நாங்க பார்த்துக்குறோம். நீ போய் வீட்டுல ரெஸ்ட் எடு, காலையில வந்தா போதும்”
ஆதிராவின் தாய் மங்கை சொன்னதும் அங்கிருந்து நகரப் போனவளை மீண்டும் நிறுத்தினார் பெரியவர்.
“ஆமா… யார் அந்த பையன்? ஆதிரா ஒரு முறை சொல்லியிருக்கா, அந்த பையனா அவன்? ரொம்ப நல்ல பையனா இருக்கான்ம்மா, உனக்காக ரொம்பதான் துடிக்கிறான், கெட்டியா புடிச்சுக்கோ!”
அவர் சொல்லிவிட்டு செல்ல, உள்ளுக்குள் என்றும் இல்லாத ஒரு புது உணர்வை உணர்ந்தாள் நிஹாரிகா.
காலையிலிருந்து விளையாடியதில் உண்டான களைப்பு அதற்குப் பிறகு மருத்துவனை என்று ஓய்வே இல்லாமல் ஓடிய ஓட்டத்தில் தன்னை மறந்து இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே உறங்கியிருந்தான் யாதவ்.
அவனுடைய பெயரைத் தவிர அவனைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், அவளுக்கானவன் அவன் என்று மட்டும் அத்தருணம் உணர்ந்தாள் நிஹாரிகா.
நினைவுகளிலிருந்து மீண்டவள் விழியோரம் கசிந்த நீரை துடைத்துவிட்டு வராண்டாவில் நடந்துச் செல்ல, ஆதிராவிடமிருந்து ஒரு அழைப்பு.
அழைப்பையேற்று காதில் வைத்தவள் மறுமுனையில் அவள் சொன்ன செய்தியைக் கேட்டு ஆனந்த அதிர்ச்சியில் விழி விரிக்க, அதேநேரம் இரண்டு நாட்களில் நடக்கவிருக்கும் இறுதி விளையாட்டுக்காக தீவிர பயிற்சியில் இருந்தான் யாதவ்.
*************
Waiting for your comments… 😍😍
