Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 39

அத்தியாயம் 39

 

வரும் வழி எங்கும் பல்லவியிடம் தான் பேசியதும் அவள் பாவனைகளும் என நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டே தான் வீடு வந்து சேர்ந்தான் கீர்த்திஸ்வரன்.

 



Advertisement

அவளைப் பார்த்து பேச வேண்டும் என்று நினைத்து அதை செயல்படுத்தியதைத் தவிர அங்கே நடந்த எதுவும் திட்டமிட்டு நடந்ததே இல்லை.

 

லதாவின் பெயரை சொல்லி தான் இவன் தன்னை காப்பாற்றி இருக்கிறான். நிச்சயம் லதாவை திருமணத்திற்கு பின் இவள் பார்த்துkக் கொண்டு இருக்க முடியாது என்ற அவனின் வார்த்தை தான் அனைத்தையும் மறக்க வைத்திருக்கும் என அவனுக்கே நூறு சதவீதம் தெரியுமே.

Advertisement

 

Advertisement

இப்படி நினைத்து சிரித்து ஒருவித இதமான மனதோடு ஈஸ்வர் வீடு வந்து சேர, அவனுக்காகவே காத்திருந்தார் லதா.

 

“ஈஸ்வர்!” என அவனைக் கண்டதும் அத்தனை ஆர்வமாய் அவர் பார்க்க,

Advertisement

 

“சாப்பிட எடுத்து வைங்க ம்மா. பிரெஷ் ஆகிட்டு வர்றேன்!” என மேலே சென்றுவிட்டான்.

 

“மூணு மணி ஆகுது. இன்னுமா சாப்பிடல!” என வாய்விட்டே சொல்லிக் கொண்டு அவனுக்கு லதா எடுத்து வைக்க,

 

“நீங்க சாப்பிட்டீங்களா?” என்றபடி சாப்பிட அமர்ந்தான்.

 

அவன் சாப்பிட்டு முடிக்கட்டுமே என நினைத்தாலும் ஆர்வம் தாங்கவில்லை லதாவிற்கு.

 

“சாப்பிட்டுட்டே பேசுவோமா ஈஸ்வர்?” என கேட்க,

 

“சாப்பிடும் போது பேசக் கூடாதுனு நீங்க தானே சொல்லிருக்கீங்க ம்மா!” என்றவன் விளையாடுவது அவன் குரலில் புரிய, முறைப்பாய் பார்த்து நின்றார் லதா.

 

 “வேணும்னே விளையாடுற?” என்று வேறு அவர் கேட்க,

 

“அப்படியா தெரியுது?” என்றவனும் வாய் திறக்கவில்லை.

 

“ரொம்ப பண்ற ஈஸ்வர். சொல்லு பேசிட்டியா இல்லையா?” என்று நேராய் கேட்ட போதும்.

 

“ம்ம் பேசிட்டேனே!” என்றான் சாப்பிட்டபடி.

 

“இவனோட…” என அருகிலேயே முறைத்தபடி அவர் நிற்க, நிறைவாய் சாப்பிட்டு எழுந்தவன்,

 

“சித்ரா அத்தைகிட்ட இந்த வாரமே பேசிடுங்க. அடுத்த வாரம் பல்லவி அப்பா சொந்தங்களும் வந்திட்டா பிரச்சனை ஆகிடும். அதனால அதுக்கு முன்னாடி பேசுற மாதிரி பார்த்துக்கோங்க!” என்றவன்,

 

“நாளைக்கு கூட நல்ல நாள் தான்!” என போகிற போக்கில் சொல்லி மாடி ஏற,

 

“ஈஸ்வர்! என்ன சொல்ற? அப்ப பல்லவி சம்மதிச்சுட்டாளா?” என்றவர் கண்கள் எல்லாம் மின்னியது.

 

“நான் கேட்லையே!” என்றவன் தலையில் கொட்டு வைத்தாள் என்ன எனும் அளவுக்கு கோபம் கூட வந்து விட்டது.

 

“என்னனு முழுசா சொல்லேன் டா. உங்கப்பாக்கு ஏழு மடங்கு அதிகமா பண்ற நீ!” என்றவர் கோபத்தில் சிரித்தவன்,

 

“நான் என் பக்கம் என்னென்ன சொல்லணுமோ எல்லாமே சொல்லிட்டேன். சோ அவகிட்ட எதையும் மறைக்கல. அந்த கில்டி இல்லாம இனி நான் அவளைப் பார்க்கலாம் பேசலாம். அண்ட் நீங்க பொண்ணு பார்க்கவும் போகலாம். அவ விருப்பம்னு கேட்டா ஹன்ட்ரேட் பெர்சென்ட் அவங்க அம்மா விருப்பம்ன்னு தான் சொல்லுவா. அப்போ இனி அத்தையை தான் பிடிக்கணும்!” என்றான் மாடிப்படிகளில் கையூன்றி.

 

“கோழிப் பிடிக்குற மாதிரி ஈஸியா சொல்ற?”

 

“ஈஸி இல்லை தான். ஆனா அவ்வளவு கஷ்டமுமில்ல. நீங்க பேசுங்க புரிஞ்சுப்பாங்க. அண்ட் முழுக்க முழுக்க என்னோட விருப்பம்னு உண்மையை சொல்லியே பேசுங்க!” என திரும்பியவன்,

 

“ஆனா ம்மா…” என நெற்றியை நீவிக் கொண்டு அன்னை பக்கம் திரும்பவும், எப்படி பேசலாம் என அவர் யோசித்துக் கொண்டிருந்தவர் என்னவென்று பார்க்க,

 

“அப்பா…” என்று அவன் இழுத்ததில்,

 

“அதான் நான் இருக்கேனே. நான் பாத்துக்குறேன்!” என்றுவிட்டார் நம்பிக்கையோடு.

 

அவன் சொல்லியதைக் கேட்டுக் கொண்ட லதா அடுத்து என்ற யோசனையோடு அமர்ந்திருந்தார்.

 

மகன் பேசி சென்றதை வைத்துப் பார்க்கும் பொழுது சித்ரா சம்மதித்தாள் திருமணம் உறுதி என புரிய, அடுத்ததாய் கணவன்.

 

அவரை என்ன செய்வது என பல யோசனைகள் மனதில் ஓட, மாலை அஞ்சலி வரவும் அவளுடனும் பேசிக் கொண்டு முடிவை உறுதிப்படுத்தினார்.

 

அதைப் போல அஞ்சலியுடன் மகேஸ்வரன் அறைக்கு இரவு ஏழு மணிக்கு வந்தார் லதா.

 

இருவரையும் பார்த்தும் அசட்டையாய் அவர் மொபைலைப் பார்க்க,

 

“நாங்க போறோம்!” என்றார் லதாவும் வேறு எங்கோ பார்வை வைத்து.

 

“நைட்டு ஏழு மணிக்கு வெளில என்ன வேலை உனக்கு? அதுவும் அவளையும் கூட்டிட்டு?” சிடுசிடுவென்று அவர் கேட்க, அஞ்சலி அன்னை கையைப் பிடித்தாள் கெட்டியாய்.

 

“கொஞ்சம் ஆள் நடமாட்டம் இல்லைனதும் உன் ஆட்டத்தை காட்டுறியோ? போறதா இருந்தா அப்படியே போய்டு!” என என்ன ஏதேன்றே கேட்காமல் மகேஸ்வரன் சத்தமிட,

 

“ஒரேயடியா தான் போகப் போறேன். அதுக்கு தான் சொல்லிட்டு போக வந்தேன்!” என்றார் அசராத லதாவும்.

 

“நல்லதா போச்சு. போறவ அவளை ஏன் கூட்டிட்டு போற?” 

 

“பின்ன என் பொண்ணை உங்ககிட்ட தனியா விட்டுட்டு போய் நான் என்னத்த பார்க்க போறேன்? நானே மனசொடிஞ்சு வீட்டைவிட்டு போறேன்!” என்று லதா சொல்ல, மகேஸ்வரனுக்கு இப்படி தான் படுக்கையில் இருப்பதை காரணம் வைத்து என்னவெல்லாம் செய்கிறாள் என அத்தனை கோபம் வந்தது.

 

“என்னனு சொல்லிட்டு கிளம்பு!” என்றார் அவரும் அதற்கு கோபத்தோடு.

 

“ம்மா! அப்பா நிஜமாவே வீட்டை விட்டு அனுப்ப பாக்குறாங்க. இந்த பிளான் வேண்டாம்!” அஞ்சலி லதா காதுகளில் கிசுகிசுக்க, லதாவிற்குமே கொஞ்சம் பயம் தான் இப்பொழுது.

 

“என்ன?” என மீண்டும் அவர் கத்த,

 

“என்ன சும்மா சும்மா கத்திகிட்டு இருக்கீங்க? அதான் போறோம் சொல்லிட்டேனே. என் ஒரே பையன் வாழ்க்கையே உங்களுக்கு முக்கியமில்லாம போச்சு. இனி இந்த வீட்டுல நான் எதுக்கு? அவன் ஆசைப்பட்ட வாழ்க்கையை கூட குடுக்க முடியலனா அம்மானு நான் எதுக்கு?” என்று ஆரம்பித்தார்.

 

“இதுக்கு தான் இவ்வளவு பேச்சா?”

 

“அவ்வளவு சாதாரணமா போச்சுல்ல உங்களுக்கு? அந்த பல்லவிக்கு கல்யாணமாம் அடுத்த வாரம் பொண்ணு பார்க்க அவங்க வீட்டுக்கு ஆளுங்க போறாங்களாம்” என்று லதா சொல்ல, பெரிதாய் எந்த ஒரு ஆச்சர்யமும் எல்லாம் இல்லை அவரிடம்.

 

“அதைக் கேட்டு ஈஸ்வர் எவ்வளவு கவலைல இருக்கான் தெரியுமா? உங்க சம்மதத்துக்காக காத்திருந்து இப்போ அவன் ஆசைப்பட்ட பொண்ணு அவனுக்கு இல்லைனா அவனுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்?” என்று லதா சொல்ல,

 

“அதைவிட ஒரு நல்ல பொண்ணா பார்ப்போம்னு அம்மாவா நீ தான் அவன் கூட இருக்கனும் உனக்கே அந்த அக்கறை இல்லை!” மகேஸ்வரன் சொல்லில், 

 

“ஆமா! அவன் பிடிச்சிருக்குன்னு சொன்ன பொண்ணை நீங்க வேண்டாம்னு சொல்லுங்க. நான் கூட இருந்து ஆறுதல் சொல்லுதேன். ரொம்ப தேவை தான். அவனை இப்படி கவலையா எல்லாம் என்னால பார்க்க முடியாது! அதான் வீட்டை விட்டு போறேன்!” என்றார் லதாவும்.

 

“ம்மா!” என ஒற்றை பையை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு அந்த நேரம் கீர்த்திஸ்வரன் வந்து நிற்க, இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

 

“நீ எங்க டா போற?” பல்லைக் கடித்து கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டார் மகேஸ்வரன்.

 

“எங்க போவான்? எங்கேயாவது போவான். அவன் கஷ்டம் அவனுக்கு தானே தெரியும். வாழ்க்கைல அவனுக்குன்னு ஆசைப்பட்டு எதாவது கேட்டிருப்பானா? அந்த பொண்ணு லாவண்யா… அவளை கூட நீங்க காட்டின ஒரே காரணத்துக்காக கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருந்தான் தானே? கேரக்டர் ஒத்து வரலைனதும் தான் வேண்டாம்ன்னு சொன்னான். அப்ப கூட அவனை எத்தனை பேச்சு பேசினீங்க? எல்லாத்தையும் கேட்டுட்டு சத்தமில்லாம தான் இருந்தான். இப்ப பாருங்க. அவனுக்குன்னு இருக்குற கடைசி ஆசை…” என்று லதா அடுக்கிவிட்டார்.

 

“கடைசி ஆசையா?” என அஞ்சலி சொல்லி அண்ணனைப் பார்க்க, அவன் எதுவுமே புரியாமல் நின்றான் அங்கே.

 

“நீ எங்கேயும் போக வேண்டாம் ஈஸ்வர். இது உன் வீடு. நீ இங்க ர் இருக்கனும். உன் கல்யாணத்தை உன் இஷ்டத்துக்கு நடத்த முடியாத பாவி நான் தான்!” என லதா அவனருகே சென்று மூக்கை உறிஞ்ச, ஈஸ்வரே நம்பிவிட்டான் அன்னை அழுறார் என்று.

 

“எல்லாம் உங்க வறட்டு பிடிவாதத்தால. இதோ இப்போ கீழ விழுந்து கால் கையை உடைச்சுட்டு வந்திருக்கிங்க. யார் பார்த்துகிட்டா? நான் தானே? நீங்க தான் வேணும்ன்னு என் அப்பாகிட்ட கேட்டு ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிட்டு வந்த நான் தானே நம்ம புருஷனாச்சேனு பாக்குறேன். அப்போ அவனுக்கு புடிச்ச பொண்ணு வந்தா தானே அவனையும் இதே மாதிரி அந்த பொண்ணு பார்த்துக்கும்?” என்று அவர் சொல்லவும்,

 

“என்ன லாஜிக் ம்மா இது?” என்றவன் அன்னையின் பேச்சை இப்பொழுது கண்டு கொண்டான்.

 

“இவ என்ன பேசுறா ஈஸ்வர்? அந்த பொண்ணு இல்லைனா உலகத்துல வேற பொண்ணே இல்லையா?” என மகன் மனதை மாற்ற என மகேஸ்வரன் கேட்க, தந்தையை தெரிந்தவனும்,

 

“நான் இப்ப அந்த பொண்ணு தான் வேணும்னு உங்ககிட்ட சொல்லல. ஆனா கல்யாணம்ன்னு என்கிட்ட இனி பேசாதீங்க. வேற யாரையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. கட்டாயப்படுத்தினா அடுத்து நான் என் முடிவை தேடிப்பேன்!” என்றவன் என்ன அர்த்தத்தில் கூறினானோ கேட்டவர் தான் திடுக்கிட்டார்.

 

“அவ்வளவு தான். அவன் மனசு மாற மாட்டான். அடுத்த வாரம் பொண்ணு பார்த்துட்டு போறவங்க அடுத்த மாசத்துலயே கல்யாணம் பண்ணி வைக்க போறாங்க. என் பையன் வாழ்க்கை தான் இங்க எல்லாருக்கும் விளையாட்டா போச்சு இனி இந்த வீட்டுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. உங்களுக்கும் எனக்கும் கூட எந்த சம்மந்தமும் இல்ல. என் பொண்ணை நான் பார்த்துக்குறேன். ஈஸ்வர் கோலத்தை இனி என்னால பார்க்கவே முடியாது!” என்றவர் ஏங்கியபடி வெளியேற, அஞ்சலி தந்தையைப் பார்த்துவிட்டு,

 

“ம்மா ம்மா!” என அவளும் ஓடிவிட்டாள்.

 

ஈஸ்வர் அப்போதும் யோசனை முகமாய் தந்தை முன் நிற்க, “ஈஸ்வர்! நான் சொல்றதை…” என பேச வந்தவரை,

 

“ப்பா ப்ளீஸ்! அந்த பொண்ணு வேண்டாம்ன்னு சொல்றதை நீங்க பேசாம இருக்குறது பெட்டெர். அதான் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டேன்ல?” என்றவனும் வெளியேற,

 

“ஈஸ்வர்.. ஈஸ்வர்.. லதா… அஞ்சலி…” என ஒவ்வொருவரையாய் அழைத்து மகேஸ்வரன் சத்தமிட, மூவருக்கும் வெளியில் அத்தனை சிரிப்பு.

 

“அப்பா பாவம் ம்மா!” அஞ்சலி சொல்ல,

 

“பாவமாம் பாவம். அகம்பாவம் பிடிச்சு லதானு கட்டைக் குரல்ல கத்துனவரை லதானு இப்படி கெஞ்சுறப்ப கேட்குற சுகம் இருக்கே…” என்ற லதா சொல்லில் இன்னுமே சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது ஈஸ்வருக்கு.

 

“நீ சைட்டு விஷயமா கேரளா தானே போற? வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் வா!” என சொல்லி அனுப்பி வைத்தார் லதா மகனை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!