Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

anbae nee puyalaa mazhaiyaa poonthendralaa

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா?- 19.1

அத்தியாயம் 19.1:

 

 

 



Advertisement

 

நவ்யா பண்ணையார் வீட்டை விட்டு சென்றதும், அவளை தடுக்காது நம்பி உமா மற்றும் அம்முவும் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார். 

 

Advertisement

 

Advertisement

 

“எல்லாரு எங்களை மன்னித்துவிடு்ங்க…  நவ்யா இந்த மாதிரி தரம் இறங்கி நடந்துக்குவான் நான் நினைத்ததுக்கூட பார்த்தது இல்லை… அவ அம்மா இல்லா வளர்ந்துவ… அம்மாவோட பாசம் கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கவில்லை… தந்தையின் ஆதரவு தேவைபட்டது இடத்தில் அவளுக்கு சரியான தந்தையா நான் நடந்துக்கவில்லை”. 

 

Advertisement

 

 

 

நவ்யா இப்படி ஆனதுக்கு முழுக்கமுழுக்க நான் மட்டும் தான் காரணம்… அப்ப புரியாதது எல்லாம் இப்ப தான் புரியுது…  அவளை சரியான வழிக்கு கொண்டு வந்துடுடளாம்னு நினைக்கும் போது என் பெண்ணு என்னைவிட்டு ரொம்ப தூரம் போயிட்டா எனக்கூறி வருத்தப்பட்டவரை சாரதா, “இப்ப வருந்தி என்ன பண்ண நம்பி?… அப்பவே அவளை இங்கேயே விட்டுவிடு நாங்க பார்த்துகிறேம்னு சொன்னோம்… எங்க பேச்சை கேட்டையா?… அப்படி நீ கேட்டு இருந்தா,  அவ இவங்களேட ஒன்னா வளர்ந்து இருப்பா… 

 

 

 

 

அவளை விட்டு என்னால இருக்க முடியாதுனு சொல்லி கூட்டிகிட்டு போய், அவளை தனியாவிட்டுவிட்டு நீ உன் லேலையை பார்க்க போய்விட்ட… அவ சேரக்கூடாதவங்க்கூட கூட்டு சேர்ந்து இப்படி வந்தது நிக்கிற..

 

 

 

 

 

அவ இப்படி ஆனதுக்கு முழுக்கமுழுக்க நீ மட்டும் தான் காரணம் நம்பி” என்றவரை அமைதி படுத்திய நாச்சியார், “விடு சாரதா”… இனி நவ்யாவை பத்தி பேசி எதுவும் ஆக போறது இல்லை… இப்ப இந்த பொண்ணுங்களுக்கு என்ன பதில் சொல்லறது?… என்ன சமாதானம் சொன்னாலும் இந்த பிரச்சினை தீரபோறது இல்லை என்றவரிடம்… 

 

 

 

வேலம்மை, “இது இப்படியே முடிஞ்சிடபோற விஷயம்  இல்லை சம்மந்தி?…  அம்முவை காட்டி, இந்த நிகழ்வு அந்த பொண்ணுடைய எதிர்காலத்தைத்தான் பாதிக்கும்… யோசிச்சி முடிவுபண்ணுங்க என அழுத்திக்கூறியவர் விருந்தினர்கள் மற்றும் நம்பியையும் கீழே அழைத்துச்சென்றுவிட்டார்”. 

 

 

 

 

சந்திரன் உமாவிடம், “எங்க வீட்டிக்கு வந்து யாரும் அவமான பட்டது இல்ல ம்மா… முதல் முறையாக இப்படி நடந்திருக்கிறது… தயவு செய்து எங்களை மன்னித்துவிடு ம்மா… மன்னிப்பு கேட்பதாள் எல்லா சரியாடுமானான?… இல்ல தான் உமா”… 

 

 

 

உமா,  “ஐயா!”… “நீங்க வயதில் பெரியவங்க… ஏற்கனவே நாங்க என்ன பாவம் பண்ணுனமோ தெரியவில்லை… அம்மா அப்பா இல்லாம தனிய இருக்கோம், இதில் நீங்க இந்த மாதிரி பன்னி எங்க பாவத்தை மேலும் அதிகமாக்காதீங்க என்றவளை ஆதரவாக பார்த்தார்.

 

 

 

 

அவரின் பார்வையை உணர்ந்த உமா, “அவ பண்ணுன தப்புக்கு நீங்க என்ன பண்ணுவீங்க…  எல்லாம் எங்க நேரம் ஐயா… இதுக்கு எந்த வகையிலும் நீங்க பொறுப்பு கிடையாதுங்க ஐயா”…

 

 

 

 

“இந்த விஷயத்தை இப்படியே விட்டுடுங்க ஐயா… நாங்கள் வீட்டு போறோம் எனக்கூறி அம்முவை அழைத்துக்கொண்டு கீழே இறங்க முற்பட்டவளை ஒரு குறள் தடுத்தது”. 

 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

 

இவ்வளவு நேரம் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக இந்த அருண் தான் அவர்களை தடுத்து நிறுத்தியவன்.

 

 

 

 “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் உமா… ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் என்றவன்”… 

 

 

நாச்சியாரிடம், “பாட்டி… நான் எது பண்ணினாலும் சரியா இருக்கும்னு நம்பறீங்களா?”… “கண்டிப்பா நம்பறேன் அருண்…  என் பேரன்கள் யாரும் தப்பான வழியில் போக மாட்டாங்கனு முழுமையாக நம்பறேன் அருண்”. 

 

 

 

 

 

“பாட்டி… எனக்கு அம்முவை பிடிச்சிருக்கு… நான் அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடறேன்…  உங்கள எல்லாருக்கும் என்னுடைய முடிவில் சம்மதமா?” என்றவன்…  

 

 

 

 

“உமாவிடம் சென்று  அம்முவை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு… பரிதாபத்தால் நான் அவளை கல்யாணம் பண்ணிக்க கேட்கவில்லை உமா… எனக்கு அம்முவை பார்த்ததும் பிடித்துவிட்டது, அவளுடைய படிப்பு முடிந்ததும் எங்க குடும்பத்தோட வந்து பொண்ணுகேட்கலாம்னு ஆசைபட்டேன்….  ஆனா இங்க என்னென்னமோ நடந்துவிட்டது… எனக்கும் சரி, எங்க குடும்பத்திற்கும் சரி பணம் முக்கியமில்லை… குணம் தான் முக்கியம்… அந்த குணம் நிச்சியமா அம்முகிட்ட இருக்குனு இங்க இருக்க எல்லாருக்கும் தெரியும்… உங்களுக்கு சம்மதம் அம்முவை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க?”…

 

 

 

“பாட்டி, அம்மா, அப்பா உங்க எல்லாருக்கும் சம்மதமா இந்த கல்யாணத்தில்?”…. 

 

 

 

 

“அம்மு”… “உனக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?… கடவுள் ஆணையா பரிதாபபட்டு கல்யாணம் பண்ணிக்க கேட்கவில்லை அம்மு… முழுக்கமுழுக்க உன் மேல் உள்ள காதலால் கேட்கிறேன்…  உனக்கு சம்மதமா?… நல்லா யோசனை பண்ணி சொல்லு என்றவன் சென்று வெற்றியின் அருகில் நின்று கொண்டான்”.

 

 

 

 

வெற்றியோ ஆதரவாக அவனின் கையை இருக பற்றிக்கொண்டான்… அதில் ஆயிரம் யானைகளின் பலம் வர பெற்றவன் இவர்களின் பதிலுக்காக நிதானமாக காத்திருந்தான். 

 

 

 

 

 

இவனின் கூற்றை கேட்ட அனைவருக்கும் அத்தனை அதிர்ச்சி மற்றும் மகிழ்ச்சியாக இருந்தது. இதில் வெற்றியின் ஆதரவு இருப்பதை உணர்ந்தவர்கள் சற்று ஆசுவாசம் அடைந்தனர். விஷ்ணுவே ஜெயாவின் கையை ஆதரவாக பற்றிக்கொண்டு, அவருக்கு துணையாக இருந்தான். 

 

 

 

முதலில் நிலைக்கு வந்த தர்மன், “பெரியம்மா, அண்ணா எனக்கும் இந்த கல்யாணத்தில் சம்மதம்… அம்மு நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா கண்டிப்பா நம்ம வீடு உயிர்போடு இருக்கும்… இந்த பெண்ணைவிட குணசாலியா நம்ம வீட்டுக்கு மருமகளை நம்மாள கொண்டு வரமுடியாது”… என தன் கருத்தை கூறியவர் ஆதரவாக தன் பெரிய அன்னையை அனைத்துக்கொண்டார். 

 

 

 

 

சந்திரனுக்கு இந்த முடிவு சரியாக பட்டதால் கண்களால் தன் மனைவி இருவரிடமும் சம்மதத்தை பெற்றவர் அன்னை மற்றும் சிற்றன்மையிடமும் தன் சம்மதத்தை தெரிவித்தார். அவர்களும் அருணின் கூற்றுக்கு தங்கள் சம்மதத்தை தெரிவித்தனர்.

 

 

 

 

அதிர்ச்சியில் இருந்த அம்முவை அனைத்து நிகழ்வுக்கு கொண்டுவந்த ஜெயந்தி, “அம்மு”… “உன்னுடைய முடிவை நீ சொல்லு… யாரும் உன்னை வற்புறுத்த மாட்டாங்க” என்றவளிடம்…

 

 

 

அம்மு, “மதனி… என்னுடைய  எல்லா நல்லது கெட்டதும் உமா அக்கா தான் முடிவு பண்ணுவாங்க… அப்படி இருக்க என் வாழ்க்கையின் முக்கியமான, கல்யாணத்திற்கான அனைத்தையும் அக்கா தான் செய்வாங்க…  என் அக்கா என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சம்மதம் என்றாள்”… 

 

 

 

இவளின் தெளிவான முடிவை கேட்ட உமா, ‘பரமனின் தொல்லையிலிருந்து இருந்து அம்முவை இவர்களால் தான் காப்பாற்ற முடியும் என நினைத்தவள்’… “எனக்கும் இந்த திருமணத்தில் பரிபூரண சம்மதம்… ஆனா கல்யாணத்திற்கு பிறகு அம்மு படிப்பை கண்டிப்பா படிக்கனும்… இதற்கு சம்மதம் என்றாள் எனக்கும் சம்மதம் பாட்டி”. 

 

 

 

ஆனா உங்க அந்தஸ்துக்கு என்னால் சீர் செய்ய முடியாதுனு எனக்கு தெரியும் ஆனால் என்னுடைய சக்திக்கு தகுந்தமாதிரி அம்மாவுக்கு செய்வேன் பாட்டி என்றவளிடம்… 

 

 

 

சகுந்தலா,  “எங்களுக்கு பணம் பெருசு இல்ல உமா… இந்த குடும்பத்தை அன்பால் கட்டி காப்பாத்துனார் போது… பண்ணையார் வீட்டு மருமளா இல்லாம ஒரு மகளா இருந்தா போதும் உமா… கண்டிபா அம்மு நல்ல மகளா இருப்பானு எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது உமா” என்றவரிடம்…

 

 

 

உமா,  “அது எனக்கு தெரிந்ததால் தான சகுந்தலா ம்மா, அம்முவை இந்த வீட்டிக்கு மகளா அனுப்பி வைக்க சம்மதம் சொன்னேன்… அதுவும் இல்லாம இத்தனை நாள் அவளுக்கு கிடைக்காத தாய் அன்பும், தந்தையின் அரவணைப்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையினால் தான் ஒத்துக்கொண்டேன்… அதே மாதிரி அவளும் நடந்துக்குவான் நான் நம்பறேன் ம்மா”. 

 

 

[the_ad id=”6605″]

 

 

“பாட்டி, இங்க இருக்க எல்லாரு கிட்டையும் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் பேசனும்… இங்க வேண்டாம்… அந்த ரூம்க்கு போய்டலாம் என்றவள் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்”…

 

 

 

‘உமா என்ன பேச போகிறாள் என்பதை புரிந்து கொண்ட மல்லி, குட்டி மற்றும் வர்ஷாவையும் அழைத்துக்கொண்டு கீழே சென்றுவிட்டாள்’. 

 

 

 

 

இவர்கள் மூவரும் வெளியே சென்றதும் கதவை அடைத்துவிட்டு தங்களை பற்றிய உண்மையை கூற ஆரம்பித்தாள்…

 

 

 

 

*****************************************

 

 

 

“பாட்டி”… ‘நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி நானும் குட்டியும் அம்மு மற்றும் கண்ணன் கூட பிறந்தவ இல்ல’… குட்டி அம்முவோட சித்தப்பா பையன் என்றவளின் கூற்றில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

 

 

காயத்ரி,  “என்ன உமா சொல்லற?… அப்போ நீ பார்வதி பேத்தியில்லையா?”…  “ஆமாம் அம்மா…  நான் எந்த வகையிலும் அம்மு, குட்டி மற்றும் கண்ணனுக்கு உறவு இல்லை… ஏனா… எனக்கு அப்பா அம்மா யாரும் இல்லை… இதுக்கு மேல  என்னைய பத்தி எந்த தகவலும் நான் சொல்லகேட்காதீங்க… ஆனா அம்மு பத்தி நீங்க முழுசா தெரிஞ்சிக்கனும் என்றவள் தங்களின் உறவை பற்றி கூற ஆரம்பித்தாள்”.

 

 

“பருவதம் அம்மா பார்வதி பாட்டி பொண்ணு… பக்கத்து ஊருக்கு ஊர் வேலைக்கு வந்த பத்மநாதன் காதலித்து திருமணம் செய்து கொண்டாங்க… இவங்க காதலை பாட்டி ஒத்துகாதனால் அம்மா வீட்டைவிட்டு வந்து அப்பாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கனு உங்களுக்கே தெரியும்”…

 

 

 

 

கல்யாணம் பண்ணிகொண்ட கையேடு பத்மநாதன் தன் மனைவியை பார்வதியிடம் தான் கூட்டிக்கொண்டு வந்தார். 

 

 

 

 

மாலையும் கழுத்துமாக வந்து நின்ற பருவதத்தின் மீது இருந்த கோவத்தில் பார்வதி, “என்னைக்கு என்னைய மீறி இந்த பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டையோ அப்பவே நான் யாரோ நீ யாரோ…. இனி என் கண்முன்னே வராதே… போயிடு… இந்த ஊரைவிட்டு போயிடு எனக்கூறி கதவை அடைத்துவிட்டார்”. 

 

 

 

அதுவரை அன்னை மற்றும் மகளுக்கு இடையே வராது இருந்த பத்மநாதன் தன் மனைவியை சமாதானம் செய்து தன் சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு அழைத்துச்சொன்றுவிட்டார். 

 

 

 

 

“புதுமனைவியுடன் சென்ற பத்மநாதனை ஆத்திரம் தீரும்வரை அடித்த அவரின் தாய் மருதாயி அவர்களை விளக்கிவைக்காது ஏற்றுக்கொள்ளாமலும் வீட்டிற்குள் அனுமதித்தார்…  அதற்கு காரணம் அவரின் இரண்டாவது பையன், சண்முகம்”.

 

 

 

 

 

“சிறு வயதிலே கணவனை இழந்து, இரண்டு குழந்தைகளை வளர்க்க கஷ்டப்பட்டு, படிக்கவைத்த தன் அன்னையின் வேதனை புரிந்து அமைதியாக இருந்தார் பத்மநாதன். அதே போல் தான் பார்வதியின் மனநிலை அறிந்து அமைதி காத்தார்”. 

 

 

[the_ad id=”6605″]

 

 

 

பத்மநாதனின் தம்பி சண்முகமும் தன் அண்ணன் மற்றும் அண்ணியை முதலில் ஏற்றுக்கொண்டார். தன் புது அண்ணியா கண்டு அத்தனை மகிழ்ச்சி அவருக்கு. 

 

 

 

 

 

அந்த வீட்டில் சகஜமாக இருந்தது சண்முகம் மட்டுமே… அவர் தான் தன் அன்னையை சமாதானம் செய்து அன்பு அண்ணியுடன் பேசவைத்தார். 

 

 

 

 

பழகபழக பருவத்தின் குணம் பிடிபட சற்று சகஜமானார் மருதாயி… 

 

 

 

 

முதலில் அவரிடம் பேச பயந்த பருவதம், போகபோக அவரின் அன்பு மருமகளாகவும் அந்த வீட்டின் மகாலட்சுமியாகவும் இருந்தார். நல்ல மனைவியாக… நல்ல மருமகளாக… நல்ல அண்ணியாகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்ந்தனர். 

 

 

 

பணம் இல்லை என்றாலும் அந்த சின்ன குருவிக்கூட்டில் நிம்மதியா இருந்தனர். அவ்வபோது தன் அன்னைக்கு கடிதம் மூலமாக மன்னிப்பை வேண்டிவந்தார். சுந்தரத்தின் மூலமாக அன்னையின் நலனை அறிந்து கொள்வார்கள் பருவதம்… அன்னையை பற்றி கவலைபட்டத மனைவிக்கு இந்த ஏற்பாட்டை செய்து தந்ததார் காதல் கணவர் பத்மநாதன் தான். 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!