Niththirai Kalaiththa Maayaval 13
ஆசை வலையிடுதா
நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா
Advertisement
தனிமை உனை சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களிலெல்லாம்
Advertisement
கூந்தல் மணம் வருதா
Advertisement
குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே
குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே
வேறு என்ன வேணும்
Advertisement
மேகல் மழை வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்…
மாலை சந்திப்பதாக கூறியவள்… இரவு ஆகியும் வராமல் போக… அவனின் மனதில் எண்ணற்ற தவறான எண்ணங்கள் வந்து போய்க்கொண்டு இருந்தது….
ஏதேனும் தவறாக.. உயிருக்கு எதாவது நேர்ந்து இருக்குமோ… என்ற பல கேள்விகள் அவனின் மனதில் எழுந்தது….
இரவும் மணி பதினொனிற்கு வீடு திரும்பியவன்… மீராவின் நினைவுகளே மனதில் முழுதும் ஓடி கொண்டு இருக்க…. அவளின் கவலை இவனை வாட்ட துவங்கியது…
சிறிது நேரத்தில் அலறிய அலைபேசியை எடுத்து பார்த்தவன்… எதோ புது என்னில் இருந்து அழைப்பு வர… அதை எடுப்பதா வேண்டாமா என்ற மன குழப்பத்தில் அமர்ந்து இருக்க…
வேண்டாம் என்று விட்டுவிட்டு.. அமைதியாக அமர்ந்து இருந்தான்…
மறுபடியும் கைபேசி அலற… அதே புது எண்ணில் இருந்து அழைப்பு வர…எடுத்தவன்… மறுமுனையில்
அன்பு.. “ஐயம் சாரி அன்பு.. நான் வர தான் முயற்சி செய்தேன்… ஆனால் நண்பர்கள் அழைத்ததால் அருகில் இருக்கும் பப்பிற்கு அவர்களுடன் வந்து விட்டேன்” என்றாள் பாதி போதையில்….
“மீரா… எங்க இருக்க… ஏன் இவ்வளவு நேரமா போன் பண்ணல… இப்போ எங்க இருக்க… குடிச்சி இருக்கியா…. எங்க இருக்கேனு சொல்லு… நான் வந்து உன்னை கூட்டிட்டு வரேன் “….படபடவென பேசியவனை… இடை மறித்த மீரா…
[the_ad id=”6605″]
“ரிலாக்ஸ் அன்பு… ஐயம் பைன்… நீ பயப்பட வேண்டாம்…. நான் என்னோட நண்பர்களோட இருக்கேன்… அது இல்லாம நான் காஷ்மீர்ல இருக்க வைஷ்ணவி கோவிலுக்கு போய்ட்டு வரேன்… வர இரண்டு வாரம் ஆகும்… அதை சொல்ல தான் கூப்பிட்டேன்… அது இல்லாம என்னோட போன் தொலஞ்சி போச்சி… நானே உன்னை அழைக்குறேன்”… என்றாள் தட்டு தடுமாறி….
“என்ன மீரா சொல்லுற… காஷ்மீருக்கு எதுக்கு.. இதை பத்தி ஏன் என் கிட்ட முன்வே சொல்லல…. அது இல்லாம இரண்டு வாரத்தில் ஊருக்கு கிளம்பனும்… மறந்துட்டியா? அம்மா அப்பாவாய் பாக்க போகணும்… இப்போ போய் காஷ்மீர் போறேன்னு சொல்லுற? “…..பொரிந்தான் அன்பு
“ஓ… ஆமால… உன்னோட வீட்டுக்கு வேற போகணும்… அதை நான் மறந்துட்டேன் அன்பு… சரி பரவா இல்லை… நான் நாம் கிளம்பும் இரண்டு நாளிற்கு முன்பே வந்து விடுகிறேன்… பின் இருவரும் சேர்ந்தே செல்லலாம்” அதற்கு மேல் பேச அவளுக்கு தெம்பும் இல்லை….
அன்பின் பதிலையும் எதிர் பார்க்காமல் அழைப்பை துண்டித்து விட்டாள் மீரா…
மறுபடியும் அதே எண்ணிற்கு அன்பு அழைக்க… அது சுவிட்ச் ஆப் என்று வந்தது… வேறு வழி இன்றி இரன்டு வாரங்கள் அவன் காத்திருக்க ஆரம்பித்தான்…
இடையில் வேலுச்சாமி வேறு… வந்து விடும் படி.. பல முறை அழைத்து இருந்தார்… முடியாது என்று கூற இயலாமல்… வருவதாக கூறி சமாளித்து வந்தான்…
இரண்டு வாரமும் கடந்தது….மீரா கூறிய படி அவள் வரவில்லை… அவளை தொடர்பு கொள்ள பல முறை முயற்சி செய்தும்…இயலாமல் போனது அன்பிற்கு…
மீரா யார் என்ற குழப்பம் அன்றில் இருந்து ஆரம்பித்தது அன்பிற்கு…அவளுக்கு எதாவது நேர்ந்து இருக்குமோ… காதலித்த பெண்ணை இப்டி தனியாக விட்டு செல்கிறேமே என்ற வருத்தம் வேறு…
வேலுச்சாமி வேறு இடையில் இரு முறை அழைத்து… நிச்சயம் வர வேண்டும் என்று கட்டளை இட்டார்… வரவில்லை என்றால் தானே நேரில் வருவதாக வேறு கூறி வைக்க… வேறு வழி இல்லாமல் அன்பும் கிளம்பினான்….
நடந்தவற்றை இலக்கியனிடம் கூறியவன்…
இன்னைக்கு வரைக்கும் மீரா என்ன ஆனானு ஒரு தகவலும் தெரியல… அவளுக்கு அழைத்தாள்… சில நேரத்தில் அழைப்பு போவதில்லை… மீறி போனால்… யாரும் எடுப்பதில்லை…
அவளுக்கு எதாவது நேர்ந்து விடுமோ என்ற குற்ற உணர்ச்சி ஒரு புறம் என்றாள்… யார் என்றே தெரியாதா ஒரு பெண்ணை இங்கு கொண்டு வந்து… கஷ்ட படுத்துவதை நினைத்தால் இன்னும் மனம் சஞ்சலம் தான் கொள்கிறது…
இதில் நான் முன் போல் இல்லைனு நீ கேட்கும் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்…
அமைதியாய் கேட்டு கொண்டு இருந்த இலக்கியன்… “அந்த ஷீலா சொன்னா விஷயத்தை நம்புறியா… அதுல எவ்வளவு உண்மை இருக்கும்னு நினைக்குறே? “
[the_ad id=”6605″]
நான் அதை பற்றி யோசிக்கவும் விரும்பவில்லை… தவறாக பேசியது மீராவை பற்றி… அவளை எதிரில் இல்லாமல்… அவளை பற்றிய எந்த முடிவிற்கும் நான் வர விரும்பவில்லை….
அப்போ இனியவளோட நிலைமை… “அவுங்க தான் உன்னோட பொண்டாட்டினு இந்த ஊரே நெனச்சுக்கிட்டு இருக்கு… இப்போ போய் அவுங்கள யாரோ ஒருத்தர்னு சொன்னா… அது அவுங்களுக்கு தானே அசிங்கம்”
அது இல்லாமல்… என்னோட கேள்விக்கு உண்மையா… மனசாட்சியை தொட்டு பதில் சொல்லு…
“உனக்கு இனியவளை பிடிக்கவில்லையா… அவர்களை உன்னோட மனது ஏற்று கொள்ளவில்லையா? ” நேரடியாபா விஷயத்தை கேட்டான் இலக்கியன்…..
என்ன பேசுற இலக்கியா? அது எப்படி முடியும்… என் மனதில் இருப்பது மீரா மட்டுமே… வேறு எதையும் பேசாதே
உன் மனதில் இருப்பது மீரா இல்லை அண்ணன்… மீராவை தவிக்க விட்டு வந்து விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி தான்… மேலும் தொடர்ந்த இலக்கியன்
ஆனால் இனியவளிடம் நீ நடந்து கொள்ளும் விதம்… அவளிடம் நீ காட்டும் உரிமை… அன்பு… அனைத்தும் தான் காதல் என்பது…. அது மட்டும் இல்லாமல்… உன் பார்வை… அதை உன்னால் மறுக்க முடியாது… அந்த பார்வை காட்டும் தேடல்… அதில் இருக்கும் மதிப்பு இவற்றை போய் என்று கூற முடியாது உன்னால்… திடமாக இருந்தது இலக்கியனின் வாதம்…
ஏதேதோ பேசி குழப்பாதே… இலக்கியா… அதெல்லாம் எதுவும் இல்லை…
அப்டியா… சரி… உன்னுடைய மீராவை பற்றி இனியவளிடன் சொல்லி விடு… பிறகு அவள் எந்த முடிவு எடுத்தாலும் அதை நாம் ஏற்று கொள்வோம்….
என்ன… மீராவை பற்றி அவளிடம் கூறவா… அவள் இது எதுவும் வேண்டாம்… நான் இங்கு இருந்து செல்கிறேன் என்று கூறி விட்டாள்…
கூறட்டுமே… அது அவள் இஷ்டம்… அவள் முடிவு… அதில் தலையிட நாம் யார்.. போனால் போகட்டும் அண்ணா… அவனிடம் வார்த்தைகளை வாங்குவதற்கே முயற்சிதான் இலக்கியன்…
அது எப்படி… எங்கே செல்வாள் அவள்… குழந்தை வேறு கையில்…. என்று தடுமாறினான் அன்பு…
அது அவள் இஷ்டம் அண்ணா…. அதற்காக காலம் முழுதும் அவளை நம்முடன் வைத்து இருக்க முடியாதே…. நியமாய் பேசினான் இலக்கியன்….
இலக்கியனுக்கு பதில் கூற முடியாமல் போக… எதோ யோசனையில்… இலக்கியன் கூறியதற்கு சரி என்று கூறி விட்டான்…
அதே குழப்பத்துடன் தன் அறை சென்று படுத்தும் விட்டான்… ஆனால் பாழாய் போனா தூக்கம் தான் வரவில்லை அவனுக்கு….
“எத்தனை நாளைக்கு இப்டி தப்பிச்சிகிட்டு இருக்க போறேனு நானும் பாக்குறேன்….என்னைக்கு இருந்தாலும் உன் மனதின் மொழியை நீ கூறி தான் ஆக வேண்டும்…நான் உன்னை கூற வைப்பேன்”உறுதியாய் இருந்தான் இலக்கியன்….
அடுத்த நாள் காலை விடிந்த உடனேயே… அனைவரையும் அழைத்தார் வேலுச்சாமி… அனைவரும் வர…
நம்ப காயத்ரியை பொண்ணு பாக்க இன்னைக்கு வர சொல்லி இருக்கேன்… பையன் நம்ப ஊர் தான்… மதுரைல வேலை செய்யுறான்… நல்லா குடும்பம்.. காயத்திரியை எங்கயோ பார்த்து இருக்கான் போல… அவனுக்கு பிடிச்சி போனதால… பையனோட அம்மா அப்பா இன்னைக்கு இங்க வராங்க….
ஆனால் மாப்பிளை அடுத்த வாரம் தான் வரமுடியுமாம்… அதனால இன்னைக்கு சும்மா ஒரு சந்திப்பு மாதிரி வந்துட்டு போறாங்க… அறிவித்தார் அவர்…
வேலுச்சாமியின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாத குடும்பம்… அதை ஏற்று கொண்டு… அவர் அவர் வேளைகளில் இறங்கினர்…
மாலை போல் அவர்கள் வருவதாக கூறி இருக்க… அன்பை இனியவளிடம் அனைத்தையும் கூறி விடும் படி இலக்கியன் பல முறை வற்புறுத்த..
அன்பும்… இனியவளிடம்… “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்… தனியா” தயங்கிய படி நின்றான்…
“சொல்லுங்க… என்ன விஷயம்” செய்து கொண்டு இருந்த வேலையை விட்டு விட்டு… அவனை பேச அனுமதித்தாள்….
[the_ad id=”6605″]
“இங்க வேண்டாம்… நாம வெளிய போகலாம்… இங்க வெச்சி எதையும் பேச வேண்டாம்” என்றவனுக்கு சரி என்று பதில் அளித்தாள்…
“சரி அப்போ ஒன்பது மணிக்கு தயாரா இருங்க.. நாம கோவிலுக்கு போய் பேசுவோம்… வீட்டிலும் கோவிலுக்கு போவதாகவே சொல்லிடலாம்”
இதில் பிளானிங் வேறு என்று இருந்தது, மறைந்து கொண்டு கேட்டு கொண்டு இருந்த இலக்கியனுக்கு…
மாயம் தொடரும்…..
