Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

13. Ambal - உயிர் உருகும் காதல் எனதே

உயிர் உருகும் காதல் எனதே…..11

உயிர் உருகும் காதல் எனதே….11

ஆழ்ந்த உறக்கநிலையை யாரோ கலைத்துக் கொண்டிருந்ததில் வீராவிற்கு எரிச்சல் மிக,

“என்னம்மா…..”என்று கத்தியபடி வேகமாக எழுந்துவிட்டான் வீரா.அவன் இப்படி எழுவான் என்று எதிர்பாராத துர்கா இரண்டி பின் நகர்ந்து பக்கத்தில் இருந்த டீப்பாயில் இடித்து நின்றுவிட,தன் அறையில் நின்றிருந்த புதிய முகத்தை கண்டு அதிர்ந்து,குழம்பி பின் தெளிவடைந்தது.

“சாரி…..நான் அம்மானு நினைச்சிட்டேன்….”என்று தலையை கோதியபடியே மெலிதாக கூற,



Advertisement

“நல்லவேளை கதவை அடைச்சிட்டு வந்தேன்….இல்லை வெளில உள்ளவங்க எல்லாரும் உள்ள வந்திருப்பாங்க…..”

“என்ன எல்லாரும் வந்துட்டாங்கலா….அவ்வளவு நேரமா துங்கிட்டேன்….”என்று வேறு வீரா கேட்க,

“ஆமா வீராச்சாமி…..”என்றவளின் விளிப்பில்,அனைத்தையும் மறந்தவன்,

Advertisement

“அடிங்க…..”என்று வீரு கொண்டு எழுந்துவிட்டான்.

Advertisement

“அச்சோ கற்பூபூபூ……என்னை காப்பாத்து…..”என்று கத்திக் கொண்டே அவள் கதவை திறந்து கொண்டு வெளியில் ஓடிவிட்டாள்.அவளின் பின்னே ஓடி வந்த வீரா வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர்களை கண்டுவிட்டு தடுமாறி நின்றுவிட்டான்.

வரேவற்பறையில் பிரபஞ்சன்,சித்தார்த் மற்றும் இன்னும் சில உறவுகள் பேசிக் கொண்டிருக்க,திடீர் என்று துர்கா சத்தம் போட்டப்படி அறையில் இருந்து ஓடி வர அவளின் பின்னே வீராவும் வர பார்த்தவர்கள் அனைவருக்கும் முதலில் என்னவோ ஏதோ என்று தான் தோன்றியது.ஆனால் வீரா அசடு வழிந்தபடி நிற்பதைப் பார்த்த பிரபஞ்சனுக்கும்,சித்தார்த்துக்கும் ஏதோ புரிய சத்தமாகவே சிரித்துவிட்டனர்.அதிலும் பிரபஞ்சன்,

“என்ன மாப்பள…..காலையிலேயே தங்கச்சி கிட்ட விளையாடிக்கிட்டு இருக்க….நாங்க உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம்….சீக்கிரம் போய் குளிச்சிட்டு வாங்க….கோவிலுக்கு போகனும்…..”என்று கூற வீரா விட்டால் போதும் என்ற ரீதியில் ஓடிவிட்டான்.

Advertisement

இது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த கற்பகத்தின் மனது நிறைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.மருமகள் சத்தம் கேட்டதும் என்னவோ ஏதோ என்று தான் பயந்து போனார்.ஆனால் மகனின் முகத்தில் தெரிந்த அசடும்,மருமகள் முகத்தில் தெரிந்த குறும்பு சிரிப்பையும் கண்டவருக்கு கண்கள் கரித்துக் கொண்டு தான் வந்தது.பின்னே  மகனை இப்படி பார்த்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது.எப்போதும் உறக்கமின்றி சிவந்த விழிகள்,முகத்தில் ஒருவித இறுக்கம் இருந்து கொண்டே இருக்கும் ஆனால் இன்று தூக்கத்தின் களைப்பு மட்டுமே வீராவின் முகத்தில் தெரிய அந்த தாயின் முகத்தில் நிம்மதி பரவியது.

“என்ன கற்பூ….கண்ணு ரொம்ப வேர்க்குது…..”என்று அவரின் பின்னே நின்ற துர்கா கூற,அவளின் காதை பிடித்துவிட்ட கற்பகம்,

“ஏத்தம் ஜாஸ்திடீ உனக்கு…..என் புள்ளைய வம்பிழுத்துட்டு வாரியோ….”

“ஆமா சும்மா பொழுது போகலை அதான் உரண்ட இழுத்துட்டு வரேன்….நீயும் வாயேன் சேர்ந்து உரண்ட இழுப்போம்….துணைக்கு ஒரு ஆள் தேவைப்படுது….”என்று கூற,

“ஆத்தி என்னையும் கூட்டு சேக்கராளே இவளை….”என்று கரண்டியை எடுக்க,

“அச்சோ கற்பூ நோ வைலென்ஸ்….”என்று பின்னே நகர,

“அப்படியே நில்லுங்க….இப்படிபட்ட மாமியார்,மருமக ஜோடியெல்லாம் அமையரது அபூர்வம் சுத்தி போடனும்…..”என்ற நர்மதா இருவருக்கும் உப்பு மிளகாய் எடுக்க,

“கற்பூ…. என் பக்கத்துல நில்லு அப்ப தான் சுத்த முடியும்….”என்றவள் அவரை இழுத்து தன் பக்கத்தில் நிறுத்திக் கொள்ள,நர்மதா நிறைந்த மனதுடன் இருவருக்கும் சுற்றி போட்டாள்.

வீராபத்திரனுக்கு தன் அறையை விட்டு வெளியில் செல்லவே ஒரு மாதிரியாக இருந்தது.அதனால் அறையிலேயே நடை பயின்ற படி இருக்க,

“வீரா….”என்று தாயின் குரலில் தன்னை சமன் படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியில் வர,பிரபஞ்சன் மட்டும் தான் நாளிதழ் படித்துக் கொண்டு அமர்ந்திருத்தான்.வீரா அமைதியாக அவனிடம் சென்று அமர,

“வா மாப்பள….உனக்காக தான் எல்லாரும் காத்திக்கிட்டு இருக்கோம்….”

“எனக்காகவா….எதுக்கு…..”என்று தடுமாற்றத்துடன் கேட்க,பிரபஞ்சன் சிரித்துவிட்டான்,

“அடேய் மாப்புள…..எதுக்குடா இப்படி முகத்தை வச்சிருக்க….இங்க யாரும் உன்னை எதுவும் கேட்க மாட்டாங்க….அதுவும் புதுசா கல்யாணம் கட்டிகிட்டு விளையாடலானா தான் தப்பு….”என்று கடைசி வார்த்தைகளை அவனின் காதில் கூற,

“அத்தான்….சும்மா இருங்க….எல்லாம் அவளாள…..காலையிலேயே என்னை சீண்டி விட்டுட்டு போயிட்டா…..”என்று பல்லைக் கடித்துக் கொண்டு  கூறினாலும் நிச்சயம் அதில் கோபம் இல்லை என்று பிரபஞ்சனால் புரிந்து கொள்ள முடிந்தது.

“விடுடா விடுடா….எல்லார் வீட்டுலேயும் இது தான்….இனி நீயும் பழகிக்க….”என்று கூறிக் கொண்டிருக்கும் போதே,

“எதை பழக சொல்லிக்கிட்டு இருக்கீங்க….”என்றுபடி நர்மதா வந்துவிட்டாள்.

“அதான் பொண்டாட்டியை சாமளிக்கிறது கஷ்டம் அதை தான் பழகிக்க…..”என்று கூறிக் கொண்டிருந்தவனின் வார்த்தைகள் மனைவியின் முறைப்பில் அப்படியே நின்றுவிட்டது.

“அத்தான் இது தான் சொந்த வாயால சூனியம் வச்சிக்கிறது…..”என்ற வீரா சிரித்துவிட,

“சும்மா இருடா நானே எப்படி சாமாளிக்கிறது புரியாம நிக்குறேன்….”என்று பிரபஞ்சன் பாவமாக பார்க்க,

“அண்ணா,அண்ணி சாப்பிட வாங்க….அத்த கூப்பிடுறாங்க….”என்று வந்த துர்கா,அங்கே வீராவும் நிற்பதைக் கண்டு,

“அட நீங்களும் வந்துட்டீங்களா சாப்பிட வாங்க….”என்றுவிட்டு சென்றுவிட,இவளா நேற்று அப்படி உடைந்து அழுதவள்  என்று நினைக்காமல் இருக்கமுடியவில்லை வீராவினால்.

“இதோ வரேன்மா….வாடா மாப்புள…..”என்று மேலும் யோசிக்கவிடாது அவனை இழுத்துக் கொண்டு சென்றுவிட்டான் பிரபஞ்சன்.இப்படியாக காலை நேரம் இதமாகவே சென்றது வீராவின் வீட்டில்.

இதோ மறுவீட்டிற்காக துர்காவின் வீட்டிற்கு வந்திருந்தான் வீரா.நர்மதாவின் வீடு பக்கத்தில் என்பதால் அவள் அவர்களுடன் தான் இருந்தாள்.வீராவிற்கு தான் இதையெல்லாம் அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.ஏனோ பழைய நினைவுகள் அவனுள் எழும்பி அவனை அலைக்கழித்துக் கொண்டிருக்க,

“வரீங்களா என்னோட ரூமை காட்டுறேன்….”என்றபடி துர்கா வந்து நின்றாள்.

“ஆங்…இல்….”என்று அவன் ஏதோ கூறும் முன்,

“வாங்க….”என்று சற்று அழுத்துடன் கூற,அவளை ஊன்றி பார்த்தவன் ஏதும் கூறாமல் அவளின் பின்னே அறைக்குள் நுழைந்தான்.

“என்னாச்சு உங்களுக்கு….”என்று துர்கா கேட்க,வீராவிற்கு கோபம் தான் வந்தது.

“உனக்கே தெரியும்….தெரிஞ்சும் கேட்காத…..எனக்கு எரிச்சலா இருக்கு….”என்ற கோபத்தில் இறைய,

“இன்னும் அதை நினைச்சிக்கிட்டு நீங்க உங்களை மட்டும் கஷ்ப்படுத்திக்கல உங்களோட இருக்கிறவங்களையும் தான் கஷ்டப்படுத்திறீங்க….”

“அதுக்கு என்னை நான் எவ்வளவு தான் மாத்திக்க முடியும்….என்னால இவ்வளவு தான் முடியும்….ப்ச்….என்னால இயல்பா இருக்க முடியல துர்கா….உன்னால எப்படி இருக்க முடியுது….”என்று தன் மனதில் உள்ளதை ஒருவாராக கேட்டேவிட்டான்.

“ஏன்னா நான் உங்களை மாதிரி விரும்பி கல்யாணம் பண்ணிக்கலை….எனக்கு கடவுள் கொடுத்த வாழ்க்கையை நல்லபடியா வாழ தான் நினைச்சேன் ஆனா அது முடியல….என்னை சுத்தாமா பிடிக்கலைனு சொன்ன ஒருத்தரோட பெரியவங்க பேச்சுக்காக பொறுத்திக்க பார்த்து அதுல நான் உடைஞ்சு தான் போனேன்…ஒரு கட்டத்துக்கு மேல என்னால இந்த வாழ்க்கையை வாழ முடியாது புரிஞ்சு போச்சு அதோடு அதுக்கு முடிச்சு போட்டுட்டு வந்துட்டேன்…..நான் செஞ்சது எனக்கு சரினு பட்டுச்சு அதனால அதுக்கு அப்புறம் நான் அந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கவேயில்லை…..”என்றவள் இரண்டு நிமிடம் எடுத்துக் கொண்டாள் தன்னை மீட்டுக் கொள்ள,அதற்குள் வீரா ஏதோ கூற வர,அவனை கை நீட்டி தடுத்தவள்,

“இருங்க நான் பேசி முடிச்சிடுறேன்…..இது இந்த மாதிரி நினைப்பு உங்களுக்கு வரக்கூடாது இல்லையா….அதுக்கு தான்…..”என்றவள் மீண்டும் தொடர்ந்தாள்,

“நான் முடிஞ்சு போன அந்த வாழ்க்கையை பத்தி இனி யோசிக்க மாட்டேன்….ஏன்னா அதுல எனக்கு கிடைச்சது எல்லாம் அவமானமும்,வெறுப்பு தான்…..ஆனா உங்களுக்கு அப்படியில்லை….நீங்க காதலிச்சு கல்யாணம் பண்ணியிருக்கீங்க அந்த வாழ்க்கையை விரும்பி வாழவும் செஞ்சிருக்கீங்க….அது திடீர்னு முடிஞ்சு போனதை உங்களால ஏத்துக்க முடியல….நீங்க அதுலேயே நின்னுட்டீங்க….ஆனா உங்க முன்னால் பொண்டாட்டி நகர்ந்து போயிட்டாங்க…..இப்ப நான் என்ன கேட்குறேன்னா…..நீங்க இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போறீங்க…..”என்றுவிட்டு வீராவை கையை கட்டி பார்த்துக் கொண்டு இருக்க,அவளின் முகத்தை கூட ஏறிட முடியாமல் நின்றிருந்தான் வீரா.மனதெல்லாம் துர்கா கூறியவற்றில் தான் இருந்தது.தன் தவறும் புரிந்தது இதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் நின்றிருக்க,

“தப்பு செஞ்சிட்டு இப்படி தான நிப்பீங்க….”என்று துர்காவின் கேள்வியில் வீரா அதிர்ந்து நிமிர்ந்து பார்க்க,

“ஸ்கூல்ல புட் பால் மேட்சுல சண்டை போட்டுட்டு இப்படி நின்னீங்க அதை தான் சொன்னேன்….சரி அதை விடுங்க நான் கேட்ட கேள்விக்கு பதில் என்ன….”என்ற மீண்டும் தொடக்கத்திற்கு வர,வீரா தளர்ந்து அமர்ந்து விட்டான்.

“இந்த கேள்விக்கு நீங்க இதுவரைக்கும் பதில் எழுதேவில்லை அப்படி தான….இன்னைக்கு நீங்க எழுதி தான் ஆகனும்….சொல்லுங்க….”என்றுவிட,அவள் தன்னை சரியாக கண்டு கொண்டதில் எரிச்சல் தான் மேலோங்கி நிற்க,

“இது ஒண்ணும் ஸ்கூல் இல்ல…….நான் ஸ்டூடென்டும் இல்ல…..”என்று கோபமாக கூற,துர்காவிற்கு சிரிப்பு தான் வந்தது.தான் கூறியதற்கு அவள் சிரிப்பதை இன்னும் கோபம் அதிகரிக்க,

“என்ன சிரிப்பு…என் வாழ்க்கை உனக்கு சிரிப்பா இருக்கா….இதுக்கு தான் இந்த கல்யாணம் எல்லாம் வேண்டாம்னு சொன்னேன்….யார் கேட்டா….”என்றவனின் கோபத்தில் துர்காவின் முகமும் இறுக்கம் அடைய,

“பெரிய இவ மாதிரி அன்னைக்கு பேசின…..இப்ப நீயும் என்னை கிண்டல் தான் பண்ணுற…..”

“போதும் நிறுத்துங்க….”என்றவளின் கத்தலில் வீரா அதிர்ந்து நின்றுவிட,

“என்ன கிண்டல் பண்ணிட்டாங்க உங்களை…..நீங்களா ஒண்ணு நினைச்சிக்கிட்டா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்….”

“நான் பேசிக்கிட்டு இருக்கும் போது நீ சிரிச்சா…..”என்று வீரா கோபமாக கேட்க,

“சிரிச்சா…..அது உங்களை கிண்டல் பண்றாதா அர்த்தமா….நீங்க எப்படி இப்படி மாறுனீங்க….”

“மாறிட்டேன் இப்ப என்ன செய்ய முடியும்….என்னால திரும்பவும் மாற முடியலை….”என்றவனின் பதிலில் கோபம் தான் வந்தது துர்காவிற்கு இப்படி சிறு பிள்ளை போல அடம்பிடிப்பவனிடம் என்ன பேசுவது என்று துர்கா அமைதியாகிவிட்டாள்.அவள் ஏதாவது பேசுவாள் என்று நினைத்து என்று அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாவனுக்கு அவள் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும் மனது வலித்து வீராவிற்கு.

“இதுக்கு தான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்….பாரு உன்னை கஷ்டப்படுத்துறேன்….”

“இல்ல….”என்று அமைதியாக துர்கா கூற,

“என்ன இல்ல….”

“என்னை நீங்க என்னை கஷ்டப்படுத்தல…..உங்களை தான் கஷ்டப்படுத்திக்குறீங்க…..”

“எதாவது உளறிக்கிட்டு இருக்காத துர்கா….எனக்கு ஏற்கனவே உன்னை காயப்படுத்துறோம்னு மனசு கஷ்டமா இருக்கு….”என்றவனின் குரலில் இப்போது கலங்கி ஒலிக்க,

“இங்க பாருங்க…..எனக்கு மனசுல உள்ளதை தான் பேசிப் பழக்கம்….என்னை நீங்க எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தல….இன்னைக்கு இது போதும்….நீங்க ரெஸ்ட் எடுங்க…இன்னும் கொஞ்ச நேரம் தான் நைட் சாப்பிட்டுட்டு வீட்டுக்கு கிளம்பிடுவோம்….”என்றுவிட்டு அவள் அறையை விட்டு வெளியில் சென்றுவிட வீராவிற்கு மனது மீண்டும் தான் செய்வது சரியா,தவறா என்று ஊசலாட தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!