Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

29. ஷேஹா ஸகி - விழி கொல்லும் விஷமா நீ

விழி கொல்லும் விஷமா நீ Epi 18

 

விழி கொல்லும் விஷமா நீ..

EPISODE 18



Advertisement

 

“வராத டான்ஸ்ஸ வா வான்னா எப்படி வரும்? டேய் வருண் சைக்கோ நான் உன்ன சும்மா விட மாட்டேன்டா, எனக்கு பார்ட்டீல டான்ஸ் பண்ணணும்னு நான் கேட்டேனா இல்ல நான் கேட்டேனான்னு கேக்குறேன். ஆஆ…”

 

Advertisement

ஃபோட்டோ ஷூட் நடக்கும் ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி ஆதிரா கத்திக்கொண்டிருக்க, ஹாலின் பெரிய கதவின் நிலையில் சாய்ந்து நின்றவாறு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் சித்தார்த்.

Advertisement

 

தன் போக்கிற்கு வாயிற்கு வந்த சிலபல கெட்ட வார்த்தைகளையும் அவள் கொட்டி ஆதங்கத்தை தீர்க்கப் பார்க்க, திடீரென உள்ளுக்குள் ஏதோ ஒரு ஊசி துளைக்கும் பார்வையை உணர்ந்தாள் அவள்.

 

Advertisement

மனம் சொன்ன திசைக்கு சட்டெனத் திரும்பியவள் அங்கு நின்றிருந்தவனைப் பார்த்து ஏகத்துக்கும் முறைத்துத் தள்ள, அவனோ கூலாக அவளை நோக்கி வந்தவன், “இஸ் தெயார் எனி ப்ராப்ளம் ஸ்வீட்ஹார்ட்” என்று கேட்டான் வேண்டுமென்று அவளை சீண்ட எண்ணி.

 

அவனின் நக்கல் பார்வையில் பெண்ணவளுக் பிபி எகிறியது.

 

“என்ன நக்கலா, எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுதானே இருக்க, இட்ஸ் இர்ரிடேட்டிங்! அவன யாராச்சும் கொஞ்சம் நிறுத்துங்களேன்டா, என்னால முடியல”

 

அவள் கெஞ்சாத குறையாக சொல்லி தொப்பென்று அப்படியே தரையில் அமர்ந்துக்கொள்ள, சித்தார்த்தோ வாய்விட்டு சிரித்தான்.

 

“ஐ திங் ஹீ லவ்ஸ் யூ! ஏன் உனக்கு பிடிக்கலயா, இவ்வளவு பெரிய கம்பனி ஓனர், பணத்துக்கு பஞ்சமே இல்லை என்ட் பார்க்கவும் நல்லா இருக்கான். அப்பறம் என்ன?”

 

அவளை கூர்ந்துப் பார்த்தபடி அவன் கேட்க, சித்தார்த்தை அழுத்தமாக ஒரு பார்வைப் பார்த்தாள் ஆதிரா.

 

“இதை பார்த்து வரதுதான் லவ்வா ஹாஹாஹா… காதல பத்தி உங்க புரிதல் எந்தளவுக்கு இருக்குன்னு இப்போ எனக்கு புரிஞ்சிருச்சு” என்று நிறுத்தியவள் அவனின் கேள்வியான புருவ முடிச்சுகளைப் பார்த்து, “அது ரொம்ப அழகான ஃபீலிங் மிஸ்டர் சித்தார்த், எந்த நேரத்துல எப்படி வந்து தொலைக்கும்னு தெரியாது. அந்த பட்டர்ஃப்ளை ஃபீலிங் எனக்கு வருண் மேல வரல, சொல்லப்னா  இந்த உலகத்துல நாம எந்த திசைக்கு  போனாலும் நமக்கே நமக்கானவங்க மேல மட்டும் வர்ற ஃபீலிங் அது. உங்களுக்கான பொண்ண பார்க்கும் போது நீங்க ஃபீல் பண்ணுவீங்க, அப்போ என் நியாபகம் வரும்” என்றாள் புன்னகையோடு.

 

சில கணங்கள் முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல் அவளையே பார்த்திருந்தான் சித்தார்த்.

 

இரு புருவங்களை ஏற்றி இறக்கி அவள் என்னவென்று கேட்க, அவளின் பாவனையை ரசிக்கத் தூண்டிய மனதை அடக்கிக்கொண்டு முகத்தை திருப்பிக்கொண்டவன், அவளை நோக்கி கரத்தை நீட்டினான்.

 

ஆதிரா புரியாமல் பார்க்க, “எழுந்துரு, பார்ட்டீல எப்படி டான்ஸ் பண்ணணும்னு கத்து கொடுக்குறேன்” என்ற சித்தார்த் அவள் விழிகள் மின்ன அவன் கரத்தைப் பற்றியதும் அவளை தூக்கி நிறுத்தினான்.

 

அவளிடையில் அவனுடைய கரம் பதிந்திருக்க, மற்ற கரம் அவளின் கரத்தோடு பிணைந்திருந்தது.

 

“பதட்டப்படாம ரிலாக்ஸா டான்ஸ் பண்ணு, மேக்னெட் மாதிரி என்கூட சேர்ந்து ஆடணும், என் ஸ்டெப்ஸ்ஸுக்கு உன் ஸ்டெப்ஸ் ஒத்து போகணும்”

 

அவன் சொல்லிக்கொண்டே கால்களை முன்னும் பின்னுமாய் கொண்டு வந்து நடனமாட, அவளும் அவன் விழிகளைப் பார்த்தபடி அவனுக்கேற்ப ஆடினாள்.

 

வருணிடத்தில் உணராத அந்த பெயரறியாத உணர்வை சித்தார்த்திடத்தில் உணர்ந்தாள் ஆதிரா.

 

அவனுடைய தொடுகை அவளுக்கு அசௌகரியத்தை கொடுக்கவில்லை, வெட்கத்தை தூண்டி கன்னங்களை சிவக்க வைத்தது.

 

சித்தார்த்தின் விழிகளும் அவள் மீதுதான் பதிந்திருந்தன. இதுவரை அவனிடம் கொஞ்சிக் குழாவும் பெண்களையே பார்த்து பழக்கப்பட்டவனுக்கு ஆதிரா கொஞ்சம் வித்தியாசமாகத்தான் தெரிந்தாள்.

 

“இப்போ ஸ்லோவா ஸ்பின் பண்ணு” அவன் சொல்லிக்கொண்டே அவள் கரத்தை உயர்த்திப் பிடிக்க, பம்பரம் போல நின்ற இடத்திலேயே சுற்றினாள் ஆதிரா.

 

ஆனால், சட்டென உண்டான சிறு தடுமாற்றத்தில் கால் இடறி விழப் போனவள், ஆதாரத்திற்கு அவனின் சட்டையைப் பற்றிக்கொள்ள, அவளிடையைப் பற்றி இருவரும் விழாதவாறு கால்களை ஊன்று சமன்படுத்தி நின்றுக்கொண்டான் அவன்.

 

“அடிப்பாவி! உனக்கு உதவி பண்ண வந்த பாவத்துக்கு என்னையும் சேர்த்து இழுக்குற. ரொம்ப நல்ல எண்ணம்” என்று சித்தார்த் கேலியாக சொன்னவாறு அவள் முகத்தைப் பார்க்க, பெண்ணவளோ வெட்கத்தில் தடுமாறும் விழிகளை மறைக்க படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள்.

 

விழிகளை சுருக்கி அவளை ஊடுருவும் பார்வைப் பார்த்தவனுக்கு அப்போதுதான் இருவரும் நெருக்கமாக நின்றிருப்பதே மூளைக்கு உரைத்தது.

 

ஒரு ஆண்மகனாக அவனுக்குள் ஹார்மோன்கள் தாருமாறாக சுரக்க, அவனின் உடல் சூடேறியது.

 

அவளிடையில் பதிந்திருந்த அவன் கரத்தில் உண்டான அழுத்தமும் அவனின் சூடான மூச்சுக்காற்றும் பெண்ணவளின் உணர்ச்சியைத் தூண்ட அவன் விழிகளிலிருந்து பார்வையை கீழிறக்கி இதழைப் பார்த்தாள்.

 

அவளின் பார்வையும் அமைதியும்  அவளிடத்தில் அவனை அத்து மீற வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

“ஆ.. ஆதிரா” அவனுடைய இதழ்கள் உணர்ச்சிவசத்தில் மெல்ல மூணுமுணுக்க, மறுகணம் அவனின் முரட்டு இதழ்கள் அவளின் இதழை கவ்விக்கொண்டன.

 

சித்தார்த்தின் வேகத்தில் அவனின் சட்டைக் காலரை இறுக்கிப் பிடித்துக்கொண்டவளோ விழிகளை அழுந்த மூடியிருந்தாள்.

 

இரு கரங்களைக் கொண்டு அவளை தன்னோடு மேலும் நெருக்கியவன் இதழ் வழியே அவளுக்குள் மூழ்க முயற்சித்தானோ என்னவோ!

 

ஆனால் முதல் முத்தம் பெண்ணவளை சற்று தடுமாற வைக்க, அதை உணர்ந்தவனோ அவள் பின்னந்தலையை பற்றி முத்தப் போராட்டத்தை முழுதாக தன் கையிலெடுத்தான்.

 

சில நிமிடங்கள் கடந்தன. இருவரும் தானாக விலகிக்கொண்டனர்.

 

ஆதிராவிற்கு அவன் விழிகளை நேருக்கு நேராகப் பார்க்கவே சங்கடமாக இருந்தது.

 

என்றும் இல்லாத அமைதியோடு அவள் தரையை வெறித்திருக்க, அதுவே அவளின் துரதிஷ்டவசமாகிப் போனது.

 

ஒருவேளை அவன் முகத்தைப் பார்த்திருந்தால் ஆடவனின் இறுகிய முகம் அவளுக்கு அனைத்தையும் உணர்த்தியிருக்குமோ என்னவோ!

 

அன்றிரவு,

 

யாதவ்விடத்தில் ஏதோ ஒரு வித்தியாசம் புலப்பட்டது நிஹாரிகாவுக்கு.

 

‘ஒருவேள என்னை மன்னிச்சிட்டானா, என்னை நெஜமாவே ஏத்துக்கிட்டானா?’

 

அவளுக்குள் பல கேள்விகள் எழுந்தன. ஆனால் பதில்தான் கிடைத்தபாடில்லை.

 

‘மறுபடியும் எப்போ அர்ஜூ என்னை ஏத்துக்கிட்டு லவ்வோட பார்ப்பான்னு ஆர்வமா இருக்கு, அந்த நாள் ரொம்ப தூரத்துல இல்லன்னு மட்டும் புரியுது’

 

சிறு நம்பிக்கையோடு தனக்குள் நினைத்துக்கொண்டவள், தன் காதலை அவனுக்கு உணர்த்திய தருணத்தை நினைத்துப் பார்க்க நினைவலைகள் பின்னோக்கி நகர்ந்தன.

 

நாள் முழுக்க ஹாஸ்பிடலில் இருந்து களைத்துப் போயிருந்தவளை அவளுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றான் யாதவ்.

 

“இங்கேயே நிறுத்துங்க, நானே போயிக்குறேன். யாராச்சும் பார்த்தா அவ்வளவுதான்” என்று நிஹாரிகா சொன்னதும், வீதியோரமாக வண்டியை நிறுத்தினான் அவன்.

 

வண்டியிலிருந்து இறங்கியவள் வீட்டை நோக்கி செல்ல இரண்டடி வைத்து பின் என்ன நினைத்தாளோ!

 

மீண்டும் திரும்பி அவனின் அருகே வந்து நிற்க, “போகல்லையா?” என்று கேட்டான் யாதவ் புரியாமல்.

 

“தேங்க்ஸ்! நீ பக்கத்துல இருந்தது ரொம்ப ஆறுதலா இருந்துச்சு அர்ஜூ” என்று அவள் சொல்ல, அவளை விழிகளை கூர்மையாக்கிப் பார்த்தான் அவன்.

 

“ரியலி! இட்ஸ் ப்ளெசர் டூ மீ நீஹா, சரி நீ கெளம்பு, உன் அம்மா பார்த்தா தேவையில்லாத ப்ராப்ளமாகிரும்” என்றுவிட்டு அவன் வண்டியை உயிர்ப்பித்து திருப்பப் போக, “ஹேய் வெயிட்!” என்றவள் அவனை கைகளைப் பிசைந்தபடி சிறு தயக்கத்தோடு பார்த்தாள்.

 

“நெஜமாவே உனக்.. உனக்கு என்னை பிடிச்சிருக்கா, இன்னைக்கு எனக்காகதான் நீ வந்தீயா?” அவள் தயங்கித் தயங்கிக் கேட்க, உதட்டை சுழித்து யோசிப்பது போல் பாவனை செய்தவன் வண்டியிலிருந்து இறங்கி அவளை நெருங்கி நின்றான்.

 

“அது நீஹா… இந்த மாதிரி சோஷியல் சர்வீஸ் பண்ணா புண்ணியம் கிடைக்கும்னு பெரியவங்க சொன்னாங்க. அதான்…” அவன் தீவிர முகபாவனையோடு சொன்னான்.

 

அவனின் கேலியில் முறைத்துப் பார்த்த நிஹாரிகாவுக்கும் சிரிப்பு வர, சிரித்தவாறு நகரப் போனவளின் கரத்தைப் பற்றியிழுத்தான் யாதவ்.

 

“உன்ன பிடிக்குமான்னு கேட்டல்ல, ஒரு உண்மைய சொல்லட்டா? எனக்கு கிரிக்கெட்னா உயிரு, இப்போ… உன்ன விட அந்த பேட் வேல்யூ இல்லன்னு தோனுதுடீ. உன் கூட இருக்கணும் போல இருக்கு, புயல் மாதிரி என் வாழ்க்கையில வந்திருக்க. என்னைக்கும் உன்னை விட்டுக்கொடுத்துர மாட்டேன். யூ ஆர் மைன் நீஹா”

 

யாதவ் விழிகளில் காதலோடு சொன்ன வார்த்தைகள் அவள் ஆழ்மனதைத் தொட்டன.

 

அவனையே இமை வெட்டாமல் பார்த்திருந்த நிஹாரிகாவின் கரம் அவன் கரத்தோடு தானாக பிணைந்துக்கொண்டது.

 

காதல் எத்தனை அழகென்று முதல் தடவை யாதவ்விடத்தில் உணர்ந்தாள் பெண்ணவள்.

 

யாதவ்வின் பார்வையோ அவளிதழில் பதிய, அந்த செவ்விதழ்களின் ஈரம் அவனை ஈர்த்தது. இடம் பொருள் மறந்து அவளிதழை நோக்கி குனிந்தான்.

 

ஆனால் ஆடவனின் சூடான மூச்சுக்காற்று அவள் முகத்தில் பட்டதுமே நடப்புக்கு வந்தவள், சட்டென்று தன்னை நெருங்கியிருந்த அவனிதழில் ஒற்றை விரலை வைக்க, திருதிருவென்று விழித்தான் யாதவ்.

 

அவனை முறைக்க முயன்று சிரித்தவள், அவன் மார்பில் கை வைத்து தள்ளிவிட்டு அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணம் செல்ல, போகும் தன்னவளையே காதலோடு பார்த்திருந்தான் யாதவ்.

 

அதன் பிறகான நாட்களில் ஆதிராவை டிஸ்சார்ஜ் செய்ததுமே சொந்த ஊருக்கே அழைத்து சென்றுவிட்டனர் மார்த்தாண்டமும் மங்கையும்.

 

யாதவ்வோடு குறுஞ்செய்தி அழைப்புக்கள் ஒருசில சந்திப்புக்கள் என நிஹாரிகாவுடைய நாட்கள் நகர, இன்னும் தன் காதலைதான் அவனிடம் வெளிப்படையாக சொல்லவில்லை அவள்.

 

கூடவே, ஆரவ்வை வெகுவாக தவிர்க்க ஆரம்பித்தள் அவள்.

 

அன்று,

 

“அம்மாடீ, ஆரவ் தம்பி காலையில கால் பண்ணிச்சு நீ அதிகமா பேச மாட்டேங்குறன்னு சொன்னாரு, நீதான் தினமும் கால் பேசிட்டுதானே இருக்க அப்பறமென்ன?”

 

என்று ராதா அடுப்பில் எதையோ கிளறியபடி கேட்டதும் அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.

 

“அம்.. அம்மா, நீ ஏதாச்சும் சொன்னியா?” அவள் பயந்து போய் கேட்க, “நான் என்னத்தடீ சொல்ல! சரிப்பா அவகிட்ட நான் பேசிக்கிறேன்னு சொல்லிட்டு வச்சுட்டேன்” என்று அவர் சொன்னதும்தான், அவளுக்கு ‘அப்பாடா’ என்றிருந்தது.

 

ஆனாலும் ஏனென்று தெரியாத ஒரு பதற்றம் உள்ளுக்குள் சூழ்ந்துக்கொள்ள, அறைக்குள் சென்று கதவை சாற்றிக்கொண்டவளோ நெற்றி வியர்வையை புறங்கையால் துடைத்தபடி குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தாள்.

 

‘நீ பண்றது ரொம்ப தப்பு நீஹா, ஆரவ் வாழ்க்கையில இருந்து நீ விலகாம யாதவ்வ உன் வாழ்க்கைக்குள்ள எடுத்திருக்க கூடாது. ஆரவ்கிட்ட பொறுமையா உண்மைய சொல்லணும், அவன்.. அவன் கண்டிப்பா உன் மனநிலைய புரிஞ்சுப்பான். நெஜமாவே புரிஞ்சுப்பானா?’

 

தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள் அவள். ஆரவ்வை நினைத்தாலே அவளுக்குள் பயபந்து உருண்டோடியது.

 

அடுத்த சில நாட்களில் யாதவ் கிரிக்கெட் தெரிவுக்காக மும்பை சென்றிருக்க, பயிற்சிகளிலும் தன் சகாக்களோடும் இருந்தவனுக்கு அலைப்பேசியை எடுக்கவே நேரமிருக்கவில்லை.

 

முழுநேர பயிற்சி முடிய கட்டிலில் விழுபவன் களைப்பிலேயே உறங்கிவிட, அவ்வப்போதுதான் நிஹாரிகாவின் நினைவில்  அவளுக்கு அழைத்து பேசுவான். அதுவும் சில நிமிடங்கள்.

 

நிஹாரிகா முதல் தடவை பிரிவின் வெறுமையை உணர ஆரம்பித்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

அதிகமா தனிமையை உணர ஆரம்பித்தாள், யாதவ்வின் குரலைக் கேட்க மனம் ஏங்கியது. அந்த ஏக்கம் அவனிடத்தில் உரிமை கலந்த கோபமாக மாறத் தொடங்கியிருந்தது.

 

ஒவ்வொரு நாட்களையும் அவனுக்காக கழித்தாள் அவள்.

 

இரண்டே வாரங்களில் மீண்டும் சென்னைக்கே வந்தான் யாதவ்.

 

அன்று கல்லூரியில் நடக்கும் விழாவுக்காக கல்லூரி பெண்கள் அத்தனைப் பேரும் சேலையில் வந்திருக்க, வேண்டா வெறுப்பாக கல்லூரி மண்டபத்திற்கு முன்னே கோலமிட்டுக் கொண்டிருந்தாள் நிஹாரிகா.

 

திடீரென ஒரு அழைப்பு. திரையைப் பார்த்தவளுக்கு திரையிலிருந்த பெயரைப் பார்த்ததும் அதிர்ச்சியில் விழிகள் விரிந்தன.

 

வேகமாக அழைப்பையேற்று காதில் வைத்தவள், “அர்ஜூ…” என்று அழைக்க, அந்த அழைப்பில் புன்னகைத்தவன், “காலேஜ் பக்கத்துல இருக்குற கஃபேல உனக்காகதான்  வெயிட் பண்ணிட்டு இருக்கேன் நீஹா, சீக்கிரம் வா..” என்றுவிட்டு மறுகணம் அழைப்பைத் துண்டித்திருந்தான்.

 

நிஹாரிகாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

 

தலையில் வெளிப்படையாக அடித்துக்கொண்டவள் கையிலிருந்த கோலமாவை தூக்கிப் போட்டுவிட்டு அரக்கப் பறக்க அந்த இடத்தை நோக்கி ஓடினாள்.

 

சுற்றியிருந்தவர்களோ தங்களுக்குள் கிசுகிசுத்த வண்ணம் சேலையை தூக்கிக்கொண்டு ஓடுபவளைதான் விசித்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

ஆனால் எவருடைய பார்வையையும் அவள் கண்டுகொள்ளவில்லை.

 

அவன் சொன்ன இடத்திற்கு வந்தவள் உள்ளே நுழைந்து மூச்சு வாங்கியபடி சுற்றிமுற்றி தேடினாள்.

 

‘இங்கதானே இருக்கேன்னு சொன்னான், யாரும் இல்லயே! ஒருவேள என்கிட்ட விளையாடினானா?’ எதிர்பாராத ஏமாற்றத்தில் அவளுக்கு அழுகை வருவது போலிருந்தது.

 

சட்டென, “வன் மந்த் பிரிஞ்சு இருந்ததுக்கு இப்படியொரு தரிசனத்த நான் எதிர்பார்க்கல, ஸாரில ரொம்ப அழகா இருக்க நீஹா” என்ற குரல் பின்னாலிருந்து நெருக்கமாகக் கேட்க, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

 

ஆம், சாட்சாத் அவளவனேதான்.

 

நிஹாரிகாவின் விழிகளில் அவனைப் பார்த்த ஆனந்த அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிய, புடவை யில் தரிசனம் கொடுத்த தன்னவளை இமை வெட்டாமல் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் யாதவ்..

 

 

*********

 

உங்க கமென்ட்ஸ்ஸ ஆவலோட எதிர்பார்த்துட்டு இருக்கேன் டியர்ஸ்.. 😍😍

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!