ஊஞ்சலாடும் முகிலே 41
அத்தியாயம் 41
எதுவும் பேசாமலேயே மூச்சு வாங்க அமர்ந்திருந்தாள் பல்லவி. வேலை கேட்டு ஈஸ்வர் வீட்டிற்கு தான் சென்றதிலேயே பெரிதாய் விருப்பம் இல்லை அன்னைக்கு என அவளுக்கே தெரியும்.
Advertisement
அப்படி இருக்க அவன் வீட்டிலிருந்து பெண் கேட்டு வந்தால்? அன்னை எண்ணமும் செயலும் என்னவாய் இருக்கும் என நினைத்தும் பார்க்க முடியவில்லை அவளுக்கு.
தந்தை உறவுப் பக்கம் பெண் பார்க்க வருவதாய் சொல்லிய அன்று அத்தனை மகிழ்ந்திருந்தார் சித்ரா. அது கணவனுக்காக என புரிந்தது பல்லவிக்கு.
Advertisement
Advertisement
இப்பொழுதும் அந்த திருமணத்தை நடத்திட தான் என்னென்ன செய்ய வேண்டும் என அவர் யோசித்துக் கொண்டிருக்க, பல்லவி வாயே திறக்கவில்லை அன்னையிடம்.
இன்றோடு மூன்றாவது நாள் ஈஸ்வர் பல்லவியிடம் பேசி. இதுவரை அன்னையிடம் எதையும் மறைக்காத பல்லவி முதன்முறையாய் ஈஸ்வரை சந்தித்தது முதல் அடுத்து எதுவும் பேசவே இல்லை அன்னையிடம்.
Advertisement
கல்லூரியும் இன்னும் பத்து நாட்களில் முடியவிருக்க, இந்த நேரத்தில் அவளுக்கான மன உளைச்சல் அவள் மட்டுமே அறிந்தது.
என்னவோ இரு குடும்பத்திற்குள்ளும் பெரிதாய் ஒரு விரிசல் விழப் போவதாய் தான் அவள் கருதினாள்.
நிச்சயம் தன் அன்னையோடு ஈஸ்வரின் தந்தையுமே இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வாய்ப்பில்லை என்று அவளுக்கே தெரிந்தது.
இப்படி இருக்க இந்த ஈஸ்வர் ஏன் இப்படி பேசி மனதில் ஆசையை வளர்த்துக் கொள்ள வேண்டும்? அதுவும் பல மாதங்களாய்.
கொஞ்சமேனும் உறவு எனும் கயிறு ஒட்டிக் கொண்டிருக்க, எங்கே மொத்தமாய் அந்து கொள்ளுமோ என அத்தனை பயம் அவளுக்கு.
யாரையும் காயப்படுத்தும் எண்ணம் இல்லை. எந்த பாதகமும் அமைவதை அவள் விரும்பவில்லை. எங்வ் லதாவின் உறவை முற்றிலும் இழக்க வேண்டி வருமோ என அத்தனை தவிப்பு உள்ளுக்குள்.
இத்தனை நாட்களும் திருமணத்திற்கு பின் லதாவை கணவனுடன் சென்று பார்த்து வரலாம். அப்பொழுது மகேஸ்வரன் பிரச்சனை செய்ய வாய்ப்பில்லை என்று நினைத்திருக்க, ஈஸ்வர் சொல்லிய ‘கிழிச்ச நீ!’என்ற வார்த்தை அதில் கல்லை தூக்கிப் போட்டிருந்தது.
வருபவன் நிச்சயம் அனுமதி தருவான் என என்ன நிச்சயம்? என அவளுக்கு அவளே நினைக்கும்படிக்கு ஈஸ்வர் தான் குழப்பி விட்டிருந்தான்.
இப்பொழுது ஈஸ்வர் வீட்டில் பெண் கேட்டு வந்தாலும் அது பிரச்சனையாகி குடும்பம் பிரியும் இல்லை அவர்கள் வரவில்லை என்றாலும் ஈஸ்வர் இவ்வளவு பேசியபின் அவன் வீட்டிற்கு சென்று உறவை வளர்த்துக் கொள்வது சாத்தியமா என பைத்தியம் பிடிக்கும் நிலை தான் பல்லவிக்கு.
‘நான் பார்த்துக்குறேன் பல்லவி!’ என்ற கீர்த்திஸ்வரனை இந்த நேரத்தில் கொஞ்சமும் நம்பவே இல்லை அவள்.
குடும்பமும் உறவும் சொந்தப்பந்தமும் என அதற்குள்ளேயே சுழன்று தலையைப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
கல்லூரிகாக்க செல்ல வேண்டியது இல்லை. இனி தனக்கான வேலைகள் தான் அதை வீட்டில் இருந்து பார்த்து அவர்கள் கொடுத்திருக்கும் நாளில் சென்று அதை விரிவுரையாற்றி வர வேண்டிய கடைசிகட்டம்.
இப்பொழுது பார்த்து எதுவும் செய்ய முடியாமல் சோர்வுடன் அறைக்குள் இருந்தாள்.
அதே நேரம் கேரளாவில் இருந்து ஈஸ்வர் வீடு வந்து சேர்ந்திருக்க, பூ, பழங்கள், வெற்றிலை பாக்கு என தயாராய் இருந்தார் லதா. அஞ்சலி கூட விடுமுறை எடுத்து அன்னையுடன் தயாராகி இருக்க, பார்த்ததும் கீர்த்திஸ்வரன் முகத்தில் சிறு வெட்கம் கலந்த புன்னகை.
“நான் தான் நீங்க போய்ட்டு வாங்க சொல்றேன்ல?” என்றவனுக்கு அன்னையின் பார்வை கூட என்னவோ போல இருந்தது முகம் சிவக்க.
“யாரு அந்த சின்ன அம்பானியை சமாளிக்க? அதெல்லாம் முடியாது. நீ கிளம்பி வா!” என்றுவிட்டார் லதா.
தந்தை அறையை ஒரு பார்வை பார்த்தபடி மேலே சென்றுவிட்டான் கீர்த்திஸ்வரன்.
நேற்றைய தினம் மகேஸ்வரன் வாயால் சம்மதத்தை வாங்கும் முன் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனை செய்திருந்தார் லதாவும்.
“இப்ப கூட ஈஸ்வர் போன் பண்ணினான். நீங்க பல்லவியை கல்யாணம் பண்ண சம்மதிச்சா தான் வீட்டுக்கு வருவானாம்” என லதா நேற்று மதியம் தானும் மகள் மற்றும் பையுடன் கணவன்அறைக்கு சென்று நிற்க, அதற்குமேல் அவரால் அவர்களை சமாளிக்கவே முடியவில்லை.
“இல்லைனா நானும் போறேன்!” என மகள் கையை லதா பிடிக்க,
தனக்கு இப்படியானதை அழகாய் ஆளாளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என தெளிவாய் புரிந்தது மகேஸ்வரனுக்கு.
“முடிவே பண்ணிட்டீங்க இல்ல?” என அவர் கோபமாய் கேட்டும்,
“பையன் வாழ்க்கையை விட உங்க ஈகோ உங்களுக்கு முக்கியம்னா என்னோட முடிவு இது தான்!” என்று சொல்லிவிட்டார் லதாவும் அசராமல்.
“என்னவோ பண்ணு!” என்று கோபமாய் சொல்ல, அவர் முன்னேயே கீர்த்திஸ்வரனுக்கு அழைத்த லதா,
“அப்பா ஓகே சொல்லிட்டாங்க ஈஸ்வர். நான் நல்ல நாள் பார்த்துட்டேன். நாளைக்கு விட்டா ஒரு வாரம் நல்ல நாள் இல்லை ள். நாளைக்கு போய் முடிவு பண்ணிட்டு வந்திருவோம்!” என அடுக்க, அத்தனையும் ஏற்கனவே முடிவாகி தன்முன் நடந்து கொண்டிருப்பதைக் கண்டு விழிப்பதை தவிர எதுவும் செய்ய முடியவில்லை மகேஸ்வரனால்.
அதன்பின் அனைத்தும் மடமடவென தயாராக, இதோ இப்பொழுது ஈஸ்வரும் வந்து சேர்ந்திருக்க, பல்லவி வீட்டிற்கு செல்ல தயாராகிவிட்டனர் லதா, அஞ்சலி, ஈஸ்வர் என மகேஸ்வரன் தவிர்த்து மற்றவர்கள்.
கிளம்பும் நேரம் ஈஸ்வர் தந்தையைக் காண உள்ளே வர,.
“ஈஸ்வர்! நீயும் உன் அம்மா மாதிரி பண்ணிட்டியே!” என்று மகேஸ்வரன் ஆதங்கம் காட்ட,
“அதெல்லாம் இருக்கட்டும். போய்ட்டு சித்ரா, பல்லவி முன்னாடி வீடியோ கால் பண்ணுவேன். சம்மதம்ன்ற வார்த்தை தவிர எதுவும் சொல்ல கூடாது. முடிஞ்சா சிரிச்சுகிட்டு சொல்லுங்க. இப்ப நல்ல நேரம் வந்துடுச்சு. நாங்க கிளம்புறோம்!” என்று சொல்லி ஈஸ்வரை இழுத்துக் கொண்டு பல்லவி வீடு வந்து சேர்ந்தனர்.
வீட்டு வாசலில் கார் வந்து நிற்கவும் கண்டுகொண்ட சித்ரா பல்லவியை அழைக்க, அன்னை சத்தத்தில் வெளிவந்தவள் விழிகள் தெறித்து விடும் போலானது கண்ட காட்சியில்.
காரில் இருந்து இறங்கிய லதாவைpப் பார்த்ததும் நொடியில் ஒரு மின்னல் எழ தான் செய்தது பல்லவிக்கு. அடுத்த நொடியே அவர் கைகளை நிறைத்த தட்டும் அருகே அஞ்சலி கையில் இருந்த தட்டும் என மயக்கமே வந்ததைப் போல கண்கள் இருண்டுவிட்டது.
இதோ முன்னிருக்கையில் இருந்து அவளைப் பார்த்துக் கொண்டே இறங்கிய ஈஸ்வர் வெள்ளை நிற சட்டையின் கையை மடித்துவிட, சட்டையை டக்கின் செய்து வந்தவனைக் கண்டு,
‘ரொம்ப முக்கியம்!’ என்று தான் தோன்றியது பல்லவிக்கு.
“அண்ணி தான் வந்திருக்காங்க” என்ற சித்ரா,
“பூ பழம்னு தட்டோட வந்திருக்காங்க பல்லவி. அவங்க பையனுக்கு கல்யாணமா இருக்குமோ? உன்கிட்ட சொல்லலையா?” என்று அவர் கேட்க, இங்கே உதறல் எடுத்தது பல்லவிக்கு.
“வாங்க அண்ணி!” என அதற்குள் வெளியில் சென்றுவிட்டார் சித்ரா வரவேற்க. நகர முடியாமல் காலில் ஆணியடித்ததை போல பல்லவி அங்கேயே நிற்கக் கண்டு இதழ் மடக்கி பார்வையை திருப்பினான் கீர்த்திஸ்வரன்.
“பல்லவி!” என சித்ரா அழைத்தபின் தான் அனைவரும் உள்ளேயே வந்துவிட்டதை அவள் கவனிக்க, அஞ்சலியும் லதாவும் அவளை முறைத்துக் கொண்டு நின்றனர்.
அஞ்சலிக்கும் லதாவிற்கும் நடுவில் சென்று பல்லவி நின்றவள் இரு கையையும் விரித்து சாரி என்று உதட்டை வளைத்து பாவமாய் பார்க்க, ஈஸ்வர் சிறு புன்னகையுடன் பார்த்து நின்றான்.
அதற்காக கூட அவள் கைகளை உடனே பற்றிடாத லதா,”நான் உன்னைப் பார்க்க வர்ல!” என்று சொல்லி,
“சித்ரா! உன்னை தான் பார்த்து என் பையனுக்கு உன் பொண்ணை கல்யாணம் பண்ணி குடுன்னு கேட்டு வந்திருக்கேன்!” என்று போட்டு உடைக்க, இப்படி சட்டென்று உடனே கூறுவார் என எதிர்பாராமல் மீண்டும் மீண்டும் அதிர்ச்சி பல்லவிக்கு.
இன்னும் அமரக் கூட இல்லை. இப்படி சொல்லவும் சித்ராவும் அதிர்ந்து விழித்து மகளைப் பார்க்க, அவளும் அதிர்ச்சியும் பயமுமாய் அன்னையைப் பார்க்க,
“அப்பா ஓகே சொல்லி தான் வந்திருக்கோம் அத்தை!” என்றான் ஈஸ்வரும்.
“பெருமையா சொல்றேன்ன்னு நினைக்காதீங்க. தகவலா மட்டும் தான் சொல்றேன். அப்பாகிட்ட சம்மதம் வாங்கிட்டு தான் வந்திருக்கோம். அப்பாக்காக யோசிக்காதிங்க. உங்க முடிவை சொல்லுங்க!” என்று சொல்லியவனும் அமரவில்லை. அவர்கள் பேசட்டும் சொல்லட்டும் என்று.
“ஈஸ்வர் தனிப்பட்ட முடிவு தான் இது சித்ரா. அதுவும் எங்க சம்மதத்தோட. உன் பொண்ணை எங்க வீட்டுக்கு குடு தங்கமா பார்த்துப்போம்!” என்று லதாவும் சொல்ல, இதயத் துடிப்பின் வேகம் அத்தனைக்கு அதிகமாகி இருந்தது பல்லவிக்கு.
“இப்படி திடிர்னு வருவீங்கன்னு நான் நினைக்கல.. அதுவும் பல்லவி…” என்றவர் மனதில் ஒரு தயக்கமும்.
“உனக்கு என்னை தெரியும் சித்ரா. பல்லவிக்கு என்னையும் தெரியும் ஈஸ்வரையும் நல்லா தெரியும்!” என்று லதா சொல்ல, அந்த நேரத்தில் பல்லவி நொடி நேரம் என்றாலும் ஈஸ்வரை முறைத்து திரும்பி இருந்தாள் லதாவிடம். அவனுமே அதனை கவனித்தான்.
“அப்பா பண்ணினது பெரிய தப்பு. அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.!” என்று ஈஸ்வர் சொல்ல,
“அய்யோ ஈஸ்வர்!” என்று சித்ரா தடுக்கும் போதே,
“நானும் மன்னிப்பு கேட்டுக்குறேன் சித்ரா. ஆனா பல்லவியை மட்டும் எங்களுக்கு கொடுத்துடு!” என்று அத்தனை கெஞ்சல் லதாவிடம்.
“அண்ணியை நாங்க நல்லாப் பார்த்துப்போம் அத்தை!” என தன் பங்கிற்கு அஞ்சலி வேறு.
அப்பொழுதும் சித்ராவிடம் குழப்பமும் சங்கடமும் என உடனே பதில் சொல்ல முடியாமல் விழிக்க, இருபக்கமுமாய் தள்ளாடி நின்றாள் பல்லவி.
திருட்டு விழியாய் பல்லவி பார்வை தன்னையும் மீறி ஈஸ்வரிடம் வர, எதிர்பார்த்தானோ!
“பேசு!” என அவளிடம் இதழசைத்து சித்ராவைக் கண் காட்டிய ஈஸ்வர் செயல் உள்ளுக்குள் சென்று உலுக்கியது பல்லவியை.
மகளை தனியே அழைத்து வந்துவிட்டார் சித்ரா வேறு வழியின்றி.
“பல்லவி என்ன டா இது?” என அவர் அத்தனை புலம்பி குழம்பி மகளிடமே கேட்டுவிட்டார் புரியாத நிலையில்.
சில நிமிடங்கள் கண் மூடி நின்றவள் அன்னை தோள்தொட்டு, “என்ன பண்றது பல்லவி?” என மீண்டும் கேட்கவும், இதோ! “பேசுங்க ம்மா!” என சம்மதித்து தலையசைத்த பல்லவி மனதில் சில நிமிடங்களுக்கு முன் ஈஸ்வர் சைகையில் தன்னிடம் பேசியது உள்ளுக்குள் குறுகுறுப்பைக் கொண்டு வந்திருந்தது அவளே அறியாமல்.
மறுக்க முடியவே இல்லை அவளால். என்ன ஏதென்று இன்னுமே புரியாத பிடிப்படாத மனநிலை தான். ஆனாலும் அவள் வாயாலேயே சொல்லி இருந்தாள் அவள் சம்மதத்தை.
