Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

13. Ambal - உயிர் உருகும் காதல் எனதே

உயிர் உருகும் காதல் எனதே…..14

உயிர் உருகும் காதல் எனதே….14

அதிகாலையிலேயே எழுந்து தன் வேலைகளை பார்க்க தொடங்கிய கற்பகம் நொடிக்கு ஒரு தரம் மகனின் அறை கதவை பார்த்தபடி தான் இருந்தார்.நேற்று துர்காவிடம் பேச வேண்டும் என்று கூறியது மட்டுமே அவரின் நினைவில் ஓடிக் கொண்டிருந்தது.நேற்று இரவு மகன் முகத்தில் தெரிந்த கோபத்தை கண்டவருக்கு மற்றது எல்லாம் பின்னுக்கு சென்றுவிட்டது.மீண்டும் தன் மகனின் வாழ்வு பழையபடி மாறிவிடுமோ அதற்கு காரணமாக தானே அமைந்துவிடுமோ என்ற பயமே அவரை தூங்கவிடாமல் செய்திருந்தது.

“படார்…..”என்ற சத்ததுடன் கதவு திறக்கபட,துர்கா தான் குளித்துவிட்டு வந்திருந்தாள்.சமையலறையின் வாயிலில் இருந்து அவர் மருமகளின் முகத்தை ஆராய்ந்தபடி இருக்க,

“என் முகத்தை பார்த்துமுடிச்சிட்டியா கற்பூ…..காபி இருக்கா போடனுமா….”என்று எப்போதும் போல் துர்கா சமையலறைக்குள் நுழைய,



Advertisement

“எடி அவன் என்ன சொன்னான் நேத்து…..எதாவது உன்னை திட்டிடானா….”என்று அவளின் முகத்தை ஆராய்ந்தபடி கேட்டார் கற்பகம்.

“என்னை பார்த்தா திட்டு வாங்கிட்டு வந்தவ மாதிரியா தெரியுது….”என்று அவள் கிண்டல் பேசிக் கொண்டே இருவருக்கும் சேர்த்து காபி கலக்க,

“என்னை பார்த்து பேசு துர்கா…..”என்றவரின் குரல் வேறுபாட்டில் நிதானமாக அவரை திரும்பி பார்த்தவள்,

Advertisement

“இங்க பாருங்க அத்த…..சில விஷயங்களை நீங்க கேட்காம இருக்குறது தான் உங்களுக்கு நல்லது சொல்லாம இருக்குறது தான் எனக்கும் நல்லது….ஆனா எதுவும் நம்மளை மீறி நடந்துடாது அதை மட்டும் சொல்லுவேன்….”என்று கூற,

Advertisement

“என்னடீ சொல்லுற….எனக்கு எதுவுமே விளங்குல….”என்று அவர் விழித்து நிற்க,துர்காவிற்கு சிரிப்பு பொங்கியது அவரின் பாவனையில்,

“ஹாஹா….அழகா இருக்க கற்பூ…..”என்று அவரின் கன்னம் வழித்து கூற,

“அடிச்சேனா பாரு….எப்ப பாரு என்னை கிண்டல் பண்ணிக்கிட்டு….”என்று அவளை அடிப்பது போல கையை ஓங்க,

Advertisement

“அச்சோ பயந்துட்டேன்….முதல்ல இந்த காபியை குடிங்க…..”என்று தனக்கு ஒன்று எடுத்துக் கொண்டு அவருக்கு ஒன்றை கொடுக்க அதனை வாங்கி கொண்டவர்,

“நிஜமா அவன் ஒண்ணும் சொல்லலையா…..”

“சொல்லாம இருப்பாரா….சொன்னாரு…..”என்றவளின் குரலில் என்ன இருந்ததோ,

“என்ன சொன்னான்….”என்று பரபரப்பாக கேட்க,

“அதான் சொன்னேனே நீங்க அதை தெரிஞ்சிக்க வேண்டாம்னு……”

“ஏன்…..ரொம்ப திட்டிடானா….”என்று கவலையுடன் பேச,

“அது ரகசியம்….”என்று கண்ணை சிமிட்டி அவள் கூற,கற்பகம் குழம்பி தான் போனார்.அவரின் நிலை கண்டு துர்காவிற்குமே மனது வலிக்க தான் செய்ய எழுந்து அவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டவள்,

“நீ பயப்படுற மாதிரி எதுவும் இல்ல…..நீ உன் மனசை போட்டு குழப்பிக்கிட்டு இருக்காத….பார்க்க நல்லாவேயில்ல….”என்று கூற,

“இப்ப ஏன்டீ எனக்கு ஐஸ் வைக்குற….ஆனா நல்லா தான் இருக்கு…..”என்று அவளின் கன்னம் தட்டியவர்,

“நீங்க இரண்டு பேரும் நல்லாயிருந்தா போதும்…..அது தான் எனக்கு வேணும்….”என்று அவர் கரகரப்பாக கூறிக் கொண்டிருக்க,தூங்கி எழுந்து வந்தவனின் விழிகளில் இது அழகான காட்சியாக தெரிந்தது.அதை கலைக்க விரும்பாமல் அறை வாயிலிலேயே நின்றுவிட்டான்.

“அதெல்லாம் நாங்க நல்லா இருப்போம்….அதை பார்க்க நீயும் உடம்பை நல்லா பார்த்துக்கோ கற்பூ…..”என்று அவரின் கன்னம் கிள்ள,

“ஒண்ணு அத்தனு கூப்பிடு இல்ல கற்பகம்னு பேர் சொல்லிக் கூட கூப்பிடு ஆனா இப்படி கூப்புடாதடீ…..”என்று அவர் கெஞ்சுவது போல் கூற,

“இதோ இந்த முகத்துக்காவே கூப்பிடலாமே…..”

“அடி போடி….”என்று அவர் அடிப்பதை போல் பாவனை செய்ய,

“வ்வ்வ…..”என்று அவருக்கு ஒழுங்கு காட்டிவிட்டு அறைக்குள் ஓடி வந்தவள் வீராவின் மீது மோத,

“ஏய் பார்த்து….”என்று அவளை பிடித்து நிறுத்த,அவனின் கைகளை நாசுக்காக தட்டிவிட்டவள்,

“சாரி நான் கவனிக்கல….”என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.வீராவிற்கு அதுவரை இருந்த மலர்ந்த மனநிலை மாறியது.அவளுக்கு கோபம் என்று புரிந்தது அதுவும் நேற்று தான் பேசியதன் விளைவு தான் என்று புரிய தன் போல அவனின் நினைவுகள் இரவு நோக்கி போனது.

தன் அறைக்குள் துர்கா நுழைந்தவுடன்,

“என்ன நினைச்சுக்கிட்டு இருக்காங்க உன் அம்மா….என்ன வேணா பேசுவாங்கலாமா….”என்று கோபமாக கேட்க,

“சாரி அம்மா தெரியாம பேசிட்டாங்க….”

“என்ன தெரியாம பேசிட்டாங்க….எல்லாம் தெரிஞ்சு தான் பேசியிருக்காங்க….இது எல்லாத்துக்கும் காரணம் நீ தான்….”

“நான் என்ன பண்ணேன்….”

“உன்னால தான் இந்த கல்யாணம் நடந்துச்சு……இல்லனா…..”என்றவன் வார்த்தைகளை விழுங்க,துர்காவிற்கு கண்கள் கண்ணீர் கட்டிவிட்டது.ஏதோ தான் அவனை கட்டாயப்படுத்திவிட்டது போல் அல்லவா பேசுகிறான் என்று நினைத்தவள்,

“சாரி…..என் தப்பு தான்….இப்ப நான் என்ன பண்ணனும்…..”என்று கேட்க,வீராவிற்கு ஏற்கனவே ரணப்பட்ட மனது மேலும் வலியை தர,

“அது….”

“ம்ம் சொல்லுங்க….நான் என்ன செய்யட்டும்…..”என்று இன்னும் ஊக்க,

“நாம பிரிஞ்சி…..”மீதி வார்த்தைகள் தொண்டை குழிக்குள் சிக்கி கொண்டன.

“சரி….நாம பிரிஞ்சிடலாம்…..”என்று துர்கா மீதியை கூறிவிட,அதிர்ந்துவிட்டான் வீரா.அவனின் அதிர்ச்சி,ஆற்றாமை அவனின் முகத்தில் அப்பட்டமாக தெரிய,

“நாம பிரிஞ்சிடலாம்…..ஆனா இப்ப இல்ல….எனக்கு கொஞ்சம் டைம் வேணும்….அதுவரைக்கும் என்னை கொஞ்சம் அட்ஐஸ்ட் பண்ணிக்கோங்க….நானும் உங்களை தொந்திரவு பண்ண மாட்டேன்….”என்றுவிட்டு படுத்துக் கொள்ள,வீரா தான் அவளின் வார்த்தைகளை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் இரு வேறு பட்ட நிலையில் நின்றான்.

அவன் இதுவரை துர்காவை தன் மனைவி என்ற ஸ்தானத்தில் வைத்ததில்லை தான் ஆனால் இன்று அவள் சற்றென்று ஒத்துக் கொண்டது அவனிற்குள் ஏதோ செய்ய அதை அவளிடம் பகிர முடியாமல் தவித்த மனதுடன் படுத்துவிட்டான்.இருவருமே தூங்கவில்லை அதை இருவரும் உணர்ந்திருந்தனர் தான் ஆனாலும் பேசிக்கொள்ளவில்லை துர்காவிற்கு பயம் எங்கே தான் ஒன்று பேசி அதை அவன் இந்த திருமணத்தை தக்க வைத்துக் கொள்ள நான் பேசுவதாக கருதிவிட்டால் அதை அவளாள் தாங்கிக் கொள்ள முடியாது மீண்டும் சுயம் இழுந்து வரும் வாழ்க்கை வேண்டாம் என்று தனக்குள் முடிவு எடுத்தவளுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தான் தெரியவில்லை.

அதே போல் வீராவும் என்ன செய்து இதை சரி செய்வது என்று யோசிக்காமல் தன் இயலாமை தான் இது அனைத்துக்கும் காரணம் என்று நினைத்தவன் துர்காவை தள்ளி வைக்க முடிவு எடுத்தான்.சில முடிவுகள் மிக பெரிய தொடக்கத்தின் ஆரம்ப புள்ளி என்பதை இருவரும் அறியவில்லை.காலை எழுந்த வீராவுக்கு அத்தனை இன்ப அதிர்ச்சி போல் தான் இருந்தது துர்கா எப்போதும் போல் இருந்தது.ஆனால் அவனைக் கண்டவுடன் மூன்றாம் மனிதன் போல் நடந்த கொண்ட விதம் மீண்டும் இரவின் மீதத்ததை நியாபகப்படுத்திவிட்டது.

துர்கா பள்ளிக்கு தயாராகி வரும் போது வீரா வரவேற்பறையில் பேப்ர் படித்துக் கொண்டிருந்தான்.அவனை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே தனக்கான உணவை எடுத்துக் கொண்டு அமர,

“வீரா நீயும் சாப்பிட வா….”என்று கற்பகம் அழைக்க,

“ஆங் வரேன்மா……”என்றவனும் துர்காவை ஓரப்பார்வை பாரத்தபடி தான் அமர்ந்தான்.இருவரும் ஒருவரை அறியாமல் ஒருவர் பார்த்தபடி தான் உண்டு முடித்தனர்.துர்காவிற்கு வீராவிடம் பேச வேண்டும் என்று இருந்தது தான் ஆனால் அதற்கு வாய்ப்பு அமையாமல் போக சரி இரவு பேசிக் கொள்ளலாம் என்றுவிட்டுவிட்டாள்.வீராவும் கண்டுகொண்டான்  துர்கா தன்னிடம் ஏதோ கூறவந்து பின் விட்டு சென்றவிட்டதை.அவனும் பேச முயலும் முன் அவள் கிளம்பி விட சரி மாலை பார்த்துக்கொள்ளலாம் என்று அவனும் கடைக்கு புறப்பட்டுவிட்டான்.

வீரா கடை அடைத்து வீடு திரும்பவே அன்று நேரம் கடந்துவிட எப்போதும் வரும் நேரத்தை தான்டி தான் வீட்டிற்கு வந்தான்.அவன் வீட்டிற்குள் நுழையும் போது கற்பகம் ஏதோ டிவியில் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தார்.

“வாப்பா….என்ன இன்னைக்கு சரக்கு ஏதுவும் வந்துச்சா…..”என்று கேட்டுக்கொண்டே எழ,

“இல்லமா ஸ்டோர் ரூம்ல கொஞ்சம் வேலை இருந்துச்சு அதை முடிச்சிட்டு வரேன்….”என்றவன் கண்கள் வீட்டினுள் சுழன்று மீண்டது.அவள் அங்கு இல்லை என்பதை அந்த அமைதியான சூழல் விளக்கிவிட,

“சரிப்பா குளிச்சிட்டு வா….சாப்பாடு எடுத்து வைக்குறேன்….”என்றுவிட்டு கற்பகம் சமையலறைக்குள் நுழைந்து கொண்டார்.வீரா தன் அறைக்குள் நுழைய அங்கு வெறுமையான அறையே அவனை வரவேற்றது.அங்கும் அவள் இல்லை.எங்கு சென்றிருப்பாள் என்று நினைத்துக் கொண்டே தன் வேலைகளை முடித்துக் கொண்டு வர,சாப்பாட்டு மேஜையில் கற்பகம் அமர்ந்திருந்தார்.

“ம்மா நான் போட்டுக்க மாட்டேனா….நீங்க போய் படுங்க நான் சாப்பிட்டு படுத்துக்குறேன்….ஆமா துர்கா எங்க?……”என்று அதனுடன் தன் மனதில் அரித்துக் கொண்டிருந்ததையும் கேட்டு விட்டான்.

“சொல்ல மறந்துட்டேன் பாரு….வானாதிக்கு கொஞ்சம் உடம்பு முடியலை…..அதான் இரண்டு நாள் அங்க இருந்துட்டு வரேன் சொன்னா….நானும் போயிட்டு வானு சொன்னேன்…..”என்று கற்பகம் மகனிற்கு கூறிக் கொண்டே இட்லியை வைக்க,

“ஓ…..சரி ம்மா…..”என்றவனுக்கு சாப்பாடு இறங்கவில்லை.அவள் இல்லை என்றது ஏதோ போல அழுத்தத்தை கொடுத்தது.

“இன்னைக்கே என்னால இருக்க முடியல அந்த வாயாடி இல்லாம….எப்படி இரண்டு நாள் இருக்க போறேன்னோ….என்னமோ தைரியமா அனுப்பிட்டேன்…..”என்று கற்பகம் புலம்பிய படி இருக்க,வீராவிற்கு எதுவும் காதில் விழவில்லை துர்கா இல்லை என்ற இடத்திலேயே அவனின் மூளை நின்றிருந்தது.

“வீரா….வீரா….”என்று அவனின் தோள் தொட,

“ஆங் என்னம்மா?…..”

“நீ சாப்பிட்டு எடுத்து வைச்சுட்டு படுப்பா….நானும் போய் படுக்குறேன்…..”என்றுவிட்டு கற்பகம் அவர் அறையில் அடைந்துவிட,அதன் பிறகு வீரா பேருக்கு சாப்பிட்டுவிட்டு எழுந்து அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு தன் அறைக்குள் வர,ஏனோ மூச்சு முட்டும் உணர்வு,படுக்கையை பார்க்க அங்கு அவள் அமர்ந்திருப்பது போல் ஒரு உணர்வு.எப்போதும் சிறிது நேரம் இருவரும் பேசிவிட்டு தான் உறங்க செல்லுவர்.அதில் அதிகம் துர்கா தான் பேசுவாள் அவன் கேட்டுக்கொண்டு இருப்பான்.இன்று அந்த சலசலப்புகள் இல்லாமல் அவனால் இரண்டு நிமிடம் கூட இருக்க முடியவில்லை எழுந்து மாடிக்கு சென்றுவிட்டான்.

மாடியில் திண்டை பிடித்துக் கொண்டு நின்றிருக்க குளிர்ந்த காற்று அவன் முகத்தில் மோத அவன் மனதில் இருந்த வென்மை மறைந்து சற்று இதம் பரவியது.கண்களை மூடி அந்த காற்றை ஆழ்ந்து சுவாசித்து வெளிவிட்டன் கண்களை திறக்கும் போது அடுத்த மூன்று வீடுகள் கடந்து அந்த வீட்டின் மாடியில் நின்று துணிகளை காயப்போட்டுக் கொண்டிருந்தாள் துர்கா.அவளைக் கண்டதும் மனதில் இருந்த அனைத்து பாரங்களும் நீங்க யோசிக்காமல்,

“துர்காஆஆஆ…..”என்று கத்திவிட்டான் வீரா.துணிகளை காயப்போட்டுக் கொண்டிருந்தவள் தன்னை யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு சுற்றி பார்க்க அவளின் கணவன் தான் கையசைக்க,

“என்ன பண்ற?……”என்று அவள் தன்னை கண்டுவிட்டதில் இன்னும் சத்தத்தைக் கூட்டி கேட்க,துர்கா அதற்கு செய்கையில் பதில் தந்தாள்.

“என்ன புரியல……”என்று மீண்டும் கத்த,

“எப்பா வீரா…..உன் பொண்டாட்டிக்கிட்ட பேச இதுதான் நேரமா….என் தூக்கத்தை ஏன்பா கெடுக்குற….அதான் போனு ஒன்னு இருக்கே அதுல பேச வேண்டியது தான…..”என்று பக்கத்து வீட்டுக்கார் அரைதூக்கத்தில் எழுந்து கூற,

“இல்ல…..”என்று அவன் தடுமாற,

“எப்பா எப்பா பார்த்து முதல்ல நீ நிக்கிறதுலேந்து இறங்கு….அப்புறமா பேசு சாமி…..இவனுங்க பேசறதுக்கு இன்னைக்கு என் தூக்கம் போச்சு….”என்று அவர் புலம்பிவிட்டு சென்றுவிட,வீராவின் கைபேசி இசைந்தது.துர்கா தான் அழைத்திருந்தாள்.

“ஹலோ….”என்று இவன் எடுத்தவுடன்,

“முதல்ல கீழ இறங்குங்க….”என்று அவள் குரல் சீறலாக வர,அப்போது தான் தன்னை குனிந்து பார்க்க அவளைக் கண்ட உற்சாகத்தில் திண்டின் மீது ஏறியிருந்தான்.

“ஓ….நான் கவனிக்கல…..”என்று அசடு வழிய,

“புரியுது இறங்குங்க….”என்று துர்காவும் அங்கிருந்து கையை அசைத்து கூற,

“இதை தான் அப்ப சொன்னியா…..”என்று கேட்க,

“ஆமா….”என்றவள் அவன் இறங்கியதும்,

“இப்ப சொல்லுங்க…..எதுக்கு கூப்பிட்டீங்க….”

“நீ வீட்டுக்கு போயிட்ட…..”என்று குறைபட,

“அதான் அத்தைக்கிட்ட சொல்லிட்டு வந்தேனே…..அம்மாக்கு உடம்பு சரியில்லை அதான்…..”என்று கூற,

“ம்ம்….அம்மா சொன்னாங்க…..அப்புறம்…..”என்றவன் என்ன பேச என்று தயங்க,

“ம்ம்….”என்றவள் மீதி துணிகளையை காயப்போட துவங்க,

“என்ன இப்ப துணி துவைச்சிருக்க….”என்ன பேசுவது என்று தெரியாமல் ஏதோ ஒன்றை பேச,

“அம்மாக்கு முடியல அதனால துவைக்கல….”என்றவள் பக்கெட்டை தலைகீழாக சாய்த்து மீதமிருந்த தண்ணீரை ஊற்றிவிட்டு அவனை பார்க்க,அவனும் அவளை தான் பாரத்தபடி நின்றிருந்தான்.அவள் கீழே செல்ல எத்தனிக்க,

“ஏய்….இரு இரு….காலையில என்கிட்ட ஏதோ சொல்ல வந்த….”என்று நியாபகப்படுத்த,

“ம்ம்…..அது நாம நேத்து பேசினது தான்….”என்றவளுக்கு எப்படி கூறுவது என்ற தயக்கம்,

“ம்ம்…அது….நானும் யோசிச்சேன்….”என்றவன் அவளை பார்த்தபடி நிற்க,அவளும் அப்படியே நின்றிருந்தாள்.இருவருக்கும் என்ன பேசுவது என்றே தெரியாமல் பேச வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்க அடுத்த வார்த்தைகள் வரவில்லை.துர்காவிற்கு இந்த வாழ்வை தக்க வைக்கிறேன் என்று வீராவை கஷ்டப்படுத்துகிறோமோ என்ற எண்ணத்தில் தான் பேச நினைத்தது ஆனால் அதை அவனிடம் பேச முடியவில்லை.அதே போல் தன்னால் துர்காவிற்கு கஷ்டம் வேண்டாம் என்று அவன் ஒதுங்க நினைக்க அதை அவளிடம் கூற முடியவில்லை.நேற்று கூறியதை அவள் ஒப்புக்கொண்டேதே அவனால் தாங்கமுடியவில்லை இதில் மீண்டும் அதே போல் கூறிவிட்டால் அந்த நினைப்பே பிடிக்காமல் போக,அவள் பேச வரும் முன்,

“நேரமாச்சு துர்கா…..நீ தூங்கு….நானும் போய் தூங்குறேன்…..”என்றவன் அவள் பேசுமுன் வைத்துவிட,

“எல்லாம் இவர் இஷ்டம்…..இதுக்கு எதுக்கு என்கிட்ட பேசனும்….”என்று திட்டிவிட்டு சென்றுவிட,வீரா தன் மனதில் எழும் எண்ணங்களின் மாறுமாட்டை உணரமுடியாமல் நின்றிருந்தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!