அத்தியாயம் 13.1_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்
அத்தியாயம் 13
சிதறும் உந்தன் சிரிப்பில்
கூட சிறை பட்டுக் கொள்கிறது
Advertisement
எந்தன் மனம்!!!
ரதி மற்றும் திவ்யா இருவரும் விளக்கை அணைத்து விட்டு பேசிக் கொண்டிருக்க அவள் மகனோ ஊசி போட்டதால் நல்ல உறக்கத்தில் இருந்தான்.
Advertisement
Advertisement
இன்று நடந்ததை ரதியிடம் சொல்லவா வேண்டாமா என்று எண்ணிய திவ்யா வேண்டாம் என்று விட்டுவிட்டாள். இன்று நடந்ததைச் சொன்னால் சாணக்கியனை விரும்பியது முதல் இப்போது அவன் காப்பாற்றியது வரை சொல்ல வேண்டியது வரும் என்பதால் எதுவுமே சொல்ல வில்லை.
“என்ன முடிவு எடுக்க போற திவி. அவன் உனக்கு வேண்டாம் தான். அடுத்து என்ன பண்ண போற? படிப்பு முடிக்கிறியா?”, என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே காலிங் பெல் சத்தம் கேட்டது.
Advertisement
“இந்த நேரத்துல யார் திவி? வா போய் பாக்கலாம்?”, என்று பேசிய படியே அவர்கள் வெளியே வர அங்கே ஹாலில் நின்றிருந்தார்கள் மஞ்சு மற்றும் தாமோதரன் இருவரும். “இந்த நேரத்தில் யார் வந்திருக்கா?”, என்று கேட்ட படி அரவிந்தும் வெளியே வந்தான்.
ஐந்து பேரும் திகைத்து போய் ஒருவரை ஒருவர் பார்க்க அரவிந்த் தான் சென்று கதவைத் திறந்தான். திறந்தவனுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. சத்தியமாக அவர்களை இந்த நேரத்தில் அவன் எதிர் பார்க்கவே இல்லை.
முன்னே நின்ற சகுந்தலாவிடம் “உள்ள வாங்க”, என்று அழைத்து விட்டு அவன் ஒதுங்கிக் கொள்ள ஒருவர் ஒருவராக உள்ளே வர அனைவருக்குமே அவர்களைக் கண்டு திகைப்பு தான்.
ரதியோ ஒரு நொடி அமரை அதிர்ந்து பார்த்தாள். அவள் பார்வை அவனை தலை முதல் கால் வரை வருடியது. அவனும் அவளையே தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்வையை கண்ட பிறகு தான் சூழ்நிலை என்னவென்று புரிய அவசரமாக சகுந்தலா அருகில் சென்று மகளை கைகளில் வாங்கிக் கொண்டாள்.
“அம்மா”, என்ற படி அவந்திகா அவள் கழுத்தைக் கட்டிக் கொள்ள ரதியின் கண்களும் கண்ணீரை பொழிந்தது.
“அம்மா தான் டா செல்லம்”, என்று அழுது கொண்டே சொல்ல “ரதி அவி குட்டிக்கு தூக்கம் வந்துருச்சு. கொஞ்சம் உள்ள போய் படுக்க வச்சிட்டு வா மா. அப்புறம் பேசலாம்”, என்றாள் சகுந்தலா.
சந்தோஷமாக உள்ளே தூக்கிச் சென்றவள் மகன் அருகே அவளைப் படுக்க வைத்து தானும் மகளை அணைத்த படி படுத்து விட்டாள்.
தூக்கம் வந்தாலும் அன்னையுடன் பேச வேண்டும் என்ற ஆசையில் அவந்திகா “இவன் தான் என்னோட அண்ணனா?”, என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க மகளை தட்டிக் கொடுத்த படியே பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
ரதி உள்ளே சென்றதும் யார் என்ன பேச என்று தெரியாமல் திகைத்து நிற்க “எல்லாரும் உக்காருங்க”, என்றாள் திவ்யா. அதற்கு பிறகு தான் தாமோதரன் மற்றும் மஞ்சு இருவரும் அவர்களை வரவேற்று அமர வைத்தார்கள்.
சுற்றி வளைத்து எதுவும் பேசாமல் “என்னோட மருமகளையும் என் பேரனையும் அழைச்சிட்டு போக தான் வந்துருக்கோம் சம்பந்தி. ரதியும் அமரும் இதுக்கு மேல பிரிஞ்சி இருக்க வேண்டாம். தப்பு சரின்னு பேசுற காலம் எல்லாம் போயிருச்சு. அவங்க தப்பை இத்தனை வருஷத்துல அவங்களே உணர்ந்துட்டாங்க. குழந்தைங்க இந்த வயசுல அம்மா அப்பா இல்லாம இருக்குறது ரொம்ப தப்பு. எல்லாரும் சென்னைக்கு கிளம்புங்க. என் வீட்டுக்காரர் என்ன பேசி இருந்தாலும் அதுக்கு நான் மன்னிப்பு கேக்குறேன். பிள்ளைகளுக்காக பழைய விஷயங்களை மறக்குறது நல்லதுன்னு தோணுது. ரெண்டு பேருமே அவங்க நினைப்புல ஒரு தவ வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்களை நல்ல முறையில் வாழ வைக்கிறது நம்ம கடமை தானே? அவங்களை வாழ வைக்கலாமே? பிளீஸ்”, என்ற சகுந்தலா மகனுக்காக கை கூப்ப ரதியின் பெற்றவர்கள் திகைத்துப் போனார்கள்.
தாமோதரனுக்கு ரதியை நினைத்து அவ்வளவு கவலை. அவள் இப்போதும் அமரின் மீது காதலாக இருக்கும் போது இந்த முடிவு அவருக்கு சந்தோஷம் அல்லவா?
“ரொம்ப சந்தோஷம் சம்பந்தி, எங்களுக்கு இதை விட வேற என்ன வேணும்? மாப்பிள்ளை எங்க ரதியை தேடி வந்ததே எங்களுக்கு சந்தோஷம் தான். இனி உங்க வீட்டுக்காரர் என்ன பண்ணினாலும் பாத்துக்கலாம்ன்னு தைரியம் வந்துருச்சு”, என்று பட்டென்று தன்னுடைய முடிவை சொன்னார் தாமோதரன்.
“டேய் அமர், உள்ள போய் ரதி கிட்ட பேசு. அவ காலுல விழுவியோ என்ன பண்ணுவியோ தெரியாது? நாளைக்கு உன் பொண்டாட்டி பிள்ளைங்க நம்ம கூட கிளம்பனும். போ போய் பேசு”, என்று சகுந்தலா சொல்ல அவனுக்கு சந்தோஷமாக இருந்தாலும் உள்ளே செல்லலாமா வேண்டாமா என்று தயக்கத்துடன் தாமோதரனைப் பார்த்தான்.
“உள்ள போங்க மாப்பிள்ளை, நீங்க போய் ரதி கிட்ட பேசுங்க”, என்று சொல்லி மாப்பிள்ளை அந்தஸ்தையும் தாமோதரன் கொடுக்க அரவிந்த் தான் அவர்களை வெறித்துப் பார்த்தான்.
முன்பே அவனுக்கு தெரியும் தான் ரதி தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்று. ஆனால் அமரை மன்னித்தது அவனுக்கு கடுப்பாக இருந்தது. எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் அவனை உடனே மன்னித்து விடுவார்களா என்று அவனது ஒரு மனம் எண்ண மற்ற மனமோ பெற்றவர்கள் மகள் வாழ்க்கைக்காக என்ன நடந்தாலும் மன்னிக்க தானே செய்வார்கள் என்றும் எண்ணியது.
அமர் தன்னவளைக் காண சந்தோஷமாக உள்ளே செல்ல மற்றவர்கள் இது வரை என்ன நடந்தது என்று பேசிக் கொண்டிருந்தார்கள். சாணக்கியன் கண்கள் திவ்யாவை வட்டம் இட அவளும் அவனுக்கு பதில் பார்வை கொடுத்துக் கொண்டிருந்தாள்.
இது ஸ்வேதாவின் கண்ணில் பட்டது. “ஹேய் பாரு டா, பெரிய அத்தான் ஒரு டிராக் ஓட்டுறாங்க பாரேன்”, என்று எண்ணிக் கொண்டு சுவாரசியமாக அவர்களை வேடிக்கை பார்த்தாள்.
அவள் ஒரு மாதிரி தலையை திருப்பி திருப்பி அவர்களை பார்த்துக் கொண்டிருக்க “இந்த பொண்ணு என்ன பண்ணுது?”, என்று பார்த்த அரவிந்தும் சாணக்கியன் மற்றும் திவ்யாவைப் பார்த்தான்.
பார்த்தவன் திகைத்து தான் போனான். அவனுக்கு தெரிந்து திவ்யா சிரிப்பை தொலைத்து வெகு காலம் ஆகி விட்டது. அப்படி இருக்க அவளோ சாணக்கியனை வெட்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்க அரவிந்துக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. தன்னுடைய அண்ணனால் திவ்யா வாழ்க்கை என்ன ஆகுமோ என்று அவன் எவ்வளவு கவலைப் பட்டிருப்பான்.
ஏனோ ரதி அமர் சேர்ந்ததை விட திவ்யா முகத்தில் இருந்த சந்தோஷம் தான் பெரிதாக பட்டது அரவிந்துக்கு. இன்னுமே ஸ்வேதா அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க “இந்த பொண்ணு வேற இப்படி அவங்களைப் பாக்குதே. இவளே பெரியவங்களுக்கு காட்டிக் கொடுத்துருவா போல?”, என்று எண்ணியவன் நேராக அவளுக்கு எதிரே நின்று லேசாக சைகை செய்ய அவனைப் பார்த்தாள்.
அவள் பார்த்ததும் கண்ணை உருட்டி அவளை முறைத்துப் பார்த்தவன் அவர்களை பார்க்காதே என்னும் விதமாய் சைகை செய்ய அவளுக்கு என்னவோ போல இருந்தது. கூடவே அவன் சைகையில் பேசுவதும் அவளுக்கு சுவாரசியமாக இருந்தது. அவள் பதிலுக்கு முறைக்க அவன் பார்க்க என நேரம் அழகாக சென்றது.
பெரியவர்கள் இத்தனை நாட்கள் நடந்ததை சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அமர் அறைக்குள் சென்றாலும் அவளை நேருக்கு நேர் சந்திக்க சிறிது தயக்கமாக தான் இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து அவளிடம் எப்படி பேச்சை ஆரம்பிக்க என்று கூட தெரிய வில்லை. ஆனால் கழுத்து வரைக்கும் அவ்வளவு ஆசை இருந்தது அவள் மேல். அவளை அருகில் பார்க்கவும் அவ்வளவு ஏக்கம் தான்.
அவன் உள்ளே சென்ற போது கட்டிலில் ரதி ஒரு பக்கமாக படுத்திருக்க அவள் மார்புக்குள் ஒடுங்கிய படி அவந்திகா படுத்திருந்தாள். அவள் அருகே அவினாஷ் படுத்திருந்தான்.
இரண்டு பிள்ளைகளையும் ஆதூரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் ரதி. அவனும் அவனுடைய மனைவி மற்றும் பிள்ளைகளை காதலாக பார்த்தான். ஏனோ இத்தனை நாட்கள் நழுவி போன சொர்க்கம் இன்று அவன் கைக்குள் இருப்பது போல ஒரு உணர்வு.
ரதியை ஆர்வமாக பார்த்தாலும் அந்த பக்கம் தூங்கிக் கொண்டிருந்த மகனைத் தூக்கி கொஞ்ச வேண்டும் என்ற ஏக்கமும் அவனுக்கு வந்தது. என்ன இருந்தாலும் அவன் உயிர் அல்லவா?
தூங்க ஆரம்பித்திருந்த மகளை ரசித்த படி இருந்த ரதி ஏதோ அசைவு தெரிய அப்போது தான் அங்கே நின்ற அமரைப் பார்த்தாள். பார்த்ததும் ஒரு பதட்டம். அவனை எதிர் பார்க்க வில்லை என்பது போல அதிர்ந்து விழித்தாள்.
பட்டென்று எழுந்து அமர்ந்தவள் குழந்தையை அவினாஷ் அருகில் படுக்க வைத்து விட்டு அவசரமாக எழுந்து நின்று அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தடுமாறினாள்.
அவன் கண்கள் அவளையே வருடியது. கரும் பச்சை நிற நைட்டியில் இருந்த அவனின் அழகியை கொஞ்சம் தள்ளி நின்றே ரசித்தான். அவள் கையைப் பற்றிக் கொள்ள அவனுக்கு ஆசையாக தான் இருந்தது. கழுத்தில் தாலிச்செயின் இருந்தாலும் அவள் அவனுடைய மனைவி தான் என்பதற்கு ஆதாரமாக அவன் அணிவித்த சங்கிலி அவள் கழுத்தில் இருந்தது. அதைக் கண்டு அவனுக்கு அப்படி ஒரு நிம்மதி. பொட்டு மெட்டி தாலிசெயின் எல்லாம் ஊருக்காக அவள் போட்ட வேஷம் என்றும் புரிந்தது.
“கண்ணம்மா”, என்று சொல்லத் துடித்த நாவைக் கட்டுபடுத்தி தலையைக் கோதி அடக்கிக் கொண்டவன் “ரதி, நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்றான். உரிமையாக அழைக்க கூட தயக்கமாக இருந்தது.
“குழந்தைங்க தூங்குறாங்க, வாங்க பால்கனிக்கு போகலாம்”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள். அவனை நேருக்கு நேர் சந்தித்தால் அவள் அவளாக இருக்க முடியாது என்பதால் எச்சரிக்கையாக இருந்தாள்.
“ரதி அவன் என் மகன் தானே? அவனை ஒரு தடவை தொட்டுப் பாத்துக்கவா? ஆசையா இருக்கு”, என்று ஏக்கமாக கேட்க “சரி”, என்றாள்.
அடுத்த நொடி கட்டிலை நெருங்கியவன் மகனை தொட்டு தடவி முத்தமிட அவன் வேகத்தைக் கண்டவள் “அவனுக்கு இப்ப காச்சல். எழுந்தா திருப்பி தூங்க மாட்டான்”, என்றாள். சொன்ன பிறகு மகனை கொஞ்ச விட வில்லை என்று கோபப் படுவானோ என்று பயமாக இருந்தது.
“எழுப்ப மாட்டேன் ரதி மா”, என்றவன் மீண்டும் மகனுக்கு முத்தமிட்டு மகளின் தலையையும் வருடி விட்டவன் எழுந்து அவள் அருகே வந்தான்,.
அவளும் அப்படியே பால்கனி பக்கம் நகர அவள் பின்னே சென்றான். வெளியே சென்றதும் காற்றின் ஓசையை தவிர வேறு எதுவும் கேட்க வில்லை.
“ரதி”, என்றான். அந்த குரலில் என்ன உணரந்தாளோ அப்படியே மடங்கி தரையில் அமர்ந்தவள் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள். அவளுடைய வெகு நாளைய வலி இன்று தன்னவன் முன்னே வெடித்து சிதறியது.
அவள் கண்ணீரில் துடித்துப் போனவன் அவசரமாக அவள் அருகில் அமர்ந்து “ரதி.. கண்ணம்மா.. அழாத டி. சாரி மா. எனக்கு எதுவும் தெரியாது டி. நான் உன்னை ரொம்ப கஷ்ட படுத்திட்டேன். அடிக்க கூட செய் டி. பிளீஸ் டி அழாத. ஒரே நாள்ல குழந்தை உருவாகும்ன்னு எல்லாம் நான் நினைக்கவே இல்லை கண்ணம்மா”, என்றவன் அவள் கை பற்றி சமாதானப் படுத்தினான்.
அவள் மேலும் மேலும் அழுது கொண்டே இருக்க அவள் அருகில் அமர்ந்தவன் அவளை தோளோடு அணைத்து தன் மார்பில் சாய்த்து கட்டிக் கொண்டான். அவள் விலக எல்லாம் இல்லை. அவன் அருகாமைக்காக எவ்வளவு ஏங்கி இருப்பாள்?
அவன் சட்டைக் காலரை இறுக பற்றியவள் இத்தனை நாள் இருந்த மன அழுத்தம் மொத்ததையும் கண்ணீரில் கரைத்தாள்.
அவள் அழுகை கண்டு அவன் கண்களும் கலங்கி தான் போனது. அவனுக்கும் இத்தனை நாள் வலி தானே? சிறிது நேரம் அழுதவளின் கண்ணீர் தேம்பலாக குறைந்து கடைசியில் நின்று போனது. சிறு கூச்சத்துடன் அவனை விட்டு விலகியவளின் விரல்கள் அருகில் அவன் இருப்பது நிஜம் என்று நம்ப முடியாமல் அவன் முக வடிவை அளக்க “சாரி கண்ணம்மா”, என்றான். அவன் உதட்டில் விரல் வைத்து தடுத்தாள் ரதி.
அவள் கண்கள் முன்பு இருந்ததை விட அதிக காதலைக் காட்ட “என் மேல உனக்கு கோபமே வரலையா டி?”, என்று கேட்டான்.
“கோபம் இல்லை. ஆனா வருத்தம் நிறைய இருக்கு. ஆனாலும் நீங்க என் நல்லதுக்காக தான் என்னை விட்டுருப்பீங்க? ஆனா எனக்கு உங்களை விட முடியலை. அதனால தான் பிள்ளையை உங்க கிட்ட விட்டேன். ஏனோ நமக்குள்ள அவந்திகா பாலமா இருப்பான்னு ஒரு நம்பிக்கை”
“பையன் இருக்கான்னு எனக்கு தெரியாது ரதி. உனக்கும் கல்யாணம் ஆகிருச்சுன்னு நினைச்சேன்”
“ம்ம், நானும் அத்தையை பாத்து பேசாம இருந்திருந்தா நீங்களும் வேற வாழ்க்கையை தேடிக்கிட்டீங்கன்னு தான் நினைச்சிருப்பேன்”
“ரொம்ப கஷ்ட பட்டியா டி?”
“ம்ம்”, என்று சொல்லும் போதே அவள் முகத்தின் வேதனையின் சாயல். அவளை இறுக அணைத்துக் கொண்டவன் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டு அவளை சமாதான படுத்தினான். சிறிது நேரம் இருவரும் மனது விட்டு பேசினார்கள்.
ஓரளவு பேசி முடித்த பிறகு தான் அந்த தனிமை அவர்களுக்கு உரைத்தது. ஆனால் முன்பு இருந்தது போல பயம் எல்லாம் இல்லை.
அவள் கண்கள் ஆசையாக அவனை வருடியது. அவ்வபோது போட்டோவில் அவனைப் பார்த்தாள் தான். ஆனால் இவ்வளவு அருகில் இல்லையே.
முன்பு அரும்பு மீசை வைத்து கிளீன் சேவில் இருப்பான். இப்போதோ கத்தையான மீசையும் லேசான தாடியும் என அழகாக இருந்தான். அவன் தோள்கள் வேறு விரிந்து முழுதான ஆண்மகனாக இருந்தான்.
அவனுக்குமே அவளது தோற்றம் உள்ளுக்குள் மனதை அலை பாய வைத்தது. சிறு பெண்ணாக இருக்கும் போது தான் அவளைப் பார்த்தான். இப்போதோ இன்னும் வளர்ந்து குழந்தைகள் பிறந்ததால் லேசாக சதை போட்டு அழகாக இருந்தாள். இப்போதும் அவளது கண்கள் அவனை ஈர்த்தது. அவளிடம் வெளிப்பட்ட நளினமும் மென்மையும் ஏனோ அவளை நெருங்கச் சொல்லி அவன் மனதை தடுமாற்றத்துக்குள்ளாக்கியது.
“ரதி”, என்று அவன் மென்மையாக முணுமுணுக்க “ம்ம்”, என்று அதே தாபத்துடன் வந்தது அவள் குரல்.
