விழி கொல்லும் விஷமா நீ.. Epi 22

விழி கொல்லும் விஷமா நீ..
Episode 22
Advertisement
அன்று..
Advertisement
“அய்யோ என்ன இன்னைக்கு ரொம்ப லேட் ஆகிருச்சு.. இந்த வேலை வேற.. பாம்பன் பாலம் மாதிரி இழுத்துக்கிட்டே போகுதே.. ச்சே!”
Advertisement
நேரத்தைப் பார்ப்பதும் முன்னே இருந்த லேப்டாப்பை பார்ப்பதுமாக புலம்பிக்கொண்டிருந்தாள் நிஹாரிகா.
Advertisement
“கஜன், அகௌன்ட்ஸ்ல ஏதோ தப்பு நடந்திருக்கு. ஆல்மோஸ்ட் ஃபைவ் லேக்ஸ் ஷார்ட் ஆகுது, ஹவ் இஸ் தட் பாஸிபள்? நீதானே அக்கௌன்ட்ஸ் டிபார்ட்மென்ட்க்கு பொறுப்பா இருக்க, என்ன மிஸ் ஆகியிருக்குன்னு இப்போவே எனக்கு தெரிஞ்சாகணும். அதுவரைக்கும் நீங்க யாரும் வெளியில போக கூடாது”
காட்டமாக சொல்லிவிட்டு யாதவ் கழுகுப் பார்வைக்கொண்டு அனைவரையும் துளைத்தெடுக்க, நிஹாரிகாவோ தலையிலடித்துக் கொள்ளாத குறையாக நின்றிருந்தாள் என்றால், கஜனும் ஹாட்டல் மேனேஜர் சுந்தரமும் திருதிருவென விழித்தபடி நின்றிருந்தனர்.
“சார்… இதுக்குமேல லேட்டா போனா பஸ் என்ன ஆட்டோ கூட எனக்கு கிடைக்காது. அதுமட்டுமில்லாம இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. நான் வேணா போகட்டுமா?” என்று நிஹாரிகா தயங்கித் தயங்கிக் கேட்க, மறுகணம் அவன் பார்த்த பார்வையில் கப்சிப்பென்று வாயை மூடிக்கொண்டாள் அவள்.
என்ன பதில் சொல்வதென்று தெரியாது அவர்களும் அப்படியே இருக்க, அந்த பிடிவாதக்காரனும் இதை விடுவதாக இல்லை.
சுந்தரத்துக்கு அவனின் பார்வையில் உண்டான பதற்றத்தில் அந்த ஏசி குளிரிலும் உடல் முழுக்க வியர்க்கத் தொடங்க, புறங்கையால் நெற்றி வியர்வையை பதற்றமாக துடைத்துக்கொண்டார் அவர்.
யாதவ்வின் இதழ்கள் கேலியாக வளைந்து சுந்தரத்தை ஆழ்ந்த பார்வைப் பார்த்தது.
“என்ன மிஸ்டர் சுந்தரம், உங்க ஸைட் பிஸ்னஸ்க்கு இன்வெஸ்ட்மென்ட் வேணும்னா நீங்க தாராளமா என்கிட்டயே கேட்டிருக்கலாமே” என்று ஏளனக் குரலில் அவன் சொல்ல, அவருக்கு சர்வமும் அடங்கிவிட்டது.
“அது.. அது வந்து சார்.. நா.. நான் எதுவும் பண்ணல. நீங்க வீணா என்மேல பழி…” அவர் பதறியபடி சொல்லி முடிக்கவில்லை, ‘ஆஹான்…!’ என்று நக்கலாக கேட்டுக்கொண்டே எழுந்தவன் அவரை நோக்கி ஒரு அடி வைக்க, ஓடிச்சென்று யாதவ்வின் காலைப் பிடித்துக்கொண்டார் அவர்.
“என்.. என்னை மன்னிச்சிருங்க சார், பிஸ்னஸ்க்கு பணம் தேவைப்பட்டிச்சு, என்ன பண்றதுன்னு தெரியல. அதான் இப்படி பண்ணிட்டேன், என்னை மன்னிச்சிருங்க…”
அவர் பயத்தில் கெஞ்சத் தொடங்க, அனல் தெறிக்க அவரைப் பார்த்தவனோ அதே கோபத்தோடு கஜனையும் பார்த்தான்.
அவனோ இரண்டடி பின்னே நகர்ந்தவன், “சா.. சார், என்னை எதுக்கு இப்.. இப்படி பார்க்குறீங்க? எனக்கு எதுவும் தெரியாநு…” என்று எச்சிலை விழுங்கியபடி பதற்றமாக சொல்ல, இரு புருவங்களை உயர்த்தி அவனை போலி ஆச்சரியத்தோடு பார்த்தான் யாதவ்.
“சோ கோல்ட் தொழிலதிபர் சுந்தரத்தோட ஸ்மோல் பிஸ்னஸ்ல டூவென்டி பர்சன்ட் ப்ராஃபிட் உனக்கு பத்துமா கஜன்?”
தவறை ஒப்புக்கொள்ள வைக்க யாதவ்வின் அந்த ஒரு கேள்வியே போதுமாயிற்று.
உடனே போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அடுத்த பத்தே நிமிடங்களில் இருவரும் கொண்டு செல்லப்பட, ‘ஊஃப்ப்…’ என்ற பெருமூச்சோடு அப்படியே தன் சுழலும் நாற்காலியில் அமர்ந்தான் யாதவ்.
இத்தனை நேரம் நடந்ததை பார்த்துக்கொண்டிருந்த நிஹாரிகா மீண்டும் நேரத்தைப் பார்த்துவிட்டு, “சார்…” என்று அவன் முன்னே சென்று நிற்க, சலிப்பாக விழிகளை உருட்டினான் அவன்.
“வாட்?” அவன் எரிச்சல் மண்டிய குரலில் கேட்டதும், “ரொம்ப லேட் ஆகிருச்சு, வீட்டுக்கு போகணும்…” என்று தயங்கித் தயங்கி நீட்டி முழக்கிப் பேசினாள் நிஹாரிகா.
அவளின் இழுவையில் அவனுக்கிருந்த தலைவலி மேலும் கூடிப்போக, “ஜஸ்ட் கெட் அவுட்” என்றான் எரிச்சலோடு.
நிஹாரிகாவும் இதுதான் சந்தர்ப்பமென்று தன் பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஒரே ஒட்டமாக வெளியேறியவள், பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றதும்தான் தாமதம் சோவென்று காற்றோடு பெய்தது அடைமழை.
அண்ணாந்து வானத்தை பார்த்தவளுக்கு கடவுளே தனக்கு சதி செய்வது போலிருந்தது.
‘ஏன் இல்லை ஏன்னு கேட்டேன், எனக்கு மட்டும் என்ன சோதனை கொடுக்கலாம்னு உக்கார்ந்து ப்ளான் பண்ணுவியோ…’ வானத்தைப் பார்த்து புலம்பியவள் மழையோடு மழையாக அப்படியே ஆட்டோவுக்காக காத்திருக்க, கண்ணிற்கு எட்டிய தூரம் வரை ஒரு ஈ காக்கா கூட இல்லை.
சில நிமிடங்களும் கடக்க, மழையும் நின்றபாடில்லை.
“என்னம்மா நின்னுட்டு இருக்கீங்க, ஆஃபீஸ்குள்ள போங்க, இந்த நேரத்துல இங்க தனியா நிக்கிறது பாதுகாப்பு இல்ல. மழை நின்னதும் சொல்றேன், வீட்டுக்கு போங்க” ஆஃபீஸ் செக்யூரிட்டி தூரமாக நின்று கத்த, வேறுவழியில்லாமல் ஆஃபீஸுக்குள்ளயே நுழைந்த நிஹாரிகா உடனே ஆதிராவுக்குதான் அழைத்தாள்.
மறுமுனையில் அழைப்பை ஏற்றதுமே, “ஆதி, நான் ஆஃபீஸ்ல இருக்கேன், ஒரு ஆட்டோ கூட இல்ல…” என்று பாவம் போல் அவள் சொல்ல, “அய்யோ நீஹா, எனக்கு ரொம்ப உடம்புக்கு முடியல. என்ட், மழை அடிச்சு பெய்து இதுல எப்படி நான் ஸ்கூட்டில வரது?” என்றாள் மற்றவள்.
நிஹாரிகாவுக்கு நிலைமை புரிந்தது. அதனாலேயே வற்புறுத்த தோன்றவில்லை.
“கடவுளே…” என்று தலையிலடித்துக்கொண்டவள், “ஓகே ஆதி, நான் எப்படியாச்சும் வந்துடுறேன்” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டு யாதவ்வின் முன்னேதான் சென்று நின்றாள்.
அவனோ விழிகளை மூடி தன் இருக்கையில் பின்னே தலையை சாய்த்து அமர்ந்திருந்தவன், மீண்டும் காதில் விழுந்த “சார்…” என்ற அழைப்பில் பட்டென்று விழிகளைத் திறந்துப் பார்க்க, அசடுவழிந்தபடி நின்றிருந்தாள் நிஹாரிகா.
“ஆட்டோ கிடைக்கல, மழை நின்னதும் கெளம்பிருவேன்…” என்று அவள் சொல்ல, சில கணங்கள் அவளை ஆழ்ந்த பார்வைப் பார்த்தவன், நனைந்திருந்த அவளுடலை மேலிருந்து கீழ் ஒரு பார்வைப் பார்த்தான்.
மழை நீரில் நனைந்ததில் அவளுடலோடு அவள் அணிந்திருந்த காட்டன் டாப் ஒட்டிப் போய், அவளின் அங்க வளைவுகளை அப்பட்டமாகக் காட்ட, ஒரு ஆண்மகனாக தன் விழிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறினான் யாதவ்.
“ஹ்ர்ம் ஹ்ர்ம்.. கொஞ்ச நேரத்துல நானே உன்ன ட்ரோப் பண்றேன். இங்கேயே இரு!” அவன் குரலை செருமியபடி சொல்லிவிட்டு ஆஃபீஸ் அறைக்குள் அமைக்கப்பட்டிருந்த தன் தனிப்பட்ட அறைக்குள் நுழைந்துக்கொள்ள, அறையிலிருந்த சோஃபாவில் அமர்ந்திருந்த நிஹாரிகாவின் மூக்கு நுனி சிவந்துவிட்டது.
ஏற்கனவே மழையில் நனைந்துக்கொண்டு நின்றிருந்தவளுக்கு அறை ஏசி குளிர் ஒத்துப் போகாது தும்மலை வரவழைத்திருக்க, அவளுக்கு அய்யோ என்றாகிவிட்டது.
நிஹாரிகாவோ யாதவ் இருந்த அறையை எட்டிப் பார்த்தவள், மெல்ல எழுந்துச் சென்று, கதவைத் திறக்கப் போக, அவள் எதிர்பார்க்காது கதவை பட்டென்று திறந்தான் யாதவ்.
“அது.. அது வந்து சார்.. நான்…” அவளுக்கு வார்த்தைகள் தந்தியடித்தன.
ஆனால் யாதவ்வின் பார்வையில் என்றும் இல்லாத ஒரு மென்மை.
“மழையில நனைஞ்சதால உனக்கு ஒத்துக்கலன்னு நினைக்கிறேன், உள்ள வந்து டேப்லெட்ஸ் எடுத்துக்க” அவன் சற்று நகர்ந்து உள்ளே அழைக்க, பெண்ணவளுக்கு ஆனந்தம் கலந்த அதிர்ச்சி.
சிறு புன்னகையோடு உள்ளே நுழைந்தவள் அந்த தனிப்பட்ட அறையை சுற்றிப் பார்த்தாள்.
சொல்லப்போனால் அவள் ஆதிராவோடு வாடகைக்கு தங்கியிருக்கும் அந்த சிறிய வீட்டைவிட ஐந்து மடங்கு பெரிய வசதியான இடம்தான்.
அவனுக்காக பார்த்துப் பார்த்து கட்டியிருப்பான் போலும்!
“இந்த ரூம் ரொம்ப அழகா இருக்கு” என்று அவள் ரசிக்கும் குரலில் சொல்ல, “தேங்க்ஸ்..” என்றவன் அங்கிருந்த சோஃபாவில் அவளை அமரும்படி விழிகளால் காட்டினான்.
இதுவே வேறொருவனாக இருந்திருந்தால் உள்ளே நுழையக் கூட பத்தாயிரம் தடவை யோசித்திருப்பாள்!
ஆனால், யாதவ்விடத்தில் அவளுக்குள் இருக்கும் காதல் அவளையும் அறியாத உரிமையை அவளுக்கு உணர்த்தியிருக்க, அசௌகரியமின்றி சகஜமாக அமர்ந்துக்கொண்டாள் நிஹாரிகா.
அவனும் டேப்லெட்டை அவள் கரத்தில் திணித்தவன் அவளிடம் தண்ணீர் க்ளாஸை நீட்ட, உடனே வாங்கி பருகிக்கொண்டவளுக்கு அடுத்து அவன் கேட்ட கேள்வியில் புறை ஏறிவிட்டது.
“ஆரவ் இன்னும் உன்ன காதலிக்கிறான்ல நீஹா?” யாதவ் இறுகிய குரலில் கேட்க, இருமியவாறு எழுந்து நின்றவள் தன்னை சமாளித்துக்கொண்டு, “அர்ஜூ… நீ.. நீ நினைக்கிற மாதிரி எதுவுமே இல்ல. அவன் காதலிக்கிறான்தான், நான் இல்லன்னு சொல்லல. ஆனா.. நான் உன்ன மட்டும்தான் காதலிக்கிறேன். நான் சொல்றத இப்போவாச்சும் கொஞ்சம்…” என்று ஏதோ சொல்ல வந்தாள்.
ஆனால், அவள் பேச்சை நிறுத்துவது போல ஒரு புன்னகை வெளியானது அவனிடமிருந்து.
“ம்ம்.. புரியுது” என்றவன் வேகமாக அவளை நெருங்கி அவள் நெற்றி கழுத்து என தொட்டுப் பார்க்க, நிஹாரிகாவோ புரியாமல் பார்த்தாள்.
“நார்மலாதான் இருக்கு, ஈரமா இருக்குறதால ஜலதோஷம் பிடிச்சிருக்கு அவ்வளவுதான்” என்றவனின் விரல்கள் அவள் கன்னத்தை வருட, “என்னை புரிஞ்சுக்கிட்டியா அர்ஜூ.. நான் என்ன சொல்ல வந்தேன்னா…” என்று மீண்டும் தன்பக்க நியாயத்தை சொல்ல வந்தாள் நிஹாரிகா.
ஆனால் அவனோ எதையும் கேட்கும் நிலையிலில்லை.
அவள் உதட்டில் விரலை வைத்து தடுத்தவன், “எதுவும் பேசாத நீஹா, ஐ நோ.. இப்போ நான் எல்லாத்தையும் புரிஞ்சுக்கிட்டேன்” என்றுக்கொண்டே அவளிதழின் மேலிருந்த விரலால் இதழை வருடினான்.
அவன் விழிகளில் என்ன இருந்ததோ! கட்டுண்டவள் போல அவனையே சிலை போல் அவள் பார்த்துக்கொண்டு நின்றிருக்க, யாதவ்வின் விழிகளும் அவள் விழிகளைதான் நோக்கின.
அவனின் ஒரு கரம் அவளிடையை வளைத்து தன்னோடு நெருக்கிக்கொள்ள, இருவரின் இதழ்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வது போல நெருங்கியிருந்தன.
சிறு இடைவெளிதான்.
நிஹாரிகாவிற்கு மூளை நடக்கப் போவதை எச்சரித்தாலும் கால்கள் நகர மறுத்தன. அவளுக்குள் ஏதோ ஒரு குழப்பம்.
“அர்ஜூ…” அவள் ஏதோ சொல்ல வர, இடைவெளியை பொறுக்க முடியாத ஆடவனோ அவளை பேச விடாது அவளிதழைக் கவ்விக்கொண்டான்.
நிஹாரிகா விழிகளை இறுக மூடிக்கொண்டு அவன் சட்டையைப் பற்றியிருக்க, யாதவ்வோ தன்னை மறந்து அவளிதழ் தேனை பருக ஆரம்பித்தான்.
ஆடவனின் உணர்ச்சிகள் தாறுமாறாக சுரக்க, பெண்ணவளுக்கோ மெல்ல மெல்ல உணர்ச்சிகள் கிளற ஆரம்பித்தன.
அவனோ அவளை முத்தமிட்டபடி கரங்களில் அள்ளிக்கொண்டு சென்று அறையிலிருந்த மஞ்சத்தில் சரித்து அவள் மேல் படர்ந்துக்கொண்டான்.
நிஹாரிகா விழிகளைத் திறக்கவே இல்லை. ஆனால், அவள் முகம் வெட்கத்தில் சிவந்துப் போயிருந்தது.
“நீஹா…” அவன் குரல் அசரீரி போல் தூரத்திலிருந்து ஒலிப்பது போல அத்தனை மெதுவாகக் கேட்டது அவளுக்கு.
விழிகளை மெல்ல திறந்துப் பார்க்க, அவள் முகத்தையே பார்த்திருந்தான் யாதவ்.
சற்று நேரத்திற்கு முன் அவன் விழிகளில் அவள் கண்ட உணர்வுக்கும் இப்போது அவன் விழிகளில் காணும் உணர்வுக்கும் மலையளவு வித்தியாசம்.
அவனைப் பற்றி புரிந்துக்கொள்ளவே முடியவில்லை அவளால்.
அதிலிருந்தது ஏக்கமா, இல்லை அளவு கடந்த காதலா?
ஆனால் யோசித்து பதில் தேடும் வரை யாதவ் அவகாசம் கொடுக்கவில்லை. அவன் கரங்கள் மெல்ல மெல்ல அவளுடலில் அத்துமீறத் தொடங்கின.
அவன் அவள் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்துக்கொள்ள, விழிகளை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தாள் நிஹாரிகா.
ஆடவனும் புயலாக மாறி பின் பூவாக அவளை ஆட்கொண்டு பெண்ணவளை மொத்தமாக அபகரிக்க, அவனின் வேகத்திலும் மென்மையிலும் திணறிப்போனாள் பெண்ணவள்.
யாதவ்வோ தன் காயத்திற்கு மருந்தாகவே அவளை மாற்றிக்கொண்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.
மீண்டும் மீண்டும் அவளை நாடியவன் ஒருகட்டத்தில் களைத்துப்போய் அவளை விட்டு விலகிப் படுக்க, அவளோ தன்னவன் மீதே விழிகளை மூடி படுத்துக்கொண்டாள்.
ஆனால், விட்டத்தை வெறித்தவாறு சாய்ந்திருந்த யாதவ்வின் முகமும் உடலும் இறுகிப் போயிருந்தது.
ஒருசில மணித்தியாலங்களும் கடந்தன.
தூக்கம் கலைந்து விழிகளைத் திறந்தவள் தன் பக்கத்தில் படுத்திருந்தவனை பக்கவாட்டாகத் திரும்பிப் பார்க்க, மறுகணம் பக்கென்று இருந்தது அவளுக்கு.
அவனோ அப்போதும் உறங்காமல் உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தோடு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“அர்ஜூ…” நிஹாரிகா மெல்ல அழைத்தபடி அவனை நெருங்க, யாதவ்வின் பார்வையில் தெரிந்த ஏதோ ஒன்று அவளை தள்ளி நிறுத்துவது போல இருந்தது.
“என்னாச்சு…” அவளுக்கு ஒன்றும் புலப்படவில்லை.
அவனோ கட்டிலிலிருந்து இறங்கி எழுந்து நின்றவன், டீபாயின் மீது வைத்திருந்த தன் பர்சிலிருந்து ஒருசில பண நோட்டுக்களை கையிலெடுத்தான்.
நிஹாரிகாவோ புரியாமல் பார்த்துக்கொண்டிருக்க, அதை அவள் முன்னே வீசியெறிந்தவன், “தேங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்” என்று ஏளனக் குரலில் விஷமத்தோடு சொல்ல, நடப்பதை கிரகிக்கவே அவளுக்கு சில நிமிடங்கள் எடுத்தன.
“அர்ஜூ எதுக்கு… ஏன்…” அவளுக்கு நா எழவில்லை. ஏதோ ஒன்று தொண்டையை அடைப்பது போல இருந்தது.
“பின்ன உன்ன முழுசா ஏத்துக்கிட்டேன்னு நினைச்சியா! கோ டூ ஹெல், அதுக்கு வாய்ப்பே இல்ல. நாம உண்மையா காதலிச்சவங்க நம்மகிட்ட காதலுங்குற பேருல நடிச்சாங்கன்னு தெரிஞ்சா எவ்வளவு வலிக்கும்னு தெரியுமா? இத்தனை வருஷம் உன்கிட்ட ஏமாந்துட்டேன்னு எனக்குள்ள ஏதோ ஒன்னு குத்திக் கிழிச்சுட்டு இருந்துச்சு.. ஆனா இப்போ..”
ஆக்ரோஷமாகக் கத்தியவாறு அவள் முகத்தைப் பார்த்த யாதவ்விற்கு நிஹாரிகாவின் முகத்தில் தெரிந்த வலி நிறைந்த புன்னகையைப் பார்த்ததும் வார்த்தைகள் நின் றுவிட்டன.
அவனுடைய விழிகள் அதிர்ச்சியில் விரிந்திருக்க, தன்னவனின் அருகே நெருங்கி அவன் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தாள் அவள்.
*************
-Sheha zaki
