உயிர் உருகும் காதல் எனதே…..18
உயிர் உருகும் காதல் எனதே….18
மருத்தவமனையின் அவசரசிகிச்சை பிரிவில் இருந்தாள் வாசினி.அறையின் வாயிலில் மொத்த குடும்பமும் உயிரை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.சித்தார்த் அழுதழுதே ஓய்ந்திருந்தான்.நிர்மலாவிற்கு மகனை பார்ப்பதா இல்லை மருமகளை பார்ப்பதா என்றே தெரியவில்லை.ஆனால் அவ்வபோது அவரின் பார்வை வானாதியை துளைத்துக்கொண்டிருந்தது.
நிர்மலா ஆரம்பத்திலேயே வானாதியிடம் கூறியிருந்தார்.வாசினியிடம் வேலைகளை செய்ய சொல்லி பழக்குங்கள் அப்போது தான் உங்களுக்கும் சற்று ஓய்வு கிடைக்கும் என்று.அனைத்திற்கும் தலையாட்டிய வானாதி செய்திருப்பது அப்பத்தமாகவே பட்டது அவருக்கு.அதிலும் மருத்துவர்,
“என்னம்மா நீங்க இத்தனை பேர் இருக்கீங்க….அந்த பொண்ணு காலையிலேந்து சரியா சாப்பிடலை….அது கூட பார்த்துக்க முடியாதா….ஏற்கனவே அவங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கு….இதுல இப்படி சாப்பிடாம இருந்தா அவங்களுக்கு மட்டும் இல்ல அவங்க குழந்தையையும் அது பாதிக்கும்…..இப்போதைக்கு நான் சைலன் போட்டிருக்கேன்…..ஒன்டே அப்ஸர்வேஷன்லேயே இருக்கட்டும்…..இதுமாதிரி நடக்காம பார்த்துக்கோங்க…..”என்றவர் கூற,
Advertisement
“நான் நல்லாதான் டாக்டர் ஆனா அவ தான் என்னால சாப்பிட முடியல,வாந்தி வர மாதிரி இருக்கு,உடம்பு என்னவோ போல இருக்குனு படுத்தே இருக்கா……”என்று வானாதி கூற,
“ஏன்மா மாசமா இருந்தா இதெல்லாம் சாதரணமா எல்லா பொண்ணுக்கு இருக்குறது தான்….அதுக்காக படுத்தே இருந்தா நல்லது கிடையாது சின்ன சின்ன வேலைகள் அவங்க செஞ்சா தான் அவங்களுக்கு நல்லது….அப்ப தான் பசிக்கும் நல்லா சாப்பிடுவாங்க….இது கூடவா உங்களுக்கு தெரியாது….”என்று திட்டிவிட்டு சென்றுவிட,அனைவரும் வானாதியை தான் முறைத்தனர்.
வாசினியை வேலை செய்யவிடாமல் கெடுத்ததே வானாதி தான்.அதன் விளைவு இன்று அவளின் உடல்நிலை சீர்கெட்டு போனது.துர்கா அனைத்தையும் பார்த்தபடி நின்றாளே தவிர எதுவும் கூறவில்லை.அவளுக்கு தான் இது முழுக்க தாயின் தவறு என்று நன்கு தெரியுமே.வீராவும்,கற்பகமும் வாசினி கண்விழிக்கும் இருந்து பார்த்துவிட்டு தான் சென்றனர்.துர்கா அன்று ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு மருத்துவமனையில் தான் இருந்தாள்.வாசினி கண்விழித்து இரண்டு மணி நேரம் கழித்து தான் அவளை பொது பிரிவுக்கு மாற்றினர்.
Advertisement
“சித்தார்த் வாசினி டிஸ்ஜார்ஜ் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்ப்பா….”என்று பட்டென்று கூறிவிட்டார் நிர்மலா.வாசினி ஏதோ பேச வரும் முன்,
Advertisement
“இங்க பாரும்மா நீ ரொம்ப ஆசைபட்டனு தான் நான் உன்னை உன் அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சேன்….ஆனா நீ அங்க போய் உன் உடம்பை கெடுத்திக்கிட்டதோட இல்லாம உன் அம்மாவையும் படுத்தி எடுத்துட்ட…..இது நல்லதுக்கு இல்ல….அதனால இனி நம்ம வீட்டுக்கு வந்துடு….உனக்கு வளைகாப்பு போடும் போது உன் அம்மா வீட்டுக்கு போனா போதும்…..”என்று முடிவாக கூறிவிட,அதற்கு மேல் வாசினியால் எதுவும் கூற முடியவில்லை.வானாதிக்கு அத்தனை தலையிறக்கமாக போனது.சிறு வயதிலிருந்தே வாசினியை எந்த வேலையும் செய்யவிடாமல் தானே செய்தன் விளைவு தான் இது.பொதுவாக பார்த்தால் இது சிறிய விஷயம் தான் ஆனால் இதுவே பல இடங்களில் தொடர்கதையாகி பலரின் வாழ்வில் பெரிய பிழையாகிவிடுகிறது.
துர்கா எதுவும் பேசவில்லை அமைதியாக நிற்க,
“நீ என்னடீ அப்படியே நிக்குற…..அவங்க கிட்ட பேசு….”என்று வானாதி அவளின் காதை கடிக்க,
Advertisement
“உங்களுக்கு புரியுதா இல்லையா….நீங்க தான் அவளை இப்படி கெடுத்து வச்சிருக்கீங்க…..இன்னும் உங்க கூட இருந்தா அவளுக்கு நல்லது இல்லை…..”என்று துர்கா சற்று கோபமாகவே கூறிவிட,
“உனக்கு என்னடீ அவ மேல அவ்வளவு வெறுப்பு…..உனக்கு இதெல்லாம் நடக்கலனு அவளை வதைக்கிறியா….”என்று வானாதி வார்த்தைகளை விட்டுவிட,
“ம்மா…..”என்று தன்னையும் மீறி இரைந்துவிட்டாள் துர்கா.
“என்னாச்சுமா துர்கா?…..”என்று நிர்மலா அவளிடம் வந்துவிட,அவளின் கண்களில் கண்ணீர் துளிர்விட்டுவிட்டது.என்னவார்த்தை பேசிவிட்டார் தன் அன்னை என்று மனது அடித்துக்கொள்ள அங்கே நிற்கவே முடியவில்லை.
“அத்த….எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு நீங்க பார்த்துக்கோங்க…..”என்றுவிட்டு வேகமாக வெளியில் சென்றுவிட,
“எங்கடீ போற நில்லு…..துர்கா….துர்கா…..”என்று கத்தியபடியே வானாதி பின்னே வர நின்றாள் இல்லை.வேகமாக மருத்துவமனையில் வெளியில் நின்ற ஆட்டோவில் ஏறி சென்றுவிட,வானாதிக்கு தான் செய்ததின் விளைவு புரிய மனது பாரமாகியது.
அன்று வீரா வீடு திரும்பவே இரவு பதிநொன்றை கடந்திருந்தது.கற்பகத்திடம் முன்பே கூறியிருந்தான் தான் வர நேரமாகும் என்று.துர்காவிடம் பேச முயன்றான் ஆனால் முடியவில்லை.சரி இன்று முழுவதும் அவள் அங்கு தான் இருப்பாள் என்று நினைத்தபடியே தன் அறைக்குள் நுழைய,அங்கு கட்டிலில் உடம்பை குறுக்கி படுத்திருந்தாள் துர்கா.அவளைக் கண்டதும் அவளிடம் நெருங்கியவன்,
“துர்கா….”என்று அவளின் தோள் தொட,
“எனக்கு தூக்கம் வருது வீரா….”என்றவளின் குரலே கூறியது அவள் அழுதிருக்கிறாள் என்று.
“ஏய் என்னாச்சு?…..நீ எப்ப வந்த??ஏன் என்னை கூப்பிடல?…..”என்று அவளை எழுப்ப பார்க்க அவளோ அடமாக படுத்திருந்தாள்.ஒருகட்டத்தில் அவளின் இடைவளைத்து தூக்கி முகம் நிமிர்த்தியவன்,
“என்ன ஆச்சு?….”என்று அழுத்தமாக கேட்க,அழுதழுது முகமெல்லாம் வீங்கி போய் இருக்க வீரா பதறிவிட்டான்.
“என்னம்மா?…..ஏன் இப்படி அழுகுற?….”என்று பதறி கேட்க,அவளிடம் பதிலில்லை மீண்டும் அழுகை விம்மலாக வெடிக்க அவனைக் கட்டிக் கொண்டு அழ தொடங்கிவிட்டாள்.வீராவிற்கோ அனைத்தும் சம்பித்துவிட்டது மனது அவளின் அழுகை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று கட்டளையிட்டாலும் உடல் அவளின் ஆளுகைக்குள் நின்றது பொம்மை போல.அழுதழுது ஓய்ந்தது அவளாக விலகவும் தான் வீரா சற்று பின் நகர்ந்தான்.துர்காவிற்கு சில நொடிகள் எடுத்தது தன்னை மீட்டு எடுக்க,
“சாரி….”என்றுவள் எழுந்து குளியறைக்குள் நுழைந்துகொண்டாள்.அவளையே பார்த்துக் கொண்டிருந்த வீரா அவள் குளியறைக்குள் நுழைந்தவுடன் தன் கைபேசியை எடுத்துக் கொண்டு மாடிக்கு வந்து சித்தார்த்துக்கு அழைத்துவிட்டான்.அவன் அழைப்பை ஏற்றதும்,
“ஹாஸ்பிட்டல்ல என்ன நடந்துச்சு சித்தார்த்……”என்று கேட்க,சித்தார்த் மறைக்கவெல்லாம் இல்லை மருத்துமனையில் தன் தாய் கூறியதைக் கூறி அதற்கு வானாதி அத்தை மறுத்ததையும் கூறியவன்,
“என்ன சொன்னாங்கனு எனக்கும் தெரியல வீரா…..ஆனா ஏதோ அவங்க மனசை புண்படுத்துற மாதிரி தான் பேசிட்டாங்க….அதனால தான் அவங்க அவ்வளவு கோபமா கத்திட்டாட்டு போயிட்டாங்க….நானே உங்களுக்கு போன் போடனும் இருந்தேன்….ஆனா அம்மா தான் வேண்டாம்னு சொல்லிட்டாங்க…..என்னாச்சு வீரா???துர்கா???”…..”என்று கேட்க,
“அழுதுகிட்டு இருக்கா….அதனால தான் உங்களுக்கு போன் பண்ணேன்….”
“ப்ச்…..இவங்க ஏன் இப்படி இருக்காங்கனே தெரியலை…..வாசினி பிடிவாதக்காரி தான் ஆனா சிலதை பொறுமையா சொன்னா புரிஞ்சிக்குவா….இவங்க அவ என்ன சொன்னாலும் கை பொம்மை மாதிரி செஞ்சிட்டு இப்ப அவ வேலை செய்யல,சாப்பிட மாட்டேங்குறானு சொல்லுறாங்க….இதுக்கு தான் சின்ன வயசுலிருந்தே நல்லது கெட்டது எல்லாத்தையும் சொல்லி பழக்கனும் சொல்லுறாங்க….ஆனா இங்க எல்லாம் பெரிய பொண்ணுக்கு தான் போல அவங்க சின்ன பொண்ணுக்கு இல்லை போல….நீங்க அவங்களை பார்த்துக்கோங்க வீரா…..”என்று கூற,அனைத்தயும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவன்,
“ம்ம் சரி வைக்குறேன்….”என்றுவிட்டு வைத்துவிட்டான்.மனது வலித்தது வீராவிற்கு இதே பழைய வீராவாக இருந்திருந்தால் அவனுக்கு புரிந்திருக்காது இப்போது துர்காவுடன் பேசி அவளுடன் பொழுதுகள் கழித்திருந்தவனுக்கு அவளின் அழுக்கைக்கான காரணம் விளங்கிவிட்டது.அதற்கு காரணமும் தான் என்பதும் புரிந்து போக.மீண்டும் மூளைக்குள் பிரளயம் உருவாவது போல் இருந்தது.
“இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க??…..”என்ற குரலில் நிகழ்வுக்கு வந்தவன்.தன் எதிரில் கலைந்த ஓவியமாய் நின்றவளை கண்ணெடுக்காமல் பார்த்தான்.துர்கா மாநிறம் ஐந்தரை அடி,எடுப்பான மூக்கு,நீண்ட முடி அது அவளிற்கு கூடுதல் அழுகு என்பதை இப்போது சில காலங்களாக கண்கொண்டு அவளை முழுதாக ரசித்து வருகிறான்.ஆனால் இன்று சற்று முன்பின்னும் கலைந்து இருந்த போதிலும் அது இன்னும் அவளின் அழகை மெருகேற்றி காட்டியது போல் தோன்றியது அவனிற்கு.
“ஹலோ உங்களை தான்…..”என்று வீராவின் தோள் தொட்டு துர்கா உலுக்க,
“ஆங்….”
“என்ன ஆச்சு நான் கூப்பிட்டுட்டே இருக்கேன்….நீங்க ஏதோ யோசனையிலேயே இருக்கீங்க…..”என்று கூற,
“இல்ல….”
“என்ன இல்ல????”
“யோசனை எல்லாம் இல்லனு சொன்னேன்…..”
“பின்ன எதுக்கு அப்படி பார்த்துக்கிட்டு இருந்தீங்க…..”என்று துர்கா கோபமாக கையை கட்டிக் கொண்டு கேட்க,அவளை முழுதாக ரசித்தவன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு,
‘ம்ம்ம்…..உன்னை தான் பார்த்துக்கிட்டு இருந்தேன்…….”என்று உதட்டுக்குள் முணுமுணுக்க,
“என்ன????என்ன சொன்னீங்க…..”என்று கேட்க,
“ஒண்ணுமில்லமா….”என்றான் சரண்டையும் நோக்குடன்.
“என்ன ஒண்ணுமில்லனு சொல்லுறீங்க….இப்ப ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தீங்க…..”என்று விட்டேன பார் என்று அவள் நிற்க,வீராவிற்கு சிரிப்பு தான் வந்தது.
“எதுக்கு இப்ப சிரிக்கிறீங்க????…..”என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவனின் மிக அருகில் வந்துவிட்டாள் துர்கா.சட்டென்று இப்படி நெருங்கி வருவாள் என்று எதிர்பாராதவன் அவளின் அருகாமை தந்த இதத்தை அனுபவதித்தபடி நின்றுவிட்டான்.ஏதோ தன்னை கிண்டல் செய்து தான் சிரிக்கிறான் என்று நினைத்த துர்காவிற்கு கோபம் தான் வர அவள் கத்திக் கொண்டிருந்தாள்.
“இப்ப சொல்ல போறீங்களா இல்லையா….எதுக்கு சிரிக்கிறீங்க….”என்று கேட்டுக் கொண்டிருக்க அவனோ அவளை விழுங்கு பார்வை பார்த்து வைத்தான்.பழைய துர்காவாக இருந்திருந்தால் வீராவின் பார்வை மாற்றத்தை எப்போதோ உணர்ந்திருப்பாள் ஆனால் என்று வீரா நாம் பிரிந்துவிடலாம் என்று கூறினானோ அன்றிலிருந்து அவனை பார்ப்பதையே விட்டிருந்தாள்.அதனால் அவளிற்கு வீராவின் செயல்கள் எதுவும் புரியவில்லை.அவள் கேட்டதற்கு பதில் கூறாமல் நிற்பவனை முறைத்து பார்த்தவள்,
“எனக்கு இது தேவைதான்….நான் அழறதை பார்த்ததும் நீங்க ஏதோ நினைச்சிட்டீங்கனு……உங்களை போய் தேடி வந்தேன் பாருங்க….”என்று தலையில் அடித்துக் கொள்ள,அவளின் கையை லாவகமாக பிடித்து தன்னுடன் இணைத்தவன் ஒற்றை கரமோ அவளின் இடைவளைத்து இன்னும் தன் முன் மேனியின் மீது மோத செய்ய,
“அச்சோ….”என்ற துர்கா அவனின் மீதே விழுந்து தடுமாறி நிற்க,
“உனக்கு இப்ப நான் தேவை தான்….”என்றவன் கூறியது துர்காவின் காதில் விழவில்லை அவளோ அவனின் செயலில் பிரம்மை பிடித்தவள் போல் நின்றுவிட்டாள்.
“ஓய்….இப்ப நீ தான் ஏதோ யோசிக்கிட்டு இருக்க….”என்று வீரா அவளின் காதில் கிசுகிசுக்க,துர்கா தன் அதிர்ச்சியில் தெளிந்தவள் அவனின் பிடியில் இருந்து விடுபட முயல,
“நானா விட்டா தான் உண்டு….நீயே நினைச்சாலும் போக முடியாது…..”என்று அவளின் நெற்றி முட்டிக் கூற,துர்காவிற்கு இதயமே நின்றுவிடும் போல் ஆனது.
“என்ன???…..”என்றவளின் வார்த்தைகள் கூட காற்றுடன் கரைய,இருவரின் பார்வையும் இப்போது ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டது.தூரத்தில் கேட்ட ஏதோ சத்தத்தில் தெளிந்தனர் இருவரும்.வீராவின் பிடியில் இருந்து வெளிவந்த துர்காவிற்கோ கை,கால்கள் எல்லாம் நடுக்கம் எடுக்க,கீழே ஓடியிருந்தாள்.
வீராவோ தன்னையே சமன் செய்ய போராடிக் கொண்டிருந்தான்.இன்று நிகழ்ந்த ஒன்று தன்னையும் மீறிய மனதின் உந்துதல் என்று மட்டும் புரிந்தது அவனிற்கு.சற்று முன் வரை இருந்த அழுத்தம் அனைத்தும் நீங்கி ஒரு தெளிவு பிறந்தது அவனின் மனதில்.இனி வாழ்வு அவனின் கையில் அதை திறம்பட நான் தான் கொண்டு செல்ல வேண்டும் உறுதியுடன் தன் அறைக்குள் நுழைய,அங்கு அவனின் மனைவியோ தன்னை முழுதாக போர்த்திக் கொண்டு படுத்திருந்தாள்.அதைப் பார்த்ததும் சிரிப்பு பீறிட அவளை சீண்டும் பொருட்டு,
“என்ன துர்கா பீவரா??…..”என்று அவளின் அருகில் வந்து அவளின் நெற்றியை தொட,கண்களை இன்னும் இறுக்கமாக மூடிக் கொண்டாள் துர்கா.
“யாரோ ஒருத்தவங்க என்னை கண்ணை திறந்து பாருங்கன்னு சொன்னதா நியாபகம்…..”என்றவனின் விரல்கள் அவளின் கன்னங்களில் இன்னும் கோலமிட்டுக் கொண்டு தான் இருந்தது.
“அச்சோ வீரா….”என்றவள் அவனின் கைகளை தட்டிவிட்டவளுக்கு நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது.
“சரி சரி நான் எதுவும் செய்யல கண்ணை திற…..”என்று கூற,மெல்ல கண் மலர்ந்தவளை பார்த்து புன்னகைக்க,அவளோ அந்த புன்னகையை விழிவிரித்து பார்த்தாள்.
“கண்ணு இரண்டும் வெளில வந்துட போகுதுமா….”என்றவன் அவளை எழுப்பி அமர வைக்க,துர்கா ஏதோ பொம்மை போல அமர்ந்தாள்.அவளின் பக்கத்தில் அமர்ந்து அவளின் கைகளை தன் கைகளுக்குள் வைத்து அழுத்திக் கொண்டே,
“துர்கா இது இன்னைக்கு நீ அழுதது தான் கடைசி….அதுவும் நம்ம வாழ்க்கைகாக இனி நீ அழவே கூடாது….எனக்கு கோர்வையா பேச வராது ஆனா இப்ப இந்த நிமிஷம் தோணுது உன் கூட வாழனும்னு….சந்தோஷமா வாழனும்னு தோணுது….நிச்சயம் நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும் எனக்கு நம்பிக்கை இருக்கு….இந்த மாற்றத்துக்கு நீ தான் காரணம்….என்னை உணர வச்சது நீதான்….”என்றவன் அவளின் முன் மண்டியிட,
“அச்சோ என்ன பண்றீங்க…..”என்றவளை தடுத்து,
“உன் மேல எனக்கு காதல் வந்துடுச்சு….அப்படி இப்படினு சொல்லமாட்டேன்….ஏனா என்னோட பாஸ்ட் அப்படி….காதல் கத்திரிக்கானு….ப்ச் விடு அதை பத்தி இனி பேச என்ன?? நினைக்க கூட விரும்பல….” தன்னையே திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த துர்காவின் முகத்தை கைகளால் ஏந்தி,அவளின் விழிகளினுள் தன் விழி கலந்து,
“ஆனா எனக்குள்ள நீ வந்துட்ட ரொம்ப நாள் முன்னாடியே….அதை நான் உணர தான் நேரம் எடுத்துடுச்சு….என் கூட உன் வாழ்க்கையை வாழ சம்மதமா துர்கா….”என்று கேட்க,துர்காவின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் வீராவின் கைகளில் பட்டு தெறிக்க,அவளின் தலை தன் போல் ஆடி தன் சம்மதத்தை தெறிவித்தது.
