விழி கொல்லும் விஷமா நீ Epi 24

விழி கொல்லும் விஷமா நீ
Episode 24
Advertisement
நிஹாரிகாவின் கால்கள் தடுமாறின.
Advertisement
என்ன நடந்திருக்குமென்று அவளால் சற்று யூகிக்க முடிந்தது. அப்படியே சிலையாக நின்றுக்கொண்டாள் அவள்.
Advertisement
ஆரவ்வோ நிஹாரிகாவை எட்டிப் பார்த்து விஷமமாகப் புன்னகைத்தவன், “கெயார்ஃபுல்லா ஹேன்டில் பண்ணுங்க ப்ரோ” என்று போலி அக்கறையோடு சொல்லிவிட்டு அங்கிருந்து நகர, இறுகிப் போய் தரையை வெறித்திருந்தான் யாதவ்.
Advertisement
பெண்ணவளுக்கு அவன் மனநிலையை நன்றாகவே புரிந்துக்கொள்ள முடிந்தது.
எச்சிலை விழுங்கிக்கொண்டவள், மெல்ல அவனருகே நெருங்கி, “அர்.. அர்ஜூ… நான் இதை முன்னாடியே சொல்லியிருக்கணும். அது.. நான்…” என்று பேச்சை ஆரம்பிக்க, மறுகணம் அவனின் ஐவிரல்கள் அவள் கன்னத்தில் பதிந்திருந்தன.
அதிர்ந்துப்போய் கன்னத்தைப் பொத்திக்கொண்டவள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவளுடைய முகமே அப்பட்டமாகக் காட்ட, அவனோ நெற்றி நரம்புகள் புடைத்து விழிகள் சிவக்க கொலைவெறியோடு நின்றுக்கொண்டிருந்தான்.
இதுவரை குறும்பு விழிகளைப் பார்த்து காதலையும் கனிவையும் மட்டுமே அவனிடம் அனுபவித்தவளுக்கு அவனின் இந்த அவதாரம் என்னவோ புதிதுதான்.
எங்கு விட்டுச் சென்றுவிடுவானோ என்று நிஹாரிகாவின் உள்மனம் பதறியது.
“அர்ஜூ, என்னை எவ்வளவு வேணா அடிச்சிக்க நான் சொல்றத மட்டும் கேளு! நானும் ஆரவ்வும்…” அவள் அழுதுக்கொண்டே மீண்டும் ஆரம்பிக்க, “ஷட் அப்! ஒரு வார்த்தை பேசினேன்னா கொன்னுடுவேன்” என்று ஆத்திரத்தில் கத்தினான் யாதவ்.
சுற்றியிருந்தவர்களின் பார்வையும் அவர்கள்மேல் விழ, பெண்ணவளோ அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.
“அய்யோ ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் கேளு! அவன் உன்கிட்ட என்ன சொன்னான்னு எல்லா எனக்கு தெரியாது, நானும் அவனும் ரிலேஷன்ஷிப்ல இருந்தது உண்மைதான். ஆனா.. அவன்மேல எனக்கு காதலே கிடையாது வெறும் பயம்தான்…” அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டான் யாதவ்.
“ஆஹான்! அப்போ சரி, உனக்கு காதலே இல்லல்ல, அப்பறம் எதுக்குடீ நேத்து அவன்கூட ரிசார்ட் போன?” என்று அவன் பற்களைக் கடித்துக்கொண்டு கேட்டவாறு நேற்று ஆரவ் ரிசார்ட்டில் நிஹாரிகாவோடு எடுத்துக்கொண்ட செல்ஃபியைக் காண்பிக்க, திகைத்துப்போய்விட்டாள் அவள்.
“நா.. இது… அய்யோ இப்போதான் எனக்கு எல்லா புரியுது. அவனுக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு” என்று தலையிலடித்துக்கொண்டவள், வேகமாக யாதவ்வின் கரத்தைப் பற்றி, “அர்ஜூ நான் போனது உண்மைதான், ஆனா இது நீ நினைக்கிற மாதிரி கிடையாது. அங்க என்ன நடந்துச்சுன்னா…” என்று பதற்றமாக நடந்ததை சொல்ல வந்தாள்.
ஆனால், ஆடவனோ எதையும் கேட்கும் நிலையிலில்லை.
அவள் கரத்தை வெறுப்போடு உதறிவிட்டு அவளை தள்ளிவிட்டவன், “ச்சீ…” என்று ஏதோ அருவருப்பை பார்ப்பது போல முகத்தை சுழிக்க, அதிலே மொத்தமாக நொறுங்கிவிட்டாள் பெண்ணவள்.
“நீயெல்லா பொண்ணாடீ, உன்கிட்ட போய் இப்படி ஏமாந்திருக்கேன்? ச்சீ… உன்னை போய் காதலிச்சேனே! என்னை ஏமாத்திட்டல்ல, என்னை மொத்தமா கொன்னுட்டடீ நீ… இன்னொருத்தன காதலிச்சுக்கிட்டே என்னை… ஏன்டீ.. ஏன் இப்படி பண்ண? உன்ன பார்த்தாலே அருவருப்பா இருக்கு”
என்று ஆக்ரோஷமாகக் கத்திக்கொண்டே போனவன் அங்கிருந்து செல்லப் போக, அவன் கரத்தை மீண்டும் பற்றிக்கொண்டவளோ கதறியழ ஆரம்பித்தாள்.
“அர்ஜூ, ப்ளீஸ் என்னை விட்டு போகாத, நா.. நான் சொல்ல வர்றத கொஞ்சம் புரிஞ்சுக்க. நிஜமாவே நான் உன்னதான்டா காதலிக்கிறேன், தயவு செஞ்சு நம்புடா! நீ இல்லன்னா என்னால முடியாது…” அவனிடம் எப்படி தன் காதலை நிரூபிப்பதென்று தெரியவில்லை அவளுக்கு. கதறித் துடித்தாள்.
ஆனால், யாதவ்விற்கு அவன் ஏமாந்துப் போனது மட்டுமே உள்ளுக்குள் முள்ளாய் குத்திக் கிழித்துக்கொண்டிருந்தது.
“என்னை தொடாதடீ! துரோகி..” இறுதி வார்த்தையை அழுத்தமாகச் சொன்னவன் அவளை உதறிவிட்டு அங்கிருந்து சென்றிருக்க, அப்படியே மணலில் அமர்ந்து நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அழுதாள் நிஹாரிகா.
இதயத்தை கசக்கிப் பிழியும் வலி அவளுக்குள்.
“அர்ஜூ… ப்ளீஸ் போகாத! என்னை விட்டு போகாதடா…” போகும் அவனைப் பார்த்து அழுகையோடு சொல்லிக்கொண்டவளை தேற்றக் கூட யாருமில்லை.
அதன்பிறகு வீட்டுக்கு வந்தவள் அதிகமாக வெளியே செல்வதை குறைத்துக்கொண்டாள். அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்து அழுது கரைபவளைப் பார்க்கப் பார்க்க ராதாவுக்கு பெற்ற மனம் வேதனையில் துடித்தது.
நடந்ததை முழுதாக தெரிந்துக்கொண்ட ஆதிராவுக்கு தோழி தன்னிடம் மறைத்ததை எண்ணி கோபம் இருந்தாலும் அவளை தேற்றத்தான் வழியைத் தேடினாள்.
இப்படியே சில நாட்கள் கடக்க, நீண்ட நாட்கள் உடலிலிருந்த பிரச்சனையை கவனிக்காமல் விட்ட ராதாவோ அன்று தூக்கத்திலேயே இறையடி சேர்ந்திருக்க, தாயின் மறைவால் பிரம்மை பிடித்தது போல இருந்தாள் நிஹாரிகா.
அவளுக்கென்று இருந்த இருவரையும் இழந்துவிட்டாள். ராதாவின் உடலை எடுத்துச் சென்றது கூட தெரியாமல் சுவற்றில் தலையை சாய்த்து அமர்ந்திருந்தவளின் முன்னே வந்தார் மஹாதேவன்.
“அம்மாடீ நிஹாரிகா…” வராத அழுகையை வரவழைத்து போலி அக்கறையோடு அழைத்தவர், மெல்ல அவளருகே அமர, அவளோ தரையை வெறித்தவாறு இருந்தவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
“ராதாவோட பொறுப்புல நீ இருக்கேன்னுதான் உன்னை நான் என்கூட கூட்டிட்டு போகல, இப்போ வயசுப்பொண்ணு தனியா இருக்க, என் கூட என் வீட்டுக்கு வந்துரும்மா, இனிமே அப்பா நான் இருக்கேன், இதுவரைக்கும் காமிக்காத பாசத்த இதுக்கப்பறம் நீ பார்க்க போற.. என் கூட வா, இங்க இருக்கும் போது அம்மாவோட நினைவாதான் இருக்கும், சொல்றது புரியுதாம்மா?”
மஹாதேவன் கேட்டதும், சில கணங்கள் யோசித்துவிட்டு சம்மதமாக தலையாட்டினாள் நிஹாரிகா.
அவளுக்குமே இங்கு இருக்கும் ஒவ்வொரு கணமும் மூச்சு முட்டுவது போல இருந்தது. ஆனால், அவரின் போலி வேஷத்தை அறியாமல் போய்விட்டாள் அந்த பேதை.
அடுத்தநாளே நிஹாரிகாவை அழைத்துக்கொண்டு பேங்ளூரிலிருந்த தன் சொந்த வீட்டிற்குச் சென்றார் மஹாதேவன்.
மஹாதேவனின் மூத்த தாரம் சாவித்ரிக்கு அவளை அழைத்து வந்ததில் கொஞ்சமும் விருப்பமில்லை.
ஆனால், கணவனின் நோக்கம் அறிந்து அமைதியாக இருக்க, அந்த வீட்டிலும் யாரிடமும் பேசாமல் அறைக்குள்ளேயே இருந்தாள் நிஹாரிகா.
அவளுடைய நினைவு முழுக்க ராதாவும் கூடவே யாதவ்வும்.
சில சமயங்களில் இதுதான் வாழ்க்கையென கடந்து போக அவளே முயற்சித்தாலும் மீண்டும் மீண்டும் அவள் நினைவுகளுக்கு வந்து இம்சித்தான் அவளவன்.
இந்த நிலை தான் செய்த தவறுக்கு தண்டனையோ என எண்ணி அதை ஏற்றுக்கொண்டவள் அப்படியே தன் நாட்களை கழிக்க சில மாதங்களும் கடந்தன.
அன்று.. திடீரென நிஹாரிகாவின் அறைக்குள் நுழைந்த மஹாதேவன், “நிஹாரிகா, ஐ வோன்ட் டூ டோக் டூ யூ.. என் பிஸ்னஸ் பார்ட்னர்ஸ்ல ஒருத்தருக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு. நாளைக்கு உன்ன பார்க்க வர்றதா சொல்லியிருக்காங்க. இந்த புடவைய கட்டிக்கிட்டு அவங்க முன்னாடி வந்து நின்னா போதும்..” என்று அவர் பாட்டிற்கு படபடவென பேசிக்கொண்டே போக, இவளோ விக்கித்துப் போய்விட்டாள்.
“என்ன… என்ன சொல்றீங்க? இல்லை.. எனக்கு இதெல்லா வேணாம். எனக்கு இப்போ கல்யாணமே வேணாம். ப்ளீஸ் இதை நீங்களே நிறுத்துங்க” என்று அவள் முடியாதென்று மறுக்க, அவர் விட்டால்தானே!
“நீ பயப்படாதம்மா, இப்போவே கல்யாணத்தை நடத்தணும்னு இல்லை. இப்போ சின்னதா நிச்சயதார்த்தத்த பண்ணி வைக்கலாம், அப்பறம் ஒரு மாசத்துல கல்யாணத்தை நடத்தலாம். நீ சும்மா யோசிக்காத, உனக்கு எப்போ என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும்.. நீ நல்லா ரெஸ்ட் எடு!”
அவர் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஆனால் பெண்ணவளுக்கு நிலைக்கொள்ள முடியவில்லை.
தலையில் கை வைத்து என்ன செய்வதென்று கூட தெரியாமவ் அப்படியே அமர்ந்துக்கொண்டாள் அவள்.
அன்றிரவு வரை குழப்பமும் யோசனையும் அவளை சூழ்ந்துக்கொள்ள, கிட்டத்தட்ட நேரம் இரவு பத்தை தொட்டிருந்தது.
‘இல்லை, நான் அர்ஜூவ காதலிக்கிறத பத்தி அப்பாகிட்ட சொல்லலாம், இதை விட்டா இதை நிறுத்துறதுக்கு வேற வழியில்ல’ என்று நினைத்துக்கொண்டவள் ஒரு முடிவோடு மஹாதேவனை தேடி அவருடைய அறைக்குச் செல்ல, சரியாக அவரும் சாவித்ரியும் பேசிக்கொள்வது அவளின் காதில் விழுந்தது.
“ஏங்க, அந்த பிச்சைக்கார நாய்க்கு இப்படியொரு வாழ்க்கையா! என்னால ஜீரணிக்கவே முடியல. அதிர்ஷ்டகாரிதான்” என்று சாவித்ரி பொறாமை பொங்கக் கேட்க, சத்தமாக சிரித்தார் மஹாதேவன்.
“ஹாஹாஹா.. அதான்டீ எனக்குமே ஆச்சரியமா இருக்கு. அந்த ஆரவ் சரியான கிறுக்கனா இருப்பான் போல, இவளதான் கட்டிப்பேன்னு ஒத்த கால்ல நிக்கிறான். வாட்எவர்! இவள அவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தா லாஸ்ல போற நம்ம பிஸ்னஸ்க்கு பெரிய இன்வெஸ்ட்மென்ட் பண்றேன்னு சொல்லியிருக்கான். எனக்கு அதுதான் வேணும்.. இவள வச்சு அவன் என்ன பண்ணா எனக்கென்ன?”
என்ற மஹாதேவனின் வார்த்தைகளில் ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டாள் நிஹாரிகா.
வாழ்க்கையில் அடுத்தடுத்த அடிகளை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அறைக்குள் அமர்ந்து தீவிரமாக யோசித்தவளுக்கு ஆரவ்வை நினைத்து ஆத்திரம் பெருக்கெடுத்தாலும் பொறுமையை இழுத்துப் பிடித்து தனக்குள் ஒரு முடிவெடுத்துக்கொண்டாள்.
அடுத்தநாளும் விடிந்தது.
ஆரவ் தன் குடும்பத்தோடு நிஹாரிகாவை பெண் பார்க்கக் காத்திருந்தான். முட்டியில் கரங்களைக் கோர்த்தி ஊன்றி அமர்ந்திருந்தவனுக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்று மட்டும் தோன்றிக்கொண்டே இருந்தது.
அவன் நினைத்தது போல அவன் முன்னே தளர்ந்த நடையாக வந்து நின்ற மஹாதேவனோ, “நிஹாரிகா வீட்டுல இல்ல, அந்த ஓடுகாலி நாய் எங்கள ஏமாத்திருச்சு” என்று விழிகள் சிவக்க சொல்ல, கோபத்தில் பற்களைக் கடித்தான் அவன்.
மஹாதேவனின் வீட்டிலிருந்து தப்பித்தவள் எப்படியோ பல போராட்டங்களை கடந்து சென்னைக்கு வந்து சேர்ந்திருக்க, அவளுக்கென்று சென்னையில் இருந்தது என்னவோ ஆதிராதான்.
நிஹாரிகாவுக்கு தேவையான அத்தனையையும் பார்த்துப் பார்த்து செய்தவள் முடிந்தளவுக்கு அவளை கடந்த காலத்திலிருந்து வெளியில் கொண்டு வர முயற்சிக்க, யாதவ்வின் நினைவுகளோடு எப்படியோ நான்கு வருடங்களை கடத்திவிட்டாள் அவள்.
அத்தனையையும் நினைத்துப் பார்த்த நிஹாரிகாவின் இதழில் ஒரு விரக்திப் புன்னகை.
“நான் தப்பு பண்ணேன்தான், அதுக்காக இந்தளவுக்கு கேவலமானவ இல்ல அர்ஜூ.. என்மேல உனக்கு முழு உரிமை இருக்குங்குற ஒரே காரணத்துக்காகதான் அமைதியா இருந்தேன். ஆனா நீ… உன் கூட இருந்ததுக்கு…”
இதயத்தை கத்தி கொண்டு கிழிக்கும் வலி அது. காதலில் இத்தனை வலிகளை அனுபவிக்கக் கூடும் என்று தெரிந்திருந்தால் அந்த பக்கமும் சென்றிருக்க மாட்டாள்.
அன்றிரவு முழுக்க அழுகையிலேயே கரைந்தவள் அடுத்தநாள் எதுவுமே நடக்காதது போல வேலைக்காக தயாராக, ஆதிராவுக்கே ஆச்சரியமாக இருந்தது.
“நீஹா, எங்க போற?” அவள் கேட்க, “வேலைக்கு, இதென்ன கேள்வி?” என்று பதிலுக்கு வாயாடியவளைப் பார்க்க அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“வேலைக்கா.. இவ்வளவு நடந்ததுக்கு அப்பறம் அவன்கிட்ட வேலைக்கு போக போறியா?” என்ற ஆதிராவின் வார்த்தைகள் கடுப்போடு வந்தன.
“இட்ஸ் ஓவர் ஆதி, இதுக்கப்பறம் எனக்கும் அவனுக்கும் இடையில எந்தவிதமான பர்சனல் திங்க்ஸ்ஸும் இல்ல, என்ட்… நானும் வேலைய விட்டு நின்னுட்டேன்னா வீட்டு வாடகை மத்த செலவுககளுக்கெல்லா ரொம்ப கஷ்டமாகிரும். நீ வொர்ரி பண்ணிக்காத, ஐ அம் ஓகே” என்ற நிஹாரிகா அவள் பாட்டிற்கு செல்ல, அவளை குறையாத ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள் மற்றவள்.
தன் ஆஃபீஸ் அறையிலிருந்த யாதவ்விற்கு எந்த வேலையும் ஓடவில்லை. ஏதோ ஒன்று அவன் மனதை முள்ளாய் குத்திக்கொண்டிருந்தது.
இதுவரை தனிப்பட்ட வாழ்க்கையையும் வியாபாரத்தையும் அவன் குழப்பிக்கொண்டது கிடையாது. ஆனால் இன்று அவனாலேயே தன்னை நிலைப்படுத்த முடியவில்லை.
தன்னை நினைத்தே அவனுக்கு கோபமும் ஆத்திரமும் பெருகியது. ஒரு கட்டத்திற்குமேல் முடியாமல் மேசை மீதிருந்த பொருட்களையெல்லாம் தட்டிவிட்டவன், நெற்றியை நீவி விட்டவாறு அப்படியே தளர்ந்துப்போய் அமர்ந்துக்கொண்டான்.
சரியாக கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்த நிஹாரிகாவோ முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல், “குட் மார்னிங் சார், நிவ் ஹோட்டலோட கன்ஸ்ட்ரக்ஷன் வர்க் சம்பந்தமா உங்களுக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இன்னைக்கு இருக்கு. ஹோட்டலோட ஃபைல்ஸ்ஸ ரெடி பண்ணிட்டு மீட்டிங்கான அர்ரேன்ஜ்மென்ட்ஸ்ஸ பண்றேன்” என்றாள் தீவிர முகபாவனையோடு.
யாதவ் அவளிடத்தில் இத்தகைய மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. முதல் முறை அவளெதிரே உணர்ச்சிகளை மறைக்க முடியாமல் தடுமாறினான் அவன்.
“ஓ.. ஓகே” என்று மட்டும் சொன்னவன் அவளின் கூரிய பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அறையிலிருந்து வேகமாக வெளியேறி ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டான்.
அவனுடைய இதயம் அசுர வேகத்தில் துடித்தது. நெஞ்சை நீவி விட்டவாறு தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றான்.
‘என்ன இது, நா.. நான் எதுக்கு இவள பார்த்து பயப்படுறேன்? ச்சே! தப்பு பண்ண அவளே தைரியமா வந்து நிக்கும் போது எனக்கென்ன? இருந்தாலும்…’ என்று உள்ளுக்குள் புலம்பியவாறு உணர்ச்சிகளை அடக்க தலையை அழுந்தக் கோதிக்கொண்டான் யாதவ்.
அன்று முழுக்க நிஹாரிகா வேலையைத் தவிர எதிலும் கவனத்தை திருப்பவில்லை. இன்னும் சொல்லப்போனால், யாதவ்வின் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை அவள்.
ஆனால், யாதவ்தான் அவளின் சிறு பார்வைக்காக தன்னை மீறி ஏங்கத் தொடங்கினான் என்று சொல்ல வேண்டும்.
இப்படியே இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், அன்று யாதவ் அலைப்பேசியை பேசியவாறு தன்னறையை நோக்கி வர, அறை வாசலில் ஆரவ்வோடு நின்று நிஹாரிகா சிரித்துத் பேசிக்கொண்டிருக்கும் காட்சிதான் அவன் விழிகளில் தென்பட்டது.
அதைப் பார்த்ததும் அவனுடைய கால்கள் அப்படியே நிற்க, உள்ளுக்குள் கோபமும் பொறாமையும் போட்டிப் போட்டுக்கொண்டு வந்தது.
சரியாக நிஹாரிகாவின் பார்வை எதேர்ச்சையாக யாதவ்வின் புறம் திரும்ப, “இதோ சாரே வந்துட்டாரு” என்று சொன்னதும், “மிஸ்டர் யாதவ் உங்களுக்காகதான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நிவ் ஹோட்டல் சம்பந்தமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் ஆரவ்.
யாதவ்வோ அவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் கொலைவெறியோடு பார்த்தவன், “ஐ அம் சாரி ஆரவ், ஐ அம் நொட் வெல், நாளைக்கு பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டு அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அறைக்குள் நுழைந்துக்கொண்டான்.
நிஹாரிவுக்கு எதுவுமே புரியவில்லை.
ஆனால் அதைப் பற்றி பெரிதாக யோசிக்காமல் அறைக்குள் நுழைந்து யாத வ்வின் முன்னே சென்று நிற்க, அடுத்து அவன் சொன்ன செய்தியில் தூக்கி வாரிப்போட்டது அவளுக்கு.
**********
மறக்காம உங்க கருத்த சொல்லுங்க டியர்ஸ்… 😍😍
