ஊஞ்சலாடும் முகிலே 44
அத்தியாயம் 44
“அவ்ளோ தானா? கல்யாணமே முடிஞ்சிருச்சா? அதுக்குள்ளவா?” இதுவும் பல்லவி தான்.
Advertisement
அதுவும் மாங்கல்யத்தை கீர்த்திஸ்வரன் அவளுக்கு அணிவித்து, பின்பக்கமாய் அவளை சுற்றி கை கொண்டு வந்து தன்னில் அணைத்த நிலையில் வைத்து நெற்றி வகிட்டில் குங்குமமும் சேர்த்து அவளின் மாங்கல்யத்திலும் அந்த குங்குமத்தை வைத்து என ஈஸ்வர் மனமெங்கும் அத்தனை மகிழ்ச்சியில் அவளிடம் கட்டுண்ட நிறைவில் என இருக்க,
அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் இப்படி கேட்டு வைத்திருந்தாள் அவள் கணவனிடமே.
Advertisement
Advertisement
“எதாவது பீல் பண்ண விடுறியா என்னை?” என்று அவள் பக்கம் திரும்பியவன்,
“எவ்ளோ ஆசையா நெத்தில குங்குமம் வச்சுவிட்டேன். அதையெல்லாம் கண்டுக்காம இது ஒரு கேள்வி?” என்றவன் கொஞ்சம் முறைப்பும் கொஞ்சும் ஆசையும் என கேட்க,
Advertisement
“மூனே நாள்ல டிகிரி ஹோல்டரை மிஸ்ஸஸ் ஆக்கிட்டு பீலிங்ஸ் வேற!” முணுமுணுத்தாலும் அருகில் இருந்தவனுக்கு நன்றாய் கேட்டு புன்னகையும் வந்தது அதில்.
“நியாபகம் வச்சுக்குற மாதிரி எதாவது வேனா தரவா?” மீண்டுமே கேட்டவனை கண்களை அகல விரித்து,
‘எதாவது சொன்னியா?’ என்ற எண்ணத்தை தாங்கி அவள் பார்க்க,
“கல்யாணமாகிடுச்சுன்னு நியாபகப்படுத்த எதாவது வேணுமானு கேட்டேன். தப்பில்லயே!” என்றவன் கண்களை வேறு சிமிட்ட, இங்கே உலகமே தட்டாமாலை சுற்றியது பல்லவிக்கு.
“அவ்வா! மகேஸ்வரன் பையனா இது?” மனதுக்குள் சொல்ல நினைத்தாலும் வாய் அடங்கவே இல்லை பல்லவிக்கு.
“என்ன டா பண்றீங்க ரெண்டு பேரும்?” என அவர்களின் அருகில் வந்து நின்றுவிட்டார் லதா.
“ம்ம்ஹுஹ்ம்ம்! நான் இல்ல. உங்க சன் தான்!” என்று வேறு அவள் சொல்ல,
“அடடா இங்கேயுமா?” என்றவர்,
“வந்தவங்க விஷ் பண்ணிட்டு கிளம்பனும். அதுவரைக்கும் மூச்!” என பல்லவியிடமே சொல்ல,
“இதென்ன டா பல்லவிக்கு வந்த சோதனை?” என்றவள் பேச்சில் அத்தனை வசியப்பட்டான் ஈஸ்வர்.
இருவருமாய் எழுந்து கடவுளை வணங்கி என மகேஸ்வரன் லதா முன் நின்று அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிட பாதம் பணிய, லதா கொடுத்த பூவை இருவரிடமும் தெளித்தார் மகேஸ்வரணும்.
சித்ராவிடமும் தம்பதிகளாய் ஆசீர்வாதத்தை வாங்கிக் கொள்ள, அடுத்து வந்திருந்தவர்கள் பரிசுகளுடன் மேடையேற ஆரம்பித்தனர்.
நிச்சயம், வரவேற்பு என எதுவுமின்றி நேராய் திருமண நிகழ்வு தான் லதா ஏற்பாடு. அதில் மகேஸ்வரனுக்கும் அத்தனை கோபம்.
“என் பிசினஸ் பிரண்ட்ஸ் எல்லாம் வர வேண்டாமா?” என சத்தமிட்டிருந்தார்.
“அப்புறமா கெட் டு கெதர் வச்சுக்கலாம் ப்பா!” என்று சொல்லிவிட்டான் ஈஸ்வரும்.
இப்போது திருமணம் முடியவும் மகேஸ்வரன் வந்து கீழே இருக்கையில் அமர்ந்து கொள்ள, அதுவே போதும் என்று தான் நினைத்துக் கொண்டார் லதாவும்.
சித்ரா தன் பக்க உறவினர்களை எல்லாம் வரவேற்று அன்போடு கவனித்தாலும் அத்தனையும் ஏற்பாடு செய்திருந்தது என்னவோ மாப்பிள்ளை வீட்டினர் என்பதில் கொஞ்சம் வருத்தம் தான்.
தன்னிடம் இருந்த இடப் பத்திரத்தை கூறி அதை வைத்து மகள் திருமணத்தை நடத்த அவர் பங்கை தருவதாய் சொல்லி இருந்தார்.
லதா கேட்க வேண்டுமே! அப்போ அது உன் பொண்ணுக்கே இருக்கட்டும் பத்திரமா வச்சிரு. இப்ப அதை எடுக்க வேண்டாம் இன்று அத்தனை கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.
“விடு ம்மா! அதான் ஏற்கனவே காசு குடுக்க வேண்டியது இருக்குல்ல? அது கூட இதையும் கணக்கு வச்சுப்போம்!” என்றுகூறிவிட்டாள் பல்லவியும்.
“மறுபடியும் மறுபடியும் சொல்றேன் லதாம்மா. என்னை மைண்ட்வாஷ் பண்ணி வேலைக்கு அனுப்ப மாட்டேன்னு எல்லாம் சொல்ல கூடாது!” என்று கட்டளையும் இட்டிருந்தாள்.
“சரிங்க சின்ன அம்பானி!” என்றார் லதா சிரிப்போடு.
இப்பொழுது வந்தவர்கள் எல்லாம் “அண்ணனே தேடி வந்து உன் பொண்ணை அவர் பையனுக்கு கேட்டாராமே!” என்று சித்ராவிடம் வந்து பெருமையாய் கேட்க, அதையும் லதா தான் அப்படி சொல்லி இருப்பது என புரிந்தது.
இத்தனை நாட்களும் வீட்டிற்குள் பெட்டிப் பாம்பாய் மகேஸ்வரன் லதாவை வைத்திருக்க, கிடைத்த ஒரே ஒரு சந்தர்ப்பத்தை அத்தனை திருப்திகரமாய் தனக்கு சாதகமாய் பயன்படுத்தி மகனுக்கு பிடித்தபடி அவன் திருமணத்தையே நடத்தி காட்டி இருந்தார் லதா.
இப்படி அத்தனை பிரச்சனைக்களையும் தாண்டி கடந்து திருமணம் நடந்தேறி இருந்தது.
பெண்ணையும் மாப்பிள்ளையையும் என முதலில் மாப்பிள்ளை வீட்டிற்கு மண்டபத்தில் இருந்து அழைத்து வந்தனர்.
காரில் வரும் பொழுது இருந்தே அத்தனை அமைதி பல்லவியிடம். கூடவே அன்னையையும் அவ்வபோது திரும்பிப் பார்த்துக் கொண்டே தான் வந்தாள்.
அன்னையை பிரியும் வருத்தமா இல்லை நீண்ட நாட்களுக்கு பின் தன் வீட்டிற்குள் வரும் உணர்வா என அதை ஈஸ்வரும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்
அஞ்சலி கைகளில் குங்குமம் கரைத்த தட்டினை தேவி வந்து கொடுக்க, கீர்த்திஸ்வரன் பல்லவியோடு கை கோர்த்து வீட்டின் முன் நின்றான்.
ஆரத்தி சுற்றி இருவரையும் அழைத்து லதா உள்ளே நுழையப் பார்க்க, ஈஸ்வர் கைப்பிடித்து தடுத்திருந்தாள் பல்லவி.
இழுத்தவளை என்னவென்று நின்று திரும்பி அவன் பார்க்க, அவளின் முகத்தில் புதிதாய் ஒரு தவிப்பும் கெஞ்சலும் கூடவே ஒரு இறுக்கமும்.
“என்னாச்சு பல்லவி?” என்று ஈஸ்வர் அவள் அருகில் வர, ஏனையோர் சில பேர் தான் என்றாலும் அவர்களும் பார்த்து நின்றனர்.
“என்னை மாமா உள்ள கூப்பிடலையே!” என்றவளுக்கு அந்த வீட்டிற்குள் வர நினைக்கும் முன் அத்தனை நியாபகங்கள்.
‘அவனை வாச்சே வீட்டுக்குள்ள நுழைய பாக்குறீங்களா?’
‘இதுக்குன்னே சொந்ததை தேடி வருவீங்களோ? யார் வீட்டுல பையன் இருக்கான். வசதி எப்படினு தெரிஞ்சிகிட்டு தான் வந்ததே இல்ல?’ என இன்னும் என்ன என்ன பேச்சுக்கள்.
அத்தனையும் மாமா என்று மரியாதை வைத்திருந்த ஒருவர் கடுஞ்சொற்கள்.
பதிலுக்கு தகுந்த வார்த்தைகளால் தான் அன்றே பல்லவி திருப்பிக் கொடுத்திருந்தாள்.
‘லாவண்யாவை உங்க பையனுக்கு கட்டி வச்சு பாருங்க. அப்ப தெரியும் உங்களுக்கு’
“ஏன் நான் ஏன் உங்க பையனை கல்யாணம் பண்ணிக்க கூடாது? அப்படி ஒன்னும் குறைஞ்சு போய்டல நாங்க. காசு இருந்தா நீங்க பெரிய அப்பாடக்கார?’ என அவர் பேச்சிற்கு ஏற்கனவே பதிலடி கொடுத்திருந்தாலும் அந்த வீட்டுப் பக்கம் செல்வதை அறவே நிறுத்தி இருந்தவளை ஈஸ்வர் அவளையும் மீறி அவனிடம் வர வைத்திருந்தான்.
இனி எதையும் யோசியாதே! இது தான் கடவுளின் சித்தம் என நினைத்து தான் வந்தாலும் என்னவோ அவர் அழைக்க மட்டுமாவது செய்து விடட்டுமே எனும் எண்ணம்.
அவர் வாயாலேயே அழைத்து அதன் பின் தான் உள்ளே சென்றால் தான் மனம் சமன்படும் என்று தோன்றவும் அதை கூறியும் விட்டு ஈஸ்வரை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் கேள்வியையும் புரிந்து கொண்டவன் எங்கே தான் எதுவும் நினைத்து விடுவோமோ என சஞ்சலமாய் நின்றவளையும் என கண்டு கொண்டான் அப்பொழுதே!.
“ம்மா!” என்று அழைத்த ஈஸ்வர் கண்ணமர்த்தி அவள் கைப்பிடித்து அழுத்தம் கொடுக்க, அதுவே கொஞ்சம் நிம்மதி தான் அவளுக்கு.
“இதோ ஒரே நிமிஷம் ஈஸ்வர்!” என்ற லதா உள்ளே சென்றிருந்த மகேஸ்வரனை சென்று அழைக்க,
“இதுக்கு நான் எதுக்கு? உள்ள வர சொல்ல வேண்டியது தானே?” என்று சிடுசிடுவென்று தான் நின்றார் அப்போதும் மகேஸ்வரன்.
“அவ மிரண்டு போய் நிக்குறா வாசல்ல. என்ன வார்த்தையை விட்டு வச்சீங்களோ! உள்ள வான்னு கூப்பிடுறதுல என்ன குறைஞ்சிட போகுது உங்களுக்கு?” என்ற லதா, மகேஸ்வரன் என்னவோ சொல்ல வரவும்,
“என்கிட்ட பேசி எதுவும் ஆகப் போறதில்ல. இப்ப நீங்க வரலைனா இன்னைக்கே நம்மளோட இன்னொரு வீடு இருக்குற ஏரியாக்கு கூட்டிட்டு போய் தனிக்குடித்தனம் வச்சிடுவேன் அவங்களை!” என்ற மிரட்டல் வேலை செய்ய, பல்லைக் கடித்து வந்தவரை மௌனமாய் அவள் பார்க்க, அவருள்ளும் பழைய நியாபகங்கள் தான்.
“உள்ள வாங்க!” என்ற வார்த்தைகள் சாதாரணம் தான் என்றாலும் அதுவே போதும் என்பதாய் மனதை திருப்திபடுத்திக் கொண்டு தான் அன்னையோடு கணவனும் என வீட்டினுள் அடியெடுத்து வைத்தாள் பல்லவி.
“நீ பயந்து அத்தையையும் பயமுறுத்தாத. இது நம்ம வீடு!” உள்ளே வந்ததும் ஈஸ்வர் கூறி அவள் கன்னம் தட்டி புன்னகைக்க, விளக்கேற்ற சொல்லி அடுத்தடுத்த சம்பிரதாயங்கள் நடந்தேறியது.
சிறு ஓய்விற்கு பின் அன்று அந்த நாள் முழுதும் ஓட்டத்தில் தான் இருந்தது. அஞ்சலியை அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை பெண்ணும் என,
மீண்டுமாய் மறுவீடு அழைத்து வர வேண்டும். பெண் வீட்டிற்கு சென்று அங்கே கை நனைத்து என மீண்டும் கீர்த்திஸ்வரன் வீடு என வந்து சேரும் போது மாலை கவிழ்ந்துவிட்டது.
அதுவரை அவனோடு பேசி விளையாடி அஞ்சலியோடு நேரம் கடத்தி என பல்லவி கொஞ்சம் இலகுவாகி இருந்தவள் பல்லவி கிளம்பும் நேரம் கண்ணில் நீரை தேக்கிக் கொண்டாள்.
“நினைச்ச நேரம் போய்ட்டு வர போற. இதோ இவனும் தான் உனக்கு எப்ப வேணுமோ கூட்டிட்டு போய் வந்து தான் இருக்க போறான். இதுக்கு அழுகையா?” என அருகில் வந்த லதா தோள்களில் சாய்ந்து கொண்டாள் பல்லவி.
இது தான் நிஜம் என தெரியாதவள் இல்லையே! ஆனாலும் சிறு வலி ஊடுருவ தான் நின்றது.
சித்ராவும் சொந்த பந்தங்களும் என கிளம்பி இருக்க, இரவு ஏழு மணிக்கு சாப்பிட அமர்ந்தனர் பல்லவி, ஈஸ்வர், அஞ்சலி என.
“எனக்கு தெரிஞ்சு பல்லவி இன்னைக்கு தான் முதல் முறையா நம்ம வீட்டுல சாப்பிட போறா. இல்ல டா ஈஸ்வர்?” லதா கேட்டு புன்னகைக்க,
‘ஏன் ஏற்கனவே வந்த idam தானே!’ என தோன்றினாலும் மகேஸ்வரன் கேட்டுவிடவில்லை.
“ஆமால்ல! ஜூஸ், காபினு மட்டும் குடிச்சுட்டு எஸ்கேப் ஆயிடுவா இல்ல?” என்றான் ஈஸ்வரும்.
“ஏன்? நீ சாப்பிட சொல்ல மாட்டியா?” இதுவரை ஒரு நாள் கூட இங்கே சாப்பிடதில்லையா இவள் என்று ஆச்சர்யமாய் கேட்டுவிட்டார் மகேஸ்வரனே.
“எங்க! உங்களை மாதிரியே ரோஷக்காரி. ஒரு நாள் கூட சாப்பிட்டதில்ல. எவ்வளவு சொன்னாலும் அம்மா வெயிட் பண்ணுவாங்கனு சின்ன பிள்ளை மாதிரி சொல்லிட்டு ஓடிடுவா!” என்றார் அவள் அருகில் நின்று தலையில் கைவைத்து ஆட்டி.
“எப்ப கேட்டாலும் கூட்டிட்டு போவாங்க சொன்னிங்க இல்ல? இப்ப அம்மா பாக்கணும்னு இருக்கு!” என்று அந்த நேரத்தில் லதாவிடம் சொல்லி ஈஸ்வரை பல்லவி கிண்டலாய் பார்க்க,
“அம்மாகிட்ட பேசு பல்லவி. நாளன்னைக்கு போகலாம்!” என லதா செல்லம் கொஞ்ச,
“குழந்தைக்கு விளையாட்டு காட்டி சோறு ஊட்டி விடுங்க ம்மா!” என்றான் ஈஸ்வரும் விளையாட்டாய்.
