Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 45

அத்தியாயம் 45

 

இரவு உணவை முடித்துக் கொண்ட கையோடு மெதுவாய் நடந்து அறைக்கு சென்றுவிட்டார் மகேஸ்வரன். இன்னும் நடை எல்லாம் திரும்பி இருக்கவில்லை. ஆனாலும் பரவாயில்லை என்பதை போல தானே நடக்க பழக முயற்சித்துக் கொண்டிருந்தார்.

 



Advertisement

“அஞ்சலி! நீயும் சாப்பிட்டு தூங்க போ!” லதா சொல்ல,

 

“லதாம்மா! இப்ப ஏன் இவ்ளோ டெரரா அவளை போக சொல்றிங்க? கல்யாண வீடு தானே? ஆளாளுக்கு எனக்கென்னனு கிளம்பிட்டாங்க. இங்க இருக்குற இவளையும் போக சொல்றிங்க. ஒரு ஃபன் வேண்டாமா?” என்றாள் பல்லவி.

Advertisement

 

Advertisement

“அட்லீஸ்ட் உங்களுக்கு ரொம்ப வேண்டியவங்களையாவது தங்க சொல்லிருக்கலாம் இல்ல?” என்றும் கேட்க,

 

“ம்ம்க்கும்! உங்க மாமா பவுசுக்கு நெருங்குன சொந்தம்னு சொல்லிக்க கூட யாரும் ஆசைப்பட மாட்டாங்க. அப்படி நெருங்குன சொந்தமா நாங்க நினைக்குற அளவுக்கு எங்களை நெருங்கி வந்ததும் னே மட்டும் தான். அதான் ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டு வந்துட்டோம் உன்னை!” என்று சிரித்தார் லதாவும்.

Advertisement

 

“இந்த வாய்ல மட்டும் அம்மாக்கும் பையனுக்கும் குறையே இல்ல!” என்றதும்,

 

“என்ன?” என லதா கேட்க, ஈஸ்வர் சட்டென்று திரும்பி மனைவியை முறைத்திருந்தான்.

 

“டங்கு ஸ்லிப்பாகி…” என்ன அவள் சமாளிப்பதற்குள் புரிந்ததாய் சிரித்துக் கொண்டார் லதா.

 

அதன்பின்னும் அஞ்சலியை அனுப்பவில்லை பல்லவி. அவளோடு அமர்ந்து டிவி, கிரிக்கெட் என பார்த்து சிரித்து கதை பேசி என ஏழு மணிக்கு டைனிங் டேபிளில் ஆரம்பித்த பேச்சு ஒன்பது மணிக்கு ஹாலில் தொடர, இடையிடையே சிரிப்பு சத்தம் வேறு மகேஸ்வரன் அறை வரை கேட்டது.

 

இத்தனை நாட்களும் இப்படி எல்லாம் சத்தம் கேட்டதே இல்லை வீட்டினுள். லதாவிற்கு அது மகிழ்ச்சியும் திருப்தியும் தான் என்றாலும் அவர்களோடு தனியாய் அமர்ந்து டிவியை தேமே என்று பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரைப் பார்த்து சிரிப்புமே வராமல் இல்லை.

 

இதில் மகேஸ்வரன் வேறு எங்கே வேளியே வந்து எதுவும் பேசி சிறியவர்களின் மனநிலையை காயப்படுத்திவிடுவரோ என சிறு எண்ணமுமாய் தான் நின்றார்.

 

மகேஸ்வரனுக்கும் உள்ளிருந்து இவர்கள் சத்தம் கேட்க தான் செய்தது. பேசுவது தெளிவாய் கேட்கவில்லையே தவிர அந்த அரட்டை சத்தம் பெண்கள் சத்தம் கேட்டுக் கொண்டு தான் இருந்தார்.

 

அதை போய் கேட்க வேண்டும் என்று அவருக்கு தோன்றவே இல்லை. என்ன இவ்வளவு சத்தம் என்று தோன்றினாலும் ‘போய் கேட்டா இவகிட்ட நாலு வார்த்தை வாங்கிக்கனும். எதுக்கு!’ என்று அமைதியாகி இருந்தார்.

 

“பல்லவி! நாளைக்கு பேசிக்கலாம். தூங்க போகலாம் டா எல்லாரும்!” என்று சொல்ல,

 

“இப்பவேவா? ஒன்பது மணிக்கு என்ன தூக்கம் உங்களுக்கு?” என்றவள்,

 

“ப்ச்! ஆமா உங்களுக்கு டையார்ட்டா இருக்கும்ல? ஓகே நீங்க தூங்க போங்க லதாம்மா. அஞ்சலி கூட நான் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கேன்!” என்றதும்,

 

‘இவள் தேற மாட்டாள்!’ என லதா மகனைக் காண, பல்லவிக்கும் அவனைக் கண்டதும் தான் திடுக்கென்றது.

 

‘அட மக்கு மடச்சி!’ என தலையில் தட்டிக் கொள்ள வேண்டுமாய் அன்றைய தினமே அப்பொழுது தான் நியாபகம் வர, ஆனாலும் அப்படியே செல்ல முடியவில்லை.

 

அஞ்சலியை வம்படியாய் பிடித்து வைத்து பேசிக் கொண்டிருந்ததே அவள் தான். இதில் லதாவின் குறிப்புகள் எல்லாம் எங்கே அவளுக்கு புரிந்தது.

 

இனி இது தான் தன் வீடு என்று வரை தான் நினைத்திருந்தாள். செல்லும் போதும் அன்னையோடு உறவினர்கள் என யாரும் எதையும் உணர்த்தி செல்லமால் இருக்க, அன்னையை பிரிந்த துக்கத்தில் அப்பொழுது வேறெந்த நியாபகமும் இல்லை அவளுக்கு. 

 

மாலை உடை மாற்றி தான் இருவருமே சித்ரா வீட்டிற்கு சென்று வந்திருக்க, இப்பொழுது புதிதாய் வித்தியாசமாய் எதுவுமே தோன்றாமல் இயல்பாய் கதை பேசி இருந்தவளுக்கு ஈஸ்வருடனான தனிமைப் பற்றிய சிந்தனை கொஞ்சமும் நினைவில் இல்லை.

 

இப்பொழுது கொஞ்சமே கொஞ்சம் அவள் அசடு வழியப் பார்க்க, ஈஸ்வர் முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

இதற்கு மேலும் சரி வராது என்று லதா தான், “நீயும் மார்னிங் சீக்கிரம் எந்திச்சுட்ட தானே அஞ்சலி? போய் ரெஸ்ட் எடு. நாளைக்கு அரட்டையை வச்சுக்கலாம்!” என்றவர்,

 

“ஈஸ்வர்! உனக்கென்ன டா? போ!” என்று சொல்ல,

 

“ஒரு போன் கால்க்கு வெயிட் பண்றேன் ம்மா!” என்றவன் முகம் அப்பொழுதும் சாதாரணமாய் இருக்க,

 

‘இந்நேரத்துல போன் கால்? ஈஸு!’ என்ன உள்ளுக்குள் சிறு பதற்றம் அந்த நொடி.

 

“அப்போ அவன் இருக்கட்டும். பல்லவி! நீயும் போ!” என்ன அடிக்காத குறையாய் அனைவரையும் தள்ளிவிட்டுக் கொண்டு அஞ்சலி நகர்ந்ததும் லதாவும் தன் அறைக்கு சென்றுவிட்டார்.

 

அதுவரை அத்தனை சத்தம் அஞ்சலி பல்லவி என அவர்கள் குரல் வீட்டை நிறைத்திருக்க, ஈஸ்வருடன் அந்த ஹாலில் இருந்த பல்லவிக்கு அங்கிருந்த நிசப்தம் ஒருவித மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தது.

 

எதாவது பேசுவானா என எதிர்பார்த்து பின் தயங்கி என சில நிமிடங்களுக்கு மேல் அங்கிருக்க முடியாமல் முதலில் மெதுவாய் நகர்ந்து பின் வேக நடையோடு கீர்த்திஸ்வரனின் அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டாள் பல்லவி.

 

அடுத்த பத்து நிமிடங்கள் கடந்து தான் கீர்த்திஸ்வரன் அங்கிருந்து எழவே செய்தான்.

 

எழுந்தவன் ஹாலில் விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு அறைக்கு செல்ல, அங்கிருந்த கண்ணாடி வழி பல்லவி பால்கனியில் நிற்பது தெரிந்தது.

 

பார்த்தபடி வந்து அவன் அமர்ந்து கொள்ள, கதவை திறக்கும் சத்தத்திலேயே அவன் வரவை தெரிந்து கொண்டவள் இன்னும் அறைக்குள் மட்டும் செல்லவில்லை. ஏன் திரும்பியும் பார்க்கவில்லை.

 

“பல்லவி!” என்ன அழைத்துவிட்டான் அவனே.

 

“சொல்லுங்க!” என அவள் வர, 

 

“உக்காரு. என்ன கண்ணாமூச்சு ஆடிட்டு இருக்க நீ?” என்று கேட்டேவிட்டான்.

 

“இல்லையே! சும்மா தான். உங்க ரூம் இப்ப தான் பாக்குறேன். நீட்டா நல்லாருக்கு!” என அவனுக்கு தூரம் அமர்ந்தபடி பார்வையால் அறையை சுற்றி வந்தவள்,

 

“பால்கனி தோட்டம் பக்கம் இருக்குறது இன்னும் நல்லாருக்கு. இந்த பக்கமும் நான் பார்த்ததே இல்லை வெளில” என்றாள்.

 

“ஹ்ம்ம்!” என்றவன் அவள் முகம் பார்த்து அமர்ந்திருக்க, அடுத்து என்ன பேச என்று அவள் யோசிக்க,

 

“மறந்துட்ட தானே?” என்றான் அவனே.

 

“என்ன?”

 

“அதான்! கல்யாண நாள், இது உன் வீடு… அதோட வேற நியாபகம் இல்லைல?” என்று கேட்டவன்,

 

“பார்த்தேனே முகம் போன போக்கை!” என்றான் கிண்டலாய்.

 

பதில் சொல்லவில்லை அவள். சிறு வெட்கமும் படபடப்பும் ஒட்டி இருந்தாலும் அதையும் காண்பிக்க தெரியாமல் அவன் பார்வையை தவிர்த்து அறைக்குள் பார்வையை சுழற்ற, கட்டிலில் பூக்கள் தவிர வேறெதுவும் பார்வையில் படரவில்லை அவளுக்கு.

 

“கண்ணுக்கு எதுவும் ஆகிப் போச்சா!” இப்படியும் நினைப்பு இருக்க, கண்ணைக் கசக்கிக் கொண்டு அவள் விழித்த நேரத்தில் அவளை உரசும் தூரம் வந்து அமர்ந்திருந்தான் கீர்த்திஸ்வரன்.

 

இதோ அவன் கைகளும் அவள் கைகளைப் பற்றி அவன் கைகளுக்குள் அடக்கிக் கொள்ள, சொல்லவும் மெல்லவும் முடியாத நிலை என ஒரு புதுவித உணர்வுகள் அவளை ஆட்கொள்ள ஆரம்பித்த நேரமது.

 

தன் கைகளுக்குள் பொருந்திக் கொண்ட அவள் கரம் பார்த்து சன்னமாய் புன்னகைத்தவன் அவளை திரும்பிப் பார்க்க, அந்த புன்னகை சத்தத்தில் அவளுமே திரும்பி இருந்தாள் அவன் பக்கம்.

 

எதற்கென்றே புரியாமல் தானும் பொத்தாம் பொதுவாய் அவள் சிரித்து வைக்க, 

 

தன் ஒற்றை கரத்தில் அவள் இரு கைகளையும் பிடித்தவன் இடது கரம் அவள் தோளை சுற்றி வரும் நேரமே கண்கள் அகல அரண்டு என அவள் மூச்சை உள்ளிழுக்க, தோளில் கையிட்டு அவள் கரங்களை விடுவித்தவன் வலதுகரம் கன்னம் தாங்கி என நகர்ந்து வர பல்லவி உடலில் சிறு நடுக்கம்.

 

‘பேசவே இல்லையே இவன். என்ன செய்கிறான்!’ என மூளை கூச்சலிட, கன்னம் திருப்பி தன்னைப் பார்க்க வைத்தான் அவளை.

 

மீண்டும் அதே போல புன்னகையை தர அவள் முயல, அவளைப் பிடித்தவன் படிக்கவும் ஆயத்தமாகி இருந்தான்.

 

அவள் புன்னகைக்க ஆரம்பிக்கவும் அவன் இதழ்கள் முதல் முதலாய் அவள் கன்னத்தில் அச்சாரமிட்டு அது நகரவும் தொடங்க, மூச்சைப் பிடித்து சமைந்து அமர்ந்துவிட்டாள்.

 

அதில் இன்னுமே அவனுக்கு வேலை எளிதானதாய் அவளுள் கரைய ஆரம்பிக்க, தாள முடியா தள்ளாட்டம் என பல்லவிக்கு அடிவயிற்றில் புதுவித உணர்வாய் அவனிலிருந்து விலக, கொஞ்சமும் அனுமதிக்கவில்லையே அதற்கு அவன்.

 

தடுமாறியவளை தாலாட்டி தன்னில் இணைத்துக் கொண்டவன் பேச்சுக்கள் எல்லாம் அவளை வெட்கம் கொண்டு அவனின் மார்பில் சாய வழி செய்தது.

 

இதழ்களின் ஸ்பரிசமும், விரல்களின் தழுவலும், கண்களின் பார்வையும் என அவன் முழுதாய் அவளிடம் மூழ்கி இருக்க, மொத்தமாய் அவளை அவனிடம் சேர்ப்பிக்க வழிசெய்து கொடுத்திருந்தாள் பல்லவி.

 

மென்மையாய் ஆரம்பித்தவன் வன்மையிலும் அவள் சிணுங்களிலும் என அவர்களின் உலகம் முழுதாய் அவர்களுக்கானதாய்.

 

மொத்தமாய் அனைத்தையும் மறக்கடிக்க செய்துவிட்டான். அவனை மட்டுமே நினைக்கும்படி அவளில் நிறைந்துவிட்டான்.

 

நேரங்கள் கடந்து சென்றதெல்லாம் அவர்களுக்கான தனிமையின் இனிமைகள்.

 

இரவு ஒரு மணி. ஈஸ்வர் நெஞ்சத்தில் சாய்ந்திருந்தவள் முகத்தில் கொள்ளையாய் வெட்கமும் சிவப்பும் கூச்சமும் என நிமிராமல் இருக்க, ஈஸ்வர் இதழ் நிறைந்த புன்னகையுடன் அவள் தலைகோதிக் கொண்டிருந்தான்.

 

“பல்லவி!” என அதே அழைப்பு. அதிலும் அத்தனை மென்மை. 

 

“இங்க என்னை பாரு!” ஈஸ்வர் கேட்க,

 

“ப்ளீஸ்! தூங்குங்களேன்!” என்றாள் நிமிராமல். இருவருக்குமே அந்த நிமிடங்கள் அப்படியே வேண்டுமென்றது.

 

தலையில் கைவைத்து ஆட்டியவன் உச்சந்தலை முத்தம் இன்னுமே அவளுள் இறங்கி மாயம் செய்ய, அவன் நெஞ்சை முட்டிச் சென்றாள்.

 

அப்படியே நேரம் நகர, இருவரையும் தன் பிடியில் கொண்டு வந்தது தூக்கம். ஆழ்ந்த நிம்மதியான அந்த உறக்கம் அவர்களின் வாழ்க்கையின் என்றென்றும் நிறைந்திருக்கும்.

 

காலை முதலில் விழித்த ஈஸ்வர் கொடுத்த மீண்டுமான கன்னத்து முத்தம் அந்த நாளின் புத்துணர்வோடு ஆரம்பமானது பல்லவிக்கு.

 

“பல்லவி ஓகே தானே?” ஈஸ்வர் கேட்க,

 

“மூச்!” என்றவளுக்கு அவன் முகம் பார்க்க தடுத்தது நாணம்.

 

அவளிடம் அவன் வேறுபட்டு நிற்க, தன் குடும்பத்தின் வேறுபாட்டை அவளைக்கொண்டு காணமுடிந்தது ஈஸ்வருக்கு.

 

லதாவின் தோழியாய், அஞ்சலிக்கு வழி காட்டியாய் என அவர்களிடம் ஆரம்பித்த நேசம் மகேஸ்வரனை கொஞ்சமே கொஞ்சமாய் திசை திருப்பி இறுக, இனி வரும் நாட்களில் அவரிடமும் கூட மாற்றம் நிச்சயமாய் தான்.

 

 

நாளை நிறைவுப் பகுதி😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!