Skip to content
Post Views: 139
அத்தியாயம் 10
அப்போது தான் வேலை முடித்து இரவு வீட்டிற்கு வந்தான் செந்தில். டேபிளில் ஜக்கில் இருந்த நீரை குடித்து கொண்டிருக்கையிலே “உன் பொண்டாட்டிய கூப்பிடு.. இன்னைக்கு இரண்டில் ஒன்னு தெரியாமல் விட கூடாது” என காரணம் சொல்லாமல் கூப்பாடு போட்டு கொண்டிருந்த காந்திமதியை, பார்த்தபடி ஜக்கை டேபிளிலேயே வைத்துவிட்டு “ஏன்மா, கத்துற.. என்ன பண்ணா அவ!” என செந்தில் விசாரித்தான்..
“அப்படி தான்டா தெரியும் உனக்கு.. வேற எப்படி தெரிய போகுது? உன் பொண்டாட்டி இருக்காளே, வீடு.. வீடுனு ஆசைகாட்டி ஏமாத்திட்டா, அதுவும் என்னை! அதுவும் குடும்பத்தோட ஏமாத்திட்டா! எவ்வளவு நெஞ்சழுத்தம். லேண்ட் புரோக்கர் சொல்லி தாண்டா எனக்கே தெரியும்! ஆனால் உன் பொண்டாட்டிக்கு வீடு விக்க போற விசயம் ஏற்கனவே தெரியும். நீ நிக்கிற தோரணைய பார்த்தா அவள் உன் கிட்டேயும் வாயை திறக்கலை போல! ஊமைகொட்டான். சும்மா விடமாட்டா இந்த காந்திமதி.. நீ அவளை கூட்டிட்டு வா” இதுவரை பார்க்காத ஒரு அவதாரத்தில் காந்திமதி ஆடிக்கொண்டிருந்தார்.
சுத்தமாய் புரியவில்லை செந்திலுக்கு.
Advertisement
‘வீட்டுக்கு வந்தாவே, அக்கபோரை கூட்டுதுங்க.. தின்னோமா, தூங்குனமான்னு ஒரு மனுஷன் நிம்மதியா இருக்க முடியுதா?’ நெற்றியை நீவிக்கொண்டவன் புரிந்தும் புரியாமல் காந்திமதியை பார்த்தான், “நான் கூட்டிட்டு வாரேன் அவளை” என கூடத்தை கடந்து தங்களது அறைக்கு நடையை கட்டினான்.
‘வீடு நமக்கு தானே.., ஏன் இந்த அம்மா இந்த கூப்பாடு போடுது?’ என தலையை உலுக்கி கொண்டு ‘அம்மா கத்துற கத்துக்கு இந்நேரம் இவள் வெளியே வந்திருக்கனுமே, இவளையும் ஆளை காணோம்’ என நினைத்தபடியே அறைக்குள் வந்தான் செந்தில்.
கட்டிலின் கீழ் ஒரு ஓரம் மகன் காரை வைத்து விளையாடிக் கொண்டிருக்க, மகள் தொட்டிலில் தூங்கியிருக்க, கட்டிலில் அமர்ந்தபடியே சுவற்றில் சாய்ந்து கண் மூடியிருந்தாள் ராஜி.
Advertisement
தன்னை கண்டாலே சலசலவென பேசிக்கொண்டு, காந்திமதியை பற்றி ஏதாவது குறை கூறிக்கொண்டு இருக்கும் ராஜி, இன்று கண்மூடி அமைதியின் சொரூபமாய் அமர்ந்திருந்தாள்.
Advertisement
“ராஜி..” கொஞ்சம் சத்தமாகவே அழைத்து அவளை தன் பக்கம் திருப்பியவன்,
அவள் முகம் சரியில்லாததை பார்த்தபடியே “வீட்டு பிரச்சனைனு, அம்மா ஏதோ புரியாமல் கத்திட்டு இருக்காங்க, என்னாச்சு..” இவன் விசாரிக்க
அவன் முகத்தை ஓரிரு நொடிகள் கூர்ந்து பார்த்தவள், தன் அருகில் தயாராய் வைத்திருந்த பேப்பரை அவன் முன் எடுத்து நீட்டினாள்.
Advertisement
“கேள்வி கேட்டா பதில் சொல்லு.. இதென்ன பேப்பர்?” எரிச்சலாய் கேட்டவனை அழுத்தமாய் பார்த்தவள், பேப்பரை அவன் கையில் திணித்து,
“எல்லா நல்ல நாளுக்கும் மூனுவருசமா இரட்டை சீர் செஞ்சிருக்கான் கிரி. தீபாவளி, தை பொங்கல், பங்குனி பொங்கல்னு ஒவ்வொரு சீருக்கும் ஐம்பாதாயிரம், வருசத்துக்கு ஒன்றரை லட்சம், மூனு வருசத்துக்கு நாலறை லட்சம் லட்சம், இரண்டு பிள்ளைகளுக்கும் டெலிவரி பார்த்தது ஒன்றரை லட்சம், அதுங்க பிறந்த பிறகு செய்முறைனு தங்கம் வெள்ளி, எல்லாம் இரண்டு பேருக்கும் சேர்ந்து ஐந்து லட்சம், கொரானானு ஹாஸ்பிடலில் உங்களுக்கான செலவழிச்ச ஆறு லட்சம், அம்மாகிட்ட சீட்டு பணம் வாங்கி சேர்த்த தாலி கொடி ஒரு நாழு லட்சம், ஆக மொத்தம் இருபத்தோரு லட்சம்” இவள் அடுக்க, அவனோ ஆ வென பார்த்திருந்தான்.
“இவ்வளவு செஞ்ச பிறகும் இன்னும் கல்யாண சீர்ன்ற பேரில் வீட்டை கொடுக்க முடியாதுனு, முழு வீட்டையும் கிரி வித்துட்டான். அம்மாவே வாடகை வீட்டுக்கு தான் போக போறாங்க” சொல்லி முடிக்க, செந்தில் வாய் பிளந்து பார்த்திருந்தான் எனில்,
“அய்யோ அய்யோ, இந்தகொடுமை எங்கையாச்சும் நடக்குமா, அக்கா புருஷன் சாக கிடந்தப்ப செஞ்ச பணத்தையெல்லாம் சீர்ல எவனாவது சேர்ப்பானா?’ அறைவாசலில் ஒட்டு கேட்ட காந்திமதி உச்சபட்ச குரலில் கத்த துவங்க, செந்திலின் தம்பி, அவன் மனைவி, செந்திலின் அப்பா என அங்கே கூடி விட்டனர்.
அவ்வளவு தான் செந்திலை முறைத்து பார்த்தவள், காந்திமதியிடம் திரும்பி
“நீங்க செய்யலை செய்யலைனு கத்தும் போது என் தம்பி செஞ்சேன் செஞ்சேனு சொல்றதில் தப்பில்லையே!” அழுத்தமாய் கேட்டாள் ராஜி.
காந்திமதிக்கோ ஏற்க முடியவில்லை அவள் கூற்றை! “என்ன? கத்துறனா? கத்துறதுக்கு நான் என்ன நாயாடி! நீ தான் நாய்.. உன் குடும்பமே நாய் குடும்பம் தான்” என ஒன்றை மூன்றாக்கி சண்டையை பெரிதாக்கினார் காந்திமதி.
“அப்படியே வச்சுக்கோங்க! ஆனா நாய் குடும்பத்தில் இருந்து இன்னும் என்னத்தை பிடுங்கலாம்னு பறக்குற நீங்க என்ன நரிக்குடும்பமா?” என பதிலுக்கு ராஜியும் பேச
அதுவரை வேடிக்கை பார்த்திருந்தவன் “ஏய், என்ன பேசுற.. நீ! ஒழுங்கா பேசு, நாக்கு இருக்காது” இடையில் புகுந்தான் செந்தில்.
“இல்லாமலேயே போகட்டும்.. இருந்து என்ன பிரயோஜனம்.. எப்போவுமே வாயை மூடியே இருக்குறதுக்கு எதுக்கு நாக்கு!” என கத்தியவள்
“உங்க கூட, உங்க அம்மா கூட சேர்ந்துகிட்டு நானும் தானே ‘சீர், சீர்’னு பறந்திட்டு இருந்தேன். வாங்கும் போது அளவு தெரியலை! கிரி இன்னைக்கு லிஸ்ட்டு போட்டு சொல்லி காட்டலைன்னா எனக்குமே தெரிஞ்சிருக்காது!” என்றவள், செந்திலின் கையில் இருந்த காகிதத்தை பிடுங்கி, எல்லோர் முன்னும் விட்டெறிந்து “இருபது லட்சத்துக்கும் மேல என் தம்பி எனக்காக, இவருக்காக செஞ்சிருக்கான். இனி எதுவுமே செய்ய மாட்டான்”
“உங்க சின்ன மருமகளை விட அதிகமான சீரோட தான் நான் இங்கே இருந்திருக்கேன். இனி சீர் கொண்டு வரலைன்னு பேசினா நான் மனுசியா இருக்க மாட்டேன்” உறுதியாய் காந்திமதியின் முன் பேசியபடி,
செந்திலிடம் திரும்பி “தலைகீழா நின்னாலும் வீடு நமக்கில்லை!” அழுத்தமாய் இவள் கூற.
அவ்வளவு தான் “அப்போ உனக்கும் இங்கே வீடில்லை கிளம்பு” என காந்திமதி கூறிட, அதிர்ந்து நின்றுவிட்டாள் ராஜி.
செந்திலோ அதைவிட, அதை ஆமோதிப்பது போல் அமைதியாய் நின்றிருந்தான்.
“உங்கம்மா போக சொல்றாங்க, போகவா” என செந்திலிடம் இவள் கேட்க, வேறு பக்கம் பார்த்தபடி முகம் திருப்பிட, அவன் தோரனையில் எரிச்சல் ஏறியது ராஜிக்கு.
அவ்வளவு தான் வேறெதும் யோசிக்க தோன்றவில்லை இவளுக்கு. முகத்தை அழுந்த துடைத்தவள், வேகமாய் தங்கள் அறைக்கு சென்று தூங்கி கொண்டிருந்த மகளை தோளிலும், விளையாடி கொண்டிருந்த மகனை கையிலும் பிடித்து கொண்டு வெளியே வந்தாள்.
“நாழு வருஷமா சோறு போட்டதுக்கு கணக்கு எதுவும் கேட்டுடாதீங்க.. வீட்டு வேலைகாரி மாதிரி உங்களுக்கும், உங்க வீட்டுக்கும் எல்லா வேலையும் செஞ்சு கழிச்சிட்டேன்” வெறியோடு அழுத்தமாய் பேசியவள்
“ஆனா நீங்க என் தம்பிகிட்ட இருந்து வாங்கின பணத்தையெல்லாம் எப்படி கழிக்க போறீங்க? இல்லை அசலுக்கு வட்டி போட்டு தரபோறீங்களா? இல்லை இவங்க இரண்டு பேரும் என் இரத்தம் நான் பார்த்துப்பேன்னு புள்ளைகளை நீங்க வளர்க்க போறீங்களா!” ராஜி கேட்க, அவமானமாய் உணர்ந்தான் செந்தில்.
வேடிக்கை மட்டுமே பார்த்திருந்த செந்திலின் அப்பா, தம்பி, தம்பி மனைவி என மூவரையும் வெறுப்பாய் பார்த்துவிட்டு, கடைசியாய் செந்திலிடம் பார்வை திருப்பியவள்
“பணத்தையும் குடுக்க போறதில்லை, பிள்ளைகளையும் பார்க்க போறதில்லை” ஆம்பளையா நீ? என பார்வையை வீசி “இனி நீங்க உங்க அம்மா கூடவே இருந்துகோங்க.. நான் எங்கம்மா கூடவே இருந்துகிறேன். என்னை தேடி வந்திராதீங்க” என கிளம்பி விட்டாள் ராஜி!
********
“யாருமே தடுக்கலையாடி” அவளுக்கு குடிக்க தண்ணீரை கொடுத்து, அவளருகில் சோபாவில் அமர்ந்த வசந்தா கவலை அப்பிய முகத்தோடு கேட்க
“ப்ச்.. இல்லம்மா” என்றாள், மடியில் அமர்ந்திருந்த மகளை தலை வருடியபடி
“இந்த பிள்ளைகளுக்காக கூடவாடி பாவம் பார்க்கலை, இப்படி நைட் நேரத்தில் அனுப்பி வச்சிருக்காங்க”
“அப்போ பகல்ல அனுப்பி வச்சிருந்தா பரவாயில்லையா!” குதர்க்கமாய் கேட்டவள், வசந்தாவின் முகம் போன போக்கை பார்த்து “இனி உன்கூட தான், கஞ்சியோ, கூழோ ஏதாவது ஊத்து, இதுக்கு பிறகு அங்கே போக எனக்கு பிடிக்கலைம்மா. என்னோட அருமை தெரிஞ்சு வரட்டும், இல்லை அவன் அம்மா கூடவே போகட்டும்” என்றாள் விரக்தியாக
“நீயும் இப்படி பேசாதடி.. நான் வேணா கிரிகிட்ட பேசுறேன்”
“பேசி வீடு வாங்கி தர போறியா.. இனி அவனே கொடுத்தாலும் நான் வாங்கிக்கிற ஐடியா எனக்கில்லை”
“அப்போ செந்தில் கிட்ட பேசவா..?”
“என்னை கொலைகாரி ஆக்காத! எந்த ஆம்பளையா இருந்தாலும் விபச்சாரிகிட்ட கூட பணத்தை கொடுத்துட்டு தான் போவான்.
கல்யாணம் பண்ணின பாவத்துக்கு இங்க நான் தான் அவனுக்கு பணத்தை வாரி இறச்சிருக்கேன். அதுவும் கிரிகிட்ட, உன்கிட்ட இருந்து பிடுங்கி. எனக்கே அசிங்கமா இருக்கும்மா!” முகம் அசூசையை வெளிப்படுத்தியது.
“என்னடி இப்படியெல்லாம் பேசுற” அதிர்ந்து நின்றார் வசந்தா.
“நீயும் பேசி பேசியே கொல்லாத, என்னை கொஞ்சம் தனியா விடு” இவளின் முழு எரிச்சலை பார்த்தவர், “சாப்பிட்டியா இல்லையாடா” என பேரனிடம் திரும்பி விட்டார். அவன் இல்லையெனவும், அவனை அழைத்து கொண்டு சமையலறைக்குள் சென்றுவிட்டார் வசந்தா.
பேரனுக்கு உணவை தட்டில் போட்டுகொண்டு வெளியே வந்தார். மடியில் மகளை போட்டு கொண்டு எங்கோ பார்வை பதித்து அமர்ந்திருந்த ராஜியை கண்டு பெருமூச்செறிந்தார்.
அதன் பின் ஒருகையில் உணவையும் மறு கையில் போனையும் எடுத்து கொண்டு, பேரனையும் அழைத்து கொண்டு போர்டிகோவிற்கு வந்துவிட்டார்.
நடந்த எதுவும் புரியாமல் திருதிருவென விழித்து கொண்டிருந்த பேரனை படியில் அமர வைத்து, ஒரு கையால் பேரனுக்கு உணவூட்டியபடியே, மறுகையால் மகனுக்கு அழைத்து விட்டார் காந்திமதி. எல்லாவற்றையும் கேட்டவனோ எதிர்பார்த்தேன் என்பது போல, நக்கலாய் நினைத்து “ராஜி உன் கூடவே இருக்கட்டும்மா.. தேவையானதை செஞ்சு குடு. நான் சீக்கிரமா வர பார்க்குறேன்” என வைத்துவிட்டான்.
**************
error: Content is protected !!