விழி கொல்லும் விஷமா நீ.. Episode 27

விழி கொல்லும் விஷமா நீ..
Episode 27
Advertisement
“அவன் இங்க என்ன பண்றான் ஆதி?” என்று அறைக்குள் நுழைந்துதே தாம்தூமென்று குதித்தவள், தோழி திருதிருவென விழிப்பதை பார்த்து அனைத்தையும் உணர்ந்துக்கொண்டாள்.
Advertisement
“அப்போ.. அப்போ உனக்கு எல்லாமே தெரியும் அப்படிதானே! உன்னாலதான் அவன் இங்க வந்திருக்கான். எதுக்கு ஆதி, எதுக்காக இப்படி பண்ண?” என்று கேட்டவளின் வார்த்தைகள் ஆதங்கத்தோடு வர, “நீஹா அது வந்து.. நீ மனசார சந்தோஷமா இருக்குறத பார்த்தே பல வருஷம் ஆகிருச்சு. யாதவ் உன் கூட இருந்தா மட்டும்தான் எல்லாமே மாறும் அதான்…” என்றாள் மற்றவள் தயக்கத்தோடு.
Advertisement
நிஹாரிகாவின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.
Advertisement
“நாலு வருஷத்துக்கு மேல அவனுக்காக காத்திருந்தேன். ஆனா இப்போ எல்லாமே வெறுத்து போச்சு ஆதி.. என்னோட காதல அவன் உணரல, இதுக்குமேல எதையும் தாங்கிக்குற மனநிலை இல்லை. போதும் எதுவுமே வேணாம்னு ஆகிருச்சு. தயவு செஞ்சு அவங்கள போக சொல்லு..”
நிஹாரிகா பேசிவிட்டு திரும்ப, வாசலில் இரு ஆடவர்களும் நின்றிருந்தனர்.
யாதவ்வை பார்த்ததும் நிஹாரிகாவுக்கு ஒரு மாதிரியாகிப் போக, எதுவும் பேசாது தன்னை கடந்து செல்லப் போனவளை வழி மறைப்பது போல நின்றுக்கொண்டான் அவன்.
ஆதிராவோ அவர்களுக்கு தனிமையை கொடுத்துவிட்டு மெல்ல அறையியிருந்து வெளியேறிவிட, சித்தார்த்தோ இப்போது அவள் பின்னாலேயே சென்றான்.
“எதுக்காக இங்க வந்திருக்கீங்க சார்?” என்று நிஹாரிகா எங்கோ பார்த்த வண்ணம் கேட்க, “திருவிழாக்கு..” என்று மட்டும் பதில் சொன்னவன் அவளையே இமை வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
தப்பித்தவறி நிமிர்ந்தும் அவனைப் பார்க்கவில்லை அவள்.
“ஐ அம் சாரி நீஹா…” யாதவ்வின் குரல் ஆழமாக ஒலிக்க, அதில் பொதிந்திருந்த குற்றவுணர்ச்சியும் வலியும் அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
ஆனால் எதுவும் பேசவில்லை, ‘அவள் பார்வை தன்மீது விழாதா?’ என்று உள்ளுக்குள் ஏங்க ஆரம்பித்தான் யாதவ்.
அதேநேரம், “ஆதி.. ஆதி ஸ்டாப்!” என்று சித்தார்த் பின்னாலேயே செல்ல, திரும்பி அவனை ஒற்றைப் புருவத்தைத் தூக்கி கேள்வியாகப் பார்த்தாள் ஆதிரா.
“அது.. நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.. நான் வந்து…” அவன் ஏதோ சொல்ல வர, விழிகளை உருட்டியவள் காதிற்கும் கேட்டும் கேட்காதது போல அவள் பாட்டிற்கு சென்றாள்.
இவனுக்கு அய்யோ என்றாகிவிட்டது.
‘ஷப்பாஹ்… முடியல’ என்று இடுப்பில் கைக்குற்றி இருபக்கமும் சித்தார்த் சலிப்பாக தலையாட்ட, அன்றைய நாள் கழிந்து அடுத்தநாளும் விடிந்தது.
அடுத்தநாள் காலை வீட்டிலிருந்த மொத்தப்பேரும் புத்தாடை உடுத்தி அலங்காரத்தோடு திருவிழாவுக்கு செல்வதற்காக தயாராகி நிற்க, மார்த்தாண்டம் கொடுத்த பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை போல தயாராகி இருந்தனர் இரு ஆடவர்களும்.
“ஓ காட்! இதுவரைக்கும் ஃபோட்டோ ஷுட்காக எத்தனையோ கோஸ்டியூம் போட்டிருக்கேன், பட் இத ஹேன்டில் பண்ணவே முடியல. அவிழ்ந்திருமோன்னு வேற பயமா இருக்குடா எரும” என்ற சித்தார்த் வேட்டியோடு தட்டுத்தடுமாற, யாதவ்வுக்கும் கிட்டத்தட்ட அதேநிலைதான்.
“என்னம்மா இது, நாமதான் கோயில்ல மொதல் ஆளா நிக்கணும்னு பார்த்தா முடியாது போலயே.. சேலை கட்டிட்டு வரதுக்கு இம்புட்டு நேரமா?” என்று மார்த்தாண்டம் கத்த, “சாரிப்பா…” என்ற பெண்களின் குரலில் ஒருசேர திரும்பிப் பார்த்தனர் ஆடவர்கள்.
அங்கு ஆதிராவும் நிஹாரிகாவும் காட்டன் சேலையில் தலையில் மல்லிகை சரம் சூடி மங்கலகரமாக நின்றுக்கொண்டிருக்க, அவர்களோ இப்படியொரு தரிசனத்தை எதிர்பார்க்கவே இல்லை.
யாதவ்வோ விழி மூடாமல் வாயைப் பிளந்த வண்ணம் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவன் நாடியில் கை வைத்து வாயை மூடிவிட்ட மற்றவனோ, “டேய் பார்த்து வாய்ல கொசு போகுதோ இல்ல, அந்த மீசைக்காரரோட அருவாள் போயிர போகுது. கேஷுவலா சைட் அடிடா பரதேசி, அப்பட்டமா பார்த்து மாட்டிக்காத” என்றான் கேலியாக.
“ஷட் அப் இடியட்!” என்று கடிந்துக்கொண்ட மற்றவனுக்கோ பார்வையைத் திருப்பவே முடியவில்லை.
பின் அனைவரும் கோயிலுக்கு செல்ல, மொத்த ஊரும் விளக்குகளாலும் பூப்பந்தல்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கூடவே, கோயிலில் விஷேட பூஜைகளும் நடந்துக்கொண்டிருந்தன.
யாதவ்வை கண்டுகொண்ட சிலர் அவனை நெருங்க முயற்சித்தாலும் மார்த்தாண்டம் விட்டால்தானே! தன்னை நம்பி வந்தவர்களை சங்கடப்படுத்தாமல் அனைத்தையும் கவனித்துக்கொண்டார் அந்த பெரியவர்.
நகரத்திலேயே வளர்ந்து இயந்திரம் போல ஓடிக்கொண்டிருக்கும் இரு ஆடவர்களுக்கும் அனைத்தும் புதிதாகத்தான் தெரிந்தது.
“டேய் யாதவ், நிஹாரிகா உன்மேல கோபமா இருக்கா. அவள சமாதானப்படுத்த ஏதாச்சும் ட்ரை பண்ணலாம்ல!” என்று சித்தார்த் பொறி உருண்டையை வாயில் போட்டு சப்பிக்கொண்டே நடந்தபடி தன் தோழனிடம் கேட்க, மெல்லிய புன்னகை சிந்தினான் மற்றவன்.
“முடியாதுன்னு இல்லடா பண்ண தெரியல அதான் உண்மை. நாலு வருஷமா அவமேல கோபமா இருந்தேன், இப்போ நாலு நாள் அவன் என்கூட கோபமா இருக்குறத என்னால தாங்க முடியலடா. பட் வாட் டு டூ… எப்படி ஆரம்பிக்கிறதுன்னே தெரியல. பட் ஐ அம் டேம்ன் ஷுவர், இதுக்கப்பறம் நீஹாவ நான் விட்டுக்கொடுக்க போறதில்ல. ஷீ இஸ் மை லைஃப், ஷீ இஸ் மை ஹேப்பினெஸ். அவ என் லைஃப்ல வேணும் சித்து. அதுக்காக என்ன பண்றதுன்னாலும் பண்ண தயாரா இருக்கேன் ஆனா…” என்று பேச வேண்டியதை பேசிவிட்டு மீண்டும் நீட்டி முழக்கினான் யாதவ்.
“ஆனா என்ன பண்றதுன்னு தெரியல அதானே.. புரியுது புரியுது.. நீ இவ்வளவு தூரம் தெளிவா பேசுறதே பெரிய விஷயம்தான்” என்ற சித்தார்த்தின் விழிகளுக்கு சரியாக ஆதிரா நிஹாரிகாவோடு பேசியபடி நடந்துச் செல்வது விழிகளில் சிக்கியது.
“டியூட் அங்க பாரு, நீஹா ஆதியோட தனியாதான் போயிக்கிட்டு இருக்கா. நீ போய் இப்போ என்கிட்ட சொன்னத அப்படியே அவகிட்ட சொல்லு.. கண்டிப்பா அவ புரிஞ்சுப்பா. அப்படியே நான் ஆதிக்கிட்ட என்னை பத்தி புரிய வைக்கிறேன்..”
சித்தார்த் சொல்லிவிட்டு அவர்களை நோக்கி செல்லப் போக, தோழனின் கரத்தை சட்டென்று பற்றினான் யாதவ்.
“ஆதிராவுக்கு புரிய வைக்க போறேன்னா என்ன அர்த்தம்.. யூ மீன்…” என்று அவன் விழிகளை சுருக்கி சந்தேகமாகப் பார்த்தபடி இழுக்க, ஒரு பெருமூச்சோடு நடந்தது மொத்தத்தையும் சொல்லி முடித்தான் அவன்.
“தப்பு பண்ணிட்ட சித்து..” தன் நண்பனை முறைத்துப் பார்த்தவனின் குரல் குற்றம் சாட்டுவது போல ஒலித்தது.
“ஐ நோ.. பட் எனக்.. எனக்கு பயமா இருக்கு யாதவ், அது ஏன்னு உனக்கு நல்லாவே தெரியும். எங்க மறுபடியும் ஏமாந்துருவேனோன்னு…” என்று நிறுத்தினான் சித்தார்த்.
அவனின் மனநிலை யாதவ்விற்கு புரியாமல் இல்லை.
இதற்குமுன் பள்ளியில் கல்லூரியில் என்று இரண்டு தடவை காதலில் தோற்று தற்கொலை வரை சென்று வந்தவன் அவன்.
ஏமாற்றத்திற்கும் அது கொடுக்கும் வலிக்கும் பயந்தே ஆதிராவின் மேல் காதல் வந்தும் அவன் அதை தனக்குள்ளேயே புதைக்க முயல, அதை மற்றவனும் உணராமலில்லை.
அடுத்த கொஞ்ச நேரத்திலேயே மங்கை களைப்பில் வீட்டிற்கு செல்வதாக சொல்ல, ஆதிராவும் நிஹாரிகாவும் அவரோடு வந்துவிட, துணைக்கு செல்கிறேன் பேர்வழியென்று அவர்கள் பின்னாலேயே வீட்டிற்கு வந்தனர் இரு ஆடவர்களும்.
“அம்மாடி நீங்க போய் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுங்க, எல்லாரும் வரதுக்கு முன்னாடி சமைக்கணும்.. ஐயாவுக்கு வெளியில சாப்பிடுறாது ஒத்துக்காது தெரியும்ல. நான் இப்போவே வேலைய ஆரம்பிக்கிறேன்” என்ற மங்கை தன் தலைமுடியை கொண்டையிட்டவாறு சமையலறை நோக்கிச் செல்ல, மாடிப்டிகளில் ஏறி அறை பக்கம் திரும்பப் போன நிஹாரிகாவை இழுத்து சுவற்றில் சாற்றினான் யாதவ்.
“என்ன பண்றீங்க சார், என்னை விடுங்க! யாராவது பார்த்தாங்கன்னா அவ்வளவுதான்” என்று நிஹாரிகா பதற்றமாக சொல்ல, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவளை மேலும் நெருங்கி நின்றான் அவன்.
“சாரு மோருன்ன கொன்னுருவேன் பார்த்துக்க, ஒழுங்கு மரியாதையா அர்ஜூன்னு கூப்பிடு” என்று அவன் உரிமையோடு அதட்ட, அதிர்ந்து விழித்தாள் பெண்ணவள்.
எத்தனை வருடங்கள் எதிர்பார்ப்பு அது! இன்று உரிமையோடு பேசுகிறான், ஆனால் அதை மனதார அனுபவிக்கும் நிலையிலில்லை அவள்.
“என்ன.. என்ன சொல்றீங்க நீங்க, நான் உங்ககிட்ட வேலை பார்த்திருக்கேன், என்னோட எக்ஸ் பாஸ்ஸுங்குற மரியாதை எனக்குள்ள இருக்கு. சும்மா நீங்க தேவையில்லாத உரிமைய எடுத்துக்காதீங்க..” என்றவள் அவனை தள்ளிவிட்டு செல்லப் போக, அவள் கரத்தைப் பற்றியிழுத்தான் யாதவ்.
அவளின் இரு கன்னங்களைப் பற்றி இதழில் அழுந்த முத்தம் பதித்துவிட்டு மின்னல் வேகத்தில் அவன் சென்று மறைந்திருக்க, விதிர்த்துப் போய் நின்றுவிட்டாள் நிஹாரிகா.
அதன் பிறகு சிறிதுநேரம் ஓய்வெடுத்துவிட்டு இரு ஆடவர்களும் மாடியிலிருந்து இறங்க, ஆதிராவின் மொத்த சொந்தபந்தங்களும் ஹாலில் கூடியிருந்தனர்.
அனைவரும் தரையில் அமர்ந்திருக்க, வாழை இலையில் உணவு பரிமாறப்பட, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தனர் இருவரும்.
“என்ன தம்பி, அங்க நின்னு பெக்க பெக்கன்னு முழிச்சிட்டு இருக்கீங்க? வந்து எங்ககூட உக்கார்ந்து சாப்பிடுங்க, மங்கை அவங்களுக்கும் பரிமாறு..” என்று மார்த்தாண்டம் சொல்ல, நான்கைந்து மீசைக்காரர்களுக்கு நடுவே தயக்கத்தோடு அமர்ந்துக்கொண்டனர் யாதவ்வும் சித்தார்த்தும்.
ஒருபக்கம் ஆதிரா தன் பெரியம்மா ஊட்டிய உணவை சப்பக் கூட முடியாமல் திணறிக்கொண்டிருக்க, அவர்களுக்கு பயந்தே நிஹாரிகா வேகவேகமாக உண்டு முடித்திருந்தாள்.
“அய்யோ போதும் போதும்..” மங்கை இரண்டு கரண்டிக்கு மேல் சாதத்தை வைக்கவில்லை, அதற்குள் தடுத்தான் சித்தார்த்.
இரு ஆடவர்களின் வாழை இலையை எட்டிப் பார்த்த மார்த்தாண்டமோ, “யாரு வயித்துக்கு இத்துணூண்டு சோறு தம்பி” என்று சந்தேகமாகக் கேட்க, “இதுக்குமேல சாப்பிட்டா கேலரீஸ் கூடி தொப்பை போட்டு என் வேலையே போயிரும்.. இதுவே போதும் அங்கிள்” என்றான் சித்தார்த் தன் வேலையை எண்ணி.
அதெல்லாம் அந்த கிராமத்தாற்களுக்கு புரியுமா என்ன!
“சாப்பாட்டுக்கும் வேலைக்கும் என்ன தம்பி சம்பந்தம், இருங்க உங்க ரெண்டு பேருக்கும் நான் ஊட்டி விடுறேன்..” என்ற மங்கை அவரே உணவை பிசைந்து சித்தார்த்திடம் நீட்ட, வாயைத் திறக்காது அவரையே இமை மூடாமல் பார்த்திருந்தவனின் விழிகள் கலங்கியிருந்தன.
சிறுவயதிலிருந்தே வேலையாட்களிடம் வளர்ந்த சித்தார்த்திற்கு இந்த சொந்தபந்தங்களும் பாசமும் புதிதுதான்.
தாய் தந்தை இருந்தும் இல்லாத நிலை அவனுக்கு. இமை சிமிட்டி விழிநீரை உள்ளிழுத்துக்கொண்டவன் மெல்ல வாயைத் திறந்து அவர் நீட்டிய உணவை வாங்கிக்கொண்டான்.
அன்பும் அக்கறயும் கலக்க அவர் ஊட்டிய சாதத்தின் சுவைக்கு அருகே பல ஆடம்பரமான ஹோட்டல்களின் உணவின் சுவை தோற்றது போலவே தோன்றியது அவனுக்கு.
அவனின் முகபாவனைளை ஆதிரா கவனிக்காமலில்லை.
“ஏம்ப்பா தம்பி அண்ணன் சொல்லிச்சு நீங்க பெரிய மாடலாமே, இந்த ஜட்டி விளம்பரம் பனியன் விளம்பரம்லாம் பண்ணுவாய்ங்களே அவங்களா நீங்க..” என்று மார்த்தாண்டத்தின் பெரிய மீசைக்கார தம்பியொருவர் கேட்க, சித்தாத்திற்கு தூக்கி வாரிப்போட்டது.
முறைக்கக் கூட முடியாமல் “ஹிஹிஹி… ஆமாங்கய்யா” என்று அவன் இழித்து வைக்க, பக்கத்திலிருந்த யாதவ்வோ பக்கென்று சிரித்துவிட்டான்.
அவனால் முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை. வாய்விட்டு அவன் கத்திச் சிரிக்க, சித்தார்த்திற்கு மட்டுமல்ல நிஹாரிகாவுக்குமே ஆச்சரியம்தான்.
எத்தனை வருடங்கள் கழித்து அவன் இயல்பாக சிரிப்பதை பார்க்கின்றனர்!
“நான் சொல்வேன்ல ஆதி, அர்ஜூ சிரிக்கும் போது ரொம்ப அழகுன்னு..” என்று தன்னை மீறி அவனை ரசித்தவாறு சொன்னவள் பின்னரே ஆதிராவின் பார்வையை உணர்ந்து சிறு தடுமாற்றத்தோடு முகத்தை திருப்பிக்கொண்டாள்.
சரியாக, “ஆதிரா கண்ணு, உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். எல்லாரும் இருக்குறப்போவே சொல்லிக்கிறது நல்லது..” என்று மார்த்தாண்டம் ஆரம்பிக்க, சுற்றியிருந்தவர்களோ புரியாமல் பார்த்தனர்.
“அது என்னன்னா.. நம்ம ஊர்த்தலைவரோட பையனுங்க ரெண்டு பேரும் வெளிநாட்டுல போய் படிச்சிட்டு வந்திருக்காய்ங்க. உன்னையும் அவளையும் இன்னைக்கு காலையில திருவிழாவுல வச்சு பார்த்ததும் அவங்களுக்கு ரொம்ப பிடிச்சு போயிருக்கு உடனே அவனுங்க அப்பாகிட்ட சொல்லி என்கிட்ட சொல்லிட்டாய்ங்க.
உங்க முடிவு என்னன்னு சொன்னீங்கன்னா பார்த்து பண்ணிரலாம். அதுமட்டுமில்லாம உன் ஃப்ரெண்டு அம்மா அப்பா இல்லாத பொண்ணு.. அவளுக்கு ஒரு நல்ல காரியத்த நாமதானே பார்த்து பண்ணி வைக்கணும்”
பேசி முடித்துவிட்டு இரு பெண்களின் பதிலை ஆர்வமாகப் பார்த்தார் அவர்.
ஆனால், அவர்களுக்கு தூக்கிவாரிப் போட்டதோ என்னவோ ஆடவர்கள் இருவருக்கும் உலகமே தலைகீழாக சுழன்றுவிட்டது.
“அய்யோ அப்பா எனக்கு இப்போ வேணாம்னு சொல்லதானே செய்றேன், நீங்க வேணா நீஹாவுக்கு பார்த்து பண்ணுங்க, அவதான் என்னை விட ரெண்டு மாசம் பெரியவ” என்று ஆதிரா தன் தந்தை விட்ட மொத்த அம்புகளையும் நிஹாரிகாவின் பக்கம் திசைதிருப்ப, அவளை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தாள் மற்றவள்.
‘நான் பாட்டுக்கு சிவனேன்னுதானே இருக்கேன், என்னை எதுக்கு கோர்த்துவிடுற?’ உள்ளுக்குள் புலம்பியவள், “அது… அது வந்துப்பா.. நான்…” என என்ன சொல்வதென்று தெரியாமல் திக்கித் திணறினாள்.
அவள் பார்வையோ எதேர்ச்சையாக யாதவ்வின் புறம் படிய, பதற்றமாக அவள் பதிலையே பார்த்துக்கொண்டிருந்தவன் ‘வேண்டாம் என்று சொல்’ என்பது போல இடமும் வலதுமாக தலையை ஆட்டினான்.
அதைக் கவனித்தவள் அவனை வெறுப்பேற்ற எண்ணினாளோ என்னவோ!
“எனக்கு அம்மா அப்பா கெடையாது, நீங்களே பார்த்து பண்ணுங்க..” என்று சொல்லிவிட்டு எங்கோ பார்ப்பது போல பாவனை செய்ய, “அப்போ எனக்கும் எனக்கும்..” என்று வேகமாகச் சொன்னாள் ஆதிரா.
மார்த்தாண்டத்திற்கு அத்தனை திருப்தி..
‘அவரென்ன பொறி உருண்டையா கொடுக்குறாரு, எனக்கும் எனக்கும்னு ஆர்வமா கேக்குற! கல்யாணம்டீ அது அய்யோ… மனுஷனோட நிலைமை புரியாம இவளுங்க வேற..’ என்று தனக்குள் புலம்பித் தள்ளினான் சித்தார்த்..
இங்கு யாதவ்விற்கு நிஹாரிகாவின் பதிலில் பிபி எகிறியது.
பொறுமையை இழுத்துப் பிடித்து அமைதி காத்தவன், அன்றிரவு நிஹாரிகாவின் அறைக்குள் மெல்ல நுழைந்துக்கொண்டான்.
***********
-Sheha zaki..
