விழி கொல்லும் விஷமா நீ.. Episode 28

விழி கொல்லும் விஷமா நீ..
Episode 28
Advertisement
ஏற்கனவே ஆதிராவோடு பேசிவிட்டு மெல்ல அவளை வெளியே அழைத்த யாதவ், சுற்றிமுற்றி பார்த்து யாரும் காணாததை உறுதி செய்துவிட்டு அறைக்குள் மெல்ல நுழைந்துக்கொண்டான்.
Advertisement
கட்டிலில் தேவதையாய் ஒருக்களித்து உறங்கிக்கொண்டிருந்தவளின் மலர்ந்த முகம் அவன் விழிகளில் பட, பக்கத்தில் அமர்ந்து சில கணங்கள் ரசித்துப் பார்த்தான்.
Advertisement
அவளுடனான சில நினைவுகள் அவனுக்கு ஞாபகத்திற்கு வர, அவள் பின்னே சென்று அவளை அணைத்தபடி அவள் பக்கத்திலேயே கட்டிலில் சாய்ந்துக்கொண்டான் யாதவ்.
Advertisement
தன் இடையில் ஊர்ந்த கரத்தின் மேல் தன் கரத்தை வைத்தவளுக்கு காதோரம் அவனின் மீசைமுடி உரசலில் கூச்சம் வர, “அர்ஜூ…” என்று தூக்கக் கலக்கத்தில் நெளிந்தவாறு அவன்புறமே திரும்பிக்கொண்டாள் நிஹாரிகா.
இருவரும் கட்டிலில் நெருங்கிப் படுத்திருக்க, அவளின் உடல் தாராளமாக அவன் மீது உரசிக்கொண்டது.
ஒரு ஆண்மகனாக அவனாலும் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை.
அவளின் செவ்விதழ்கள் அவனை அவள்புறம் வரும்படி ஈர்க்க, தன்னை மறந்து அவளை நெருங்கியவனின் இதழ்கள் அவளிதழோடு உரசியதும்தான் தாமதம் பட்டென்று விழிகளைத் திறந்துக்கொண்டாள் அவள்.
“ஆஆ…”
அவள் கத்த வாயெடுக்கும் முன்னரே வேகமாக அவள் வாயை பொத்திக்கொண்ட யாதவ், “நான்தான் நீஹா.. எதுக்கு கத்துற?” என்று அதட்ட, திகைத்துப்போய் அவனைப் பார்த்தாள் அவள்.
தன் வாய் மீதிருந்த அவன் கரத்தை தட்டிவிட்டு எழுந்தமர்ந்தவள், “இந்த நேரத்துல நீ இங்க என்ன பண்ற?” என்று கேட்டு முறைக்க, பதிலுக்கு அவளை முறைத்தவனோ, “ஹவ் டேர் யூ.. அவர் கல்யாணத்த பத்தி கேட்டதும் சரின்னு சொல்லிட்ட, எந்த தைரியத்துல அப்படி சொன்ன சொல்லுடீ!” என்று கேட்டான் ஒற்றைப் புருவத்தை தூக்கிய வண்ணம்.
“அது.. அது வந்து…” என்று தட்டுத்தடுமாறியவள், “உனக்கெதுக்கு, நான் என்ன வேணா பண்ணுவேன், அது என்னோட இஷ்டம்” என்று வீராப்பாக சொல்ல, “ஆஹான்!” என்று நக்கலாக கேட்டபடி அவளை நோக்கி வந்தான் யாதவ்.
அதில் பயந்தபடி பின்னே நகர்ந்தவள், “ஆனா ஊன்னா இப்படி பண்ணிட்டே இருந்தன்னா அவ்வளவுதான் சொல்லிட்டேன், அதான் காதலும் வேணாம் எதுவும் வேணாம்னு சொல்றேன்ல, அப்பறம் ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்க? என்னை விட்டு போ அர்ஜூ..” என்று இறுதியில் ஆதங்கத்தோடு முடிக்க, அவனோ அவள் முழங்கையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தான்.
“எங்கடீ போக சொல்ற.. புயல் மாதிரி வந்து என் வாழ்க்கையே மாத்திட்டு இப்போ போன்னா எங்க போறது? அதான் மன்னிப்பு கேக்குறேன்ல, நான் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் புரியுது. என் ஈகோவால கோபத்தால உன்னையும் இழக்க விரும்பல நீஹா ப்ளீஸ் புரிஞ்சுக்க.
என்ட் லுக், எனக்கு லவ்வ சொல்லாம பின்னாடி அலையுறது, மௌனராகம் மோஹன் மாதிரி தள்ளி நின்னு பார்த்துட்டு இருக்குறது இதெல்லா செட் ஆகாது. எனக்கு நீ வேணும் நீஹா ஐ லவ் யூ… இதுக்குமேல நான் என்னடீ பண்ணணும்?”
அவன் பேச வேண்டியதை மூச்சு விடாமல் பேசி முடித்துவிட்டு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவள் பதிலையே ஆர்வமாகப் பார்த்திருந்தான்.
ஆனால் நிஹாரிகாவுக்கு முதல் தடவை அவளிடம் அவன் காதலை சொன்ன தருணம்தான் ஞாபகத்திற்கு வந்தது.
உள்ளுக்குள் மனம் துள்ளிக்குதிக்காத குறையாக குஷியில் மூழ்கினாலும் வெளியில் போலியாக முறைத்தவள், “எதுவும் தேவையில்ல, ஒழுங்கு மரியாதையா இடத்த காலி பண்ணு..” என்று கடுகடுத்தவாறு அவனை இழுத்துக்கொண்டே சென்று வெளியில் தள்ளிவிட, பூட்டிய கதவை பாவமாகப் பார்த்தான் யாதவ்.
அதேநேரம் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியவாறு ஆதிரா நின்றுக்கொண்டிருக்க, அவளெதிரே அலட்சியமாக நின்றிருந்தான் சித்தார்த்.
“என்ன பார்க்குற, நீ கண்டுக்காம இருப்ப, நான் உன் பின்னாடி திரிஞ்சிட்டு இருப்பேன்னு நினைச்சியா.. நெவர்! எனக்கேத்த கிராமத்து பைங்கிளி எனக்கு கிடைச்சிட்டா. நீ சொன்னியே தட் பட்டர்ஃப்ளை ஃபீலிங் அதை நான் இன்னைக்கு ஃபீல் பண்ணேன். வாவ்…!”
என்று அவன் வேண்டுமென்று அவளை சீண்ட எண்ணி பேசிக்கொண்டே போக, இவளுக்கோ கொஞ்சம் கொஞ்சமாக பிபி எகிறிக்கொண்டே போனது.
“இப்போ அதுக்கு நான் என்ன பண்ண, இதையெல்லா எதுக்கு என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க?” பற்களைக் கடித்துக்கொண்டு கேட்டாள் ஆதிரா.
சித்தார்த்திற்கு அவளின் முகபாவனையை பார்க்க சிரிப்புதான் வந்தது.
“அது… என் சார்பா யாதவ்க்கு அப்பறம் நீதான் இருக்க ஸ்வீட்ஹார்ட். நீதான் முன்னாடி இருந்து எல்லாத்தையும் நடத்தி வைக்கணும். யூ நோ, எங்களுக்கு இந்த ரிச்சுவல்ஸ் பத்தியெல்லா எதுவுமே தெரியாது. எனிவேய், நாளைக்கு பொண்ணு பார்க்க போலாம்னு இருக்கேன். நீ என்ன சொல்ற?” என்று சித்தார்த் கேட்க, மூக்கு விடைக்க அவனை முறைத்துப் பார்த்தவளோ அவனை கடந்து செல்லப் போனாள்.
அவள் எதிர்பார்க்காது அவள் கரத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், நூலிடைவெளிக்கு அவளை நெருங்கி நின்று, “யூ ஜெலஸ் ஆன் ஹெர் ரைட்?” என்று கொடுப்புக்குள் சிரித்தவாறு கேட்க, அவனின் ஸ்பரிசத்திலும் நெருக்கத்திலும் திக்குமுக்காடி போய்விட்டாள் ஆதிரா.
சித்தார்த்தின் பார்வையோ அவள் விழிகளிலிருந்து மெல்ல அவளிதழின் மீது பதிய, ஆதிராவின் பார்வையும் தன்னை மீறி அவனிதழில் பதிந்தது.
சிறு இடைவெளியும் விலகத் தயாராக, “வெட்ட வெளியில என்னடா பண்றீங்க?” என்ற யாதவ்வின் குரலில் பதறியடிக்கொண்டு விலகியவள் சித்தார்த்தை முறைத்துவிட்டு அறையை நோக்கிச் சென்றாள்.
“க்கும்! எனக்கு ஒரு நல்லதே நடக்க விட மாட்டல்ல” என்று தன் நண்பனை சலிப்பாக பார்த்துக் கேட்டவன், பின் அவனின் சோர்ந்த முகத்தை கவனித்து, “என்னாச்சுடா, நீஹா ஏத்துக்கிட்டாளா?” என்று கேட்டான் புருவ முடிச்சுகளோடு.
ஒரு பெருமூச்சோடு இல்லையெனும் விதமாக தலையாட்டினான் யாதவ்.
“பண்ண தப்புக்கு தண்டனை வேணாமா, வச்சு செய்றாடா பாவி! எப்படி சமாதானம் பண்றதுன்னு கூட தெரியல” என்று இயலாமையோடு சொன்னவன், “வாட் அபௌட் யூவர்ஸ்?’ என்று கேட்டான் பதிலுக்கு.
விழிகளை சுருக்கி கேலிப் புன்னகையோடு நண்பனைப் பார்த்தவன், “ஐ ஹேவ் அ ப்ளான், பட் இப்போ சொல்ல மாட்டேன், நாளைக்கு தெரிஞ்சுக்குவ” என்று சொல்லிவிட்டு பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை இட்டு விசிலடித்தவாறு சென்றான்.
‘என்ன பண்ண போறான்?’ உள்ளுக்குள் யோசித்தவாறு போகும் அவனை புரியாமல் யாதவ் பார்த்துக்கொண்டு நிற்க, அடுத்தநாளும் விடிந்தது.
அடுத்தநாள் காலை யாதவ் அப்போதுதான் குளித்து முடித்து உடை மாற்றிவிட்டு மாடிப்படிகளிலிருந்து இறங்கி வர, தன் நண்பியொருத்தி துரத்தவும் வேகமாக ஓடி வந்த பெண்ணொருத்தி முன்னால் வந்துக்கொண்டிருந்தவனை கவனிக்காமல் அவன் மீதே மோதிவிட்டாள்.
யாதவ்வும் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
எங்கு அந்த பெண் விழுந்துவிடுவாளோ என்ற பயத்தில் அவளிடையைப் பற்றி அவன் தன்னோடு அணைத்துக்கொள்ள, அவன் சட்டைக் காலரை பற்றிக்கொண்டாள் அந்த இளம்பெண்.
“அய்யோ என்னை மன்னிச்சிருங்க, நான் கவனிக்கல..” என்றுக்கொண்டே நிமிர்ந்த அந்த பெண்ணோ யாதவ்வைப் பார்த்ததும் நடப்பை மறந்து, அப்படியே சிலையாகிவிட்டாள்.
கிரிக்கெட் என்றாலே உயிரை விடும் பல பெண்களுக்கு கனவுக்கண்ணன் அல்லவா அவன்!
அவனை அறியாமலா இருப்பார்கள்!
“நீ.. நீங்களா..” அவள் அதிர்ந்த குரலில் கேட்டு அவனையே பார்த்துக்கொண்டிருக்க, “ஹிஹிஹி.. சாரி” என்றுக்கொண்டே அவளை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தினான் யாதவ்.
அந்த பெண்ணுக்கு மனமே இல்லை.
“நீங்க வந்திருக்கீங்கன்னு தெரியும், ஆனா ஐயா உங்ககிட்ட ஃபோட்டோலாம் கேக்க கூடாதுன்னு சொல்லியிருக்காரு. ஆனா எனக்கு… இதை நான் மறக்கவே மாட்டேன். எனக்கு உங்கள எவ்வளவு பிடிக்கும் தெரியுமா?” அவள் தன்னை மறந்து பேசிக்கொண்டே போக, யாதவ்விற்கே கொஞ்சம் வெட்கமாகிப் போனது என்னவோ உண்மைதான்.
புருவத்தை நீவி விட்டபடி திரும்பியவனின் விழிகளுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நின்றிருந்த நிஹாரிகா தென்பட, ஆர்வத்தோடு அவளை நோக்கி செல்லப் போனவன் அப்போதுதான் அவளின் முகபாவனையை புரியாமல் பார்த்தான்.
முதலில் விழித்தவனுக்கு சில கணங்களிலேயே மூளைக்கு பொறி தட்டியது.
‘ஓஹோ.. இதுதான் சங்கதியா! இருடீ உன்ன என்ன பண்றேன்னு பாரு’ தனக்குள் சொல்லிக்கொண்டவன், “உங்களுக்கு ஃபோட்டோதானே வேணும், தாராளமா எடுத்துக்கலாம்” என்றுக்கொண்டே அந்த பெண்ணோடு நெருங்கி நிற்க, நிஹாரிகாவுக்கு காதில் புகை வராத குறை.
அந்த பெண்ணுக்கு இதை விட வேறென்ன வேண்டும் என்றுதான் தோன்றியது.
அதற்குமேல் அங்கு நிற்காமல் நிஹாரிகா கோபத்தோடு சென்றுவிட, யாதவ் இதை விட்டால்தானே!
வேண்டுமென்று அவளை சீண்ட எண்ணி தன்னை பார்க்க வரும் பெண்களோடு சிரித்து சிரித்து பேசிக்கொண்டும் குழைந்துக்கொண்டும் அவனிருக்க, இவளுக்கு பொறுக்கவே முடியவில்லை.
அதுவும் அந்த பெண்களும் கிரிக்கெட் பற்றி தெரிந்துக்கொள்கிறோம் பேர்வழியென்று இவன் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்க, யாதவ்விற்கு உள்ளுக்குள் எரிச்சலாக இருந்ததோ என்னவோ பெண்ணவளுக்கு ஜீரணிக்க முடியவில்லை.
“அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும் ஆதி, ஒரு பொண்ணுதானேன்னு பார்த்தா இந்த கிராமத்துல இருக்குற மொத்த பொண்ணுங்க கூடயும் வழிஞ்சிட்டு இருக்கான். பெரிய செலப்ரிட்டின்னு நினைப்போ! இவன இன்னைக்கு விட போறதில்ல, என் பக்கத்துல முத்தம் கித்தம்னு வரட்டும் அப்போ இருக்கு அவனுக்கு…”
அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி அவள் புலம்பிக்கொண்டிருக்க, ஆதிராவோ இருக்கையில் சாய்ந்தபடி தீவிர யோசனையில் இருந்தாள்.
‘இன்னைக்கு பொண்ணு பார்க்க போறதா ஏதோ சொன்னானே, என்னவா இருக்கும்.. காலையிலயிருந்து அவன் சத்தமே இல்ல, ஒருவேள நெஜமாவே எவளயாச்சும் காதலிக்கிறானா, அவள பார்க்கதான் போயிருக்கானா?’ என தனகக்குள்ளேயே கேள்விகளையும் கேட்டு பதில்களையும் தேடிக்கொண்டிருந்தாள் அவள்.
சரியாக அறைக்கு ஓடி வந்த அவளின் சித்தி மகள், “அக்கா, சீக்கிரம் வாங்க ஐயா கூப்பிட்டாரு” என்று சொல்லிவிட்டு செல்ல, ஒருவரையொருவர் முகத்தை பார்த்துக்கொண்ட இருவரும் ஹாலுக்கு ஓடினர்.
அங்கு பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை போல மார்த்தாண்டத்தின் முன்னே சித்தார்த் நின்றுக்கொண்டிருக்க, அவரோ புருவ முடிச்சுகளோடு அவனையே கேள்வியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.
யாதவ்வும் நண்பனின் அதிரடியான செயலை எதிர்பார்க்கவில்லைதான்.
ஆனால், நண்பனுக்கு அரணாக நெஞ்சை நிமிர்த்திய வண்ணம் அவன் பக்கத்திலேயே நின்றிருக்க, ஆதிராவுக்கு நடப்பது எதுவும் புரியவில்லை.
“நான் ஆதிராவ கல்யாணம் பண்ணணும்னு ஆசைப்படுறேன். என்னை பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும், அம்மா அப்பாவோட வளர்ந்தது கிடையாது. பாசம்னா என்னன்னு இங்க வந்ததுக்கு அப்பறம்தான் ஃபீல் பண்ணேன். எந்த சூழ்நிலையிலயும் உங்க பொண்ணு கஷ்டப்பட மாட்டா.. ஐ ப்ராமிஸ்! இதுக்கப்பறம் உங்க விருப்பம்”
என்று சித்தார்த் பேச வேண்டியதை பேசிவிட்டு விறைப்பாக நிற்க, பெரியவரின் முகம் இறுகிப் போயிருந்தது.
“என்ன அண்ணே பார்த்துட்டு இருக்கீங்க, மொதல்ல ரெண்டு பேரையும் அடிச்சு துரத்துங்க..”
“என்ன ஆளுங்களோ! எந்த தைரியத்துல வந்து எங்க வீட்டு பொண்ண கேக்குறாங்க”
“இவனுங்கள இங்கேயே வெட்டி போட்டாதான் சரி, இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்டானாம் கதையால்ல இருக்கு”
என்று ஆளாளுக்கு கொந்தளிக்க, மார்த்தாண்டமோ அமைதியாக ஒரு பார்வைப் பார்த்தார்.
“சித்தார்த் என்ன பண்ற, தெரிஞ்சுதான் பண்றியா.. அப்.. அப்பா, நான்…” ஆதிரா ஏதோ சொல்ல வர, கைநீட்டி தடுத்தவர் மகளை அழுத்தமாக ஒரு பார்வைப் பார்த்தார்.
“உனக்கு இந்த பையன பிடிச்சிருக்கா ஆதிரா? ஆமாவா இல்லயா ஒரே பதில்தான். இல்லன்னா இப்போவே ஊரைவிட்டு துரத்திருவேன். எந்த பதிலா இருந்தாலும் தைரியமா சொல்லிரு..” என்று ஒரே முடிவாகக் கேட்டார் மார்த்தாண்டம்.
ஆதிராவுக்கு உடல் உதறியது. கைகளைப் பிசைந்தவாறு நிமிர்ந்து சித்தார்த்தைப் பார்த்தாள்.
அவனுடைய முகத்திலும் அதே பதற்றம்தான் சூழ்ந்திருந்தது. எங்கு இல்லையென்று சொல்லி விடுவாளோ என்ற பயம் அவனுக்குள்.
‘ப்ளீஸ் ஆதி.. இல்லன்னு சொல்லிராத!’ அவனுடைய விழிகள் அவளிடம் யாசிப்பது போல இருந்தன.
ஆதிராவின் காதல் மனம் இதுதான் சந்தர்ப்பம் என்று அடித்துக் கூறியது. விழிகளை அழுந்த மூடித் திறந்தவள் தன் தந்தையைப் பார்த்தாள்.
“எனக்கு பிடிச்சிருக்குப்பா, நா.. நானும் இவர கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்” என்று மனதிலிருந்ததை சொல்லிவிட, இத்தனை நேரம் இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை விட்டான் சித்தார்த்.
சுற்றியிருந்தவர்களோ ஆதிராவின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் மௌனமாகிவிட, மார்த்தாண்டமோ மகளின் அருகே வந்தார்.
“எனக்கும் பிடிச்சிருக்கும்மா.. இதுவரைக்கும் உன் விருப்பத்தை மீறி எதுவுமே பண்ணது கிடையாது. இப்போவும் உன்னோட விருப்பம்தான்” என்று சொன்னவர், சித்தார்த்தின் முதுகில் பெரிய அடியாய் போட்டார்.
“ஊர்ல இருக்குறவன் என் முன்னாடி பேசவே பயப்படுவான், ஆனா நீங்க என்கிட்ட என் பொண்ணயே கேட்டிருக்கீங்க. தைரியம் ரொம்ப ஜாஸ்திதான்… ஒருத்தர பத்தி தீர விசாரிக்காம அவ்வளவு சீக்கிரம் என் வீட்டுக்குள்ள அனுமதிக்க மாட்டேன், உங்கள பத்தி தெரிய போய்தான் இப்போ நான் சம்மதிச்சதும். அந்த நம்பிக்கைய கடைசி வரைக்கும் காப்பாத்தணும்”
அவர் சொல்லிவிட்டு தன் பெரிய மீசையை முறுக்கிக்கொள்ள, அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டான் சித்தார்த்.
ஆனால் ஆதிராவின் முகம் இன்னும் ஒரு குழப்பத்திலேயே இருந்தது.
“நான் இவர் கூட கொஞ்சம் தனியா பேசணும்ப்பா” என்று கோபத்தை அடக்கிய குரலில் சொல்லிவிட்டு முன்னே சென்றாள் அவள்.
“போய் பேசுங்க தம்பி” என்று மார்த்தாண்டம் சொன்னதும் யோசனையோடு அவள் பின்னாலேயே சென்றான் சித்தார்த்.
ஆதிராவோடு அவன் அறைக்குள் நுழைந்ததும் கதவை தாழிட்டவள், “நான் வெறும் பத்தோட பதினொன்னுதானே, அப்பறம் எதுக்கு இந்த நாடகம் எல்லா?” என்று பற்களைக் கடித்துக்கொண்டு கேட்க, திகைத்துப் போனான் ஆடவன்.
**********
இன்னும் ஒரே எபிதான்.. Final Epi 🏃🏃🏃
