Skip to content
Post Views: 70
அத்தியாயம் 29
நீயும் சொல்ல வேண்டாம் …
நானும் சொல்ல வேண்டாம் …
Advertisement
அந்த காதல் சொல்லும், அது வியந்து பார்த்த நம் அன்பின் ஆழத்தை…
நல்ல தூக்கத்தில் இருந்தான் பரணி. அவன் தோள் தொட்டு உசுப்பியது ஒரு பூங்கரம், “என்னங்க!…” என்ற தேன் குரல் வேறு கட்டி இழுத்து கண் விழிக்க வைத்தது காளையவனை.
Advertisement
Advertisement
கண்முன் அவன் மனைவி பனியில் நனைந்த புதுமலராக, தலைக்கு குளித்து கற்றை முடியை அள்ளி வெள்ளை தூண்டில் சுற்றி கொண்டை போட்டிருந்தாள், பிங் நிற புடவையில் பட்டு ரோஜா போல் அத்தனை பொலிவு அந்த பொட்டு வைத்த முகத்தில்.
முந்தானையை ஒற்றையாக இட்டு, இரண்டாக மடித்து தோளில் போட்டிருந்தாள். அந்த மாராப்பின் மேல் ஒய்யாரமாக வீற்றிருந்தது அவன் கையினால் அவள் கழுத்தில் ஏறிய அந்த மாங்கல்யம்.
Advertisement
“காஃபி…” என்று அவனிடம் காஃபி கப்பை துர்க்கா நீட்ட, கண்களை சிமிட்டி சிமிட்டி அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான், கனவாக இருக்குமோ என்று தான் உண்மையில் அவனுக்கு தோன்றியது.
ஆனால் வீடு முழுக்க கமழும் சாம்பிராணி புகையின் நறுமணமும், சற்று குனிந்து நின்று அவனிடம் காஃபியை நீட்டிக் கொண்டிருந்த அவன் பதுமையின் மனதை மயக்கும் வாசமும் உண்மை என்று எடுத்துரைக்க,
எழுந்து அமர்ந்து காஃபி கப்பை வாங்கிக் கொண்டவன், புன்னகையுடன் விலகிச் செல்ல இருந்தவளின் கையைப் பிடித்து இழுத்து அதில் கிள்ளி வேறு விட,
“ஆ.. என்னங்க?…” என்று அவன் கிள்ளிய இடத்தை தடவிக் கொண்டே அவள் கேட்க
“கனவுனு நினைச்சேன் அம்மு.. கொஞ்ச நாளாவே இப்படியோரு ஆசை.. தூங்கி கண் முழிக்கும்போது எனக்காக ஒருத்தி காஃபி கப்போட முன்னுக்கு நிக்க மாட்டாளான்னு.. அது நடந்துருச்சா அதான் உண்மையானு தெரிஞ்சுக்க கிள்ளி பாத்தேன்…” என்று சொல்ல
அவனை செல்லமாக முறைத்தவள் “அதுக்கு உங்க கைய கிள்ளணும்.. என் கையவா கிள்ளுவீங்க…” என்று கேட்க
“அள்ளிக்கொள்ள தான் ஆசை.. சரி காலையில வேணாம்னு கிள்ளி பாத்துக்கிட்டேன்…” என்று சொல்லி அவன் கண்ணடிக்க
‘சரி காலையிலேயே ஆரம்பிச்சிட்டாரு…’ என்று மனதில் நினைத்தவள்
“குடிச்சு பாத்துட்டு இனிப்பு போதுமானு சொல்லுங்க…” என்று கேட்க
அவன் தேன்மலர் தாயாரித்த பானம் அல்லவா தேனமுதம் போல் சிலாகித்து உறிஞ்சினான்.
உண்மையாகவே அவனுக்கு பிடித்தது போல் தான் இருந்தது. “ம்ம்ம்!…” ராகம் வேறு
“செமையா இருக்கு.. ஆனாலும் சுகர் கம்மியா இருக்குன்னு சொல்லி, இந்த காஃபிய உன்ன குடிக்க வைச்சு மீதிய நான் குடிக்கணும்னு ஆசையா இருக்கு.. ஆனா அது ஓல்ட் டைப் அதனால வேணாம்…” என்று சொல்லி அவளை குறுதுறு என்று பார்க்க
அவன் பார்வையும் அவன் சொன்ன விதமும் பெண்ணவளை கூசச் செய்து, நாணத்தில திளைக்க வைக்க,
“அச்சோ போங்க!…” என்றவள் ஓடப் பார்க்க
“ஓய் சாரப்பாம்பு நில்லுடி…” என்று அவன் அழைக்க
எடுத்து வைத்த காலை அங்கேயே வைத்து நின்று விட்டாள். ஆனால் திரும்பி அவன் முகம் பார்க்கவில்லை.
“சரி பழைய ட்ரெண்ட் வேணாம்.. புதுசா ஒரு ட்ரெண்ட் சொல்லட்டா…” என்றவன்
“ஸ்ட்ரெயிட்டா உன் உதட்டுல கிஸ் பண்ணிட்டு அதுக்குப் பிறகு காஃபிய டேஸ்ட் பண்ணிட்டு டெஸ்ட் சூப்பர்னு சொல்லணும்.. என்ன சொல்லட்டுமா?…” என்று கேட்க
அதற்கு மேலும் அவ்விடம் நீக்க முடியாமல், ஒரே ஓட்டமாக சமையல் அறைக்குள் ஓடி வந்து விட்டாள்.
அவன் கண் பார்வையில் இருந்து மறைந்தாலும் அவன் கூறியது காதில் கேட்டதில், உடலில் உள்ள அத்தனை செல்களும் குறுகுறுத்துக் கொண்டிருந்தது.
வெட்கத்தில் முகத்தை கையினால் மூடிக்கொண்டாள். சமையல் திண்டில் சாய்ந்து நின்றவள் தன் கால்கள் இரண்டையும் நிலத்தில் அழுத்தி பதித்து தன்னை சமம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தாள்.
அதற்கு விடுவேனா என்பது போல் பரணியின் சிரிப்பொலி இன்னமும் அவள் காதுகளை தீண்டிக் கொண்டுதான் இருந்தது.
அவனுக்கோ அவன் வாழ்வின் அழகிய காலைப் பொழுது, தன்னவளியின் கைவண்ணத்தில் உருவான காஃபியை ஆழ்ந்து, அனுபவித்து குடித்து முடித்தவன், எழுந்து காலை கடமைகளை செய்யச் சென்றான்.
துர்காவும் தன்னை சரி செய்து கொண்டவள் காலை உணவை சமைக்க ஆரம்பித்தாள் .
பார்த்து பார்த்து ஓரளவு அவளுக்கு திருப்தியாகவே காலை சமையல் முடிந்தது.
பரணியும் குளித்து முடித்து கடைக்கு செல்ல தயாராகி வந்தான்.
துர்க்காவும் சிறு சிறு பாத்திரங்களில் உணவுகளை எடுத்து வைத்து, டீபாயில் கொண்டு வந்து வைத்தவள், பரணிக்கு தட்டு வைத்து பரிமாறவும், அவளையே ஆளை முழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
இதுவும் அவன் ஆசை அல்லவா, ஒருவர் சமைத்து பரிமாற, உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்பது. இப்போது அவன் தாரம் அவன் அருகில் நின்று பரிமாறுகின்றாள், அள்ளி கொஞ்ச அவா பிறந்தது வேந்தனவனுக்கு.
“நீ சாப்பிடலயா?…” என்று பரணி கேட்க
“இல்ல.. முதல்ல நீங்க சாப்பிட்டு கடைக்கு போங்க.. நான் பிறகு சாப்பிடுறேன்…” என்று துர்க்கா சொல்ல
உணவை பார்த்து உண்டானோ இல்லையோ, உற்றவளை பார்வையால் விழுங்கிக் கொண்டே உணவை உண்டு முடித்தான்.
சாப்பிட்டு முடித்தவன் கை கழுவ எழுந்து கொள்ள, துர்க்காவும் அவன் கைக்கு தண்ணீரை ஊற்ற, கை கழுவி முடித்தவன், கை துடைக்க துண்டு எடுக்க திரும்பியவளின் சேலை முந்தானையை பிடித்து இழுத்தான்.
துர்க்காவிற்கு தூக்கி வாரி போட்டது.
என்ன செய்ய போகின்றானோ என்று உள்ளம் படபடக்க, உடல் உதறல் எடுத்தது.
தலைவன் முந்தானையை இழுத்ததில் சும்மா மடித்து போட்டு இருந்த முந்தானை மடிப்பு கலைந்து ஒற்றையாய் விரிய, ஊசி குத்தி இருந்தாலும் பலம் கொண்டு இழுத்து அவன் கையோடு போய் விடலாம் இருக்க மாராப்பை மார்போடு பிடித்துக் கொண்டாள் கோதை.
அவனோ இருவருக்கும் இடையில் இருந்த ஒரு அடி தூரத்தை குறைத்து, அவளுடன் ஒட்டி நின்றவாறு, தன் கையை அவள் முந்தானையில் துடைத்தவன் “இது கூட என்னோட ஒரு ஆசை…” என்று சொல்லி அவள் முந்தானையை அவளிடம் நீட்ட
கை துடைக்க தான் முந்தானையை பிடித்தான் என்றதும், வெளியே குதித்து விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்த இதயம் சற்று அடங்கிப் போக, அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் அவன் கண்களை பார்த்துக் கொண்டே அவன் கையில் இருந்து தன் முந்தனையை எடுத்துக் கொண்டாள்.
அவனும் அவள் கண்களையே பார்த்திருக்க, தன் முந்தானையை கொண்டு அவன் ஈரமான அதரங்களையும் மீசையையும் துடைத்து விட்டாள்.
அவ்வளவுதான் ஆண்மகனுக்கே உரிய ரசாயன மாற்றங்கள் அவனுள்ளே நடக்க, தன் வாயை துடைத்து விட்டு கீழே இறங்கிய அவள் பூங்கரத்தை ஆசையாக பற்றிக் கொண்டான்.
அவன் கையைப் பிடிக்கவும், உடல் கூசி சிலிர்க்க, நெளிந்து கொண்டே “விடுங்க…” என்றாள். அவளுக்கே அந்த வார்த்தை கேட்டிருக்காது போலும், அத்தனை மென்மையாக தேய்ந்து ஒலித்தது அவள் குரல்.
“முடியாது.. என்னடி பண்ணுவ பொண்டாட்டி…” என்றவனின் குரலில் அத்தனை கிறக்கம்.
அவள் என்ன பண்ண முடியும். அவன் என்ன பண்ணுவானோ என்ற பதட்டத்தை மறைக்க மட்டுமே முடிந்தது.
அவள் உணர்வுகளை மறைத்து வைக்க அவன் விட வேண்டுமே, பிடித்திருந்த அவள் கையை தன் உதட்டின் அருகே கொண்டு வந்து புறங்கையில் அழுத்திய ஒரு முத்தத்தை வைத்தான்.
பெண்ணுடல் வெளிப்படையாகவே ஒருமுறை துள்ளி அடங்கியது.
முத்தம் வைத்த உதடுகளை பிரிக்காமல் அப்படியே உரசி கொண்டே சற்று முன்னேற, அவன் நாசியும் கற்றை மீசை நுனியும் சேர்ந்து பெண்ணவள் தேகத்தில் வீணை மீட்ட, அவள் பூனை முடிகள் கூட சிலிர்த்து நின்றது.
மெல்லமாக முன்னேறி மனிகாட்டிற்கு மேல் இன்னொரு முத்தம் அழுத்தி வைத்தான். அத்துடன் நின்று விடவில்லை அதேபோன்று உதட்டைப் பிரிக்காமல் உணர்ந்து கொண்டே முன்னேறி அவள் முழங்காயில் ஒரு முத்தம்.
மேலும் அவன் முன்னேற, அவன் உதடுகளும் மீசை முடியும் ஏற்படுத்திய குறுகுறுப்பு தாங்க முடியாமல், தன் மறு கையால் சேலையை கசக்க தொடங்கி விட்டாள் பெண்ணவள், கால்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னி கொள்ளும் போல் இருந்தது.
ஒரு வழியாக பரணியின் உதட்டு ஊர்வலம் அவளின் தோள் சந்தில் வந்து நிற்க, அங்கு ஒரு முத்தம். அதுவரை தான் தாங்க முடியும் என்பது போல் துர்க்கா விலக பார்க்க, அவள் கையை இழுத்து திருப்பி அவள் வயிற்றோடு அழுத்திப் பிடித்தவன், தன் உடலோடு அவளை இணைத்துக் கொண்டான்.
அவள் பின்னுடல் அவன் முன்னுடலோடு மோதி நின்றது.
ஆடவனின் அதிரடி செய்கையில் இதயம் வேகமாக துடிக்க, மூச்சு பலமாக வாங்கியது பெண்ணவளுக்கு.
ஆடவனுக்குமே ஆசைகள் ஆழிப்பேரலையாய் எழுந்து அவனை ஆட்டிப்படைத்தது. பின் இருந்தே குனிந்து அவள் தோள் வளைவில் குட்டி குட்டி முத்தம் வைத்து, அப்படியே நகர்ந்து கழுத்து வளைவிற்கு வந்தான். அங்கே மூக்கால் உரசி ஆழ்ந்து சுவாசித்து, அவனவள் மகோன்னத வாசத்தை நாசியில் நிறப்பிக் கொண்டான்.
விழிகள் சொருகி நின்றவன் பின் அங்கேயே அழுத்தி நீண்ட நெடிய முத்தம் பதித்தான். அப்படியே சற்று மேலே முன்னேறி அவள் சிவந்து இருந்த கன்னகதுப்பில் மீசை முடியின் அச்சு பதியும் அளவிற்கு அழுத்தி ஒரு முத்தம்.
அவளின் வாசம்…
அவளின் மென்மை…
அவள் ஸ்பரிசம்… எல்லாம் சேர்ந்து அவனை பித்து கொள்ள செய்ய, சட்டென அவளை திருப்பி கன்னம் இரண்டையும் தன் கைகளால் தாங்கிக் கொண்டான்.
அந்த க்ஷணமே அவள் இதழில் புதைந்து போகும் வேட்கை அவனுள். அவன் பார்வை அவள் தேன் ஊறும் இதழில் தான் இருந்தது. பெருவிரலை சற்று நகர்த்தி ஆரஞ்சு சுளையின் வரிகளை ஒத்த அவள் தேன் சுளையை வருடினான்.
அவளுக்கு உடலில் மின்னல் வெட்டி சென்ற உணர்வு. இதயத்துடிப்பு அடங்குவேனா என்றது, உடல் வியர்த்து இப்போதே தொண்டை வறண்டு விட்டிருந்தது.
மொத்த காதலையும் தாபத்தையும் ஒருங்கே சேர்த்து, அவள் இதழ் நோக்கி அவன் குனிந்த நேரம், பரணியின் தொலைபேசி தொல்லையாக இடையில் வந்து இம்சை செய்ய, அவனோ அதை கண்டு கொள்ளவில்லை.
துர்க்கா தான் அவன் நெஞ்சில் கையை வைத்து தடுத்தவள் “ஃபோன் அடிக்குது…” என்று சொல்ல
“ப்ச்” சலித்துக் கொண்டவன் ஃபோனை எடுத்துப் பார்க்க, கடையில் வேலை செய்யும் பையன் தான் எடுத்திருந்தான். கடை சாவி இவனிடம் தான் உள்ளது எனவே ஏக்கமாக தன் பிரியமானவளை பார்த்தவன்
“நேரமாச்சு கடைய திறக்கணும்.. வரட்டுமா…” என்று கேட்க
“ம்ம்..” என்றவளுக்கும் ஆசுவாசம் பாதி ஏமாற்றம் பாதியாக தான் இருந்தது.
வியர்த்து சிவந்து போயிருந்தவளை பார்த்தவன், இப்போதைக்கு இந்த நெருக்கம் போதும், ஒரேடியாக அவளை இம்சித்தால் மிரண்டு விடுவாள் என்பதால் “சரி கிளம்புறேன்…” என்று சொன்னவன் முன்னே செல்ல
வாசல் வரை சென்று அவனை வழி அனுப்பி விட்டு வந்தாள். அவனும் ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை அவளை திரும்பிப் பார்த்துக் கொண்டுதான் சென்றான்.
வீட்டினுள் வந்தவளுக்கு தன்னை நிலைப்படுத்திக் கொள்ள சிறிது நேரம் எடுத்தது. இதுதான் அவர்கள் வாழ்க்கை, உரிமைபட்டவளிடம் இந்த நெருக்கம் கூட இல்லை என்றால் எப்படி.
தான் இனிமேல் பழையவற்றை தன் மூலையிலிருந்து மொத்தமாக அழித்துவிட்டு, தனவனுடன் இயல்பாக ஒன்ற வேண்டும் என்று புரிந்தது.
இருந்தும் ஃபோன் வந்த நேரம் பரணியின் நெஞ்சில் கையை வைத்து தடுத்தபோது, அவள் கண்களில் ஒருவித பயம் வந்து போனதை அவன் கண்டு கொள்ளவில்லை.
அதற்கு காரணம் அந்த அயோக்கியனிடம் வேண்டாம் என்று மறுத்தால் கை நீட்டி அடித்தும் இருக்கின்றான், பரணியை பற்றி நன்கு தெரிந்தாலும் எங்கே கோபப்பட்டு விடுவானோ என்ற பயம் வந்து போனதை அவளால் தடுக்க முடியவில்லை.
இனி இப்படியான எந்த அனாவசிய சிந்தனைகளும் தனக்கு இருக்கக் கூடாது என்பதை முடிவு எடுத்துக் கொண்டு எழுந்து சென்று சாப்பிட்டாள்.
அதன்பின் நேரம் ரெக்கை கட்டி பறக்க, மதிய உணவை சமைத்து வைத்துவிட்டு தன்னவனுக்காக காத்திருந்தாள்.
ஆனால் நேரம் போனதே அன்றி அவன் மதிய உணவிற்கு வீட்டிற்கு வரவில்லை, மணி இரண்டை தொட்டதும் அவன் எண்ணிற்கு அழைத்தாள், சிறிது நேரத்தில் வருவதாக கூறி வைத்தவன் மூன்று மணியாகியும் வரவில்லை.
எனவே அவனுக்கான சாப்பாட்டை கட்டி எடுத்தவள், வீட்டை பூட்டி விட்டு கடையை நோக்கி நடந்தாள். முன்பு என்றால் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்து இருப்பாள். இப்போது பரணியின் பொண்டாட்டி என்ற கர்வத்துடன் நிமிர்வாகவே நடந்து வந்து சேர்ந்தாள் அவளவனின் கடைக்கு.
மனைவியை சற்றும் எதிர்பாராதவன் முதலில் திகைத்து, பின் நேரத்தை பார்த்து உதட்டை கடித்துக் கொண்டான்.
கணக்கு வழக்குகளை பார்க்க ஆரம்பித்தவன் எடுத்த கையோடு முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று பார்க்க, அவனையும் அறியாமல் நேரம் சென்றிருந்தது.
அதற்கிடையில் அவன் ஆசை மனைவி உணவுடன் வந்து நிற்கின்றாள், தலை நிறைய மல்லிகை பூவும், நெற்றி நிறைத்த பொட்டும், வண்ணமான சேலையும் என்று வந்து நின்றவளை கண்களால் அள்ளி பருகியவன்
“துர்க்காம்மா.. என்னடா கடைக்கு வந்துட்ட…” என்று கேட்க
“எவ்வளவு நேரம் சாப்பிடாம இருப்பீங்க.. அதான் கையோட எடுத்துட்டு வந்துட்டேன்…” என்றவள் உள்ளே வந்து “சாப்பாட எங்க வைக்கட்டும் …” என்று கேட்க
கடையின் பின் பக்கம் அவளை அழைத்து வந்தவன், அங்கிருந்த ஒரு ஸ்டூலை காட்ட, அதில் அவனுக்கான உணவுகளை எடுத்து வைத்தாள்.
பரணியும் கை கழுவி விட்டு வந்து சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிட ஆரம்பித்த பின்னர் தான் எத்தனை பசி என்பதே தெரிந்தது .
சாப்பிட்டுக் கொண்டே “நீ சாப்பிட்டியா அம்மு …” என்று கேட்க
அவள் இல்லை என்று சொல்ல அவளை முறைத்து பார்த்தவன் “ஃபோன் பண்ணும் போதே நான் வர லேட்டாகும் சாப்பிடுனு சொன்னேன்ல.. இப்படி பண்ணுனா நீ உன் அம்மா வீட்டுல இருந்ததுக்கும் இங்க இருக்கிறதுக்கும் என்ன வித்தியாசம்…” என்று கடிந்து கொண்டவன்,
மீதி உணவை அவளுக்கு ஊட்டி விட, அவளும் சாப்பிட்டுக்கொண்டு “இல்ல, உண்மையாவே பசி இல்ல.. அதான் உங்க கூட சேந்து சாப்பிடலாம்னு இங்க எடுத்துட்டு வந்துட்டேன்…” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல
“சரி, சாரி இனிமே நேரத்துக்கு வீட்டுக்கு வந்து உன் கூடவே சாப்பிடுறேன் சரியா…” என்று அவளுக்கு சமாதானம் சொன்னபடியே உணவை ஊட்டி முடித்தான்.
சாப்பிட்டு முடித்த பின்னர் துர்க்கா வீட்டிற்கு செல்லவில்லை. அவன் கூடவே கடையில் ஒத்தாசைக்கு இருந்து விட்டாள்.
புடவை முந்தானையை இழுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு, அவள் பொருட்களை எடுத்து வியாபாரம் செய்யும் அழகை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் பரணி.
அவன் அவளை என்னவோ என்று நினைத்திருக்க, எத்தனை பாதமாக அவனுடன் பொருந்தி விட்டால் அவன் மனைவியாக. நினைத்தவனுக்கு உள்ளூர அத்தனை மகிழ்ச்சியும் திருப்தியும்.
கடைக்கு வந்த ஒரு வயதான பாட்டி “அட இது நமது துர்காவா? இப்பதான் அழகா இருக்கா…” என்று சொல்ல
“ஏன், என் பொண்டாட்டி எப்பவும் அழகுதான்…” என்று பரணியும் சொல்ல
“அவ எப்பவுமே அழகுதான்.. ஆனா இத்தன நாளா இந்த அழகா மறைச்சு வச்சிட்டாளே.. இப்பதான் உன் பொண்டாட்டி அழகு ஜொலிக்குது.. வீட்டுக்கு போனதும் திருஷ்டி சுத்தி போட்டுக்க…” என்று சொல்ல
அழகாக சிரித்தவன் “கண்டிப்பா சுத்தி போடணும்…” என்றான் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டு.
அவன் கடையை சாற்றும் வரை அவள் அங்கே தான் இருப்பாள் என்பதால், நேரத்திற்கு கடையை மூடியவன், அவள் தலையில் வைத்திருந்த பூ வாடி போய் இருக்க, பூக்கடையில் அவளுக்காக பூவையும் வாங்கிக் கொடுத்து வீட்டிற்கு கூட்டி வந்தான்.
நேற்று போல் இன்றும் அவள் தோசை ஊற்ற, இவன் சட்னி அரைக்க, என்று இருவரும் சேர்ந்து சமைத்து ஒன்றாக உண்டு முடித்தனர்.
தூங்கலாம் என்று அறைக்கு போக போனவளின் கையைப் பிடித்து இழுத்தவன்
“பொண்ணுங்க ராத்திரியில பூ எதுக்கு வைப்பாங்க தெரியுமா?…” என்று கேட்டான் அவளை நெருங்கி அந்த மல்லிகை பூவின் வாசத்தை முகர்ந்து கொண்டு, கிறக்கமாக.
“எதுக்கு வைப்பாங்க?…” என்றாள் நெளிந்து கொண்டே.
“மல்லிகைய வச்சு புருஷன மயக்க தான் …” என்று அவள் காதில் அவன் கிசு கிசுக்க
“மயக்கி…” என்றாள் காற்றில்.
“புருஷன் மயங்கினா.. பொண்டாட்டி அடுத்த மாசம் மசக்கையா இருப்பா…” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் சொல்ல
அவன் அருகாமையிலும், அவன் அணுகுமுறையிலும் விழிகிறங்கி நின்றவள், அவன் சொன்னதும் பட்டென தெளிந்து, தள்ளி நின்று
“இல்ல இல்ல.. உங்கள மயக்க ஒன்னும் நான் வைக்கல.. நீங்க தானே வாங்கி கொடுத்தீங்க.. அதான் வச்சேன்…” என்றாள்.
அழகாக சிரித்தவன் ” நீ என்ன மயக்க மல்லிக வைக்கலனாலும் நான் உன்கிட்ட மயங்க தான் செய்வேன்…” என்று சொன்னவன் அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்து “போய் தூங்கு…” என்று சொல்லிவிட்டு
தானும் முற்றத்தில் கட்டிலை போட்டு படுத்துக்கொள்ள, மந்திரித்து விட்ட கோழி போல் பதுமையாக நடந்து சென்று அறையினுள் படுத்துக்கொண்டாள்.
ஆனால் இருவருக்கும் தூக்கம் என்பது வரவில்லை,புதிதாக உணர்ந்த காதலினால்.
காளை மனது கன்னியிடம் மயங்க வேண்டும்…
கன்னி மனது காளையிடம் மயங்க வேண்டும்… அதுதானே காதல் நியதி
இங்கும் இருவரும் காதல் மயக்கத்தில் இருந்தனர்.
error: Content is protected !!