Skip to content
Post Views: 41
அத்தியாயம் 30
பரணி துர்க்காவிற்கு அழகாகவும், பிரபாகரன் அஞ்சனா கிருபாகரன் நித்தியாவிற்கு அமைதியாகவும் நாட்கள் செல்ல, விடிந்தால் அகிலன் அஞ்சனாவின் விவாகரத்திற்கான நாள் என்று வந்து நின்றது.
Advertisement
எனவே பிரபாகரன் அகிலனை தேடிச் சென்று நாளை நீதிமன்றத்தில் சத்தமே இல்லாமல் கையெழுத்து போட வேண்டும் என்று மிரட்டி விட்டு வீட்டிற்கு தாமதமாகவே வந்தான்.
நேரம் சென்று வீட்டிற்கு வந்தவன் கண்டது சுற்றும் முற்றும் பார்த்தபடி ஃபோனுடன் தோட்டத்திற்கு செல்லும் முருகானந்த்தை தான்.
Advertisement
Advertisement
‘இந்த நேரத்துல இவர் என்ன பண்றாரு.. ஏதோ சரியில்லையே…’ என்று நினைத்தவன் அவருக்கே தெரியாமல் அவரின் பின் சென்று பார்க்க,
முருகானந்தமோ ஃபோனில் “டேய் பத்து பேர் இருக்கீங்க.. ஆளுக்கு ஒரு அடி அடிச்சாலும் அவன் அடுத்து ஒரு வருஷத்துக்கு எழுந்திருக்கக் கூடாது.. தன்னையே பாதுகாத்துக்க தெரியாதவன் என் பொண்ண எப்படி பாத்துப்பான்னு பஞ்சாயத்த கூட்டி என் பொண்ண என்கிட்ட கூட்டிட்டு வரணும்.. உசுரு போயிட வேணாம் பிறகு அதுவும் என் தலையில வந்து விழும்.. ஆனா அவன் உடம்புல இருக்கிற எலும்பு மொத்தத்தையும் உடைச்சு விட்ருங்க…” என்று அந்ந பக்கம் உள்ளவர்களிடம் கட்டையிட்டுக் கொண்டிருக்க,
Advertisement
முருகானந்ததின் செயலில் கோபம் தலைக்கு ஏறினாலும், “என்ன பண்ணுனாலும் இவர் திருந்தவே மாட்டார்.. நாளைக்கு இருக்கு உங்களுக்கு…” என்று தந்தையை பார்த்து பல்லை கடித்தவன்
உடனே கிருபாகரனுக்கு அழைப்பை எடுத்துக்கொண்டு, சத்தம் காட்டாமல் வெளியேறினான். கிருபாகரனும் பிரபாகரன் பரணியின் வீட்டிற்கு வரச் சொல்ல அங்கு வந்து சேர்ந்திருந்தான்.
“அண்ணா என்ன ஆச்சு?…” என்று கேட்க
பிரபாகரன் முருகானந்தத்தின் திட்டத்தை சொல்ல, “இந்த அப்பாவ என்ன ண்ணா பண்றது?…” என்று அவனும் ஆயாசமாக கேட்க
“அவர விடு.. இப்போ இங்க பத்து பேர் வருவாங்க.. பரணிக்கும் துர்க்காவுக்கும் தெரியாம அத்தன பேரையும் அடிச்சு நம்ம ரைஸ் மில்லுல கொண்டு கட்டி போடணும்…” என்று சொல்ல
“சரிண்ணா.. நான் வீட்டுக்கு பின்னுக்கு போறேன்.. நீங்க முன்னுக்கு வாரவனுகள பாருங்க…” என்ற கிருபாகரன் பரணியின் வீட்டின் பின் செல்ல
வீட்டின் பக்க வாட்டிலேயே மூன்று பேர் கட்டையும் கம்பியுமாக வர, ஒவ்வொருத்தரையும் மறைந்து இருந்து தாக்கினான் கிருபாகரன்.
அதே போன்று வீட்டின் முன்பு நான்கு பேரை பிரபாகரன் பந்தாடிக் கொண்டிருந்தான். பெரிதாக ஒன்றும் தாக்கவில்லை அத்தனை பேருக்கும் மூக்கை உடைத்து விட்டான். விடாமல் மூக்குலேயே குத்த, அரை மயக்க நிலைக்கு சென்றனர் நால்வரும்.
அடியாட்கள் நான்கு பேரையும் கட்டிப் போட்டு, ஜீப்பில் ஏற்றியவன், கிருபாகரனை தேடி வர, அவனும் அந்த மூன்று பேரையும் கட்டி வைத்திருந்தான்.
“கிருபா முன்னுக்கு நாலு பேர்.. இவனுக்க மூணு பேர்.. இன்னும் மூணு பேர்?…” என்று கேள்வியாக நிறுத்தியவன் வீட்டின் பின் புறம் வந்து பார்க்க முதலில் யாருமே இல்லை, நன்கு தேடியவர்கள்
மீண்டும் கட்டி போட்டிருந்தவர்களில் ஒருவனை உசுப்பி “டேய் எத்தன பேர் வந்தீங்க?…” என்று கேட்க
“பத்து பேர் வந்தோம்.. முன்னுக்கு நாலு பேர்.. பின்னுக்கு மூன்று பேர், சைடுல மூணு பேர்…” என்று சொல்ல
‘பின்னுக்கு மூணு பேரு எங்க’ என்று யோசனையாக மீண்டும் வந்து தேட, பரணியின் வீட்டை தாண்டி இருந்த வயல் நிலத்தில் வரம்புகளில் கிடந்தனர் மூன்று பேரும்.
அவர்களைப் பார்த்து கிட்டே சென்று புரட்டி போட்டு ஆராய, மூவரும் நல்ல மயக்கத்தில் இருந்தனர். உடலில் எந்தவித காயங்களோ வீக்கங்களோ இருக்கவில்லை.
“அண்ணா யார் அடிச்சிருப்பா?…” என்று கிருபாகரன் கேட்க
“தூக்கு இவனுகளுக்கிட்டயே நாளைக்கு கேட்டா தெரியும் யாருன்னு…” என்று பிரபாகரன் சொல்ல
அந்த மூன்று பேரையும் தூக்கி ஜீபில் போட்டவர்கள் வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட, ஜீப் செல்லும் சத்தம் தேய்ந்த பின்னர், கூடத்தில் படுத்திருந்த பரணி முகத்தில் கண்ணை மறைத்து இருந்த ஒற்றை கையை விலக்கி எழுந்து கொண்டவன், மெதுவாக சென்று துர்க்காவை எட்டிப் பார்த்துவிட்டு மீண்டும் கட்டிலில் வந்து படுத்துக் கொண்டான்.
*****
அடுத்த நாள் அனைவரையும் கோயிலில் காத்திருக்க சொல்லிவிட்டு அஞ்சனாவை அழைத்துக் கொண்டு கோட்டிற்கு வந்திருந்தான் பிரபாகரன்.
கோட் வாசலில் அகிலனை பார்த்த அஞ்சனா திரும்பி பிரபாகரனை பார்க்க “நான் இல்ல செல்லம்மா.. கோட்டுக்கு வந்து சைன் போட சொல்லி மிரட்டினேன் அவ்வளவுதான்.. கையெல்லாம் வைக்கல…” என்று சொல்லும் போதே
அவர்களை நெருங்கிய அகிலன் “என்னடி ஆள் வச்சி அடிக்கிறாயா?.. என்கிட்ட இருந்து விவாகரத்து வாங்கிட்டா மட்டும் நீ சந்தோஷமா இருந்துடுவியா.. அதையும் நான் பாக்கறேன் டி…” என்று பல்லை கடித்தவன் நடக்க முடியாமல் ஒற்றைக் காலை இழுத்துக்கொண்டு நடக்க
ஒற்றை கையும் அசைக்க முடியாமல் பிரண்டு இருந்தது. இரண்டே இரண்டு அடியில் அகிலனின் ஒற்றைக் காலையும் கையையும் விளங்காமல் செய்து விட்டிருந்தான் அந்த மர்ம நபர். அது யார் என்பது பிரபாகரனுக்கு ஒரு யுகம் இருந்தது.
என்னதான் வாய்ச்சவடால் விட்டாலும் அகிலன் எந்த திருகுதாலமும் செய்யாமல் விவாகரத்துக்கு சம்மதம் கூறி விட, முதல் வழக்கே அவர்களுடையதாக இருக்க எளிதாக விவாகரத்து கிடைத்துவிட்டது.
கோட்டை விட்டு போகும்போது அகிலன் அஞ்சனாவை வன்மமாக பார்த்துக் கொண்டுதான் சென்றான்.
ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் அஞ்சனாவும் பிரபாகரனும் இருக்கவில்லை. இன்று அவர்கள் இருவரின் நெடுநாள் கனா கனவாகவே கலைந்து விடாமல் நிறைவேற போகின்றது.
தன் செல்லம்மாவை அழைத்துக் கொண்டு நேராக மாரியம்மன் கோவிலுக்கு வந்து விட்டான் பிரபாகரன். பரணி சொன்னது போல் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவன் தான் செய்திருந்தான்.
அஞ்சனாவின் பெற்றோர்கள் சிதம்பரம் பரிமளாவும் வந்திருந்தனர்.
உள்ளே வந்ததும் அஞ்சனாவை நித்தியா, துர்க்கா, தர்ஷனா மூவரும் புடவை மாற்ற அழைத்துச் செல்ல, பிரபாகரனுக்குரிய பட்டு வேஷ்டி சட்டை கிருபாகரன் கையில் இருந்தது.
“அண்ணா இந்தாங்க.. ட்ரெஸ் மாத்திட்டு வாங்க…” என்று சொல்ல
“நான் மாப்பிள்ளைடா.. மச்சான் கையால தந்தாதான் வாங்கிப்பேன்…” என்று பரணியை பார்த்துக் கொண்டே சொல்ல
பரணி கிருபாகரன் கையில் இருந்த வேஷ்டி சட்டையை வாங்கி “இந்தா…” என்று அவன் முகம் பார்க்காமல் கொடுக்க
“டேய் நம்ம சண்டை வேற கணக்கு.. இப்போ உன் தங்கச்சிய கட்ட போற மாப்பிள்ளை.. ஒழுங்கா மரியாதை கொடு…” என்று விடாமல் நண்பனை சீண்ட
“மரியாதை எல்லாம் கொடுக்க முடியாது.. நீ இப்படியே பரதேசம் போ.. என் தங்கச்சிய நான் பாத்துக்குறேன்…” என்று பரணியும் பிரபாகரனை வைத்து செய்ய
“டேய் சண்டாளா! என் வாழ்க்கையே அவள்தான் வேட்டிய கொடு…” என்று வெடுக்கென்று பிடுங்கிவன் துணி மாத்தி வர செல்ல,
போகும் பிரபாகரனை சிறு புன்னகையுடன் பார்த்து இருந்தான் பரணி.
அஞ்சனாவிற்கான பட்டு புடவை எடுத்தது பிரபாகரன் தான். அவனுக்கு பிடித்த பச்சையும் அவளுக்கு பிடித்த நாவலும் ஒன்றாக கலந்த கட்டம் போட்ட பட்டு சாரி. அதை பாந்தமாக உடுத்தி அப்சரஸ் போல் நடந்து வந்தால் பாவை.
நீண்ட நாள் நேசம் இன்று உறவாக, உரிமையாக மாறப்போகின்றது.
பிரபாகரனும் பட்டு வேஷ்டி சட்டையில் மகுடம் சூடாத மாறனாக வந்து நின்றான்.
இரு இணைகளும் ஒருவரை ஒருவர் ஆசையாக ரசித்துக் கொண்டனர்.
அவர்களது இணக்கம், நட்பு, ஈர்ப்பு, காதல், பிரிவு என்று அனைத்தனையும் பார்த்த அந்த அம்மனின் முன்னிலையில், கோயிலுக்கு வந்திருந்த ஊர் மக்களை சாட்சியாக கொண்டு, அஞ்சனாவை தன் சரிபாதியாக மாங்கல்யம் சூட்டி சொந்தமாக்கிக் கொண்டான் பிரபாகரன்.
இருவருமே இதுவரை கண்டது இன்னல்களை மட்டுமே, இதற்கு பிறகாவது இருவரும் சேர்ந்து இனிதான இல்லற வாழ்வை வாழட்டும்.
அஞ்சனாவின் பெற்றோருக்கு ஆனந்த கண்ணீர். இந்த திருமணத்தை முன்னாடியே செய்து வைத்திருந்தால் இன்று இருவரும் நன்றாக வாழ்ந்திருப்பார்களே. விதியோ சதியோ இப்படித்தான் அவர்கள் சேர வேண்டும் என்று இருந்து விட்டது போலும்.
பிரபாகரன் அஞ்சனா முதலில் சிதம்பரம் பரிமளாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, மகிழ்ச்சியில் நெகிழ்ந்த மனதுடன் அவர்களை ஆசிர்வதித்தனர்.
அதன் பின் அஞ்சனா பரணியின் காலில் விழ, துர்க்கா தள்ளி நின்று கொண்டாள். பிரபாகரன் பரணியிடம் “என்னடா, விழணுமா?…” என்று கேட்க
“உன் பொண்டாட்டிக்கு அண்ணன்.. விழலாம் தப்பில்ல…” என்று பரணியும் சொல்ல
“நானும் உன் பொண்டாட்டிக்கு அண்ணன் தான்.. நீ விழுந்திய…” என்று பிரபாகரன் கேட்க
“என் தங்கச்சி நானா உனக்கு கட்டி வச்சேன்.. நீயா எனக்கு உன் தங்கச்சி கட்டி வச்சியா.. பிரிச்சு விட தானே இருந்த.. நான் வீடு தேடி வந்து என் பொண்டாட்டிய கூப்பிட்டு வரலைன்னா என்ன பண்ணி இருப்ப…” என்று கேட்க
“அடுத்த நாளே சீரோட உன் வீட்டுல கொண்டு விட்டிருப்பேன்.. நீ அவசரப்பட்டதுக்கு அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது…” என்று பிரபாகரனும் விடாமல் தர்க்கம் பண்ண
“யாருக்கு வேணும் உன் சீர்.. எனக்கு என் பொண்டாட்டி போதும்…” என்று சொல்லி பரணி துர்க்காவை தோளோடு அணைக்க
“எனக்கும் என் பொண்டாட்டி போதும்.. யாருக்கு வேணும் ஆசீர்வாதம்.. போடா…” என்ற பிரபாகரன் அஞ்சனாவை தோளோடு அனைத்து கொள்ள
கிருபாகரன் சிவனே என்று அவர்களைப் பார்த்திருந்த நித்தியாவை தோளோடு அணைக்க, திரும்பி ஒரு மார்க்கமாக அவனை பார்த்தவள் “என்ன?…” என்க
“நீயும் என் பொண்டாட்டில…” என்று அவன் சொல்ல
“ஐயே!…” என்று அவள் ஒரு மார்க்கமாக அவனை பார்த்து வைக்க “போடி!…” என்றவன் கையை எடுத்துக் கொண்டான்.
சிதம்பரம் பரிமளா மறு வீட்டிற்கு அழைக்க “இல்ல அத்த.. ஒரு முக்கியமான வேலை இருக்கு.. அத முடிச்சுட்டு எங்க நிலைப்பாடு எப்படி இருக்கும்னு தெரியல பாத்துட்டு சொல்றேன்…” என்று மறுத்த பிரபாகரன்
பரணியிடம் “டேய் விருந்து சாப்பாடு உன் வீட்ட தான்.. புருஷனும் பொண்டாட்டியும் போய் சமைக்கிற வேலைய பாருங்க.. எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு முடிச்சிட்டு வந்து சேர்றேன்…” என்று சொல்லிவிட்டு கிருபாகரனை பார்க்க
அவனும் சரியெனும் வகையில் தலையை ஆட்டினான். காலையில் கோட்டிற்கு செல்லும் முன்பே தனது எண்ணத்தை பிரபாகரன் தம்பியிடம் தெளிவாக கூறிவிட்டான்.
“இதுல உனக்கு எதுவும் வருத்தம் இல்லையே…” என்று வேறு கேட்டு வைக்க
“என்ன ண்ணா.. நீங்க என்னையும் சேர்த்து யோசிச்சி இருக்கீங்க எனும்போது சந்தோஷமா தான் இருக்கு.. உங்கள தாண்டி எனக்கு எதுவும் பெருசு இல்ல…” என்று சொல்ல
“தெரியும்டா.. ஆனாலும் நான் எதுக்காக பூர்ணாவ விலக்கி வச்சேன்னு தெரியாம நீ நித்தியாவ விலக்கி வச்ச பாரு அத மட்டும் ஏத்துக்க முடியலடா.. இப்போ எல்லாம் சரியாயிடுச்சு போல…” என்று கேட்க
“ம்ம்.. ஆமா ண்ணா.. நான்தான் எதையுமே சரியா யோசிக்காம நடந்து.. அவள கஷ்ட படுத்திட்டேன்…” என்று கிருபாகரன் அசடுவலிய
“என்னால ஏன் என்ன காரணம்னு வெளிப்படையா சொல்ல முடியல.. இப்போ கூட சொல்ல முடியல.. நானும் பூர்ணாவும் வாழ்ந்தது வேற.. நீயும் நித்தியாவும் வேற.. அத புரிஞ்சுகிட்ட அதுவரைக்கும் சந்தோஷம்…” என்று அந்த சம்பாஷனை முடிந்து இருந்தது.
இதோ அவன் நினைத்ததை நிறைவேற்ற மாலையும் கழுத்துமாக, புது தாலி மின்ன, அஞ்சனாவின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டினுள் வந்தான்.
பிரபாகரன் இதைத்தான் செய்வான் என்று தெரிந்திருந்தாலும் அஞ்சனாவின் மீது கிளர்ந்தெழும் கோபத்தை முருகானந்தத்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை .
“நீ நினைச்சத நடத்திட்ட இல்ல…” என்று அவளிடம் எரிந்து விழ
“அப்பா போதும்.. இவ நினைச்சது இல்ல.. நீங்க நடக்க கூடாதுனு நினைச்சதால நடந்துருச்சு.. இப்போ இந்த வீட்டு மூத்த மருமக இவதான்.. அதாவது முருகானந்தத்தோட மருமக…” என்று பிரபாகரன் அழுத்தி சொல்ல
“உனக்கு இப்ப புரியாது பிரபா.. கண்டிப்பா பின்னுக்கு ஒரு நாள் புரியும்.. நான் ஏன் இதெல்லாம் பண்றேன்னு…” என்று இன்னமும் தன் நிலையில் நிலையாக முருகானந்தம் நிற்க
“அது இருக்கட்டும்.. உங்களுக்கு இப்பவும் புரியல.. பின்னுக்கு புரியுமா என்றதும் எனக்கு தெரியல.. ஆனா கண்டிப்பா ஒரு நாள் எல்லாத்துக்கும் சேர்த்து வருத்தப்படுவீங்க.. அப்புறம் நான் அரிசி மில்லுல அடைச்சு வச்சிருந்த உங்க ஆட்கள திருட்டுத்தனமா விடுதல செஞ்சிட்டீங்க போல…” என்று கேட்க
முருகானந்தம் அதிரவெல்லம் இல்லை. தன் திட்டத்தை கண்டுபிடித்து, அதை முறையடித்து பிரபாகரன் அடியாட்களை கட்டி போட்டது வரை தெரிந்து தானே அவர்களை அவிழ்த்து விட்டது.
“ஆமாடா நான் தான் பண்ணுனேன்.. இப்ப என்ன.. இத்தன நாளா இந்த ஊர்ல நான் கட்டி காப்பாத்தி வச்ச என் கௌரவத்த நீயும் உன் தங்கச்சியும் சேந்து கெடுப்பீங்க.. நான் பாத்துட்டு சும்மா இருக்கணுமா.. இது எல்லாத்துக்கும் காரணம் அந்த பரணி தான்…” என்று இப்போதும் சம்பந்தமே இல்லாத பரணியை இழுத்து வைத்து பேச
“கௌரவம்.. கௌரவம்.. கௌரவம்.. உங்க கௌரவத்த நாங்க கெடுக்கிறோமா.. இன்னுமா அப்பா உங்களுக்கு புரியல.. நீங்க பண்ணுன பாவத்த தான் நாங்க சுமக்குறோம்.. நீங்க பரணியோட குடும்பத்த அழிச்சு அவன ஒண்ணுமே இல்லாம கால உடைச்சு படுக்க வச்சீங்க.. அதுக்கு அடுத்த நாளே உங்க பொண்ணு எவனோ ஒரு நாசக்காரன நம்பி போய் நரக வேதனைய அனுபவிச்சா.. ஒருவேள நீங்க பரணிக்கு அந்த பாவத்த பண்ணாம இருந்திருந்தா ஏதாவது ஒரு வகையில துர்க்கா காப்பாத்தபட்டு இருப்பா.. அவளுக்கு நடந்த அந்த கொடூர சம்பவங்களுக்கு காரணம் நீங்க பண்ணுன பாவம்.. நீங்க பண்ணுன பாவத்தோட பலன அனுபவிச்சது எதுவுமே அறியாத உங்க பொண்ணு..
…இப்போ கூட உங்களால பாதிக்கப்பட்டவனும், உங்க பாவத்த சுமந்தவளும் ஒன்னா சேந்து இருக்காங்க.. இதப் பாத்துமா விதி என்றது ஒனோட ஒன்னு சம்பந்தப்பட்டது என்றது உங்களுக்கு புரியல..
…அத கூட விடுங்க இதோ என் செல்லம்மா.. நீங்க மட்டும் அன்னைக்கு இவ அப்பா அம்மா கிட்ட போய் மிரட்டாம இருந்திருந்தா.. அவங்க அகிலனுக்கு இவள கல்யாணம் பண்ணி கொடுக்க ஒத்த கால்ல நின்னு இருக்க மாட்டாங்க.. எப்படியாவது பேசி என் செல்லமாவ எனக்கு சொந்தமாக்கி இருப்பேன்.. நீங்க பண்ணுன குளறுபடி தான் அந்த நாய கல்யாணம் பண்ணிக்கிட்டு இவ அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தா..
…இவ மனச உடைச்சு, இன்னொருத்தனுக்கு கட்டி வைக்கிறதுக்கு துணை போன குத்தத்துக்காகத்தான்.. நீங்க எனக்கு பாத்து கட்டி வச்ச பொண்ணோட என்னால சந்தோஷமா வாழ முடியல.. எப்படி எந்தப் பையனோட வாழ்க்கையில இவ வந்தா நல்லா இருக்க மாட்டான்னு நினைச்சு விரட்டி விட்டுட்டு நான் நல்லா இருப்பேன்னு நினைச்சு ஒரு பொண்ண கட்டி வச்சீங்களோ.. அந்த பொண்ணோட நான் சந்தோஷமா வாழல.. அது உங்களுக்கும் தெரியும் அப்ப கூட உங்களுக்கு புரியலல எங்கேயோ ஒரு இடத்துல நம்ம பண்ணுன பாவம் தான் நம்ம பிள்ளைங்க தலையில விடியுதுன்னு..
…போதும் இதுக்கு மேல நீங்க பண்ற பாவத்துக்கு பலிய எங்களால சுமக்க முடியாது.. இன்னையோட உங்களுக்கும் எங்களுக்குமான உறவு இதோட முடிஞ்சு போகட்டும்…” என்று பிரபாகரன் சொல்ல
உண்மையாகவே பிரபாகரன் கூறியதை கேட்டு ஆடித்தான் போனர் முருகானந்தம், பிரேமாவதி மற்றும் சகுந்தலா.
ஆனால் அன்று துர்க்கா பேசியதிலிருந்து சகுந்தலா மிகவும் அமைதியாக நடப்பவற்றை உள்வாங்கிக் கொண்டு மட்டும்தான் இருக்கின்றார்.
பிரபாகரன் கிருபாகரனை பார்க்க, அவனும் உள்ளே சென்று ஒரு கட்டு பத்திரங்களை எடுத்து வந்தான். அதை வாங்கி முருகானந்தத்தின் முன்பு தூக்கி போட்டவன்
“தாத்தா சொத்து பேரன்களுக்கு தானே…” என்று கேட்டதில் முருகானந்தத்திற்கு புரிந்து போனது பிரபாகரன் எதில் வந்து நிற்க போகின்றான் என்று.
“இதுல தாத்தா சொத்து மொத்தத்தையும் ஆதி சிவன் ரஸ்ட்க்கு மாத்தி எழுதி இருக்கோம்.. உங்க பரம்பரையும் வேணாம் உங்க பரம்பரையால வந்த பணமும் வேணாம்.. வேணாம்னா உங்க பேருக்கு மாத்தி இருக்கலாம் ஆனா இந்த அந்தஸ்து, சொத்து பத்து இருக்க போய் தானே இந்த ஆட்டம் ஆடுறீங்க.. இனி நீங்கள் நிக்கிற இந்த வீட்டத் தவிர எதுவுமே உங்க பேர்ல இல்ல.. இத்தன நாள் நானும் என் தம்பியும் சம்பாதிச்ச சம்பாத்தியத்த மட்டுமே வெச்சு வாங்குன அந்த மாந்தோப்பு அதுல இருக்கிற ஒத்த வீடு எங்களுக்கு போதும்.. நாங்க வீட்ட விட்டு போறோம்…” என்று தன் முடிவை பிரபாகரன் கூறி முடிக்க இடிந்து போய் அப்படியே அமர்ந்து விட்டார் முருகானந்தம்.
error: Content is protected !!