Skip to content
Post Views: 107
சீதா கல்யாண வைபோகமே…
அத்தியாயம் – 1
Advertisement
Advertisement
Advertisement
சென்னை சிங்கார சென்னை பலரின் வாழ்கையில் முன்னேற்றம் பெறுவதற்கு நமது சென்னை மாநகரம் காரணமாக இருக்கிறது..
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஐந்து ஏக்கர் கொண்ட பெரிய தோட்ட வீடு பகதூர் சிங் வீடு, அவரின் மனைவி சின்மய், அவர்களின் ஒரே மகள் நடிகை சோனாலி…
Advertisement
பகதூர் சிங் பெரிய நெய் ஸ்வீட் கடை வைத்துள்ளார்,,கடை என்றால் சாதாரணமான கடை கிடையாது.. மிகப்பெரிய அளவில் நெய் ஸ்வீட்ஸ் தயார் செய்யும் கம்பெனி போல வைத்திருந்தார்.. சில மாநிலங்களிலும், சில ஊர்களிலும் இவரின் கடை உள்ளது.. முக்கியமான ஊர்களில் பகதூர் ஸ்வீட் கடை வைத்துள்ளார்,, ஸ்வீட் என்றாலே பகதூர் ஸ்வீட் கடை தான் என்று பெயர் உள்ளது..
அவர் மகள் சொனாலிக்காக ஆழ்வார்பேட்டையில் இடம் வாங்கி வீடு கட்டி இருந்தார்.. சோனாலி இரண்டு வருடமாக நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறாள்.. முதலில் மாடலாக இருந்தவள் இப்போது இந்தியிலும், தமிழிலும் சில படங்கள் நடித்து வருகிறாள்.
இன்று காலை மகளுக்காக சிறப்பு பூஜை நடந்து கொண்டிருகிறது..அந்த பெரிய பங்களாவில்..
காலை 5:00 மணியில் இருந்து பூஜை நடந்துக்கொண்டிருந்தது,, பகதூரும் அவர் மனைவியும் பூஜையில் அமர்ந்திருக்க,,பூஜை முடியும் தருவாயில் வந்து சேர்ந்தாள் சோனாலி,, பார்க்க மாடல் போல் இருப்பாள்.
பிறந்ததிலிருந்து செல்வ செழிப்போடு வளர்ந்தவள், அவள் அனைவரையும் ஒரு அலட்சிய பார்வை தான் பார்ப்பாள்.. இப்போது நடிகை ஆகிவிட,, தலையில் கிரீடம் வேறு ஏறிவிட்டது அவளின் அலட்சிய பார்வையே பல நல்ல படங்கள் இவளிடமிருந்து கைவிட்டு போக காரணமாக இருந்தது..
இப்பொழுது மகளுக்காக நல்ல படங்கள் வந்து மகள் நம்பர் ஒன் நடிகையாக ஆக வேண்டும் என்று சின்மய் மகளுக்காக பூஜை செய்து கொண்டிருந்தார்..
ஐயர் பூஜை முடிந்ததும் ‘பிரசாதம் எங்கே” என்று கேட்க.
சின்மய் சில பாத்திரங்களில் அவர் எடுத்து வைத்திருந்த இனிப்பு பிரசாதத்தை எடுத்து ஐயரிடம் தந்தார்..
அதை வாங்கி பார்த்தவர்.. “அன்னம் பிரசாதம் வேணுமே, நீங்க அன்னம் பிரசாதம் வைக்க வில்லையா? என்று கேட்க, அப்போது தான் அவருக்கு ஞாபகம் வந்தது,,. ஐயர் சொல்லியதை மறந்து விட்டேனே என்று..
என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார் சின்மய், அவர் வீட்டில் வேலை செய்யும் பெண் இன்னும் வர வில்லை, என்ன பண்ணுவது என்று யோசிக்க,, அவர் வீட்டின் பின் கார் செட்டிலிருந்து குக்கர் விசில் சத்தம் வர..
சீதா எழுந்து சமைத்து இருப்பாள் அவளிடமிருந்து அன்னத்தை வாங்கிக் கொண்டு வந்து வைத்து விடலாம். என்று எண்ணிய சின்மய் சீதாவின் வீட்டை நோக்கி செல்ல..
பகதூர் அவர் வீட்டின் பின் இருந்த கார் செட்டை சின்ன வீடாக மாற்றி இருந்தார் , கார் டிரைவர் கண்ணணும், அவர் மகள் சீதாவும் அங்கே தான் தங்கி இருந்தனர்..
“சீதா சீதா” என்று சின்மய் சீதாவை அழைக்க.
25 வயது நிறைந்த அழகிய பெண் வந்து கதவை திறந்தாள்,, அவள் இருக்கும் அழகிற்கும் அவள் தங்கி இருக்கும் வீட்டிற்கும் சம்பந்தமே இல்லை, இந்த காலத்தில் சீதா என்ற ஒரு பெண் பிறந்திருந்தாள் எப்படி இருப்பாளோ, அவ்வளவு அழகாக இருந்தாள் சீதா,, நல்ல நிறம், அழகான முகவடிவு, எவ்வளவு கஷ்டம் வந்தாலும், தாங்கி கொண்டு அமைதியாக இருக்கும் சாந்தமான குணம்,, நீண்ட கூந்தல், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம், சீதாவை பற்றி..
கதவை திறந்த சீதா, சின்மய்யை இந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை “என்ன மேடம்” என்று கேட்க..
” சீதா ப்பேட்டி வீட்டில் பூஜை வைத்திருந்தோம் பிரசாதம் ரெடி பண்ண மறந்துட்டேன்,, நீ அன்னம் வைத்திருக்கிறாய் தானே”?. என்று கேட்க
“சமைத்து விட்டேன் மேடம் இருக்கு எடுத்துட்டு வரேன்” என்று ஒரு புதிய பவுலில் சாதம் எடுத்து கொண்டு வந்து கொடுக்க..
“உப்பு போடலை தானே சீதா “?.. என்றார்,,
“இல்ல மேடம் உப்பு போடல ” என்றாள் சீதா..
“தேங்க்யூ சீதா,, நீ வேலைக்கு கிளம்பிட்டியா?”..
“கிளம்பனும் மேடம் 7 மணிக்கு ட்ரெயின் இருக்கு” என்று சொல்ல..
“சரி ப்பேட்டி நீ போயிட்டு வா, உங்க அப்பாவை சீக்கிரம் வர சொல்லு சோனாலி இன்னைக்கு ஏதோ பட பூஜைக்கு போகணும்னு சொன்னா” என்று சொல்ல..
” சரி ஆன்ட்டி, அப்பாவை வர சொல்லுறேன்” என்றதும் சின்மய் அவர் வீட்டிற்கு சென்றார் …
காலை ஏழு மணி சீதா கிளம்பும் டைம் ஆகிவிட்டது.. தந்தையை எழுப்பினாள்…
“அப்பா குளிச்சிட்டு வந்து சாப்பிடுங்க,, எனக்கு நேரம் ஆகிவிட்டது” என்று சொல்ல..
இரவு முழுவதும் இரும்பி, இரும்பிய விடியற்காலையில் தான் தூங்கி இருந்தார் கண்ணன்..
குடித்து குடித்து உடம்பை கெடுத்து வைத்திருந்தார் சீதாவின் தந்தை கண்ணன்.
இவள் எழுப்பியும் அவரால் எழுந்து கொள்ள முடியவில்லை புரண்டு புரண்டு படுத்தவருக்கு உடல் வலி எடுக்க.
தந்தை எழுந்து கொள்ள கஷ்டப்படுவதை பார்த்தவள் “அப்பா நீங்க வேணா ரெஸ்ட் எடுங்க நான் வேணா இன்னைக்கு சோனாலி மேம்முக்கு கார் ஓட்ட போறேன்” என்று சொல்ல..
“வேண்டாம் டா,, நீ காலேஜ் போ அப்பா பார்த்துக்கிறேன்” என்றவர் மெல்ல எழுந்து அமர்ந்து மகளை பார்த்தார்..
எப்படி இருக்க வேண்டிய பெண்? தன் மனைவி இன்று இருந்தால் இன்நேரம் சீதாவுக்கு திருமணம் முடித்துக் கொடுத்திருக்கலாம்.. இந்த ஓட்டை கார் செட் வீட்டில் தன் மகளை பார்த்தவருக்கு நெஞ்சு வலியே வந்து விடும் போல இருந்தது.
எல்லாம் என்னால் தான்,, எல்லாம் இந்த குடியால் என்ற அவரை அவரே திட்டிக்கொண்டவர்.. தன்னை விட்டுப் போன தன் மனைவி தனலட்சுமியை நினைத்துக் கொண்டார் தனலட்சுமி இருந்தபோது நன்றாகத்தான் இருந்தார்கள்..
அவருக்கு கேன்சர் வந்துவிட அவர்கள் சேமித்து வைத்திருந்த அனைத்து பணமும் பொருளும் வீடும் எல்லாம் சென்று விட, கடைசியில் தனலட்சுமி உயிரும் போயிவிட. இருக்க வீடு கூட இல்லாமல்.
இந்த கார் செட்டில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்,, பழையது அனைத்தும் ஞாபகம் வந்து பாடாய் படுத்த,, மகளை பார்த்து “நீ கிளம்பு” என்று சொன்னார்..
செங்கல்பட்டில் இருக்கும் காலேஜுக்கு கிளம்பினாள் சீதா.. கடந்த 2 வருடமாக அந்த காலேஜில் தான் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறாள்…
அங்கே வேலை பார்த்துக்கொண்டே பி, எச், டி படிக்கிறாள்,, சம்பளம் குறைவு தான், இருந்தாலும் படிப்புக்காக அங்கேயே வேலை பார்த்துக்கொண்டே படிக்கிறாள்…
சீதா காலை 7 மணிக்கு கிளம்பினால் தான், அவள் வீட்டை விட்டு கிளம்பி வந்து 2 ட்ரெயின் பிடித்து காலேஜுக்கு போக சரியாக இருக்கும்..
இவளுக்காக ரயில்வே ஸ்டேஷனில் அவள் தோழி மலர் காத்திருக்க சீதாவை பார்த்தவள், ” கலக்குறே சீதா இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கியே! அதுவும் இந்த பச்சை கலர் காட்டன் புடவையில், ம்ம்ம்ம் ” என்ற கேலி பேச….
“ஹேய் வண்டியை எடுடி டைம் ஆச்சு” என்று சீதா அந்த ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தவள், தன்னை கண்ணாடியில் பார்க்க, அவளின் தாயின் சிறிய கல் வைத்த தங்க கம்பல், கழுத்தில் மெல்லியதாக சில்வர் ஜெயின், 300 ரூபாய் காட்டன் புடவையில் அழகாய் இருந்தாள்..
மலரோ கழுத்தில் தங்க ஜெயின், புடவைக்கு ஏத்த மாதிரி கம்பல், விலையுயர்ந்த கைபை, லேட்டஸ்ட் மாடல் ஹைபோன், கையில் உள்ள பாதி விரல்களில் தங்க மோதிரம், ஒரு கையில் ஸ்மார்ட் வாச், மறுகையில் தங்க வளையல் என்று பார்க்க அந்தனை அழகாய் இருந்தாள் மலர்,, அதுவும் இன்று கரும்நீல சில்க் காட்டன் புடவையில் அழகு தேவதை போல் இருந்த தோழியை பார்த்த சீதா,,
“உனக்கும், உன் பேருக்கும் பொருத்தமாக இருக்கு உன் பெயர் அழகுமலர்” என்று தோழியின் அழகை பாராட்டி, கேலி பண்ணி பேசிக்கொண்டே வர…
அந்த ஸ்கூட்டி அவர்கள் வேலை செய்யும் காலேஜ் கேம்பஸ் உள்ளே நுழைந்தது,, கேம்பஸ் தான் பெரிய கேம்பஸ்,, அங்கே வேலைக்கு ஏத்த ஊதியம் இல்லை, ஏதோ கொஞ்சமாக தான் கொடுப்பார்,, சீதா வேலையோடு சேர்த்து இந்த காலேசில் பீ, எச், டி படித்துக்கொண்டிருக்கிறாள்,,.
பீ, எச், டி படித்து முடித்தவுடன் ஒரு நல்ல சம்பளத்திற்கு வேற காலேஜுக்கு போக வேண்டும்,, என்பதே சீதாவின் ஆசை….. அன்று காலேசில் வேலை முடிந்து,
அவள் வீடு வந்து சேர இரவானது,, அவள் வந்து, தன்னை சுத்த படுத்தி கொண்டு, இரவு உணவை சமைத்து முடிக்க சரியாக கண்ணன் வந்தார்..
“அப்பா சாப்பிடுங்க அப்பா” என்று சீதா கண்ணனை அழைக்க..
அவள் அழைத்தது அவர் காதிலே விழவில்லை.. சுருண்டு படுத்து விட்டார்,, “அப்பா குடிச்சீங்களா?”.. என்றாள்..
கண்ணனிடமிருந்து எந்த பதிலும் இல்லை,, அவர் பதில் சொல்லாமல் இருப்பதிலே அவரை புரிந்து கொண்ட சீதா,, இவர் திருந்தமாட்டார்,, என்றவள்..
தந்தைக்கு உணவு எடுத்து கொண்டு வந்து வைக்க..
” எனக்கு வேண்டாம் நீ சாப்பிடு சீதா” என்றார் கண்ணன்..
“ஏன்பா சாப்பிடாம உடம்பை கெடுத்துக்குறீங்க சாப்பிடுங்க”…
“சாப்பிட பிடிக்கலடா உங்க அம்மா ஞாபகமா இருக்கு, என்னால முடியல” என்றார்…
சீதாவுக்கும் தந்தையின் நிலமை புரிந்திருந்தாலும் அவளுக்கு தன் தந்தை இப்படியே சாப்பிடாமல் இருந்து உடம்பை கெடுத்துக் கொள்வாரோ என்று அவரை வற்புறுத்தி கொஞ்சமாக சாப்பிட வைத்தவள்.. அவளும் உண்டு முடித்து கிளம்ப,,
“எங்கடா போற சீதா” என்றார் கண்ணன்,,
“இல்லப்பா நான் ஒரு 12 மணி வரைக்கும் ஊபர் கார் ஓட்டிட்டு வரேன்” என்று அவர்களின் பழைய காரை எடுத்துக் கொண்டு கிளம்ப…
கண்ணன் சம்பாரித்து வைத்ததில் மிச்சம் இந்த பழைய கார்.. அது பின் வாசலில் நிற்க,, பின் வாசல் வழி சென்று காரை இயங்கிக்கொண்டு சென்றாள் சீதா,, கண்ணன் தன் பிள்ளை இரண்டு பேருக்கு கார் ஓட்ட கத்து கொடுத்திருந்தார்
தன் மகள் ஓடி ஓடி உழைப்பதை பார்த்து மிகவும் வருந்திபோனார்,..
அவருக்கு தன் மனைவி ஞாபகம் வந்தது,, காதலித்து திருமணம் முடித்தார் தனலட்சுமியை,,.. ஆமாம் பெரிய பணக்கார வீட்டுப் பெண் தான் தனலட்சுமி, அவரை துரத்தி துரத்தி காதலித்து கல்யாணம் முடித்தவர்,,தனலட்சுமியை அவரால் முடிந்த வரைக்கும் சந்தோஷமாகத்தான் வைத்திருந்தார் இன்று மனைவி இல்லை என்ற போது அவருக்கு வாழ்க்கையை வெறுத்து விட்டது….
சீதா காரை எடுத்துக்கொண்டு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து நின்றாள்,, விமான நிலையத்தில் வந்தவர்கள் அதிகமாக பணம் கொடுப்பார்கள், தூரமாக சென்றாலும் பணம் நிறைய கிடைக்கும்,, இரவு 12, 1 மணி வரைக்கும் காரை ஓட்டியவள் வீட்டிற்கு வந்து சேர.. அவள் வந்து சேர்ந்ததும் பிரபு தன் அக்கா சீதாவிற்கு போனில் அழைத்திருந்தான்..
தம்பியின் அழைப்பை ஏற்றவன்.. “என்னடா இந்த நேரத்தில் போன் பண்ணி இருக்க”?.
“நீ இப்பதானே கார் ஓட்டிட்டு வருவேன்னு எனக்கு தெரியும்.,, அதான் கூப்பிட்டேன்,, இப்பதான் படிச்சு முடிச்சேன் கா அதான், போன் போட்டேன்” என்று கூற..
“சொல்லுடா என்ன விஷயம்” என்றாள்..
“நீ கேண்டின் பீஸ் போன மாதம் கட்டலீயா கா?” என்றான்..
“ஆமா டா கொஞ்சம் கஷ்டம் அதனால கட்டல, இந்த மாசம் சேர்த்து கட்டிடுவேன்டா,,”.. என்றாள்..
” சரிங்கா அக்கா, உன் ஃபோனுக்கு ஒரு பில் அனுப்பி வச்சிருக்கேன் அதை பாரு” என்றான்..
பார்த்தவளுக்கு அதிர்ச்சி அதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பைனல் இயர் பீஸ் என்று இருக்க..
‘என்னடா சொல்ற இவ்வளவு பீஸ் போட்டு இருக்காங்க”..
“ஆமாக்கா இது தான் லாஸ்ட் பீஸ், இதை ஒரு வாரத்தில் கட்ட சொன்னாங்க”.. என்றதும்..
இவ்வளவு பணமா எப்படி நான் கட்டுவேன்,, என்று மனதில் புலம்பியவள்,, தம்பியிடம் இதை சொல்லவில்லை,.. அவனிடம் சொன்னால் அவன் வருந்துவானே என்று நினைத்தவள்,,
தான் கஷ்ட படுவது தெரிந்தால் அவன் வருத்தப்படுவானே என்று எண்ணியவள், அவனிடம் சொல்லவில்லை..
“எப்படியாவது பணத்தை ரெடி பண்ணி கட்டிடுறேன்டா,, நீ மட்டும் நல்லா படி டா அம்மா ஆசைப்பட்ட மாதிரி நீ பெரிய டாக்டர் ஆகணும்” என்று தம்பிக்கு ஆறுதல் சொல்லி ஃபோனை வைத்தவள்.
ஒரு லட்சத்து இருபது ஆயிரம் ரூபாய் நான் எப்படி ரெடி பண்ணுவேன் என்று யோசித்தவள், பின்பு, அதைவிட முக்கியம் கேன்டீன் பீஸ் போன மாதமே அவளால் கட்ட முடியவில்லை இந்த மாசம் சேர்த்து வேறு கட்டியாக வேண்டும் எப்படி என்று யோசித்தவள்,, தந்தையின் சம்பள பணம் வர இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது என்பதால்..
நேரம் கூட பார்க்காமல் பகதூர் சிங்கிற்கு மெசேஜ் அனுப்பினாள்.. ‘அப்பா சம்பள பணம் அனுப்ப முடியுமா சார்’?, என்று..
பகதூர் சிங் அப்போது தான் வீடு வந்து சேர்த்தவர் சீதாவின் மெஜேஸ்சை பார்த்தவர்..உடனே ‘என்ன விசயம் மா எவ்வளவு பணம் வேணும்’ என்று பகதூர் மெஜேஸ் அனுப்பி கேட்க’..
‘சம்பளம் பணம் மட்டும் போதும் சார்’ என்றாள்….
உடனே 15 ஆயிரம் அனுப்பி வைத்திருந்தார்,,
கண்ணனின் சம்பளம் 30,000 ரூபாய், அவர்கள் தம்பி பிரபு படிப்பிற்காக வாங்கியிருந்த 5 லட்சம் கடனுக்காக மாதம் 15 ஆயிரம் பிடித்துக் கொண்டு மீதி 15,000 ரூபாய் கொடுப்பார்..
முதலில் தம்பியின் கேன்டீன் பீசை, ஜீபே மூலம் இரண்டு மாதங்களுக்கு சேர்த்து கட்டியவள், அந்த பில்லை கேன்டீன் ஓனருக்கு மெஜேஸ் அனுப்பிவிட்டு, மீதம் இருந்த பணத்தை தன் காருக்கு பெட்ரோல் போட்டு விட்டு இரவு சவாரிக்கு சென்றாள்..
பணத்தை எப்படி ரெடி பண்ண வேண்டும் என்று ஒரு முடிவு எடுத்தவள் விடியற்காலையில், தன் தோழி அழகு மலருக்கு போன் செய்து இருந்தாள்..
போனை எடுத்தவள் “சீதா கிளம்பிட்டியா? என்று அழகுமலர் கேட்க…
“எங்க கிளம்பா மலர்? நம்ம ஒரு கணக்கு போட்டா நம்மளுக்கு மேல ஒரு திட்டம் நடக்குது என்ன செய்ய” என்று தோழியிடம் புலம்ப..
“என்னடி என்ன ஆச்சு?” என்று அழகு மலர் கேட்க..
” ஒரு வாரத்துக்கு நான் காலேஜ் வரல மலர். தம்பிக்கு பீஸ் கட்ட கொஞ்சம் பணத்தேவை அதனால கார் ஓட்ட போறேன்” என்று சொல்ல..
“எவ்வளவு பணம் தேவை டி நான் தரேன் நீ காலேஜுக்கு வா” என்று மலர் சொல்ல.
“நீ எனக்கு ஏற்கனவே எவ்வளவோ செஞ்சிட்ட மலரே,, இது நான் பார்த்துக்கிறேன்,, நீ ஒரு வாரம் நான் காலேஜுக்கு வர முடியாதுன்னு மட்டும் காலேஜில் சொல்லு,, எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, சமாளி” என்று கூற..
“எவ்வளவு பணம் வேணும் சொல்லு சீதா நான் தரேன், இல்லன்னா அப்பா கிட்ட கேட்டு கூட வாங்கி தரேன் நீ வேலைக்கு வாடி”.. என்றாள்…
“நீ சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம் மலரே, இந்த மாதிரி பிரண்டு கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் இந்த நட்பு எப்பவுமே இருக்கணும்,, எல்லாத்துக்கும் ஒரு அளவு தான் மலர்,, நான் பாத்துக்கிறேன், முடியலன்னா உன்கிட்ட கேட்குறேன்” என்று கூற..
“போடி உனக்கு எப்ப தான் இந்த கஷ்ட காலம் முடியுமோ, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு,”என்றவள்..
திரும்ப எதையோ யோசித்த மலர்,, “நீ மிதுன ராசி தானே சீதா உனக்கு இந்த சனிப்பெயர்ச்சி ரொம்ப சூப்பரா இருக்கும் சீதா, பணம் கொட்ட போகுது, பாரு” என்று மலர் சொல்ல…
“காமெடி பண்ணாத மலரே, பணம் கொட்ட போகுதா? நீ வேற நானே அஞ்சாயிரம் பத்தாயிரத்துக்கு கஷ்டப்பட்டேன் இப்ப லட்சக்கணத்துல வந்து நிக்குது, அந்த பணத்தை சேர்க்க நான் ஒரு வாரம் கண்முளிச்சு விடிய விடிய வண்டி ஓட்டணும் நீ வேற சும்மா இரு மலர்?”.. என்றாள்..
“நீ வேணா பாரு, உன் கணக்கில் லட்ச லட்சமா பணம் சேரத்தான் போகுது,, அந்த ஜோசியர் சொன்னது பலிக்கத்தான் போகுது” என்று மலர் சொல்ல..
“சரி ஆத்தா உன் வாய் மூகூர்த்தம் பழிக்கட்டும்” என்று சீதா சொல்லி சிரிக்க ..
“உடம்பைப் பார்த்துக்கோ கெடுத்துக்காத சீதா “என்று சொல்லி போனை வைத்தவள்..
சீதாவுக்கு எப்ப தான் விடிவு காலம் வருமோ என்று கடவுளை வேண்டிக் கொண்டாள் அழகுமலர்..
அந்த நள்ளிரவு நேரத்தில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் எப்படியாவது ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணம் சேர்க்க வேண்டும் என்று விடிய,விடிய கார் ஓட்டிக்கொண்டிருந்தாள் சீதா…..
error: Content is protected !!