Skip to content
Post Views: 115
அத்தியாயம் – 12(2)
ஒருமுறை எழிலனின் நண்பர்கள் பேசிய பேச்சில் நிலவன் அவர்களை அடிக்கப் பாய்ந்தான். அப்போதுதான் அங்கே வந்த எழிலன் நிலவனின் கைகளைப் பிடித்து தடுத்து நிறுத்தினான்.
நிலவன் முறைக்க, எழிலன் “நிலவன், என்ன பிரச்சினை இருந்தாலும், கை வீசறது தப்பு. இப்போவே பிரின்சிபால் கிட்டே கம்ப்ளைண்ட் பண்ண போறேன்” எனக் கூறினான்.
“போய் கம்ப்ளைண்ட் பண்ணு. எனக்கு எந்தப் பயமும் இல்லை” என்றான் நிலவன்.
Advertisement
“சஸ்பெண்ட் பண்ணினானாலும் பயம் இல்லையா?”
“ஹ. சஸ்பெண்ட்டா. முதலில் உன் ஃபிரண்ட்ஸ தான் பண்ணுவாங்க. அது உனக்கு ஓகே வா?”
எழிலன் தன் நண்பர்களைத் திரும்பிப் பார்த்தான். எல்லாரும் தலைக் குனிந்தனர்.
Advertisement
“என்ன பண்ணித் தொலைச்சீங்க?”
Advertisement
“எப்போதும் போல் இவங்க அண்ணன் தங்கச்சி படம் காட்டுறது பற்றி தான் கேலி பண்ணிக்கிட்டு இருந்தோம் எழில். அதுக்குத் தான் கை ஓங்குறான்” என்றனர் எழிலனின் நண்பர்கள்.
“டேய், உண்மையைச் சொல்லுங்கடா.” என நிலவன் மிரட்ட, எழிலன் யோசனையோடு “என்ன சொன்னாங்க நிலவன்?” எனக் கேட்டான்.
நிலவன் எழிலனுக்குப் பதில் கூற விரும்பவில்லை. ஆனாலும் இவர்களின் அட்டகாசம் அடக்க எழிலனால் மட்டுமே முடியும் என்பதால் சொல்ல ஆரம்பித்தான்.
Advertisement
“ம். இப்படி எல்லா இடத்துக்கும் காவல் காத்துகிட்டுப் போறீயே? அவளுக்குக் கல்யாணம் ஆனா என்ன பண்ணுவனு கவலைப்படறான் உன் ஃபிரண்ட்ஸ். இதை நான் டீசண்ட்டா சொல்றேன். அவனுங்க கேவலமா கேட்டானுங்க” என்றான் நிலவன்.
இதைக் கேட்டதும் எழிலனுக்கும் கோபம் வந்தது. “உங்களுக்கு எல்லாம் அறிவு இல்லை. இப்படியா பேசுவீங்க. என் ஃபிரண்ட்ஸ்னு வெளிலே சொல்லாதீங்க. எனக்குத் தான் கெட்ட பெயர். நீங்க கம்ப்ளைண்ட் பண்ணுங்க நிலவன். நான் விட்னெஸ் பண்ணறேன்” என்றான்.
நிலவன் “நீயும் அவங்க கூட்டாளி தானே. நடிக்காத. உன் சப்போர்ட்டால தான் அவங்களுக்கு என்ன வேணும்னாலும் செய்யலாம்னு தைரியம் வருது” என எழிலனிடம் பாய்ந்தான்.
“சாரி நிலவன். காலேஜ் லைப்னா சில எஞ்சாய்மெண்ட் இருக்கும்னு தெரியும். அதனால் சில விஷயங்களைக் கண்டும் காணாமல் விட்டுடுவேன். ஆனால் இன்னிக்கு இவங்க பேசினது ரொம்பவே தப்பு. நீங்க கம்ப்ளைண்ட் பண்ணினால், நான் இவங்களுக்கு சப்போர்ட் பண்ண மாட்டேன்” என்றான் எழிலன்.
நிலவன் வெறுப்புடன் பார்க்க, எழிலன் நண்பர்கள் “எழிலா, சாரி டா. பிளீஸ். அப்பா கிட்டே சொல்லாதே. பிளீஸ். இனிமேல் இப்படிப் பண்ண மாட்டோம்” என்றனர்.
எழிலன் “நோ வே. என்ன பேச்சுடா இது எல்லாம்? படிச்சவங்க நடந்துக்கிற முறையா இது? அப்பாக்குத் தெரிஞ்சா, என்னைத் தான் திட்டுவார்” எனத் தன் நண்பர்களிடம் சண்டை போட்டான்.
“சாரி சாரி எழில். இது தான் லாஸ்ட் டைம். இனிமேல் சத்தியமா யாரையும் இப்படிப் பேச மாட்டோம். பிளீஸ் சாரிடா” என்றனர் நண்பர்கள்.
எழிலன் பதில் கூறாமல் நிற்க, நிலவன் “இது தான் லாஸ்ட் வார்னிங். என்னை என்ன வேணும்னாலும் பேசுங்க. டோன்ட் மைண்ட். என் சிஸ்டர் பற்றி ஒரு வார்த்தைப் பேசினாலும், சும்மா இருக்கமாட்டேன். பி கேர்ஃபுல். எழிலன் இது உனக்கும் சேர்த்துத் தான்.” எனக் கூறிவிட்டுச் சென்று விட்டான்.
எழிலனும் தன் நண்பர்களை முறைத்துவிட்டுச் சென்று விட்டான். நேராக நிலவனைத் தேடிச் செல்ல, நிலாவோடு பேசிக் கொண்டிருந்தான் நிலவன்.
எழிலன் அருகில் செல்லும்போது “அண்ணா, நீ எதுக்கு அவங்களை அடிக்கப் போன? உனக்கு சஸ்பென்ஷன் வந்தா, உன்னோட கேரியருக்குத் தானே பிளாக் மார்க் ஆகும். நேரே போய் கம்ப்ளைண்ட் பண்ணிட்டு வர வேண்டியது தானே?” என நிலவனிடம் கூறிக் கொண்டிருந்தாள் நிலா.
நிலாவின் குரலில் வருத்தம் இருந்த போதும் கோபமே அதிகமாகத் தெரிந்தது. சத்தமும் வழக்கத்தை விட பெரிதாக இருந்தது.
எழிலன் மனதிற்குள் ‘பார்றா. இந்த அழகிக்குள்ளே இப்படி ஒரு புயலா’ என நினைத்தான்.
நிலாவின் கேள்விக்கு நிலவன், “அவனுங்க என்னை டிரிக்கர் பண்ணத் தான் இப்படிப் பேசினாங்க. டிபார்ட்மெண்ட்ஸ் உள்ளே நடக்கிற சண்டை. நான் டிரிக்கர் ஆனா, எனக்கு சப்போர்ட் பண்ணி எங்க டிபார்ட்மெண்ட் பசங்க வருவாங்க. அதைப் பெரிசாக்கி, அவங்க தான் மாஸ்னு ஸீன் போட பிளான் பண்ணறாங்க. இதில் தேவையில்லாமல் உன்னை இழுத்து விட எனக்கு இஷ்டம் இல்லை. அதான் பிரின்சிபால் கிட்டே போகலை” என்றான்.
இது ஏற்கனவே எழிலனுக்கும் புரிந்து இருந்ததால் தான், அங்கேயே அவர்களை நன்றாகத் திட்டி விட்டு வந்தான்.
“ம்” என நிலா பதில் கூற கூற, நிலவன் யோசனையோடு “எதுக்கும் இந்த கல்சுரல் ஆக்டிவிட்டிலே எல்லாம் கொஞ்ச நாள் சேராம இருக்கியா?” எனக் கேட்டான்.
நிலாவிற்கு திக்கென்றது. பொதுவாக நிலவன் இது போல பேச மாட்டான். நன்றாகவே ஊக்கப்படுத்துவான். முதல் முறையாக இப்படிக் கேட்கவும், அவளுக்கு என்னப் பதில் கூறுவது என்று தெரியவில்லை. அண்ணனிடத்தில் மறுக்கவும் மனமில்லை. அதற்காக அவன் சொல்வது போல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை நிறுத்தவும் இஷ்டமில்லை. நிலா தயங்கி நிற்கும் வேளையில் தான் அவர்களின் முன்னால் வந்தான்.
“நிலவன்” என எழிலன் அழைக்க, நிலா அண்ணன் பின் மறைந்தாள்.
என்ன என்பது போல பார்க்க “வெரி சாரி நிலவன். இந்த க்வாரல் எல்லாம் விட்டுட்டு, நல்ல ஃபிரண்ட்சா இருப்போமே” என்றான் எழிலன்.
நிலவனோ “ம்ச். அது எல்லாம் தேவையில்லை. எப்போதும் போல இருப்போம்” எனக் கூறிவிட்டு கிளம்பு என்பது போல பார்த்தான்.
எழிலனோ நிலவனை விட்டுவிட்டு நிலாவிடம் “நிலவழகி, இந்த பிரச்சினை எல்லாம் அவங்களுக்குள்ளே தான். நீ ஹிஸ்டரி டிபார்ட்மெண்ட் ஸ்டூடண்ட். நமக்குள்ளே எந்த சண்டையும் வேண்டாம் ஓகே” எனக் கேட்டான்.
நிலா சற்றுத் தயங்கினாலும், “என் அண்ணனை அப்படிப் பேசினாங்க. அவங்க கூட என்னாலே ஃபிரண்ட்ஸ்சா இருக்க முடியாது” என்றாள்.
“ஃபிரண்ட்சா இருக்க வேண்டாம். அதுக்காக எதிரியாவும் பார்க்க வேண்டாம். தர்ட் பெர்சன் மாதிரி விட்டுடுங்க. இந்த காலேஜ்லே எந்த மேஜரும் அவங்க அவங்க டிபார்ட்மெண்ட்ட விட்டுக் கொடுக்க மாட்டாங்க. இந்த இஷ்யுவால் நீ வெளிப்படையா காட்டினா, மத்த ஸ்டூடண்ட்ஸ்கும் தெரிய வரும். அப்புறம் நமக்குள்ளேயே கேங் வார் மாதிரி ஆகிடும். நான் உன்கிட்டேயும் அந்த பசங்கள மன்னிப்பு கேக்கச் சொல்றேன். இனிமேல் இது மாதிரி பேசவும் மாட்டாங்க. அதுக்கும் நான் காரன்டி.” என்றான் எழிலன்.
நிலா பதில் கூறுமுன் நிலவன் “யாரும் என் தங்கச்சி கிட்டேப் பேச வேண்டாம். நிலா நீயும் இதைப் பற்றி வேறே யாருகிட்டேயும் பேசாத. அண்ட் அவங்க கிட்டே தள்ளி இரு. அது போதும்.” எனக் கூறினான்.
மீண்டும் எழிலன் பக்கம் திரும்பி “உனக்கும் அதான் சொல்றேன். உங்க கேங் மட்டுமில்லை, நீயும் அநாவசியமா என் சிஸ்டர் கிட்டேப் பேச்சு வச்சுக்க வேண்டாம். உன்னோட டிபார்ட்மெண்ட் ஸ்டூடண்ட் லீடர் பொசிஷன் எல்லாம் காலேஜ் சம்பந்தபட்ட இடத்தில் மட்டும் இருக்கட்டும். இப்போ கிளம்பு” என்றான் நிலவன்.
எழிலனுக்கும் கோபம் வந்தது. அவனின் ஃபிரண்ட்ஸ் பேசிய முறை தப்பு என்பதால் மட்டுமே இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசினான் எழிலன். ஆனால் நிலவனோ தன்னை ஒரு எதிரியாகப் பார்ப்பது மட்டுமில்லாமல், நிலாவையும் மணிபுலேட் செய்வது அதிகப்படியாகத் தெரிந்தது. இந்த அதிகப்படியான அக்கறை தான் இத்தனைக் கேலிகளுக்கும் காரணம் என நிலவனுக்குப் புரிகிறதா என யோசித்தான். நிலவனின் பேச்சில் சத்தியமாக அவனுக்குப் புரியப்போவதில்லை எனவும் உணர்ந்தான் எழிலன்.
நிலவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு “நிலவழகி, உன் அண்ணன் இப்படித் தான் பேசுவார். பட் நீ கொஞ்சம் செல்ஃப்பா இருக்க முயற்சி பண்ணு. அது இப்போ மட்டுமில்லை. ஃப்யூச்சர்லேயும் உனக்கு நல்லது. இந்த கல்சுரல்ஸ்லே கலந்துக்கிறது உன்னோட இஷ்டம். அதில் உன் அண்ணன் உட்பட யாரும் தலையிட முடியாது. அதோட உன் அண்ணா இந்த செமெஸ்டெர் முடிஞ்சதும் காலேஜ் விட்டுக் கிளம்பிடுவார். அடுத்த ரெண்டு வருஷம் நீ இங்கே தான் படிச்சு ஆகணும். யாரையும் பகைச்சுக்க வேண்டாம்னு எனக்குத் தோணுது. அதான் சொல்றேன். அப்புறம் உன் இஷ்டம். பை” எனக் கூறிவிட்டுச் சென்று விட்டான் எழிலன்.
“இவர் பெரிய இவரு? அட்வைஸ் பண்ண வந்துட்டாரு. நிலா, அவன் சொல்றது எல்லாம் மைண்ட் பண்ணிக்காத. நான் காலேஜ் விட்டுக் கிளம்பினாலும், உனக்கு ப்ரொடெக்ஷன் ஏற்பாடு பண்ணிட்டுத் தான் போவேன். நான் சொல்றத மட்டும் கேள்” என்றான் நிலவன்.
நிலா அமைதியாக இருக்க, தான் சொன்னதை ஆமோதிக்கிறாள் தன் தங்கை என நினைத்துக் கொண்டான் நிலவன். பின் நிலாவை ஹாஸ்டலில் விட்டுவிட்டு தன் இடத்திற்குச் சென்றான் நிலவன்.
நிலா எழிலன் பேசியதையே நினைத்துக் கொண்டிருந்தாள். எழிலன் கூறுவது போல அனைத்திற்கும் அவள் அண்ணனைத் தேடுவதில்லை. ஆனால் எல்லாவற்றிலும் நிலவனின் பங்கும் நிச்சயம் இருக்கும். சின்னதாக ஒரு பொருள் வாங்க வேண்டும் என்று நினைத்து இருப்பாள். எப்படியோ நிலவனுக்குத் தெரிந்து விடும். அதை அவனே வாங்கிக் கொண்டு வந்து விடுவான். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது ஆளுமையாகத் தெரியும். ஆனால் நிலவனின் பாசம் மட்டுமே நிலாவிற்கு தெரியும்.
நிலா எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். தோழிகள் அழைத்தாராகள் என பப் முதற்கொண்டு சென்றிருக்கிறாள் ஃபிரண்ட்ஸ் பப் கூப்பிட்டதை நிலவனிடம் கூறியபோது, ஏன், எதற்கு என்று எல்லாம் நிலவன் கேட்கவில்லை. தானே அழைத்துச் சென்று தோழிகளோடு அவளை அனுப்பி வைத்தான். பின் சற்றுத் தள்ளி அமர்ந்து அவனின் ப்ராஜக்ட் வேலை ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்.
நிலா தோழிகளோடு ஆடியதை எல்லாம் நிலவன் பெரிது படுத்தவிலை. தன் பார்வை வட்டத்தில் நிலா இருக்குமாறு பார்த்துக் கொண்டான். அவ்வளவுதான்.
நிலாவின் தோழிகளும் அவளைக் கேலி செய்தனர் தான். அண்ணனை துணைக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கறாயே என்றார்கள். அதற்கு நிலாவின் பதில் “வீட்டிற்கு தெரியாமல் எதுவும் செய்ய எனக்கு விருப்பம் இல்லை. ஃபர்ஸ்ட் டைம் வருவதால் அண்ணன் கூட வந்திருக்கிறார். என்னால் சமாளிக்க முடியும்னு கான்ஃபிடன்ஸ் வந்துவிட்டால், என்னை தனியாகவே அனுப்பி வைப்பார். நீங்க கேலி பண்ணற அளவு இதில் எதுவும் இல்லை” எனக் கூறினாள்.
ஆனால் இரண்டு முறை பப் சென்று வந்தவளுக்கு அதில் அத்தனை பிடித்தம் இல்லை என்பதால் அடுத்தடுத்து கூப்பிடும்போது தோழிகளிடம் நிலாவே மறுத்து விடுவாள்.
நிலவனை நன்றாகப் புரிந்துக் கொண்டவள் நிலா. இந்த கல்லூரியும், ஊரும், மனிதர்களும் நிலாவிற்கு முற்றிலும் புதியவர்கள். அதனால் தான் நிலவன் நிலாவோடு பாதுகாப்பாக சென்று வருகிறான். பல நேரங்களில் மற்றவர்களின் கேலிகளை இருவரும் கண்டு கொள்வதில்லை.
ஆனால் இன்றைக்கு எழிலனின் நண்பர்கள் பேசிய வார்த்தைகள் இருவரையும் ரொம்பவேக் காயப்படுத்தியது. அதற்காக நிலவன் கூறிய கட்டுப்பாடும் நிலாவிற்கு பிடிக்கவில்லை.
நிலாவிற்கு எழிலன் மீது ஒரு பிடிப்பு உருவாகியிருந்தது. அவனோடு பழக ஆவல் இருந்தது.
எழிலன் முதுகலை படிப்பில் இருப்பதால், இளங்கலைப் படித்துக் கொண்டிருக்கும் நிலாவைத் தினமும் பார்ப்பது எல்லாம் நடக்காது. அவர்கள் டிபார்ட்மெண்ட் வளாகத்திற்குள் இங்கும் அங்கும் போகும்போது பார்ப்பது தான். ஆனால் நிலாவிற்கு அது போதவில்லை.
உண்மையில் நிலா கல்சுரல்ஸ் அதிகம் கலந்துக் கொள்ளக் காரணமே எழிலன் தான். முதல் முறை இருவரும் ஒன்றாக மேடை ஏறி இருந்தாலும், அதற்கு பின் அப்படியான வாய்ப்புகள் நிலாவிற்கு கிடைக்கவில்லை. ஆனால் கல்சுரல்ஸ் பொறுப்பாளர் எழிலன் என்பதால், அது விஷயமாக எழிலனைச் சந்திக்க முடிந்தது. அதனால் தான் கல்சுரல்ஸ் வேண்டாம் என நிலவன் கூறியதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நிலவனின் கோபம் புரிந்தாலும், எழிலன் மீது அதைக் காட்டுவதில் நியாயமில்லை என நினைத்தாள் நிலா. அதை நிலவனிடம் கூறவும் தயக்கம்.
அண்ணனை எப்படிச் சமாதானப்படுத்துவது என யோசிக்க ஆரம்பித்தாள் நிலா.
-தொடரும் –
error: Content is protected !!