சின்னஞ் சிறு பூவே 23
பூவே 23
இரவு நேர சாப்பாட்டு தட்டை எடுத்துக்கொண்டு பேத்தி அருகே அமர்ந்தார்.
Advertisement
“பாட்டி, நா வந்து சோறு போட்டுக்க போறேன். நீங்க… நீங்க எதுக்கு முடியாத நேரத்துல வந்திருக்கிங்க?” என்று சொல்லிக்கொண்டே அவரை கைபிடித்து உட்கார வைத்தாள்.
“இஞ்சி நாளைக்கு நீ உள்ள வரக்கூடாது த்தா,” என்றதும்,
Advertisement
Advertisement
முகத்தை சுருக்கி, “என்னை வீட்டை விட்டு ஒதுக்கி வச்சிட்டிங்களா, பாட்டி?” என்றாள் சின்ன குரலில்.
“இல்லத்தா, நீ வீட்டுக்கு விளக்காகி ஒக்காந்திருக்க. இந்த இஞ்சி நாள் கழிச்சு, தலைக்கு மூணு எண்ணெய் வச்சு குளிச்சிட்டு தான் உள்ள வரனும்,” என்று பேத்தியை பார்க்க,
Advertisement
“அப்ப எனக்கு துணி எல்லாம் யாரு எடுத்து தருவா, பாட்டி? இந்த தாவணி பாவாடை ஒரு மாறி நழுவிட்டே இருக்கு,” என்று தன் ஆடையை சரி செய்தாள்.
“உனக்கு என்ன வேணும்னு சொல்லுத்தா, நா எடுத்து தரேன்,” என்று திரும்பி பார்க்க,
அங்கு சத்தமில்லாமல் வந்து நின்றான் வெற்றி. அவன் கைகளில் நாலைந்து இளநீ இருக்க,
“இப்ப எதுக்குயா எளநீ கொண்டாந்த?” என்ற பாட்டியின் குரல் கேட்டு, வேல்விழியும் எட்டி பார்த்தாள்.
மடித்து கட்டியிருந்த வேஷ்டி, அவன் காலில் இருந்த சுருள் முடிகளை கண்டு பார்வையை திருப்பிக்கொண்டாள்.
“காலையில் வேலு கொடுக்க, அப்பத்தா. மதியத்திலிருந்து சுருண்டு படுத்திருந்தா. மதியம் நாத்தாங்களுக்கு தண்ணீ பாய் விட்டு, வெட்டி வச்சேன்,” என்று குளியலறைக்குள் சென்று முகம், கை, காலை கழுவிக்கொண்டு மாடிக்கு படியெறினான்.
‘இவரு மட்டும் வேகமா படி ஏறலாம். நா ஏறினா மட்டும் கை, கால் எடையும் சொல்லுறது,’ மாமனை மனதுக்குள் திட்டிக்கொண்டாள்.
“எங்கத்தா, பார்வை. சாப்புடு. நேரத்துக்கு படுக்க வேணாமா?” என்ற பாட்டியை பாவமாக பார்த்தாள்.
“என்னத்தா?”
“பசிக்குல, பாட்டி. வயிறு திம்னு இருக்கு,” என்றாள்.
“என்னத்தா ஆச்சு? எங்க வவுத்த காட்டு,” என்று இடுப்பு துணியை விலக்கி பார்த்தவருக்கு கை சுடு தெரிந்தது.
“சூட்டை கெளப்பி விட்டுடிச்சு. நீ உள்ளுக்கு படுத்தா, நா வெளக்கெண்ணெய் தேய்ச்சு வுடுறேன்னு,” சொல்லி,
கைகளை ஜனனல் பக்கம் எட்டி கண்ணாடி பாட்டிலை எடுத்தார்.
“ஐய்ய, பாட்டி! இது வழவழன்னு இருக்கும். துணியெல்லாம் பிசுபிசுன்னு இருக்கும்,” என்று முகத்தை சுழித்தாள்.
“இது தெய்ச்சா சீக்கிரம் கேக்கும்த்தா,” என்றதும்,
“ம்ஹூம்,” என்று தலையாட்டி, “நா வேணா வெந்தயம் போட்டு தண்ணீ குடிச்சிக்கிறேன், பாட்டி.”
அதே நேரம், ராமையாவும் கயித்து கட்டிலை கொண்டு வந்து பின்பக்கம் போட்டார்.
“எதுக்குய்யா கட்டிலை இங்க கொண்டு வந்து போடுற?” என மகனிடம் கேட்க,
“காவலுக்கு,” என்று சைகை செய்தார்.
இங்கு இவர்களின் கூட்டணி கண்டு காளியம்மாவுக்கு தான் வயிறு எரிந்தது.
காலையிலிருந்து இவர்கள் பண்ண கூத்தை கண்டு, இப்போது இவளுக்கு காவலுக்கு.
‘கணவன், மாமியார் அமர்ந்திருக்க, தன் மகன் அங்கு இல்லாதது தான் பாக்கி,’ என்று முணங்கிகொண்டார்.
பாவம், இவர்களுக்கு எங்க தெரியும்.
‘அவனும் தன் படுக்கையை படிக்கு மாற்றிருந்தான்’ என்று.
அனைவரும் அவரவர் இடத்தில் படுக்க,
இவளுக்கு தூக்கம் தூரபோனது. புரண்டு புரண்டு படுத்தும், தூக்கம் வரவேனா என்று சண்டித்தனம் செய்தது.
அவளின் கால் கொலுசு சத்தம் பெரியவர்களின் அஞ்சலிக்கு கேட்கவே இல்லை.
மாடியில் உறக்கத்தை தொலைத்தவனுக்கு நன்றாகவே கேட்டது.
கொஞ்ச நேரத்தில் அவள் தூங்கிடுவாள் என்று நினைக்க,
நேரம் செல்ல செல்ல அவள் தூங்கமால், மெல்ல மெல்ல தன் பாதங்களை எடுத்து வைத்து வந்தாள்.
பின் பக்கம் சிறு குண்டு பல்பு வெளிச்சம். எப்பவோ மங்கி போன தவுஸன் வாட்ஸ் பல்பு, இப்போது ஹன்றட் வாட்ஸ் பல்பு வெளிச்சம் கூட இல்லை.
கொள்ளை பக்கம் கும்மிருட்டு. இப்போது அவளுக்கு பயத்தை தான் தந்தது.
காளை கொம்பில் கட்டிருந்த மணி சத்தம், அவளுக்கு இன்னும் பயத்தை தான் தந்தது.
‘போய் பாட்டியை எழுப்பி கூட்டிட்டு போகலாம்,’ என்று பின் பக்கம் திரும்ப, யார் மேல் இடித்தது தெரிந்து,
“ஐய்யோ!” என்ற சத்தம் அவன் கைகளுக்குள்ளே அடங்கி போனது.
“எதுக்கு, மருதாணி, கத்துற? உன்னை பாத்து நா தான் மோகினி பிசாசுன்னு கத்தனும்,” என்று அவள் காதோரம் குனிந்து சொன்னான்.
தன் மாமன் குரல் கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்டவள்,
“லூசு மாமா… இப்படி தான் சொல்லாம வந்து பயமுறுத்துற,” என்று அவன் நெஞ்சில் அடித்தாள்.
“சூ… சத்தம் போடாத. இராத்திரில எங்க தனியா போற நீ?” என்றான்.
அப்போது தான் தன் அடிவயிற்றின் அவசரம் ஞாபகம் வர, தன் சுண்டு விரலை காட்டினாள்.
“பாட்டியை எழுப்பி கூட்டிட்டு போகலாம் தானே!”
“இல்லை, மாமா. பாட்டி காலையிலிருந்து நடந்தது, கால் வீக்கமா இருக்கு. அசந்து தூங்குறாங்க. எழுப்ப மனசு இல்லை. அதான் நானே வந்தேன்,” என்றாள்.
“சரி, போயிட்டு வா.”
“எதே… உங்களை காவலுக்கு வச்சிக்கிட்டு நா போகனுமா?” என்று அவன் முகம் பார்த்தாள்.
அவள் தலையிலே லேசாக இடித்து, “நீ போ. நா திரும்பிக்குறேன்,” என்றான்.
மாமன் சொன்னாலும், என்னவோ மாதிரி இருக்க…
அவனையே பார்த்தபடி நின்றாள்.
“என்ன, மருதாணி?”
“மாமா, நீங்க உள்ளுக்கா நிக்குறீங்களா?” என்றாள் பாவமாக.
“சரி,” என்று அவன் நகர்ந்து இருட்டுக்குள் மறைந்தான்.
இவளும் இன்னும் இருட்டான பகுதிக்கு சென்று தன் வேலையை முடித்துக்கொண்டு அவனிடம் வந்து நின்றாள்.
“தேங்க்ஸ், மாமா.” குளியலறைக்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்தாள்.
தன் இடத்துக்கு போக நடந்தவளின் கை பிடித்தான்.
“என்னாச்சு, மாமா?” என்று அவன் முகம் பார்த்தாள்.
“தெனமும் இப்படி தான் போயிட்டு வருவியா?”
“இல்லை, மாமா. தூங்க போறதுக்கு முன்னாடி போயிட்டு வந்திடுவேன். இராத்திரி தண்ணீ நிறைய குடிச்சிட்டேன். அதான் இப்படி இராத்திரில போற மாறி ஆயிடிச்சு,” என்றாள்.
“சரி, நீ போய் படு. மறுபடியும் வந்தா, அப்பத்தா வை கூட்டிட்டு போ!” என்றான்.
சரின்னு சொல்லி இவளும் போய் படுத்துக்கொள்ள,
இங்கு வெற்றிக்கு தான் தூங்கா இரவாகி போனது.
*******
அடுத்து ஒரு வாரம் கழிச்சு, வேல்விழிக்கு திருஷ்டி சுத்தி, கருப்பு கயிறு கட்டி, பள்ளிக்கூடம் அனுப்பி வைத்தார்.
முனிஸ்வரி, கலையரசி, விஜயா மூவரும் சேர்ந்து அவளைச் சூழ்ந்துக்கொண்டனர்.
“ஏண்டி, என்னை இப்படி பாக்குறீங்க?” என்று சிரித்துக்கொண்டே கேட்க,
“ஏய், சொல்லு யாரு நீ! உண்மையிலே நீ எங்க அழுமூஞ்சி வேல்விழி தானா? நம்ப முடியலையே!” என்று சுற்றி வந்து விஜயா கேட்டதும்,
அவள் தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்தாள்.
“நா அழுமூஞ்சியாடி, நீ தாண்டி சிடுமூஞ்சு!” என்று மீண்டும் ஒரு கொட்டு வைக்கப் போனாள்.
“அடியே! காப்பாத்துங்கடி இந்த இராட்சஷி கிட்ட இருந்து!” என்று கத்தினாள் விஜயா.
முனிஸ்வரி, அவள் கையைப் பிடித்து, “எதுக்கடி கொட்டுற அவளை? சும்மா விளையாட்டுக்கு சொன்னதுக்கு நீ ஏண்டி கோவப்படுற?” என்றாள்.
“ஏய், சாரிடி. சும்மாதான் கொட்டனும்னு நெனைச்சேன். நீ பேசுனதுல வேகமா கொட்டிட்டேன்,” என்று விஜயாவை அணைத்துக்கொண்டாள்.
“உன் கோவத்தை கொஞ்சம் அளவோடு காட்டுடி. என் மண்டை தாங்காது,” என்றாள் அவளும் அணைத்தபடி.
“மேடம் ரொம்ப பளிச்சுன்னு இருக்காடி, உஜாலாவுல வெள்ளை சட்டையை நனைச்ச மாறி,” என்று அடுத்து கலையரசி ஆரம்பித்தாள்.
“அடுத்து உன் மண்டை உண்டை வாங்க ரெடியா இருக்கு போல,” என்று கையை முறுக்கினாள் வேல்விழி.
“ஆத்தி!” என்று கலையரசி தலையில் கை வைத்துக்கொண்டாள்.
“என்ன, காலையிலே சிரிப்பு சத்தம் பலமா இருக்கு?” என்று சொல்லிக்கொண்டே ஆங்கில ஆசிரியர் உள்ளே வந்தார்.
“குட் மார்னிங் சார்!” என்று மொத்த வகுப்பும் எழுந்து வணக்கம் வைத்தது.
“குட் மார்னிங். சிட் டவுன்,” என்று, “நா கேட்டதுக்கு இன்னும் பதில் வரலையே!” என்றார்.
கைகளைக் கட்டிக்கொண்டு எழுந்து நின்ற முனிஸ்வரி, “சார், இன்னைக்கு வேல்விழி ஸ்கூலுக்கு வந்துட்டா சார்,” என்று பதில் சொல்ல,
“இனி உங்க நால்வர் சத்தம் தான் கிளாஸ்ல இருக்குன்னு சொல்லு,” என்று ஆசிரியர் சொன்னதும்,
“ஆமா சார்!” என்று மொத்த வகுப்பும் கோரஸாக சொன்னது.
“சரி, சரி. கிளாஸ் எடுக்கலாமா? முழு ஆண்டு பரிட்சை வரப் போகுது,” என்று பாடம் எடுக்க ஆரம்பித்தார்.
“என்னடி, அதுக்குள்ள முழு ஆண்டு பரிட்சை வரப் போகுதா?” என்று மெல்ல குனிந்து கேட்க,
“ஆமாண்டி, டைம் டேபிள் கூட வந்ததாம். தமிழ் டீச்சர் சொன்னாங்க,” என்றாள் விஜயா.
“அவ என்கிட்ட தானே கேட்டா. நா சொல்லப் போறேன். முந்திரி கொட்டை மாறி, நீ ஏண்டி உள்ள வர?” என்றாள் முனிஸ்வரி.
இப்படியாக மாறி மாறி பேசிக்கொண்டுதான் அன்றைய பொழுது வரை இருந்தனர்.
பள்ளிக்கூட பையைத் தூக்கிக்கொண்டு நால்வரும் வர,
“ஏய், அங்க பாருடி, பசங்க படம் பாக்குறாங்க,” என்று கலையரசி சொன்னதும்,
பெண்கள் நால்வரும் ஜன்னல் அருகே நின்றனர்.
கடைசி காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது, இவர்கள் வரும்போது.
அஜித், சிம்ரன் கழுத்தில் தாலி கட்டி முடிஞ்சதும், சுஜாதா அவர்களைப் பார்த்துக்கொண்டே கீழே விழும் காட்சி வர, சிறிது நேரம் கழித்து பாடலுடன் படம் முடிய, கடைசியில் லைன் படித்துக்கொண்டு வந்தனர்.
நம் பெண்கள் அணி, “ச்சே! கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கலாம். படம் பாதியாவது பாத்திருப்போம்,” என்று புலம்பினாள் முனிஸ்வரி.
“விடுடி. மறுபடியும் படம் போடும்போது முழுசா பாக்கலாம்,” என்று சமாதானம் செய்தாள்.
அடுத்தடுத்து மற்ற தோழிகளின் வீடு வர, இவர்கள் இருவரும் தங்கள் வீடு இருக்கும் தெருவில் வந்தனர்.
வேல்விழியை கண்ட ராஜன், கண்கள் மின்ன அவளையே பார்த்திருந்தான்.
“இவன் என்னத்த அப்படி பாக்குறான்?” என்று அருகே வந்த சிவா, அவன் பார்வை போகும் இடத்தைக் கண்டு,
அவன் கண்களை மூடினான்.
கண்ணிலிருந்து கையை எடுத்து விட்டு, “எதுக்குயா என் கண்ணை மூடுன?” என்றான்.
“டேய், உன் பார்வை போற திசையே சரியில்லைன்னு சொல்லிட்டேன். இப்பதான் அந்த புள்ளை பெரியமனியாகிருக்கு,” என்று பதட்டத்தில் உளறினான்.
“எது, வயசுக்கு வந்துட்டாளா?” என்று கண்களை விரித்தவன், “அதான் ஆளு பாக்க புசுபுசுன்னு இருக்கா,” என்றான்.
பக்கத்தில் இருந்தவன், இவன் சொன்னதைக் கேட்டு, துடித்துக்கொண்டிருந்த சோடா, பொறையேறியது.
“அடேய் கொலகார பாவி! உங்கூட சேந்ததுக்கு, என்னை வாங்கிக்கிட்டு அடி வாங்கி கொடுக்கப் போறீயா?” என்று அவன் முதுகிலே ரெண்டு போட்டான் சிவா.
“என்ன, ஒரு மச்சானுக்கு இதைக்கூட செய்ய மாட்டியா நீ?” என்றான் அவனும் அசராமல்.
“இனி உனக்கும் எனக்கும் சங்காத்தமே வேணாம். இனி நீ யாரோ, நா யாரோ!” என்று விடுவிடுன்னு கிளம்பினான்.
“அடேய், குடிச்ச சோடாக்கு காசு கொடுத்துட்டு போயா?” என்று ராஜன் சத்தம் போட,
“போடா, அந்த காசை நீயே கொடு,” என்று ஓட்டம் எடுத்தான்.
ராஜன் நினைச்சது போலவே, வேல்விழிக்கு திருமணம் முடிந்தது.
