Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ – 4

அத்தியாயம்– 4:

பூம்பாறை கிராமத்தின் விளிம்பில், கலெக்டருக்காக அமைக்கப்பட்டிருந்த அந்தத் தற்காலிக முகாம் அலுவலகம், நள்ளிரவிலும் பகல் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.
வெளியில் பார்த்தால் ஒரு சாதாரண கேன்வாஸ் கூடாரம். உள்ளே நுழைந்தால்…
ஒரு போர் அறை!

மீரா ஒரு போர்க்களத் தளபதியைப்போலச் செயல்பட்டுக் கொண்டிருந்தாள். அவள் நெஞ்சுக்குள் வர்மனின் அந்தக் கர்ஜனை இன்னும் கேட்டுக் கொண்டே இருந்தது.

 “இந்த இதயம் எனக்காகத் தான்டீ துடிக்குது!”

அந்தக் கணத்தில், அவனது அந்தக் கர்ஜனையைப் பின்னுக்குத் தள்ளி, “கம் ஆன் மீரா… ஆக்ட் இன் த பிரசென்ட் “ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள்.



Advertisement

அவளது மேஜை முழுவதும் பூம்பாறையின் நிலவரைபடங்கள் விரிந்து கிடந்தன. சர்வே எண்கள், நில வகைகள், நீர்நிலைகள் ….எல்லாம் வெவ்வேறு நிறக் குறியீடுகளால் குறிக்கப்பட்டிருந்தன. சிவப்பு வட்டங்கள். நீல கோடுகள். மஞ்சள் கேள்விக்குறிகள்.

மீரா நிற்கவில்லை. உட்காரவில்லை.
வரைபடத்தின் முன் குனிந்தபடியே நின்றாள். ஒரு கையில் சிவப்பு மார்க்கர். மறு கையில் போன். போனில் யாரோ பேசிக்கொண்டிருந்தனர்.அவள் கேட்டுக்கொண்டே, வரைபடத்தில் இன்னொரு சிவப்பு வட்டம் போட்டாள்.

“சர்வே நம்பர் 247/3 … யாரு பேர்ல இருக்கு?”

Advertisement

“மேடம், ஓனர்ஷிப் இன்னும் கன்ஃபார்ம் ஆகலை. லேண்ட் ரெகார்ட்ஸ் ஆபீஸ் சொல்றாங்க.”

Advertisement

“நாளைக்கு காலை எட்டு மணிக்குள்ள என் மெயில்ல வேணும். குட் நைட்.”போனை டேபிளில் வைத்தாள்.
லேப்டாப் திரையில் ஒரு ஸ்ப்ரெட்ஷீட்.”வெறும் நிலம்”, “தரிசு”, “கைவிடப்பட்ட தோட்டம்” என்று தட்டச்சு செய்யப்பட்டிருந்தது.

மீரா இந்த நிலங்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
“இங்கே வழி இருக்கு. கண்டுபிடிக்கணும்.”
கூடாரத்தின் துணி விலகியது.
“மேடம்.”
வேலாண்டி தாத்தா நுழைந்தார். அவர் கையில் ஒரு மண் பானை … உள்ளே சுடச்சுட கஞ்சி.

மீரா நிமிர்ந்தாள். “தாத்தா, நீங்க ஏன் வந்தீங்க?”
“உங்களுக்கு ஓய்வு வேண்டாம்னு இருக்கும்போது, என்னோட களைப்பு ஒரு விஷயமா?” என்று சொல்லிக்கொண்டே டேபிளின் ஓரத்தில் பானையை வைத்தார். “சாப்பிட்டீங்களா?”
மீரா ஒரு நொடி யோசித்தாள். “சாப்பிட்டோமா?”காலைல ஒரு பிஸ்கட் சாப்பிட்டேன்.”
வேலாண்டி தலையசைத்தார். “நம்ம ஊரு பச்சரிசி கஞ்சி. பாசிப்பருப்பு. அவ்வளவுதான். கொஞ்சம் சாப்பிடுங்க.”
மீரா புன்னகைத்தாள். கஞ்சியை எடுத்தாள்.

Advertisement

“நாளைக்கு என்னாகும் மேடம்?” வேலாண்டியின் கேள்வி  தொனியில் பதட்டமில்லை. ஆனால் கண்களில் ஒரு நூலிழை அச்சம்.
“நாளைக்கு சென்னையில் முதலமைச்சர் அலுவலகத்துல ஒரு உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடக்கும் தாத்தா. அங்கே நான் எல்லாத்தையும் விளக்கப் போறேன். ஒரு நல்ல செய்தியோட வருவேன் தாத்தா, நீங்க தைரியமா இருங்க” என்று நம்பிக்கையூட்டும் விதமாகச் சொன்னாள்.
வேலாண்டி ஒரு நொடி அவளை பார்த்தார். அந்தப்பார்வையில் ஒரு தந்தை மகளை அனுப்பும் போது இருக்கும் அந்த கலவையான உணர்வு.
“போய் வாங்க மேடம். சாமுண்டி அம்மன் உங்களோட இருப்பா.”

கூடாரத்திலிருந்து வெளியே நடந்தாள் மீரா.
ஜீப் காத்திருந்தது. டி.எஸ்.பி சந்திரன் அருகில் நின்றிருந்தார்.
“சார்.” மீரா அவரை நோக்கி நடந்தாள். “வர்மன் சார் எப்படி இருக்காங்க?”
சந்திரன் தொண்டை கனைத்தார். “சார் இப்போ பரவாயில்லை மேடம். தோள்ல நாலு தையல் போட்டிருக்காங்க.  டாக்டர் கட்டாய ஓய்வு எடுக்கச் சொல்லிருக்கார். அதனால ரெண்டு நாள் அவரை இங்கே பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்.”
மீரா ஒரு நிமிடம் மௌனமாக இருந்துவிட்டு, “சரி சார், கவனிச்சுக்கோங்க” என்று கூறிவிட்டுத் தனது வாகனத்தில் ஏறிச் சென்னை நோக்கிப் புறப்பட்டாள்.
முதலமைச்சர் அலுவலகம், சென்னை. மறுநாள் காலை.
பழைய கல்லால் கட்டப்பட்ட நடைபாதை. நீண்டவரிசையில் நாற்காலிகள். தேர்ந்தெடுக்கப்பட்ட முகங்கள் ….. நகர்ப்புற திட்டமிடல் ஆணையர், வருவாய் தலைமை செயலாளர், சுற்றுலாத்துறை செயலாளர், சுற்றுச்சூழல் வல்லுனர்கள், மூத்த எம்.எல்.ஏக்கள். ஒவ்வொருவரும் தங்கள் கோப்புகளை புரட்டிக்கொண்டிருந்தனர்.
முதலமைச்சரின் தனிச்செயலாளர் ராஜேஷ் நின்று தலைகளை எண்ணினார்.

“நகர்ப்புற திட்டமிடல்… வந்திருக்காங்க. வருவாய் … வந்திருக்காங்க. ஐஜி ரங்கசாமி சார்..” அவர் தலையசைத்தார். “கலெக்டர்…” வந்திருக்காங்க. “ஆனா…” ராஜேஷ் சுற்றும் முற்றும் பார்த்தார். “எஸ்பி வர்மன் சார்?”
சந்திரன் எழுந்தார். “வர்மன் சார்க்கு நேத்து ஆபரேஷன்ல சின்னதா அடிபட்டிருக்கு. டாக்டர் ரெஸ்ட் சொல்லியிருக்காங்க. அதனால வர முடியல”
கதவு திறந்தது.
முதலமைச்சர் நுழைந்தார்.
எல்லாரும் எழுந்தனர். அவர் கை அசைத்தார். “உட்காருங்க.”
ராஜேஷ் மைக்கை சரி செய்தார்.

“சார், பூம்பாறை திட்டம் பத்தி … முதல்ல கலெக்டர் மீரா மேடம் விளக்குவாங்க.”
மீரா எழுந்தாள்.
அவள் முன்னால் ஒரு வரைபட ஸ்டாண்ட். மற்றொரு பக்கம் ப்ரொஜெக்டர் திரை. அவள் ஒரு கணம் நின்றாள். அறையில் உள்ள ஒவ்வொரு முகத்தையும் ஒரு பார்வையில் சுற்றி வந்தாள்.
” அனைவருக்கும் வணக்கம்.”
பதட்டமில்லாமல். ஆனால் நேர்மையான ஒரு அழுத்தத்துடன்.. அவள் குரல்!
அவள் ப்ரொஜெக்டரில் முதல் ஸ்லைடை போட்டாள்.பூம்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதியின் நிலவரைபடம்.
“சார், பூம்பாறையைச் சீரமைக்கும் திட்டம் என்பது ஒரு நல்ல நோக்கம் கொண்டது தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தத் திட்டத்திற்காகப் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது மிகப்பெரிய தவறு.”
“அவர்களின் விவசாய நிலத்தைச் சிதைப்பது அவர்களின் உயிரைப் பறிப்பதற்குச் சமம்.”
அவள் வரைபடத்தில் ஒரு பகுதியை காட்டினாள்.

“இந்த பகுதி. கிராமத்தை சுற்றிலும் உள்ள இந்த இருநூற்றியைம்பது ஏக்கர் … இது தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வரும் பழங்குடி குடும்பங்களின் நிலம்.
“இதை கையகப்படுத்திவிட்டு ‘மாற்று நிலம் தருகிறோம்’ என்று சொல்வது ….காகிதத்தில் நியாயமாகத் தெரியும். நடைமுறையில்?” மாற்றுநிலத்தில் அவர்களுக்கு அதே நீர்வளமும், அதே மண் வளமும் கிடைக்குமா?”.

முதலமைச்சர் கைகளை கோர்த்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்.
“அப்புறம் ….இந்தத் திட்டம் ஏன்இந்த நிலத்தையே வேணும்னு சொல்றது? வேற வழி இல்லையா?” மீரா அடுத்த ஸ்லைடை போட்டாள். புள்ளிவிவரங்கள்.
“இதோ பாருங்க. பூம்பாறையிலிருந்து வடக்கே இரண்டு கி.மீ. .. இந்த நிலம். நூற்றிறுபது ஏக்கர் தரிசு நிலம். கிட்டத்தட்ட ஐம்பது வருஷமா பயன்படுத்தாமல் கிடக்கிறது. சர்வே ரெக்கார்டுகளில் ‘பாழடைந்த எஸ்டேட்’ என்று குறிக்கப்பட்டிருக்கிறது.”
“அந்தப் பகுதிகளைப் பயன்படுத்தினால் இயற்கைக்கும் பாதிப்பில்லை, மக்களுக்கும் பாதிப்பில்லை.!
முதலமைச்சர் நிமிர்ந்து அமர்ந்து மீராவைப் பார்த்துக் கேட்டார், “சரி மீரா, இந்த எஸ்டேட் உரிமையாளர்கள் கிட்ட பேசிட்டீங்களா? இப்போ என்ன ஸ்டேட்டஸ்?”
மீரா தனது கோப்புகளைச் சரிசெய்தபடி, “இன்னும் இல்லை சார். அவங்க கிட்ட பேச வேண்டியிருக்கு, இன்னும் பேசி முடிக்கல…” என்றுஅவள் கூறி முடிப்பதற்குள், அந்த அரங்கின் கனமான தேக்குமரக் கதவு அதிரும்படித் திறந்தது!
வர்மன் நுழைந்தான்.
காக்கி சீருடை. இடது தோளில் ஒரு வெள்ளைக்கட்டு … சட்டையின் மேலாகத் தெரிந்தது. ஆனால், அவன் முகத்தில் வலியின் சுவடே இல்லை. மாறாக, ஒரு காட்டுப் புலியின் ஆக்ரோஷம் அவன் கண்களில் மின்னியது.
கையில் ஒரு கோப்பு …தடிமனான கோப்பு.
ராஜேஷ் சட்டென நிமிர்ந்தார். “வர்மன் சார், நீங்க…”
“வந்திருக்கேன்.” அவ்வளவுதான்.
அவன் அறையில் நுழைந்தான்.  அவனது வருகை அங்கிருந்தவர்களைத் திகைக்க வைத்தது. எல்லாரும் திரும்பினர்.
“சாரி ஃபார் தி இன்ட்ரப்ஷன் சார்“ என்றபடி நேராக முதல்வரை நோக்கி நடந்தான் வர்மன். அவன் கோப்பை எடுத்தான். முன்னே வந்தான். மீரா ஒரு அடி பக்கவாட்டில் விலகினாள்.
தொடர்ந்து அவன் மீராவைப் பார்த்து ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்தான். “கலெக்டர் மேடம் இன்னும் ‘பேசி முடிக்கல’ நிலையிலேயே இருக்காங்க சார். ஆனா நான் வேலையை முடிச்சிட்டேன்.”
“நேத்து சாமுண்டேஸ்வரி கோவில் சிலை திருட்டு கேஸ்ல மூணு பேர் கைது ஆனாங்க. அவங்க வாக்குமூலம் இந்தக் கோப்பில் இருக்கு. அதுல ஒரு பெயர் திரும்பத் திரும்ப வருது.”
“பாலராமன்!   நிலக்கிழார். கோடைக்கானல் அடிவாரத்தில் பெரிய எஸ்டேட் வச்சிருக்கான். அந்த மூணு பேரும் சொல்றாங்க … இன்பாக்ட் வாக்குமூலமே தந்துட்டாங்க பாலராமன் தான் இந்த திருட்டை திட்டமிட்டவன்னு”
அவன் ஒரு வீடியோ ஆதாரத்தையும், வாக்குமூலப்பத்திரங்களையும் சமர்ப்பித்தான். அதில் பலராமன் நிலைகுலைந்து அமர்ந்திருந்தான்.
வர்மன் ஒரு நொடி நிறுத்தினான்.
“இந்த பாலராமன்கிட்ட இருக்கிற நிலம்…” அவன் மீராவின் வரைபடத்தை ஒரு நொடி பார்த்தான். “…கலெக்டர் மேடம் இப்போ காட்டின அந்த தரிசு நிலம்தான். அவன் ஐம்பது வருஷமா அந்த நிலத்தை வைத்திருக்கான். ஒரு செடி கூட வளர்க்கலை.”

முதலமைச்சர் கோபத்துடன் நிமிர்ந்தார்.
“இப்போ பாலராமன் கஸ்டடீல இருக்கான். கேஸ் நடக்குது. அவன் நிலம் நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு உட்பட்டது. பாழடைந்த விவசாய நிலத்தை பொது நோக்கத்துக்கு கையகப்படுத்த அரசாங்கத்திற்கு உரிமை இருக்கு.”
வர்மன் கோப்பை மூடினான்.
“மக்களிடம் நிலத்தைப் பிடுங்குவதற்குப் பதிலாக, குற்றப் பின்னணி கொண்ட இந்த நிலப்பிரபுவின் தரிசு நிலங்களை அரசு எடுத்துக்கொண்டால், பூம்பாறை சீரமைப்புத் திட்டம் இன்னும் பிரம்மாண்டமாக அமையும். அதே சமயம் ஏழை விவசாயிகளின் நிலமும் காக்கப்படும்.”
அறையில் ஒரு நீண்ட மௌனம் நிலவியது. பின் அரங்கமே அதிரும்படி அனைவரும் கைதட்டினர்.
முதலமைச்சர் முகத்தில் ஒரு திருப்தியான புன்னகை அரும்பியது. அவர் இருக்கையிலிருந்து சற்றே முன்னோக்கி சாய்ந்து, இருவரையும் பார்த்து “வெல் டன்” என்று சொல்லும்படித் தனது தம்ப்ஸ் அப் விரலை உயர்திக்காட்டினார்.

மீராவும் வர்மனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். தனிப்பட்ட மோதல்கள் இருந்தாலும், நீதிக்காக அவர்கள் இருவரும் ஒரே நேர்க்கோட்டில் நின்ற அந்தத் தருணம், அங்கிருந்த அதிகார வர்க்கத்தையே அதிரச் செய்தது.
முதலமைச்சர் தொடர்ந்தார் .. “கலெக்டர் அன்ட் எஸ்பி… நீங்க ரெண்டு பேரும் ஒரு டீமா செயல்பட்டு இந்தத் திட்டத்தைச் சரியான பாதைக்குக் கொண்டு வந்திருக்கீங்க. ஐ அப்ரிஷியேட் இட்!, லெட் அஸ் ப்ரொசீட் இன் த சேம் வே.”
மீரா ஒரு நொடி கண்களை மூடினாள்.
“டீமாவா?? இவன் எங்க என்கிட்ட இதையெல்லாம் டிஸ்கஸ் பண்ணினான்? இவனுக்கும் இந்தக் கேஸுக்கும் என்ன சம்பந்தம்? இது என் கேஸ்…நான் இரவு பகலா உட்கார்ந்து மேப் போட்டு, சர்வே நம்பர் எடுத்து, உயிர் கொடுத்துப் பண்ணிட்டு இருக்கிற வேலை! இதை இவன் திடீர்னு குறுக்கே வந்து முடிப்பானா?”
அவள் கண்களைத் திறந்து வர்மனைப் பார்த்தாள். அவன் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. முதலமைச்சரின் பாராட்டைத் தலைவணங்கி ஏற்றுக்கொண்டாலும்,அவனது ஓரப்பார்வை மீராவை நோக்கித் திரும்பியது. அந்தப் பார்வையில், “பார்த்தாயா?நான் நினைச்ச.. நான் முடிச்சிட்டேன்.” என்கிற அந்தத் திமிர்  அப்படியே தெரிந்தது.

மீரா தன் இதழ்களை இறுகக் கடித்துக்கொண்டாள். முதலமைச்சர் முன்னிலையில் எதையும் பேச முடியாது என்கிற கட்டாயம் அவளை இன்னும் ஆத்திரமூட்டியது.
“நன்றி சார்,” என்று மிகக் கஷ்டப்பட்டு தன் குரலை நிதானப்படுத்திச் சொன்னாள் மீரா. ஆனால், அவள் கண்கள் வர்மனைப் பார்த்து, “வெளியே வா… உன்னை வச்சுக்கிறேன்” என்று மௌன யுத்தம் நடத்தின.
அறைக்கு வெளியே வரும்போது, அந்த நீண்ட தாழ்வாரத்தில் மீராவின் காலணிகள் ‘டக் டக்’ என்று ஆவேசமாகச் சத்தம் எழுப்பின.

வர்மன்அவளுக்குப் பின்னால் அதே நிதானமான நடையுடன் வந்தான்.
“வர்மன்!” மீரா சட்டெனத் திரும்பி அவனை வழிமறித்தாள். அவளது கண்கள் சிவந்து போயிருந்தன. “டீம்-னு சிஎம் சொன்னஉடனே ரொம்பப் பெருமையா இருந்ததா உங்களுக்கு? இது என்னோட கேஸ்… இதுல மூக்கை நுழைக்க உங்களுக்கு யாரு அதிகாரம் கொடுத்தது?”
வர்மன் ஒரு அடி முன்னால் வந்து, அவளது முகத்துக்கு நேராகக் குனிந்தான்.

“உன் கேஸ், என் கேஸ்-னு பிரிச்சுப் பார்க்க இது ஒன்னும் காலேஜ் ப்ராஜெக்ட் இல்ல மீரா. இது ஒரு டிஸ்ட்ரிக்ட் ஓட பிரச்சனை.”

“என்கிட்ட நீ ஏன் டிஸ்கஸ் பண்ணல?” என்று மீரா சீற, வர்மன் அவளது கண்களை நேருக்கு நேர் ஊடுருவிப் பார்த்தான்.
“அது சரி… நான் டிஸ்கஸ் பண்ற அளவுக்கு நீ எனக்கு எங்க ஸ்பேஸ் கொடுத்த?” வர்மனின் இந்தக் கேள்வி அவளது மார்பில் ஈட்டியாய் பாய்ந்தது.
மீரா ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனாள். உண்மைதான், பூம்பாறைக்கு அவன் வந்தது முதல் அவனது இருப்பையே ஒரு இடையூறாகத்தான் பார்த்தாள். அவனுக்கே உரிய அந்த முரட்டுத்தனமான வேகத்தில் அவன் வேலையை முடித்திருக்கிறான்.
அதில் இருக்கும் நியாயம் அவளுக்குத் தோன்ற, அவளது ஆக்ரோஷம் மெல்ல வடிந்தது. தன்னையறியாமல் அந்த நீண்ட தாழ்வாரத்தின் சுவரில் சாய்ந்து நின்றாள்.

அவளது மௌனத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டவர்மன், அவளை நெருங்கி வந்தான். அவளது முகத்திற்கு மிக அருகில், அவளது மூச்சுக்காற்றை உணரும் தூரத்தில் வந்து நின்றான்.

” ஸ்பேஸ் எடுத்துக்கவா?”

ஒரு ரகசியத்தைப் பகிரப் போவது போல அவளது காதருகே குனிந்து, மிக மெல்லிய குரலில் கிசுகிசுத்தான்…
“கிட்ட வரவா…?”
மீராவின் இதயம் ஒரு நொடி துடிப்பதை நிறுத்தியது.
அவளது இதயத்தை நோக்கி கைக்காட்டி, இன்னும் குரலைத் தாழ்த்தி…
“உள்ள வரட்டா…?”

அவனது அந்தக் கரகரப்பான குரல் அவளது நரம்புகளை மீட்ட, மீரா விதிர்விதிர்த்துப் போனாள். ஆறு வருடங்களாக அவள் கட்டி எழுப்பிய அந்த தடுப்பின் கோட்டை, அவனது இந்த ஒற்றை கிசுகிசுப்பில் சரிந்து விழுவது போல் இருந்தது. அவனது பார்வையின் வீச்சில் அவளால் நகரக்கூட முடியவில்லை.
சரியாக அந்தத் தருணத்தில், ஜன்னலுக்கு வெளியே மேகங்கள் திரண்டு மழை தூற ஆரம்பித்தது. அந்தப் பொன்மாலைப் பொழுதின் முதல் மழைத்துளிகள் மண்ணில் பட்ட வாசம், அந்தத் தாழ்வாரத்திற்குள் ஊடுருவியது.

வர்மனின் அந்த நெருக்கத்தையும், அவன் கண்களில் தெரிந்த காதலையும் தாங்க முடியாமல், “அய்யோ மழை!” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து ஓடிப்போனாள் மீரா.
அவள் மழையைக் கண்டு பயந்து ஓடவில்லை. தன்னைத் தவிர்த்துவிட்டுத்தான் ஓடுகிறாள் என்பது வர்மனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவளது அந்தத் தவிப்பை ரசித்தபடி, அங்கேயே நின்று அவளது ஓட்டத்தைப் பார்த்தான்.
“ஓடுடி ஓடு… எவ்வளவு தூரம் ஓடுவ?”
அந்தத் தருணத்தில் ……அவள் கேட்க உரத்துப்பாடத் தோன்றியது அவனுக்கு!

“மழை நீரில் வானம் நனையாதம்மா…
விழி நீரில் பூமுகம் கரையாதம்மா…
எனை கேட்டு காதல் வரவில்லையே…
நான் சொல்லி காதல் விடவில்லையே…
மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா…
இறந்தாலும் காதல் இறக்காதம்மா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!