கொற்றவனின் கொற்றவை 4
அத்தியாயம் 4:
விக்ரம் கொற்றவையை குடிகாரி என்றதும் காயப்பட்டு நின்றவளுக்கு பழைய நினைவுகள் வந்தது.
விக்ரமும் கொற்றவையும் ரெஸ்டாரண்டில் அறிமுகமாகி சில நாட்கள் சென்றிருந்தது. அதற்குள்ளாகவே இருவரும் நன்றாக பழகியிருந்தார்கள்.
ஒரு ஞாயிற்று கிழமை மாலை கொற்றவையும் அவள் நண்பர்கள் குழுவும் எப்பொழுதும் வழக்கமாக செல்லும் பாருக்கு சென்றனர். பாதிப்பேர் சரக்கு அடிக்கவும், கொற்றவையும் மீதி சில நண்பர்களும் டான்ஸ் ஆடவும் சென்றுவிட்டனர்.
Advertisement
கொற்றவை கூட்டத்தில் ஆடி கொண்டிருக்கும் போது எதார்த்தமாக அவள் பார்வையில் பட்டான் விக்ரம். அவனும் இன்னொருவனும் கையில் கிளாசுடன் அமர்ந்திருந்தனர். கொற்றவை பார்க்கும்போது விக்ரமும் அவளைத்தான் பார்த்திருந்தான்.
அவனை பார்த்தவுடன் ஆடுவதை நிறுத்திவிட்டு அவனை நோக்கி சென்றாள் கொற்றவை.
அவன் அருகில் சென்று “என்ன மேன். நீ ட்ரிங்க்ஸ்லாம் எடுப்பியா. உன்ன ஆர்த்தோடக்ஸான ஆளுன்னு நினைச்சேன்” என்றாள்.
Advertisement
அதற்கு விக்ரம் அழகாக சிரித்து கொண்டே ” உங்கள பாத்தா கூட பெரிய அல்ட்ரா மாடர்ன் பொண்ணு மாதிரி இருக்கீங்க. ஆனா சரக்கு அடிக்காம இருக்கீங்க இல்லையா. அது மாதிரிதான் சில விதி விலக்கு உண்டு கொற்றவை மேடம்” என்றான்.
Advertisement
அதற்கு அவனை ஒரு மாதிரி பார்த்தவள் “நீ இந்த மேடம விட மாட்டியா மேன். ஆனாலும் நீ மேடம் சொல்லும்போது மட்டும் என்ன கிண்டல் பண்ற மாதிரியே பீல் ஆகுது” என்று அவனிடம் கேட்டவள், விக்ரம் பக்கத்தில் அமர்ந்திருந்தவனை பார்த்து ” ஹாய் பிரதர். நீங்க அவன் பிரண்ட் தான. நீங்க சொல்லுங்க. அவன் என்ன கிண்டலாதான மேடம்னு சொல்றான்” என்றாள்.
அதற்கு அவன் “சாரி சிஸ்டர். நா இங்க வந்து மூணு வருஷமா விக்ரம தெரியும். ஆனா அவன் எதுக்கு சிரிப்பான். எதுக்கு கோவப்படுவான். எப்ப எந்த மாடுலேசன்ல பேசுவான். எதுவும் எனக்கு தெரியாது. புரியவும் புரியாது. இத்தனைக்கும் நாங்க ரூம் மேட்ஸ் வேற” என்று அவன் புலம்பியதும், திரும்பி விக்ரமை பார்த்த கொற்றவை
“என்ன மேன். உன் பிரண்ட் இப்படி பேசுறாங்க. அவ்வளவு புரிஞ்சுக்க முடியாத ஆளா நீ. சரி ஓகே. நீ அப்படியே இருந்துக்கோ. ஆனா நா நிறைய ஆல்கஹால் எடுக்க மாட்டேன்னு உனக்கு எப்படி தெரியும்” என்று கேட்டாள்.
Advertisement
அதற்கு விக்ரம் அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து கன்னம் குழி விழ சிரித்து கொண்டே
“மேடம் வைன் மட்டும் தான் எடுப்பீங்க. அதும் அளவா எடுத்துப்பீங்க. உங்கள எனக்கு நல்லாவே தெரியும் கொற்றவை மேடம்” என்றவனை பார்த்து கொற்றவையின் இதயம் முரசு கொட்டியது.
அவனையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவளின் முன் சொடக்கிட்டவன், “ஹலோ மேடம். இவன் என்னோட பிரண்ட் ராம். இவனும் ஹாவர்ட் யூனிவர்சிட்டி. பி. ஹெச். டி ஸ்காலர் தான்” என்று அறிமுக படுத்தினான்.
கொற்றவையும் ராமிடம் “ஹாய் ராம். நா கொற்றவை” என்று கூறி கொண்டு இருக்கும் போதே விக்ரம் ராமிடம் “ராம். மேடம் சாதாரண ஆளில்ல. என்னோட ரெஸ்டாரண்ட் ஓனர்” என்றான் சிரித்து கொண்டே.
அதற்கு கொற்றவை “எங்க அப்பாதான் ஒனர். நா இல்ல ராம்” என்றவள் விக்ரமிடம் ” நா கிளம்புறேன் மேன். இங்க இருந்தா நீ உண்மையா பேசுறியா, இல்ல என்ன கிண்டல் பன்றியான்னு யோசிச்சே எனக்கு பைத்தியம் பிடிச்சிடும்” என்றுவிட்டு அவள் கும்பலுடன் சென்று சேர்ந்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் கொற்றவையும் அவள் நண்பன் ஒருவனும் சேர்ந்து ஆட ஆரம்பித்தனர். அவர்கள் ஜோடி எப்பொழுதுமே டான்சில் பேமஸ் ஜோடி அவர்கள் வட்டத்தில். அவர்கள் ஆட ஆரம்பித்ததும் எல்லோரும் உற்சாகமாக அவர்களை சுற்றி ஆட ஆரம்பித்தனர்.
கொற்றவை ஆடி கொண்டிருந்தாலும் இடை இடையே விக்ரமை திரும்பி பார்த்து கொண்டிருந்தாள். அவன் அளவுக்கு அதிகமாக குடித்து கொண்டிருந்ததை பார்த்து கொண்டிருந்தவள், ஒரு கட்டத்தில் டான்ஸ் ஆடுவதை நிறுத்திவிட்டு அவனிடம் சென்று அவன் கைகளை பிடித்து
“ஹே ஸ்டாப் இட் மேன். என்ன பண்ற” என்றதும் வேகமாக எழுந்து அவளை திரும்பி பார்த்தான் விக்ரம். அவன் சிவந்த கண்களையும் அவன் எழுந்த வேகத்தையும் பார்த்ததும் கொற்றவை பயந்து போய் அவன் கையை விட்டுவிட்டு ஒரு அடி பின்னே சென்றாள். ஆனால் அவள் விட்ட கையை விடாமல் வேகமாக திருப்பி பிடித்த விக்ரம் ஆக்ரோஷமாக அவளை பார்த்தான்.
ஆனால் ஒரே நிமிடத்தில் முகத்தை எப்பொழுதும் போல் சிரிப்புக்கு மாற்றியவன் ” பயப்படாதீங்க மேடம். நா எவ்ளோ குடிச்சாலும் நிதானம் தவற மாட்டேன். நீங்க வாங்க” என்று அவளை அழைத்து சென்று அவள் கும்பலுக்குள் விட்டவன், வேகமாக திரும்பி பார்க்காமல் அங்கிருந்து சென்று விட்டான். ராம் தான் நடப்பது புரியாமல் பார்த்து கொண்டிருத்தவன், விக்ரம் வெளியில் செல்வதை பார்த்து விட்டு அவன் பின்னேயே எழுந்து சென்றான்.
இந்த பழைய நிகழ்வை யோசித்த கொற்றவை, என்ன நல்லா தெரியும்ன்னு அன்னைக்கு சொன்னவன், இன்னைக்கு என்ன குடிகாரின்னு சொல்லிட்டு போறான். ஏன் அவன் குடிகாரன் இல்லையா. தமிழ்நாட்ல பொண்ணுங்க குடிச்சாதான் தப்பா பேசுவாங்களா. ஆண்கள ஒன்னும் சொல்ல மாட்டாங்களா என்று ஏதேதோ யோசித்து கொண்டிருந்தவளின் முன்னால் வந்து நின்றாள் கிறிஸ்டினா.
தன்னை கவனிக்காமல் நின்ற கொற்றவையின் கன்னத்தை தட்டிய கிறிஸ்டினா, “உன்ன எங்கெல்லாம் தேடிட்ருக்கேன். நீ இங்க நின்னு என்ன கனவு கண்டுட்ருக்க டாலி” என்றதும் நிகழ்வுக்கு வந்தாள் கொற்றவை.
அவளை டல்லாக பார்த்த கொற்றவையிடம் “ஹே சியர் அப் டாலி. உன்ன குஷி படுத்துற மாதிரி ஒரு நியூசோட நா வந்துருக்கேன்” என்றவள் வேகமாக அவள் மொபைலை பிரித்து சில புகைப்படங்களை காட்டினாள். அதை பார்த்ததும் ஆச்சரியத்தில் வாயை பிளந்தாள் கொற்றவை. ஏனென்றால் அந்த புகைப்படங்களில் அரைகுறை ஆடையில் கையில் கிளாசுடன் இருந்தவள் சங்கவி.
அவள் ஆச்சரியத்தை பார்த்த கிறிஸ்டினா ” என்ன டாலி. இந்த பொண்ண சொல்லித்தான உன்ன ரிஜெக்ட் பண்ணான் அந்த விக்ரம். நாலு நாளா இந்த பொண்ண ஃபால்லொவ் பண்ணதுல பல திடுக்கிடும் தகவல் கிடைச்சுருக்கு டாலி. இவ பகல்ல காலேஜ் போறா. ஈவினிங் பார்ட் டைம் ஜாப் போறா. அப்புறம் மிட்நைட்ல பல பார்ட்டிக்கு போறா. எதுக்கு தெரியுமா. வசதியா வர்றவனை பார்த்து மடக்கி லைஃப்ல செட்டில் ஆகணும்ங்கிறது தான் அவளோட பிளான். இதுல என்ன காமெடின்னா அவ லிஸ்ட்ல விக்ரமும் இருக்கான். ஆனா அவன் வேலைக்காரனா தான இருக்கான். அதனால இப்போதைக்கு அவன செலக்ட் பண்ணாம அவ லிஸ்ட்ல விக்ரம கடைசி ஆப்சனா வச்சிருக்கா” என்றாள்.
அனைத்தையும் கேட்ட கொற்றவை ” உண்மையாதான் சொல்றியா கிறிஸ்டி. அவ பேசுறதுக்கே யோசிப்பா. எல்லாத்துக்கும் பயப்படுவா” என்று சொல்லி கொண்டே போன கொற்றவையை நிறுத்திய கிறிஸ்டி
“ஸ்டாப் டாலி. உன்ன ஒருத்தன் வேண்டாம்ன்னு சொல்லிட்டு இன்னொருத்திய பிடிச்சிருக்குன்னு சொல்றான்னா அவ எப்பேர்ப்பட்டவன்னு பாத்துடுவோம்ன்னு தான் சும்மா பாலோவ் பண்ணோம். அப்பதான் தெரிஞ்சிது இவ எவ்ளோ பெரிய நடிகைன்னு. நம்ம மார்க் தான் இவள பாலோவ் பண்ணி போட்டோலாம் எடுத்தது” என்றதும் கொற்றவை
“இருக்கட்டும் கிறிஸ்டி. அவட்ட பேசிட்டு நா விக்ரம்கிட்ட அவளை பத்தி பேசறேன்” என்றதும் அவளை வினோதமாக பார்த்த கிறிஸ்டி “உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை டாலி. விக்ரம் தான் உன்ன வேண்டாம்ன்னு சொல்லிட்டான்ல. யார் எப்படி போனா உனக்கு என்ன. அதுலயும் ஏஞ்சல் மாதிரி இருக்க உன்ன விட்டுட்டு சாத்தான் மாதிரி இருக்க சங்கவிய பிடிச்சிருக்குன்னு சொல்றான்னா அவன் எவ்ளோ பெரிய மூளை கெட்டவனா இருக்கணும். அதனால அவனுக்கு அந்த சங்கவிதான் சரியான ஆளு. அவன் எப்படியோ போகட்டும். நீ ஜாலியா இரு டாலி” என்றாள்.
அதற்கு கொற்றவை “இல்ல கிறிஸ்டி. விக்ரம் பாவம். அவகிட்ட ஏமாந்துட்டான்னா. நா அவன்கிட்ட சங்கவிய பத்தி சொல்லணும். எனக்கு தெரிஞ்ச விஷயத்தை என்னால சொல்லாம இருக்க முடியாது. அதுக்கு பிறகு அவன் முடிவு” என்று சொல்லிவிட்டு கிறிஸ்டியின் பதிலை கூட எதிர்பார்க்காமல் கிளம்பிவிட்டாள்.
நேராக அவள் ரெஸ்டாரண்ட் வந்தவள் சங்கவியின் ஷிப்ட் டைமிங் பற்றி விசாரித்தாள். அப்பொழுதுதான் சங்கவியும் வேலைக்கு வராதது தெரிந்தது கொற்றவைக்கு.
இரண்டு நாட்கள் தேடியும் சங்கவி அகப்படவில்லை கொற்றவையின் கண்களுக்கு. ஆனால் தேடாமலேயே அவள் எதிரில் ரெஸ்டாரண்டில் வந்து நின்றான் விக்ரம்.
கொற்றவை அவள் அப்பாவின் ரூமில் அமர்ந்து அன்று தான் கணக்குகளை பார்க்கலாம் என்று யோசித்து கொண்டிருந்தாள். அப்பொழுதும் விக்ரமின் நினைவில்தான் டேபிளில் தலை சாய்த்திருந்தாள். திடீரென்று டேபிளை தட்டும் சத்தம் கேட்டு நிமிர்ந்தால் விக்ரம் நின்றான். அவனை பார்த்ததும் முகம் மலர்ந்து போனது கொற்றவைக்கு.
“வந்துட்டியா மேன். உன்ன பாக்கணும்ன்னுதான் யோசிச்சிட்ருந்தேன்” என்று பேசி கொண்டே போனவள் அவன் சுருங்கிய முகத்தை பார்த்து பேச்சை நிறுத்தினாள்.
அவள் நிறுத்தியதும் விக்ரம் “எதுக்காக என்ன பாக்க நினைச்ச” என்றான்.
கொற்றவையும் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் “இல்ல மேன். சங்கவி நாம நினைக்கிற மாதிரி இல்ல. அவ நம்மக்கிட்ட நடிச்சிட்ருக்கா. மிட்நைட்ல பாருக்கெல்லாம் போறாளாம்” என்று கூறினான்.
“ஏன் நீ பாருக்கு பப்கெல்லாம் போறதில்லையா. அது மாதிரி அவ போனா என்ன” என்று விக்ரம் கூறியதும்
“லூசா மேன் நீ. நா ஒளிச்சு மறைச்சா பார்ட்டிக்கு போறேன். ஆனா அவ நல்லவ மாதிரியும் ரொம்ப பயந்த மாதிரியும் நம்மட்ட நடிக்கிறான்னு சொல்றேன். நீ வேற அவ தமிழ் கல்ச்சர்ல இருக்கானு, அவகிட்ட ஏமாந்துட போறியோன்னு பயந்துட்டு தான் உன்ன தேடிட்டு இருந்தேன்” என்றாள் கொற்றவை.
அதற்கு விக்ரம் “அதனால தான் அவளை வேலைய விட்டு தூக்குனியா” என்றதும்
கொற்றவை “நா எங்க மேன் அவளை வேலைக்கு வர வேண்டாம்ன்னு சொன்னேன். அவட்டயே நேரா அவளை பத்தி பேசி தெரிஞ்சிப்போம்ன்னு நானே தேடினப்பதான் அவ வேலைக்கு வரலன்னு தெரிஞ்சிது” என்றாள்.
“உன்ன பத்தி நா ரொம்ப உயர்வா நினைச்சிட்ருந்தேன். பொய் பேச மாட்ட. மனசுல உள்ளத பேசுறவ. ஸ்ட்ரயிட் பார்வர்ட். ஆனா நீ அப்படி இல்ல. நானும் சாதாரண பொண்ணுதான்னு நிரூபிச்சிட்டல்ல” என்று அவன் கேட்டதும் “நீ என்ன சொல்ற மேன். எனக்கு ஒன்னும் புரியல” என்றவளிடம்
“ஏன் புரியல. நா உன்ன விட்டுட்டு அவளை லவ் பன்றேன்ற காண்டுல தான அவளை வேலைய விட்டு தொரத்தினதும் இல்லாம, அவளை பத்தி இப்படி பொய் கதைலாம் வேற சொல்லிட்ருக்க. அவ நேத்து வந்து என்னட்ட நீ இப்படிலாம் அபாண்டாமா பழி சுமத்தி வேலைய விட்டு அனுப்பிட்டன்னு அழுதுட்டு போனா. நா கூட நம்பல. இப்ப இங்க வந்து பேசின பிறகுதான் தெரியுது, நீ எவ்ளோ மோசமான பொண்ணுன்னு. நல்ல வேலை நா உன்னட்ட சிக்கல. வேற எவனாவது இந்த ஊர்காரனா இளிச்சவாயனா பார்த்து லவ் பண்ணு. அவனுங்கதான் உன்னோட இந்த மோசமான கேரக்டர்லாம் யோசிக்க மாட்டாங்க. நல்ல பாம்பு மாதிரி அழகா இருக்கியே. அத பாத்துட்டு ஈ ன்னு இளிச்சிட்டு வருவானுங்க. ஏன் உன் கும்பல்லையே உன்னோட ஒருத்தன் ஆடுவானே. அவனையே செலக்ட் பண்ணிக்கோ. அவன் தான் உனக்கு செட் ஆவான்” என்று பேசிவிட்டு வெளியில் செல்ல போன விக்ரம், கதவருகில் சென்று திரும்பி அதிர்ச்சியில் வாயடைத்து அமர்ந்திருந்த கொற்றவையை நின்று நிதானமாக பார்த்து விட்டு சென்றான்.
அன்றுதான் கொற்றவை அவனை பார்த்தது. அதற்கு பிறகு ஒரு மாதம் அவனை பார்க்கவே இல்லை.
ஒருநாள் மாலை வழக்கம் போல் அவள் ரெஸ்டாராண்டில் காலியான இருக்கையில் அமர்ந்து மொபைலை பார்த்து கொண்டு அமர்ந்திருந்தவள் கவனம் மொபைலை விட்டு தாவி எங்கெங்கோ சென்று கொண்டிருந்தது. என்ன வழக்கம் போல் விக்ரம் நினைவுதான். ஏன் அவன் தன்னை எவ்வளவு அவமான படுத்தினாலும் அவன் மீது கோபமே வர மாட்டேன் என்கிறது என்றுதான் யோசித்து கொண்டிருந்தாள். அப்பொழுது சுற்று புறத்தில் எதோ சத்தம் எழுவதை உணர்ந்து நிகழ்வுக்கு வந்தாள் கொற்றவை.
என்னவென்று பார்த்தால் சாப்பிட்டு கொண்டிருந்த கஷ்டமர்ஸ்தான் டிவியை பார்த்து தங்களுக்குள் பேசி கொண்டிருந்தனர்.
கொற்றவையும் திரும்பி டிவியை பார்த்தாள். அதில் ஒரு தமிழ் சேனலில், “தமிழ் நாட்டின் முதலமைச்சராக திரு விக்ரம பாண்டியன் நாளை பதவி ஏற்க உள்ளார். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே இவ்வளவு இளமையான ஒருவர் முதல்வராக பதவி ஏற்பது இதுவே முதல் முறை” என்று பிரேக்கிங் நியூஸ் விக்ரமின் போட்டோவுடன் ஓடி கொண்டிருந்தது.
