ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ – 12

அத்தியாயம்– 12:
Advertisement
தேனியின் இரவு எப்பொழுதுமே வேறொரு மாயாஜாலத்தைக் கொண்டது.
சுருளி மலையிலிருந்து இறங்கி வரும் குளிர்ந்த காற்று 1 பள்ளத்தாக்கின் அமைதிக்குள் ஊடுருவிக் கொண்டிருக்க, மாவட்ட ஆட்சியரின் பழைய ஆங்கிலேயர் கால பங்களா மட்டும் இன்னும் உறங்காமல் விழித்திருந்தது. மங்கலான மஞ்சள் விளக்குகளின் வெளிச்சத்தில் அந்தப் பழங்காலக் கட்டிடம் ஏதோ ஒரு மர்ம நாவலின் பக்கங்களைப்போலக் காட்சியளித்தது.
வெளியே தூரத்தில் கேட்கும் நாய்களின் குரைப்பொலி… காற்றில் மிதந்து வரும் அந்த ஈர மண்வாசனை…
Advertisement
மேல்மாடி அறையின் அகலமான மர ஜன்னல் திறந்திருக்க, அதன் வழியே வெளியேறிக் கொண்டிருந்த வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தாள் மீரா.
Advertisement
அவள் தேனி மாவட்டத்தின் ஆகச்சிறந்த நிர்வாக அதிகாரி.
ஆனால், இந்த நள்ளிரவு நிசப்தத்தில் அவளிடம் எந்த அதிகாரத் தோரணையும் இல்லை. பதினாறு வருடங்களுக்கு முன்பு ஏழாம் வகுப்பில் பயந்து நடுங்கி, அழுதுகொண்டிருந்த அதே சிறுமியாகத்தான் அவள் அங்கிருந்தாள்.
ரஞ்சு இரண்டு ஃகாபி கப்புகளுடன் உள்ளே வந்தாள்.லூஸ் டி-ஷர்ட். மெஸ்ஸி பன். முழுக்க கேஷுவல் உடையில் இருந்தாள்.
Advertisement
“இந்த பங்களா ஹாரர் மூவி செட் மாதிரி இருக்கு டி இரவுல…”
கனத்துக்கிடந்த அந்த அறையின் சூழலை ரஞ்சு லேசாக மாற்ற முயன்றாள்.
மீரா சிரிக்கவில்லை.
அவளது பார்வை இன்னும் வெளியில்தான்.
தூரத்தில் மேகமூட்டத்துக்குள் மலைகள் மமங்கலாக தெரிந்தன.
மெல்ல வந்து அவளது தோளைப் பற்றிக் கொண்டாள் ரஞ்சு.
“டீ… நான் நாளைக்கு கிளம்பணும்… நீ டியூட்டி போகணும்… தூங்கப் போலாமா?”
அதற்கும் பதில் இல்லை.
ரஞ்சு இப்போது தன் குரலை மாற்றினாள்.
“மீரா… இப்படியே நாம உட்கார்ந்திருந்தா என்ன ஆகப் போகுது?
“நீ இப்போ ஒரு டிஸ்ட்ரிக்ட் கலெக்டர். இந்த நாட்டோட ஒட்டுமொத்த நிர்வாகமும் உன் விரல் நுனியில இருக்கு. ஆனா இன்னமும் உன்னோட ஏழாங்கிளாஸ் கிரஷ்ஷைத் தேடிட்டு இருக்கியா?”
மீரா அவளை மெதுவாக ஆனால் தீர்க்கமாக பார்த்தாள்.
“அது க்ரஷ் இல்ல ரஞ்சு.”
அந்த ஒரு வரியில் இருந்த ஆழம் ரஞ்சுவை அமைதியாக்கியது.
சில நொடிகள், ஜன்னலுக்கு வெளியே பெய்யத்தொடங்கியிருந்த தூறலின் சத்தம் மட்டுமே அந்த அறையை நிரப்பியது.
“அந்தத் திருவிழா… அத்தனை கூட்டம்…பயங்கரமான சத்தம்… நான் கத்துனேன், ஆனா யாரும் வரலடி,” மீராவின் குரல் லேசாக நடுங்கியது. “அப்போ அவன் மட்டும்தான் வந்தான்.”
“நீ குழந்தைடி அப்போ……..” ரஞ்சு நிதானமாகச் சொன்னாள்.
மீராவின் குரல் மெதுவாக நடுங்கியது.
அவளது கண்களில் ஒளி மாறியது.
“அவனும் அப்போ குழந்தைதான் ரஞ்சு! ஆனா… எனக்காக துணிஞ்சு கல்லெறிஞ்சான். என்னை எவ்வளவு அழகா பாதுகாப்பா கூட்டிட்டு வந்தான் தெரியுமா?” ஒரு நீண்ட அமைதி.
ரஞ்சு அவளை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
ஒரு மனிதனை, ஒரு சம்பவத்தை இத்தனை வருடங்களாக மனதின் மிக ஆழமான ரகசிய அறையில் பூட்டி வைத்திருப்பது சாத்தியமா என்று அவளுக்கே ஒருகணம் பயமாக இருந்தது.
“சரி. மீரா… இப்படியே நாம இருந்தா விடை கிடைச்சிடுமா? அந்த ‘வீரா’ எங்க இருக்கான்னு நாம கண்டுபிடிக்கணும்ல?
“எக்ஸாக்ட்லி”…
அடுத்து என்ன பண்ணலாம்னு சொல்லு?”
மீரா திரும்பினாள்.
“நம்ம கிட்ட என்ன டீடெயில்ஸ் இருக்கு?”
“பெயர்… வேற.”
“அது ஃபுல் நேம்ஆ?”
“இல்ல. அவன் பாட்டி அவனை ‘வீரா’ன்னு கூப்பிட்டது மட்டும் ஞாபகம்.”
“ஸ்கூல்?” “ தெரியல.”
ரஞ்சு தலையை பிடித்துக்கொண்டாள்.
“செம்ம. இந்தியால வீரா என்ற பெயர்ல பாதி பாப்புலேஷன் இருக்கும்.”
மீரா சிரிக்கவில்லை.
அவள் மிகவும் சீரியஸாக இருந்தாள்.
“நான் கண்டுபிடிப்பேன்.”
ரஞ்சு அவளை சில விநாடிகள் பார்த்துவிட்டு திடீரென்று மொபைலை எடுத்தாள்.
“ஃபைன். டெக்னாலஜி யூஸ் பண்ணலாம். “என்ன?”
“ஏ.ஐ ஃபேஷியல் ரீகன்ஸ்ட்ரக்ஷன்.” மீரா புருவம் சுருக்கினாள்.
“இப்போ ஏஐ தொழில்நுட்பத்துல முக மறு சீரமைப்பு (Facial Reconstruction) வசதி இருக்குடி. சின்ன வயசு முகத்தை வச்சு, அவங்க வளந்தா எப்படி இருப்பாங்கன்னு கணிக்க முடியும். நீ அவனோட அடையாளங்களைச் சொன்னா, ஒரு தோராயமான முகத்தை அது உருவாக்கித் தரும்.”
மீரா மெதுவாகத் தலையசைத்தாள். “எனக்கு அவனோட முக அமைப்புகள் அவ்வளவா நினைவில் இல்லை ரஞ்சு. நான் உணர்வுப்பூர்வமா மட்டும் தான் அந்தச் சம்பவத்தோட பிணைக்கப்பட்டிருக்கேன்.” அவளது குரல் தணிந்தது. “ஆனா…அவனோட கண்கள் மட்டும் ரொம்ப தீர்க்கமா ஞாபகம் இருக்கு. ஒரு வட்ட முகம், கூர்மையான மூக்கு. அவ்வளவுதான்.”
பிறகு அவளே மெலிதாகச் சிரித்தாள். “இது வேலைக்கு ஆகாதுடி.”
ரஞ்சு உதட்டை சுளித்தாள்.
அந்த நொடியில் மீராவின் கண்களில் திடீரென்று ஒரு ஒளி மின்னியது.
கலெக்டர் இன்ஸ்டிங்க்ட்.
அவள் வேகமாக லேப்டாப்பை தன்னருகே இழுத்தாள்.
“நாம சிவில் சர்வன்ட்ஸ் டி.”
ரஞ்சு புருவம் உயர்த்தினாள்.
“அதனால?”
“நமக்கு இருக்குற ஆக்சஸை வச்சுதான் ஆரம்பிக்கணும்.”
அவளது குரல் இப்போது துள்ளியமாக மாறியது.
“அந்த சம்பவம் நடந்தப்போ அவனுக்கு பதிமூன்று அல்லது பதினான்கு வயசு இருக்கும்.”
ஸ்கிரீனில் சில ஃபைல்கள் திறக்கப்பட்டன.
“அவனோட பேரு ‘வீரா’னு முடியணும்… இல்லனா ‘வீரா’ன்னு ஆரம்பிக்கணும்…”
அவள் விரல்களை கீபோர்டு மீது வேகமாக ஓடவிட்டாள்.
“உதாரணத்துக்கு… வீரமணி… வீரவேல்… இளவீரன்…”
ரஞ்சுவின் முகம் மெதுவாக மாறியது.
“ஓஹோ…”
“சிம்பிள்.”
மீரா சேரில் நேராக அமர்ந்தாள்.
“அந்த சம்பவம் நடந்தப்போ அவன் ஏழாவது படிச்சிருக்க வாய்ப்பு அதிகம்.”
அவள் தொடர்ந்து பேசினாள்.
“நாம மாநிலத்தின் குடியிருப்போர் தரவு மையத்தையும் (ஸ்டேட் ரெசிடென்ட் டேட்டா ஹப்) டேட்டாவையும்… அந்த பார்டிகுலர் டவுன்ல இருந்த பள்ளிகளோட ழைய சேர்க்கைப் பதிவேடுகளையும் கிராஸ்-ரெஃபரன்ஸ் பண்ணலாம்.”
ரஞ்சுவின் கண்கள் பெரிதானது.
“டீ… சீரியஸாவா?”
“ஆமா”
“அப்போ?”
“அந்த வருடம் அந்த ஏரியா ஸ்கூல்ஸ்ல செவன்த் ஸ்டாண்டர்ட் படிச்ச பாய்ஸ்ல…”
அவள் மெதுவாக ஸ்கிரீனை திருப்பிக்காட்டினாள்.
அதுல ‘வீரா’ தொடர்பான பெயர்களை மட்டும் பிரிக்கலாம்.”
ரஞ்சு வியப்பின் எல்லைக்கே சென்றாள். அவளது குரலில் இப்போது உற்சாகம் தொற்றிக்கொண்டது. ” “வாவ்…இது நிஜமாவே ஒரு அசாத்தியமான யோசனைடி!”
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆர்க்கைவ்போர்டல்.
அதன் கீழ்…
டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆக்சஸ்.
மாவட்ட ஆட்சியருக்கான பிரத்யேக யூசர் ஐடி மூலம் மாநில தரவு மையத்தின் சர்வரோடு லாகின் ஆனாள்.
ரஞ்சு அதிர்ச்சியுடன் அவளை பார்த்தாள்.
“ஓஹோ… நீ ஆல்ரெடி ஆரம்பிச்சிட்டியா?”
மீரா ஸ்கிரீனை ஸ்க்ரோல் செய்தாள்.
“மூணு வாரமாச்சு.”
“வாட்?!”
“2010-2011 காலகட்டத்து பதிவேடுகள் சில மாவட்டங்கள்ல முழுமையா டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்கு. இது பொதுமக்களோட பார்வைக்குக் கிடைக்காது. ஆனா அதிகாரப்பூர்வ ஆவணக் கோரிக்கை மூலமா நாம எடுக்க முடியும். இது சட்டவிரோதமும் இல்லை.”
அவள் தொடர்ந்து ஃபில்டர்ஸ் போட்டாள்.
வயது வரம்பு ……பதினாறு வருடங்களுக்கு முந்தைய ஸ்கூல் அட்மிஷன் என்ட்ரீஸ் ……மேல் ஸ்டூடன்ட்ஸ் …..நேம் கிளஸ்டர் ஃபில்டரிங்!
கணினியின் திரையில் வட்ட வடிவிலான குறியீடு சில நொடிகள் சுழன்றது.
பிறகு, ஒரு நீண்ட பட்டியல் பச்சைக் குறியீட்டுடன் திரையில் தோன்றியது. 508 மேட்சிங் என்ட்ரீஸ் ஃபவுண்ட்!
“காட் இட்!”
ரஞ்சு உற்சாகமாக கத்தினாள்.
“நாம நினைச்ச மாதிரியே ஃபில்டர் ஆயிருச்சு!”
பிறகு ஸ்கிரீன் பார்த்தவுடன் முகம் சுருங்கியது.
“ஆனா… மீரா… லிஸ்ட் இன்னும் ரொம்ப பெரியதா இருக்கு டி.”
மீரா அமைதியாக கீபோர்டில் டைப் செய்தாள்.
“ஃபெஸ்டிவல் நடந்த லொகேஷன் ரேடியஸ் மட்டும் நேரோ பண்ணலாம்.”
மீண்டும் லோடிங்.
சில விநாடிகள் கழித்து…..
39 மேட்சிங் என்ட்ரீஸ்!
ரஞ்சு உறைந்துபோனாள்.
“ ப்பா… சைக்கோ லெவல் டிடர்மினேஷன்.”
மீரா திரையை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நான் கண்டுபிடிக்கணும்.”
அந்த ஒரு வரியில் பதினாறு வருட ஏக்கம் இருந்தது.
ரஞ்சு மெதுவாக அவளை பார்த்தாள்.
“மீரா… ஒரு கேள்வி கேட்க்கட்டா?”
“ஹ்ம்.”
“நீ அவனை காதலிக்கிறியா… இல்ல அவனோட அந்த மெமரி …நினைவை மட்டும் காதலிக்கிறியா?”
மீராவின் விரல்கள் கீபோர்டு மீது நின்றது. அவள் மெதுவாக நாற்காலியில் சாய்ந்தாள். “எனக்கே சில நேரங்கள்ல அது புரியறதில்லை ரஞ்சு…”
ரஞ்சு மெதுவாக சொன்னாள்.
“பிகாஸ்… இரண்டுக்கும் டிஃபரன்ஸ் இருக்கு டீ”
திடீரென்று ரஞ்சுவின் முகத்தில் ஒரு குறும்புப்புன்னகை அரும்பியது. “சரி, ஆனா இப்போ ஒரு விஷயம் மட்டும் ரொம்பத் தெளிவாத்தெரியுது.”
“என்ன?”
“உன் ஐ.பி.எஸ் ஆபீசருக்கு ரொம்ப கஷ்டம்.”
மீராவின் முகம் உடனே மாறியது.
“ரஞ்சு…”
“ஹலோ? என்ன லுக்கு? ஃபவுண்டேஷன் கோர்ஸ்ல இருந்து புவர் ஃபெல்லோ உன்னைத் தேடித் தேடி வர்றான். நீ அவனைப்பார்த்தாலே அப்படியே பாதையை மாத்திட்டு ஓடிடுற..”
மீரா சங்கடமாக ஜன்னலை பார்த்தாள்.
வர்மன்!
அந்த பெயர் மனதில் வந்தாலே ஏன் இதயம் அமைதியாக இருக்க மறுக்கிறது என்று அவளுக்கே புரியவில்லை.
“அவன் நல்லவன் டி!” அவள் மெதுவாக சொன்னாள்.
“அது தான் ப்ராப்ளமா?” மீரா அமைதியாக இருந்தாள்.
ரஞ்சு மெதுவாக சிரிப்பை குறைத்தாள்.
“அவனுக்கு உன்னை பிடிக்கும்.”
“தெரியும்.”
“அப்புறம் ஏன் இப்படி?”
மீராவின் குரல் இந்த முறை லேசாக உடைந்தது.”நான் அவனுக்கு வீணான நம்பிக்கையைக் கொடுக்க விரும்பலடி. என்னால அவன் மனசு கஷ்டப்படக்கூடாது.”
“ஆனா நீ ஏற்கனவே அவனுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்துட்ட மீரா,”
“மீரா அதிர்ச்சியுடன் அவளை பார்த்தாள்.
“ஒருத்தன் ஒருத்தியைக் காதலிக்கணும்னா, அவ அவனோட பேசிச் சிரிக்கணும்னு அவசியமில்ல. சில நேரங்கள்ல, அவ அவனைத் தவிர்த்துட்டு ஓடுற அந்த ஓட்டத்துலயே அவனுக்கான பதில் கிடைச்சிடும்.”
மீராவின் மூச்சு மெதுவாக கனமானது.
ஏனெனில் அது உண்மை.
வர்மன் அவளை பார்க்கும் பார்வை…அவள் ஓடிப்போகும் ஒவ்வொரு தருணமும்…
அதெல்லாம் சாதாரணம் இல்லை.
அதே நேரத்தில் ஸ்கிரீனில் இருந்த 39 பெயர்கள் மெதுவாக ஸ்க்ரோல் ஆனது. வீரபாண்டியன்…..மலைச்சாமி வீரன் …..வீரமுத்து ……சங்கவீரன்
…..செம்பியன் வீரா …..பரமவீரன் ….. வேலவீரன்……….. வீரமணி ….வீரபாண்டி .. கொடிவீரன்!
ரஞ்சு திரையை பார்த்துக்கொண்டே மெதுவாகசொன்னாள்:
“இவ்வளவு பேரையும் ஸ்டடி பண்ணணும் டி…”
மீரா அந்தப் பெயர்களையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்தப் பெயர்களுக்குள் ஏதோ ஒரு விடை அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தது.
அதே நள்ளிரவு அமைதியில் மீராவின் கைப்பேசித்திரை திடீரென்று பிரகாசமாக ஒளிர்ந்தது.
லேப்டாப்பில் இருந்த அந்த முப்பத்தொன்பது பெயர்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த மீரா, சட்டென்று தன் கைப்பேசியை நோக்கினாள். அதிர்வுகளோடு திரையில் அந்தப் பெயர் பளிச்சிட்டது… ‘வர்மன் அழைப்பு…’
மீரா பதிலேதும் சொல்லாமல் கைப்பேசியைக்கையில் எடுத்தாள். அவளது விரல்கள் பச்சை நிற ‘அட்டெண்ட்’ பட்டனை அழுத்தலாமா வேண்டாமா என்று ஒரு கணம் தயங்கின.
வர்மனிடமிருந்து வரும் அழைப்புகள் எப்போதுமே அவளுக்குள் ஒரு இனம்புரியாத குற்ற உணர்ச்சியைத் தந்துவிடும். அவனது தூய்மையான காதலைத் தட்டிக்கழித்துக் கொண்டே இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவளது மனசாட்சி அவளைக் குத்திக்கொண்டே இருந்தது
“என்னாச்சு ? எனிதிங் இம்பார்ட்டன்ட்?”
மீரா கலெக்டர் தோரணைக்கு மாறி வினவினாள்.
வர்மன் உணர்ச்சிகள் துடைத்த குரலில் கூறினான்.
“நம்ம மாவட்ட எல்லையில இருக்கிற அந்தப் பழைய ‘வாணிஸ்ரீ சர்க்கரை ஆலை’ (Vanishree Sarkarai Aalai) பத்தி தெரியும்ல?”
” எஸ்! “
“கடந்த ரெண்டு வருஷமா அங்கே தொழிலாளர்களுக்குச் சம்பள பாக்கி இருக்கு. இப்போ அந்த ஆலையை மொத்தமா மூடப்போறதா மேனேஜ்மென்ட் சொல்லியிருக்காங்க. இதனால அங்கே இருக்கிற மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொதிச்சுப் போயிருக்காங்க.”
“ஆமா அந்த ஃபைல் என் டேபிளுக்குவந்தது. ஆனா இன்னைக்கு ராத்திரி என்ன நடந்துச்சு?”
“நாளைக்குக் காலைல அந்த ஆலைக்கு முன்னாடி தொழிலாளர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய ‘உண்ணாவிரதப் போராட்டமும் மறியலும்’ (Agitation) நடத்தத் திட்டமிட்டிருக்காங்க.இன்பார்மர்ஸ் தகவல் தந்திருக்காங்க”
“ஓ…””நான் இப்போவே ஆலை இருக்கிற ஏரியாவுக்குக் கூடுதல் போலீஸ் படையை அனுப்பிட்டேன் மீரா. நாளைக்குக் காலைல கலெக்டர் என்ற முறையில நீயும் ஸ்பாட்டுக்கு வர வேண்டியிருக்கும். நாம ரெண்டு பேரும் சேர்ந்துதான் இதை ஹேண்டில் பண்ணனும்.”
“எஸ், யூ ஆர் ரைட்…வந்திற்றேன்”
“இது வெறும் தொழிலாளர்களோட போராட்டம் மட்டும் இல்லை …. இதுக்கு பின்னால பெரிய அரசியல் இருக்கு,” வர்மனின் குரலில் இருந்த எச்சரிக்கை மீராவை நிமிரச் செய்தது.
“ஆமா! இந்த ஆலை நிர்வாகம் யாருடையது தெரியுமா? எதிர்க்கட்சித் தலைவர் தனபாலோட பையனோடது.
ஆனா, இப்போ இந்தத் தொழிலாளர் யூனியனுக்குப்(Labour Union) பின்னாடி இருந்து, நாளைக்கு நடக்கப்போற போராட்டத்தை முழுசா ஸ்பான்சர் பண்ணி வழிநடத்துறது யாரு தெரியுமா? “
நம்ம ஆளுங்கட்சி எம்.எல்.ஏ கொடிவீரன்தான்!”
‘கொடிவீரன்!’
வர்மன் சொன்ன அந்தப் பெயரைக் கேட்டதும் மீராவின் கண்கள் சட்டென்று விரிந்தன. லேப்டாப் திரையில் அவளது விரல்கள் தேடிய அந்த முப்பத்தொன்பது பெயர்களில் கடைசியாக இருந்த பெயர் அது!
