மதுரை – தேனி நெடுஞ்சாலையில் எஸ்பி வர்மனின் டார்க் க்ரே நிற ஸ்கார்பியோ கார், அந்தி சாயும் பொழுதின் செவ்வானத்தை நோக்கிச் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது.
காரின் ஏசி குளிரையும் மீறி, ரஞ்சனாவின் முகத்தில் ஒரு புதிய விடியலின் பரவசம் அப்பட்டமாகத் தெரிந்தது.
Advertisement
Advertisement
திடீரெனத் தன் கையில் இருந்த கைப்பேசியில் ஏர்லைன் ஆப்ஸில் மூழ்கியவள் , ” காட் இட் … என்ற படி வர்மன்… காரை அப்படியே மதுரை ஏர்போர்ட் பக்கமா திருப்புங்க. நான் இப்பவே சென்னைக்குப் போகணும்!” என்றாள் படபடப்புடன்.
Advertisement
பின் இருக்கையில் தன் சிந்தனைகளில் உறைந்து போயிருந்த மீரா சட்டென நிமிர்ந்து அமர்ந்தாள்.
“என்னடி சொல்ற? ஏர்போர்ட்டா? ஏன் இவ்வளவு அர்ஜென்ட்டா எங்க போற?”
“நான் சென்னைக்குக் கிளம்புறேண்டா மீரா. இப்பவே நேர்ல போய் …அம்மாகிட்டயும் அப்பாகிட்டயும்
அவரப்பத்தி …
செம்பியன் பத்திப் பேசணும். போன்ல பேசினா செட்டாகாது. அதான் விடியறதுக்குள்ள மெட்ராஸ்ல இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்,” என்று சொல்லும்போதே ரஞ்சனாவின் கன்னங்களில் வெட்கத்தின் சிவப்பு படர்ந்தது.
வர்மன் ரஞ்சனாவைப் பார்த்துத் சிரித்தான்.
“என்ன ரஞ்சு மேடம்… அதுக்குள்ள இவ்வளவு ஃபாஸ்ட்டா? பையனைப் பார்த்த உடனே ஃப்ளைட் புக்கிங் வரைக்கும் போயாச்சா? போலீஸ்காரங்க நாங்க… எங்க
ப்ரோட்டோகால்ல கூட இந்த வேகத்துல ஆக்ஷன் எடுக்க மாட்டோமே!” என்று கிண்டலடித்தான்.
” அதான் தெரியுமே நீங்க இந்த செஞ்சுரி ஓல்ட் ஹீரோயின் கூட டர்ட்டில் ஸ்பீட்ல ரொமான்ஸ் ஓட்டுறது” என நக்கலடிக்க….
இப்போது சிரிப்பது மீராவின் முறையாயிற்று.
அவள் ‘கலகல’வெனக் கியூட்டாகச் சிரித்து, வர்மனை வம்புக்கு இழுத்தாள். “இவளைப் பத்தி உங்களுக்குத் தெரியாது வர்மன். இவன்னு இல்லை …பெண்கள எடுத்துக்கோங்க .. ஒரு தடவை மனசுல முடிவு பண்ணிட்டா, அதுக்கப்புறம் அவங்களால ஒரு நிமிஷம் கூடக் காத்திருக்க முடியாது. உங்க டிபார்ட்மென்ட் ஃபைல் மாதிரி இழுத்துட்டே போக மாட்டாங்க!” என்றாள் மீரா.
” ஓஹோ” என்றான் வர்மன் யோசனையாக .
மீராவின் பார்வை வர்மனின் அகன்ற தோள்களின் மீது நிலைத்தது. ‘ஆமாம், பெண்கள் முடிவு பண்ணிட்டா காத்திருக்க மாட்டாங்கதான்.’ அவளது மனமும் இப்போது அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தது. வர்மன் தான் தன் உலகம் என்று தெரிந்த அந்த நொடியில் இருந்து, அவளது கைகள் அவனையறியாமல் தவித்தன. இந்த ஓடும் காரிலேயே வர்மனைப் பின்னால் இருந்து இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டு, தன் பதினொரு வருடத் தேடலின் ரகசியத்தையும், அவன் மீது வைத்திருக்கும் தீராத காதலையும் இப்போதே, இந்த விநாடியே அவனிடம் கொட்டிவிட வேண்டும் போல அவளுக்குள் ஒரு ஏக்கம் அலைமோதியது. ஆனால், ரஞ்சனா இருப்பதால் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியானாள்.
கார் மதுரை விமான நிலையத்தின் பளபளக்கும் நுழைவாயிலில் வந்து நின்றது. ரஞ்சனா தன் பையை எடுத்துக்கொண்டு, “வர்மன்… தேங்க்ஸ். மீரா, பத்திரமா போயிட்டு வாடி,” என்று விடைபெற்றுக்கொண்டு, தன் புதிய கனவுகளோடு ஏர்போர்ட்டுக்குள் ஓடினாள்.
ரஞ்சனா இறங்கியதும் காருக்குள் மீண்டும் நிசப்தம் சூழ்ந்தது. வர்மன் காரை மீண்டும் நெடுஞ்சாலையை நோக்கிச் செலுத்தினான். ஆனால், காரின் வேகம் இப்போது பாதியாகக் குறைந்திருந்தது.
சிறிது தூரம் சென்றதும், வர்மன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, முழுமையாகப் பின் இருக்கை நோக்கித் திரும்பினான். மீரா இன்னும் அதே ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன மேடம்… இன்னும் பின்னாடியே உட்கார்ந்திருந்தா நான் என்ன உங்களுக்குப் பர்சனல் டிரைவரா? ஒழுங்கா முன்னாடி வந்து உட்காருங்க,” என்று வர்மன் தன் வழக்கமான அதட்டல் கலந்த காதலோடு உத்தரவிட்டான்.
மீரா மறுப்பு ஏதும் சொல்லாமல், கதவைத் திறந்து முன் இருக்கையில் வந்து அவனருகே அமர்ந்துகொண்டாள்.
கார் மீண்டும் வேகம் எடுத்தது. மாலை நேரத்துச் சூரியன் மேகங்களுக்குள் மறைய, அந்திப் பொழுது காரின் முன் கண்ணாடிகள் வழியே செவ்வானமாய் உருகி வழிந்தது. வர்மன் ஒரு கையை ஸ்டீயரிங்கில் வைத்தபடி, அவளை ஓரக்கண்ணால் பார்த்துத் தன் கள்ளப் புன்னகையை உதிர்த்தான்.
“என்ன கலெக்டர் மேடம்… ‘பெண்கள் முடிவு பண்ணிட்டா காத்திருக்க மாட்டாங்க’ன்ற ரூல் உங்களுக்கும் பொருந்துமா? நீங்களும் ஏதோ முடிவெடுத்துட்டுத்தான் முன்னாடி வந்த மாதிரித் தெரியுதே?” என்று வர்மன் கண் சிமிட்டிக் குறும்புத்தனமாகக் கேட்டான்.
மீரா சட்டெனத் தன் முகத்தில் வழிந்த வெட்கத்தை வாரிச் சுருட்டிப் பேசினாள். “ரொம்ப ஓவரா கற்பனை பண்ணாதீங்க எஸ்பி சார்! நீங்க ஏதோ தனியா கார் ஓட்ட கஷ்டப்படுவீங்களேன்னு ஒரு மனிதாபிமானத்துல தான் முன்னாடி வந்தேன். பாவம், வயசான காலத்துல தனியா டிரைவ் பண்றாரேன்னு ஒரு இரக்கம்!”
“என்னது… வயசான காலத்துலயா?!” வர்மன் காரின் வேகத்தை இன்னும் சற்றே குறைத்து, அவளது முகத்திற்கு நேராகத் தன் முகத்தை லேசாகச் சாய்த்தான். “அப்போ கல்யாண மண்டபத்துல மயங்கி விழும்போது, கரெக்டா ரூட் மேப் போட்டு இந்த ‘வயசானவனோட’ நெஞ்சுலயே வந்து சாய்ந்தீங்களே… அதுவும் இந்த மனிதாபிமான கணக்குலதானா? “
“வர்மன்!” என்று மீரா முகம் சிவக்க, அவனது கையில் தன் மெல்லிய விரல்களால் பலமாகக் கிள்ளினாள். ” நீங்க ரொம்ப வம்பு பண்றீங்க. நானா வேணும்னா விழுந்தேன்? அங்கே ஏசி ஓவரா இருந்தது, தலை சுத்திடுச்சு, அவ்வளவுதான்.”
“எனக்கென்னவோ நீங்க வேணும்னே தான் என் லாக்-அப்ல வந்து சரணடைஞ்ச மாதிரித் தோணுது கலெக்டர் மேடம்,” என்றான் வர்மன், அவளது கிள்ளிய விரல்களைத் தன் பலமான கரங்களால் சட்டெனப் பற்றிப் பிடித்துக்கொண்டே. .
“கையை விடுங்க வர்மன்… கார் ஓட்டும்போது என்ன விளையாட்டு? அப்புறம் எஸ்பி வண்டியே விபத்துல சிக்கிடுச்சுன்னு நியூஸ்ல வரும்,” என்று அவள் மிரட்டுவது போல் சொன்னாலும், கையை இழுக்க முயலவில்லை.
“வரட்டுமே… ‘மாவட்ட எஸ்பியைத் தன் கைக்குள் வைத்துள்ளார் கலெக்டர்’னு ஹெட்லைன்ஸ் போடட்டும், எனக்குச் சம்மதம்தான்!” வர்மனின் குரல் இப்போது விளையாட்டிலிருந்து மாறி, அவளது ஆன்மாவைத் தீண்டும் மென்மையாக மாறியது.
அவளது கைகளை தன் மார்போடு வைத்து க்கொண்டான்.
அவனது இதயத் துடிப்பின் வேகம் அவளது உள்ளங்கையில் ரகசியக் கவிதை பாடியது. மீரா தன் கையை இழுக்காமல், அவனது தீர்க்கமான விழிகளை நேருக்கு நேர் பார்த்து, ஒரு அழகான குறும்புப் புன்னகையோடு சொன்னாள்.
” இப்படி அரெஸ்ட் பண்ணா நான் என்ன பண்றது?”
” அரெஸ்ட் என்னவோ இப்போ தான் நான் பண்ணுறேன்… பட் அதுல பெரிய ஆக்ஸி மொரோன் என்ன தெரியுமா? நீ உன் ஆயுள் கைதியா எப்பவாவோ என்ன மாத்திட்ட…!”
” ப்பா… வாட் எ டயலாக்…” என இவள் சிரிக்க….
சூழல் ரம்மியமாய் மாறியது. காருக்குள் ஏதோ மாறியிருந்தது.
அது வெறும் அமைதி இல்லை.
இரண்டு இதயங்களும் ஒரே வார்த்தையைச் சொல்லத் தயங்கி நின்ற தருணம்.
மீரா ஆழ்ந்த அமைதியிலும் அழகாய் மஞ்சள் தேவதையாய் அமர்ந்திருந்தாள்.
வர்மன் ஸ்டியரிங்கை ஒரு கையால் அலட்சியமாகப் பிடித்தபடி ஓட்டிக்கொண்டிருந்தான்.
வெளியே அந்தி வானம் செந்நிறத்தில் உருகிக் கொண்டிருந்தது.
உள்ளே
” என் ஆயுள் ரேகை நீயடி…
என் ஆணி வேரடி …..
சுமை தாங்கும் எந்தன்
கண்மணி…..
என்னை சுடும் பனி”
ஜீவி உருகிக்கொண்டிருந்தான்.
திடீரென்று வர்மன் கேட்டான்.
“மீரா…”
“ம்ம்?”
“நீ என்னை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்போ என்ன நினைச்ச?”