Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே 32.1

பூவே 32.1

காலையிலே பரபரப்பு கூடியது ஊர் மையத்தில்.



Advertisement

பேருந்து ஊர் எல்லையிலே நிறுத்தப்பட்டது…

Advertisement

வெற்றி அவன் நண்பர்களுடன் சேர்ந்து, என்னென்ன செய்ய வேண்டும் என்று மற்ற இளைஞர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தான்.

Advertisement

“மாறா, நீ இருந்து பாரு… நா மற்ற இடங்களை பாத்துட்டு வரேன்” என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தான்.

Advertisement

வர்றவங்களுக்கு எல்லாம் சரியா இருக்கா என்று பார்த்துக்கொண்டிருந்தான் வெற்றி.

“பங்காளி, நீ கேட்ட மாறி டவுன்ல இருந்து தண்ணி பத்து கேன் எடுத்துட்டு வந்துட்டேன். கூடவே அக்கம் பக்க ஊருக்கும் ரேடியோவுல சொல்லச் சொல்லி ஏற்பாடு பண்ணிட்டேன்” என்று சட்டையைத் தட்டிவிட்டான் பாண்டி.

அவன் சொன்னதை கேட்டு திரும்பியவன், “சரிடா… எதுவும் சலம்பல் ஆகக்கூடாது. பசங்களுக்கு சொல்லி நீயும் கூட இருந்து பாரு” என்று பார்வையாலே சுற்றிப் பார்த்தான்.

“ஆளுங்க எல்லாரும் வரிசையில வரணும்… அதையும் பாத்துக்கோ” என்று சொல்லும் போது…

வண்டி சத்தம் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

டாக்டர் இருவரும் காரில் வர,

அவர்களை தொடர்ந்து மருத்துவ உபகரணங்கள், மருந்து மாத்திரைகள் ஏற்றிய வேனும் வந்து நின்றது.

அதை பார்த்த வெற்றி, “மாறா! டாக்டர் வந்துட்டாங்க.. பசங்கள சொல்லி சாமான்களை இறக்க உதவி பண்ண சொல்லு” என்றான்.

“சரிடா பங்காளி” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த இளைஞர்களை அழைத்துக்கொண்டு வேனை நோக்கி சென்றான் மாறன்.

வெற்றி கார் அருகே வந்தவன்.. “வாங்க டாக்டர் சார்” என்று இருவரையும் வரவேற்றான்.

“தேங்க்ஸ் வெற்றி சார்.. நாங்க எதிர்பார்த்ததை விட இடத்தை நல்லாவே ரெடி பண்ணியிருக்கீங்க” என்றார் குமரன்..

“நா பெருசா எதுவும் பண்ணல டாக்டர் சார்.. இந்த ஏற்பாடு மொத்தமும் எங்க ஊர் இளைஞர்களும், மக்களும் பண்ணது சார்” என்றான் சிரிப்புடன் வெற்றி.

“நீங்க ரொம்பவே கிரேட் சார்.. யார் நல்ல விஷயம் பண்ணாலும், நா தான் பண்ணேன்னு பேர் வாங்காம, மத்தவங்களுக்கு அந்த பாராட்டை தர்றீங்க. தலைமை சரியா இருந்தா மக்களும் நல்லா இருப்பாங்கன்னு… நீங்க உங்க செயல்ல காட்டிட்டீங்க சார்” என்றார் மற்றொரு டாக்டர் ஜனகன்.

“அந்தளவுக்கு இல்லை டாக்டர் சார்.. நீங்க ரெண்டு பேரும் என்னை ரொம்ப புகழுறீங்க.. காய்ச்சல் வந்தா நீங்க தான் மருந்து தரணும்” என்று வெற்றி சொன்னதும்…

இருவரும் சிரித்தனர்.

“உள்ள வாங்க டாக்டர் சார்.. நா நிக்க வச்சே பேசுறேன்” என்று இருவரையும் அழைத்துக்கொண்டு வந்தவன்…

ஒரு நொடி அப்படியே நின்று விட்டான் தன்னவளை கண்டு.

வேனிலிருந்து ஒவ்வொருவராக இறங்கினர். வேல்விழி கடைசியாக இறங்கியவள், பார்வை ஒரு நொடி அந்த மைதானம் முழுவதும் ஊர்வலம் சென்று வந்து…

“ஏலே! வேலு நீயா புள்ள” என்று சந்தோஷத்தில் பாண்டி குதித்தான்.

கீழே இறங்கி சிரித்துக்கொண்டு, “நா தான் மாமா… எப்படி இருக்கீங்க?” என்றாள்.

“எனக்கு என்ன புள்ள… நல்லாதான் இருக்கேன். நீ நல்லாருக்கியா புள்ள?” என்றான் பாண்டியும்.

“நல்லாயிருக்கேன் மாமா” என்றாள்.

“நா ஒரு கிறுக்கன்… நீங்க போய் வேலையை பாருங்க” என்றான் மற்றவர்களை கண்டு தயங்கியபடி.

“மாமா… நா புள்ளைதான். புதுசா மரியாதை தராத… சரிங்களா?” என்றாள் அவளும்.

“சரித்தா… நீ போய் வேலையை பாருத்தா. நா இதெல்லாம் எடுத்து வைக்கணும்” சொல்லி நகர்ந்தான்.

“ஏய் வேலு… இவராடி உன் ஆளு?” என்றாள் அம்சவள்ளி.

“வந்த வேலையை பாருடி” என்று மற்றவர்களுடன் நடந்தாள்.

மொத்தம் நான்கு செவிலியர்களுடனும், இரண்டு டாக்டர்களுடனும் அந்த மருத்துவ முகாம் தொடங்கியது.

வேல்விழி வந்ததை தெரிந்து அங்கிருந்தவர்களும் அவளை நலம் விசாரித்து சென்றனர்..

வெற்றி அவளை விட்டு தள்ளி நின்றானே தவிர, அவளை நெருங்க சிறு முயற்சி கூட செய்யவில்லை..

பார்வை மட்டுமே அப்பப்போ அவளிடம் சென்று வந்தது..

வேல்விழிக்கும் அதே நிலை என்று சொல்ல முடியாது. அதைவிட மேலான எண்ணத்தில் தான் இருந்தாள்.

கடைசியாக இந்த ஊரிலிருந்து போன காட்சிக்கும், இன்று வந்து நின்ற காட்சிக்கும் எத்தனை வித்தியாசம்..

காலம் காயம்பட்ட இடத்தில் மயிலிறகு கொண்டு வருடியது போலிருந்தது அவளுக்கு..

வரிசையில் வந்த மக்களுக்கு பரிசோதனை செய்து, ஓ.பி. சீட்டில் எழுதி டாக்டரை பார்க்க சொல்லி அனுப்பி வைத்தனர்..

அதே நேரம் மாறனிடம் சொல்லி தன் அப்பத்தாவையும், அப்பாவையும் வர வைத்தான்..

வேல்விழி தான் நர்ஸாக வந்திருக்கும் செய்தி ஊருக்குள் காட்டுத்தீயாக பரவியது..

பேத்தியை பார்க்க மாமியாரும், கணவரும் செல்வதை கண்டு அவரும் பின்னோடு வந்தார்..

‘எங்க? மகன் மறுபடியும் அவள் கிறுக்கு பிடித்து சுத்தப்போறானோ!’ என்ற எண்ணங்கள் மனதில் உலா வரவும்..

வேகவேகமாக நடந்தவர், கால்கள் கல் தடுத்து கீழே விழுந்தார்..

“ஏன்த்தா, பாத்து வந்தா தான் என்ன? எந்த கோட்டையை பிடிக்க இந்த வேகம் புடிச்சு ஓடுறவ..?” என்று தெருவில் வந்த பெண்மணி கேட்டுக்கொண்டே காளியம்மாவை கை பிடித்து தூக்கினார்..

எழுந்து நின்ற காளியம்மா, தன் கை, கால்களை உதறிவிட்டார்..

“ஏந்தா, உச்சி வெயில்ல விழுந்திருக்கத்தா, உம்மாமியாகிட்ட சொல்லி வேப்பிலை அடிக்க சொல்லு” என்றதும்..

“அந்தளவுக்கு ஒன்னுமில்லை பெரியம்மா.. லேசா சுளுக்கு தான் இருக்கு.. நா எண்ணெய் வச்சு நீவிக்குறேன்” என சொல்லிக்கொண்டே காளியம்மா காலை எட்டி வைக்க, “கடக்” என்று சத்தம் போட்டது அவரின் வலது கால்..

“என்னவோத்தா, பாத்து போ” என்று சொல்லவும்..

“சரி பெரியம்மா” என்று திரும்பிக்கூட பார்க்காமல் நடந்தார்..

மையத்திற்கு வந்த மயிலம்மா, சுற்றி முற்றி தன் பேத்தியை தேடினார்..

கூட்டம் மொத்தமும் அங்கிருந்த செவிலியர்களை சூழ்ந்துக்கொண்டதால், அவர் பார்வை வட்டத்துக்குள் வரவில்லை வேல்விழி..

“அப்பத்தா” என்று அவர்களை நெருங்கினான் வெற்றி..

“எய்யா, எம்பேத்தி கண்ணுக்கே தெரியலையேய்யா” என்று சொல்லும்போதே அவர் கலங்கி நின்றார்..

“அப்பத்தா, உம்பேத்தி இங்கதான் இருக்கா” என்று அவர் கண்ணீரை துடைத்தான் வெற்றி..

“எனக்கு தெரிலையேய்யா!” என்று மீண்டும் பார்வையை சுழற்றினார்..

அதே நேரம் வேல்விழி, முடிந்தளவுக்கு தன் வேலையை சுறுசுறுப்பாக செய்து திரும்பி பார்த்தவள், விழி இமைக்க மறந்து போனது..

“ஏய் வேலு, என்ன வேடிக்கை பாக்குற நீ?” என்று அருகிலிருந்த அம்சவள்ளி கேட்க,

“ஒரு நிமிஷம் நீ பாத்துக்கடி.. நா கொஞ்ச நேரத்தில் வரேன்” என்று அவளின் பதிலை கூட எதிர்பார்க்காமல், தன் பாட்டியை நெருங்கினாள்..

“பாட்டி” என்று அவரை கட்டிக்கொண்டாள்..

அவள் வந்த நொடியே வெற்றி அங்கிருந்து விலகினான்..

நெருங்கி வந்த பேத்தியை கண்டவர், விலகி போகும் பேரனையும் கண்டார்.. ‘இவர்களின் நிலையென்ன?’ என்று எதிரே நின்ற கோவில் கோபுரத்தை கண்டார்..

பாட்டியை கொஞ்சி தவிர்த்து, தாத்தாவிடம் பாச மழையை பொழிந்தாள் வேல்விழி..

ராமைய்யா சைகையில் பேச, இவளோ வாய் வலிக்க வலிக்க பதில் சொன்னாள்..

அங்கே சுற்றி நின்ற மக்களின் பார்வை மொத்தமும் வெற்றி, வேல்விழி மீது தான் இருந்தது..

அங்கு நடக்கும் விஷயத்தை காளியம்மாவிடம் கூற காத்திருந்தனர்..

பேத்திக்கும் பேசறதுக்கு ஆயிரம் இருந்தாலும், வாய் வார்த்தை ஊமையாகி போனது..

தன் பேத்தியை ஒரு முறை அணைத்து, நெற்றியில் முத்தம் கொடுத்து விலகினார் மயிலம்மா..

“போத்தா, போய் நீ ஜோலியை பாரு..?” என்று அனுப்பி வைத்தார்..

மூச்சு வாங்க வந்த காளியம்மா கண்டது..

மகன் எங்கோ ஓர் மூலையில் இருந்ததை தான்.. வேல்விழி மீது மருந்துக்கு கூட பார்வை போகவில்லை அவருக்கு..

தன் அன்னையை அந்த இடத்தில் கண்ட வெற்றிக்கு இன்னும் கோவம் தான் வந்தது..

கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு தன் இடத்துக்கு வந்து நின்றாள்..

அவளிடம் தண்ணீர் பாட்டிலை கொடுக்க, மூச்சு வாங்குமளவுக்கு குடித்து கீழே வைத்தாள்..

“இப்ப ஓகேவாடி?” என்றாள் அம்சவள்ளி..

“ம்” என்று தலையாட்டினாள்..

“ஆமா, வந்தது யாரு?” என்று அம்சவள்ளி கேட்க,

“என் பாட்டி.. கூட வந்தது தாத்தா..” என்றாள்..

“ஓ! அப்ப ஹீரோ எங்கடி?” என்று சுற்றி முற்றி பார்த்துக்கொண்டே கேட்டாள்..

“அதை தெரிஞ்சு நீ என்ன பண்ணப்போற?” என்று அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்தாள் வேல்விழி..

“ச்சீ.. என்னை இப்படி பாக்காத எருமை.. உன் ஹீரோ எனக்கு அண்ணன்டி. ஆள் தெரியாம சைட் அடிச்சிட்டா, ஒரே அவமானமா போயிடும்டி..” என்றாள் சோகமாக..

“எனக்கு இந்த ஊர்ல ஒரே ஒரு அண்ணன் தான்டி.. மத்தவங்க எல்லாம் மாமா, சித்தப்பா, பெரியப்பா முறை வரும்” என்று விட்டு தன் வேலையை தொடர்ந்தாள் வேல்விழி..

“அடி சண்டாளி.. கடைசி வரை அவ ஆள் யாருன்னு காட்டலையே!” என்று முணுமுணுத்தாள்..

பளிச்சென்று இருந்த இடம் சற்று நேரத்தில் இரவு போல் காட்சியளித்தது..

“சட்” என மழைத்துளி அங்கிருந்தவர்கள் கை, தலை என்று தன் வருகையை காட்டியது..

“டாக்டர் சார், மழை வரும்போல இருக்கு.. எல்லாத்தையும் எடுத்து வச்சிடலாம்” என்று சொல்லிக்கொண்டே அவர்களை நெருங்கினான் வெற்றி..

அவர்களும் வேற வழி இல்லாமல் சரி என்றதும்..

தன் நண்பர்களிடம் சொல்லி மொத்த மருந்து மாத்திரைகளையும் பஞ்சாயத்து அறையில் வைத்தனர்..

அதுவரை சிறு தூறலாக இருந்த மழைத்துளி

வேகம் கொண்டு ஊற்றியது..

காத்தும் மழையும் சரிசமமாக இருக்க,

அடுத்து என்ன என்ற நிலை தான் அங்கிருந்தவர்களுக்கு..

மக்கள் மொத்தமும் தூறலிலேயே அவர்கள் வீட்டுக்கு ஓடியிருந்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!