குழலிசைக்கு வீரசிம்மனின் எண்ணம் புரிந்து வந்த திசை பார்த்து ஓட..
Advertisement
வீரசிம்மா இப்படி பின்னாடி வந்து தன்னை தூக்குவான் என்று அறியாதவள், அவன் தூக்கியதும் ராஜாவை அதிர்ச்சியாக பார்க்க..
Advertisement
அவளை தன்னோடு மிக அருகில் பார்த்தவன், பேச்சிலந்து போனான் அவளின் அழகில்..
ராஜாவை அதிர்ச்சியாக பார்த்தவளின் கன்னத்தோடு கன்னம் உரசியவன், “சரியாக உட்கார், இல்லை என்றாலும் பரவாயில்லை, இப்படியே வருவதாக இருந்தாலும் எனக்கு சம்மதமே” என்று அவளை தன் மடிமீது அமர்த்திக்கொண்டு குதிரை ஓட்டிக்கொண்டே பேச..
அவளோ அப்போது தான் அவன் மடிமீது அமர்ந்து ஒட்டிக்கொண்டிருப்பதை உணர்ந்தவள்,, சரியாக குதிரை மேல் அமர்ந்தவள்..
அவனை திரும்பி பார்க்க, ராஜாவின் முகம் அவளின் முகத்தருகே இருக்க.
“எங்கே போகிறோம்”? என்று கண்களால் வினவா…
“வந்து பார்” என்றவன்.
அவனின் நந்தவனத்திற்கு அழைத்து வந்திருந்தான்,, .
வீரசிம்மன் நந்தவனம் வந்ததும் இறங்கி,.
குழலிசை இறங்குவதற்குகாக அவனின் கை நீட்ட..
நீட்டிய கையை பிடித்துக்கொண்டவள்.
மெல்ல இறங்கினாள்.
அவளின் பளிங்கு விரல்களை பிடித்து மெல்ல குதிரையில் இருந்து இறங்கி விட்டவன்…
அந்த இடத்தை காண்பித்தான்,, அழகிய நந்தவனம், சிறிய குளம், குளத்தில் அழகிய அன்னப்பறவைகள், பக்கத்தில் வெள்ளை மயில்கள் நடனம் ஆடிக்கொண்டிருக்க, மான்கள் எல்லாம் இவர்களை பார்த்ததும் துள்ளி ஓடியதை பார்த்து குழலிசை ஆசையாக பார்த்து நிற்க..
“உனக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா”? என்று குழலிசை பார்த்து வீரசிம்மா கேட்க..
ரொம்ப பிடித்திருக்கின்றது என்று தலையாட்டியவள், வெள்ளை மயிலை காட்டி நான் வெள்ளை மயிலை பார்த்ததே இல்லை, என்று வெள்ளை மயிலை காட்டி சந்தோஷப்பட்டவள்..
மயில் தோகை விரித்து ஆடுவது போல் பாவனை செய்து சிரித்தவளை..
பார்த்து சந்தோஷப்பட்டவன்..
அவளை “வா” என்று கைபிடித்து அவன் வளர்க்கும் பச்சை கிளியிடம் அழைத்து சென்றவன்..
கிளியை பார்த்து “என் இசை” என்று அறிமுகம் படுத்திவைக்க..
கிளி அதன் குரலில் ” குழல் இசை ராணி, வாங்க,, வாங்க” என்று கிளி கொஞ்சி, கொஞ்சி அதன் குரலில் பேச…
கிளி பேசியதை கேட்டவள்,, பொங்கி சிரித்தாள்..
மீண்டும் “குழல் இசை….” என்று கிளி அழைக்க..
குழலிசைக்கு அந்த கிளியை கொஞ்ச தோன்ற, கிளியின் அருகில் வந்தாள்.
அந்த கிளிக்கு என்ன தோன்றியதோ..
குழலிசை தோளில் அமர்ந்து கொள்ள…
குழலிசைக்கு கிளி வந்து தன் தோளில் அமர்ந்ததும் கொஞ்சம் பயம் வர..
பக்கத்தில் இருந்த வீரசிம்மனின் தோளை பிடித்துக்கொள்ள…
“ஒன்னும் பண்ணாது டா'” என்றவன்..
குழலிசைக்கு நந்தவனத்தை சுற்றிக்காட்டியவன், “உனக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா” என்று கேட்க.
“ரொம்ப” என்றவள் அவளின் கையை விரித்து காட்ட…
“அப்போ என்னை” என்று வீரசிம்மன் கேட்டதும் முகம் வாடி போனது.. குழலிசைக்கு..
“என்னாச்சு இசை? என்னை உனக்கு பிடிக்கும் தானே, அப்போ நாமா சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்களாமா? “. என்று ராஜா கேட்டதும்..
கண்கலங்கியவள் ஜாடை மொழியில் ராஜாவிடம் பேசினாள்..
அவள் ஜாடை காட்டி பேசுவதை உன்னிப்பாக கவனித்தான் ராஜா.
“நான் ஒரு ஊமை, எனக்கு பேச முடியாது என்னால் எப்படி உங்களை கல்யாணம் பண்ண முடியும்,,? வேண்டாமே”?. என்றாள் மனதை கல்லாக்கி கொண்டு..
“ஏன், உனக்கு பேசுவதை தவிற வேற என்ன குறை உன்னிடம் இசை” என்றதும்…
“நான் உங்களோடு பேச வேண்டாமா? இந்திரா சேனா நாட்டின் அரசி பேச முடியாதவள் என்றால், அது எவ்வளவு அசிங்கம், நான் வேண்டாம் உங்களுக்கு ” என்று ஜாடை காட்டி பேசியவளுக்கு கண்ணீல் இருந்து கண்ணீர் கசிந்து அவள் முகத்தை நனைக்க..
“நான் வேண்டாமுன்னு சொல்லுறவ, நான் கூப்பிட்டதும் ஏன் டி வந்தா,,, என்னை பார்த்து ஏன் வெட்கப்பட்ட,, சிரிச்ச, பொய் சொல்லாத உன் கண்ணுல என் மேல இருக்குற காதல் தெரியுது,, நான் முடிவு பண்ணிட்டேன் நீதான் என் மனைவி, இந்திரா சேனா நாட்டின் அரசி” என்றதும்.,..
குழலிசை வேண்டாம் என்று ஏதோ மறுத்து பேச வர,, அவளை இறுக்கமாக சில நிமிடம் அணைத்துக்கொண்டவன்,..
“இப்போ சொல்லு என் கண்ணை பார்த்து சொல்லு டா நான் வேண்டாமா,? உனக்கு..
என்னை தவிற வேற ஒருவனிடம் உன்னால இப்படி இருக்க முடியுமா” என்றதும்
“இல்லை” என்று அழுதவளை தன்னோடு இன்னும் சேர்த்து இறுக்கமாக அணைத்து கொண்டவன் “நான் பாத்துக்கிறேன்”….
என்றான்..
சிறிது நேரம் அப்படி இருந்தவர்கள், நேரம் ஆகுவதை நினைத்து மனமே இல்லாமல் குழலிசையை அவள் வீட்டில் விட கிளம்பினான்,,..
இங்கே வரும் போது அவன் முகத்தைபார்க்க தயங்கியவள்,, இப்போது அவனின் மடிமீது அமர்ந்தபடியே, குதிரை சவாரி செய்து கொண்டிருக்க..
வீரசிம்மாவிற்க்கு அவளை விட மனமே இல்லை ஒரு கையாள் அவளை வளைத்தப்படியே பிடித்து வைத்திருந்தவன்,, இன்னொரு கையாள் குதிரையை ஓட்டிக்கொண்டு வந்தான் .. அவளை அவ்வப்போது முத்தமிட்டுக்கொண்டே வீரசிம்மா வர..
குழலிசைக்கு சிரிப்பு.
என்ன இது என்பாள். அவன் முத்தமிட்டதை பார்த்து..
“என் தேவியை நான் கொஞ்சிக்கொண்டு வருகிறேன்” என்றவனின் மேல் குழலிசைக்கு இன்னும் காதல் கூட.
அவனின் கழுத்தை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்..
இருவருக்கும் அப்படி ஒரு திருப்தி, தங்கள் துணையை கண்டு பிடித்து விட்டோமே என்று.. அந்த திருப்தியோடு அவளை அவள் இடத்தில் வந்த விட வந்தான்..
அந்த விடியற்காலையில் அனைவரும் குழலிசைக்காக காத்திருக்க.
ராஜாவுக்கு அப்போது தான் புரிந்தது அவளை நள்ளிரவு அழைத்து சென்றதை..
அவர்கள் இருவரும் வர விடியற்காலை 4 மணியாகி விட
லீலாவதி கோபமாக இருக்க அவர் அருகில் சென்று குதிரையை நிறுத்தினான் வீரசிம்மா….
என்ன என்பது போல் ஜாடையில் கேட்டவள், பின்பு சுற்றி அவர்கள் இருக்கும் இடத்தை பார்த்து விட்டு..
வேகமாக குதிரையில் இருந்து இறங்கி அனைவரையும் பார்க்க.
லீலாவதி மகளை பார்த்து முறைத்தப்படி நின்றிருந்தவர்..
குழலிசை கன்னத்தில் பளார் என்று அறைந்திருந்தார்.
“அத்தை” என்று கத்திய வீரசிம்மா தன்னோடு குழலிசை இழுத்துக்கொண்டான்..
குழலிசைக்கு அப்படி ஒரு அழுகை, பிறந்ததில் இருந்து ஒரு முறை கூட அடித்ததே இல்லை லீலா,, இன்று தாய் அடிக்கும் படியாகி விட்டதே என்று குழலிசைக்கு அழகை வர…
குழலிசை அடித்த நொடி லீலாவதி மகளை திட்ட ஆரம்பித்தார், “நம்ம தகுதி என்ன, நீ எப்படி இந்த நாட்டு ராஜாவை திருமணம் செய்ய ஆசைப்படலாம்?” என்று கத்தியவர் மீண்டும் குழலிசையை அடிக்க போக..
வேந்தன் வந்து லீலாவை பிடித்துக்கொண்டார்,, “என்ன பண்ணுற லீலா “? என்று..
“இவளுக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தால் வீரசிம்மாவோடு சென்றிருப்பாள், இவளை நான் இப்படியா வளர்த்தேன்,, போர் வீரனை போல தானே வளர்தேன், இவளை” என்று கோபத்தோடு அடிக்க போக..
“உன் தந்தை சிவவீரபத்திரசேனா ராஜா செய்த காரியத்தை நீயும் செய்ய போகிறாய்யா?, அவருக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்” என்று வேந்தன் கேட்டதும்..
“என்ன உலருகிறீர்கள், நானும் அவரும் ஒன்னா, என்னை உயிரோடு ஆற்றில் விட்டார், என் தந்தை”, என்றதும்..
“அவரும் என்னை தகுதி அற்றவன் என்று தானே என்னை மறுத்தார்,, நீயும் உன் தந்தை போலவே என் மகளையும் தண்டிக்கிறாய்”,….
“நான் அப்படிசொல்லவில்லை,, ராஜாவை எப்படி இவள் மணக்க முடியும்”, என்று கணவனிடம் கேட்க..
“நீ எப்படி என்னை மணந்தாய்,, முன்னாடி நீ இந்திரா சேனா நாட்டின் இளவரசி தானே, என்னை ஏன் விரும்பினாய்,, எனக்காக உயிரை குடுக்க துணிந்தாய்,, இப்பொழுது என் மகளை நீ குறை சொல்கிறாய்,, விரும்பியவர்களுக்கே, திருமணம் முடிந்து வைப்பதே நம் மரபு,, அதை தகுதி,பணம்,, என்று பேசி இவர்களை பிரித்து விடாதே”? என்று வேந்தன் லீலாவின் தவறை சுட்டிக்காட்டியவர்..
வீரசிம்மன் தோளில் சாய்ந்த அழுத மகளை, “குழலிசை” என்று வேந்தன் அழைக்க..
தந்தை அழைத்தது அவளால் சொல்ல முடியவில்லை அவளின் நிலைமையை. ராஜாவை பார்த்து எனக்கு அவரை பிடித்திருக்கிறது என்று தந்தையிடம் வாய் பேச முடியதவள் ஜாடைகாட்டி பேச.
மகளின் உணர்வுகளை புரிந்துக்கொண்டவர்,, மகளிடம் ஏதும் சொல்ல வேண்டாம்,, எனக்கு புரிகிறது என்று அவளின் கண்ணீரை துடைத்தவர்..
வீரசிம்மாவிடம் “நாளை உங்க தந்தை, தாய்யையும் அழைத்து வாருங்கள் ராஜா, திருமணத்தை பத்தி பேசலாம்” என்று வேந்தன் சொல்ல.
அவரின் கைகளை பிடித்துக்கொண்ட ராஜா, “ரொம்ப நன்றி எங்களை புரிந்து கொண்டதற்கு” என்றவன்.. லீலாவதியிடம் சென்றவன்..
“என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா அத்தை,? உங்கள் மருமகனாக என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்”, என்று கூற..
அமைதியாக நின்ற லீலா குழலிசையின் தவிப்பான முகத்தை பார்த்து, இனி நான் பிடிவாதம் பிடித்து என்ன பயன் என்று நினைத்தவள்.
அண்ணன் மகனை பார்த்து,…
“இந்த நாட்டின் ராஜாவை பிடிக்காமல் போகுமா,, உங்கள் இஷ்டபடியே நடக்கட்டும் ” என்று சம்மதம் சொல்ல..
உடனே கிளம்பிய வீரசிம்மன் தந்தை தாயிடம் அனைத்தையும் சொல்லி,, மறுநாள் அழைத்து வந்து விட.
அனைவருக்கும் சந்தோஷம்,, அடுத்த மாதம் பங்குனி என்பதால், இந்த மாதமே திருமணம் பேசி முடித்தனர்.
இன்னும் பத்து நாள்களில் திருமண என்பதால்.. வீரசேனா தங்கை குடும்பத்தை இந்திரா சேனா நாட்டிற்கு அழைத்து வந்து விட்டார்,, லீலா எவ்வளவு தடுத்தும் அவர் கேட்க வில்லை..
திருமணம் நடக்கும் ஐந்து நாட்கள் முன், வீரசிம்மாவுக்கு, குழலிசைக்கு திருமண நிச்சயம் கோலகலமாக நடந்தது, இந்திரா சேனா நாடே திருவிழா போல் காட்சி அழித்தது,,.
நிச்சயம் முடிந்த மறுநாள், இந்திரா சேனா நாட்டின் பக்கத்து நாடு செஞ்சிநாட்டில் இருந்து ஒரு தகவல் வந்திருந்தது நாளை உங்கள் நாட்டிற்கு போர் தொடுக்க வருகிறோம் என்று செய்தி இருக்க..
அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்,, செஞ்சி நாடு இவர்களை விட பல மடங்கு பெரிய நாடு,, இரு நாட்டிற்க்கும் நல்ல உறவு முறை இருந்தது, பின்பு ஏன் என்று அனைவரும் குழம்பி நிற்க..
செஞ்சி நாட்டின் ஒற்றன் ஒருவன் வந்து “நாளை காலை, இந்திரா சேனா நாட்டிற்கு போர் தொடுக்க வருகிறோம்” என்று அறிவிக்க..
“ஏன் இந்த முடிவு, நாம் இரு நாடும் நட்புடன் தானே பழகி வந்தோம்”.. என்று செஞ்சி நாட்டின் ஒற்றனை பார்த்து கேட்க…
“எங்க சேந்தனன் ராஜா அவர் மகள் மீனாட்சியை, வீரசிம்மா ராஜாவுக்கு திருமணம் பேச முடிவு செய்திருந்தார்,, அப்படி அந்த திருமணம் முடிந்திருந்தால், இரு நாடுமே ஒன்றாக இருந்திருக்க கூடும், இப்போது நீங்க உங்க அத்தை மகளை, எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல், திருமணம் செய்ய போவதை எங்க சேந்தனன் ராஜாவா ஏற்க முடியவில்லை, நாளை போரில் சந்திக்கலாம்” என்று அந்த ஒற்றன் கூறி சென்று விட…
இந்திரா சேனா நாடு நாளை நடக்கும் போருக்காக தயார் ஆனாது,..
முதலில் போர் எங்கே இருந்து தொடங்குவதில் இருந்து, யார், யாருக்கு எந்த, எந்த பகுதிகளில் எதிரிகளை தாக்குதல் நடத்த வேண்டும்,, எந்த மாதிரியான, உக்திகளை கையாள வேண்டும் என்று முடிவு செய்தனர்.