இருவரும் கோவில் பிராகாரத்தை மூன்று முறை சுற்றி வந்துவிட்டு அங்கேஏ முன்பக்கமாக பிள்ளையார் சன்னதியின் எதிரில் அமர்ந்து கொண்டார்கள்.கோவிலில் ஏதோ விசேஷம் போலும். உற்சவரை மண்டபத்தில் வைத்திருந்தார்கள். கூட்டம் அங்கே அலை மோதியது. சீதாவும் ரகுவும் நமஸ்காரம் செய்துவிட்டு வெளியே வந்தார்கள். சீதா ரகுவிடம் “எனக்கு இங்கே *** ஸ்டோர்ஸ் போகணும். அப்படியே மாடவீதியில் கொஞ்சம் பர்ச்சஸ் . லியோ காஃபி போய் காஃபிபொடி வாங்கணும். லன்ச் சாப்பிடணும்.எல்லாத்துக்கும் நீங்க என்கூட வரணும்”என்றாள் . அவள் சொன்னவிதத்தில் ரகுவரன் சிரித்துவிட்டான்.
இருவருமே பேச வந்த விஷயத்தை அவசரமாக ஆரம்பிக்க விரும்பவில்லை. அவள் சொன்ன எல்லாவற்றையும் வரிசையாக செய்துகொண்டே வந்தவர்கள் காபிபொடி வாங்கி கொண்டு அங்கே அருகே இருந்த ஹோட்டலில் மதிய உணவையும் முடித்தார்கள்.சற்று தொலைவில் ஒரு கேக் ஷாப் இருக்கவே அதை பார்த்தவள்,”இங்கே எஃலெஸ் கேக் ஸ்பெஷல்”என்று சொல்லிக்கொண்டே அதன் உள்ளே நுழைந்தாள் . ஏற்கனவே மாடவீதியில் சீதா காய்கறி வாங்கும்பொழுது இவனும் தங்கள் வீட்டுக்கு தேவையானவற்றை வாங்கிக்கொண்டான். சீதா “இது மாவடு சீசன். இப்போ போச்சுன்னா இது மாதிரி திரும்ப கிடைக்காது”என்று சொல்லிக்கொண்டு அதை வேறு வாங்கி பைகளை நிரப்பினான் காபிப்பொடி கடையிலும் அந்த மாதத்திற்கு தங்கள் குடும்பத்துக்கு தேவையானவற்றை வாங்கிக்கொண்டான். சீதாவால் எடுத்துவர முடியாது என்று அவனும் கூட சேர்ந்து அவளது பைகளை எடுத்துவந்தான்.இதோ இப்போது கேக் ஷாப்பில் இருவரும் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். சீதா தங்களது குடுமபத்துக்கென கேக்கை வாங்கிக்கொண்டு,கூடவே ரகுவரனின் மகளுக்கும் சேர்த்து வாங்கிகொண்டாள்.அதை அவள் அப்போது ரகுவரனிடம் கொடுக்கவில்லை.
இருவரும் ஒருவாறாக கைகளில் இருந்த பைகளை கார் வரையில் எடுத்துக்கொண்டு வந்து டிக்கியில் வைத்தார்கள். இருவருக்கும் லேசாக மூச்சு வாங்கியது. வெயில் வேறு நானும் உங்களோடுதான் இருக்கிறேன் என்றது. காரில் ஏறி அமர்ந்து கொண்டு சீதா ஏசியை போட்டாள் .வெளியே இருக்கும் வெயிலுக்கு இன்னும் ஏசி அவர்களை குளிர்விக்கவில்லை.
Advertisement
பிறகு எவ்வளவு நேரம் தள்ளிப்போட்டாலும் இதற்க்கு மேல் முடியாது என்று அவர்கள் பேச வேண்டிய நேரமும் வந்தது. ரகுவரனுக்கு சீதாவுடன் இன்று கடைவீதியை சுற்றிவந்து பொருட்களை வாங்கியது மனதில் இதத்தை கொடுத்தது. கண்மூடி கார்சீட்டில் சாய்ந்து கொண்டான். கொஞ்சம் யோசித்தவள் செம்மொழி பூங்காவுக்கு காரை செலுத்தினாள் .அங்கே அமர்வதற்கும் ,பேசுவதற்கும் இடம் உண்டு. நிழல்குடைகள் இருக்கிறது என்று யோசித்தவளாக காரை செலுத்திக் கொண்டு இருந்தாள் . அவர்கள் வந்து சேர பத்து நிமிஷத்துக்கு குறைவாகவே ஆனது.
காரை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு இருவரும் பூங்காவினுள் சென்றார்கள். இருவர் மனதிலும் பூமாவை கூட்டிக்கொண்டு இங்கே வரவேண்டும். சந்தோசப்படவும்,விளையாடவும் இங்கே இடம் நிறைய இருக்கிறது என்ற எண்ணம் ஓடியது. கொஞ்சம் உள்பக்கமாக இடத்தை தெரிவு செய்து அமர்ந்து கொண்டார்கள்.முதலில் யார் பேச்சை ஆரம்பிப்பது என்று தயக்கம்.
சீதா வெகுநேரம் ரகுவரன் பேசுவான் என்று பார்த்திருக்க பெண்ணின் மனம் இதை ஏற்குமா என்று தயங்கி கொண்டே அமர்ந்திருந்தான். சீதாவுக்கு பொறுமை காற்றில் கரைந்து கொண்டிருந்தது. அவளே ஆரம்பித்தாள்.
Advertisement
“நீங்க என்கிட்ட நிறைய பேசணும்னு சொல்லியதா ஞாபகம் ரகு . அதுக்கு முன்னால நா பேசிடவா?” அவளது கேள்வியை உள்வாங்கியவன் ‘சரி’என்றுமட்டும் தலையசைத்தான்.
Advertisement
“நா ஒரு சாப்ட்வார் என்ஜினீயர். இப்போ ப்ராஜெக்ட் ஹெட்டா வேலை பண்ணுறேன்.வயசு நாற்பத்தொண்ணு . ஏற்கனவே ஒரு காதல் தோல்வி இருக்கு.ரொம்ப வருஷம் அதுலேந்து வெளியே வர முடியாமல் இருந்தேன்.பிறகு அப்பா அம்மா ரொம்ப போர்ஸ் பண்ணதால கல்யாணம் செஞ்சுக்கலாம்னு தோணிச்சு. நா லவ் பண்ணவருக்கு இப்போ கல்யாணம் முடிஞ்சு மூணு பசங்க இருக்காங்க. நா மட்டும் ஏன் மூவ் ஆகாம இருக்கணும்னு ஒரு எண்ணம். அதோட சமீப காலமா மனசுக்குள்ள ஒரு பயம். அப்பா அம்மா காலத்துக்கு பிறகு எனக்குன்னு யாரு இருப்பாங்கன்னு தோணுது. சம்பளம், சொத்து, பேங்க்பாலன்ஸ் எதுக்கும் குறைவு இல்லை. மனஸு நிம்மதி?
எனக்கு இப்போ உடம்புக்கு துணை வேணும்னு கல்யாணம் செஞ்சுக்க ஆசை படல ரகு . மனதுக்கு துணை,தோழமை வேணும். நீங்க அதிகம் பேச மாட்டிங்க . சிரிக்கவும் கூட மாட்டிங்க . பெண் குழந்தை இருக்கு. கல்யாணம் ஆகிருச்சு. மனைவி இறந்தாச்சு.அதோட உங்க காதலும் இறந்தாச்சு. ஒருவேளை இதைத்தான் நீங்க சொல்ல வந்தீங்கன்னா எனக்கு தெரியும்.
காதல் தொரத்துப்போனா எப்படி இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் ரகு . பட் உங்களோடயும்,பூமாவோடயும் என்னோட வாழ்க்கையை இணைச்சுக்க ஆசையா இருக்கு ரகு .காதல் … திரும்ப வராதுன்னு யாரவது சொன்னா அவங்க முட்டாள்னு இப்போ தோணுது.என்னோட காதல் தோத்துபோனப்போ இனிமே வாழவே முடியாது.என்னோட வாழ்க்கைல இன்னொரு ஆண் வரமுடியாது.மனஸு உடைஞ்சு போயாச்சு.ஒட்டாது…இப்படி நிறைய நினச்சேன். பட் ,என்னோட வாழ்க்கைல அது திரும்பவும் வந்திருக்கு. எஸ்,ஐ லவ் யூ . வெறும் செக்ஸ் வச்சு நா கல்யாணம் செஞ்சுக்கனும்னா எனக்கு கண்டிப்பா மாப்பிள்ளை கிடைப்பாங்க.பட் ,நா தேடுறது என்னோட சோல்மெட் .
Advertisement
இன்னொரு முறை வேறே யாரையும் காதலிக்க என்னால முடியாது ரகுவரன். நீங்க நோ சொன்னா நா வருத்தம் எல்லாம் படமாட்டேன். வெளிநாட்டு ப்ராஜெக்ட் வாங்கிட்டு குடும்பத்தோட வெளிநாடு போவேன். அவ்ளோதான். அண்ட் என்னோட வீட்டுலேந்து எங்க அம்மா கடுமையா இந்த கல்யாணத்தை எதிர்பாங்க .ஒருவேளை நாம கல்யாணம் செஞ்சிட்டாலும் அவங்க என்னோட பொறுப்பு. ஒருவேளை நா சம்பாதித்ததை அவங்ககிட்டே கொடுத்துட்டு கட்டின சுடிதாரோடு உங்க வீட்டுக்கு வருவேன்.நீங்கதான் மேற்கொண்டு பார்த்துக்கணும்”.
அவள் தனது மனதில் இருப்பதை சொல்லிவிட்டாள் . எந்த ஒரு பூச்சும் இல்லாமல் அவள் சொன்னது ரகுவரனை அசைத்து பார்த்தது. இதுதான் நான்.இப்படித்தான் என் நிலைமை என்று அவள் சொல்லிவிட்டாள் . ஏற்கனவே காதலில் தோற்று இருக்கிறாளாமே.. இவளை போன்ற பெண்ணை இழப்பவன் அதிர்ஷ்டம் குறைவு தான் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்ட ரகு ,”அப்போ நீயும்தான் வேணாம்னு சொல்லுற”என்று கமெண்ட் கொடுத்தது.
தனக்குள்ளே ஏதோ வாதிடல் .பிறகு பேச ஆரம்பித்தான் ரகுவரன்.”லிஸின் சீதா. எனக்கு உன்னை ரொம்பவே பிடிக்குது. இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா மைதிலியை என் கூட இல்லைன்னு நா பீல் பண்ணல.உன்னை கல்யாணம் செஞ்சுட்டு என் குடும்பத்துல ஒருத்தியாக்கிக்க நா சம்மதிக்கிறேன்னு வச்சுக்கோ. என்னால கண்டிப்பா உனக்கு நல்ல தோழனா இருக்க முடியும். அன்பை கொடுக்க முடியும்.காதலிக்க முடியுமான்னு சொல்ல முடியாது. நீ ஆசைப்படும் உனக்கான குடும்பம் இருக்கு சீதா. ஆனால் ,கல்யாண வாழ்க்கை நிச்சயம் வேறே மாதிரிதான்.எதிர்பார்ப்புகள் கூடும். அங்கே காதல் இல்லன்னா வெறுமை தான் மீதம் இருக்கும். ஏன்டா இந்த கல்யாணத்தை செஞ்சுக்கிட்டோம்னு தோணிச்சுனா அதுக்கு பிறகு அங்கே எல்லாமே பூஜ்யம் தான். என்னால உன்னை காதலிக்க முடியும்னு தோணல.புரிஞ்சிக்க”என்றுவிட்டான்.சொல்லும் பொழுது அவனது கண்கள் லேசாக கலங்கியது. மனதில் இனம் புரியாத வலி பரவுவதை உணர்ந்தவன் தனக்குள் நடக்கும் மாற்றங்களில் தடுமாறினான். தான் சொன்னது சரிதானா..என்று மீண்டும் கேட்டுக்கொண்டான்.
அவ்வளவு பேசியபிறகு அவன் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்த பெண்ணுக்கு அவன் மனம் படும்பாடு புரிந்துவிட்டது. மாறுவது மனம் என்பதை அறையாதவளா என்ன ?
” ரகு கூல். மனசு நிச்சயம் மாறும். காலம் எல்லாத்தையுமே மாத்துது . 1984ல நா பிறந்தப்ப இருந்தா மாதிரியா இன்னிக்கு உலகம் இருக்கு?
நீங்க பத்து வயசுல இருக்கிறா மாதிரியா இப்போதும் இருக்கீங்க . நாம கல்யாணம் செஞ்சுக்கலாம். செக்ஸ் பத்தி எனக்கு பெரிய எதிரிபார்ப்பு இல்ல. ஒருத்தருக்கு ஒருத்தர் காட்டுற அன்பும்,காதலும் ஒண்ணுதான். டோன்ட் கன்பியுஸ் யுவர் ஸெல்ப்.” என்றுவிட்டாள் .அவள் சொல்வது சரியாய் இருப்பது போலத்தான் ரகுவரனுக்கு தோன்றியது. எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது. ஆனால் ஒன்று அவளை பிடித்த்திருந்தால் மட்டும் அவள் சொல்வதை ஏற்க தோன்றும்.
“எனக்கு கொஞ்சம் டைம் வேணும் சீதே!நீ சொல்றது சரி மாதிரிதான் இருக்கு.ஆனா சரியான்னு தெரியல. யோசிக்கணும். உன்னை பொறுத்தவரைக்கும் இந்த கல்யாணம் அவசியமா இருக்கலாம்.எனக்கு … இன்னொரு முறை மணமேடை ஏறணும்னா ரொம்பவே வலிக்கும்” ரகு சொல்லியே விட்டான்.
இதற்குப்பிறகும் அவனை உந்தித்தள்ள அவளுக்கு பிடித்தம் இல்லை.மனதின் ஏதோ ஒரு மூளையில் அவன் திருமணத்திற்கு ஒத்துக் கொள்வான் என்று நம்பிக்கை இருந்தது. இருவரும் கிளம்பி சுதாவின் வீட்டுக்கு வந்தார்கள். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பியும் விட்டார்கள். அத்தை வீட்டில் வாங்கி வந்திருந்த கேக்கை கொடுத்துவிட்டு சீதா கிளம்பினாள்.ஆவலுடன் அங்கே அத்தனை கண்களும் இவர்களை பார்க்க., சீதா சொல்லியே விட்டாள் .”எல்லோரும் இப்படி குகுறுன்னு பாக்காதீங்க. அவருக்கு யோசிக்க நேரம் வேணுமாம்.” ரகு சீதாவை பாவமாக பார்த்துக்கொண்டிருந்தான்.
வீடு திரும்பும்பொழுது மகளின் அருகில் கிருஷ்னன் அமர்ந்திருக்க ,ரகுவரன் பின்சீட்டில் உட்கார்ந்து கொண்டான். கிருஷ்ணனுக்கு லேசாக ஏமாற்றம் தான். அதை பின்னுக்கு தள்ளியவருக்கு மனைவியை எப்படி சமாளிப்பது எண்டு கவலை பிடித்து ஆட்டியது . ராதா உண்மையில் காளி அவதாரத்தில் இருந்தாள் . அவளின் மனதில் அவ்வளவு கோவம்
வீடு வந்து சேர்ந்த கணவரிடமும் மகளிடமும் எதுவும் பேசவில்லை. வாங்கி வந்திருந்த பொருட்களை எடுத்து வருவதற்கு ரகுவரனும் உதவி செய்ததில் ராதாவுக்கு பிபி ஏறியது. எதையும் மறைக்க சீதா தயாராக இல்லை. காலையில் செல்லும்பொழுது அம்மா தன்னையும் ரகுவரனையும் சேர்த்துவைத்து பார்த்ததை சீதாவும் பார்த்துக்கொண்டேதான் சென்றாள் .அதோடு இதுவரை பொய் சொல்லி பழக்கம் இல்லை. தேவையற்ற இடங்களில் உண்மையை மறைப்பாள்தான்.ஆனாலும் இப்போது மறைக்க அவளிடம் ஒன்றும் இல்லை.
வாங்கி வந்த வடுமாங்காய்,காபித்தூள் ,காய்கறிகள் எல்லவற்றையும் எடுத்து அதனதன் இடங்களில் அடுக்கிவிட்டு கேக்கை எடுத்து பிரிட்ஜில் வைத்தாள் . பூமாவுக்கென்று வாங்கியிருந்ததை அவளே நேரில் செண்டு அவர்கள் வீட்டில் கொடுத்துவிட்டும் வந்தாள் . கேக்குடன் வந்தவளை மகிழ்ச்சியில் பூமா கட்டிக்கொண்டு முத்தமிட்டது ரகுவின் கண்ணில் தப்பாமல் விழுந்தது .
ராதாவாக கேட்கும் வரை ஒன்றும் சொல்வது இல்லை என்று சீதாவும்,கிருஷ்ணனும் அமைதியாகவே இருந்தார்கள். நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாக கடக்க, சீதாவிடம் எந்த மாற்றமும் இல்லை. சகஜமாகத்தான் பழகினாள் .கிருஷ்னனின் நண்பர்களுடனான வாக்கிங் கூட மாறவில்லை.
ரகு சகஜமாக முயற்சிகள் செய்துகொண்டிருந்தான். ஆனால் சீதா அவனுக்குள் ஆழமான வேராக ஊன்ற ஆரம்பித்திருந்தாள். ரகுவின் முடிவை ஆட்டம் காணச்செய்யும் நிகழ்வும் வந்தது. அதில் சீதா தனது வாழ்க்கையின் பெரிய முடிவை செயல்படுத்தினாள் . ரகுவுக்கு வார்த்தைகள் இல்லை.அவன் சூழ்நிலை கைதியானான்.