Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

21. சுபகீதா - ஆகாயமே என் ஆதாரமே

ஆகாயமே என் ஆதாரமே 28

ஆகாயமே என் ஆதாரமே 28

மைதிலியின் பெற்றவர்கள் இங்கே சென்னை வந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. தில்லியில் அவர்கள் பார்க்கவேண்டிய விஷயங்களும் உண்டு. அதில் முக்கியமாக பென்சன் லைஃப் சர்டிபிகேட்டில் மைதிலியின் அப்பா இந்த வருஷத்துக்கு கையொப்பம் இட வேண்டும். அடுத்தது அவர்களது இரண்டாவது மகள் அழைத்துக் கொண்டே இருக்கிறாள் அதனால் அவுஸ்திரேலியா சென்று கொஞ்ச மாதங்கள் அங்கே இருந்து விட்டு வரலாம் என்றும் யோசிக்கிறார்கள்.



Advertisement

அதனால் , ரகுவரனிடம் விரைவில் வருவதாக சொல்லிவிட்டு கிளம்பிசென்றார்கள். அவர்கள் செல்லும் முன்பு குழந்தை பூமா அவ்வளவு அழுகை. ரகுவரனின் பெற்றவர்களும் கூட முயற்சி செய்து பார்த்தார்கள். குழந்தையின் ஏக்கம் குறையவில்லை. அடிக்கடி ஏங்கி அழ ஆரம்பித்தாள் . வீட்டின் பெரியவர்களுக்கு தில்லி சென்றவர்கள் அங்கிருந்து அடுத்த வாரமே கிளம்பி இளைய மகளிடம் சென்றும் விட்டார்கள். அங்கே அவளது குழந்தைக்கு உடம்பு படுத்தியது.அந்த பெண்ணால் சமாளிக்கவே முடியவில்லை. அவளின் மாமனார் மாமியார் கிளம்பி சென்ற பிறகு யாரவது கூட இருந்தே ஆகவேண்டிய நிலைமை.மாப்பிளை டிக்கெட் போட்டுவிட இவர்கள் கிளம்பியாக வேண்டிய கட்டாயம். ஆஸ்திரேலியா ஒன்றும் கூப்பிட்டால் வரும் தொலைவில் இல்லை. தினமும் குழந்தையிடம் அலைபேசி வழியாக பேசிவிடுகிறார்கள் தான்.ஆனால் குழந்தைக்கு அது போதவில்லை . ரகுவரனின் பெற்றவர்கள் குழந்தையிடம் பாசத்துடனும்,பரிவுடனும் இருந்தாலும் கூட குழந்தை மைதிலியின் பெற்றவர்களை வெகுவாக தேடினாள் .

ரகுவரனுக்கு அலுவலக வேலை மூச்சு வாங்கியது.குழந்தையை பார்த்துக்கொண்டு வேலையை சரிவர செய்வதில் கடுமையான கஷ்டத்தை அனுபவித்தான் . சமாளிக்க முடியாமல் திணறினான். அதே சமயம் ரகுவரனின் பெற்றவர்களுக்கு வெளிநாட்டில் வசிக்கும் அவர்களது மூத்த மகனிடமிருந்து அழைப்பு.மூன்று மாதங்களுக்கு முன்பே அவன் இவர்களுக்கான டிக்கெட்டை பதிவு செய்திருந்தான். இவர்கள் சென்னை வந்து மூன்று மாதங்கள் இருப்பதாக முதலில் யோசிக்கவில்லையே!திடீரென எடுக்கப் பட்ட முடிவுதானே . மூத்த மகன் இருக்கும் இடத்தில குளிர்காலத்தில் இவர்களால் முடியாது என்பதால் காலநிலை ஒத்துக்கொள்ளும் சமயத்தில் இவர்கள் அங்கே சென்று அவனிடம் இருப்பது வழக்கம்.இப்போது இவர்களும் கிளம்பவேண்டும்.அங்கேயும் மூத்த மகன் வழியாக இவர்களுக்கு பேரன் பேத்தி உண்டு.அந்தக் குழந்தைகளுக்கு இவர்களுடன் ஒட்டுதலும் அதிகம். இங்கே ரகுவின் நிலைமை கஷ்டம் தான்.அதற்காகத்தான் அவனுக்கென்று ஒரு துணையை ஏற்படுத்தித்தர பெற்றவர்கள் விரும்பினார்கள்.சீதாவும் கிடைத்தாள் .கையில் கிடைத்த பொக்கிஷத்தை வேண்டாம் என்று மறுத்தவன் ரகுவரன் தான்.அப்போது அவனது விஷயங்களை அவன் தானே பார்க்கவேண்டும்?

Advertisement

Advertisement

வயதான காலத்தில் நிம்மதியாக கழிக்காமல் இன்னமுமா குழந்தையை வளர்க்க முடியும்? சிறிது காலம் உதவி வேண்டுமானால் செய்யலாம். மற்றபடிக்கு அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.இதை மகனும் உணர்ந்தால் நல்லது என்றுதான் அவர்களும் கிளம்பியதே!

எதிர்த்த வீட்டில் இருக்கும் சீதாவுடன் நாட்கள் அப்படியேதான் செல்கிறது. அவள் தங்கள் வீட்டுக்காக என்று உண்பதற்கு வாங்கினாலோ,ஏதாவது விதவிதமாக வீட்டில் செய்தாலோ நிச்சயம் பூமாவுக்கு சேர்த்துதான் செய்வது. ஆனால் மறந்தும் ரகுவிற்க்காக என்று ஒன்றும் இராது.முதலில் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளாத ரகுவுக்கு சீதா காட்டும் வித்தியாசம் புரிந்தது. சந்தோஷத்திற்கு பதிலாக ஏதோ ஒரு ஏக்கம்.தன்னை கவனிக்க யாரும் இல்லை என்ற தனிமையை உணர தொடங்கியிருந்தான். சீதா ரகுவை பார்க்கும் பொழுது சாதாரணமாக பேசுவதுதான். அவனுக்கு தன்னை பற்றி கீழான அபிப்ராயம் வந்துவிடக் கூடாது என்பதில் சீதா வெகு ஜாக்கிரதையாக இருந்தாள் .

Advertisement

பொதுவாகவே ஆண்கள் பெண்களை சுற்றிவந்தால் ஒருவிதமாக பேசும் நாக்கு ,சாதாரணமாக பெண்கள் ஆண்களிடம் சிரித்து பேசினால் கூட ,அவர்களது தனிமனித ஒழுக்கத்தை முன்னிறுத்தி பேசிவிடும்.இன்றும் இதெல்லாம் ஒன்றும் மாறவில்லை. சீதா இதிலெல்லாம் சிக்க விரும்பவில்லை. அவளுக்கு எதற்கு வம்பு. ஏதோ,எதிர்த்த வீட்டில் அம்மா இல்லாமல் ஒரு குழந்தை இருக்கிறது.அதற்க்கு தன்னால் முடிந்த அன்பை தூர நின்று கொடுக்கிறாள்.அவ்வளவுதான்!

தானும் தனது மகளுமாக மட்டும் இருந்த பொழுது உணர்ந்திராத தனிமை இப்போது அப்பாவையும் மகளையும் சுட்டது. மாலை வீட்டுக்கு வந்தால் பாட்டி ,தாத்தா என்று வீட்டில் நான்கு பெரியவர்கள் இருந்தார்கள்.ரகு அலுவலகம் கிளம்பும் முன்னரே வீட்டில் உணவு தயாராக இருக்கும். பூமாவை கதை சொல்லி உணவு கொடுக்க மாலை நேரத்தில் பூங்காவுக்கு அழைத்து செல்ல என்று வீட்டில் எல்லாவற்றையும் பெரியவர்கள் நால்வருமாக பார்த்துக்கொண்டார்கள்.இப்போது எல்லாவற்றையும் அவனே செய்ய வேண்டும்.மனது அழுத்தும் நேரத்தில் சொல்ல அருகில் தனது அப்பாவோ,மைதிலியின் அப்பாவோ இருந்தார்கள். சூடாக இவன் வரும்பொழுதே கையில் காஃபியை வைக்க இரண்டு அம்மாக்களும் இங்கே இல்லை.என்ன கொடுமைடா சாமி!

பெரியவனாலேயே சமாளிக்க முடியவில்லையாம்.இதில் குழந்தை அடம்பிடிக்காமல் சமர்த்தாக இருக்க வேண்டுமாம்.என்ன நியாயம் இது. ஏக்கத்தில் ஒருநாள் இரவு குழந்தைக்கு சாதாரணமாக ஆரம்பித்த ஜுரம்,காய்ச்சலாகி நடுஇரவில் கிருஷ்னன் வீட்டு காலிங் பெல்லை அடித்தான் ரகுவரன். நிஜத்தில் பயந்திருந்தான். குழந்தை கண்ணை திறக்கவே இல்லை.அருகே செல்ல முடியாத அளவுக்கு சூடு.முகமும்,உடலும் சிவந்து போனதில் இன்னமுமே பயந்துவிட்டான் .அதில் குழந்தைக்கு நீரை டவலில் நனைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும் என்று கூட ஞாபகம் இல்லை. அந்த இரவில் யாரை அழைப்பது என்று புரியாத நிலை. இப்போதைக்கு அவனுக்கு ஞாபகத்தில் இருப்பது சுமூகமாக பழகும் எதிர்த்த வீடு மட்டும் தான்.

கிருஷ்ணன் வேலை சம்மந்தமாக வெளியூர் சென்றவர் மறுநாள் தான் வருவார். ராதா தூக்க மருந்து போட்டுக்கொண்டு தூங்குவதால் பெல்லின் சப்தம் அவளுக்கு கேட்கவே இல்லை. பன்னிரண்டு மணிக்கு ஆன்சைட் காலை முடித்துவிட்டு அப்போதுதான் தூங்க ஆரம்பித்திருந்தாள் சீதா .மணியின் ஒலியை கேட்டதும்,கதவில் பதித்திருக்கும் கண்ணாடி துவாரத்தில் பார்த்ததில் வியர்வை வழிய நின்று கொண்டிருந்தான் ரகுவரன். அவனை கண்ட பெண்ணுக்கும் மனதில் திடுக்கிடல் தான். சமாளித்துக்கொண்டு கதவை திறந்தவளை வேகமாக இழுத்துக்கொண்டு தனது வீட்டுக்குள் சென்றான் ரகுவரன். முதலில் லேசாக பதறிய சீதா சற்று சுதாரித்துக் கொண்டாள் .

குழந்தையின் நிலை பார்த்து பதறியவள்,சட்டென்று அங்கிருக்கும் குளியலறைக்குள் சென்று பாக்கெட்டில் தண்ணீர் பிடித்து அதில் டவலை நனைத்து குழந்தைக்கு நெற்றியில் ஆரம்பித்து உடல் முழுவதும் ஒத்தடம் கொடுத்துக்கொண்டே,,”ரகு , குழந்தைக்கு தேவையானதை எடுத்துக்கோங்க. டவல், அடிஷனல் ஜட்டி ஒரு நாலு, மாற்று டிரஸ் ஒரு ரெண்டு செட், அவளோட பைல் , ஒரு பாட்டில்ல தண்ணீர். ம்ம்..சீக்கிரம்.இவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம்.”

அவள் என்ன சொன்னாலோ அதை செய்துவிட்டு, அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் இவள் முன் வந்து நின்றான். அவன் கைகளில் இருந்து பொருட்களை வாங்கிக் கொண்டவள்,நா இவளோட பாக்சீட்டுல உட்கார்ந்துக்கறேன் ரகு .நீங்க வண்டிய எடுங்க. “

குழந்தை பின்சசீட்டில் சீதாவின் இடுப்பை கட்டிக்கொண்டு அவளது மார்பில் முகம் புதைத்து தூங்கிக்கொண்டு வர,சீதா குழந்தையின் தலையை தடவிக் கொடுத்துக்கொண்டே வந்தாள் . பூமாவை மருத்துவமனையில் அனுமதிக்க சொல்லிவிட்டார்கள். குழந்தை அழுதுதீர்த்தது.சமாளிக்கவே முடியவில்லை.கையில் ட்ரிப்ஸ் போடவிடாமல் பூமா செய்த ரகளையில் நர்சம்மா சோர்ந்துதான் போனார்கள். சீதா பூமாவை விட்டு நகரவே இல்லை. குழந்தை அவளை நகரவே விடவில்லை. இறுக்கி அணைத்துக் கொண்டே படுத்திருந்த பூமாவை விட்டு எங்கே நகர முடியும்? ரகுவுக்கு அப்போது தெரியாத சங்கடம் இப்போது தெரிந்தது.

சீதாவின் கண்கள் தூக்கமில்லாமல் சிவந்திருந்தது.அதையெல்லாம் அவள் பெரியதாக எடுத்துக்கொள்ளவே இல்லை. ரகுவை வேறு சமாளிப்பது பெரியதாக இருந்தது.அவன் வேறு நன்றாகவே பயந்திருந்தான். வெளியில் அமர்ந்திருந்தவன் கண்கள் நீரை கொட்டியது.ஏற்க்னவே மைதிலியை இழந்தவனுக்கு இப்போது குழந்தை நிலையை பார்த்து பயத்தை கூட்டியது . குழந்தையை தூங்க வைத்துவிட்டு வெளியே அமரலாம் என்று வந்த சீதா கண்டது அழுது கொண்டிருக்கும் ரகுவரனை தான். அவன் இவ்வளவு வீக்காக இருப்பான் என்று சீதா நினைத்தது இல்லை. பொதுவாகவே நாம் சொல்வது தானே ..ஆண்கள் அழக்கூடாது …என்றெல்லாம்!

அவனருகே அமர்ந்துகொண்டு அவனை தனது தோள்களில் சாய்த்துக்கொண்டு தட்டிக்கொடுத்தாள் சீதா. அதில் ஆறுதலை கண்டவன் அப்படியே தூங்கியும் போனான்.அவனை சாரில் சாய்ந்து படுக்க வைத்துவிட்டு உள்ளே குழந்தை இருக்கும் அறைக்குள் சென்று அங்கிருக்கும் நீளிருக்கையில் கால் நீட்டி படுத்தும் கொண்டாள் .

விடிந்தும், இன்னமும் சீதா வெளியில் வராதது கண்டு ராதா யோசித்தாலும்,இரவு படுக்க தாமதம் ஆகியிருக்கும் என்று வேலைகளை கவனிக்க சென்றாள் . பத்து மணியாகியும் பெண் வெளியே வரவில்லை என்றதும் தானே அவளது அறைக்கு சென்று பார்த்ததில் சீதா இல்லை. பதறியது ராதாவுக்கு.

எங்கே சென்றிருப்பாள் என்று ராதா யோசிக்கும் பொழுதே புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.ரகுவரன் என்னிலிருந்து சீதைதான் அழைத்திருந்தான் . அவசரத்தில் அவள் எங்கு தனது அலைபேசியை எடுத்துக்கொண்டு இருந்தாள் ?

சீதா சொன்னதை கேட்ட ராதாவுக்கு கோவம் தலைக்கு ஏறியது.ரகு மட்டும் அவள் முன்னால் இருந்திருந்தால் கிழித்திருப்பாள்.அவ்வளவு கோவம். கல்யாணம் ஆகாத தனது மகளை ரகுவரன் பயன்படுத்திக் கொள்கிறான் என்று ராதாவுக்கு . ” சீதா…அவங்க வீட்டுல பிரச்சனையை அவங்க தான் பார்க்கணும்.ரைட் . இப்போ குழந்தையை அட்மிட் பண்ணியாச்சில்லே. அடுத்த அரை மணி நேரத்தில் வீடு வந்து சேரணும் நீ”என்றுவிட்டு வைத்துவிட்டாள் . பூமாவோ இவளை விட்டு இருக்க மாட்டேன் என்று கதற பெண்ணால் வீட்டுக்கு செல்ல முடியவில்லை.நேரில் செல்லும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று அவளும் அமைதியாக இருந்துவிட்டாள் .

நேரம் செல்ல செல்ல ராதாவின் கோவம் அதிகமானது. அந்த நேரம் பார்த்து கிருஷ்னன் வீடு வந்து சேர்ந்தார். பூமாவுக்கு உடல்நிலை சரியில்லை. மகள் அங்கே தான் இருக்கிறாள் என்று சீதாவே போன் செய்து சொல்லிவிட்டாள் .கூடவே இரண்டு நாட்களுக்கு தேவையான மாற்று உடுப்பும் கேட்டிருந்தாள் .சீதா மடியில் குழந்தை வாந்தி எடுத்துவிட்டிருந்தாள் .

அவசரமாக வீடு வந்த கிருஷ்னன் மனைவியிடம் எதையும் கேட்பதாக இல்லை. வேகமாக மகளுக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். அப்பாவும் மகளும் அங்கே மருத்துவமனையில் தான் இருந்தார்கள்.ரகுவுக்கு இப்போது தைரியம் சொல்ல யாராவது அருகில் இருக்க வேண்டி இருந்தது.சமாளிக்க முடியவில்லை. கிருஷ்ணன் அவனுடனேயே இருந்தார்.சீதா குழந்தையிடம் தான் இருக்கிறாள்.

மூன்று நாட்கள் ஆகியிருந்தது. பூமா சீதாவை அம்மா என்றே அழைக்கத் தொடங்கியிருந்தாள். ஜுரத்தின் வேகத்தில் ஆரம்பித்தது. இவளின் இடுப்பை கட்டிக்கொண்டு மடியில் தூங்கும் சுகத்தை உணர்ந்த மகளுக்கு அம்மாவை விட மனது இல்லை.இப்போது இருக்கும் நிலையில் குழந்தையிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று பெரியவர்கள் மூவருமே அமைதியாக இருந்தார்கள்.ஆனால் பூமாவின் அம்மாவுக்கான தேடுதல் இன்னமும் பலமானது. சீதாவை விட்டு நொடியும் இருக்க மாட்டேன் எனும் அளவுக்கு இருந்தது.

இந்த மூன்று நாட்களில் சீதாவை அதிகமாக தேடிய இன்னொருவர் சாட்சாத் ரகுவரன் தான். மாலை நேரத்தில் குழந்தை உள்ளே அறையில் தூங்கிக்கொண்டிருக்க காரிடாரில் அமர்ந்திருந்த சீதாவிடம் பேச்சு வாக்கில் ரகுவரன் கேட்டது,”சீதா , நாம கல்யாணம் செஞ்சுக்கலாமா..நீ இல்லாம இனியும் என்னால சமாளிக்க முடியும்னு தோணல.குழந்தைக்காக மட்டும் இல்ல.எனக்கே நீ, நிச்சயம் தேவைன்னு தோணுது. தனிமை ரொம்பவே கொடுமையானது. தாங்க முடியல. நா யோசிச்சுதான் சொல்றேன். உனக்கும் இந்த பையன் பரவாயில்ல. கல்யாணம் செஞ்சுக்கலாம்னு தோணிச்சுன்னா …சொல்லு .சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கலாம்.கட்டின சுரிதாரோட வந்தாலும் எனக்கு ஓகே தான்.”என்றுவிட்டான்.

சீதா அவனுக்கு ஒன்றும் பதில் சொல்லவில்லை.வெகு காலமாகவே அவன் யோசித்துக்கொண்டிருக்கிறான் .இன்னமும் மைதிலி நினைவுகளில் இருந்து அவன் வெளியே வர முடியாமல் தன்னையும் ஒதுக்க முடியாமல் தவிக்கிறான் என்பது அவளுக்கு தெரியும் தானே.வேண்டாம் என்று சொல்லும் பொழுதே அன்று செம்மொழி பூங்காவின் அவன் கண்கள் கலங்கியதை அவள்தான் அறிவாளே!

மருத்துவமனையில் வைத்து பேசவேண்டாம் என்று அவள் அமைதியாக இருந்துவிட்டாள் .மேற்கொண்டு அவனும் திருமணம் பற்றி ஏதும் பேசவில்லை. ஆனால் ,இவன் கேட்டதை சீதா தனது அப்பாவிடம் மறைக்காமல் சொல்லியும்விட்டாள் .அவருக்கு சந்தோஷமும்,சம்மதமும் தான். அது போறுமா?

தினமும் பூமாவுடன் பேசிவிடுகிறார்கள் தான்.ஆனாலும் குழந்தைக்கு அது போதவில்லை. எப்படியோ சமாளிக்க அடுத்தது ரகுவரனின் பெற்றவர்கள்.அவர்களின் மூத்த மகன் ஏற்கனவே இவர்களுக்காக சென்னையிலிருந்து கிளம்பும் வகையில் இரண்டு மாதங்கள் முன்பு இவர்கள் இருவரும் சென்னை வரும்பொழுதே ஏர்டிக்கெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!