இவன் உடல் எடை குறைப்பை கூறுகிறான் என தெரியாமலா இருப்பாள். கூடவே ஆமா டெய்லி பொண்டாட்டி நினைப்புல நேரங்காலம் பார்க்காம போன் பண்ணான், நான் தான் செல்லாம விட்டுட்டேன் ஆதங்கமாய் சொல்ல நினைத்தாலும்,
“வெயிட் லாஸ் ரிசில்ட் கிடைக்குமா கிடைக்காதான்னு எனக்கே டவுட் தான். கிடச்சா சொல்லுவோம்னு இருந்தேன்” இவன் பார்வையை தவிர்த்தபடி இவள் கூறிவிட்டாள்.
Advertisement
அவள் பார்வை தடுமாறுவதையும், தடம் மாறுவதையும் பார்த்து “இது இப்ப கிடைச்ச ரிசல்ட் மாதிரி தெரியல.. ரொம்ப நாளைக்கு முன்னாடியே கிடச்ச ரிசல்ட் மாதிரி இருக்கே!” என்றவன் அப்பறம் ஏன் சொல்லலை என்ற கூர்மையோடு வந்தது வார்த்தைகள்.
அதில் கிரியை நேருக்கு நேராக பார்த்து “சொல்லி இருந்தா.. உன்னை ஏன் கஷ்டபடுத்திகிற அதெல்லாம் வேணாம் கமலி நீ எப்பவும் போல இரு.. அதுவே போதும்னு சொல்லி இருப்பீங்களோ” அடக்கி வைத்திருந்த வார்த்தைகளை விட்டாள்.
அவளை கூர்மையாய் பார்த்தவன் “நிச்சயமா இல்லை” என மறுத்து “எனக்கு பிடிச்ச மாதிரி நீ மாறப்போறேன்னு சொல்லும் போது நான் ஏன் வேண்டாம்னு சொல்ல போறேன்” மனதிலிருப்பதை இவன் பேசிட, முகமே மாறியது கமலிக்கு.
Advertisement
இறுகிய முகத்தை கண்டு “அதுக்காக நீ வெயிட்டை குறைச்சே ஆகனும்னு நான் சொல்லலையே.. டைம் குடுன்னு தான் சொன்னேன்” உடைத்து பேசினான் கிரி.
Advertisement
“என்ன? டைம் வேணும்னு கேட்டீங்க தான். இத்தனை மாசத்தில் என்ன பண்ணிடீங்க எனக்காக? பெரிசா சொன்னீங்க.. ‘நீ வெயிட்டை குறைக்க மாட்ட.. நான் வேணா குண்டாயிடுறேன்னு’ முன்னை விட பிட்டா தானே இருக்கீங்க” வாட்ட சாட்டமான அவன் தோரணை எப்போதும் போல அவளை கடுப்போடு கவர்ந்திழுத்தது.
இப்போது தான் கமலி கோபத்திலிருப்பதையே உணர்ந்தான் கிரி. அவன் ஏதோ பேச வர, அதற்குள்
“வெயிட் ஏத்தலை! சரி வேற எந்த விதத்தில் எனக்காக மாறி இருக்கீங்க? ஊருக்கு வரேனு சொல்ல கூட முடியலைல்ல, அம்மா சொல்லி தான் எனக்கே தெரியும்” கோபம் சிறிது ஏற கேட்டாள் கமலி.
Advertisement
இவனோ பொறுமையாய் “நேத்து காலையில் இருந்து எத்தனை முறை உனக்கு கூப்பிட்டேனு தெரியுமா? பதட்டமாகி உன் அப்பாக்கு அடிச்சா, போனை தொலைச்சிட்டா கமலினு அசால்ட்டா சொல்றாரு. கூப்பிட்டா வர்ற தூரத்திலா இருக்கேன். கொஞ்ச நேரத்தில் நான் பட்ட அவஸ்தை எனக்கு தான் தெரியும்!” என அப்போதைய நிலையை இவன் கூற
இவன் பதட்டமானதெல்லாம் இவளுக்கு உரைக்கவே இல்லை போல “எதே.. நேத்திலிருந்து போன் பண்ணீங்களா? நேத்து தான் ஊருக்கு கிளம்பனும்னு பிளானா? டிக்கட் கூட நேத்து தான் போட்டீங்க போல!” நக்கல் தாண்டவமாடியது இவள் வார்த்தைகளில்.
உண்மை தானே, அவனை பேசவிடாமல் அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் அவனை நிலை குலைய வைத்தது. அதுவரை அவளையே பார்த்திருந்தவன், அதற்கு மேல் அவள் பார்வையை ஏந்த முடியாமல் தடுமாறினான்.
“ஒருவேளை இந்த அழகான கமலி உங்களுக்காக காத்திருக்கான்னு தெரிஞ்சிருந்தா, ஒரு நாள் விடாமல் கால் பண்ணிருப்பீங்க, இதோ டிக்கட் போட்டுட்டேன், ஏர்போர்ட் கிளம்பிட்டேன்னு அப்டேட் குடுத்துட்டே இருந்திருப்பீங்க, யார் கண்டா, வேலையை கூட ரிசைன் பண்ணிட்டு வந்திருப்பீங்க. அப்படி தானே!” எனவும், மனதே விட்டு போனது கிரிக்கு. இவள் இன்னும் என்னை நம்பவில்லை.. ஆணித்தரமாய் இப்போது தான் புரிந்தது கிரிக்கு.
பட்டாசாய் வெடித்தவள், தான் இவனுக்காக என்னவெல்லாம் செய்திருக்க, தனக்காக இவன் எதுவுமே செய்யவில்லையே, தன்னை எந்த ஒரு நிலையிலும் தேடவில்லையே என்ற எண்ணம் அவளை அழவும் வைத்தது.
“கமலி.. அழாத ப்ளீஸ்” டேபிளின் மேல் இருந்த இவள் கைகளின் மேல் அவன் கையை வைக்க, தீ் தொட்டார் போல் பட்டென கையை உருவி கொண்டாள் கமலி.
அந்த ஒரு செய்கையே அவனுக்கு போதுமானதாக இருந்தது அவள் நிலைப்பாடு, மனநிலை என்ன என தெரியவைப்பதற்கு, அவனுக்கு புரிய வைப்பதற்கு.
“இன்னைக்கு உங்க முன்னாடி அழறேன், அதுவே பொறுக்கலை. உங்களுக்கு தெரியாமல் நாலு சுவத்துக்குள்ள, நான் அழுதது கூட உங்களுக்கு தெரியாது. அதுவும் உங்களால.. அதுக்கு என்ன செய்ய போறீங்க? அக்கறை இருக்குற மாதிரி நடிக்க வேண்டாம்” என வடியும் கண்ணீரை கூட துடைக்காமல் சரமாறியாய் தாக்கி கொண்டிருந்தாள் கிரியை.
இவள் ஒவ்வொரு வார்த்தைகளையும் உள் வாங்கிய கிரி, நெற்றிப்பொட்டை அழுந்த தேய்த்த அவன் விரல்கள், நெற்றி, தலை என உயர்ந்து பின், பின்னந்தலையை வருடி பிடறியில் வந்து இளைப்பாறியது.
அந்நேரம் இவனுக்கான டீ, பப்ஸ், அவளுக்கான ஜூஸ் என சர்வர் வந்து வைத்து விட்டு சென்றிட, நாசுக்காய் கண்களை துடைத்து கொண்டு, ஜூஸ் டம்ளரை கையில் எடுத்து கொண்டாள், கூடவே வேறு பக்கம் பார்வையையும் திருப்பி கொண்டாள்.
பிடறியை வருடியவனின் விரல்கள் அங்கேயே நிலைத்து விட்டது. குனிந்திருந்த தலை நிமிரவே இல்லை இவனுக்கு.
இவள் ஜூஸ் குடித்து முடிக்கும் வரை காத்திருந்தவன், முடித்தவுடன் போனை எடுத்து ராமிற்கு அழைத்தான்.
“என்னடா அதுக்குள்ளயும் பேசி முடிச்சிட்டியா..” என அதிர்ச்சியாய் கேட்டவன் “பத்து நிமிஷம் தான்டா ஆகுது, இதுக்கா இவ்வளவு சீன் போட்ட” என கேட்க
சம்மந்தமே இல்லாமல் “இதோ வந்திடுறோம்” என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.
கமலியோ, அவனது அந்த ஒரு வார்த்தையில் இவனை நிமிர்ந்து பார்த்து பின் எதிரில் இருந்த டீ பப்ஸை பார்த்து வைக்க, அதற்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல “போலாமா” என எழுந்து கொள்ள, இவளும் அவனை பின் தொடர்ந்தாள்.
அவனுக்கா டீ பப்ஸ் கேட்பாரற்று கிடந்தது. வரும் போது இருந்த மனநிலை தலைகீழானாது கிரிக்கு. அதற்குள் அவர்களை நெருங்கி இருந்த ராம் என்ன சாப்பிட்டார்கள் என கேட்டுவிட்டு, “வாடா பில் பே பண்ணிட்டு வந்திடலாம்” என, கமலியை காரிலேயே அமரவைத்துவிட்டு, கிரியை இழுத்து வந்தான்.
முகம் இறுக அமைதியாகவே வந்தான் கிரி. அதன் பின் பில்லை கொடுத்துவிட்டு, அங்கிருந்த ரெஸ்ட்ரூம்மை நோக்கி இழுத்து சென்றான்.
“நல்லா தானே இருந்த, சந்தோஷமா பேசிட்டு வரேன்னு தானடா சொல்லிட்டு போன?” ராம் அவனின் கவலை தோய்ந்த முகத்தை சகிக்க முடியாமல் கேட்க, இவனோ அமைதியாய் அங்கும் இங்கும் பார்த்தபடி நின்றான்.
“என்னடா பண்ணின? என்ன பேசி வச்ச? இரண்டு பேருமே சரியில்லை” மெதுவாய் ராம் கேட்க
“ப்ச், ஒன்னுமில்லைன்னா” என வந்தது பதில்.
“ஏதோ பறி கொடுத்தவன் மாதிரி இருக்குற, ஒன்னுமில்லைனு வேற சொல்ற?” அதான் உனக்கு பிடிச்ச மாதிரி அவளும் மாறிட்டாளே, பிறகென்ன, சந்தோஷமா வாழறதை பத்தி்யோசிக்காமல், கவலையை அப்பிட்டு வந்து நிக்கிற?” ராம் கேட்க, கேட்க
ம்.. என இதழ் வளைத்து சிரித்தவன், “நானெல்லாம் வாழறதே பெரிசு, இதுல சந்தோஷமா வாழறதை பத்தி யோசிக்கனுமா!” விரக்தியாய் வேறு சிரித்து வைக்க, ராமோ பீதியானான். எல்லாம் சரியாக போய்விட்டது என நினைக்கில் இதென்ன குண்டை தூக்கி போடுகிறான் என அவனையே பார்த்திருக்க, “கிளம்புவோமாணே..” என அந்த பேச்சை அத்தோடு முடித்துவிட்டான் கிரி.
விட்ட கார் பயணம் தொடங்கியது, “எம்பொண்டாட்டியை சைட் அடிக்க விடுறியா” என வெட்கம், மயக்கம் கலந்த கிரியின் முகமும், “வாழறதே பெரிசு” என்ற விரக்தி கலந்த கிரியின் முகமும் ராமின் நிம்மதியை அடியோடு இழக்க வைத்தது. இவனுக்கு வாழ்வில் நிம்மதியே கிடைக்காதா? இல்லை அது கொஞ்ச நேரம் கூட நிலைக்காதா? ரியர் மிரரில் மீண்டும் அவனை பார்த்தான் ராம்.
மனைவியை விடாமல் பார்த்தபடி வந்த அந்த கிரியும், அவளின் மூச்சு காற்று கூட படகூடாது என ஒதுங்கி அமர்ந்திருக்கும் இந்த கிரியும் ராமின் பார்வையில் இருந்து தப்பவே இல்லை. அப்படியே கமலியை திரும்பி பார்க்க, அவள் முகம் அதற்கு மேல் இருந்தது. இம்முறை நிம்மதியை இழந்து கண்களை மூடியபடி சீட்டில் தலைசாயத்து கொண்டான் ராம்.