ரவிதேஸ்சா இந்திரா சேனா படம் சூட்டிங் நடக்கும் காட்டுபகுதிக்கு வந்திருந்தான்..
Advertisement
சூட்டிங் நடந்து கொண்டிருந்தது, சூட்டிங்கிற்க்கு செட்டு போடாமல், உண்மையாக காட்டு பகுதியில் வைத்து படத்தின் சூட்டிங்கை எடுத்துக்கொண்டிருந்தான் சிரஞ்சீவி..
Advertisement
ரவிதேஸ்சா சூட்டிங் பார்க்க வந்ததை பார்த்த சிரஞ்சீவி அவனை வரவேற்று.. அவனை ஒரு சேரில் உட்கார வைத்து விட்டு,,சூட்டிங் நடத்திக்கொண்டு இருந்தான்.
ரவி தேஸ்சாவின் கண்கள் சீதாவை தேடியது… சீதாவுக்கு ஒரு மாதம் படப்பிடிப்பு இல்லை.. முதல் கட்ட படப்பிடிப்பு லீலாவதியும், வேந்தன் கதை சம்பந்தப்பட்ட காட்சிக் கதையை எடுத்துக்கொண்டிருந்தான் சிரஞ்சீவி….
இரண்டு நாட்கள் சூட்டிங் வந்து பார்த்தவன், சீதா வராமல் இருப்பதால் கேமரா மேன் ஜானிடம் கேட்டிருந்தான் ஏன் சீதா சூட்டிங் வரவில்லை என்று..
“முதல் கட்ட படப்பிடிப்பிற்கு சீதா இல்லை சார் இன்னும் பத்து நாள் கழித்து வருவாங்க என்று நினைக்கிறேன்” என்று சொல்ல….
“சரி” என்றவனுக்கு ஒரு பெரிய பிஸ்னஸ் ஆர்டர் பாரின்னில் இருந்து கிடைப்பது போல் இருக்க,,
இவளை பாரின் போயிட்டு வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன் பாரின் கிளம்பியிருந்தான்..
ரவிதேஸ்சா போன காரியம் முடியாமல் நீண்டு கொண்டே போக அவனே அங்கேயே தங்கி மூன்று மாதங்களாக வேலையை முடித்து விட்டு,, இந்தியா வர தயாராகிக் கொண்டிருந்தான்..
இங்கே இந்திரா சேனா படம் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்தது..
பட சூட்டிங்கில் சண்டை காட்சியில் நடிக்கும் போது சீதா குதிரையில் இருந்து தவறி கீழே விழுந்து காலில் நன்றாக அடிபட்டு விட..
சில நாட்கள் சூட்டிங் வராமல் இருந்தாள் சீதா…
இந்திரா சேனாவின் படம் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே,, படத்தின் பாடல்களை எடிட்டிங் செய்து சோசியல் மீடியாவில் படக்குழு விட..
இந்திரா சேனா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
குழலிசை கேரக்டரை பார்த்த பல டைரக்டர்கள் சீதாவை அவர்கள் எடுக்கும் படத்திற்க்கு புக் பண்ண தேட,, சீதா யாரையும் பார்க்க அனுமதிக்க வில்லை இந்த ஒரு படமே எனக்கு போதும் என்ற நினைத்திருந்தாள்..
அவளுக்கு நடிப்பதற்கு அவ்வளவு கஷ்டமா இருந்தது..
இதில் குதிரையிருந்து கீழே விழந்து அடிப்பட்டு விட..
போதும் டா சாமி இந்த ஒரு படத்தோடு என்னை ஆளைவிடு என்றிருந்தாள் அனைவரிடம்..
இந்திரா சேனா இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தது..
பட சூட்டிங் வந்திருந்த ஒரு தெழுங்கு டைரக்டர் சீதாவிடம் கதை சொல்ல வேண்டும் என்று காத்திருக்க..
சிரஞ்சீவி எவ்வளவு சொல்லியும் அந்த டைரக்டர் கேட்க வில்லை சீதா விடம் பேசாமல் போக மாட்டேன் என்று அடம் பிடிக்க.
சீதாவிடம் சென்ற சிரஞ்சீவி “வந்திருப்பது மிக பெரிய டைரக்டர் அவரிடம் கதை கேட்டு எனக்கு நடிக்க விருப்பமில்லை என்று சொல்லிவிடு சீதா ” என்றவன்..
அந்த டைரக்டரை அழைத்து “சீதாவிடம் கதை சொல்லுங்கள்” என்று சென்று விட்டான் ..
அந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டாள் சீதா,, .. சிரஞ்சீவிக்கே ஆச்சர்யம் எப்படி ஒத்துக்கொண்டாய் என்று அவன் வினவா.
அந்த படத்தில் நான் வெறும் சிஸ்டர் கேரக்டர் தான், என்று சொல்ல..
சீதாவை திட்டிவிட்டான் சிரஞ்சீவி.
‘நீ இப்போ ஹீரோயின்னு டி. ஏன் சிஸ்டர் கேரக்டர் ஒத்துக்கிட்ட?” என்று திட்ட.
“டேய் அதில் ஹீரோ யாரு தெரியுமா மகேஷ் பாபு சார் டா, மகேஷ்பாபு சாருக்கு தங்கச்சி கேரக்டருல நடிக்க போறேன்… அது எவ்வளவு பெரிய பாக்கியம்” என்றால்,,..
“போடி லூஸ்சு, நீ கொஞ்சம் பொறுமையா இருந்தா, மகேஷ் பாபுக்கு ஜோடியா கூட நடிக்கலாம்” என்று சீதாவை திட்ட..
“போட எனக்கு மகேஷ் பாபுவை ஒரு தடவை பார்த்தாலே போதுமுன்னு நினைக்குற ஆளு நானு, இப்போ அவருக்கு தங்கச்சி கேரக்டருல நடிக்க போறேன்,, எனக்கு இப்போ எப்படி இருக்கு தெரியுமா அப்படியே பறக்குற மாதிரி இருக்கு” என்றவளை முறைத்தவன்..
“உன் அருமை உனக்கு இன்னும் தெரியல சீதா,, இந்திர சேனா படம் ரிலிஸ் சாகட்டும் உன்னுடைய லேவலே வேற மா,, அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு'”, என்றான் சிரஞ்சீவி…
“போட சிரஞ்சு உனக்கு பொறாமை நான் மகேஷ்பாபு கூட நடிக்க போறது” என்று கூறி சீதா சிரிக்க….
“அத விடு எவ்வளவு நாள், மகேஷ் பாபு சார் படத்துல சூட்டிங்கிற்கு உன்னை கேட்டு இருக்காங்க” என்றான்.
“ஒன்லி இருபது நாள் தான்டா, நான் ஓகே சொன்னது, செக் குடுத்துட்டு போயிட்டாங்க, டா” என்றவள் அந்த செக்கை சிரஞ்சீவியிடம் காட்ட..
“அதை வாங்கி பார்த்தவன், நாட் பேட், நல்ல அமொண்ட் தான்” என்றான் சிரஞ்சீவி..
“டேய் நான் சொன்னது மாதிரி ஒரு பிளாட் வாங்கலாமா? ” என்றாள் சீதா..
‘”பிளாட் வேண்டாம், சீதா எனக்கு தெரிந்தவர் ஒரு பில்டர்ஸ் கிழக்கு தாம்பரம் பக்கம், புதுசா தனி, தனி வில்லாவா கட்டி சேல் பண்ணுறாரு,, எல்லாம் வில்லாவும் இப்போ கட்டி ரெடியா இருக்கு, நீ என் கிட்ட பணம் கொடுத்தீயா,, அப்பவே உனக்கு ஒரு தனி வில்லா புக் பண்ணி அட்வான்ஸ் குடுத்துட்டேன்,,, இப்போ இந்த பணத்த கொடுத்தா, அந்த வில்லாவை உன் பேருலா வாங்கிறலாம்” என்றான்..
தன் நண்பனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு கண்ணீர் வந்தது,, தான் ஒரு வார்த்தை சொல்லியதை தன் நண்பன் நிறைவேற்றி விட்டானே என்றவளுக்கு நண்பனை நன்றியோட பார்க்க..
“அப்படி எல்லாம் என்னை நீ பாக்க வேண்டாம்,, நானும் சுய நலம் புடிச்சவன் தான்,, நீ எனக்காக தான் படம் நடிக்க ஒத்துக்கிட்டேன்னு எனக்கு தெரியும் சீதா,, என்னால முடிந்த அளவுக்கு நான் உனக்கு செய்வேண்டா” என்றான்..
“தாங்யூ டா, சிரஞ்சு” என்று கூற.
“சரி சீதா எப்போ தெலுங்கு பட சூட்டீங்” என்றான்..
“இன்னும் பத்து நாள்ல டா,,”..
“ஏய் நம்ம சூட்டிங் இன்னும் இருக்குடி”,, என்றான்,,..
“டேய் பஸ்ட் டாப் முடிஞ்சது தானே, இன்னும் பாட்டும் சில சீன் தானே,, நீ எடிட்டிங் வேலையை பாரு, நான் மகேஷ் பாபு அண்ணையாவை பார்த்துட்டு வந்து விட்டுகிறேன்” என்றவள், ஒரு வாரம் அவளுடைய காட்சிகளை வேகமாக முடித்து கொடுத்து விட்டு, டப்பிங் வந்து பேசுறேன் இல்லை வேற ஆள வச்சு பேசிக்கோ ” என்றவள் தெலுங்கு பட சூட்டிங் சென்று விட்டாள்..
நடுவில் ஒரு நாள் அவள் வாங்கிய, புதிய வில்லாவை தம்பியை அழைத்து பால் காய்ச்சி பூஜை செய்திருந்தாள்,, சீதா யாரையும் அழைக்க வில்லை,, அழகுமலர் குடும்பம், சிரஞ்சீவி குடும்பம்,, சிவா குடும்பத்தை அழைக்க,, சிவா வீட்டில் இருந்து யாரும் வரவில்லை, சீதாவும் ஏன் என்று அவனை கேட்கவும் இல்லை,, அவளை சுற்றி கொஞ்ச பேரு மட்டும் இருந்தாலும்,, அவளை வாழ்த்த, நல்லா உள்ளங்களாக இருந்தனர்,, சீதா இந்த வில்லாவை வாங்கி ரிசிஸ்டர் பண்ணி, கொஞ்சம் வீட்டுக்கு பொருள்கள் வாங்க,, வந்த காசு பத்தவில்லை சிரஞ்சீவி சில லட்சங்கள் சீதா வீட்டிற்காக கொடுத்திருந்தான், சீதா அவனிடம் சொல்லி இருந்தால்,..
“நீ எனக்கு கொடுத்த பணத்தை நான் திருப்பி கொடுப்பேன் வாங்கிக்கோ” என்று “சரி” என்றிருந்தான் சிரஞ்சீவி…
சிரஞ்சீவி இந்திரா சேனா படத்திற்கு குழலிசை கேரக்டருக்கு டப்பிக் பண்ண சீதாவை அழைக்க வில்லை,, அவள் தெழுங்கு சூட்டிங்கில் பிசியாக இருக்க,,.. குழலிசை கேரக்டருக்கு ஏற்ற குரலை கண்டு பிடித்தவன், அவரை வைத்தே டப்பிங் பேசி முடித்திருந்தான்..
நண்பனை எண்ணி பெருமை கொண்டாள் சீதா..
சீதாவுக்கு அடுத்ததாக ஒரு கன்னட பேய் படத்தில் ஹீரோயின்னாக நடிக்க வாய்ப்பு வர..
சிரஞ்சீவி தனக்கு கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கலாம் என்று நினைத்தவள், அந்த கன்னட படம் நடிக்க ஒத்து கொண்டாள்..
தெழுங்கு படம் முடிந்ததும் கன்னட படத்தில் நடித்துக்கொண்டிருந்தாள் சீதா,, சீதாவின் தம்பி பிரபு மேல் படிப்புக்காக பாரின் போக ஆசை படுவதாக சீதாவிடம் சொல்ல,, தம்பியை படிக்க சில லட்சங்களை செலவு பண்ணியவள்,,.. சிரஞ்சீவியிடம் வாங்கிய பணத்தையும் கொடுத்தவள்,, கையில் ஒரு குறிப்பிட்ட தொகையை தனக்காக சேமித்து வைத்துக்கொண்டாள்..
கன்னட படத்தில் நடித்துக்கொண்டே, காலேஜில் லக்சரர் வேலைக்கு அப்ளே செய்து வைத்திருந்தாள்,,
இந்த படத்தோடு நடிப்புக்கு பெரிய கும்பிடா போட்டு விட்டு ,, லக்சர் வேலைக்கு நிம்மதியாக போயிவிட வேண்டும் என்று நினைத்திருந்தாள்..
கன்னட படம் முடியும் தருவாயில் இருந்தது,, பிரபு மேல் மருத்துவ படிப்புக்காக வெளிநாட்டிற்க்கு அனுப்பிய சீதாவிற்க்கு அவ்வளவு சந்தோஷம்..
கேன்டீன் பீஸ் கட்ட கூட முடியாமல் கஷ்டபட்டிருக்கேன், இப்போது என் தம்பியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தவளுக்கு அவ்வளவு சந்தோஷம், இதை பார்க்க அம்மா, அப்பா இல்லையே என்ற துக்கம் வேறு சீதாவுக்கு….
இந்திரா சேனா படம் முழுவதுமாக ரெடியாகி இன்னும் 5 நாட்களில் பொங்கல் ரிலிஸ்சுக்காக காத்திருக்க,, அனைத்து அப்புருவழும் வாங்கி, செலப்பேரெட்டி சோ முடிந்து, இன்னும் ஐந்து நாட்களில் பொங்கல் ரிலிஸ்சுக்காக படம் காத்திருக்க..
யாரோ இந்திர சேனா படம் மீது வழக்கு தொடங்கி இருப்பதாக. படம் ரிலிஸ் ஆகாது என்று எல்லா நியூஸ் சேனாலில் தகவல் வந்து கொண்டு இருக்க..