“பாஸ்ட், ஸ் பாஸ்ட் நான் அன்னைக்கு பண்ணது தப்பு தான், சாரி ரவி சார்” என்றான்..
“உன் சாரியை குப்பையில கொண்டு போய்போடு,,?” என்று கத்தி இருந்தான் ரவிதேஸ்சா…
“நான் யார் தெரியும், எத்தன ஐ டி கம்பெனியை நடத்தி வருகிறேன், எத்தனை மால் என் பேருல சிட்டியில இருக்கு தெரியுமா,, உன்ன மாதிரி எத்தன புது டைரக்டர நான் உருவாக்கி இருக்கேன் தெரியுமா” என்னோட ரேஞ் தெரியாம, என் கிட்ட மோதிட்ட? இனிமே தான் அந்த விளைவ நீ அனுபவிக்க போற சிரஞ்சீவி,,இந்திர சேனா படம் ரிலிஸ் ஆகாது,, இனி உன்னால ஒரு படத்தை கூட எடுக்க நான் விட மாட்டேன், உன்மேல என் ஆளை விட்டு இன்னொரு வழக்கை கோர்டு போட போறேன்,, இந்த கதை என்னுடையது, சிரஞ்சீவி என் கதை திருடி படம் எடுத்தாருன்னு, உன்னோடு டைரக்டர் இமேஜ் காலி, நீயும் காலி,, நீ வெறும் சிரஞ்சீவி,, இனி டைரக்டர் இல்ல யு ஆர் சீரோ” என்றான் ஆத்திரமாக.
சிரஞ்சீவிக்கு ஆத்திரம் தலைக்கேற..
சிரஞ்சீவி ரவிதேஸ்சாவிடம் ஏதோ கோபமாக பேச வர.. அவனை தடுத்த சிவா,,
ரவிதேஸ்சாவிடம் மன்னிப்பு கேட்பது போல் பேச வர
“உங்க மேல எனக்கு எந்த வருத்தமும் கிடையாது சிவா, எல்லாம் இந்த நிக்குறானே புது டைரக்டர் இவன் மேல தான், எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு நீங்க கிளம்பளாம்”.. என்றான்..
“சார், சார் ஏதோ சீதா மேல உள்ள பாசத்தால அப்படி பண்ணிட்டான் சார்,, அவன் பண்ணது தப்பு தான் சார், மன்னிச்சிருங்க, படம் எப்படியாவது ரிலீஸ் ஆகனும் சார் இன்னும் அஞ்சுநாள் தான் இருக்கு சார் கொஞ்சம் மனசு வைங்க சார், எங்க வாழ்க்கையே இதுல தான் இருக்கு” என்றான்..
“சாரி சிவா என்னுடைய பணம் 300 கோடி போனாலும், பரவாயில்லை என் மேல கைவச்சனை நான் எப்படி சும்மா விட முடியும்” என்றான்..
“சார், ரவி சார் ஏதோ கோபத்துல அப்படி பண்ணிட்டான்,, மன்னிக்கவும், படம் ரிலீஸ் பண்ண கொஞ்சம் யோசிங்க”என்றான் சிவா.
“இந்திர சேனா படம் ரிலீஸ் பண்ணுற ஐடியா எனக்கு இல்ல, நீங்க கிளம்பளாம்”, என்றவன் அவன் அறையை விட்டு மீட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்றான் ரவிதேஸ்சா..
சிவாவுக்கு தெரிந்து விட்டது,, ரவிதேஸ்சா படத்தை ரிலிஸ் பண்ண மாட்டான் என்று..
சிரஞ்சீவி தன் தலைமீது கைவைத்திருக்க, அதை பார்த்த சிவா கத்தி இருந்தான்,, ” போதுமா, இப்போ போதுமா உனக்கு” என்றான்.
சிரஞ்சீவி நிமிர்ந்து பார்க்க.
“அன்னைக்கே எவ்வளவு உனக்கு எடுத்து சொன்னேன் என் பேச்சை நீ கேட்டீயா,, இப்போ நம்ம இரண்டு பேரோட சினிமா வாழ்க்கையே போச்சு, நீ மட்டும் அன்னைக்கு அமைதியா இருந்திருந்தா இந்த பிரச்சனையே வந்து இருக்காது” என்று சிரஞ்சீவியை கண்ட படி சிவா திட்ட..
சிரஞ்சீவிக்கு இப்போது தான் அவன் பண்ணிய தப்பு உரைக்க, இருந்தும் மனதில் நான் செய்தது சரியே என்று தோன்றியது..
“நீ வா ரவிதேஸ்சா சார்கிட்ட மறுபடியும் சாரி கேளு, நாம் பேசி புரிய வைக்கலாம்” என்றான் சிவா..
“அந்த பொம்மள பொருக்கி கிட்ட, என்னால போய் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது” என்று சிரஞ்சீவி வார்த்தையைவிட..
“எஸ்..! கூஸ்மீ… மைன்ட் யுவர் வர்ட்ஸ் சிரஞ்சீவி,” என்று கர்சித்திருந்தான் ரவிதேஸ்சா .
சிவா பயந்தே போனான் ரவிதேஸ்சா கர்சனையில்…
“என் ஆபிஸ் ரூம்பில் இருந்த என்னை பத்தி பேசுவீயா நீ, போடா வெளியே” என்றான்..
சிவா ரவிதேஸ்சாவிடம், மீண்டும் பேசி புரிய வைக்க முயல..
“உங்க நண்பர் சிரஞ்சீவி என்னை மேலும், மேலும் அசிங்க படுத்துறார்,, நான் இப்போ படத்தை மட்டுமே நிறுத்தி வச்சு இருக்கேன், என் படத்துக்கு நஷ்டயீடு கேட்டு கோர்ட்டு உங்க மேல கேசு போட்டா,, நீங்க என்கிட்ட வாங்கி பணத்த விட பல மடங்கு எனக்கு தரவேண்டியது வரும்,, உங்களே என்ன வேணுமுன்னாலும் என்னால பண்ண முடியும்,,..
சிரஞ்சீவி அப்படியின்னு ஒருத்தன் இருந்தான்னு, இல்லாம கூட, என்னால ஆக்க முடியும்,, இனி உன் பிரண்ட் என்னை பத்தி பேசுனா,, அவன் நடு தெருவுல இருப்பான்,, வார்த்தையை பார்த்து பேச சொல்லு” என்ற ரவிதேஸ்சா அவனின் அறையில் இருந்த ஒரு பைலை எடுத்துக்கொண்டு வெளியே சொல்ல..
சிவா கோபமாக சிரஞ்சீவியை பார்த்தவன், இவனெல்லாம் திருந்தவே மாட்டான் என்று.. ரவிதேஸ்சா ஆபிஸ்சில் இருந்து வெளியே வந்தவன், அவன் காரை நோக்கி செல்ல..
சிரஞ்சீவி சிவா பின்னாடி ஓடி வந்திருந்தவன்,, சிவாவின் கையை பிடித்து நிறுத்த.. “விடுடா கையை” என்றான்..
“சாரி சிவா ஏதோ கோபத்துல” என்றான்.. சிரஞ்சீவி.
“உன் கோபத்தால தான் நாம இப்போ இங்க நிக்குறோம் சிரஞ்சீவி ,, மீண்டும் நீ கோபப்பட்டு, இதுக்கும் கீழ இறக்கிடாத”…
“சாரி டா சிவா” என்றான்..
“நீ அன்னைக்கு மட்டும் ரவி தேஸ்சாவை சட்டையை பிடிக்காம இருந்திருந்தா, இன்னைக்கு இந்த பிரச்சனையே வந்திருக்காது” என்றான் சிவா..
சிரஞ்சீவிக்கு இரண்டு மாதம் முன் ரவிதேஸ்சாவின் சட்டை பிடித்து சண்டை போட்ட நாள் ஞாபகம் வந்தது..
ரவிதேஸ்சா வெளிநாட்டில் தன் வேலைகளை முடிந்துவிட்டு இந்தியா வந்த மறுநாளே சூட்டிங் பார்க்க வந்திருந்தான்..
அவனுக்கு எப்படியாவது சீதாவிடம் பேச வேண்டும் என்றே சூட்டிங் வந்திருந்தான்..
அவனை பார்த்த சிரஞ்சீவி,, உடனே சீதாவும் போன் செய்து “இன்னைக்கு நீ சூட்டிங் வரவேண்டாம்” என்று கூற..
“டேய் இன்னைக்கு முக்கியமான சீன் இருக்குடா”, என்றாள்,,.
டைரக்டர் என்ற முறையில் ரவிதேஸ்சாவிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு அவன் வேலையை பார்க்க சென்று விட.
ரவி தேஸ்சா அன்று முழுவதும் சீதாவை தேடிய படியே சூட்டிங் ஸ்பாட்டில் அமர்ந்து இருந்தான்,, மறுநாளும் வந்திருந்தவன், சீதாவை தேடினான்.
சிரஞ்சீவி இன்றும் சீதாவுக்கு போன் போட்டு சூட்டிங் வரவேண்டாம் என்று சொல்லி விட..
அவளோ போட என்று ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தாள்.
ரவிதேஸ்சா இன்று படப்பிடிப்பில் சீதாவின் காட்சி இருப்பதாக ஜான் சொல்லியதை கேட்டு சூட்டிங் பார்க்க வந்திருந்தான்…
சீதா இன்றும் வரமால் இருக்க..
ஜானிடம் சென்று கேட்டான், “ஏன் சீதா வரவில்லை” என்று..
ஜான் உடனே சீதாவுக்கு போன் செய்து “சீதா எப்பா சூட்டிங்கிற்க்கு வருவீங்க” என்று கேட்க..
“நான் சூட்டிங் வர ரெடியா தான் இருந்தேன் சார், உங்க டைரக்டர் சார் தான் இரண்டு நாளா எனக்கு போனை போட்டு சூட்டிங் வரதேன்னு சொல்லிட்டார், எனக்கே தெரியல என்ன பிரச்சனை” என்றாள் சீதா,,
“எனக்கு தெரியல சீதா” என்று ஜான் போனை வைத்தவன்..
ரவிதேஸ்சாவிடம் இதை எப்படி சொல்வது என்று முளித்து கொண்டு நிற்க.
அவன் முழித்த முழியில் இதற்கு யார் காரணம் என்று கண்டு பிடித்தவன்,, நேராக சிரஞ்சீவி இடம் சென்றவன்.
அவனை கோபமாக பார்க்க..
சிரஞ்சீவிக்கு எரிச்சலாக இருந்தது, இவன் வேற சூட்டிங்கிற்கு வந்து என் வேலையை செய்ய விடாமல் ஆக்குறான் என்று ரவிதேஸ்சாவின் மேல் கோபமாக இருக்க..
“உங்க ஹீரோயின் சீதா எங்கே” என்றான் ரவிதேஸ்சா..
“அவளுக்கு இன்னைக்கு சூட்டிங் இல்ல அதனால வர மாட்ட” என்றான்.
“அப்போ நாளைக்கு வருவாங்காளா? “..
“தெரியாது”? என்றான் சிரஞ்சீவி..
“ஓ “என்றவன், இப்போ இந்த இடத்துக்கு சீதா வரனும் நீ போன் போட்டு கூப்பிடு” என்றான்..
“முடியாது” என்றான் சிரஞ்சீவி..
“ஏன் நான் சீதாவை பார்க்க கூடாதா? “..
“கூடாது”..
“அது தான் ஏன்னு கேட்குறேன்” என்றான் ரவிதேஸ்சா..
“நீங்க ஏன் சார் சீதாவை பார்க்கனும்?.”
“ஏன் பார்த்தா என்ன தப்பு, இந்த படத்தோட ப்ரோடிசர் நான், என் படத்துல நடிக்குற ஹீரோயின்ன நான் பாக்க கூடாதா, வர சொல்லு சீதாவை” என்றான்..
சிரஞ்சீவி “முடியாது” என்று அடமாக நின்றிருக்க…
“இப்போ வர சொல்ல முடியுமா, முடியாதா” என்றான் ரவிதேஸ்சா.
“எதுக்கு சார் நீங்க சீதாவை பார்க்கனும்”?.
“இது என்ன கேள்வி, என் படத்தோட ஹுரோயின் சீதா, அவங்க கிட்ட நான் பேச கூடாது, பழக கூடாதா?” என்ற ரவிதேஸ்தா..
“நீங்க பழகுற மாதிரி பொண்ணு இல்ல சார் அவ” என்றான் சிரஞ்சீவி நக்கலாக..
“நான் எப்படி எந்த பொண்ணுகிட்ட பழகுனத நீங்க பாத்தீங்க மிஸ்டர்,,” என்றான்…
இருவரும் கராசாரமாக பேசிக்கொண்டிருக்க,, சிவா பயந்து போய் இவர்களை பார்க்க வந்திருந்தான்..
“என்னாச்சு ரவி சார்” என்று இருவரின் அருகில் சிவா வர..
“நீ தள்ளி போடா நான் பாத்துக்கிறேன்” என்றான் சிரஞ்சீவி.
சிவாவை பார்த்த ரவிதேஸ்சா “நான் சீதாவை பார்க்கனும், பேசனும் ஏற்பாடு பண்ணு” என்றான்..
“ஏன் சீதா சூட்டிங் வரல, வர்ர நேரம் தானே” என்ற சிவா.
சீதாவுக்கு சிவா போன் போட போக..
சிவா கையில் இருந்த போனை புடுங்கிய சிரஞ்சீவி.
“சீதா சூட்டிங் வர மாட்டா” என்றான்..
ஏன் சிரஞ்சீவி இன்னைக்கு முக்கியமான கிளைமாக்ஸ் சீன் இருக்கே” என்றான் சிவா..
“கண்டவன் முன்னாடி எல்லாம் என் சீதாவை வர சொல்ல முடியாது”, என்று சிவா காதில் சொல்ல…
சிரஞ்சீவி பேசியது ரவிதேஸ்சா காதில் விழுந்தாலும் அதை கண்டுக்காதவன்,,..
“நான் ப்ரோடிசர் என்ற முறையில் சீதாவிடம் பேச வேண்டும் சீதாவை வர சொல்லுங்க” என்ற ரவிதேஸ்சா சட்டமாக ஒரு சேரில் அமர்ந்து கொள்ள..
“முடியாது சீதா கிட்ட பேச உனக்கு என்ன இருக்கு, அவ கிட்ட பேச வேண்டியதை என் கிட்ட சொல்லுங்க நான் போய் அவங்க கிட்ட சொல்லிட்டு வர்ரேன்”..