“நீ தூது விட்டு சீதா கிட்ட பேசனுமுன்னு எந்த அவசியமும் இல்லை, அவகிட்ட எப்படி பேசனுமுன்னு எனக்கு தெரியும், நானே போய் சீதா கிட்ட பேசிக்கிறேன்” என்ற ரவிதேஸ்சா எழுந்து நிற்க.
“என் சீதாவின் நிழலை கூட உன்ன தொட விடமாட்டேன் ” என்றான் சிரஞ்சீவி.
Advertisement
“உன் சீதா என்ன, எந்த சீதாவாக இருந்தாலும், என்னால பேசமுடியும், வேற என்னவேண்ணாலும் செய்யமுடியும் அதை நீ சொல்ல தேவையில்லை”?. என்றான்..
கோபம் கொண்ட சிரஞ்சீவி ரவிதேஸ்சாவின் சட்டையை பிடித்து தாக்க,, சிவா இருவருக்கும் இடையில் வந்து இருவரையும் பிரித்து விட்டவன்.
“ரவி சார், சாரி சார், எல்லாரும் பாக்குறாங்க, வீடியோ எடுத்தா, உங்க இரண்டு பேரும் கெட்டு போகும் சார்” என்றவன்.. “ஜான், ரவி சாரை அனுப்பிவை” என்று கேமரா மேனிடம் சொன்னவன்.
சிரஞ்சீவி இழுத்துக்கொண்டு யாரும் இல்லா இடத்திற்கு அழைத்து சென்றவன்.
சிரஞ்சீவியை கண்ட படி திட்டியிருந்தான்,, சிரஞ்சீவி சிவாவை முறைத்து பார்க்க..
“உனக்கு என்ன பைத்தியமா சிரஞ்சீவி,, ப்ரோடிசர் கிட்ட ஏன்டா வம்பு பண்ணிட்டு இருக்க..”.
“அவன் சீதாவை பார்க்கணுமுன்னு, சொல்லுறான், அவன் முன்னாடி சீதாவை வர சொல்றீயா, அவன் ஒரு கேடு கெட்டவன், அவன்கிட்ட சீதாவை பேச சொல்ல சொல்றீயா”..
“டேய் அறிவு கெட்டவனே அவன் தனியாவா சீதா மீட் பண்ண கேட்குறான்,, நம்ம எல்லார் முன்னாடி தானே சீதா கிட்ட பேசனுமுன்னு சொல்லுறான், தப்பு பண்ணுறவன் இப்படி ஓபனா வந்து பேசுவானா,, அவன் கண்ணை பார்த்தீயா, அதில் எந்த கெட்ட எண்ணமும் எனக்கு இருக்குற மாதிரி தெரியல,, சீதாவை பார்க்கனுமுன்னு ஒரு ஆர்வம் மட்டுமே என் கண்ணுக்கு தெரிஞ்தது,, “.
“தப்பு பண்ணுறவன்னு எப்பையும் தப்பாவே சுத்தனுமுன்னு அவசியம் இல்லை சிரஞ்சீவி,, அவன் சீதாவை பார்த்த பார்க்கட்டும் பேசட்டும் நாமலும் கூட இருப்போம் தானே..
சீதாவுக்கு அவளை பாத்துக்க தெரியும்,, நீ சீதாவுக்கு நல்லது பண்ணுறேன்னு,, எல்லார் வாழ்க்கையும் கெடுக்க பாக்குற..
இந்த ரவிதேஸ்சா என்ன பண்ணுவானே தெரியல” என்று சிவா புலம்ப..
“அவன்னால ஒன்னும் பண்ணமுடியாது, சீதா பக்கம் அவனை நெருங்க விட மாட்டேன்” என்று சிரஞ்சீவி கூற..
“டேய் அவன் நினைத்தால் நாளைக்கு சூட்டிங்கே நடக்காது, அத முதல்ல புரிஞ்சுக்கோ” என்று சிவா புலம்ப..
“பார்த்துக்கலாம் வாடா” என்று இருவரும் பேசிய படியே மறுநாள் சூட்டிங் வர….
எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் இந்திர சேனா படம் முடிந்திருந்தது,,
சிரஞ்சீவிக்கே ஆச்சர்யம் ரவி தேஸ்சா சீதாவை பார்க்க முயற்சி பண்ணுவான் என்று அவன் நினைத்திருக்க, ஆனால் அவனோ அன்று போனது, தான்,, இன்று தான் அவனை இருவரும் பார்க்கின்றனர்.
“திட்டம் போட்டு படத்தை நிறுத்தி வச்சிருக்கான்டா அந்த ரவி” என்று சிரஞ்சீவி பேச..
“நீ பண்ண வேலைக்கு தான்,, நாம இப்போ அனுபவிக்குறோம், வா நடிகர் சங்கத்தில் சொல்லி கம்ப்ளைண்டு பண்ணலாம்” என்று இருவரும் போக..
இவர்கள் எங்கே சென்றாலும் அனைவரம் ரவிதேஸ்சாவை எதிர்த்து தங்கலால் ஒன்னும் பண்ண முடியாது என்று கூறி விட.
“சிரஞ்சீவியை பார்த்த சிவா உன் கோபத்தால நம்ம இரண்டு பேரோட வாழ்க்கை போச்சு” என்று திட்டி விட்டு செல்ல.
நடுரோட்டில் நின்று புலம்பிய படியே வீடு வந்து சேர்ந்தான்..
மகனை பார்த்த மாலா அதிர்ச்சி ஆனார்,, “என் படம் வராது, வராது” என்று விடிய விடிய பைத்திய காரன் போல் புலம்பிய படியே தூங்கமால் புலம்பிய மகனை பார்த்த மாலா நெஞ்சை பிடித்தபடியே சரிந்திருந்தார்..
காலையில் சஞ்சை வந்து மாலாவை பார்க்க மயங்கி இருந்தவரை ஹாஸ்பெட்டலில் சேர்த்திருந்தான்..
மாலா ஹாஸ்பெட்டலில் சேர்ந்ததுகூட தெரியாமல் சிரஞ்சீவி தன் ரூம்பில் விடிய, விடிய புலம்பிய படியே இருந்தவன் தன்னை அறியாமலே தூங்கியிருந்தான்.
தம்பி வந்து எழுப்பியதும் நிலமையை புரிந்து கொண்டவன் அமைதியாகி அமர்ந்திருந்தான்,, அவனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக விசயங்கள் நடக்க.. பேசமால் ஹாஸ்பெட்டலில் பைத்திய காரன் போல் அமர்ந்திருந்தான்.
சீதா இரண்டு நாளாக சிவாவுக்கு, சிரஞ்சீவிக்கு போன் பண்ணி, பண்ணி ஓய்ந்து போனவள், போனை இருவரும் எடுக்காமல் இருக்க..
சஞ்சைக்கு அழைத்திருந்தால்…
“என்னடா சஞ்சை அங்கே என்ன நடக்குது.. உன் அண்ணன், ஏன் என் போனை எடுக்கமாட்டேங்குறான், எதாவது பெரிய பிரச்சனையா? அப்புறம் சிவா சாரும் என் போனை எடுக்க மாட்டேங்குறாரு, என்ன நடக்குது அங்கே”?.. என்றால் சீதா.
“இந்திர சேனா படத்தின் மீது யாரோ கேஷ் போட்டிருக்காங்க சீதாக்கா அதனால இந்திர சேனா படம் பொங்கலுக்கு ரிலிஸ் ஆகாது போல இன்னும் 4 நாள் தான் இருக்கு,,. ஏதோ பிரச்சனை அது என்னன்னு தெரியல, அண்ணாட்ட கேட்ட சொல்ல மாட்டேங்குறான்,” அவன் பேசிக்கொண்டு இருக்கும் போதே “டாக்டர் உங்களை கூப்பிடுறாரு” என்று ஒரு நர்ஸ் வந்து சொல்ல..
அது சீதா காதிலும் விழுந்தது..
“நீ எங்க இருக்க சஞ்சை ஹாஸ்பிட்டல? “…
“டாக்டர் கூப்பிடுறாரு கா வந்து சொல்லுறேன்” என்றவன் போனை ஆப் பண்ணி விட்டு டாக்டரை பார்க்க சென்றான்..
சீதாவுக்கு தலையெல்லாம் வலித்தது,, இந்தியாவில் என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை, நண்பர்களுக்கு போன் செய்யதால் அவனுங்களும் போனை எடுக்கவில்லை..
அவளுக்கு இரண்டு நாள் முன்பே இந்திரசேனா படம் ரிலிஸ் ஆகாது என்று சோசியில் மீடியாவில் ஏகாபட்ட நியூஸ் வர,, அதை பார்த்தவள், உடனே நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு ஏன், என்னாச்சு என்று கேட்லாம் என்று இவள் நினைத்து போன் பண்ண ஒருத்தரும் போனை எடுக்க வில்லை..
இன்னும் இரண்டு நாளில் சீதாவுக்கு சூட்டிங் முடிந்து விடம் நேரில் போய் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தாள்.
இருந்தாலும் அவளால் சும்மா அங்கே இருக்க முடியவில்லை, யாரிடம் இதை பற்றி கேட்பது, யாருக்கு அனைத்து தெரியும் என்று யோசித்தவளுக்கு சட்டென்று கேமராமேன் ஜான் நியாபகம் வர.. உடனே அழைத்து விட்டாள் ஜானிற்க்கு..
இரவு நேரம் என்பதால் ஜான் தூக்க போகும் போது சீதாவின் கால் வர…
என்ன இந்த நேரத்தில் என்று போனை ஆன் பண்ணவர்.
“சொல்லு சீதா என்ன இந்த நேரத்தில்?” என்றார்.
“ஜான் சார் நான் சூட்டிங்கிற்காக ப்பாரிசில் இருக்கேன் அங்கே என்ன நடக்குது சார், ஏன் படம் ரிலிஸ் தள்ளி போகுது உங்களுக்கு ஏதாவது காரணம் தெரியுமா”?.. என்றாள்…
“நீ இந்தியா வா சீதா பேசிக்கலாம், நீயே தனியா அங்கே நடிக்க போயிருக்க இங்க வா மா பாத்துக்கலாம்” என்றார் ஜான்..
“சார் சொல்லுங்க சார், உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, சுட்டிங் நடக்குறப்போ நிறைய உதவி எனக்கு நீங்க பண்ணி இருக்கீங்க, என்ன நடந்தது சொல்லுங்க சார்” என்றாள்.
“எல்லாம் உன் பிரண்ட் சிரஞ்சீவி பண்ணி வச்ச வேலமா”.. என்றார்..
“அவன் என்ன சார் பண்ணான்”?.
“அவனா ப்ரோடிசர் சாரோடு சட்டையை புடிச்சு சண்டை போட்டா சும்மா இருப்பாரா ப்ரோடிசரு, அதான் சமயம் பார்த்து படத்தை நிறுத்தி வச்சு இருக்காருமா”..
“என்ன சொல்லுறீங்க சார் ஏன் சிரஞ்சீவி ப்ரோடிசர் சார் சட்டையை பிடித்து சண்டை போட்டான்?”..
“ப்ரோடிசர் சார் சூட்டிங் பார்க்க வந்திருந்தாரு சீதா , அவர் வந்ததே உன்னை பார்த்து பாராட்டத்தான் ,, நீ குழலிசை கேரக்டருல நல்லா நடிக்குறன்னு உன்னை பாரட்டி உனக்கு விஷ் பண்ண தான் சார் வந்தாரு,, நான் இந்திர சேனா பட வீடியோவை ரவி சாருக்கு அனுப்பி இருக்கேன்,, சார் விடியோ பார்த்துட்டு ரொம்ப சந்தோஷ பட்டாரு,,..
உன்ன பார்க்க வந்த ப்ரோடிசர் சார, சிரஞ்சீவி உன்ன பார்க்க விடல, அதனால இரண்டு பேருக்கும் சண்டை,,”?..
“ஏன் சிரஞ்சீவி என்னை ப்ரோடிசரை பார்க்க விடல?”.
“நம்ம பட ப்ரோடிசர் ரவிதேஸ்சா சாருக்கு கேர்ள் பிரண்ட் தாஸ்தி,, நீயே சொல்லு சும்மா இருக்கிறவனே இரண்டு மூணு கெர்ள் பிரண்ட் கூட சுத்துறானுங்க,, இவர் பெரிய மல்டி மிலினியர், பார்க்க ஹீரோ மாதிரி இருப்பாரு, பொண்ணுங்க சும்மா இருப்பாங்களா?” அவருக்கு பெண்கள் சவகாசம் தாஸ்தி, நான் அதை சரியின்னு சொல்லல்ல,, அது அவருடைய இஷ்டம் சீதா..
அதுல நம்ம கருத்து சொல்ல யாருமா,? சிரஞ்சீவி உன்ன பாக்க விடமா அவரை அவமானம் படுத்தி அனுப்பிட்டான்..
அதுக்கு தான் ரவி சார் இப்படி பண்ணுறாரு மா,,”..
“நீங்க ரவி சார் கிட்ட பேசி பார்க்க முடியுமா சார்,?”..
“அவர் ரொம்ப கோபத்துல இருக்காரு மா, உன்னை பார்க்க ஆசை வந்தாரு, என்ன பொறுத்தவரைக்கு அவர் மனசுல உன்ன குழலிசையா தான் பார்த்தாரு, உன்னை பாராட்ட தான் வந்தாரே தவிர வேற எந்த கெட்ட எண்ணமும் அவருக்கு இல்ல, உன் பிரண்ட் சண்டை போட்டு எல்லாத்தையும் கெடுத்த வச்சுட்டான்” என்று வருத்தமாக ஜான் கூற..
“சார் ரவி சார் போன் நம்பர் கிடைக்குமா, நான் அவர் கிட்ட பேசனும்” என்றாள்..
“நீ என்னமா பேச போறா, கொஞ்ச நாள் கழித்து அவரே படம் ரிலிஸ் பண்ணுவாரு மா வெய்ட் பண்ணுவோம்” என்றார் ஜான்.
“சார் நான் முயற்சி பண்ணி பார்க்குறேன் நீங்க ரவி சார் நம்பரை அனுப்புங்க” என்று சீதா கேட்டதும்.
“உன் இஷ்டம்மா” என்றவர் ரவி நம்பரை உடனே சீதாவுக்கு அனுப்பி வைக்க.
அந்த நம்பரை சேவ் பண்ணியவள் எப்படி பேசலாம் என்று நினைந்தவள். உடனே ரவிதேஸ்சாவுக்கு போனில் அழைக்க..
அவனோ ஒரு இரவு பார்ட்டிக்கு போயிட்டு வந்து குளித்துக்கொண்டு இருக்க.. போன் சத்தம் சரியாக அவன் காதில் விழவில்லை…
சீதா மிண்டும், இரண்டு முறை அழைத்தவள் ரவிதேஸ்சா போனை எடுக்காமல் போகவும் தூங்கி விட்டாரோ என்று எண்ணியவள்.
என்ன செய்வது என்று தெரியாமல் சீதா கண்மூடி சாய்ந்திருக்க..
குளிக்கும் போதே தன் போன் ஒலிப்பதை கேட்டவன் குளித்து முடித்து வந்து பார்க்க, ஏதோ புதிய நம்பர் போல இருக்க,, ட்டுரு காலில் அந்த நம்பரை செக்பண்ணி பார்க்க..
அவனுக்கு வந்த போன் நம்பர் சீதா லட்சுமி என்று வர..
சீதாலட்சுமி யாரு, ஒரு வேலை குழலிசையா இருக்குமோ என்று அவன் நினைக்க…
சரியாக மீண்டும் கால் பண்ணியிருந்தாள் சீதா..
தன் போனில் சீதா லட்சுமி காலிங் என்று வர.
அந்த பேரை பார்த்தவனுக்கு ஒரு சிலிர்ப்பு, அவன் முயற்சி பண்ணியிருந்தால் எப்போதோ சீதாவிடம் பேசி இருப்பான்,, அவனால் முடியாதா என்ன..
அவன் மனதில் நினைத்து கொண்டு இருக்கும் போதே போன் மீண்டும் ஒலித்து நின்று விட….